காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) கூறுகின்றார்கள்:-
என் அருமை ஸஹாபிகளே! மற்றும் அனைத்து முஸ்லீம் பெருமக்களே! திருகுர்ஆன் மற்றும் சுன்னத்தை பின்பற்றுவது தலையாய முக்கியத்துவம் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இதிலும் முக்கியமாக அந்த ஏக இறைவன் நமக்கு மற்றுமொரு ரமலான் மாதத்தை அடையச்செய்து அதை சாட்சி ஆக்கியுள்ளான், எனவே இத்தகைய அருளுக்குரிய *இரவையும் பகலையும் வீணாகக்கழித்து விடாதீர்கள்* இந்த நேரங்களில் உங்கள் இபாதத்துகளை அதிகப்படுத்தி அந்த மேலான கண்ணியம்மிக்க இரவுகளின் அருள்களை நீங்கள் பெறுவீர்கள் என்று திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களிடம் விருப்பமும் அல்லாஹ்வின் மீது திட்டமாக நம்பிக்கையும் இருக்கும் என்றால், அல்லாஹ் சுபஹானஹு தாலா நிச்சயமாக அவனது அருளை உங்கள் நம்பிக்கையின் மீது வைத்து, அவனுடைய கருணையையும் அருள்களையும் அவனது மேலான மன்னிப்பையும் பெறக்கூடியவர்களாக ஆக்கிவிடுவான். இன்னும் அவன் உங்களுக்கு நரக நெருப்பிலிருந்து மேலான பாதுகாப்பு அளிப்பான், இத்தகைய பாதுகாப்பு நீங்கள் உங்களுடைய நப்ஸ்சை கட்டுப்படுத்தும்போது அதாவது உங்களுடைய பொறாமை மற்றும் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்தும்போது மேலும் அது உறுதி செய்யப்படுகின்றது. இன்னும் அல்லாஹ் உங்கள் மீது அவனுடைய கருணையை பொழிய செய்து உங்களுள் உள்ள ஷைத்தானை வெல்ல செய்வான் இன்ஷாஅல்லாஹ். அன்றியும் இந்த விஷயத்தில் நமது எஜமானார் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் முன்மாதிரியை பின்பற்றி அன்னார் தன்னுள் உள்ள ஷைத்தானை முஸ்லீம் ஆக்கியது போல், நாமும் முயன்று அதன் மூலம் நரகத்தின் கதவுகளை என்றென்றும் அடைத்துவிட்டு, நமக்காக சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ். ஆமீன்.
இன்னும் ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இந்த காலமும் அதாவது நூற்றாண்டும் கூட ஒரு லைலத்துல் கத்ரே ஆகும். “ரூஹுல் குத்தூஸினால்" பலப்படுத்தப்பட்டு அதன் மூலம் இறை செய்தியை பெற்று, இந்த உலகத்தில் சமாதானத்தையும் இறைவனின் ஏகத்துவத்தை மீண்டும் மக்களின் இதயத்தில் மீட்டெடுக்க தோன்றிய ஒருவரை ஏற்று அவரின் தோழமைக்குள் வருவதிற்கான பொன்னான வாய்ப்பை பெற்ற ஒருவர் எப்படிப்பட்ட அதிஷ்டத்திற்குரியவராக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள். அனைத்து முஸ்லிம் களுக்கும் எனது அருமை சகாபிகளுக்கும் *லைலத்துல் கத்ர் முபாரக்* வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
எனது சகாபிகளுக்கு அந்த ஏகஇறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரண்டு லைலத்துல் கத்ரின் அருள்களை வழங்குவானாக! ஆமீன். ஒன்று நீங்கள் வாழும் காலத்தில் அல்லாஹ்வின் நபியை ஏற்று சாட்சியாக இருந்த அருளுக்காகவும் இரண்டாவது இந்த அருளுக்குரிய ரமலான் மாதத்தில் இறைவனின் அருளாக தோன்றும் "லைலத்துல் கத்ரை" நீங்கள் பெறுவதன் மூலமும் ஆகும். ஆக இந்த இரண்டு லைலத்துல் கத்ரை பெறக்கூடிய பாக்கியம் கொண்ட மக்களாக ஆக்குவானாக! ஆமீன்!
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.