Jun 11, 2013
Jun 10, 2013
May 3, 2013
வஹியும் இல்ஹாமும் நின்று விடவில்லை இறைவன் என்றும் பேசக்கூடியவன் அந் நஜாத்திற்க்கு ஒரு விளக்கம்
என்ன தான் சில ஆலிம்சாக்கள் தங்களை புரட்சிக்காரர்களாக, புதிய கருத்துக்களை கூறுபவர்களாக, மூட முல்லாக்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டிக் கொண்டாலும் கூட சில விசயங்களில் இவர்களும் அறிவு சூனியங்கலாகவே இருப்பதை உணரமுடிகிறது. இது இவர்களும் நேர்வழியில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அந்- நஜாத் ஏட்டின் ஆகஸ்ட் இதழில் ஐயம் தெளிவு பகுதியில், நமது இறுதி நபிக்குப் பின் அல்லாஹ் கலிபாக்களிடமோ வலிமார்களிடமோ அசரீரியாக பேசியுள்ளானா? என்ற கேள்விக்கு ஆசிரியர் தந்துள்ள பதில் இதற்க்கு ஓர் அழகான எடுத்துக்காட்டாகும். அவர் கூறியுள்ள பதில் இதுதான்.
"அல்லாஹ் அவ்வாறு நமது இறுதி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தக் கலீபாக்களிடத்திலும் வலிமார்களிடத்திலும் பேசியதற்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் எவ்வித ஆதாரமும் இல்லை"
கலிபமார்கலோடும் வலிமார்கலோடும் இறைவன் பேசியதற்கு ஆதாரம் குர்ஆனில் எவ்வாறு இருக்கமுடியும்? திருக்குர்ஆன் நபிபெருமானாரின் காலத்திலுள்ளது அல்லவா? அதில் அக்காலத்திற்குப் பிறகுள்ள வரலாறு அவற்றில் எப்படி காட்டப்பட முடியும்.
அடுத்து அவர் தமது கூற்றிற்கு ஆதாரமாகக் குறிப்பிடும் திருக்குரான் வசனம் 42:51 இறைவன் மனிதனிடத்தில் எவ்வாறு பேசுவான் என்பதை எடுத்துரைக்கிறதேயொழிய அவர் யாருடனும் இனி பேசமாட்டான் என்றோ பேசுவதை நிறுத்திவிட்டான் என்றோ கூறவில்லை.
இறைவன் மனிதனிடத்தில் பேசுவதை நிறுத்திவிட்டான் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் காட்டயியலாத நிலையில் நஜாத் ஆசிரியர் அடுத்து கீழ்வருமாறு ஏனைய மூட முல்லாக்களை போன்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.
"இவ்வாறு அல்லாஹ் யாரிடத்தில் எவ்வாறு பேசியுள்ளான் என்பவற்றை மிகத் தெளிவாக வரையறுத்து அல்குரான் கூறியிருப்பதன் நோக்கம் பின்னால் வரும் பித்தலாட்டக்காரர்களின் சூழ்ச்சியிலிருந்து நம் போன்றவர்கள் சிக்கிக் கொள்ளாது மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான்."
நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டுள்ள திருமறை வசனம் 42:51, இறைவன் பொதுவாக மனிதனிடத்தில் "வஹி" மூலமாகவோ, திரைக்கு அப்பால் இருந்தோ, வானவர் மூலமாகவோ பேசுகின்றான் என்பதையே தெளிவுபடுத்துகிறது.
யாரைப்பற்றியும் குறிப்பிடப்படவில்லை அவ்வாறிருக்க, 'யாரிடத்தில் எவ்வாறு பேசியுள்ளான் என்பதை அந்த வசனம் தெரிவிப்பதாக ஆசிரியர் கூறியிருப்பது அவர் முற்றாக குழம்பி போயிருக்கிறார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
நஜாத் ஆசிரியர் பொறுப்பாகப் பதில் கூறுபவராக இருந்தால், நபி பெருமானாருக்குப் பின் யாருடனும் இறைவன் பேச மாட்டான் என்ற அவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரம் தந்திருக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் 'பித்தலாட்டக்காரர்கள் என்று அவர் மறை முகமாக தாக்கி இருப்பது அவரது பேதைமைதனத்தையே வெளிபடுத்துகிறது. இத்தகையோரின் பதில்களை "பத்துவாக்களாக" எண்ணுபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது!
