மூஸா நபி மரணிக்கவில்லை. அவர் வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் இறந்தவர்களில் ஒருவர் இல்லை என்று ஈமான் கொள்வதை அல்லாஹ் நமக்கு கடமையாக்கி இருக்கிறான். என்று மிர்ஸா குலாம், நூருல் ஹக் என்ற நூலில் 68, 69 பக்கம் இல் கூறியுள்ளார் அல்லாஹ் எந்த வசனத்தில் இவ்வாறு கூறியுள்ளான்? என்று எடுத்துக் காட்டுங்கள் எனக் கேட்டோம். கடைசிவரை பதில் அவர்கள் சொல்லவில்லை. அல்லாஹ்வின் மீது பொய் சொன்னவர் எப்படி நபியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
நம் விளக்கம்:
கோவை விவாதத்தில் இந்த வசனத்தைக் காட்டி பதில் கூறினோம். ஆனால் எந்த பதிலும் சொல்லவில்லை என்று பி.ஜே பகிரங்கமாக பொய் சொல்கிறார். எனவே லஹ்னதுல்லாஹி அலல் காதிபீன் என்பதே பதில்.
திருக்குர்ஆன் 32:23 மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம் (முஹம்மதே) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீல் மக்களுக்கு வழிகாட்டியாகினோம். (பி.ஜே மொழியாக்கம்)
இவ்சனத்தில் பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை என் 315 இல் மிஹ்ராஜ் என்ற விண்வெளிப் பயணம் எனும் தலைப்பில்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மரணித்து விட்ட மூஸா நபியவர்களை நபிகள் நாயகம் (ஸல்) எப்படி பார்த்திருப்பார்கள்? என்ற கேள்வி இவ்வசனத்தை (32:23) வாசிப்பவர்களுக்கு எழலாம்.
இறந்து போனவரை உயிரோடு இருப்பவர்கள் ஒருக்காலும் பார்க்க முடியாது. ஆயினும் இறைவன் தனது ஆற்றலைக் காட்டுவதக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிஹ்ராஜ் என்ற விண்வெளிப் பயணம் அழைத்துச் சென்றான்.
அங்கே அவர்கள் மூஸா நபியை சந்தித்தார்கள். மற்றவர்களை விட அவர்களிடம் அதிகமான நேரம் உரையாடினார்கள். அந்த சந்திப்பத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.
மூஸாவைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம்: நீர் உண்மையாகவே சந்தித்தீர்: நீர் சந்தித்தது அவரைத்தான் என்று கருத்துப் பட அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். என்று பி.ஜே எழுதி கோவை விவாதத்தில் தன் கேள்வி தவறு என்றும் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் (அலை) அவர்களின் கருத்தே சரி என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.
இதிலிருந்து தௌஹீது வாதிகளாகிய நீங்கள், பி.ஜே உண்மை என்று தெரிந்தும் அதை மறைத்து, அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் உண்மையை எதையாவது சொல்லி மறுக்கவும் மறைக்கவும் செய்கிறார் என்று விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக.
இது மிஹ்ராஜ் என்ற நிகழ்ச்சி நேரடியாகவே நடந்ததது என்பதற்குரிய தெளிவான சான்றுகளில் ஒன்றாகும் என்று எழுதுகிறார்.
நூருல் ஹக் என்ற புத்தகத்தில் 69 பக்கத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறியதை இவர் எடுத்துவைத்திருக்கிறார். இதற்க்கு அடுத்தபக்கத்தில் எழுபதாம் பக்கத்தில். கூறுகின்றார்கள். மரணத்தை கொடுப்பது நிரூபிக்கப்பட்ட ஒரு விசயமாகும் என்பதையும். நிரந்தரமாக நடைபெற்று வரும் ஒன்று என்பதையும் இறைவனின் பழமையான சுன்னத்துகளை சார்ந்தது என்பதையும் நீர் அறிவீர். மரணமடையாத எந்த ஒரு ரசூலும் இல்லை. ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு முன் வந்த தூதர்கள் மரணமடைந்து விட்டார்கள்.
இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இமாமத்துல் புஷ்ரா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். ஈசா (அலை)வர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்களா? இது ஒரு அநியாயமான பங்கீடாகும். எனவே நேர்மையோடு பேசுங்கள். நீதியோடு பேசுங்கள் அதுதான் தக்குவாக்கு மிகவும் நெருக்கமாகும். மேலும் எல்லா நபிமார்களும் வானத்தில் உயிரோடு இருக்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கும்போது ஈசா (அலை) அவர்களுடைய ஹயாத்தில் மட்டும் என்ன சிறப்புத்தன்மை இருக்கிறது. அந்த ஈசா (அலை) குடிக்கின்றார்கள், உண்கின்றார்கள். மற்ற நபிமார்கள் குடிக்கவில்லை, உண்ணவில்லையா? நபிமார்கள் அனைவருமே உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களில் யாருமே இறந்தவர்கள் இல்லை. மிஹ்ராஜ் இரவின் போது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த நபியினுடைய சடலமும் தென்படவில்லை. எல்லா நபிமார்களுமே உயிருடன் இருந்தார்கள். அப்படி இருக்கும் போது ஈசா (அலை) அவர்களின் வாழ்க்கையில் மட்டும் என்ன வினோதமான விஷயம் இருக்கிறது. மற்ற நபிமார்களிடம் இல்லாதது.
நபி (ஸல்) அவர்கள் மூஸா நபி (அலை) அவர்களை சந்தித்த நிகழ்ச்சி இதுவேயாகும். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்கள் நூருல் ஹக் என்ற நூலில் 70 ம் பக்கத்திலும் பிற நூல்களிலும் அவர்கள் கூறியதாவது.
1) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் தோன்றிய எல்லாத் தூதர்களும் இறந்து விட்டார்கள். ஈஸா நபி (அலை) அவர்கள் உட்பட எந்தத் தூதரும் உயிருடன் இல்லை. ஆனால்.
2) நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லாத் தூதர்களும் ஆத்மீக முறையில் இன்றும் உயிருடன் உள்ளனர்.
3) மிஹ்ராஜின் பொது நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தூதர்களைப் போல் மூஸா நபியையும் சந்தித்தார்கள்.
4) ஈஸா நபி (அலை) அவர்களும் எல்லாத் தூதர்களைப் போன்றே காணப்பட்டார்கள்.அவர் இறக்காமல் உயிருடன் இருக்கிறார் என்று அவரிடம் எந்தச் சிறப்பைக் கொண்டு நீங்கள் கருதுகிறீர்கள். அப்படி கருதுவதற்கு திருக்குரானில் எந்த சான்றும் இல்லை என்றாலும் மூஸா உயிருடன் (ஆத்மீகமாக) வானில் இருப்பதக்கக் கருதுவதற்கு திருக்குரானில் (32:23) வசனத்தில் சான்று உள்ளது.
5) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்து ஈஸா நபி (அலை) அவர்கள் இறக்காமல் இருக்கிறார் என்று கருதுவது ஒரு அநியாயமான பங்கீடாகும். எல்லாத் தூதர்களும் இறந்து ஆத்மீகமான முறையில் அவர்கள் எல்லோரும் உயிருடன் உள்ளனர் என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மூஸா நபி (அலை) அவர்களை சந்தித்தது ஆத்மீக சந்திப்பாகும் என்பதே அவரின் கருத்தாகும். எனவே அவ்வாறு இல்லை என்று எவரும் கூறுவதற்கு உரிமை இல்லை. ஒருவர் கூறும் கருத்துக் அவர் இதுதான் விளக்கம் என்று கூறினால் அதனை மறுத்து எவர் எந்த விளக்கத்தைக் கூறினாலும் ஏற்பதற்கில்லை.
மௌலவி அப்துல் ஹக் முகத்தஸ் தஹ்லவி ஒரு முகத்தஸின் கூற்றை எடுத்துக் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களை விட இன்னொரு நபி உயிருடன் இருக்கிறார் என்று ஒரு முஸ்லிம் கூறினால், அவர் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டே வெளியேறி விடவோ, காபிராகி விடவோக் கூடும்.
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.