பீ.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357 இல் சூனியம் என்னும் தலைப்பில் கடைசி 5 வரிகளில் இவ்வாறு எழுதுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பதுதான் சரியான கருத்தாகும் என்றும் ஆனால் அவரே திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பக்கம் 88-90 இல், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றும் எழுதியுள்ளார்.
நம் கேள்வி;
இத்தகு சுய முரண்பாடு ஏன்? ஆண்டுக்கு ஆண்டு நூலுக்கு நூல் இப்படி சுய முரண்பாடுகளைக் கூறி வந்தால், அவரை அப்படியே தக்லீது செய்யும் – விரலை ஆட்டினால் விரலை ஆட்டியும், தொப்பியைக் கழற்றினால் தொப்பியைக் கழற்றியும் அப்படியே அடிக்கு அடி முழத்துக்கு முழம் பின்பற்றும் அவரது முரீதுகளின் கதி என்னாவது?
சாதாரண விஷயம் முதல் ஈமான் சம்பந்தப்பட்ட முக்கியமான நம்பிக்கை வரை பி.ஜே யின் தவறான கருத்தை நம்பியும், பேசியும் செயல்பட்டும் வாழ்ந்து மரணித்தவர்களின் மறுமை வாழ்வு என்னாவது? பி.ஜே வை கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள், மாற்றுக் கருத்துக்களை அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற கருத்தை நம்பிக் கொண்டு நாம் சூனியம் செய்யப்படவில்லை என்ற உண்மையான கருத்தை கூறும்போது செவி கொடுத்து கேட்பதில்லை. சிந்தித்துப் பார்க்க முன்வருவதும் இல்லை. திருக்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கூறினாலும் ஏற்பதில்லை. பி.ஜே நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறிவிட்டார். அதற்கு மாற்றமாக யார் என்ன கூறினாலும் ஏற்பதில்லை என்று பிடிவாதமாகப் பேசுகின்றனர். அவர்களின் கதி என்ன?
இது ஒரு புறம் இருக்க, மாற்றுக் கருத்தை யார் கூறினாலும் சென்று கேளுங்கள், சிந்தியுங்கள். அதன் வழியில் செயல்படுங்கள் என்று கூறும் தெம்பும் தம் கொள்கையில் நம்பிக்கையும் கொஞ்சமும் இல்லை. அவர்களிடம் போகாதே! அவர்களிடம் பேசாதே! அவர்களின் கருத்துக்களைப் படிக்காதே! அதைப் பற்றி என்னிடம் கேட்காதே! என்றுதான் தன்னைத் தக்லீது செய்பவர்களிடம் அவர்கள் கூறுகிறார்கள்.
பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357 இல்,
தங்களைப் போலவே உள்ள ஒரு மனிதரை இறைவனின் தூதர் என்று மக்கள் ஏற்க மறுப்பது இயல்பானது தான் என்பதால்தான் எல்லாத் தூதர்களும் தம்மைத் தூதர்கள் என்று மெய்ப்பிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டு அனுப்பட்டனர். எந்தத் தூதரும் அற்புதம் வழங்கப்படாமல் அனுப்பபடவில்லை. (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357)
பி.ஜே கூறுவது உண்மை என்றால், நபி (ஸல்) அவர்களிடம் மக்கத்து மக்கள் அற்புதங்களைக் கேட்ட போது அவர்கள், என் ரப்பு தூயவன் நான் ஒரு மனிதத் தூதரேயன்றி வேறில்லை (17:94) என்று கூறி அவர்கள் கேட்ட எந்த அற்புதத்தையும் காட்டவில்லையே!
தாஜ்ஜாலும் அற்புதம் செய்வான் என்று பி.ஜே நம்புகிறாரே! இது சரியா?
அற்புதங்கள் மூலம் தான் இறைத்தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்க முடியும் என்றிருக்கும் போது இறைத்தூதராக இல்லாதவரும், இறைவனின் எதிரிகளாக இருப்போரும் இறைத்தூதர்கள் செய்வதைப் போன்று அற்புதங்கள் நிகழ்த்தினால் இறைத்தூதர்களின் அற்புதத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பி.ஜே கூறுகிறார்.
