அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 6, 2014

ஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 278 இல் தாயாருக்கு நன்மை செய்யும் காலமெல்லாம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களுக்கு எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன. எனவே 29:32 வசனத்தின் பொருள் என்னவென்று பார்ப்போம் என்று எழுதியுள்ளார்.

பிறருடைய மொழிபெயர்ப்பு:

ஈஸா கூறினார்: நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.

மேலும் என் தாயாருடன் மிக்க நல்ல முறையில் நடந்து கொள்பவனாகவும் என்னை ஆக்கியுள்ளான். என்னை ஆணவம் கொண்டவனாகவும் இறக்கமற்றவனாகவும் ஆக்கவில்லை. (19:31-33)

பி.ஜே யின் மொழிபெயர்ப்பு.

நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன்  வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கிய சாலியாகவும் அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (19:30-32)

நம் கேள்வி:

பி.ஜே எல்லாருடைய மொழிபெயர்ப்புக்கும் மாற்றமாக ஒரு புதிய மொழிபெயர்ப்பை ஏன் செய்துள்ளார்? பிறருடைய மொழிபெயர்ப்புகளின்படி ஈஸா நபி அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது தெரிந்துவிடும் என்பதினால் இறந்துபோனவரை உயிருள்ளவராக காட்டும் அவரது தில்லுமுல்லுகளைப் காண்போம்

ஈஸா நபி (அலை) உயிருடன் இருக்கும் வரை தொழ வேண்டும். ஸக்காத்து கொடுக்க வேண்டும் என்பது இறை கட்டளை. அவர் என்ன தொழுகிறார்? எப்படி தொழுகிறார்? என்ற கேள்விகளுக்கும், அவர் ஸக்காத்து கொடுக்கிறார் என்றால், என்ன ஸக்காத்து கொடுக்கிறார்? எப்படி ஸகாத்து கொடுக்கிறார்? யாருக்கு ஸக்காத்து கொடுக்கிறார்? என்ற கேள்விகளுக்கும் பி.ஜே யால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

எனவே இறந்து போன ஈஸா நபியை உயிருடன் இருப்பதாகக் காட்டுவதற்கு வலிந்து ஆயத்துகளை வளைத்து ஒரு புதுப் பொருளை கொடுத்துள்ளார். எப்படி?

ஈஸா நபி உயிருடன் இருந்து அவர் தாயாருக்கு நன்மை செய்பவராக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸக்காத்து கொடுக்குமாறும் இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

இதில் ஈஸா நபி தொழுவதற்கும் ஸக்காத்து கொடுப்பதற்கும் உயிருடன் இருப்பது மட்டும் போதாது. அவர் தாயாருக்கும் நன்மை செய்பவராகவும் இருக்க வேண்டும் என்று 2 நிபந்தனைகளை அல்லாஹ் விதித்துள்ளான் என்று பி.ஜே கண்டுபிடித்துள்ளார்.

இந்த புதிய கண்டுபிடிப்பின்படி ஈஸா நபி தொழவோ ஸக்காத்து கொடுக்கவோ வேண்டியதில்லை. ஏனென்றால் தாயாருக்கு நன்மை செய்யவில்லை. எனவே ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பது அவரின் நிலைப்பாடு.

நம் விளக்கம்:

1.       ஈஸா நபி மீண்டும் உலகுக்கு வருவதாக பி.ஜே நம்புகிறாரே! அப்படியானால் அவர் தொழமாட்டார். ஸகாத்து கொடுக்க மாட்டார் என்றால் அவர் எப்படி ஒரு நபியாக மூமினாக இருக்க முடியும்? என்று கேட்டால், அவர் இஸ்ரவேலர்களுக்குரிய தொழுகையை, ஸகாத்தை செய்ய மாட்டார் என்று பதில் கூறுகிறார்கள். இவர்கள் கூறும் இந்த சுய விளக்கத்திற்கு நபி மொழி சான்றுகளை தருமாறு வேண்டுகிறோம்.

2.       இஸ்லாத்தின்படி திருக்குர்ஆன், நபிவழியை, தொழுகையை, ஸக்காத்து விதிகளை ஜிப்ரீல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குத்தானே கற்றுக் கொடுத்தார்? ஈஸா நபிக்கும் சேர்த்துக் கற்றுக் கொடுத்தார் என்பதற்கும் அவர் இஸ்ரவேல் அல்லாதவர்க்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் நபியாக வருவார் என்பதற்கும் திருக்குர்ஆன் ஹதீது சான்றுகள் தருமாறு வேண்டுகிறோம்.

3.       தொழுகை என்பது இபாதத் அதாவது வணக்க வழிபாடு இதனை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவர்க்குச் செய்தாலும், எவருக்காகச் செய்தாலும் அது ஷிர்க் ஆகும். அதாவது தொழுகையை அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இதனை தன் தாயாருக்காக செய்யாமல் இருப்பதோ, செய்வதோ என்றால் அவர் அல்லாஹ்வுடன் மர்யம் (அலை) அவர்களை சேர்த்து ஷிர்க் செய்து விட்டார். பச்சையாக சொல்வதென்றால் மர்யம் (அலை) அவர்களை ஒரு கடவுளாக ஆக்கிவிட்டார்.

இதனை வேறுவிதாமாகக் கூறுகிறேன். அறுத்துப் பலியிடுவது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இதனை ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் வேறு ஒருவருக்காகவும் செய்தால் அது எப்படி ஷிர்க்கோ அவ்வாறு தான் தொழுகையை ஒருவர் தன் தாயாருக்காகவும் செய்தார் என்றால் அதுவும் ஷிர்க் ஆகிவிடும். பி.ஜே திருக்குர்ஆன் வசனத்திற்கு புதிய மொழிபெயர்ப்பைக் கொடுத்து தானும் ஷிர்க்கான நம்பிக்கையை நம்பி, பிறரையும் நம்பும்படித் தூண்டுகிறார்.

4.       மர்யம் (அலை) ஈஸா நபியின் தாயாராக இருக்கும் காலம் எல்லாம் ஈஸா நபியை தொழுகையும், ஸக்காத்தும் கட்டுப்படுத்தும், அவருக்கு நன்மை செய்பவராக இருக்கும் காலமெல்லாம் அவ்விரண்டையும் கட்டுப்படுத்தும் என்றால் ஈஸா நபி பூமிக்கு மீண்டும் வரும் போது, அவர் தொழவோ, ஸக்காத்து கொடுக்கவோ வேண்டிய தேவையில்லை என்பதை வலிந்து நிரூபிக்க விரும்பினால், பழைய தொழுகை (இஸ்ரவேலர் தொழுகை) புதிய தொழுகை (முஸ்லிமகள் தொழுகை) என்று கூற முடியாது. காரணம் அல்லாஹ் அப்படி எதுவும் கூறவில்லை. ஒன்று கூறலாம் மர்யம்(அலை) அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு புதிய பொய்யைக் கூறலாம். இதைத்தவிர பி.ஜே க்கு வேறு வழியில்லை. சொல்லிப்பாருங்கள்.

மொத்தத்தில் ஏனையோரின் மொழி பெயர்ப்பே சரியானதும் பொருத்தமானதுமாகும். 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.