அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Showing posts with label இறுதி நபி. Show all posts
Showing posts with label இறுதி நபி. Show all posts

Jun 5, 2022

இன்றைய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிலையும் இறுதி நபிக்கொள்கையும்

முன் சென்ற முதலாவது மஸீஹ் அதாவது ஈஸா (அலை) அவர்களின் சமுதாயம் எவ்வாறு ரூஹுல் குத்தூஸினால் எழுப்பப்பட்ட இறையருளை நிராகரித்து, ஈஷா (அலை) அவர்களை தொடர்ந்து ஏற்பட்ட கிலாஃபத்தை தேர்வு செய்தார்களோ, அவ்வாறே இன்றைய நிஜாமிகள், இறைபுரத்திலிருந்து ரூஹுல் குத்தூஸினால் பலப்படுத்தப்பட்ட கலீபஃத்துல்லாஹ் தோன்றும்போது, இரண்டாவது ஈஸாவின் அதாவது, மஸீஹ் மவூது (அலை) அவர்களின் கிலாபத்தின் தொடரை தேர்வு செய்துகொண்டனர். மேலும், இன்றளவும் முதலாவது ஈஸா (அலை) அவர்களின் நேர்வழி பொருந்திய கலீஃபாக்களுக்கு பிறகு பெயர்தாங்கிய கலீஃபாக்களின் (போப்) ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

மேலும், இவர்களும் அமைப்பு ரீதியாக, பொருள் தியாகத்திலும், தங்களது சந்ததிகளை அவர்களின் இறைவனுக்கு வக்பு செய்வதிலும், அவர்களின் இறை இல்லத்தை அழகிய பிரமாண்டமாக எழுப்புவதிலும், சமூக சேவை மற்றும் கல்விகூடம், மருத்துவமனை என்று பல்வேறு கட்டமைப்புகளை ஒரு தலைமையின் கீழ் இயங்கி கொண்டுதான் உள்ளார்கள் என்பதுதான் வியப்புக்குரிய ஒற்றுமை!!!

மேலும், எவ்வாறு முஸ்லிம்களுக்கு அவர்களின் இறுதிநபி கொள்கைக்கு திருகுர்ஆன் துணை நிற்பதில்லையோ, அதே போல இவர்களின் நபிமார்கள் அல்லாத கலீஃபாமார்களை மறுமைவரை செல்லும் கூற்றிற்கும் திருகுர்ஆன் துணை நிற்பதில்லை. இன்னும் வியப்புக்குரிய ஒற்றுமை என்னவென்றால் எவ்வாறு வேறு பிரிவு முஸ்லிம்கள் அவர்களின் இறுதி நபி கொள்கைக்காக அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை “லா நபிய்ய பஃதீ” என்ற நபிமொழியின் தவறான புரிதல் வைத்தார்களோ, அவ்வாறே இன்றைய நிஜாமிகள் “கிலாஃபத்அலா மின் ஹாஜி நுபுவ்வத்” என்ற நபிமொழியின் தவறான புரிதலில் தங்களது ஒட்டுமொத்த கொள்கையையும் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது, முஸ்னத் அஹ்மதில் பதியப்பட்ட நபிமொழி இவ்வாறு வருகின்றது;-

"அல்லாஹ் நாடும் வரை உங்களிடத்தில் இந்த நுபுவ்வத் இருக்கும். பிறகு அல்லாஹ் அதை எடுத்துக் கொள்வான். பிறகு நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் உருவாகும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு கொடுங்கோல் ஆட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு பலவந்தமான ஆட்சி ஏற்படும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பின்னர் நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும்."

நாம் மேலே கூறிய ஆதாரங்களை அனைத்தையும் படித்த பிறகு இந்த நபிமொழி எந்தவகை கிலாஃபத்தை பற்றி கூறுகின்றது என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். அல்ஹம்துலில்லாஹ்...

மேலும், இந்த நபிமொழி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில், அன்னாரின் இரண்டாவது வல்லமையாக தோன்றும் ஒவ்வொரு நபியின் இரண்டாவது வல்லமையின் நிலையை குறிக்கின்றது. அதாவது, அந்த நபியின் கிலாஃபத் மற்றும் உம்மத்தே முஹம்மதிய்யாவில் அடுத்த நபி தோன்றும் போது முந்திய நபியின் கிலாஃபத்தின் நிலையை குறிக்கின்றது. இதன் விளக்கத்தை இக்காலத்தில் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பிறகு இரண்டாவது நபியாக தோன்றியுள்ள ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

(காண்க:-http://www.jamaat-ul-sahihal islam.com/jusai_files/fs_29may09.htm)

ஒருவேலை இந்த நபிமொழி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு பிறகு தோன்றும் நபிமார்கள் அல்லாத கிலாஃபத்தே ரசூல்மார்களை குறிக்கும் என்றால், இது ஒரு தெளிவான இறுதிநபி கொள்கை மட்டுமல்லாமல் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமைக்கு, இன்னும் கூறப்போனால் அன்னாரின் நிழல்களின், இன்னும் தெளிவாக கூறினால் அன்னார் மீண்டும் இந்த உலகத்திற்கு ஆன்மீக ரீதியாக வருவதை தடை போடும் மாபெரும் ஆபத்தான நிலையும் ஆகும்.

இவர்களின் மனோ இச்சையின் படி இவர்கள் கொடுக்கும் விளக்கம் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றிற்கு எதிரானது என்பதை மிக எளிமையாக புரிந்துகொள்ளலாம். குறிப்பாக இந்த நபிமொழியின் ஆரம்பத்தில் கிலாஃபத் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை எவ்வாறு ஒட்டுமொத்த கிலாஃபத் என்று எடுத்துக்கொள்ள முடியும்? ஏனென்றால், ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் இந்த விளக்கத்தை கேட்டாலே தனது உடல் நடுங்குகின்றது என்கின்றார்கள். இன்னும் அன்னார் ஹஸ்ரத் மூசா (அலை) அவர்களின் கிலாஃபத் எவ்வாறு 1400 வருடங்களாக எந்த தடையும் அன்றி தொடர்ந்ததோ, அதே போல நபிமார்களுக்கு எல்லாம் இமாம் ஆன ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் கிலாஃபத் ஒருபோதும் எடுத்துக்கொள்ளபடவும் இல்லை , அன்னாரின் இரண்டாவது வல்லமையின் தொடர் அறுந்துவிடவும் இல்லை, என்பதே ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் நம்பிக்கையாகும். எனவே இப்போது இந்த நிஜாமிகளின் நிலையை உங்களால் அறிந்துகொள்ள முடியும் இன்ஷாஅல்லாஹ்.

மாறாக இந்த நூற்றாண்டில் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் கிலாபத்தில் 14 வது கலீஃபாவாக தோன்றிய இறைத்தூதர் ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் இந்த நபிமொழி, நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒரு நுபுவத்திற்கும் அடுத்த நுபுவத்திற்கும் இடையே கலீஃபத்துல் ரசூல் கிலாஃபத்தின் நிலை பற்றி கூறுகின்றது. இன்னும் குறிப்பாக கூறுவதென்றால், இந்த நபிமொழியில் எந்த ஒரு கால அளவையும் குறிப்பதில்லை.

மேலும், இந்த நபிமொழி தொடரக் கூடியதுமாகவும், இன்னும் இந்த நபிமொழியை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட கிலாஃபத்தே ரசூல்களின் நிலை எவ்வாறு இருந்தது என்று பார்த்தோமேயானால், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்து அல்லாஹ் நாடியவரை அதாவது அன்னாரின் முதலாவது வல்லமைக்கு பிறகு, அதாவது அன்னாருக்கு பிறகு அல்லாஹ் கிலாஃபத்தை, கிலாஃபத்தே ரசூல் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் வடிவில் ஏற்படுத்தினான். பிறகு இந்த கிலாஃபத்தே ரசூல்களின் காலம் 30 ஆண்டுகளில் எடுத்து கொள்ளப்பட்டது. இந்த இடத்தில் ஒரு விசயத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அதாவது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நுபுவ்வத் ஒரு பூர்த்தியடைந்த ஷரீஅத்தின் நுபுவத்தாகும், எனவே அன்னாரின் கிலாஃபத் ஒருபோதும் தடை படுவதோ அல்லது எடுத்துக்கொள்ளப்படுவதோ இல்லை. மாறாக அது ஒரு நிலையில் இருந்து மற்றுமொரு நிலையாக (கலீஃபத்துல்லாஹ்களாக) தான் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ் .

எனவே, இந்த நபிமொழி படி அல்லாஹ் அன்னாரிடம் இருந்து எடுத்துக் கொண்டது முழு கிலாஃபத்தை அல்ல, மாறாக எடுத்துக்கொள்ளப்பட்டது கிலாஃபத்தே ரசூல் வடிவிலான கிலாஃபத்தைத்தான், ஆனால் அன்னாரின் நுபவத்தின் கிலாஃபத் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இறைவனின் அருளாக தோன்றிய முஜத்தித்துகளின் மூலம் தொடர்ந்துகொண்டு தான் இருந்தது என்பதை இங்கே நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இன்னும் உம்மத்தே முஹம்மதிய்யாவில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடையில் நபி என்ற அந்தஸ்தை ஹஸ்ரத் காத்தமுன் நபீய்யின் (ஸல்) அவர்களின் ஒப்பற்ற பதவியை நிலைநிறுத்த அல்லாஹ் சுபஹான ஹுதாலா எந்த முஜத்தித்துக்கும் வழங்கவில்லை, எனவே நேர்வழியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கிலாஃபத்தே ரஸூலுக்கு பிறகு பெயர் தாங்கிய கிலாஃபத் அடுத்த நுபுவத்தான ஹஸ்ரத் மஸீஹ் (அலை) வரை தொடர்ந்தது

இந்த நபிமொழி, மிகத்தெளிவாக நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒரு நுபுவத்திற்கும் மற்றும் அந்த நுபுவ்வத் தோன்றும் போது கிலாஃபத்தே ரஸூலின் நிலையை முன்னறிவிக்கின்றது, இன்னும் கூறப்போனால் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் கூட இந்த கிலாஃபத்தின் அதாவது கிலாஃபத்தே ரஸூல் கலீஃபாவாக அப்துல் ஹமீது-II அவர்கள் இருந்தார். இந்த காலகட்டம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு மிக நீண்ட நீட்சியாக இருந்துள்ளது என்று ஹஸ்ரத் முஸ்லீஹ் மவூது (ரலி) அவர்களும் உறுதி செய்கின்றார்கள், அல்ஹம்துலில்லாஹ் .

பிறகு, ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமையாக அவருக்கு பின் தோன்றிய அதாவது, கலீஃபத்துல் ரஸூல்களான கலீஃபத்துல் மஸீஹ்மார்களின் கிலாஃபத் ஏற்பட்டது என்பதே இந்த அருளுக்குரிய நபிமொழியாகும். இன்னும், இந்த நிஜாமிகள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் இந்த நபிமொழிக்கு பிறகு நபி(ஸல்) அவர்கள் அமைதியாகி விட்டார்கள். எனவே, இதற்கு பிறகு இந்த கிலாஃபத்தான் தொடரும் என்ற கற்பனையை அப்பாவி மக்களிடையே பரப்புகின்றனர். மாறாக பெருமானார் (ஸல்) அவர்கள் இது ஒரு முடிவல்ல தொடர் என்பதையே இந்த நபிமொழியில் உணர்த்துகின்றார்கள். இந்த நிஜாமிகளின் கூற்றை போல் அன்னார் ஒருபோதும் இறுதி நபிக்கொள்கையை போதிக்கவில்லை (நஊதுபில்லாஹி மின் தாலிக்)

இக்கூற்றை இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள அல்லாஹ் தனது இறைவேதத்தில் இவ்வாறு கூறுகின்றான்:-

அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 39: 22 )

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் கூறுகின்ற பொருள் என்னவென்றால், பூமியானது ஆன்மீக ரீதியாக வறட்சியடைந்து விடும்போது, இறைவன் இறை வஹீயின் வடிவத்தில் மழையை இறக்குகிறான். பின்னர் அந்த பூமியானது ஒரு புதிய வாழ்க்கையைப்பெற்று, பல்வேறு நிறங்களையும், சுவைகளையும், தனித்துவ குணங்களையும் கொண்ட பூக்களும், பழங்களும், வளர்ச்சியடைகின்றன.