பி.ஜே யின் இக்கருத்து சரி என்றால், சாமிரி செய்தது அற்புதம் இல்லை. அவன் தங்கக் கன்றுக் குட்டியை இரத்தமும் சதையும் கொண்ட கன்றாக மாற்றினான் என்று பி.ஜே நம்புவது உளறலின் உச்சகட்டமா?
உண்மையான அற்புதம் எப்படி சூனியம் ஆக முடியும்? சூனியம் எப்படி உண்மையான அற்புதமாக முடியும்? எடுத்துக்காட்டாக், ஈஸா நபி (அலை) அவர்கள் இறந்தவர்களை உயிர் பெறச் செய்தார் என்றால், உயிர் பெற்றவர்கள் உயிருடன் ஊரில் அங்குமிங்கும் நடமாடுவதையும், உண்பதையும், குடிப்பதையும், நான் செத்துப் பிழைத்தவன் என்று பேசி மகிழ்வதையும், செய்த பின் மீண்டும் உயிர் பெறுவதற்குள் தான் அனுபவித்த உணர்வுகளை, கண்ட காட்சிகளை கதை கதையாக பேசுவதையு, இஸ்ரவேலர்கள் தங்கள் கண்களால் கண்டும், காதால் கேட்டும், அறிவால் அறிந்த பின்பும் அதை எப்படி சூனியம் என்று மறுக்க முடியும்?
இஸ்ரவேலர்கள் சூனியம் என்று மறுத்தார்கள் என்றால் (5:111) உண்மையில் அவர்கள் இறக்கவில்லை என்றும், இறைமறுப்பு எனும் இறப்பில் இருந்தவர்களை ஈமான் எனும் உயிர் கொடுத்து எழுப்பினார் என்பதால் அதை சூனியம் என்று அவர்கள் கூறினர் என்று தெளிவாக வில்லையா? இவ்வாறு ஆன்மீக மரணமடைந்தவர்களைத் தான் ஈஸா உயிர் கொடுத்து எழுப்பினார் என்பதை அறியாதவர்களை என்னவென்பது?
சூனியம் என்ற ஒன்று இருப்பதாகவும், ஆனால் அதனை நபிமார்க்ளுக்குச் செய்யமுடியாது என பி.ஜே நம்புவதாகத் தெரிகிறது. அவர், இதர நம்பிக்கைகள் – எனும் தலைப்பில் சூனியம் பற்றிக் கூறும் போது சூனியத்தால் எதுவும் செய்யமுடியாது (2:102) என்றும், அதிகபட்சமாக உறவினர்களிடையே பிளவு ஏற்படுத்தலாம் (2:102) என்றும், நபிமார்களுக்கு – சூனியம் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். அப்படியானால் மனிதர்களுக்குச் செய்ய முடியும் என்றும் அதிகபட்சமாக உறவினர்களிடையே பிளவு ஏற்படுத்தலாம் என்றும் (2:102) பி.ஜே நம்புகிறார்.
சூனியம் என்ற ஒன்றுக்கு பி.ஜே சொல்கின்ற கருத்திற்கு திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரம் தர முடியுமா? சூனியத்தை நல்ல தமிழில் செய்வினை என்று கூறுவார். உண்மையில் செய்வினை (Active Voice) என்றும் செயப்பாட்டுவினை (Passive Voice) என்பவை மொழிகளின் இலக்கணத்தில்தான் உள்ளது. உண்மையில் பொது மக்கள் நினைப்பது போன்றோ அல்லது பி.ஜே கூறுகின்ற கருத்திலோ அப்படி ஒன்றும் இல்லை. அவை முழுக்க முழுக்க மூட நம்பிக்கை ஆகும். பி.ஜே இனிமேலாவது குரான் நபிவழியில் தூய இஸ்லாத்தை நாங்கள் போதிக்கிறோம். என்று வாய்கிழிய பேசுவதை நிறுத்துவாரா?
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.