ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-
இந்துக்கள் மற்றும் தமிழர்களுக்கு மத்தியில், குறிப்பாக நாளைய தினமான 3-11-2013 ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து அதிகமான அனுமானங்களும் ஊகங்களும் காணப்படுகின்றன. இதற்கான காரணம், மீண்டும் ஒருமுறை தீபாவளியன்று மொத்த சூரிய கிரகணம் நிகழும் என்பதே ஆகும். எனினும் இம்முறை, மொரிஷியஸில் கிரகணம் ஓரளவு கண்களுக்குத் தென்படும். ஆனால், அதே சமயம் கடந்த ஆண்டு (13-14 நவம்பர் 2012) இவ்வாறு அந்த சூரிய கிரகணம் கண்களுக்குத் தென்படவில்லை. எனவே மொரீஷியஸை சார்ந்த இந்து / தமிழ் மத நம்பிக்கையாளர்கள் பின்வருமாறு கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்: இதனால் என்ன நிகழும்? இருண்ட சக்திகளுக்கு எதிராக ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் விடுமுறை நாளான தீபாவளி அன்று சூரிய கிரகணம் அடைவது எதன் அறிகுறி ? என்பதே அவர்களின் கேள்வியாகும்.
1762 ஆம் ஆண்டு முதல், விளக்குகள் திருவிழா (தீபாவளி அல்லது தீப ஒளி ) தினத்தில் சூரியனின் மொத்த கிரகணம் வெளிப்படுவது இது நான்காவது முறையாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் :
• அக்டோபர் 17, 1762
• அக்டோபர் 24, 1995
• நவம்பர் 13, 2012
• நவம்பர் 3, 2013
இந்த நிகழ்வு தொடர்பான பல்வேறு விஞ்ஞான நம்பிக்கைகளின்படி, இது பூமியில் வாழும் மனிதர்களுக்கு அழிவையும் பேரிடர்களையும் கொண்டுவரும் நிகழ்வாகும். மத நம்பிக்கை உள்ள மற்றவர்களுக்கோ இது நற்செய்திகளைத் கொண்டுவரும் நிகழ்வாகும்.
கல்கி அவதாரம் தோன்றும் போது , சந்திரனும் சூரியனும் கிரகணம் அடையும் என்று மகாத்மா சுர்தாஸ்ஜி தீர்க்கதரிசனம் அருளியுள்ளார்கள்.
அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
"சந்திரன் மற்றும் சூரியன் இரண்டும் கிரகணம் அடைந்து வன்முறைகள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கும்."
(சுர்காகூர் )
சீக்கியர்களின் புனித புத்தகத்தில், ஸ்ரீ குரு கரந்த் சாஹிப் அவர்கள் எழுதுகையில், "மகாராஜ், நெஹ்கலன்காக அவதாரம் எடுக்கும்போது, சந்திரன் மற்றும் சூரியன் அவரது உதவியாளர்களாக இருக்கும்" (18-20) என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஏற்பாட்டில், புனித இயேசு தனது இரண்டாவது வருகையுடன் வரும் அறிகுறிகளை இவ்வாறு விவரிக்கிறார்: "அந்த நாட்களின் உபத்திரவத்திற்குப் பிறகு உடனடியாக சூரியன் இருட்டாகிவிடும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது ." (மத்தேயு 24:29)
இறுதி சட்டங்களைக் தாங்கிய புத்தகமான புனித குர்ஆன் மற்றும் இஸ்லாமிய இறைத்தூதரின் கூற்றுகளின்படி, கிரகணங்கள் என்பது சர்வ வல்லமையுள்ள இறைவன் நியாயத்தீர்ப்பு நாளின் நெருக்கத்தை உணர்த்த ஏற்படுத்தும் அறிகுறிகளாகும்.
ஹஸ்ரத் இப்னு உமர் (ரலி) பின்வரும் நபிமொழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக தெரிவிக்கிறார்கள் :
"எவருடைய பிறப்பு அல்லது இறப்பின் காரணமாகவும் சூரியனும் சந்திரனும் கிரகணம் அடைவதில்லை. ஆனால், அவை இறைவனின் அடையாளங்களில் உள்ளவையாகும். நீங்கள் அவற்றைப் பார்க்க நேரிட்டால், இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்." (புகாரி)
புனித குர்ஆன் உயிர்த்தெழும் நாளின் முக்கிய அறிகுறிகளாக கிரகணங்களைக் குறிப்பிடுவதன் மூலம் இந்த நபிமொழியை மேலும் வலுப்படுத்துகிறது .