அதாவது, ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதி, முஜத்தித் தோன்றுகின்றபோது, நற்குணம் கொண்ட மற்றும் இறைவனுக்கு அஞ்சுகின்ற மனிதர்களின் சமூகம் பிறக்கின்றது, மேலும் பயபக்தியுள்ள மற்றும் கற்றறிந்த ‘உலமா’ அதாவது மார்க்க அறிஞர்களுக்குக்கூட இறைவனுடைய வார்த்தையை அவர் கற்பிக்கின்றார். பிறகு ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டு அதனால் இறைவனுடைய வார்த்தை மறக்கப்பட்டும், அவனுடைய கட்டளைகள் மீறப்பட்டும், கீழ்ப்படியாமையும் உருவாகி விடுகின்றது. மீண்டும், பூமியானது வறண்டு, காய்ந்துபோய், ஒரு நெருப்பில் எறியப்படுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கக்கூடிய உலர்ந்த எரிபொருளைப் போன்ற தீய மனிதர்களின் ஒரு தலைமுறையானது மீண்டும் பிறந்து, நல்ல மனிதர்களின் இடத்தைப் பிடித்துக்கொள்கின்றது. இவ்வாறாக இந்த சுழற்சி செல்கின்றது. அதாவது மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது

இறைவன் மிகத்தெளிவாக ஆன்மீக வறட்சி ஏற்படும்போது, அவன் தனது அருள் மழையை வஹீயின் மூலம் தனது ஆன்மீக சீர்த்திருத்தவாதியின் மீது இறக்கி மீண்டும் பூமியில் ஆன்மீக வசந்த காலத்தை உருவாக்குகின்றான். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்வு ஏற்படுகின்றது அதாவது இது ஒரு சுழற்சியாகும். மேலும், இந்த இடத்தில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இது ஒரு சுழற்சியாகும்.

இதே நிகழ்வு தான் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் கிலாஃபத்தே ரஸூலின் காலத்தை பற்றி கூறும்போது, ஒரு நபிக்கும் அவருக்கு பின் தோன்றும் நபிக்கும் இடையில் இந்த கிலாஃபத்தே ரஸூலின் நிலையை பற்றி முஸ்னத் அஹ்மத்தில் தொகுக்கப்பட்ட ஹதீஸீல் அன்னார் மௌனமாகிவிட்டார் என்று வருகின்றது. ஏனென்றால் இதுவும் ஒரு சுழற்சியாகும். இந்த நபிமொழி, நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒவ்வொரு நுபுவத்திற்கும் நிகழக் கூடியதாகும்.

மேலும், இந்த நபிமொழியின் உண்மை வடிவமே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெரும் கருணையாக வெளிப்பட்டுள்ளது. அதாவது, இந்த நபிமொழி உம்மத்தே முஹ்மதிய்யாவில் தோன்றும் ஒருநபிக்கும் அடுத்து வரும் நபிக்கும் இடையிலான கிலாஃபத்தின் நிலையை குறிக்கிறது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்,

அவ்வாறில்லை என்றால் மற்ற பிரிவு முஸ்லிம்கள் போல் இறுதிநபி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிந்துகொண்டாம்.

மேலும், ”எனக்கும் மஸீஹிக்கும் இடையே நபியில்லை” என்ற நபிமொழிக்கேற்ப நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் மஸீஹ் மட்டுமே நபி என்ற அந்தஸ்தை பெறுகின்றார். இன்னும் மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத் மஸீஹ் உடன் முடிவடைந்து விட்டது, ஆனால் நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை அதாவது கிலாஃபத் மறுமைவரை தொடரக்கூடியதாகும், எனவே அன்னாரின் உம்மத்தில் இறுதியாக தோன்றக்கூடிய கலீஃபாவான மஸீஹ் இருக்கின்றார், இந்த இடத்தில் மிக குறிப்பாக நாம் அறியவேண்டியது என்னவென்றால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் ஒருவர் என்றால் அது மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத்தை போல் முற்றுபெற்றுவிடும் ஆகையால், உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் என்ற வார்த்தையின் அர்த்தம் மஸீஹ் ஒருவரல்ல பலர் என்பதாகும், இன்னும் தெளிவாக கூறினால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் இறுதி கலீஃபா மஸீஹ்காக இருக்கின்றார். அவர் ஒருவர் அதாவது ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) மட்டும் தான் என்று கருதினால், நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை, மூஸா (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமை போல் முற்றுபெற்றுவிடும்! மாறாக, வரக்கூடிய மஸீஹ் ஒருவர் அல்ல பலர் என்றால் நபி (ஸல்) அவர்களின் அருளுக்குறிய கிலாஃபத் தொடரக் கூடியதாகவும் மஸீஹ்மார்களின் வருகை முற்றுப்பெறவில்லை என்பதால், பகுதி அதாவது நிழல் நுபுவ்வத்தின் கதவு என்றென்றும் திறந்தே இருக்கும் சகோதரர்களே .

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஒருவரே மஸீஹ் அல்ல மாறாக அன்னார் நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் மஸீஹ் என்னும் நபிமார்களின் கதவை திறப்பதற்காக வந்துள்ள இஸ்லாத்தின் கலீஃபா ஆவார்கள். மேலும் அன்னார் ஒரு காத்தமுள் குலஃபாவும் ஆவார்கள். எனவே இனி நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையாக கியாமத்து வரை தோன்றும் மஸீஹ்மார்கள் அதாவது நபிமார்கள், அன்னாரை பின்பற்றாத ஏனைய பிரிவு முஸ்லிம்களில் இருந்து தோன்ற மாட்டார்கள். மாறாக, தோன்றக் கூடிய ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையான மஸீஹ், அன்னாரையும் அதாவது நபி(ஸல்) அவர்களையும், காத்தமுள் குலஃபாவும் மஸீஹ் மவூது (அலை) அவர்களையும் பின்பற்ற கூடியவர்களாக இருப்பார்கள் என்பதையே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றார்கள்.

இப்போது மீண்டும் கிலாஃபத் சம்பந்தமான அந்த நபிமொழிக்கு வருவோம். மேலும் இந்த நபிமொழியில் காலத்தை குறிப்பிடப்படவில்லை என்பதை முன்னரே நாம் பார்த்தோம். எனவே, உம்மத்தே முஹம்மதிய்யாவில் தலைமை நபி காத்தமுன் நபிய்யீன் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கும், அவர்களுக்கு பிறகு அன்னாரின் இரண்டாவது வல்லமையின் அங்கமான காத்தமுள் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடையில் இந்த நபிமொழியின் அடிப்படையில் கிலாஃபத்தே ரஸூலின் காலம் நேர்வழியில் தொடங்கி கொடுங்கோலில் முடிந்தது.

ஆனால், இப்போது முஹம்மதிய்யா கிலாஃபத்தின் நூற்றாண்டின் முஜத்தித் மஸீஹ்காக, அதாவது, நபி என்ற பட்டத்தை பெற்று மஸீஹ்கின் வாசலை அதாவது, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் நுபுவ்வத்தின் அருளுக்குரிய வாசல் திறக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையாக கிலாஃபத்தே முஹம்மதிய்யாவில் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூற்றாண்டிற்கு பிறகு 15 வது நூற்றாண்டில் இறைவனின் ரூஹுல் குத்தூஸினால் பலப்படுத்தப்பட்டு ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் மறுமை வரை தொடரக்கூடிய இரண்டாவது வல்லமையில் தோன்றிய முஜத்தித் ஒரு மஸீஹ்க்காகவும் நபியாகவும் கிலாஃபத்தே முஹ்மதிய்யாவின் 15 வது கலீஃபாவாகவும் இறைவனின் அருளாக ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் தோன்றியுள்ளார்கள்.

எனவே, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் அதாவது 14வது நூற்றாண்டின் முஜத்தித்துக்கும் 15வது நூற்றாண்டின் முஜத்தித் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் ஒரு நூற்றாண்டாகும். அதாவது நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் இரண்டு நபிமார்கள் அடுத்தடுத்த நுற்றாண்டில் தோன்றியுள்ளார்கள். இன்ஷாஅல்லா, இதற்கு பின் அடுத்த நூற்றாண்டுகளிலும் தோன்றுவார்கள். ஆக இந்த நபிமொழியின் அடிப்படையில் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமையான கிலாஃபத்தே ரஸூலின் காலம் நேர்வழியிலிருந்து வழிகேட்டின் காலமாகும்.

உடனே, அஹ்மதிய்யா மௌவ்லவிகள் எங்களைப் பார்த்து ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் 3வது மற்றும் 4வது கலீஃபாவிற்கு எதிரானவர்கள் என்று அப்பாவி மக்களை இந்த உண்மையின் பக்கம் சிந்திக்காதவாறு திசைதிருப்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் கிலாஃபத்தே ரசூல் வடிவிலான கிலாஃபத் நேர்வழியில் இருப்பதும் அது வழிகேட்டின்பக்கம் செல்வதும், பின்பற்றும் மக்களின் ஆன்மீக நிலையை பொறுத்துதான் அமையும். இதை ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்களும் உறுதி செய்கின்றார்கள்.

ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் இந்த கிலாஃபத்தை பற்றி கூறும்போது:- கிலாஃபத்தின் இழப்பு என்பது எந்தவொரு கலீஃபாவின் குறைபாடுகளின் காரணமாக அல்ல. மாறாக ஒரு ஜமாஅத்தின் குறைபாடுகள் காரணமாகவேயாகும். மேலும் கிலாஃபத்தின் இழப்பு என்பது ஒரு கலீஃபாவின் பாவத்தை நிரூபிப்பதாகவும் இல்லை. மாறாக ஒரு ஜமாஅத்தின் பாவத்திற்கு சான்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இது எல்லாம்வல்ல அல்லாஹ்வின் தெளிவான வாக்குறுதியாகும். அதாவது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை மற்றும் நற்செயல்களின் பாதையில் நிலைத்திருக்கும் போதுதான், அவன் கிலாஃபத் என்பதை தொடரச் செய்வான். மேலும் அவர்களிடம் மாறுதல் ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் ஈமான் மற்றும் நற்செயல்களின் பாதையிலிருந்து விலகிச் செல்லும் பட்சத்தில் எல்லாம்வல்ல அல்லாஹ், “நீங்கள் தீயச்செயல்களை செய்பவர்களாக ஆகிவிட்டீர்கள், எனவே நான் எனது அருட்கொடைகளை உங்களிடமிருந்து விலக்கிக் கொள்கின்றேன்”; என்று கூறுவான். இறைவன் விரும்பினால் அவன் ஒரு கூடுதலான உதவியாக சில காலங்கள் வரைக்கூட ஒரு ஜமாஅத்தில் கலீஃபாக்களை ஏற்படுத்துவதை தொடரலாம்.

இந்த நபிமொழியில் கிலாஃபத்தின் முதல் காலகட்டத்தை, முஸ்லீம்கள் பொதுவாக புரிந்து கொள்வது தூய்மையாளர்களும், நேர்மையாளர்களுமான கலீஃபாக்களின் அதாவது கிலாஃபத்தே ராஷித் காலம் என்றாகும். அவ்வாறே வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலத்திற்கு பிறகு, அஹ்மதியா ஜமாஅத்தில் கிலாஃபத் அமைப்பு உருவானது. ஜமாஅத்தின் கொள்கையை நடத்தி செல்ல கலீஃபத்துல் மஸீஹ்மார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அல்லாஹ் நாடியது வரையிலும் அது தொடர்ந்தது. பின்னர் அது வழிகேட்டின் பக்கம் செல்ல தொடங்கியது, இன்னும் குறிப்பாக இவர்கள் இப்பொழுது கொண்டுள்ள இவர்களின் கிலாஃபத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் இஸ்லாத்தின் போதனைகளும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனைகளும் முதுகுக்குப்பின்னால் தூக்கி எறியப்பட்டுள்ளது. மேலும், அஹ்மதிகள் திருகுர்ஆன், நபிமொழி மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனையைவிட கிலாஃபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னும் கூறப்போனால், அவர்கள் எந்தளவிற்கு ஆகிவிட்டார்கள் என்றால், “கிலாஃபத் எங்கள் உயிர்” என்ற கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள் . எனவே அல்லாஹ் அவனது ஒளியை விலக்க ஆரம்பித்தான், அவனது கலீபஃத்துல்லாஹ்வாக இந்த எளியவனை (ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவனது அருளாக எழுப்பினான்.

மேலும், இந்த எளியவன் எந்த மனித கரங்களாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் ஸுபுஹானஹுதாலா, எனது எஜமானர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வேலையை தொடர்ந்து எடுத்துச்செல்ல அவனது அன்பிற்குரியவனாக நேரடியாக தேர்வு செய்துள்ளான். ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் வருகை நுபுவ்வத்தின் போதனையின் அடிப்படையிலானதாகும். மேலும், இங்கு நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், நுபுவ்வத் அந்த ஏக இறைவன் ஏற்படுத்தும் ஒரு மாபெரும் அருளேயன்றி எந்த மனிதனாலும் உருவாக்க முடியாது. மேலும் இவ்வாறு தோன்றும் கலீஃபதுல்லாஹ் முற்றிலும் இறைவனின் ஆணைப்படி அவனது வஹியின் மூலம் வழி நடத்தப்படுகின்றார், இவ்வாறு தன்னை அல்லாஹ்வின் கலீஃபா என்று வாதம் செய்யும் ஒருவரிடம் பையத்தை பெறாமல் தனது முகத்தை திருப்பிக்கொண்ட ஒருவர் நிச்சயமாக நாளை மறுமையில் அந்த ஏக இறைவனின் முன் நிறுத்தப்படுவார். அப்போது அவருக்கு நிராகரித்ததற்கான எந்த ஆதாரமும் இருக்காது, மேலும் அவ்வாறாக ஒரு கலீஃபதுல்லாஹ்வின் பைய்யத்தை முறித்து கொண்ட நிலையில் மரணிப்பவர் நிச்சயமாக அறியாமையின் மரணமான "ஜாஹிலியத்தின்" மரணத்தை அடைகின்றார். ஆக, இந்த மாபெரும் அருளின் பக்கம் சிந்தியுங்கள்! அன்பானவர்களே!
Read more »

Aug 1, 2014

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு உம்மத்தி நபி வருவார்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 187 இல் இறுதி நபித்துவம் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி இறுதித் தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும் தூதரும் வரவே முடியாது என்பதற்கு இவ்வசனங்கள். (4:79,170, 7:158, 9:33, 10:57,108, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) சான்றுகளாக உள்ளன. 

மனித குலத்திற்கே உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 4:79, 4:170, 6:19, 7:158, 14:52, 33:40) என்பதும் அவர்களுக்குப் பின் நபியோ தூதரோ வரமாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. 

நம் விளக்கம்: 

பி.ஜே காட்டியுள்ள வசனங்கள் முழுவதையும் படித்தால் அவற்றுள் 4 வகையான கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இந்த வசனங்களின் பொருளை இத்தலைப்பின் இறுதியில் பார்க்கவும். நான்கு வகையான கருத்துக்கள். 

1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் அனுப்பப்பட்ட தூதர் ஆவார். 

2) திருக்குர்ஆன் முழு உலகுக்கும் அனுப்பட்ட வேத நூல். 

3) நபி (ஸல்) அவர்கள் நபிமார்களுள் காத்தம் ஆவார். 

4) நபித் தோழர்களுடன் சேராத பிற மக்களுக்காக (ஒரு தூதரை அனுப்புவான்) 

(அ) நபி (ஸல்) அவர்கள் மனித இனம் முழுமைக்கும் அனுப்பப்பட்டவர். அவர் கொண்டு வந்த வேதம் முழு உலகுக்கும் இறுதி வரை வேதம் என்பதால், இனி மேல் உலகுக்கு ஒரு வேதம் வராது என்று ஏற்றுக் கொள்ளலாமே தவிர அவர்கள்தான் இறுதி நபி என்று ஆகாதே!

(ஆ) அப்படி என்றால் இதற்கு முன்னர் வந்த நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வந்துள்ளனர். அவர்களுக்கு வந்த வேதமும் அக்காலத்துக்கு, அம்மக்களுக்கு முழுமையான வேதம்தான்.எனவே அந்த சமுதாயத்தில் ஒரே ஒரு தூதர் மட்டும் வந்திருக்க வேண்டும். வேறு எந்தத் தூதரும் வரவில்லை என்பதனை உலகில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? 

மூஸா நபி (அலை) அவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டும் வந்த ஒரு தூதர். அவருக்கு இறைவன் தௌராத் எனும் வேதத்தை கொடுத்தான். அது அம்மக்களுக்கு அக்காலத்துக்கு வேண்டிய முழுமையான வேதமாகத்தான் இருந்தது. (6:155 ) அனால் மூஸா நபியின் அடிச்சுவட்டில் தௌராத்தைப் போதிக்க ஏராளமான நபிமார்கள் வந்துள்ளனர். (2:88) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

ஆக ஒரு சிறிய சமுதாயாத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முழுமைபெற்ற வேதத்தைப் போதிக்க பல நபிமார்கள் வந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் நபியாக அனுப்பபட்டுள்ளதாலும் முழு உலகுக்கும் இறுதிவரை முழுமையான வேதமாக திருக்குர்ஆன் இருப்பதாலும் அவர்களுக்குப் பிறகு நபி வரத் தேவையில்லை என்பது தவறாகும். 

(இ) அல்லாஹ்வின் பார்வையில் நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் வரமாட்டார்கள் என்றால் அல்லாஹ் தன் திருமறையில் தெள்ளத் தெளிவாக பல இடங்களில் முஹம்மது நபிதான் இறுதித் தூதர். இனிமேல் எந்தத் தூதரும் வரமாட்டார் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே. பி.ஜே மேலே எடுத்துக் காட்டிய வசனங்களில் இப்படி எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? இல்லையே 

(ஈ) லா நபிய்ய பஅதி என்று நபிமொழிகளில் வந்துள்ளதே. அதற்கு எனக்குப் பிறகு நபி இல்லை என்று தானே பொருள் என்று கேட்டால் அந்த நபிமொழி இடம் பெற்றுள்ள நூல்களில் விளக்கவுரை நூல்களில் லா நபிய்ய பஅதி என்பதற்கு சரீஅத்துடைய எந்த நபியும் இல்லை என்றுதான் பொருள். இனிமேல் புதிய சரீஅத்துடன் எந்த நபியும் வரமாட்டார் என்று விளக்கம் தந்துள்ளார்கள் (அல்யவாகியது வல் ஜவாகிர், பாகம் 2, பக்கம் 24 இமாம் ஷிஹ்ராணி (ரஹ்). எனவே தௌராத்தைப் போதிக்க மூஸா நபியின் அடிச்சுவட்டில் ஏராளமான நபிமார்கள் வந்தது போல் திருககுர்ஆனைப் போதிக்க நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நபிமார்கள் வருவார்கள் என்பதுதான் திருக்குர்ஆனின் கருத்தாகும்.

உ) காத்தம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் வந்த மார்க்க அறிஞர்கள் தந்துள்ள விளக்கத்தைக் காண்போம். 

காத்தமுன்னபியீன் என்பதற்கு இறுதி நபி எனப் பொருள் கொள்பவர்கள் காத்தம் என்ற சொல்லுடன் நபிய்யீன் (நபிமார்கள்) போன்று ஒரு பன்மை பெயர்ச்சொல் சேர்ந்து, அதற்கு காலத்தால் இறுதி என்ற பொருள் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஒரேயொரு எடுத்துக்காட்டை ஹதீஸ்களிலிருந்தோ, அரபி நூல்களிலிருந்தோ, அரபி பத்திரிகையிலிருந்தோ காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. 

காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச் சொல் சேரும் போது அதற்கு சிறப்பு என்பதே பொருள் என்பதற்கான பல உதாரணங்களை ஹதீஸ்களிலிருந்தும், அரபி நூல்களிலிருந்தும், பத்திரிகையிலிருந்தும் நாங்கள் காட்டுகிறோம், இதோ சில உதாரணங்கள். 

நபிமொழிகள்: 

1) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பார்த்து, அலியே! நீர் காத்தமுல் அவ்லியா (இறைநேசர்களில் சிறந்தவர்) ஆவீர். நான் காத்தாமுல் அன்பியா (நபிமார்களில் சிறந்தவர்) ஆவேன் என்று கூறினார்கள். (ஆதாரம் ஸஹ்பின் ஸஹீது தைலம் தப்ஸீருஸ் ஸாபி – அல் அஹ்ஸாப்) 

இந்த நபிமொழியில் வந்துள்ள காத்தமுல் அன்பியா என்பதற்கு நபிமார்களுள் இறுதியானவர் என பொருள் கொண்டால், ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களை இறுதியான வலியுல்லாஹ் என்றும் அவர்களுக்குப் பின்னர் எந்த வலியும் (இறைநேசரும்) தோன்றவில்லை எனவும் தவறாக நம்ப வேண்டியது வரும். 

2) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களை காத்தமுல் முஹாஜிரீன் (ஹிஜ்ரத் சிதவர்களில் சிறந்தவர்) எனக் குறிப்பிட்டார்கள். (ஆதாரம் கன்ஸுல் உம்மால், பாகம் 13, பக்கம் 519) 

அரபி மொழி நூல்கள் / பத்திரிகையிலிருந்து.....

1) காத்தமுஷ் ஷுஅரா : புகழ்பெற்ற அரபி கவிஞராக திகழ்ந்த அபுதமாம் (கி.பி 788-845) என்பவரைக் குறித்து காத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: வாபியத்துல் அயான், பாகம் 1, பக்கம் 123, கெய்ரோ, எகிப்து) 

2) காத்தமுல் அவ்லியா: இமாம் ஷாபி (ரலி) அவர்களை காத்தமுல் அவ்லியா – இறை நேசர்களுள் சிறந்தவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் துஹ்பதஸ் ஸுன்னியா, பாகம் 45) 

3) காத்தமுல் அயிம்மா: எகிப்தைச் சேர்ந்த இமாம் அப்தா (1845-1905) காத்தமுல் அயிம்மா – இமாம்களுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (நூல், தப்ஸீர் அல் பாத்திஹா, பக்கம் 148) 

4) காத்தமுல் முஜாஹிதீன்: அஸ்ஸய்யத் அஹ்மத் ஸனூஸி என்பவர் காத்தமுல் முஜாஹிதீன் – போராளிகளுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (பத்திரிக்கை : அல் ஜாமியத்துல் இஸ்லாமிய்யா, பாலஸ்தீன், நாள் : 27, முஹர்ரம், ஹிஜ்ரி 1352) 

5) காத்தமத்துல் முஹக்கிகீன்: அஹ்மத் பின் இத்ரீஸ் என்பவரை குறித்து காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் ஆகாதுன் நபீஸ்) 

6) காத்தமுல் முகத்திஸீன்: டில்லியைச் சேர்ந்த இறைநேசர் ஸாஹ் வலியுல்லாஹ் அவர்கள் காத்தமுல் முஹத்திஸீன் – ஹதீஸ் கலையில் சிறந்தவர் என அழைக்கபடுகிறார்கள். (நூல்: இஜாஸா நாபியா பாகம் 1) 

7) காத்தமுல் ஹுப்பாஸ்: அல் ஸைஹு ஷம்சுத்தீன் அவர்களை காத்தமுல் ஹுப்பாஸ் – திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் தஜ்ரிதுல் ஸரீஹ் முகத்திமா, பக்கம் 4) 

8) காத்தமுல் புக்கஹா: அல் ஸைஹு நஜீத் என்பவரை கத்தமுள் புக்கஹா – மார்க்க சட்ட வல்லுனர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஸிராத்தல் முஸ்தகீம் யஹ்பா, நாள் : 27 ரஜப் ஹிஜ்ரி 1354) 

9) காத்தமுல் முபஸ்ஸிரீன்: அல் ஸைஹு ரஷீத் ரஸா என்பவரை காத்தமுல் முபஸ்ஸிரீன் – திருக்குர்ஆன் விரிவுரையாளர்களுள் சிறந்தவர். என அழைத்துள்ளனர். 

