மஸீஹ் வரக்கூடிய
காலத்தில் பிளேக் நோய் ஏற்படும் என்று குர்ஆனிலும் தவ்ராத்திலும் உள்ளது என்று
கிஷ்தீ நூஹ் என்ற நூலில் பக்கம் 5 முதல் 9 வரை மிர்ஸா குலாம் எழுதியுள்ளார்.
குர்ஆனில் அல்லாஹ் கூறியதை எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டோம். குர்ஆனில்
அப்படி இல்லாததால் கடைசி வரை எடுத்துக் காட்ட முடியவில்லை. குர்ஆனில் இல்லாததைக்
குர்ஆனில் உள்ளது என்று சொன்னவர் பொய்யனா? நபியா? என்ற கேள்விக்கும் கடைசி வரை
பதில் இல்லை.
நம் விளக்கம்.
பீ.ஜே 34:15
வசனத்திற்கு செய்த தமிழாக்கத்தில் அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில்
ஊர்ந்து செல்லும் உயரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது
என்று எழுதியுள்ளார்.
பூமியில் ஊர்ந்து
செல்லும் உயிரினம் தாபத்துல் அர்ழ் ஆகும். இச்சொல்லுக்கு கரையான் என்று இவர்
எப்படி பொருள் கொண்டார். தாப்பா எனும் அரபிச் சொல்லுக்கு கரையான் என்று பொருள்
கொள்வதற்கு நபிமொழி சான்றோ, அகராதிப் பொருளோ உண்டா? இல்லை என்றால், சுலைமான் நபி
வாழ்வில் கைத்தடியை கரையான் திண்றதற்கான சம்பவம் நடந்ததற்கு வரலாற்றுச் சான்றாவது
உண்டா?
இப்படி
திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ, அகராதியிலோ, வரலாற்றிலோ சான்றுகள் இல்லையே இவ்வாறிருந்தும்
தாப்பா எனும் சொல்லுக்கு கரையான் என்று பீ.ஜே பொருள் கொண்டுள்ளதால் இவரை மௌலவிக்கு
தகுதியற்றவர் என்று நம்பலாமா?
திருக்குர்ஆனில் (27:82)
இல் பீ.ஜே விளக்க அட்டவணை எண் 308 பதிப்பு 9 இல் இவ்வாறு எழுதுகிறார்:
இது உலகம்
அளிக்கப்படும் நாளுக்கு சற்று முன் இறைவன் பூமியிலிருந்து வெளிப்படுத்தும் ஓர்
உயிரினம் ஆகும்.
இதில் வரும் தாப்பா
என்பதற்கு பிளேக் கிருமி என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள்
கூறியுள்ளார்கள். தப்பா என்பதற்கு கரையான் என்று பொருள் கொள்ள முடியும் என்றால்
பிளேக் கிருமி என்று திருக்குர்ஆன், நபிமொழியின் அடிப்படையில் ஏன் பொருள் கொள்ள
முடியாது.
நபி (ஸல்)
அவர்களின் நபிமொழிகளில் மஸீஹின் காலத்தில் பிளேக் வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்கள் தன்னை மஸீஹ் என்று வாதித்த காலத்தில்
இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தைப் பிளேக் பெருமளவில் பாதித்தது. அதனால்
இந்தியாவிலிருந்து அந்த ஆண்டில் ஹஜ்ஜுக்கு யாரும் வரக்கூடாது என்ற தடை வந்தது.
இவ்வாறு தாப்பா
எனும் சொல்லுக்கு பிளேக் கிருமி என்பது நபிமொழி, வரலாறு ஆகியவற்றின் மூலமும்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
இமாம் பக்கர்
அவர்கள் பிஹாருல் அன்வார் எனும் நூலின் பாகம் 13 பக்கம் 156 இல், இமாம் மஹ்தியின்
காலத்தில் இருவித மரணம் ஏற்படும். 1. சிவப்பு மரணம் 2 வெள்ளை மரணம். சிவப்பு மரணம்
என்பது வாளினால் ஏற்படுகிறது. வெள்ளை மரணம் பிளேக் நோயினால் ஏற்படுகிறது.
