முஸ்லிஹ் மவ்வூது பற்றி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு :--
ராஜுல் ஹக் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) கூறினார்கள் :
இறைவன் என்னிடம் இவ்வாறு தெரிவித்தான்; அதாவது, இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப் பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக சிரியா தோன்றும். இதுவே வாக்களிக்கப்பட்ட மகன் தோன்றும் காலம் ஆகும்.
இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட அவர் வருகையுடன் தொடர்பு படுத்தியுள்ளான். இதற்கு பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நீங்கள் வாக்களிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).
இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள் இரண்டாவது கலீபதுல் மஸிஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள். ஆனால், ஒருசில இறை அறிவிப்புக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிறைவேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹமத் (ரழி) (1889-1965) அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது (அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக
1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற் பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: -
நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை. நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும் எனக்கு பிறகு கியாமத் நாள் வரை எவருமே தோன்ற மாட்டார் என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) முன்னறிவிப்பின்படி மேலும் வாக்களிக்கப்பட்டவர்கள் வருவார்கள். அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)
நிச்சயமாக உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக் கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன்: 41:53)
பொதுவாக ஒரு சில அஹ்மதி நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்:
அதாவது 'இறைபுறத்திலிருந்து நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதி கலிஃபாக்கள் கூறியுள்ளார்களா? என்று
இதற்கான நமது பதில் ஆம்!கூறியுள்ளார்கள் என்பதாகும்.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக, அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது(அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள். மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள்.
இது சம்பந்தமாக இறைவனால் இந்நூற்றாண்டின் மஸீஹாஹ அனுப்பப்பட்ட ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) கூறுகின்றார்கள்:-
நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லீஹ் மவ்வூதே என்று 20 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்தி கண்ணியப்படுத்தினான். அதாவது, முதலில் என்னை கமரன் முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல் முஃமினீன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும் உயர்த்தினான். இம் மதிப்பை நான் எவரிடமும் சண்டையிட்டு பெறவில்லை மாறாக, அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். மேலும், இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான், அதாவது அவனது தூது செய்தியைக் கூறுவதற்காகவும் உலக மக்கள் அனைவரையும் சிலைகளை விட்டு விட்டு ஓரிறை கொள்கைக்கு திரும்புவதற்காக இதை அவன் எனக்கு அளித்தான். கடந்த 12 ஆண்டுகளில் இறைவன் என்னை பஷீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபஷ்ஷிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.
எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே! உங்கள் உள்ளங்களை மாற்றும் சக்தி எனக்கில்லை, அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும் நான் மிக பெரிய அறிவாளி இல்லை. மாறாக நான் நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் ஸூரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட அவரது இரண்டாவது வருகையாவேன். நான் அசாதாரணமான கல்வியோ அல்லது பெரிய பட்டமோ பெற வில்லை. ஆனால், அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை நபியாக தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.
எனக்கு எந்த மனிதனை பார்த்தும் அச்சமில்லை. என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்.
- ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள்
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.