திருக்குர்ஆன்
விளக்க அட்டவணை 93 இல் கைப்பற்றி உயர்த்துதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு
எழுதுகிறார்:
திருக்குரானில்
3:55 வசனத்தில் முதவப்பீக என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு
கைப்பற்றுதல் என்றும் மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது. இதில் எது சரி
என்பது பற்றி முழுமையான விபரம் 151 வது குறிப்பில் காண்க.
நம்
விளக்கம்:
I
93 மற்றும் 151 ஆகிய இரு குறிப்புகளையும் காண்போம். அவற்றில் தவபைத்தனி எனும்
சொல்லைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது. இச் சொல் திருக்குரானில் 25 இடங்களில்தான்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ரூஹை கைப்பற்றுதல் என்று தான் பொருளே தவிர கைப்பற்றுதல் என்று பொருள் இல்லை 3:55 இவ்வாறே வசனமும் பொருள் தரும்.
உதாரணமாக
திருக்குர்ஆன் 39:42 வது வசனத்தில், உயிர்களை மரணத்தின்போதும், மரணிக்காதவற்றை
தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று வருகிறது. 1) 39:42 2) 6:60
ஆகிய இரு வசனங்களுக்கு பி.ஜே கூறுவது போல், இரவில் காப்பாற்றுகிறான். தூக்கத்தில்
கைப்பற்றுகிறான் என்று பொருள் இல்லை. தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுகிறான்
என்றே பொருள் 3) எதன் மீது அல்லாஹ் மரணத்தை விதித்து விட்டானோ அந்த உயிர்
அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ளது. 4) தூக்கத்தின் போது கைப்பற்றபட்ட உயிரை,
குறிப்பிட்ட காலம் வரை வாழ விட்டு விடுகிறான்.
இந்தக்
கருத்துக்களின் அடிப்படையில் தவப்பி எனும் சொல் வரும் 25 இடங்களில், மரணத்தின்
போது ரூஹைக் கைப்பற்றுதல் 23 இடங்களிலும், தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் 2
இடங்களிலும் வருகிறது. இதில் கைப்பற்றுகிறான் என்றுதான் வருகிறது. மரணிக்கச்
செய்தல் என்று பொருள் கொள்வதில்லை என்று பி.ஜே எழுதியுள்ளார். இது தவறாகும்.
1)
எதை கைப்பற்றுகிறான்? உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்றுதான் வருகிறதே தவிர,
கைப்பற்றுகிறான் என்று மட்டும் வரவில்லை.
2)
உயிர்களைக் கைப்பற்றுதல் என்பது மரணத்தின் போதும் தூக்கத்தின் போதும் ஆகிய இரு
இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. மூன்றாவது இடம் இல்லை.
பி.ஜே
தவப்பா என்ற சொல்லுக்கு முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்ற எனக் கூறியிருப்பதும்
தவறாகும்.
மரணத்தின்
மூலம் நிரந்தரமாகவும் தூக்கத்தில் கைப்பற்றப்படுவதின் மூலம் தற்காலிகமாகவும் ஒரு
மனிதனின் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவ்வளவுதான்.
திருக்குர்ஆன்
வசனத்திற்கு அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள். அதாவது
மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனதிற்குப் பொருள் கொள்ள முடியாது என்று
பி.ஜே எழுதியுள்ளார்.
அவர்களை
மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள் என்று பொருள்
கொடுக்க வேண்டும்.
II.
திருக்குரானில் 2:281; 3:161; 3:185; 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல்தான்
பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக கூலி தரப்படும் என்றுதான் பொருள்
கொள்ளவேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது என்று
பி.ஜே எழுதுகிறார்.
இந்த
வசனங்களில் தவப்பா எனும் சொல் வந்தாலும் மறுமை எனும் சொல்லும், செயல் எனும்
சொல்லும், கூலி எனும் சொல்லும் வருவதால் ஒருவரின் செயலுக்குரிய கூலி மறுமையில்
முழுமையாகக் கொடுக்கப்படும் என்று பொருள் கொள்ளவேண்டும். இடத்திற்கேற்ப பொருள்
கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு தனக்கு கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்
குணப்படுத்தி விடலாம் என்கின்றனர். எனக்காக நீங்கள் துஆ செய்யுங்கள் என்று
வேண்டினால், அறிவுள்ளவன் எவனும் கேன்ஸர் என்பதை நோய் என்று பொருள் கொள்வானே தவிர,
கேன்ஸர் என்றால் கடகராசி என்றும், அதன் வல்லுநர்களான ஜோதிட விற்பன்னர்கள்
கடகராசியின் தீங்கிலிருந்து காப்பாற்றி விடலாம் என்று கூறுகிறார்கள். அதற்க்கா துஆ
செய்வோம் என்று எண்ணமாட்டான். மரணம் என்பது இம்மையில் நடக்கக்கூடியது. ஒருவரின்
செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாக கிடைக்கக் கூடியது. அல்லாஹ்வுக்கும்
ரஸுலுக்கும் பகைவனாக விளங்கக் கூடிய ஒருவனுக்கு இம்மையில் ஒரு கூலி கிடைக்கும்.
