என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் காபிர் ஆக மாட்டான் என்று திர்யாகுல் குலூப், பக்கம் 423 இல் கூறியவர், என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல என்று ஹகீகதுல் வஹி பக்கம் 167 இல் கூறுகிறார். இப்படி முரண்பட்டுப் பேசியவர் எப்படி நபியாக இருக்க முடியும்? என்று கேட்டதற்கும் பதில் இல்லை.
நம் விளக்கம்:
திரியாகுல் குலூப் பக்கம் 432 இல் பி.ஜே கூறும் செய்தியை பக்கம் 431-433 வரைப் படித்தால் பி.ஜே யின் கூற்று முழுக்க முழுக்க பொய் என்றம், இவர் அந்த நூலைப் படிக்காமல் எவரோ எழுதி வைத்திருப்பதை அப்படியே எடுத்துக் கூறியுள்ளார் அல்லது வேண்டுமென்றே பொய்யைக் கூறுகிறார் என்பது தெரியவரும். காரணம்.
அஹ்மதிய்யா ஜமாத்தின் எதிரியும், அஹ்லே ஹதீஸின் தலைவருமான முகம்மது உசேன் பட்டாலவி என்பவர் குர்தாஸ்பூர் நீதிமன்றத்தில் அதன் நீதிபதியும் டிப்டி கமிஷனருமாகிய M.J. டூயி முன்னிலையில் 24-2-1899 இல் நடந்த சம்பவம் குறித்து ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் மேற்கண்ட நூலில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
(முஹம்மது உசேன் பட்டலவி நானுறு மௌலவிகளிடம் கையெழுத்து பெற்று மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராக காபிர் பத்வா கொடுத்தார்.)
இனிமேல் ஒருவருக்கொருவர் காபிர் என்றோ தஜ்ஜால் என்றோ பொய்யர் என்றோ கூறமாட்டோம் என்று கொடுத்த ஒப்புதல் வாக்குமூலப் பத்திரத்தில் நானும் கையெழுத்திட்டேன். இதனைப் பற்றி நீதிமன்றத்தில் மிர்ஸா குலாம் அஹ்மத் நீதிபதிக்குப் பயந்து கூறிவிட்டார் என்று பி.ஜே உளறிக் கொட்டி உள்ளார். மேலும் அதே நூலில் பக்கம் 433 மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள், கலிமா கூறுகின்ற எவரையும் நான் காபிர் என்று கூற மாட்டேன் என்றும் இறைவனால் மஹ்தி மஸீஹ் என்று கூறப்படுகின்ற என்னை அவர் காபிர் என்று கூறி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கூற்றின்படி, ஒரு முஸ்லிமை காபிர் என்பவன் தன்னைத்தனே காபிர் ஆக்கி விடுகிறான் என்பதற்கு ஏற்ப அவன் தன்னைத்தானே காபிர் ஆக்கிக் கொள்கிறான் என்றும் எழுதியுள்ளார்கள்.
ஹகீகதுல் வஹி பக்கம் 167 இல் என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல என்று கூறுகிறார் இப்படி முரண்பட்டு பேசியவர் எப்படி நபியாக இருக்க முடியும்? என்று பி.ஜே கேட்கிறார்.
நமது விளக்கம்.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள் அதே, நூல் அதே பக்கத்தில் அல்லாஹ் என்னை மஹ்தி என்று கூறியிருக்கும் போது என்னை இட்டுக் கட்டிக் கூறியவன் என்று ஒருவர் கூறினால் அவர் எப்படி முமினாக இருக்க முடியும் என்றும் அதே நூல் பக்கம் 165 இல் கிப்லாவை நோக்கியவர்களை நான் காபிர் என்று கூறமாட்டேன் ஆனால் அவர்கள் என்னைக் காபிர் என்று கூறி, தன்னைத் தானே காபிராக்கிக் கொள்கிறார்கள் என்று எழுதியுள்ளார்கள்.
மொத்தத்தில், அல்லாஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை, அல்லாஹ்வின் மஹ்தி என்று கூறும்போது, அதை மறுப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி தன்னைத்தானே காபிர் ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதால் இதில் முரண்பாடு இல்லை.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.