அல்லாஹ் அன்று பேசியது போன்று என்றும் பேசுவான் என்பதே உண்மை! அண்ணல் நபி பெருமானாருக்குப் பிறகு அவன் யாருடனும் பேச மாட்டன் என்று கூறுவது அறியாமை!!
வஹி பற்றித் திருக்குர்ஆன் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
நிச்சயமாக எவர்கள் எங்களுடைய இறைவன் அல்லாஹ் என்று கூறி அதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்களிடத்து மலக்குகள் இறங்கி நீங்கள் பயப்படவோ, வருத்தப்படவோ வேண்டாம் என்று கூறுவார்கள். (41:31)
இந்தத் திருவசனம் உறுதியான நம்பிக்கையாளர்களிடம் மலக்குகள் வந்து வஹி அறிவிப்பார்கள் என்பதை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு பின் கலிபாக்களோ வலிமார்களோ இறை அறிவிப்பு பெறவில்லை என்று கூறுவது மேற்கண்ட திருவசனப்படி அவர்கள் முழுமையான. உறுதியான நம்பிக்கை இல்லாதவர்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். கலிபாக்கள் நபிமார்களைத் தொடர்பவர்களும், பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதிக்களுமாவார்கள். வலிமார்களோ அல்லாஹ்வின் அன்புக்கு பாத்திரமாவார்கள். இறைவன் இத்தகையோர்களோடு பேசாமல் இருப்பான? இறைவன் இவர்களோடு பேசவில்லை என்றால் இவர்களுக்கும் ஏனையோருக்கும் என்னதான் வேறுபாடு?
அடுத்து திருக்குரானில் இவ்வாறு காண்கிறோம்:-
"அல்லா மலக்குகளை தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் "வஹி" கொடுத்து அனுப்புகின்றான். (16:3)
"அல்லா மிகப் பெரும் உயர்ந்த பதவியுடயவனும் அர்ஷுக்கு சொந்தக்காரனும ஆவான். அவன் தன் அடியார்களில் தான் விரும்புபவர்களிடத்து "வஹி" இறக்குகின்றான்."(40:16)
இந்த இரு வசனங்களும் இறைவன் வானவர்கள் மூலமாக தனது அடியார்களுக்கு செய்தி அனுப்புவான் என்பதை உறுதிசெய்கின்றன.
மேற்கூறப்பட்ட மூன்று வசனங்களிலும். "ததனஸ்ஸிலு" , "யுனஸ்ஸிலு" "யுஹ்யா" என்ற சொற்களே இடம் பெற்றுள்ளன. இச்சொற்கள் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் குறிப்பிடும் சொற்களாகும். எனவே இந்த வசனங்கள் கடந்த காலத்தை குறிப்பிடுபவை எனக் கருத இடமில்லை.
இனி இது குறித்து நபி மொழிகளில் என்ன காணப்படுகிறது என்பதை பார்ப்போம்.
வஹி பற்றிய நபிமொழிகள்
வஹி என்னும் இறையருள் தமது சமுதாயத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
சஹீஹுல் புகாரியில் இவ்வாறு காணப்படுகிறது:-
உங்களுக்கு முன் இஸ்ரவேலர்களில் நபிமார்கலல்லாதவர்களிடமும் இறைவன் பேசியிருந்தான். எனது சமுதாயத்திலும் அப்படிப்பட்டவர்கள் (வஹி, இல்ஹாம் பெறுகின்றவர்கள்) இருப்பார்கள் அவர்களில் உமரும் ஒருவராவார். (புகாரி - அத்தியாயம் மனாஹிப் உமர்)
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முகத்தஸ் என்றால் யார் என்று வினவியதற்கு, எவரோடு இறைவன் அவருடைய மொழியில் பேசுவானோ அவருக்கு முகத்தஸ் என்று பெயர் என அவர்கள் பதிலளித்தார்கள். (தாரிகுல் குலபா - திப்ரீ)
இந்த இரண்டு நபி மொழிகளிலிருந்து நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இறைவன் மற்றவர்களோடு பேசியிருக்கிறான் என்பதும் அன்னவரின் காலத்திற்கு பிறகும் பேசி வந்திருப்பான் என்பதும் தெளிவாகிறது.