ஆனால் அவனுக்குரிய முழுமையான கூலி மறுமையில்தான் கிடைக்கும். எனவே இவ்விரண்டின்
பொருளையும் பி.ஜே தன் சிந்தனையில் வைத்து சரியான பொருளை மக்களுக்கு கூற வேண்டும்.
III.
என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் ஈஸா நபி
கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார். (திருக்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடன் ஈஸா நபி
மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.
(திருக்குர்ஆன் 4:149) என்ற வசனத்துடன் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள்
கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது என்று பி.ஜே எழுதியுள்ளார்.
நம்
விளக்கம்:
1)
தவப்பி எனும் சொல் ரூஹைக் கைப்பற்றுதல் அதாவது மரணம் என்றால், ஈஸா நபி மரணித்து
விட்டார்கள் என்றால், திருக்குர்ஆன் 43:61 ; 4:149 ஆகிய வசனத்தின்படி அவர்
உயிருடன் உள்ளார் என்று தெரிகிறதே! என்று பி.ஜே கருதுகிறார். ரூஹைக் கைப்பற்றுதல்
என்ற பொருளின்படி ஈஸா(அலை) மரணித்து விட்டார் என்றால், அவ்விரு வசனங்களுக்கும்
பி.ஜே தவறான பொருளைத் தந்து தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறார். அல்லாஹ்வின்
வசனத்துடன் விளையாடுகிறார் அதனை விரிவாகக் காண்போம்.
தவப்பா
எனும் சொல் வரும் 25 இடங்களில், இரவிலோ, தூக்கத்திலோ ரூஹ் கைப்பற்றப்படுவதற்கு
தூக்கம் என்ற தற்காலிக மரணம் என்னும் பொருளில் இரு இடங்களில் வருகிறது (6:61;
39:43) ஏனைய 23 இடங்களில், இரு இடங்களில் ஈஸா நபியுடனும் – 3:55; 5:116-118,
ஓரிடத்தில் யூசுப் நபியுடனும் – 12:102 , மூன்று இடங்களில் நபி (ஸல்) அவர்களுடனும்
வருகிறது. நபிமார்களுடன் ஆறு இடங்களில் ஏனைய பதினேழு இடங்களில் மனிதர்களுடனும்
வருகிறது.
ஈஸா
நபியுடன் வருகிற 2 இடங்கள் நீங்கலாக ஏனையவர்களுடன் (4+17 ) 21 இடங்களில் வருகிறது.
அந்த 21 இடங்களிலும் உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளில்தான் வருகிறது என்பதை
ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஈஸா நபியுடன் வரும் 2 இடங்களுக்கு மட்டும் கைப்பற்றுதல்
எனும் பொருள் தந்து உடலோடு கைப்பற்றப்பட்டார். என்று வாதிக்கின்றனர். எனவே 21
இடங்களில் மரணத்தின் போது உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளில் வருவதைப் போலவே ஈஸா
நபியுடன் வரும் இரண்டு இடங்களிலும் மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் என்பதே
பொருளாகும்.
2)
திருக்குர்ஆன் 39:42 வசனத்தில், தவப்பா எனும் சொல்லுக்கு உயிரைக் கைப்பற்றுதல்
எனும் பொருளைத் தான் அல்லாஹ் தந்துள்ளான். 1) மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல்
2) தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் மூன்றவதாக கைப்பற்றப்படுவத்தாக்கு
எதையும் அல்லாஹ் கூறவில்லை. எனவே ஈஸா நபி மரணித்திருக்க வேண்டும் அல்லது தூங்கிக்
கொண்டிருக்கவேண்டும். ஈஸா நபியுடன் 2 இடத்திலும் இரவு என்றோ, தூக்கம் என்றோ
கூறப்படாததினால் அவரது ரூஹ், மரணத்தின்போது கைப்பற்றப்பட்டு விட்டது என்பதே
பொருளாகும்.