10) காத்தமுல் ஹுக்காம்: சிறந்த ஆட்சியாளரை காத்தமுல் ஹுக்காம் – மன்னர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. 

11) காத்தமுல் அவுஸியா: ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைக் குறித்து காத்தமுல் அவுஸியா – ஆலோசனை கொடுப்பவர்களில் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் மினாருல்ஹுதா, பக்கம் 106) 

12) காத்தமுஷ் ஷுஅரா: சிரியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அரபி கவிஞரும் எழுத்தாளருமான அபுஅலா அல்மெரி (கி.பி 973 - 1058) என்பவரைக் குறித்து கத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் முகத்தமா தீவானுல் முதனப்பி, எகிப்து, பக்கம் 4) 

காத்தமுல் முஹக்கிகீன்: அப்துல் பஸ்ல் அலூஸி என்பவர் காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுளார். (நூல்: ரூஹுல் மஆனி, முதற்பக்கம்) 

மேற்கண்ட சான்றுகள் இடம்பெற்றுள்ள நூற்களும், பத்திரிகைகளும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தால் வெளியிடப்பட்டவை அல்ல, மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச்சொல் சேரும்போது அதற்கு சிறப்பு என்ற பொருளே தவிர காலத்தால் இறுதி என்ற பொருள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் அறிவிக்கின்றன. 

இதிலிருந்து காத்தம் என்னும் சொல்லிற்குப் பிறகு இறைநேசர்களும், கவிஞர்களும், அறிஞர்களும், விரிவுரையாளர்கள் என்ற பன்மைச் சொல் வந்தால் அறிஞர்களுள் மிகச் சிறந்தவர், இறை நேரசர்களுள் மிகச் சிறந்தவர், கவிஞர்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நபிமார்களுள் காத்தம் என்பதும் நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் வரும். இறுதி நபி என்று பொருள் கொள்வது தவறாகும். என்று விளங்குகிறது.
Read more »

Jul 8, 2014

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.


“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71) 

முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள் அதாவது சிராத்தே முஸ்தகீம் (நேரான வழியைக்) காட்டுதல், நேரான வழியும் இறையருட்களைப் பெற்றவர்களின் நேரான வழியாகும். மேலும் இறையருட்களைப் பெற்றவர்கள் என்பதையும் விளக்கிக் கூறிவிட்டது. அதாவது நபி, சித்தீக், ஷஹீது, ஸாலிஹ் ஆகியோர். சூரா பாத்திகாவில் எத்தகைய மேலான அருட்கொடைகளை வேண்டுமாறு முகம்மதியா உம்மத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளதோ மார்க்க அளவில் அதன் கருத்து, உயர்ந்த ஆன்மீகப் பதவிகளாகும். அவைகளனைத்தும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது. 

சிலர் இந்தத் திருவசனத்திற்குப் பொருள் கூறும்போது ‘அவர்கள் (அல்லாஹ்வையும், திருத்தூதரையும் பின்பற்றுபவர்கள்) அருள் பெற்றவர்களோடு இருப்பார்கள்; அருள் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். என்று கூறுகின்றனர். அல்லாஹ்வையும், பெருமானார் (ஸல்) அவர்களையும் முழுமையாகவும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அல்லாஹ்வின் இந்த அறிவிப்பு சாதாரணமான ஒன்றல்ல. இதற்கு முன்னர் அல்லாஹ்வையும் ஹஸ்ரத் மூஸா (அலை) அல்லது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அல்லது ஹஸ்ரத் தாவூத் (அலை) போன்ற நபிமார்களையும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அறிவிப்பு இருந்தது. ஆனால் இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களைப் பற்றிக் கூறப்படுகிறது. எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களை பின்பற்றியவர்களிடம் இறைவன் ‘நீங்கள் எவ்வாறு செய்தாலும் உங்களுக்கு இறையருள் கிடைக்காது. மாறாக இறையருள் பெற்றவர்களோடு இருப்பதற்குரிய தகுதியை மட்டும்தான் பெறுவீர்கள்! என்று அல்லாஹ் கூறியதுண்டா? இல்லையே? அவ்வாறிருக்கும்போது இந்த ஆயத்திற்கு மட்டும் ஏன் இப்படிப் பொருள் கொள்கிறீர்கள்? எப்படிப்பட்ட அநியாயமான பொருள் கொடுக்கப்படுகிறது. இது பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் திருக்குர்ஆன் மீதும் சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டாகும். இது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கௌரவத்திற்கு ஏற்படுத்தும் களங்கமாகும். 

எல்லா நபிமார்களை விடச் சிறந்தவரும், மகத்துவமிக்கவரும், எல்லா அருட்களின் உரைவிடமுமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றினாலும், அவர்கள் இறைவனுடைய அருள் பெற்றவர்களாக ஆகமாட்டார்கள்; அவர்கள் அருள் பெற்றவர்களோடு வைக்கப்படுவார்கள் என்று விளக்கம் கூறுவது எந்த அளவுக்குப் பொய்யானதும் உண்மைக்கு மாறானதுமான ஒரு கருத்தாகும். இங்கு பயன் படுத்தப்பட்டிருக்கும் மஅ என்ற சொல்லுக்குத்தான் இப்படி தவறான பொருள் கொடுக்கப்படுகிறது. இதனை திருக்குர்ஆன் கண்டிக்கிறது. 

திருக்குர்ஆனில் ஓரிடத்தில் ‘வதவப்பன மஅல் அப்றார்’ ‘இறைவா! எங்களை நல்லடியார்களுடன் மரணிக்கச் செய்வாயாக!’ என வந்துள்ளது. இதற்கு ‘நல்லடியார்கள் மரணிக்கும் பொழுது அவர்களோடு சேர்த்து எங்களையும் மரணிக்க செய்வாயாக என்றா பொருள் கொள்ள முடியும்? எப்படியெல்லாம் நீங்கள் முகம்மதிய உம்மத்தை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கு, எங்களை நல்லடியார்களாக – நல்லடியார்களைச் சேர்ந்தவர்களாக மரணிக்கச் செய்வாயாக!’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயொழிய நல்லடியார்களுடன் சேர்த்து எங்களையும் மரணமடையச் செய் என்று பொருள் கொள்ளக் கூடாது.

‘மஅ’ என்ற சொல்லைப் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும் பொதுவாக, ‘மின்’ என்ற பொருள்தான் கொடுக்கப் படுகிறது. ஆனால் வேறு இனத்தைச் சேர்ந்தவர்களோடு ‘கூட’, ‘உடன்’ என்ற பொருள்வரும். உதாரணமாக, 

‘இன்னல்லாஹா மஅஸ்ஸாபிரீன்’ 

‘நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ இங்கு அல்லாஹ்வும் மனிதனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாத காரணத்தினால், ‘அல்லாஹ் பொறுமையுள்ளவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறான்’ என்று பொருள் கொள்ளமுடியாது. ‘கழுதை சமுதாயத்துடன் வந்தது’ என்று கூறினால் கழுதை சமுதாயத்தை சேர்ந்தது என்று பொருளில்லை. ஏனென்றால் இரண்டும் தனித்தனி இனங்களாக இருக்கின்றன. 

ஆனால், ‘ஸைத் என்பவர் நல்லவர்களோடு இருக்கிறார்; ‘என்மீது நேசம் கொண்டவர்களுடன் நான் இருக்கிறேன்’ என்றால், ‘நான் அவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறேன்’ என்றுதான் பொருள் இப்படிப்பட்ட இடங்களில் வரும் சொல்லுக்கு ‘மின்’ என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். 

திருக்குர்ஆனே இங்கு ‘மஅல்லதீன அன் அமல்லாஹு அலைஹிம்’ (அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களுடன்) என்று கூறியதற்குப் பிறகு அதற்க்கு விளக்கமாக, ‘மினன்னபியீன் ‘(நபிமார்களைச் சேர்ந்தவர்) என்று கூறியிருக்கிறது. இங்கு ஏன் ‘மா அன் நபிய்யீன்’ என்று கூறப்படவில்லை? எனவே ‘மஅ’ என்ற சொல்லுக்கு இங்கே ‘மின்’ என்றே பொருள் கொள்ள முடியும். 

இப்போது மஅ என்பதற்கு உடன் இருத்தல் என்ற பொருள் மட்டும்தானே தவிர அப்பிரிவினர்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் என்பதல்ல என்றால், இந்த விளக்கத்தின் படி, முஸ்லிம்கள் நபியாக மாட்டார்கள், நபிமார்களுடன் இருப்பார்கள். சித்தீக்குகள் (உண்மையாளர்கள்) ஆக மாட்டார்கள். உண்மையாளர்களுடன் இருப்பார்கள். அவ்வாறே ஷஹீது (உயிர்த் தியாகிகள்) ஆக இருக்கமாட்டார்கள். ஆனால் உயிர் தியாகிகளுடன் இருப்பார்கள். மேலும் ஸாலிஹீன் (நல்லடியார்கள்) ஆக மாட்டார்கள். நல்லடியார்களுடன் இருப்பார்கள் என்று இந்த வசனத்திற்குப் பொருளாகிவிடும். இதை விட பெரும் தவறான பொருள் என்ன இருக்க முடியும்? இந்த உம்மத்தில் நபி போகட்டும், சித்தீக் (உண்மையாளர்)கள், ஷஹீது (உயிர்த் தியாஹி)கள், ஸாலிஹ் (நல்லடியார்)கள் கூட தோன்றமாட்டார்கள் என்பதைவிட முகம்மதியா உம்மத்திற்கு வேறு என்ன அவமானம் இருக்கமுடியும்?
Read more »

May 17, 2014

அந் நஜாத் ஏட்டின் சிந்தனைக்கு - எம். பஷாரத் அஹ்மது.


அந்நஜாத் ஏட்டின் டிசம்பர் மாத இதழில் 18 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“அல் குர்ஆனின் எந்த வசனத்தில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்த தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது; மீறிச் செய்தால் அந்த சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டிவரும் என்பதே சரியாகும்.

உதாரணமாக அல்குர்ஆன் 7:81 இல் “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராக இருக்கின்றீர்கள்” என்று கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ்.

இந்த 7:81 இறைவாக்கை ஓதிக் காட்டி முஸ்லிம்கள் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தால், அதை மறுத்து இந்த 7:81 வசனம் லூத் (அலை) அவர்களின் கௌமுகள்(சமூகம்) பற்றி இறங்கிய வசனம், இதைப் போய் முஸ்லிம்களாகிய எங்களிடம் ஓதிக் காட்டி இந்த தவறை நாங்கள் செய்யக் கூடாது என எச்சரிப்பது என்ன நியாயம்? என்று கேட்பார்களா? புரோகித மௌலவிகள் ஒருகால் இப்படியும் வாதிடலாம்......

என்று எழுதியுள்ளார்.

உண்மையில் திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் எந்தச் சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அந்தச் சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டி வரும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சரியானதே! தெளிவான கருத்தே!

இப்போது எமது கேள்வி என்னவென்றால் திருக்குர்ஆனில் அல்மூமின் அதிகாரத்தில் 34 வது வசனம்.

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். "இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இந்த வசனத்தில் ஹஸ்ரத் யூஸுப்(அலை) அவர்களின் சமுதாயத்தினர், யூஸுப் நபி மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான் என்று கூறியதாகச் சுட்டிக்காட்டி அவ்வாறு கூறுபவர்களை வழிதவறியவர்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: இது ஒரு படிப்பினை.

