அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 30, 2014

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக சொர்க்கமா? மறுமை சொர்க்கமா?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன. நம் விளக்கம்: திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும்...
Read more »

Jan 28, 2014

உலகளாவிய கிலாபத் 72 பிரிவுகளுக்கும் ஏன் இல்லை?

அபூ அப்தில்லாஹ் 4 வது பக்கத்தில், காதியானிகளின் தலைமைப் பீடமும் அது வாரி வழங்கும் செல்வங்களையும் பெற்று சுகபோகம் அனுபவிப்பவர்களும், குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் எழும் நம் விளக்கங்களை ஏற்று, உணர்ந்து, வருந்தி, திருந்தி, சத்திய வழிக்கு வர வேண்டும் என்பதே நமது நோக்கமும் பேரவாவும், எனினும் வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. என்று எழுதியுள்ளார். நம் பதில்: திருக்குர்ஆன் 24:56 வது வசனம், அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை...
Read more »

Jan 27, 2014

அகக்கண்ணும் புறக்கண்ணும்

பக்கம் 58 இல் அபூ அப்தில்லாஹ், மிஹ்ராஜில் நபி (ஸல்) அவர்கள், ஈஸா (அலை) அவர்களைக் கண்களால் கண்டது மிர்ஸா குலாமால் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. கண்களால் பார்ப்பதென்றால் தூல உடலுடன் தான் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்குச் சென்றிருக்கவேண்டும். கனவுக் காட்சியைக் கண்களால் கண்டதாக எந்த அறிவீனனும் சொல்லமாட்டான் என்று எழுதியுள்ளார்.  நம் பதில்:  1) யூஸுப் நபி அவர்கள், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன். அவை எனக்கு...
Read more »

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்லை என்று கூறுகிறான்.

அபூ அப்தில்லாஹ் தன் நூலில் திருக்குர்ஆனில் 4:159 வசனத்தைக் குறிப்பிட்டு பல் ரபஅ ஹுல்லாஹு இலைஹி என்பதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் விளக்கத்தைப் பாருங்கள். 1. ஈஸா நபி (அலை) அவர்களின் உடலைத்தான் உயர்த்தியுள்ளான். 2. அதனால் தான் அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான். (4:158) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான். 3. உடல் உயர்த்தப்படவில்லை, பதவி உயர்வையே குறிக்கும் என்பது அல்லாஹ்வின் வல்லமையைக் குறைத்து மதிப்பதாகும். 4. வானத்தளவில்...
Read more »

Jan 16, 2014

வழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறிய அவலம்.

இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: "இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ்...
Read more »

Jan 15, 2014

நபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பதே இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டுதலாகும்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 37 இல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டுதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: இவர்தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்யவில்லை. என்றெல்லாம் கூறினால் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும் என்று எழுதியுள்ளார். அதாவது இந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறுவது தான் இறைத் தூதர்களிடையே பாகு பாடு காட்டுதல் என்று ஒரு கருத்தைக்...
Read more »

Jan 13, 2014

ஆயிரம் லஹ்னத்

பி.ஜே யின் கேள்வி: ஒருவரை சபித்துக் கட்டுரை எழுதிய இவர். இவர் மீது ஆயிரம் சாபம் உண்டாகட்டும் என்று எழுதி விட்டு 1 சாபம், 2 சாபம், 3 சாபம், 4 சாபம் என்று ஆயிரம் தடவை பல பக்கங்களில் நூருல் ஹக் பக்கம் 158 இல் எழுதியுள்ளாரே இவர் மன நோயாளியா? நபியா? என்று கேட்ட போதும் எந்தப் பதிலும் இல்லை. நம் விளக்கம்: அவ்வாறு சபிக்கப்பட்ட ஒருவர் யார்? பி.ஜே முஸ்லிமாக இருந்து முர்ததத்தாக மாறி மறுபடியும் முஸ்லிமாக மாறினார். ஆனால் இவர் மவ்லவியாக இருந்து...
Read more »

Jan 10, 2014

மர்யமும் நானே ஈஸாவும் நானே

பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: மர்யமும் நானே! ஈஸாவும் நானே என்று கிஷ்தி நூஹ் என்ற நூலில் பக்கம் 68 இல் கூறியுள்ளாரே இவர் மன நோயாளியா, நபியா என்று நேருக்கு நேர் கேட்ட போதும் பதில் சொல்ல முடியவில்லை. நம் பதில். 1. நபிமார்களை அவர்களின் பகைவர்கள் கிறுக்கன், பைத்தியம், மனநோயாளி என்று அழைத்ததாகவும், அந்நபிமார்கள் பைத்தியம் இல்லை என்றும் அல்லாஹ் கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது ( 15:7, 26:28, 37:37, 44:15, 51:40, 51:53, 52:30, 54:10, 68:3, 68:52,...
Read more »