3.
திருக்குர்ஆன் வசனத்தில், 39:42 அல்லாஹ் உயிர்களைத்தான் கைப்பற்றுவதாக கூறுகிறான்.
உடல் என்று அதில் கூறவில்லை. மேலும் மரணத்தின் போது கைப்பற்றிய உயிரைத் தன்வசம்
வைத்திருப்பதாகவும் தூக்கத்தின் போது கைப்பற்றிய உயிரை உயிர் வாழ்வதற்கு சில காலம்
விட்டு விடுவதாகவ்ம் கூறுகிறான். எது கைப்பற்றப்பட்டதோ, அதுதான் இறைவன் அளவில்
உயர்த்தப்பட்டு அவன்வசம் இருக்கும், ஈஸா நபியின் உய்ரிதான் கைப்பற்றப்பட்டது. எனவே
அவரது உடல் உயர்த்தப்பட்டது. என்பது முற்றிலும் தவறாகும்.
4)
ஈஸா நபியுடன் வரும் 2 இடங்களில், ஓரிடத்திற்கு அதாவது 5:116-118 வசனத்தில் நபி
(ஸல்) அவர்கள் தன்னோடு ஒப்பிட்டுக் காட்டி, தன்னுடைய உயிர் கைப்பற்றப்பட்டபிறகு
தன் தோழர்களுள் சிலர் வழிகேட்டில் சென்று நரகிற்கு இழுத்துச் செல்லப்படுவதைக்
கூறுகிறார்கள். இதுபோல் அவ்வசனத்திற்கு ஈஸா நபியின் உயிரும் கைப்பற்றப்பட்ட பிறகே,
அவரது சமுதாயம் அவரையும் அவரது தாயையும் இரு தெய்வங்களாக ஆக்கிக் கொண்டனர். என்று
நபி (ஸல்) அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். (புகாரி 4625)
இரண்டாவது
வசனமாகிய வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், அதில் வரும் முதவப்பீக்க
எனும் சொல்லுக்கு முமீத்துக்க (மரணம்) என்று பொருள் தந்துள்ளார்கள். (புகாரி 4623
க்கும் 4625 க்கும் இடையில் காண்க)
எனவே
ஈஸா நபி, முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போன்றும், யூசுப் நபியைப் போன்றும், 17 இடங்களில்
வரும் மனிதர்களைப் போன்றும் மவ்த் ஆகி விட்டார் என்பது தெளிவு. இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிவூன். திருக்குரானில் 17+4=21 இடங்களில் ஈஸா நபியின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
5)
நபி மொழிகளில் பல்லாயிரம் இடங்களில் தவப்பா எனும் சொல் மூலம் அவரது மரணம் உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதாவது, அல்லாஹ் தவப்பா செய்தான் என்று வந்து, அதில் இரவு,
உறக்கம் எனும் சொற்கள் வரவில்லை என்றால் அல்லா அவரது உயிரைக் கைப்பற்றி விட்டான்
என்று பொருள் இவ்வாறு தவப்பா எண்டும் சொல் நபிமொழிகளில் பலருடன் பல்லாயிரம் முறை
வந்துள்ளது. இப்படி வந்தால் அதற்கு ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு
பொருள் இல்லவே இல்லை. இருந்தால் ஒரே ஒரு சான்றைக் கொண்டு வாருங்கள். போகட்டும்!
அரபி இலக்கியங்களிலிருந்தாவது ஒரே ஒரு சான்றைக் கொண்டு வர முடியுமா? ஆக 21+ பல்லாயிரம்
தடவைகள் தவப்பா எண்டும் சொல் ஈஸா நபியின் மரணத்தை உறுதி செய்கிறது. திட்டவட்டமான
பொருளைத் தராத 43:61; 4:159 ஆகிய வசனங்களைக் காட்டி, ஈஸா நபி இறந்து விட்டார்
என்றால் அவ்விரு வசனத்துடன் மோதுகிறது என்று திசை திருப்பும் பி.ஜே தெளிவாகவும்,
திட்டவட்டமாகவும் ரூஹைக் கைப்பற்றுதல் என்று பொருளைத் தரும் தவப்பி எனும்
சொல்லுடன் ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பது பல்லாயிரம் தடவை மோதுவதை சிந்திக்க
வேண்டும்.