அந்நஜாத் ஏட்டில் குறிப்பிட்டபடி “திருக்குரானில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.” அதாவது யூஸுப் நபியின் சமுதாயம் “அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான்” என்று கூறியது தவறு என்று மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இந்தத் தவறை அந்நஜாத் உட்பட முஸ்லிம்கள் பலர் செய்கின்றனரே! ஒரு சமுதாயம் செய்த தவறை முஸ்லிம்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது என அந்நஜாத் ஏடே குறிப்பிட்டுவிட்டு அவர்களே இந்தத் தவறை செய்யலாமா! யூசுப் நபியின் சமுதாயம் கூறியது போல், முஸ்லிம்களும் எந்தத் தூதரையும் அல்லாஹ் இனி ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று கூறுவது திருக்குர்ஆன் கூற்றின்படி தவரல்லவா! அந்நஜாத்தின் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா! அவர்களுக்கு இல்லையா??

இவ்வாறு எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று கூறுபவர்களை வழி தவறியவர்கள் என்று மேற் சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிற போது அவ்வாறு கூறி, (அதாவது நபிக்கு பின் இனியொரு நபியை இறைவன் அனுப்பமாட்டான் என்று கூறி) மேற்சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறுவது தவறு என்பதை அந்நஜாத் உணரட்டும்.

மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் (40:34) முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்று அந்நஜாத் கூறுமேயானால் அவர்கள் எழுதியதற்கு அவர்களே முரண்படுகிறார்கள் என்றே பொருள். அந்நஜாத் சிந்திக்கட்டும்; தெளிவு பெறட்டும்.
Read more »

May 2, 2014

கத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1


திருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் 

இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆனால் இதனை நிரூபிப்பதற்கு திருக்குர்ஆனில் இருந்து சான்றுகளையும் விளக்கங்களையும் தருவதைவிட்டுவிட்டு இவர்கள் ஹதீத்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்களைப் பார்க்கும்போது இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பொய்நபித்துவ வாதிகளையும், தாஜ்ஜால்களையும் தவிர வேறுயாரும் தோன்ற மாட்டார் என்றும் இவ்வும்மத்தில் உண்மையான இறைத்தூதர்கள் தோன்றும் பாதை நிரந்தரமாக அடைக்கப்பட்டு பொய்வாதிகளுக்கான பாதை மட்டுமே திறந்துவிடப்பட்டிருக்கிறது என்ற பிரமை நமக்கு ஏற்படும். காதமிய்யத்தைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்கள்தான் மிகுந்த ஆரவாரத்துடன் கூறப்படுகிறது. இதற்காக நபி (ஸல்) அவர்களின் சில ஹதீஸ்கள் அதிகமான அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன. அவற்றுள் ஒரு ஹதீஸ் இவ்வாறு வருகிறது.

“இந்தச் சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் இருப்பார்கள்; அவர்களில் ஒவ்வொருவரும் தான் நபியென்று வாதிப்பார்கள். ஆனால் நான் காதமுன்நபியீன் ஆக இருக்கிறேன். எனக்குப் பிறகு நபியில்லை.”

இந்த ஹதீதுக்கு விளக்கம் கூறி இன்மேல் எந்தவிதமான நபியும் வருவதற்கான வாய்ப்பில்லை என இவர்கள் கூறுகின்றனர். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வழியை அடைக்கிறார்கள் என்றால் அதனைத் திறப்பதற்கான அதிகாரம் எவருக்குமில்லை என்பதை நான் முற்றிலும் ஒப்புக் கொள்கிறேன். நாங்கள் இதைப்பற்றி “ஆமன்னா வஸதக்னா” ( நாங்கள் இதில் நம்பிக்கை கொண்டு உண்மைப்படுத்துகிறோம்) என்று கூறுகிறோம். எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அடைத்துள்ள ஒரு வாசலைத் திறக்கக்கூடிய ஒருவனை எந்தத் தாயும் பெறவில்லை என்பதை அஹ்மதிய்யா ஜமாத்தின் சார்பில் நான் ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன். அதுபோன்றே நபி (ஸல்) அவர்கள் தமது கையால் திறந்து தந்திருக்கும் ஒரு வாசலை அடைப்பதற்கான அதிகாரமும் யாருக்கும் கிடையாது! நபி (ஸல்) அவர்கள் எதனை அடைத்திருக்கிரார்களோ அதனைத்திறக்கவோ, எதனை அவர்கள் திறந்து தந்திருக்கிறார்களோ அதனை அடைக்கவோ யாராலும் முடியாது. 

மேலே கூறப்பட்ட ஹதீதைக் கேட்டபின் வாக்களிக்கப்பட்ட மஸிஹைப் பற்றி அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை நாம் கவனிக்கவேண்டும். ஸஹீஹ் முஸ்லிம் (என்னும் ஹதீத்நூலின்) கிதாபுல் பித்தனில் திக்ருத் தஜ்ஜால் என்னும் அத்தியாயத்தில் மஸீஹிப்னு மர்யத்தின் வாக்களிக்கப்பட்ட மஸீஹின்-தோற்றத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 

ஈஸா நபியுல்லாஹ்வும் அவரது ஸஹாபாக்களும் (ரலி) முற்றுகையிடப்படுவார்கள் பின்னர் ஈஸா நபியுல்லாஹ்வும் அவரது ஸஹாபாக்களும் (ரலி) அல்லாஹ்வின் பக்கம் கவனம் செலுத்துவார்கள். 

இந்த நபிமொழியில் மஸீஹைப்பற்றி நான்குமுறை அவர் நபியுல்லாஹ்வாக இருப்பார் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர் பழைய நபியாக இருந்தார்; இனிமேல் ஸஹாபி எவரும் தோன்றமாட்டார் என்று கூறப்படுமாயின் மேற்கூறப்பட்ட ஹதீதில் அவருடைய சீடர்களை ஸஹாபாக்கள் என்றும், ‘ரலியல்லாஹு அன்ஹும்’ என்றும் ஏன் குறிப்பிடவேண்டும்? இது எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வரப்போகும் ஒரு நிகழ்ச்சியைத்தான் குறிக்கிறது. 

ஆகவே இவ்வும்மத்தில் எத்தனை பொய்யர்களும் தாஜ்ஜால்களும் வேண்டுமானாலும் தோன்றட்டும்; 30 என்ன! 30 இலட்சம் பேர் வரட்டும். ஆனால் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹுக்கு வழங்கியிருக்கும் ‘நபியுல்லாஹ்’ என்ற பட்டத்தை எந்தச்சக்தியாலும் அவரிடமிருந்து பறிக்கமுடியாது. 

மேலே கூறப்பட்ட ஹதீதில் ஒருமுறை இருமுறையல்ல; நான்குமுறை வரவிருக்கும் மஸீஹைப்பற்றி அவர் நபியென்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் உங்களுக்கு ஆற்றலிருந்தால் இந்தப்பட்டத்தை அவரிடமிருந்து பறிக்க முயற்சியுங்கள் உங்களால் இந்த வாசலை எப்படி அடைக்கமுடியும்? 

முப்பது தாஜ்ஜால்களைப்பற்றி, ஸஹீஹ் முஸ்லிமின் விளக்கவுரையான இக்மாலுல் இக்மால் என்னும் நூலில் பின்வருமாறு காணப்படுகிறது. 

“இந்த ஹதீதின் உண்மை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. ஏனென்றால், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை தோன்றியுள்ள பொய் நுபுவ்வத் வாதிகளை எண்ணினால், இந்த எண்ணிக்கையை (அதாவது முப்பது) பூர்த்தியாகிவிட்டதை வரலாற்றைப் படிக்கின்றவர்கள் உணர முடியும். (இக்மாலுல் இக்மால் பக்கம் 7 பக்கம் 258)

அஹ்லே ஹதீத் பிரிவின் புகழ்ப் பெற்ற அறிஞரான நவாப் ஸித்தீக் ஹஸன்கான் ஸாஹிப் பின்வருமாறு எழுதுகிறார். 

இந்தச் சமுதாயத்தில் தோன்றும் தாஜ்ஜால்களைப்பற்றி நபிபெருமானார் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு நிறைவேறி எண்ணிக்கை முழுமை பெற்றுவிட்டது. (ஹஜ்ஜுல் கராமா பக்கம் 239)

இதிலிருந்து இனி நுபுவ்வத் வாதம் செய்யும் தஜ்ஜால் (பொய்வாதி) எவனும் தோன்றமாட்டான் என்பது விளங்குகிறது ஏனென்றால் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தோன்றும் காலம் வந்துவிட்டது; எதிர்பார்க்கப்பட்ட காலம் வந்திருக்கின்றது; பொய் நுபுவ்வத் வாதிகளின் காலம் முடிவடைந்துவிட்டது. இனி உண்மைவாதிதான் தோன்ற வேண்டும் என அஹ்லே ஹதீதின் தலைசிறந்த ஓர் அறிஞரே கூறியுள்ளார். 

முழுமைபெற்ற கட்டிடம்:

பொதுவாக நமது எதிரிகள் அடிக்கடி பின்வரும் ஹதீதை எடுத்துக்காட்டி, இந்த ஹதீதின்படி இவ்வும்மத்தில் எந்த ஒரு நபியும் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை என்று கூறி வருகின்றனர். 

‘ஹஸ்ரத் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கின்றார்கள். எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘எனக்கும் எனக்கு முன்னர் தோன்றிய நபிமார்களுக்கும் இடையிலுள்ள நிலைமை ஒரு கட்டிடத்திற்கொப்பானதாகும். அதன் அமைப்பு மிகவும் அழகுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு செங்களுக்கான இடம் விடப்பட்டிருக்கிறது. மக்கள் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப்பார்த்து அதன் அழகைக்கண்டு வியப்படைகின்றனர். ஒரு செங்களுக்கான இடம் ஏன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறதென மனதிற்குள் கேட்டுக்கொள்கின்றனர். விட்டு வைக்கப்பட்ட அந்த இடத்தை நிரப்புவதற்கான செங்கல்நான்தான். என்மூலம் அந்தக் கட்டிடம் முழுமை பெற்றுவிட்டது. இதன் காரணமாகத்தான் ரஸுல்மார்களின் காதம்மாக ஆக்கப்பட்டிருக்கிறேன். (புகாரி – கிதாபுல் மனாகிப்) 

இன்னொரு ரிவாயத்தில் (அறிவிப்பில்) நான் தான் அந்த செங்கல்; நான் காதமுன்நபியீனாக இருக்கிறேன்’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. 

இந்த ஹதீதை எடுத்துக்காட்டி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே இறுதியாக வைக்கப்பட்ட செங்கல் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே இனிமேல் எந்தவிதமான நபியும் தோன்றமாட்டார்கள் என்று தமது எதிரிகள் கூறுகின்றனர். 

ஸஹீஹ் புஹாரியின் விளக்கவுரையில் இந்த ஹதீதுக்கு விளக்கவுரையில் இந்த ஹதீதுக்கு விளக்கமளிக்கும்போது ஹஸ்ரத் அல்லாமா இப்னு ஹைஜர் அஸ்கலானி பின்வருமாறு கூறுகிறார்கள். 

இந்தக் கட்டிடம் முழுமை பெற்றிருக்கிறது என்பதன் பொருள் முஹம்மதிய ஷரியத் இதற்கு முன்னர் தோன்றிய எல்லா ஷரிஅத்துகளையும் விடப் பூரணமாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கிறது என்பதாகும்! (பதஹுல்பாரி பாகம் 2, பக்கம் 380)

பெருமையோடும் அகங்காரத்தோடும் புஹாரியில் காணப்படும் ஹதீதை எடுத்துரைக்கும் இவர்கள் அதன் விளக்கவுரையில் கூறப்பட்டதை ஏன் மறைக்கிறார்கள்? அதனை ஏன் இவர்கள் மக்கள் முன் வைப்பதில்லை? 

பாகிஸ்தான் அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படும் நான்கு முக்கிய அறிஞர்களுள் ஒருவரான அல்லாமா இப்னு குல்தூன் இந்த ஹதீஸைப் பற்றி விளக்கிக் கூறுவதாவது, 

“காதமுன் நபிய்யீனுக்கு விளக்கமாக (பெருமானார் (ஸல்) அவர்கள்) ஒரு கட்டிடத்தை நிறைவு செய்யும் ஒரு செங்கல் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதன் பொருள் முழுமையான நபித்துவம் பெற்றவர் என்பதாகும். (முகத்தம இப்னி குல்தூன் பக்கம் 27) 

இங்கு காலத்தால் இறுதியானவர் என்பதல்ல பொருள், முழுமை பெற்ற நபித்துவம் கொண்ட நபி வந்துவிட்டார் என்றுதான் பொருள். இதைவிட அதிகமாக இந்த ஹதீதுக்கு வேறு பொருள் இல்லை.