" 'மறுமைநாள் எப்போது வரும்? என்று அவன் (மனிதன்) கேட்கிறான்; பார்வை நிலைக்குலைந்து, சந்திரன் ஒளி இழந்து, சூரியனும் சந்திரனும் மீண்டும் ஒன்றாக்கப்பட்டுவிடுமானால் ..." (அல்குர்ஆன் 75: 7-10)
அண்ணல் நபி( ஸல் ) அவர்கள் அறிவுக்கு புலப்படாத மறைவான விஷயங்களைப் பற்றிய பரந்த ஞானம் அருளப்பட்டுள்ளார்கள். இறுதி நாட்களில், உலக (மனிதர்கள்) இறைமார்க்கத்தை விட்டு விலகி வாழும் போது, ஈசா (அலை) அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதையும், அந்நேரம் இஸ்லாமிய மார்க்கத்தின் புணரமைப்பு மற்றும் புத்துயிர் உண்டாகும் என்பதையும் அவர்கள் கணித்துள்ளார்கள். இதனால் இறைநம்பிக்கை மீட்டெடுக்கப்படும். மேலும், இறைவன் புறத்திலிருந்து ஒரு தூதரின் வருகையைக் குறிக்கும் பல்வேறு அறிகுறிகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். வாக்களிக்கப்பட்ட ஈசா (அலை) அல்லது இறைவனின் தூதரின் வருகையை வெளிப்படுத்தும் பல அடையாளங்களில், வின்னின் அறிகுறிகளாக சந்திரன் மற்றும் சூரிய கிரகணங்களும் ஒன்றாகும். குறிப்பாக, ஒன்றன் பின் ஒன்றாக ரமலான் மாதத்தில் ஏற்படும் இரண்டு தொடர் கிரகணங்கள் உண்டாகும்.
2001-2013 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து பார்போமேயானால், பல கிரகணங்கள் குறிப்பாக மொத்த சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் 09 மற்றும் 23 நவம்பர், 2003 இல் ரமலான் மாதத்தில் நிகழ்ந்திருப்பதைக் காண்கிறோம். இது அல்லாஹ்வின் எளிய அடிமையான அவனது தூதரின் உண்மைத்தன்மையை கடந்த பத்து ஆண்டுகளாக (2003-2013) நிரூபிக்கிறது.
சுருக்கமாகக் கூறுவதானால், நம்முடைய இறைத்தூதரான அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் தீர்க்கதரிசனம் மிகத் துல்லியமாகவும், மிக நேர்த்தியாகவும் நிறைவேறியுள்ளது .
"ஆகவே படைப்பாளர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்." (23:15)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து நேரடியாகப் பெற்ற அறிவின் அடிப்படையில் இத்தகைய அதிர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனத்தை அருளியுள்ளார்கள் .
மொரிஷியஸ் மற்றும் பிற நாடுகளின் இந்து சகோதர சகோதரிகளே! இந்த விளக்குகளின் திருவிழாவை (தீபாவளி) கவனமாக சிந்தித்துப் பாருங்கள் – இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி. நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 1, 2013 ) எனது பிரசங்கத்தில் நான் உங்களுக்குச் சொன்ன அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள் : -
“... வெளிச்சம் என்பது ராமர் தனது வருகையால் கிடைத்த வெற்றியைக் குறிப்பதாகும். அவர் தெய்வீக போதனையால் ஒளிரும் இறை மானிடராகவும், இறைச்செய்தியை (மற்றவர்களுக்கு) கொடுத்தவராகவும் இருந்தார். ஒளி இருளை வென்றபோது அவர் ஒரு மகத்தான வெற்றியுடன் வந்தார் . ”
எச்சரிக்கையாக இருங்கள்! இந்து மதத்தின் நம்பிக்கையில் இது ஒரு கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. காரணம் இந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதையும் இந்நாளில் பிற்பகல் 2:00 மணி முதல் (சுமார்) 7:00 மணி வரை ஒரு கிரகணம் ஏற்படும் என்பதையும் பலர் (இந்துக்கள்) அறிந்திருக்கின்றனர்.
ஆம்! இது தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதன் அறிகுறியாகும்! ஒளி பரவுவதன் அறிகுறியாகும்! அந்நேரத்தில்தான் இறைவன் தன்னுடைய அடியானின் பிரார்த்தனையைச் செவியுற்றார். இதற்கான வெகுமதியாக, ஒளி அடைந்த வெற்றியைக் கொண்டாட , இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இனிப்புப் பலகாரங்களுடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது . நம்முடைய இரட்சகனாகிய நம் கடவுள் நம்மை (விசுவாசிகளை) இருளின் மீது வெற்றி பெறச் செய்வதைப் பாருங்கள் .