இமாம்களின் கருத்து
'வஹி' அனுப்பப்படுவது நிறுத்தப்படவில்லை என்பதை இஸ்லாமிய அறிசர்களும் உறுதி செய்துள்ளனர்.
செய்குல் அக்பர் ஹஸ்ரத் முஹைதீன் இப்னு அரபி(ரெஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :-
"திருமறையில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளில் அல்லாஹ் தனது நல்லடியார்களான வலிமார்களோடு உரையாடுகின்றான்"
(புதுகாத்தே மக்கியா)
வாக்களிக்கப்பட்ட மசீஹிர்க்கு 'வஹி' இறங்குமா என அல்லாமா இப்ன் ஹைஜெரிடம் கேட்கப்பட்டபோது ஆம் என அவர்கள் பதிலளித்ததோடு சஹீஹ முஸ்லிமிலுள்ள கீழ் வரும் நபிமொழியை ஆதாரமாக எடுத்துக்காட்டினார்கள். வாக்களிக்கப்பட்ட மசீஹீர்க்கு ஜிப்ரீல் மூலமாக வஹி இறங்கும். ஏன்னெனில் ஜிப்ரீல் அல்லாஹ்விற்கும் நபிமார்களுக்கும் இடையிலான (வாக்களிக்கப்பட்ட மசிஹ நபியாக இருப்பார்) தூதுவராவார். அதோடு, நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பிறகு பூமியில் ஜிப்ரீல் இறங்கமாட்டார்கள் என்று கூறுவது தவறான் கூற்று என்றும் "ஷரியத்தை" கொண்ட வஹியே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள்.
(தப்சீர் ரூஹுல் மஆனி)
சுருக்கமாக, திருக்குர்ஆன், ஹதீஸ் , இமாம்களின் கருத்துக்கள் இவையாவுமே 'வஹி' வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அண்ணல் நபி பெருமானாருக்கு பிறகு வஹி வருவது நின்றுவிட்டது. இறைவன் யாருடனும் பேசமாட்டான் என்று நஜாத் ஆசிரியர் மற்றும் முல்லாக்களின் கூற்று அடிப்படை அற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.
Apr 29, 2013
தஜ்ஜாலின் கழுதை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேலர்களுக்காக மட்டும் அனுப்பப்பட்ட ஈசா நபி (அலை) அவர்கள் இன்று வரை மரணிக்காமல் வானத்தில் இருப்பதாகவும் கடைசிகாலத்தில் அவரே வானத்திலிருந்து இறங்கி வந்து உலகெங்குமுள்ள பன்றிகளைஎல்லாம் கொன்று உலகில் காணப்படும் எல்லாச் சிலுவைகளையும் உடைத்துக் கடைசியில், ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் தஜ்ஜாலைக் கொன்று, பின்னர் உலகெங்கும் இஸ்லாத்தின் வெற்றிக்கொடியை பறக்கச் செய்வார் என்ற மூட நம்பிக்கையைத் தற்கால முஸ்லிம்கள் பலர் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களுக்கொப்பான மஸீஹ் தோன்றி விட்டார்கள் என்றும் அவர்கள் தஜ்ஜாலை கொன்று சிலுவைக் கொள்கையின் பொய்யை அம்பலமாக்கி இஸ்லாத்தின் உண்மையை உலகில் நிலை நாட்டி மிக வெற்றியுடன் இவ்வுலகை விட்டுச் சென்றார்கள் என்றும் அஹ்மதியா ஜமாஅத் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