இன்னொரு ஹதீதின் அடிப்படையிலும் இவர்கள் எதிர்க்கிறார்கள். 

‘ஹஸரத் ஸதிப்னு வக்காஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு ரிவாயத் செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் அலி (ரலி) அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள். ‘என்னிடம் உமக்கு உள்ள இடம் மூஸா நபி (அலை) இடம் ஹாரூன் நபி (அலை) க்குள்ள இடமாகும். ஆனால் எனக்குப் பிறகு நபி இல்லை. 

முஸ்னத் அஹ்மது பின் ஹன்பலின் ரிவாயத்தில் எனக்குப் பிறகு நீர் நபியாக இருக்கமாட்டீர்’ என வந்துள்ளது. (புஹாரி, முஸ்லிம் கிதாபுல்பளாயிஸ், முஸ்னது ஹன்பல்) 

இந்த ஹதீஸைப் பற்றிய விளக்கமாவது அண்ணலார் (ஸல்) அவர்கள் ஒரு போரில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் முன் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைத் தமக்குப் பகரமாக மதீனாவில் இமாமாக நியமித்தார்கள். அலி (ரலி) மிகச் சிறந்த போர் வீரராக இருந்தார்கள். எம்பெருமானார் (ஸல்) அவர்களோடு எல்லா ஜிஹாதுகளிலும் கலந்து கொண்டார்கள். பிற போர் வீரர்களைவிட அவர்களுக்கு உயரிய நிலை இருந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்தப் போரில் பங்கு கொள்ளாமல் இருப்பது இரண்டுமடங்கு துக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஒன்று இந்தப் போரில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற வேதனை. இரண்டாவது பெருமானார் (ஸல்) அவர்கள் நம் மீது கொண்ட கோபமும் வெறுப்பும் கொண்ட காரணத்தினால்தான் தம்மை இவ்வாறு பிந்தங்கவைத்து சென்றார்கள் என மக்கள் கூறுவார்களே என்ற வேதனை. எனவே ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் மிகவும் வேதனையோடு அண்ணலார் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைதூதர் அவர்களே! என்னை நீங்கள் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தலைவனாக நியமித்து விட்டா செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். இதற்க்கு பதிலளிக்கும்போது எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அலியே நீர் ஏன் வேதனைப்படுகிறீர்? எமக்கும், உமக்கும் இடையேயுள்ள உறவு மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இடையிலுள்ள உறவைப்போன்றதாகும். ஹஸ்ரத் மூஸா (அலை) வெளியே (ஸினா மலைக்குச்) சென்ற போது, தமது பிரதிநிதியாக ஹாரூனை நியமித்து சென்றார்கள். எனக்கும் உமக்கும் இடையேயுள்ள உறவும் இப்படிப்பட்டதேயாகும். ஆனால் ஒரு வேறுபாடு. (ஹாரூன் (அலை) நபியாக இருந்தார்) எனக்குப் பிறகு – அதாவது நான் வெளியே சென்றிருக்கும் காலத்தில் நீர் நபியாக இருக்கமாட்டீர். 

இதுதான் மேலே கூறப்பட்ட ஹதீஸின் விளக்கமாகும். 

ஆனால் இன்றைய ஆலிம்கள், இந்த ஹதீதில் வரும் பஹ்தி (எனக்குப் பிறகு) என்ற சொல்லுக்கு ‘எனக்குப்பிறகு என்றென்றைக்கும்’ என்று பொருள் கொள்கின்றனர். 

ஆனால் இன்றைய முஸ்லிம்கள் அனைவரும் மதித்துப் போற்றிவரும் ஹஸ்ரத் ஷா வலியுல்லாஹ் முஹத்தஸ் தெஹ்லவி இந்த ஹதீஸைப் பற்றி என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். பாகிஸ்தான் அரசாங்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இவருடைய பெயரும் மிகச் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் கூறுவதாவது. 

“இந்த ஹதீத் ‘தபூக்’ யுத்தத்தின்போது எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஹஸ்ரத் அலியைத் தமது பிரதிநிதியாக – இமாமாக நியமித்ததைக் குறிப்பிடுகின்ற ஒன்றாகும். ஹஸ்ரத் அலியை ஹாரூனுடன் ஒப்பிட்டது. ஹஸ்ரத் மூஸாநபி (அலை) அவர்கள் ஸினாய் மலைக்குச் சென்றபோது அவரைத் தமது பிரதிமளைக்குச் சென்றபோது அவரைத் தமது பிரதிநிதியாக நியமித்ததைக் குறிப்பிடுவதற்காகும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘பஹ்தி’ (எனக்குப் பிறகு) என்பதன் பொருள், ‘ஹைரீ’ (என்னைத்தவிர) என்பதாகும். அது காலத்தைக் குறிப்பதல்ல உதாரணமாக, ‘பமன் யஹ்தீஹி மின்பஹ்தில்லாஹி’ என்ற திருவசனத்திலுள்ள ‘பஹ்தில்லாஹ்’ என்பதன் பொருள். ‘அல்லாஹ்வைத்தவிர’ இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள பஹ்தி என்ற சொல் காலத்தைக் குறிப்பதல்ல என்பதற்கு, ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுக்குப் பிறகு ஹஸ்ரத் ஹாரூன் (அலை) உயிர் வாழவில்லை என்ற சான்றே போதுமானதாகும். (குர்ரத்துல் ஐனைனி) 

ஹஸ்ரத் ஷாவலியுல்லாஹ் ‘பஹ்த’ என்பதற்குத் திருக்குரானிலிருந்தே விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதாவது, ‘மின்பஹ்தில்லாஹி’ என்பதற்கு, ‘அல்லாஹ்வுக்குப் பிறகு’ என்று பொருள் கொள்ளமுடியாது; ‘அல்லாஹ்வைத் தவிர’ என்று மட்டும்தான் பொருள் கொள்ளமுடியும். இவ்வாறு அல்லாஹ் ‘பஹ்த’ என்பதற்குத் திருக்குர்ஆனில் ‘தவிர’ என்று பொருள் கொடுத்திருக்கிறான். 

மேலும் ஹஸ்ரத் ஷா அவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீஸை மிகவும் கவனமாகவும் உன்னிப்பாகவும் அலசி ஆராய்ந்து பஹ்தி என்ற சொல்லுக்கு விளக்கமளித்திருக்கிறார்கள். அதாவது இங்கு கூறப்பட்ட ‘பஹ்தி’ என்ற சொல் காலத்தைக் குறிக்கக் கூடியதல்ல என்பதற்கு ஆதாரமாக ஹஸ்ரத் மூஸாவுக்குப்பிறகு ஹஸ்ரத் ஹாரூன் உயிர் வாழவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி ஹஸ்ரத் அலியைப் பொருத்தவரையில் ‘பஹ்தி’ என்ற சொல் காலத்தைக் குறிப்பதல்ல என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதாவது ‘லா நபிய்யபஹ்தி’ என்ற ஹதீதில் கூறப்பட்டுள்ள ‘பஹ்தி’ என்ற சொல் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிவருவது வரைக்கும் உள்ளதாகும்; என்றென்றைக்கும் உள்ளதல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்குமுள்ளதாகும் என்று தெரிகிறது. 

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களைப்பற்றியுள்ள ஒரு நபிமொழியும் கவனத்திற்குரியதாகும். 

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஸ்ரத் அக்பா பின் ஆமிர் அவர்கள் தெரிவிக்கிறார்கள். “எனக்கு பிறகு ஒரு நபியின் வருகை தேவைப்படுமாயின், ஹஸ்ரத் உமர் நபியாவார்” இமாம் திர்மிதி இந்த ஹதீதைக் குறிப்பிட்டு ‘ஹாதா ஹதீதுன் ஹஸனுன் கரிபுன்’ என்று எழுத்கிறார் அதாவது இந்த ஹதீது ‘கரீப்’ ஹதீதாக இருக்கிறது. ‘கரீப்’ ஹதீத் என்றால் ஒரேயொரு ராவி (அறிவிப்பாளர்) மட்டுமே கொண்ட ஹதீத் என்று பொருள். இந்த ஹதீதை அறிவித்த ஒரே ஓர் அறிவிப்பாளர் மிஷ்ரா ஹிப்னு ஹாஆன் ஆவார். இவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும், ஹதீதுகளைப் பற்றி ஆய்வு செய்வோர் இவரைப்பற்றி என்ன கூறுகின்றனர் என்பதைப்பற்றியும் ‘தஹ்தீபுத்தஹ்தீப்’ என்னும் ஆராய்ச்சி நூலில் இவ்வாறு காணப்படுகிறது. 

மிஷ்ர ஹிப்னு ஹாஆன் ஒரு பலவீனமான அறிவிப்பாளர் என்று இப்னுஹையான் கூறுகிறார். ஆகவே அவரைப் பின்பற்றக் கூடாதென்றும் அவர் கூறுகிறார். இப்னுதாவூதும் இதே கருத்தைக் கொண்டிருப்பவர் என்பதுமட்டுமல்லாமல் அவரைக் கடுமையாக கண்டிக்கவும் செய்கிறார். இந்த அறிவிப்பாளர் ஹஸ்ரத் அப்துல்லாஹிப்னு ஸுபைரை முற்றுகையிட்ட ஹஜ்ஜாஜின் படையைச் சார்ந்தவராவார் இந்தப்படையினர் கஹ்பதுல்லாஹ்வை நோக்கிக் கல்லெறிந்தனர். 

மேலே கூறப்பட்ட ஹதீத் வேறுவிதமாகவும் ரிவாயத் செய்யப்பட்டிருக்கிறது. 

‘நான் (நபியாகத்) தோன்றவில்லை என்றால் உமரே! நீர் தோன்றியிருப்பீர்’ (மிர்காத் ஷரஹ்மிஷ்காத் பாகம் 1 பக்கம் 539) 

இதே போன்று இன்னொரு ரிவாயத்தில் ‘உங்களிடம் நான் தொன்றவில்லை என்றால் நிச்சயமாக உமர் உங்களிடம் தோன்றியிருப்பார்.’ (குனூஸுல் ஹக்காயிக் பக்கம் 103) 

என வந்துள்ளது. ஏனென்றால் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களிடம் நபியாவதற்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தன, ஆகவே இங்கும் கூறப்படும் ‘பஹ்தி’ என்ற சொல்லுக்கு ‘ஹைரி’ (என்னைத்தவிர, எனக்குப்பதிலாக) என்ற பொருள்தான் கிடைக்கிறது.
Read more »

Jan 16, 2014

வழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறிய அவலம்.


இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

யூசுப் நபியின் காலத்திலும், அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்த ரசூலையும் அனுப்பமாட்டான் என்றே கூறி வந்தனர். இதை அல்லாஹ் திருக்குரானில் பதிவு செய்திருப்பதன் காரணம் இதே மாதிரி பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் கூறப்போகின்றார்கள். அவ்வாறு கூறி வழி கெட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதர்க்காகத்தானே தவிர வெறும் சென்ற கால கதையாக சொல்வதற்கு மட்டுமல். இதனை வசனத்தின் பிற்பகுதியும் உறுதிப்படுத்துகிறது.

"இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

அல்லாஹ் தன் தூதை எங்கு வைக்க வேண்டுமென்பதை அவர் நன்கு அறிகின்றான் என இறைவன் கூறுகிறான் (6:125) அதாவது எங்கு, எப்பொழுது, எவரை தூதராக ஆக்க வேண்டுமென்பதை இறைவன்தான் அறிகிறான். அவ்வாறிருக்கையில் இவர் இறுதியானவர் என்று அல்லாஹ்வோ, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களோ கூறாத நிலையில் இன்னும் அப்படிக் கூறுபவர்களை வழி கேடர்கள் என்றே அல்லாஹ் மேற்கண்ட (40:35) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

சென்ற கால நபியின் சமுதாயத்தினர் சொன்ன இறுதி நபிக் கொள்கை தவறு, வழி கேடு என்பதை இறைவன் வெறும் கதையாகக் கூறவில்லை; படிப்பினைக்காகக் கூறுகின்றான். இல்லைஎன்றால் யூசுப் நபியின் சமுதாயத்தினர் கொண்டிருந்த தவறான இறுதி நபிக் கொள்கையை நமக்கு எடுத்துரைப்பதில் என்ன பயன் இருக்கிறது? அது மட்டுமல்ல அந்த எச்சரிக்கை நிகழ்காலத்திற்க்கும் பொருந்துகிறது என்பதை அடுத்தவசனம் தெளிவுபடுத்துகிறது.