இப்பண்டிகையின்போது நீங்கள் வெளியில் செல்லும் நேரத்தில், விளக்குகள் ஒளிரும், வீடுகள் விளக்குகளின் தோரணையால் அழகாகக் காட்சியளிக்கும். ஆனால், இப்பண்டிகையின்போது உங்கள் இதயங்கள் இன்னும் வெறுப்பை மறைத்துக்கொண்டு, உங்களின் நம்பிக்கை எப்போதும் இருளில் நிரம்பியிருந்தால், 5000 ஆண்டுகளுக்கு முன்பு ராமர், கிருஷ்ணர் ஆகியோரின் போதனைகளுக்கும், தீபாவளிப் பண்டிகை வழக்கமாகவும், கொண்டாட்டமாகவும் மாறிய நிகழ்வுகளின் பக்கமும் நீங்கள் திரும்பிச் சென்று சிந்திக்க வேண்டும். ராமர், கிருஷ்ணர் ஆகியோர் கடவுளின் தூதர்களாக இருந்தனர். பக்தர்களாகவும், புனிதர்களாகவும் இருந்தனர். அவர்கள் கடவுளின் ஏகத்துவத்தை பரப்பப் போராடினார்கள். பிளவுகள், பகை, இனவாதம், வகுப்புவாதம் ஆகியவற்றை சமூகத்தில் கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இது எல்லா தீர்க்கதரிசிகளின் வேலையாகும் .
எனவே, மொரீஷியஸிலும் உலகெங்கிலும் ஒரு அவதாரத்தின் வருகையைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்படும் இந்த அடையாளத்தை விட சிறந்த அடையாளத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது . இந்த சமூகத்தில் வாழும் சகோதர சகோதரிகளே! உங்களுக்கு ஒரு நற்செய்தி! நண்பர்களே! உங்களுக்கு வாழ்த்துக்கள்! இறைவன் அருளும் நன்மையின் பிரகாசம் வெளிப்பட்டு விட்டது. அதைக் காண விரும்புவோருக்கு அதற்கான வழி திறக்கப்பட்டுள்ளது . இந்த நாடுகளில் சூரியனும் சந்திரனும் தெய்வீக ஆணையாலும், நற்செய்தியின் தூதாலும் கிரகணம் அடைந்திருக்கின்றன; எனவே, ஒரு அவதாரத்தின் வருகை (இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரை) எந்த ஒரு குறைகளும் இல்லாமல் மிகவும் தெளிவான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், அனைத்து ஆன்மாக்களும் எல்லாம் வல்ல இறைவனின் கிருபைகளை நினைத்தும், அகில உலகத்திற்கும் தூதரான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் நிறைவேறுவதின் அங்கீகாரத்தை நினைத்தும் ஆனந்தக் கண்ணீர் சிந்தவேண்டிய தினமாகும். நான் ஒரு நபிமொழியைக் கூறி இதை முடிக்கிறேன்.
அண்ணல் நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் பிரதிநிதியான மஹ்தி(அலை) அவர்கள் தோன்றுவார்கள். நீங்கள் மலைகளுக்கு அப்பால், அல்லது பனிகளின் மீது ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தாலும் , நீங்கள் எனது அமைதிக்கான வாழ்த்துக்களுடன் அவரிடம் சென்று அவரிடம் உங்களின் இறைநம்பிக்கைக்கான உறுதிமொழி கொடுக்க வேண்டும்.ஏனென்றால், மஹ்தி(அலை) அவர்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருப்பார்கள்.”( இப்னு மாஜா தொகுதி. 2)
இந்த நூற்றாண்டின் அவதாரத்தை ஏற்றுக்கொள்ள அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! இஸ்லாம் என்பது காலத்தின் துவக்கத்திலிருந்து தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகள் மீதும் நம்பிக்கை வைக்கக் கூறும் ஒரு நேர்த்தியான மார்க்கமாகும். எனவே, நான் எனது இந்து சகோதர சகோதரிகளான உங்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கிறேன். ஏனெனில், நீங்கள் தேடும் அவதாரம் இஸ்லாத்தில் தெளிவாக இருக்கிறது. மேலும், இந்த ஒரே ஒரு அவதாரமே இந்த காலகட்டத்தில் உங்களை அகில உலகங்களைப் படைத்து பரிபாலித்தவனான, இணை துணை இல்லாத எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பக்கம் நேர்வழி காட்டுகிறது. உங்களை இருளிலிருந்து வெளியேற்றவும் , நித்திய ஒளியின் வழியை உங்களுக்குக் காட்டவும் அல்லாஹ் உங்களுக்கு அனுப்பியுள்ள ராமர், கிருஷ்ணர் ஆகியோரின் சாரத்தை அடையாளம் காணவும் உதவும் வகையில் அல்லாஹ் உங்களது ஆன்மாக்களின் அகக்கண்களைத் திறப்பானாக! இன்ஷா - அல்லாஹ்... (அல்லாஹ் நாடினால்).
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.