27:83 வது
வசனத்தில் பொருள், அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும் போது நாம்
அவர்களுக்காகப் பூமியிலிருந்து கடிக்கும் கிருமியை வெளிப்படுத்துவோம். மக்கள் நம்
அடையாளங்களில் நம்பிக்கைக் கொள்ளாததே அதற்க்குக் காரணம் என்று வருகிறது.
அல்லாஹ் ஒரு தூதரை
அனுப்பி அவர் அவர்களிடம் இறை இருப்பையும் மறுமையையும் பற்றி பல்லாண்டுகள் பேசியும்
அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் போது அல்லாஹ் தன் தீர்ப்பை
இறக்குகிறான். இது தண்டனையின் வடிவில் வரும். அப்படி வரக்கூடியதுதான்
பூமியிலிருந்து வெளிப்படும் ஓர் உயிரினம் ஆகும். அது பேசுவதாக ஒரு வாதத்திற்கு
எடுத்துக் கொண்டாலும் அதனால் என்ன பயன் ஏற்படும்? நபி பேசாத பேச்சையா அது
பேசப்போகிறது? அல்லாஹ்வின் அடையாளங்கள் கியாமத் நாளில் இறங்கும் போது அவர்கள்
ஈமான் கொண்டாலும் பயனுண்டா? கியாமத் நாளில் மக்களுக்கு எதிராக கட்டளை வரும் போது
வெளிப்படும். அந்த உயிரினம் கடிக்கும் என்று பொருள் கொள்வதே சரியானதாகும். ஏனெனில்
இந்த வசனத்தில் தண்டனையாக கூறப்பட்டிருக்கிறது. திருக்குரானில் அவ்வூருக்கு எதிராக
(நமது) வார்த்தை உறுதியாகிவிடுகிறது. உடனே அதை அடியோடு அழிப்போம் என்று 17:16
வசனம் கூறுகிறது.
யாருக்கு எதிராக
நமது கட்டளை முந்திவிட்டதோ ...........அவர்கள மூழ்கடிக்கப்படுவார்கள் என்று 23:27 வசனம்
கூறுகிறது. ( பி.ஜேயின் திருக்குர்ஆன் மொழியாக்கம்). எனவே அது பேசுவதில்லை. அந்த
உயிரினம் அதாவது கிருமி கடிக்கும். துகல்லிமுஹும் என்பதற்கு கடிக்கும் பேசும் என்ற
பொருள்கள் உண்டு. இதில் கடிக்கும் என்பதே சரியானதும் பொறுத்தமானதும் ஆகும். அந்த
உயிரினம் பேசுவதாக கற்பனை செய்து கொள்வோம்.
1) உலகில் சுமார்
5808 மொழிகளை மக்கள் பேசுகின்றனர் இந்தியாவில் சுமார் 1652 மொழிகளில் மக்கள்
பேசுகின்றனர். அப்படி என்றால் அவற்றுள் எந்த மொழியில் அது பேசும்? மனித இனம் மனித
இனம் முழுமைக்கும் அது பேச வேண்டும் என்றால் அத்தனை மொழிகளிலும் பேசுமா?
2) ஏதாவது ஒரு
மொழியில் அது பேசுவதாக வைத்துக் கொண்டால் மற்ற மொழிகளில் மக்களுக்கு கியாமத்
நாளின் அடையாளமாக அது எப்படி அமையும்?
மூஸா நபி (அலை)
அவர்களுக்கு பிர்அவுனுக்கு எதிராக அல்லாஹ் 9 அடையாளங்களை வெளிப்படுத்தினான். அதில்
சில உயிரினங்களும் உண்டு. அவை, வெட்டுக்கிளி, பேன், தவளை, ஆகியவையாகும். இந்த
உயிரினங்கள் பிரவுனிடம் பேசியதா?
பேன்கள் பெருகி
மனிதர்களையும் பிற உயிர்களையும் கடித்தன. வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை
கடித்து பாழாக்கின.
கியாமத் நாளில்
வெளிப்படும் அந்த உயிரினம் பேசுவதில்லை என்றும் கடிக்கும் என்பதே
பொருத்தமானதாகும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.