அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 19, 2014

இஞ்சீலும் சபூரும் வேதங்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. 

நம் பதில்:

ஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா? திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம்.

46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிளைப்பவர்களை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி வழங்குவதற்காகவும், (முந்தைய வேதங்களின் முன்னறிவிப்புகளை) உண்மைப்படுத்தக்கூடிய (வகையில்) அரபி மொழியிலுள்ள வேதமாகும். இதில் திருக்குர்ஆன் ஒரு வேதம் என்றும் கூறப்பட்டுள்ளது. இஞ்சீலைப் பற்றியோ, ஸபூரைப்பற்றியோ திருக்குர்ஆன் கூறவில்லை. இதற்கு முன்னர் என்று தவ்ராத் மட்டுமே கூறப்பட்டுள்ளது. 

46:31-31 குர்ஆனை செவியேற்க விரும்பிய ஜின்களுள் ஒரு குழுவினரை நாம் உம்மை நோக்கித் திருப்பிய நேரத்தை (நினைவு கூறுவீராக) அவர்கள் அங்கு (குர்ஆன் ஓதும் இடத்திற்கு) வந்திருந்த போது, ஒருவருக்கொருவர் மவுனமாக இரு(ந்து கேளு)ங்கள் என்று கூறினர். அது முடிவடைந்ததும் அவர்கள் தங்கள் சமுதாயத்தினரிடம் அவர்களை எச்சரித்தவர்களாக திரும்பிச் சென்றனர். 

அவர்கள் கூறினார்: சமுதாயத்தினரே! நாங்கள் மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டுள்ள ஒரு வேதத்தை செவியேற்றுள்ளோம் அது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துகின்றதும் உண்மையின் பக்கமும் நேர்வழியின் பக்கமும் வழிகாட்டுகின்றதும் ஆகும். 

இந்த வசனத்தில் மூசாவின் வேதத்துக்குப் பின்னர் திருக்குர்ஆன்தான் வேதம் என மூஸாவின் வேதம் மட்டும் கூறப்படுவதையும் காண்கிறோம். இதில் இஞ்சீலும், ஸபூரும் வேதங்கள் என்று கூறப்படவில்லை. 

28:49-50 எம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது மூசாவுக்குப் கொடுக்கபப்ட்டுள்ள போதனையை போன்றது இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் கேட்டனர். இதற்க்கு முன்னர் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா?.....

நீங்கள் உண்மையாளர்களாயின் இவ்விரு வேதங்களை விடச் சிறந்த நேர்வழியினை காட்டும் வேதமொன்றை நான் பின்பற்றுவதற்காக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள் என்று நீர் (முஹம்மது நபியே) கூறுவீராக. 

இந்த வசனங்களில் திருக்குரானுக்கு முன்னர் வந்த வேதம் என்பது மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட வேதமே என்றும் திருக்குர்ஆனும் தவ்ராத்தும் இரு போதனைகள் என்றும் கூறப்படுகிறது. இதில் ஸபூர், இஞ்சீல் பற்றி வேதம் என்று கூறப்படவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை என்பதை கவனிக்கவும். 

61:7 இல் மர்யமின் மகன் ஈஸா தன் சமுதாயத்தினரிடம் இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக்கூடியவன் என்று கூறியுள்ளார். 5:47 இக்கருத்தை ஆவது வசனம் கூறுகிறது. இவ்விரண்டு வசனங்களிலும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதராகவே வந்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டு வசனங்களிலும் ஸபூர் என்பது ஒரு வேதம் என்று கூறப்படவில்லை. ஸபூர் என்பது வேதம் என்றால் ஈஸாவுக்கு முன்னர் வந்தது அதுதான். அதனை உண்மைப்படுத்த வந்துள்ளேன் என்று ஈஸா நபி சொல்லியிருப்பார். அவ்வாறு சொல்லாததினாலும் தவ்ராத்தை உண்மைப்படுத்த வந்திருப்பதாக சொல்வதினால் ஸபூர் ஒரு வேதம் இல்லை என்பது தெளிவாகிறது. 

73:16 நாம் பிர்அவ்னிடம் ஒரு தூதரை அனுப்பியது போன்று நிச்சயமாக நாம் உங்களுக்கு சாட்சியாக இருக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். இதில் நபி (ஸல்) அவர்களுடன் தாவூது நபியோ, ஈஸா நபியோ கூறப்படததினால் இருவரும் வேதமுடைய நபிமார்கள் இல்லை என்று அறிக!

6:93 நாம் இறக்கிய இந்த மறை (திருக்குர்ஆன்) அருள் நிறைந்ததாகும். இது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக் கூடியது. இதில் தவ்ராத் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸபூரும் இஞ்சீலும் குறிப்பிடப்படவில்லை. 

5:111 வது வசனத்தில், நான் உமக்கு - ஈஸா நபிக்கு – வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இஞ்சீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப்பாரும்). இவ்வசனத்தில் தவ்ராத் வேதம் என்றும் இஞ்சீல் ஞானம் என்றும் விளங்குகின்றது. 43:65 - இல் நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று தான் கூறுகிறார். இதன் மூலம் தவ்ராத் வேதத்தின் ஞானத்தை அதாவது இஞ்சீலை கொண்டு வந்துள்ளேன் என்று விளங்குகிறது. 57:27 - இல் மர்யமின் குமாரர் ஈஸாவை(அவர்களைத்) தொடரச் செய்து, அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். 3:4; 3:49 - அவருக்கு (ஈஸாவுக்கு) வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான் என்று வருகிறது. இதில் வேதம் என்பது தவ்ராத்தையும், ஞானம் என்பது இன்ஜீலையும் குறிக்கிறது. 