பி.ஜே
கூறுகிறார்:
நான்
அவர்களுடன் இருக்கும் போது பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றிய போது
நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன் என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.
நான்
உயிருடன் இருந்த போது எனக் கூறாமல் நான் அவர்களுடன் இருந்த போது என்று ஈஸா நபி
கூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும். நாம்
உயிருடன் இருந்த போது என்று கூறி விட்டு பலம்மா தவபைத்தனி என்று அவர்களில்
கூறினால், அந்த இடத்தில் என்னை மரணிக்கச் செய்த போது என்றுதான் பொருள் கொள்ள
முடியும். அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு நான் அவர்களுடன் இருந்த
போது என்ற முற்றிலும் வித்தியாசமாக வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.
அதாவது
ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள். உயிருடன்
இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பதுதான் இதன்
கருத்தாகும்.
நம்
பதில்:
1)
நபி மொழிகளில் திருக்குரானுக்கு விளக்கமாகும் என்பது 5:116-118 வசனத்திற்கு
பொருந்துகிறது. வசனத்திற்கு பி.ஜே தந்த அதி அற்புதமான விளக்கத்தைக் காண்போம். நபி
(ஸல்) அவர்கள் நான் இறைவனின் நல்லடியாரான அந்த ஈஸா நபி (அலை) அவர்கள் கூறியதைப்
போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்குச் சாட்சியாக இருந்தேன். ஆனால்
நீ என்னை மரணிக்கச் செய்த பின் நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய் என்று
கூறுவேன் என்று கூறியதாக புகாரியில் காணப்படுகிறது. பி.ஜே சொல்வது போல் என்றால்.
நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் (நபித்தோழர்களுடன்) இருந்து கண்காணிக்கும்
நிலையையும் அடைவார்கள், உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும்
நிலையையும் அடைவார்கள் என்று பி.ஜே நம்பத் தயாரா? அதாவது நபி (ஸல்) அவர்கள்
உயிருடன் இருக்கிறார்கள். நபித்தோழர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும்
அடைந்துள்ளார்கள் என்று நம்புகிறாரா?
நீங்கள்
எத்தனை ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த அநீதியை, அவமானத்தை, களங்கத்தை
செய்யப் போகிறீர்கள்?
2)
நான் அவர்களுடன் இருந்த போது என்றுதான் பொருளே தவிர, நான் உயிர் இல்லாமல்
அவர்களுடன் இருந்த போது என்று பொருள் இல்லை. எனவே, நான் அவர்களுடன் இருந்த போது
நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என் ரூஹை கைப்பற்றிய பிறகு நீயே அவர்களை
கண்காணித்தவனாக இருந்தாய் என்று பொருள் கூறி இருப்பதுதான் முற்றிலும் சரியாகும்.
ஏனென்றால் உயிருடன் இருப்பவர் மட்டுமே சாட்சியாக இருக்க முடியும்.
அவர்
மரணமடைந்ததினால் தான் மீண்டும் பூமிக்கு வருவது பற்றியோ அவரது சாட்சி பற்றியோ
திருக்குர்ஆன் எதுவும் கூறவில்லை.
3)
ஈஸா நபி, நான் அவர்களுடன் இருந்த போது என்றுதான் கூறியுள்ளார். நான் உயிருடன்
இருந்த போது என்று கூறவில்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க
வேண்டும் என்று பி.ஜே சிந்தித்ததினால் சிந்திய முத்துகளை மேலே கண்டோம். நான்
அவர்களுடன் இருந்தபோது கண்காணித்தவனாக இருந்தேன் என்றால், நான் உயிருடன் அவர்கள்
மத்தியில் இருந்த போது அவர்களை கண்காணித்தவனாக இருந்தேன் என்பதுதான் பொருள் என்பதை
சிந்தித்து உணர தவறிவிட்டார் பி.ஜே.
43:62
வசனத்தின் படி கியாமத் நாளின் அடையாளமாக ஈஸா இருப்பார் என்றால் இஸ்ரவேலர்க்கு
மட்டும் வந்த அந்த ஈஸா நபி இறந்து விட்டதானால், அதே ஈஸா என்ற பெயரில் முழு
உலகுக்கும் முஸ்லிம் உம்மத்தில் ஒருவர் வருவார் என்றே பொருள் – 43:62 இல் கியாமத்
நாளின் அடையாளம் என்ற பொருளைக் காட்டிலும் அந்த நேரத்தின் அடையாளம் என்பதே
சரியானதாகும். ஏனென்றால் அவ்வசனத்தில் இடம்பெறும் சொல் சாஅ என்பதாகும். இச்சொல்
திருக்குரானில் இரு நபிமார்களின் தோற்றத்தையும் அவர்கள் மூலம் ஏற்படும் ஆத்மீகப்
புரட்சியையும் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் குறிக்க வருகிறது. அவற்றுள் 1)
திருக்குர்ஆன் 54:2– அந்த நேரம் வைத்துவிட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. இதன்படி
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களது காலத்தில் சொல்லபப்ட்ட கியாமத் இன்று வரை
நடக்கவில்லையே! என்ற கேள்வி எழும். எனவே, இங்கு சாஅ என்னும் சொல் ஒரு நபியின்
தோற்றத்தைக் குறிக்கும் நேரத்தைக் குறிக்கிறது. அடுத்து சந்திரன் பிளந்துவிட்டது.
இதன்படி சந்திரனாகிய அரபு உலகம் பிளந்து அங்கு இஸ்லாமிய உலகம் தோன்றியது. இஸ்லாம்
முழு உலகிலும் பரவி ஆத்மீகப் புரட்சி ஏற்பட்டது. இரண்டாவதாக, 43:62 இன்படி கியாமத்
நாள் என்று வரும் இடத்தில் சாஅ எனும் சொல் வருவதால் அந்த நேரத்தின் அடையாளமாக ஈஸா
நபியின் இரண்டாவது வருகை நிகழும். இஸ்லாம் அனைத்து மார்க்கங்களையும் வெல்லும்
என்று திருக்குர்ஆன் கூறும் அடையாளம் இதுதான் இந்த வசனங்களுக்கு (9:33; 48:29;
61:10) திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இது ஈஸா நபியின் வருகையின் போது நிகழும்
என்று எழுதியுள்ளார்கள். (1. தப்ஸீர் ஜாமிஉல் பயான் தொகுதி 29, 2.தப்ஸீர் இப்னு
ஜரீர் பாகம் 15; பக்கம் 72)
இவ்வாறு
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களே ஈசப்னு மர்யமாக தோன்றினார்கள்.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மூலம் அனைத்து மார்க்கங்களும் வெற்றி கொள்ளப்பட்டன.
அந்த
நேரத்தின் அடையாளம் என்ற வசனத்தின் முன் உள்ள வசனம் மர்யத்தின் மகன் உவமையாக
எடுத்துரைக்கப்படும் போது உமது சமுதாயத்தினர் அதனை குறித்து கூச்சலிடுகின்றனர்.
இந்த
வசனத்தில் ஈஸா நபி உவமையாகக் கூறப்படுவார் அதுவும் நபி (ஸல்) அவர்கள் உம்மத்திடம்
கூறப்படும். அவ்வாறு கூறப்படும்போது அவர்கள் அதனை ஏற்காது கூச்சலிடுவார்கள் என
மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும்
ஈஸா நபிதான் இமாம் மஹ்தி என்பதை இந்த
வசனம் தெளிவுபடுத்துகிறது.
ஈசாவை தவிர மஹ்தி இல்லை. (இப்னு மாஜா ஷித்ததுஸ்
ஸமான்)
ஈஸா நபியின் இருவேறு உருவ அடையாளங்களை நபி(ஸல்)
அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
நான் ஈஸாவையும், மூஸாவையும்
கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும், விரிவடைந்த
நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்)
நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட போது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)
அப்படிஎன்றால்
அவர் மரணிக்கும் முன் வேதமுடையவர்கள் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்
(4:159) என்ற வசனத்திற்கு என்ன பொருள்?
ஈஸா
நபி (அலை) உயிருடன் இருக்கிறார் என்றால், அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் கடந்த 2000
ஆண்டுகளாக இஸ்ரவேல் சமுதாயத்தினர் இறந்து கொண்டே இருக்கின்றனரே! அந்த இஸ்ரவேல்
சமுதாயத்தில் யாரும் இறக்காமல் அவரது இரண்டாவது வருகைக்காக கடந்த 2000 ஆண்டுகளாக
உயிருடன் காத்துக் கொண்டு இருக்கின்றனரா? இல்லையே!
இமாம் மஹ்தி (அலை) அவர்களிடம் இந்த கேள்வி
கேட்கப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கத்தை கப்லா மௌதிகி என்ற தலைப்பில்
விளக்கம் கொடுத்துள்ளோம்.
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.