தஜ்ஜால் என்பது கிருஸ்தவ பாதிரிமார்களின் கூட்டமென்றும் தஜ்ஜாலின் கழுதை என்பது கிருஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட வாகனம் என்றும் அறிவு பூர்வமாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பல்வேறு சான்றுகள் மூலமாக நிரூபித்து காட்டினார்கள். ஆனால் இன்றும் முஸ்லிம்கள் தஜ்ஜாலையும் அந்தக் கழுதையையும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இசாலே ஔகாம் என்னும் தங்களுடைய நூலில் தஜ்ஜாலைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தபின் தஜ்ஜாலின் கழுதையைப் பற்றிப் பின் வருமாறு கூறுகிறார்கள்:
"தஜ்ஜாலுடைய அடையாளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தஜ்ஜாலுடைய கலுதையாகும். அதன் இரண்டு காதுகளுக்கிடையில் எழுபது கஜம் நீளமிருக்கும். அது மேகத்தைப் போன்று இயங்கும்"
இரயில் வண்டியின் நீளம் ஏறக்குறைய இவ்வளவு இருக்கும். அது நீராவியின் சக்தியில் மேகத்தைப் போன்று இயங்குகின்றது இந்த முன்னறிவிப்பில் நபி ஸல் அவர்கள் தெளிவான முறையில் இரயில் வண்டியைப் பற்றிதான் கூறி இருக்கின்றார்கள். இது கிருஸ்தவர்களால் கண்டு பிடிக்கப்பட்டதன் காரணமாகத்தான் தஜ்ஜாலின் கழுதை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்தக் கிறிஸ்தவர்களுடைய ஏமாற்றம், பொய், வஞ்சகம் இவைகளால் இஸ்லாத்திற்கு இதற்க்கு முன் என்றும் இல்லாத அளவிற்கு தீங்கு ஏற்ப்பட்டிருக்கிறது. இவர்களிடத்தில் தான் மேகம் காற்றின் வேகத்தால் இயங்கு கின்றதைப் போன்று நீராவியின் சக்தியினால் இயங்கும் வாகனமாகிய இரயில் வண்டி இருக்கின்றது. தஜ்ஜாலின் கழுதை இதுவே ஆகும். (இசாலே ஔகாம்)
தஜ்ஜாலைப் பற்றியும் தஜ்ஜாலின் கழுதையைப் பற்றியும் ஹசரத் மஹ்தி மஸீஹ் பற்றியும் உள்ள விளக்கத்தை உண்மையின் எதிரிகள் அன்றும் இன்றும் எதிர்த்தும் ஏளனம் செய்தும் வருகின்றனர்.
ஆனால் உண்மையை விரும்புகின்ற பகுத்தறிவாளர்கள் ஹசரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறும் தஜ்ஜாலின் விளக்கத்தை ஏற்று அதனை ஆதரித்து ஏளனம் செய்கின்ற போலி ஆலிம்களின் கருத்தை மறுத்துக் கொண்டிருக்கின்றனர்
உதாரணமாக பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் கியாமத் என்னும் கலாச்சார மாத ஏடு தீ வண்டியின் முகச் சித்திரம் கொடுத்து "தஜ்ஜாலின் கழுதை" என்னும் தலைப்பில் பின்வருமாறு எழுதியுள்ளது:
"ஹசரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
தஜ்ஜால், ஒளிவீசும் விளக்குகள் அமைந்த கழுதையின் மேலேறி வருவான். அந்தக் கழுதையின் இரண்டு காதுகளுக்கிடையில் எழுபது கஜம் நீளம் இருக்கும்.
தஜ்ஜாலுடைய கழுதை நீராவியால் இயங்கும்.
தஜ்ஜாலுடைய ஒரு காலடிக்கும் அடுத்த காலடிக்கும் இடையில் ஓர் இரவு ஒரு பகலுடைய தூரம் இருக்கும்.
தஜ்ஜாலுடைய கழுதை உரக்க சத்தம் போட்டு மக்களை அழைக்கும்
தஜ்ஜாலுடைய கலுதையிலுள்ள விளக்குகள் ஒலி வீசும். அதில் ஏராளமான வாயில்களும் ஜன்னல்களும் இருக்கும்.
அது நீர் நெருப்பின் மூலம் உருவாகும் நீராவியால் கார்மேகம் போல் இயங்கும். சில சமயம் பகலில் பயணம் மேற்கொண்டு இரவில் நின்று விடும். சில சமயம் இரவிலும் பகலிலும் இயங்கி கொண்டிருக்கும்.
.
அதனை அணுகுபவர்களை அது விழுங்கி விடும். (அதாவது தன்னுள் இடம் கொடுக்கும்)
அது தரையிலும் நீரிலும் இயங்கும் . கடல் நீர் அதன் கால் முட்டுகள் வரை இருக்கும் .
தஜ்ஜாலுடைய கழுதையின் காலத்து நாடுகளுக்கிடையில் இருப்புப்பாதைகள் விரிக்கப்படும்.
தஜ்ஜாலுடைய கழுத்தின் நெற்றியில்தான் கண்ணிருக்கும்.(மிஷ்க்காதுள் மஸாபீஹ், கன்சுல் உம்மால், பிஹாருல் அன்வார் ஆகிய ஹதீத் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது)
தஜ்ஜாலின் அடையாளங்களைக் குறிப்பிட்டதன் பின்னர் கியாமத் மாத ஏடு பின்வருமாறு எழுதியுள்ளது:
"விரிவான இந்த அடையாளங்களையும், தெளிவுகளையும் படித்ததன் பின்னரும் எவராவது தஜ்ஜாலின் கழுதையை, சாதரணமான நான்கு கால்களோடு காணப்படும் கழுத்தைத் தான் என்று கூறுகிறார்கள் என்றால் ஐயத்திற்கு இடமின்றி அவர் ஒரு கழுதையாகத்தான் இருப்பார்."
"இன்றிலிருந்து ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால், அறிவுத் திறனும் முதிர்ச்சியும் இல்லாத அந்த மக்களுக்கு, தஜ்ஜாலின் விஞ்சானக் கண்டுபிடிப்புகளை விளக்க வேண்டுமென்றல் அன்று காணப்பட்ட பொருட்களோடு அவற்றை ஒப்பிட்டுத்தான் கூறவேண்டியிருந்தது...
" மாறாக, தஜ்ஜாலைப் பற்றி இறை அறிவிப்பு கிடைத்த பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் கழுதையை இரயில் வண்டி என்றும், விமானம் என்றும், ஜெட் என்றும் அதே போன்று தஜ்ஜால் வானத்தில் எய்யும் அம்பை ராக்கெட் என்றும், அதன் இரண்டு காதுகளை பற்றி தொலைப்பேசி என்றும் கூறியிருந்தால் அதனை அம்மக்களால் எவ்வாறு புரிந்து கொள்ளமுடியும்?"
"இறை நூல்களில் உவமானங்களாலும் உதாரனங்களாலும் ஒரு கருத்தை விளக்குவது பொதுவான வழக்கம். சுவர்கத்தின் அருட்க்கொடைகளைப் பற்றி அது மனிதனால் கற்பனை செய்ய இயலாத, எந்த ஒரு கண்ணும் கண்டிராத, எவரும் சுவைத்தரியாதஒன்று என்று கூறப்பட்டிருந்தும் சொர்க்காதில் பால், தேன் ஆகியவற்றின் ஆறுகள் ஓடும் என்று நாம் கூறுகின்றோம். அதனால் அங்கே தேனீயின் கூடுகளும் எருமைகளின் மந்தைகளும் ஏராளமாக இருக்கும் என்று பொருளல்ல. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உவமானங்கள் மூலம் முன்னறிவித்த விஷயங்கள் நிறைவேறுவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மைக்கான சான்றும் ஆதாரமும் ஆகும். பகுத்தறிவாளர்கள் அதன் உண்மையை புரிந்து நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அறிவில்லாதவர் களான மூடர்கள் பல்வேறு சாக்குப் போக்குகளையும் விதண்டவாதங்களையும் கூறி நாங்கள் நம்பமாட்டோம் என்று விலகி விடுவார்கள்." கியாமத் மே)
Labels:
தஜ்ஜால்
அந் நஜாத்தின் அண்டப்புளுகு
அந் நஜாத் ஜூலை 1987 மாத இதழில் பக்கம் 29 இதழில் "விவாதத்தில் ஆதம் (அலை) வென்றார்கள்" என்ற தலைப்பில் கற்பனை நயம் சொரிந்த கட்டுக்கதை ஒன்றைக் கண்டேன் காரணம் திருக் குரானுக்கு மாற்றமான கருத்துகள் அதில் உள்ளன.