47:17 நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும் ஆட்சியையும் நபித்துவத்தையும் வழங்கினோம். இதற்கு விளக்கமாக 5:45 -இல் நிச்சயமாக நேர்வழியும் ஒளியும் பெற்றிருந்த தவ்ராத்தை இறக்கினோம். (நமக்கு) கட்டுப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டு யூதர்களுக்கு தீர்ப்பு வழங்கினர். 

எனவே வேதம் என்பது தவ்ராத் என்பதும் இஸ்ரவேலில் வந்த ஈஸா நபியும் உட்பட எல்லா நபிமார்களும் இதனையே பின்பற்றி போதித்தனர் என்பதும் தெளிவாகிறது. 

வேதம் எனும் பொருளைத் தரும் அரபிச் சொல் கிதாப் என்பதாகும். இச்சொல் ஹஸ்ரத் மூஸா (அலை), ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) ஆகிய நபிமார்களுக்குத்தான் வருகிறது. அதாவது மூஸாவுக்கு ஒரு கிதாபை – வேதத்தைக் கொடுத்தோம் என்றும், முஹம்மதுக்கு ஒரு கிதாபை கொடுத்தோம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குரானில் எங்கும் தாவூதுக்கு ஒரு கிதாபைக் கொடுத்தோம்; ஈஸாவுக்கு ஒரு கிதாபைக் கொடுத்தோம் என்று கூறப்படாததினால் ஸபூரும் இஞ்சீலும் வேதம் இல்லை என்று தெளிவாகிறது. 

வேதம் எனும் பொருளைத்தரும் இன்னொரு சொல் சுஹ்பு ஆகும். இச்சொல்லும் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) (87:20) , ஹஸ்ரத் மூஸா (அலை) (53:37) , ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) (80:14-15; 98:3) ஆகிய நபிமார்களுடன்தான் வருகிறது. ஹஸ்ரத் தாவூது (அலை), ஹஸ்ரத் ஈஸா (அலை) ஆகிய நபிமார்களுடன் வரவில்லை. 53:37 இல் மூஸாவின் வேதத்திடம், 87:20 - இல் இப்ராஹீம், மூஸா ஆகியோர்களின் வேத நூல்களில் உள்ளது. 98:3 - இல் தூய வேதம் என்று திருக்குர்ஆனும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஸபூரும் இஞ்சீலும் சுஹ்பு என்று கூறப்படவில்லை. ஆனால் இப்ராஹீம் நபிக்கு சுஹ்பு கொடுக்கப்பட்டதாக 87:20 வது வசனம் கூறுகிறது. எனவே ஸபூரும் இஞ்சீலும் வேதம் இல்லை. 

35:26; 3:185 வசனத்தில் சுபுர் எனும் சொல் வேதத்தைக் குறிக்காது என்பது விளங்குகிறது. 3:185 - இல் உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களிலும் ஆகமங்களையும் (சுபுர்) ஒளிமயமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் பொய்யக்கப்பட்டனர். இதில் கிதாப் – வேதம் என்றும் சுபுர் – ஆகமம் என்றும் வருகிறது. இதே கருத்து 35:26 இல் சுபுர் என்பதும் கிதாப் என்பதும் வந்து இரண்டும் வெவ்வேறானவை என்று விளக்குகிறது. 

4:164; 17:56; 21:106 எனும் வசனங்கள் தாவூது நபிக்கு நாம் ஸபூரை வழங்கினோம் என்று வருகிறது. இந்த ஸபூர் என்னும் சொல் தாவூது நபிக்கு வழங்கப்பட்ட வேத நூல் இல்லை என்றும், 

அவை ஞான நூல்களைக் குறிக்கும் என்றும் 3:185; 35:26 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்கிறோம். இதற்க்கு முன் வந்த தூதர்கள் ஸபூரையும், ஒளிமயமான வேதத்தையும் கொண்டு வந்தனர் என்றும் 35:26; 3:185 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. இதில் வேதமும் ஸபூரும் தனித்தனியாகக் கூறப்படுவதால் ஸபூர் வேதம் இல்லை என்று தெரிகிறது. 

21:49 - நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பிரித்தறிவிக்கும் அடையாளத்தையும் ஒளியையும் இறையச்சம் உடையவர்களுக்கு ஞாபகமூட்டும் போதனைகளையும் வழங்கினோம். இதில் தவ்ராத் மட்டுமே புர்கான் என்றும், திக்ர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு புர்கான், திக்ர் என்று ஸபூரும், இஞ்சீலும் கூறப்படவில்லை. தவராத்தும் திருக்குர்ஆனுமே கூறப்பட்டுள்ளதால் அவை வேதங்கள் என்று அறியலாம். 

திருக்குர்ஆன் 3:51; 5:47; 61:7 ஆகிய வசனங்களில் ஈஸா நபி பற்றி வரும்போது அவர் தவ்ராத்தை மெய்ப்பிக்க வந்தவர் என்று கூறப்பட்டிருப்பதால், அவர் வேதமுடைய நபி இல்லை என்றும், வேதத்தை மெய்ப்பிக்க வந்த நபி என்றும் தெளிவாகிறது. மேலே கூறப்பட்டவற்றை தொகுத்துப் பார்த்தால், தவ்ராத்தும், திருக்குர்ஆனும் வேதங்கள் என்றும், ஸபூரும், இன்சீலும் வேதங்கள் இல்லை என்றும் உறுதியாகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.