பி.ஜே யின் கேள்வி:
ஒருவரை சபித்துக் கட்டுரை எழுதிய இவர்.
இவர் மீது ஆயிரம் சாபம் உண்டாகட்டும் என்று எழுதி விட்டு 1 சாபம், 2 சாபம், 3
சாபம், 4 சாபம் என்று ஆயிரம் தடவை பல பக்கங்களில் நூருல் ஹக் பக்கம் 158 இல்
எழுதியுள்ளாரே இவர் மன நோயாளியா? நபியா? என்று கேட்ட போதும் எந்தப் பதிலும் இல்லை.
நம் விளக்கம்:
அவ்வாறு சபிக்கப்பட்ட ஒருவர் யார்? பி.ஜே
முஸ்லிமாக இருந்து முர்ததத்தாக மாறி மறுபடியும் முஸ்லிமாக மாறினார். ஆனால் இவர்
மவ்லவியாக இருந்து பின்னர் பாதிரி இமாதுத்தீனாக மாறியவர். திருக்குரானையும்,
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் கேலியும், கிண்டலும் செய்தவர்.
திருக்குரானில் எந்த கருத்துச் செறிவும் இல்லை. வெறும் பகட்டும் செயற்கைத்
தன்மையுமே உள்ளன. திருக்குர்ஆன் காட்டுமிராண்டித்தனமான கருத்துக்களைக்
கொண்டுள்ளது. எந்த ஒரு நீதிமானும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றும் ஹஸ்ரத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமாக ஏசிப் பேசியவர்.
இவரிடம் திருக்குர்ஆனைப் பற்றியும் நபி
(ஸல்) அவர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசுவதை நிருத்த்கா வேண்டும் என்று
கூறியும் அதற்கு செவி கொடாததினால் 1000 லஹ்னத் ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள்
செய்தார்கள். அதில் தான் செய்கின்ற ஒவ்வொரு லஹ்னத்துக்கும் முழு சமுதாயமும் ஆமீன்
சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து செய்துள்ளார்கள். இது அவர்கள்
இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் திருக்குர்ஆன் மீதும்
கொண்டிருந்த அளப்பரிய நேசத்தைக் காட்டுகிறது.
இப்படி இஸ்லாத்தின் எதிரிகள் மீது இமாம்
மஹ்தி(அலை) அவர்கள் 1000 லஹ்னத் செய்கிறார்கள் என்றால், அதனை கோவை விதாததில் பி.ஜே
கேலியும், கிண்டலும், நையாண்டியும் செய்வதை வீடியோ கேசட்டைப் பார்ப்பவர்கள்
உணரலாம். இதிலிருந்து இவரின் சுய ரூபத்தை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் மீது தாக்குதல் நடத்திய ஒரு
பாதிரியின் மீது இவர்களும் ஆயிரமோ, பத்தாயிரமோ, லட்சமோ லஹ்னத் உண்டாகட்டும் என்று
கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு 1 சாபம், 2 சாபம், 3 சாபம் என்று பல
பக்கங்களில் எழுதியிருப்பதுதான் இவர்களின் ஆட்சேபனையாம். பி.ஜே ஒரு ஒரு
மனநோயாளியா, ஒரு முஸ்லிமா? என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது.
தான் நபி என்று ஏற்றுக் கொண்ட ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களின் சுன்னத்தை நடை முறையை உணரத் தவறியதால்தான் மற்றொரு நபியின் அதே
செய்கையை தரங்கெட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
தொழுகைக்குப் பின் 33 முறை சுபுஹானல்லாஹ். 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 34 முறை
அல்லாஹு அக்பர் என்று 1,2,3,4,....,33 முறை திக்ர் செய்ய கற்றுத் தந்துள்ளார்கள்.
இந்த இடத்தில் எனக்கு வரும் சந்தேகம் என்னவென்றால் இந்த பி.ஜே தொழுகையில் இந்தத்
திக்ரை தன் வாழ்நாளில் செய்ததில்லையோ! என்பதுதான்.
தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் 5 முறை
தொழுபவன், 5 வேலைகள் இந்தத் திக்ரை செய்து வந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு மறுப்பை
எழுதியிருக்கவோ, கேலி, கிண்டல், நையாண்டி செய்யவோ மாட்டார். குறைந்த பட்சம் இவர்
இந்தத் திக்ரை செய்யவில்லை என்று தெரிகிறது. இவர் யூதராகவோ, கிறித்தவனாகவோ
இந்துவாகவோ பிறந்து இஸ்லாத்தின் எதிரியாக மாறியிருந்தால் ஹஸ்ரத் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்டிருப்பார். எந்த ஒரு நபியும்,
நபியைப் பின்பற்றியவர்களும் யாரையும் கேலி கிண்டல் செய்ததாக வரலாற்றில்
பார்க்கமுடியாது. மாறாக நபிமார்களின் எதிரிகளே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதை
திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
ஒரு மௌலவிக்கு இது தெரியாதா என்றால்,
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜாமத்தின் மீது கொண்ட வெறுப்பினால், ஒரு உண்மையை
மறைப்பதற்கும் அதனை ஒரு பொய் எனக் காட்டுவதற்கும் துநித்துவிட்டார். இதிலிருந்து
இவருடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் ஒரு உண்மை நபியின்
பகைவர்களின் முகமாகும்.
33 சுபுஹானல்லாஹ், 33 அல்ஹம்துலில்லாஹ், 34
அல்லாஹு அக்பர் என்று கூறினால் போதாதா? வேலை கெட்டு உட்கார்ந்து, சுப்ஹானல்லாஹ் 1,
சுப்ஹானல்லாஹ் 2, சுப்ஹானல்லாஹ் 3 என்று கூறும் இவர் ஒரு மனநோயாளியா? நபியா?
(நவூதுபில்லாஹ்) என்று இந்த பி.ஜே கேட்டிருப்பார். இது போன்ற குற்றச்சாட்டை வேறு
யாரும் செய்திருக்கலாம். ஆனால் இந்த பி.ஜே செய்திருக்க கூடாது. ஏனென்றால், இவர்கள்
நடத்தும் மாநாட்டுக்கு தொலைக்கட்சியில் விளம்பரம் செய்கின்ற போது இன்னும் 100
நாட்கள் உள்ளன. இன்னும் 99 நாட்கள் உள்ளன.... இப்படியே ஒவ்வொருநாளும் விளம்பரம்
செய்து கடைசியில் 1 நாளே உள்ளது என்று மாநாட்டுக்கு விளம்பரம் செய்யும் இவர்களை மன
நோயாளி என்பதா? விளம்பர நோயாளி என்பதா?
எனவே, 1000 லஹ்னத்தை ஆயிரம் தடவை
செய்வதுதான் நபி வழி என்றும் இந்த வகையில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
அவர்கள் உண்மையான நபியாக தன்னை நிரூபித்துள்ளார் என்பதும் இதன் மூலம் நிரூபணம்
ஆகிறது. இவ்வாறு நபியின் நடைமுறையை கோவையில் கூறினோம் ஆனால்
எந்தப் பதிலும் இல்லை என்பது முழுப்
பொய்யாகும். பொய்யனின் மீது லஹ்னத் உண்டாகட்டும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.