மக்களை வழி கெடுத்து சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு (இந் நிலையற்ற அசுத்தமான ) உலகிற்கு வந்த ஆதம் (அலை) ?" என்ற மூசா (அலை) கேட்டதாக எழுதியுள்ளார்.
- முதல் மனிதரும், முதல் நபியுமாகிய ஆதம் (அலை) அவர்கள் அப்போது படைக்கப்படாத மக்களை எப்படி வழிகெடுத்து இருக்கமுடியும்?
- ஒரு நபி மறந்தோ, தவறுதலாகவோ, கவனக்குறைவாலோ தவரிலைக்கலாமே ஒழிய மக்களுக்கு வழிகாட்ட வந்த ஒருவர் மக்களை வழி கெடுத்தார் என்று நம்புவது நம்பிக்கையின் குறை பாடாகும்
- உங்களைப் போன்ற ஒரு மௌலவியோ அல்லது சாதாரண மனிதனோ இத்தகைய கேள்விகளைக் கேட்கலாமே ஒழிய இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர், மூசா (அலை) கேட்டதாக கூறப்பட்டிருப்பது நகைப்புக்குரியது ஆகாதா?
- இறைவன் ஆதம் (அலை) அவர்களை இந்தப் பூமியில் படைக்கப் போவதாக திருக்குரானில் கூறியிருக்க, சுவனத்திற்கு அவரை அழைத்துச் சென்றதாக திருக்குரானிலும், ஹதீஸிலும் கூறப்படாதிருக்க போகாத இடத்திலிருந்து எங்கனம் வெளியேற்றப்பட்டார்?
- சுவனத்தில் நுழைந்தவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள் என்றும் அதிலிருந்து வெளியேற்ற பட மாட்டார்கள் என்றும் உள்ள இறைவனது வசனங்கள் எப்பொழுது ரத்தானது?
- இந்த நிலை அற்ற அசுத்தமான உலகம் என்று கூறப்பட்டிருப்பது சொர்க்கதோடு ஒப்பிட்டு கூறியிருக்கலாம். ஆனால் நிலையற்ற அசுத்தமாக்கப்பட்ட அந்த உலகில் தான் நபி(ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து, மரணித்திருக்கிறார்கள் என்று என்னும் போது, இந்த உலகை மகா மட்டமாக வர்ணித்திருப்பது வருந்த தக்கதாக இல்லையா?
- ஆதம் (அலை) அவர்கள் சொர்கத்தில்தான் வாழ்ந்திருந்தார்கள் என்பதை தகுந்த போதிய திருக்குரான் ஆதாரங்களால் நிருபிக்கமுடியுமா ?
நீங்கள் தானே! அல்லாஹ்வினால் எல்லா அறிவு அருளப்பட்டு மக்களுக்கு அச்செய்தியை போதிக்க அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூசா (அலை)? என்று கூறப்பட்டுள்ளது.
- மூசா(அலை)அவர்களுக்கு அல்லாஹ்வினால் எல்லா அறிவும் கொடுக்கப்பட்டிருப்பதாக கூரியிருப்பதர்க்குரிய திருக்குரான் சான்று என்ன?
- இஸ்ரவேல் சந்ததியினருக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட ஒரு நபிக்கு எல்லா காலத்திற்குரிய எல்லா அறிவும் கொடுக்கப்பட்டதுபோல் கூறப்பட்டிருப்பது தவறில்லையா?
