அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 1, 2012

கிறிஸ்தவர்களின் வினோதமான தத்துவம்


கிறிஸ்து, உலக மக்களின் பாவங்களுக்காகப் பிறந்து சிலுவை மரணத்தை அடைந்தார் என்பது அவருடைய 'சபிக்கப்பட்ட மரணத்தினால்' மற்றவர்கள் மீட்கப்பட்டார்கள் என்பதும் பாவிகளைக் காப்பதற்கு அல்லது இரெட்சிப்பதர்க்கு சர்வ வல்லமையுள்ள தேவன் தனது மாசற்ற மகனைக் கொன்றார் என்பதும் அவர்களின்(கிறிஸ்தவர்களின்) கூற்றாக இருக்கின்றன.
ஒரு மனிதனுடைய மரணத்தினால் மக்களின் உள்ளத்திலுள்ள பாவத்தின் தீய குணத்தை எப்படி துடைக்க முடியுமென்பதும், குற்றமற்ற மனிதனைக் கொலை செய்வதன் மூலம் மற்றவர்களின் பாவத்திற்கு அதனை பரிகாரம் ஆக்குவது எவ்வாறு என்பதும் நமக்கு புரியவில்லை!
இந்தப் போக்கு நீதிக்கும் கருணைக்கும் முரண்பாடான செயல் ஆகும். குற்றவாளிக்குப் பதிலாக மிரபராதியை தண்டிப்பது நீதியாகுமா? குமாரன் குற்றமற்றவராய் இருக்கும்போது. அவரை குரூரமாக கொலை செய்வது எவ்வாறு தேவ நீதியாகும்? இவைஅனைத்தும் அர்த்தமற்ற கூற்றுக்களே!
பாவம் மிகுதியாக காணப்படுவதற்கு இறைவனைப் பற்றிய உண்மையான அறிவு மக்களிடையே இல்லாததே காரணம் என்று நாம் கூறுகிறோம். பாவத்திற்கான அக்காரணத்தை அகற்றாதவரை பாவம் தொலையாது. இவ்வாறிருக்க, இறைவனைப் பற்றிய அறிவை மக்கள் பெறாமலேயே பாவம் இல்லாமல் போய்விட்டது என்று கூறுவது ஒரு வினோதமான தத்துவமாகும். ஒன்றைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளாதவரை அதன் உண்மையான மதிப்பை நாம் உணர இயலாது. அதன் மீது உளப்பூர்வமான பற்றோ அல்லது அதைப்பற்றிய அச்சமோ நமக்கு ஏற்படாது. பற்றும் அச்சமும் செயலுக்குரிய தூண்டுகோல் ஆகும். ஒன்றின் மீது பற்றோ அச்சமோ இல்லாவிடின் அதன் மீது அலட்சியமே ஏற்படும். செயலுக்கு அங்கெ இடமிருக்காது. எனவே இறைவனைப் பற்றி முழுமையாக தெரிந்து அவன் மீது பற்றும் அச்சமும் ஒருவன் கொள்ளாத வரை பாவச் சிறையிலிருந்து அவனால் மீள முடியாது.
கிறிஸ்தவர்களின் கொள்கையை ஆராய்ந்தால், இறைவனைப்பற்றி மிகக் குறைவாகவே அவர்கள் தெரிந்திருக்கிறார்கள் என்பதை உறுதியாக கூற இயலும். அவர்கள் தெய்வீக வெளிப்பாட்டின் வாயில்கள் எப்போதும் மூடப்பட்டும் அற்புதங்கள் கிறிஸ்துவோடும் அவரது சீடர்களோடும் முடிவுபெற்று விட்டன என்று கருதுகின்றனர். அவ்வாறாயின் கிருஸ்தவ மதம் உண்மையானது என்று தீர்மானிப்பதற்கு நியாய அத்தாட்சிகளைத் தவிர வேறென்ன இருக்கிறது? ஆனால் ஒரு மனிதனை இறைவன் என்று கூறுவதை நியாய உணர்வு நிராகரிக்கின்றது. சுவிசேஷங்களில் காணப்படும் அற்புதங்களைப் பற்றிய கதைகளை கிருