அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 4, 2022

இறைவஹீ இல்லையென்றால் இறைவன் உங்களிடம் உரையடாவில்லை என்றால் அதுவும் ஒருவகை சிலை வழிபாடே!

ஹஸ்ரத் மவ்லானா ஹக்கீம் நூருத்தீன் (ரலி) (முதலாவது கலீபஃதுல் மஸீஹ்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள் :-

அல்லாஹ் ஸுபுஹானஹு தஆலா முற்காலத்தில் தனது நேசர்களிடமும் தூதர்களிடமும் பேசியதைப் போன்று இப்போதும் எப்போதும் தான் விரும்பியவர்களுடன் உரையாடுகின்றான்.

இறைவா! உனது அருள் கிடைத்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக!

என்ற வேண்டுதலை இறைவனே கற்றுத் தந்துள்ளான். அதாவது, நபி, சித்தீக், ஷஹீத், மற்றும் ஸாலீஹீன் ஆகியோர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக என்பதாகும். இறைவன் உரையாடுவது என்பது அந்த வழியை சேர்ந்ததே ஆகும்.

இஸ்ரவேலர்கள் (மூசா நபியுடைய காலத்தில்) கன்றுகுட்டியை வணங்கி வந்தார்கள் இதனை கண்டிக்கும் வகையில் அவர்கள் வணங்கக் கூடியவை அவர்களிடம் உரையாடுவதில்லை; அவர்களுக்கு நேர்வழி காட்டுவதும் இல்லை என்று இறைவன் கூறுகின்றான்.

இவ்வாறிருக்க இறைவன் பேசுகின்றான் என்பதை முஸ்லிம்கள் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள்? (மிர்க காத்துல் யக்கீன் 24-27)

அப்போது அன்னார் முஸ்லீம்களை பார்த்து கேட்டதை இன்று அஹ்மதிகளை பார்த்து கேட்பது போன்று உள்ளது. அல்லாஹு அக்பர். உடனே மௌலவிகள் கூறும் அடிப்படை ஆதாரம் இல்லாத வாதத்தை அதாவது வஹீ வரும் அதை சொல்லமாட்டார் என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள் சகோதரர்களே!

இறைவன் உங்களுடன் வஹியின் மூலம் பேசுவது என்பது மார்க்கத்தின் ஆணிவேர் அதை சில சாக்கு போக்கு கூறி மறுப்பதும் சாமிரி செய்த சிலையை வணங்குவதற்கு ஒப்பாகும். (நஊதுபில்லாஹ்)

ஒன்று வஹீயை கேளுங்கள் மஸீஹ் (அலை) மிக தெளிவாக ரூஹுல் குத்தூஸ் இல்லாமல் உங்களுக்கு இறையச்சம் வராது என்று எச்சரித்துள்ளார்கள். (அல்ஹம்துலில்லாஹ்) சிந்தியுங்கள் சகோதரர்களே!!

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.