- திருகுரானில் ௧௮:௬௫-௬௬ ஆகிய வசனங்களில் "அந்த அடியாரை சந்தித்தபோது, மூசாவைவிட அதிகமான அறிவையும், அருளையும் அந்த நலடியாருக்கு கொடுத்திருப்பதாகவும் மூசா(அலை) அதனை கற்றுக்கொள்ள அவரை பின்பற்றிச் சென்றதாக, கூறப்பட்டிருப்பதில் இருந்து , மூசா (அலை) காலத்திலேயே எல்லா அறிவும் அருளும் மூசா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லையா?
- திருக்குரான் ௨0:௨௫-௨௯ இல் மூசா(அலை) அவர்கள் செய்த துவாவானது பிரௌனோடு பேசுவதற்கு வேண்டிய அறிவையும், ஆற்றலையும், இறைவனிடம் கேட்டு மன்றாடியதிலிருந்து எல்லா அறிவும் அருளும் கொடுக்கப்படவில்லை என்பது விளங்கவில்லையா
- நான் படைக்கப்படுவதற்கு முன்பே நான் இப்படி இருக்க வேண்டும் என (அல்லாஹ்வினால் எனது தக்தீரில் எழுதப்பட்டிருக்க) என் மீது தாங்கள் பலி சுமத்தலாமா? என்று ஆதம் (அலை) கூறியதாக கூறப்பட்டுள்ளது.
- ஒரு மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவர் இப்படி, இப்படி இருக்க வேண்டும் என்று அவரது தக்தீரில் இறைவன் எழுதியிருக்கிறான் என்றால் அவர் செய்கின்ற எந்த பாவத்திற்கும் தவறுக்கும் அவர் பொறுப்பாளி ஆகமாட்டரே?
- இறைவன் அதுசம்பந்தமாக கேள்வி கணக்கு கேட்பதோ, தண்டனை வழங்குவதோ என்ன நியாயத்தில் சேர்ந்தது?
- இறைவன் மக்களுக்கு நேர்வழி கட்டுவதற்கும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், நபிமார்களையும், வேதங்களையும் அனுப்புவது வீண் வேலை இல்லையா?
- ஒரு மனிதன் இறைவனால் அவனது தக்தீரில் எழுதப் பட்டபடிதான் செயல்படுவான் என்றால் இதயம், மூளை போன்றவற்றை படைத்திருப்பது வீணுக்கா?
("இப் பகுத்தறிவு பதிலால் மூசா (அலை) வாயடைத்துப் போனார்கள். இவ்விதமாக ஆதம்(அலை), மூசா (அலை) அவர்களை வென்றார்கள்". என்று கூறப்பட்டுள்ளது.
- இதைப் பகுத்தறிவு பதில் என்று சொல்வதற்கு உங்கள் பகுத்தறிவு எப்படித்தான் இடம் கொடுத்ததோ? மூசா (அலை) கேட்கக் கூடாத கேள்வியை கேட்டுவிட்டு வாயடைத்துப் போனார்கள் என்றால் அவர் ஒரு நபி என்ற தர்ஜாவை விட்டு கீழே வந்து விடவில்லையா? அத்துடன் எல்லா அறிவும் பெற்றுள்ளதாக மூசா (அலை) அவர்களைப் பற்றி முன்னால் கூறியிருப்பதற்கு முரண்பாடாக அமையவில்லையா?
- சாதாரண மக்களைப் போல இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட நபிமார்களும் ஒருவருக்கொருவர் விவாதம் செய்து வெற்றி தோல்வி காண்கின்ற திருவிளையாடல்கள் செய்கின்றர்களா?
- திருக்குரான் கூறுகின்ற நபிமார்களுடைய பண்புகளுக்கு மாறுபட்ட முறையில் இரு நபிமார்களும் ஒருவரைஒருவர் புரியாமல் விவாதம் செய்து கொன்றார்கள் என்று, எல்லா அறிவும், அருளும் முழுமையாக வழங்கப்பட்ட எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாக உள்ள ஹதீதை திருக்குரானுக்கு முரணாக உங்களுக்கு தோன்றவில்லையா? இதை சஹீஹான் ஹதீஸ் என்று நம்ப முடியுமா?
Apr 18, 2013
Subscribe to:
Posts (Atom)
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
