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இறுதி நபிக் கொள்கை கொண்ட வழிகேடர்கள் எவ்வித இறைசான்றுமின்ற்றியே வாதம் செய்கின்றனர். இவர்கள் அகங்காரம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை காப்பாற்றுவானாக.
Read more »

Jan 15, 2014

நபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பதே இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டுதலாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 37 இல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டுதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இவர்தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்யவில்லை. என்றெல்லாம் கூறினால் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும் என்று எழுதியுள்ளார். அதாவது

இந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறுவது தான் இறைத் தூதர்களிடையே பாகு பாடு காட்டுதல் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருதிருந்தால் இதைவிடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும் என்றும் இன்னொரு கருத்தையும் தருகிறார்.

எல்லாத் தூதர்களுமே தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள் முனையளவும் குறையில்லாமல், விலை போகாமல் மனிதர்களுக்கு அஞ்சாமல் மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்காமல் சிறந்து விளங்கினார்கள் என்று நம்புவதுதான் பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான் கருத்து என்றும் எழுதியுள்ளார்.
(பார்க்க திருக்குர்ஆன் 2:136, 2:285, 3:84)

நம் விளக்கம்:

பி.ஜே காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்களுடன் 4:140 வசனத்தையும் நாம் ஆய்வுக்காகப் பார்க்க வேண்டும். பி.ஜே எழுதியுள்ள கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால், அந்த நபி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார், இந்த நபி தன் பணியை சிறப்பாகச் செய்யவில்லை என்றும், மூஸா நபியின் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருதிர்ந்தால் அவரை விட இவர் தம் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார் என்றும் நினைக்கக் கூடாது என்றும், எல்லாரும் தத்தமது பணியில் சிறந்து விளங்கினார்கள் என்றும் எண்ண வேண்டும் என்று எழுதியுள்ளார்.

அதாவது நபித்துவ பணியில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதே அதன் பொருள் என்று கருதுகிறார். இது சரியா என்பதனை அவர் காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து காண்போம்.

2:137-138 வசனத்தைக் காண்க இவ்விரு வசனங்களிலும்

1) அல்லாஹ்வையும், எங்களுக்கு வழங்கப்பட்டதையும்

2) இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் அவரது வழி தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும்,

3) ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்பட்டதையும்,
4) ஈமான் கொள்ள வேண்டும்.

5) நீங்கள் ஈமான் கொண்டது போல் அவர்களும் ஈமான் கொண்டால் நேர்வழி பெறுவர்.

6) இதைப் புறக்கணித்தால் எதிரிகளே என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, 1. அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுதல், 2. அவன் அனுப்பிய நபிமார்கள் எல்லாரிடமும் ஈமான் கொள்ளுதல், 3. அவர்களுக்கு அருளப்பட்டதன் மீது ஈமான் கொண்டால் நேர்வழி எனக் கூறப்பட்டுள்ளது.

2:185 வசனத்தில் 1. அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல், 2. மலக்குகள் மீது ஈமான் கொள்ளுதல், 3. வேதங்கள் மீது ஈமான் கொள்ளுதல், 4. அவனுடைய தூதர்கள் மீது ஈமான் கொள்ளுதல், 5.அவனுடைய தூதர்களுக்கிடையில் பாகுபாடு காட்டாதிருத்தல்.

3:84 வசனமும் 2:136 வசனமும் ஒன்றுதான் இம்மூன்று வசனங்களும்

1. அல்லாஹ்வின் மீதும், 2. அவனது மலக்குகள் மீதும், 3.அவனுடைய எல்லா நபிமார்கள் மீதும், 4. அவர்களுக்கு வழங்கப்பட்டவை மீதும் ஈமான் கொள்ள வேண்டும் என்றும் நபிமார்களுக்கிடையில் ஈமான் கொள்வதில் பாகுபாடுக் காட்டக் கூடாது என்றும் கூறுகிறது. அதாவது நபிமார்கள் சிலரை ஈமான் கொள்வதும் நபிமார்கள் சிலரை ஈமான் கொள்ளாதிருப்பதும் அவர்களுக்கிடையில் பாகுபாடு காட்டுவதாகும் என்று கூறுகிறது.

இக்கருத்தை 4:150 வது வசனம் தெளிவாகக் கூறுகிறது.

1. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மொத்தமாக மறுத்தல்.

2. சிலரை ஏற்றுக் மற்றும் சில தூதர்களை மறுத்தல்.

3. அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் இவர்கள்தான். அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ரஸுல்மார்களை ரஸுல்மார்கள் இல்லை என்று கூறுவது அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் இடையில் பாகுபாடு காட்டுதல்.

IFT 1. திருக்குர்ஆன் விளக்கவுரை 2. அப்துல் வஹ்ஹாபின் தர்ஜுமா 3. சவூதி அரசின் வெளியீடு 4. அன்வாருல் குர்ஆன் 5. தப்ஸீர் இப்னு கஸீர் 6. ஜான் டிரஸ்ட் 7. தப்சீர் ஹமீத் 8. சிராஜுதீன் நூரியின் தர்ஜுமா 9. தாவூத் ஷா விரிவுரை 10. அப்துல் ஹமீது பாக்கவி.

4:150 அவர்கள் வசனத்திற்கு நபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பது என்றே பொருள் தந்துள்ளனர்.

நபிமார்கள் வரலாறு.

ஆதம் நபி முதல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த நபிமார்களின் வரலாற்றை பாகுபாடு என்ற கண்ணோட்டத்தில் நாம் ஆய்வு செய்தால்.

1) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபி ஒருவர் அனுப்பப்பட்ட போதெல்லாம் ஒரு சிலர் ஈமான் கொண்டனர். பெரும்பாலார் மறுத்தனர். அந்தந்த நபியை ஈமான் கொள்வதில்தான் பாகுபாடு காணப்பட்டுள்ளதே தவிர பி.ஜே கூறுவது போல் அந்த நபியை விட இந்த நபி தம் பணியைச் சிறப்பாகச் செய்தார் என்றோ இவராக இருந்தால் அவரை விட தம் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார் என்றோ பாகுபாடு காட்டப்பட்டதாக திருக்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து நமக்குச் தெரியவில்லை.

2) யூதர்களிடையே ஈஸா நபி வந்த போதும் சிலர் ஈமான் கொண்டனர்: பலர் மறுத்தனர். பி.ஜே பாகுபாடு பற்றிக் கூறியிப்பது போல் அவர்கள் கூறியதாகத் தெரியவில்லை.

3) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூஸா நபியையும் ஈஸா நபியையும் ஈமான் கொண்டோருள் சிலர் நபி (ஸல்) அவர்கள் மீதும் ஈமான் கொண்டனர். ஆனால் பலர் மறுத்தனர். நபித் தோழர்கள்யாரும் முன்னர் வந்த நபிமார்களின் பணியைப் பற்றி பி.ஜே எழுதியிருப்பது போல் (ஓரிருவரைத் தவிர வேறு எவரும்) பேசியிருப்பதாக தெரியவில்லை. எனவே நபிமார்களுக்கு இடையே பாகுபாடு எனபது நபிமார்களுள் சிலரை ஏற்பதையும் சிலரை மறுப்பதையும் தான் குறிக்கும்.

திருக்குர்ஆன் இவ்வாறு கூறுவதிலிருந்து, எதிர்காலத்தில் முஸ்லிம் உம்மத்தில் திருக்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றி உம்மத்தி நபி வருவார் எனபதையும் அன்னாரை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும், அன்னாரை மறுப்பது, நபிமார்களிடையே வேறுபாடு காட்டுவதாகும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஒரு நபியை மறுப்பது என்பது அதற்கு முன்னர் வந்த அனைத்து தூதர்களையும் மறுப்பதாகும். இன்றைய முஸ்லிம் உலகு தங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு தூதரை மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் ஆதம் நபி முதல் நபி (ஸல்) அவர்கள வரை எல்லாத் தூதர்களையும் மறுக்கிறார்கள் என்றுதான் பொருள். அதாவது இவர்கள் பிற நபிமார்கள் காலத்தில் இருந்தாலோ, பிற நபிமார்கள் இவர்கள் காலத்தில் இருந்தாலோ அந்தந்த நபிமார்களை இவர்கள் மறுத்துவிடுவார்கள். அல்லாஹ் நம்மை அந்த குப்ரிலிருந்து காத்தருள்வானாக. 

Read more »

Jun 19, 2012

அல் ஜன்னத்தின் இறுதி நபித்துவம்


அல் ஜன்னத் இதழில் ஒரு கேள்வியும் அதற்க்கான பதிலும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கேள்வி திருத்தப்பட வேண்டியதும் அதற்க்கான பதில் மறுக்கப்படவேண்டியதுமாகும்

"3:81, 33::7  வசனங்கள் நபிகள் நாயகத்துக்குப் பின் வேறு நபிமார்கள் வரமுடியும் எனக் கூறுவதாக என் நண்பர் வாதிடுகிறார் இது சரியா? என்பதுதான் கேள்வி.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் திருக்குர்ஆனுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான வேறு நபிமார்கள்  வரமுடியும் என எந்த முஸ்லிமும் நம்பவில்லை. ஆயினும் திருக்குர்ஆ னுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் உட்பட்டவராக இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஈசா நபி தோன்றுவார்கள் என எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர். அது குறித்து முன்னறிவிப்புகள் திருக்குரானிலும். ஹதீஸிலும் நிறைய உள்ளன. இதனை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது.

3:81, 33:7 வசனங்கள் இந்த கருத்தை வலியுறுத்துபவையாகவே உள்ளன. அதாவது உங்களுக்கு வேதமும் ஞானமும் வழங்கப்பட்ட பின் உங்களிடமுள்ள அந்த வேதத்தையும் ஞானத்தையும் மெய்ப்பிப்பவரான ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று அவருக்கு உதவி செய்ய வேண்டும் என எல்லா நபிமார்களிடமும் உறுதி மொழி வாங்கியதாக 3:81 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அந்த உறுதிமொழியையே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் வாங்கியதாக 33:7 வசனம் கூறுகிறது. எனவே திருக்குரானுக்கும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவராக திருக்குரானையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் மெய்ப்பிக்கின்றவராக இந்த உம்மத்தில் தோன்றுவார்கள் என முன்னறிவிக்கப்பட்ட ஈசா (நபி) வருகின்றபோது அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தைத்தான் உணர்த்துகின்றன. 

ஈசா  நபி வருகின்ற போது அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற போதனை இவ்வசனங்களில் இருப்பதை அல் ஜன்னத் தந்துள்ள பதிலில் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனங்களுக்கு அல் ஜன்னத் தந்துள்ள விளக்கம் திருக்குரானுக்கும் நபி மொழிகளுக்கும் முரணானதாகும்.

"நபிமார்களே! உங்களை நான் நபியாக நியமித்து வேதத்தை வழங்கிய பின் உங்களிடம் மற்றொரு நபி வந்தால் அவரை நீங்கள் ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் இவ்வசனத்தின் சாராம்சம்' என்று எழுதியுள்ளது. அதாவது இந்த நபி உறுதி மொழி நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும், நபிமார்களை ஏற்றுக் கொண்டவர்களுக்குப் பொருந்தாது. அல் ஜனனத்தின் இந்தக் கருத்து தவறானது என்பதைக் காட்டும் வகையில் தொடர்ந்து வரும் வசனம் எச்சரிக்கிறது. அதாவது 'எனவே இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள்தாம்' (3:82) இதிலிருந்து 3:81- இல் கூறப்பட்ட உறுதிமொழி நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும் எனக் கூறினால் நபிமார்களிடையேயும் இறைக் கட்டளையைப் புறக்கணிப்பவர்கள் இருப்பார்கள் அவர்களும் தீயவர்களாகிவிடுவார்கள் (அவ்வாறு நினைப்பதைவிட்டும் அல்லாஹ் காப்பாற்றுவானாக) என்று பொருளாகிவிடும்.

"நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்திலேயே இன்னொரு நபி வந்திருந்தால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்க வேண்டும்' என 33:7 வசனத்திற்கு அல் ஜன்னத் விளக்கம் தந்துள்ளது. இது முற்றிலும் பேதமைத்தனமான ஒரு விளக்கமேயாகும். இவர்களின் கூற்றுப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த நபியும் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அல்லாஹ் அவர்களிடம் உறுதிமொழி வாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?  இல்லாத ஊருக்கு வழி சொல்வதைப் போலல்லவா அது அமைந்துவிடும்.

அல் ஜனனத்தின் இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) தெளிவாக மறுத்துள்ளார்கள். அதனை அல் ஜன்னத்தே தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குச் சென்ற போது, அலியே! மூஸாவுக்கு ஹாரூன் இருந்ததுபோல் நீ எனக்கு இருக்கிறாய். ஆயினும் எனக்குப் பின் நபியில்லை என்று கூறியதற்கு, "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதால் ஹாரூன் போல் அலியும் நபியாக இருப்பாரோ என்ற சந்தேகம் வந்துவிடுமோ என்பதற்காக எனக்குப் பின் எந்த நபியும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் " என அல் ஜன்னத் விளக்கம் தந்துள்ளது . எனவே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே இன்னொரு நபி வந்தால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்க வேண்டும்' என்றுதான் 33:7-க்கு பொருள் என்ற அல் ஜனனத்தின் கருத்து முழுக்க முழுக்க அபத்தமானது. ஏனெனில் தமது வாழ்நாளில் இன்னொரு நபி வரமாட்டார், வர வாய்ப்பே இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள்.  இந்நிலையில் 'வாழும் காலத்திலியே இன்னொரு நபி வந்திருந்தால்' என்ற பேச்சிற்கே இடமில்லை.

எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு திருக்குரானையும் அதன் ஞானத்தையும் மெய்ப்பிக்கக் கூடிய ஒரு தூதரைப் பற்றியே இந்த வசனம் கூறுகிறது. அவ்வகையாக தூதர்கள் வரமாட்டார்கள் என்றால் இறைவன் மேற்கண்ட உறுதி மொழியை வாங்கி இருக்கமாட்டான். மேலும் ஈசா நபியின் வருகையைப் பற்றிய தெளிவான முன்னறிவிப்புகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. அவற்றிற்கேற்ப ஈசா நபி தோன்றினால் அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும் என முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் வலியுறுத்துவதாகவே அந்த வசனத்தை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு ஒரு தவறான விளக்கம் தந்த பின் அல் ஜன்னத் "ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி. அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமுடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன" எனக் கூறுகிறது.

ஹஸ்ரத் ஈசா நபி வருவார்கள் என நம்பும் எந்த முஸ்லிமும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார். வரக்கூடிய ஈசா நபியாக இருக்க மாட்டார்கள் என எவரேனும் கூறினால் அது கற்பனையும் சுய விளக்கமுமாகும். மேலும் அது நபிமொழிகளுக்கு முரணான கூற்றுமாகும்.

வரக்கூடிய ஈசா நபியைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'நபியுல்லாஹிஹி ஈசா' அல்லாஹ்வின் நபியாக ஈசா அவர்கள் வருவார்கள் என்றே முஸ்லிம் ஹதீஸில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
"எனக்கும் அவருக்கும் (ஈஸாவுக்கும்) இடையில் நபியில்லை. அவர் வருவார்." (முஸ்னத் அஹ்மத்) அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஈசா நபி வரையிலுமான காலத்தில் வேறு நபி வரமாட்டார்கள். இதுவும் வரக்கூடிய ஈசா அவர்கள் நபியாகவே இருப்பார் எனத் தெரிவிக்கிறது.

"அவர்கள்தான் இறுதி நபி என்று கூறப்படும்போது 'இறுதி நபி' என்பது ஏதோ மாபெரும் பதவி எனத் தோன்றும். உண்மையில் காலத்தால் இறுதி என்ற பொருளில் 'இறுதி நபி' என்று தமிழில் மொழிபெயர்க்கக் கூடிய அரபுச் சொல் திருக்குரானிலோ, ஹதீஸிலோ எங்கேயும் வரவில்லை. எவரும் காட்டவும் முடியாது. 'அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமுடியாது' என்ற தவறான கருத்திற்கு அல் ஜன்னத் தரும் சான்றுகளைப் பார்ப்போம்.

முதலாவதாக காத்தமுன்னபியீன் என்ற சொல்லிற்கு நபிமார்களின் முத்திரை என மொழிபெயர்த்துவிட்டு அதற்கு அகராதிகளை ஆய்வு செய்வதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமே ஏற்கப்படவேண்டுமென அல் ஜன்னத் கூறுகிறது. இதிலிருந்து காத்தமுன்னபியீன் என்ற சொல்லிற்கு அகராதியைப் புரட்டிப் பார்த்தால் இவர்கள் தரும் தவறான அர்த்தம் அவற்றில் இல்லை. என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார் எனத் தெரிகிறது. 'காத்தமுன்னபியீன்' என்ற சொற்றொடருக்கு இவர்கள் தரும் பொருளில் அதனை நபிகள் நாயகம் (ஸல்) எங்குமே பயன் படுத்தவில்லை. அப்படி பயன்படுத்தியதாகக் கூறுவது இவர்களின் சுய விளக்கமேயாகும்.

அல் ஜன்னத் ஆறு ஹதீஸ்களைக் குறிப்பிட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் என்ற கருத்தை அந்த ஹதீஸ்களும் கூறவில்லை என்பதை அந்த ஹதீஸ்களைக் கூர்ந்து கவனித்தாலே புரியவரும். முதலாவதாக இந்த உம்மத்தில் தோன்றுவார்கள் என ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ள ஈசா நபியின் வருகைக்கு வேறு எந்த ஹதீஸும் எதிராகவே இருக்க முடியாது.

முதல் ஹதீஸ்: 'எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தங்களை நபி என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரை ஆவேன். எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை."

இந்த ஹதீஸில் எனக்குப் பின் நபியென்று வாதிடும் எல்லோரும் பொய்யர்கள் ஆவார்கள் எனக் கூறவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்களுக்கும் வரவிருக்கும் ஈசா நபிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றக் கூடிய பொய்வாதிகளின் எண்ணிக்கையைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டார்கள் என இஸ்லாமிய வரலாறும் கூறுகிறது. முஸ்லிம் ஹதீஸுக்கு விளக்கமாக எழுதப்பட்டுள்ள இக்மாலுள் இக்மால் என்ற நூலில், "இந்த ஹதீஸ் தனது உண்மையை நிரூபித்துவிட்டது. ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து நம் காலம் வரையில் நபியென்று வாதிட்ட பொய்யர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இந்த எண்ணிக்கை முடிவடைகிறது. வரலாற்றைப் படித்தவர்கள் இதனை அறிவர்" (தொகுதி 7 பக்கம் 258) இந்த நூலின் ஆசிரியர் ஹிஜ்ரி 828இல் மறைந்தார். எனவே ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டிற்குள்ளாகவே அந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டனர்.

இரண்டாவது ஹதீஸ்: ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குச் செல்கின்ற போது அலியே! மூஸாவுக்கு ஹாரூன் இருததுபோல் நீ எனக்கு இருக்கிறாய். ஆயினும் எனக்குப் பின் எந்த நபியுமில்லை" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸில் மூஸா நபியின் காலத்தில் அவர்களுடன் ஹாரூனும் நபியாக இருந்ததைப்போல் அலி(ரலி) நபியாக இல்லை என்ற கருத்தையே தருகிறது என்பதை அல் ஜன்னத்தே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இந்த ஹதீஸும் ஹஸ்ரத் ஈசா நபியின் வருகைக்குத் தடைஇல்லை என்பது மட்டுமின்றி இனிமேல் எந்த நபியும் வர முடியாது என்ற கருத்தையும் தரவில்லை.

மூன்றாவது ஹதீஸ்: " நான் இறுதி நபியாவேன் அதாவது எனக்குப் பின் எந்த நபியும் இல்லை." அறிவிப்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி). இப்படி ஒரு ஹதீஸ் இல்லை. இருந்தால்தால் ஆதாரத்துடன் அரபி மூலத்துடன் அல் ஜன்னத் வெளியிடட்டும். இது அல் ஜன்னத் இட்டுக்கட்டியுள்ள நபி மொழியாகவே இருக்க முடியும்.

நான்காவது ஹதீஸ்: இஸ்ரவேலர்களுக்கு நபிமார்கள் தலைமை தாங்கி வழி நடத்தி வந்தனர். ஒரு நபி மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு இன்னொரு நபி வழி நடத்துவார். ஆனால் நிச்சயமாக எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது. எனது கலீபாக்கள்தான் தோன்றுவார்கள்.

இஸ்ரவேலர்களிடையே ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து நபிமார்கள் வந்ததைப் போல் இந்த உம்மத்தில் தொடர்ந்து நபிமார்கள் வரமாட்டார்கள். மாறாக தொடர்ந்து உடனே வரக்கூடியவர்கள் கலீபாக்களாகேவே இருப்பார்கள் என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகிறது. ஈசா நபி வரமாட்டார் என்றோ, எந்த நபியும் வர முடியாது என்றோ கூறவில்லை.

ஐந்தாவது ஹதீஸ் : "தூதுத்துவமும் நுபுவத்தும் முடிந்து விட்டன. எனக்குப் பின் எந்த ரசூலும் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ்பின் மாலிக் (ரலி) நூல் : திர்மிதி."

இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசையில் அனஸ் பின் மாலிக்கைத் தவிர உள்ள நான்கு அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள். மேலும் ஈசா நபி வருவார்கள் என்பது உறுதியானதாக இருப்பதால் இந்த ஹதீஸை சொற்பொருளில் ஏற்க முடியாது.

ஆறாவது ஹதீஸ் : "இறைவா! இந்த இஸ்லாமிய கூட்டத்தை நீ அழித்துவிட்டால் நீ ஒருபோதும் வணங்கப்படமாட்டாய்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

'ஹஸ்ரத் ஈசா நபி வருவார் என்பதை இந்த ஹதீஸ் மறுப்பதாகவோ இனிமேல் எந்த நபியும் வரமுடியாது என்றோ இந்த ஹதீஸ் கூறுவதாக அறிவுள்ள எவரும் கூறமாட்டார்கள்.

சுருக்கமாகக் கூறுவதானால் இன்றைய உலகில்  இல்லாத ஒரு வாதத்தை முன்வைத்து அது சரியா என அல் ஜன்னத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அக்கேள்வியில் குறிப்பிட்டிருந்த வசனங்களுக்கு, திருக்குரானுக்கும் நபி மொழிகளுக்கும் எதிரான விளக்கத்தை அல் ஜன்னத் முன்வைக்கிறது.

அடுத்து உலகில் எல்லா முஸ்லிம்களும் நம்பும் ஒரு கொள்கையாகிய ஈசா நபி அவர்களின் வருகையை மறுக்கும் வகையிலான கருத்தை அல் ஜன்னத் கூறுகிறது.

அதற்கு சான்று எனக்கூறி அல் ஜன்னத் காட்டியுள்ள ஹதீஸ்களுள் எதுவும் அல்  ஜனனத்தின் கருத்தை உண்மைபடுத்தவில்லை.

கற்பனைக் கொள்கைகளைக் கைவிட்டு திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படியிலான உண்மைகளைத் தெரிந்து, உணர்ந்து, அவற்றின்படி தமது நம்பிக்கைகளை அமைத்துக் கொள்ள எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 
Read more »