நபி (ஸல்) அவர்களால் நீதி தீர்ப்பவராக முன்னறிவிக்கப்பட்டவராகவும் வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இதனை கீழ்வருமாறு தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
"திருக்குரானில் எல்லா இடங்களிலும் தவப்பீ என்பதன் பொருள்,மரணம் மற்றும் ரூஹை கைப்பற்றுதல் என்பதேயாகும். கடைசியாக குறிப்பிட்ட இரு வசனங்கள் வெளிப்படையில் தூக்கம் பற்றியதாக இருக்கின்றன என்றாலும், இந்த இரு வசனங்களிலும் தூக்கம் என்ற கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்த இடத்திலும் உண்மையான நோக்கமும் குறிக்கோளும் மௌத்(மரணம்) தான்: மரணத்தில் ரூஹ் கைப்பற்றப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவது நோக்கமாகும், ...... மற்றபடி சந்தேகமின்றி உறுதியான முறையில் ஆரப்பத்திளிருந்து கடைசி வரை திருக்குர்ஆனின் சொல்வழக்கில் எல்லா இடத்திலும் தவப்பீ என்ற சொல்லுக்கு மரணம் என்றே பொருள் இருப்பது நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. பிறகு விவாதத்திற்குரிய இரு வசனங்களில் (3:56, 5:118) மட்டும் திருக்குரானின் சொல் வழக்கிற்கு மாற்றமாக சுயமாக ஒரு பொருளை இட்டுக்கட்டி கூறுவது மார்க்கமிழந்த நிலையும் திரித்து கூறுவதும் அல்லாமல் வேறு என்ன?"(ரூஹானீ கஸாயின் தொகுதி3பக்கம் 269)
திருக்குர்ஆன் வசனங்கள் : -
2:234 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
2:240 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் 'ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற் றப்படாமல், வசதிகள் வழங்கப்பட வேண்டும்' என மரண சாசனம் செய்ய வேண்டும். தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
3:193 ''உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங் களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!'' (என்றும் கூறுவார்கள்.)
4:15 உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்! அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்!
4:197 தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, ''நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். ''நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று இவர்கள் கூறுவார்கள். ''அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?'' என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.
6:61 அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
7:37 அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர் களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களைக் கைப்பற்ற நமது தூதர்கள் அவர்களிடம் வரும் போது ''அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று கேட்பார்கள். ''எங்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். ''நாங்கள் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம்'' எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.
7:126 ''எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ''எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.
8:50 (ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, ''சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!'' என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
10:46 (முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.
10:104 'மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வை யன்றி நீங்கள் வணங்குவோரை வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்ற வுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்டவனாக இருக்கக் கட்டளையிடப் பட்டுள்ளேன்' என்று கூறுவீராக!
12:101 'என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!' (என்றும் கூறினார்)
13:40 (முஹம்மதே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ (அதைப் பற்றி உமக்கென்ன?) எடுத்துச் சொல்வதே உமது கடமை. விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
16:28 தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, 'நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
16:70 அல்லாஹ்வே உங்களைப் படைத் தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாத வராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
22:5 மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படு வதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங் களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்ப டுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படு வோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
32:11 'உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்' என்று கூறுவீராக!
40:67 அவனே உங்களை மண்ணிலிருந்தும பின்னர் விந்துத் துளியிலிருந்தும் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின் னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்)
40:77 (முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.
47:27 அவர்களின் முகங்களிலும், பின் புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்
3:56- ல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உம்மை மரணிக்க செய்வேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கொடுத்திருப்பது நம் கூற்றுக்கு மேலும் சேர்ப்பதாக உள்ளது. ( புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273)
தவப்பீ என்ற சொல்லுக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளையே கொடுத்துள்ளார்கள். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:"என் சமுதாயத்தில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப்பக்கத் (திலுள்ள நரகத்) திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள் எனக் கூறுவேன். அதற்க்கு, இவர்கள் உங்களு (டைய மரணத்து) க்குப்பின் என்ன புதுமையை உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது' என்று கூறப்படும். அப்போது நான் நல்லடியாரான (ஈஸா அலை ஹிஸ்ஸலாம்) கூறியதைப் போன்று நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தேன்; நீ எனக்கு மரணத்தை தந்த போது நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்போது (என்னிடம்) நீர் இவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிக்கால்களின் வழியே மார்க்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர் எனக் கூறப்படும். (புஹாரி 3447,4625) ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 5:118)
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.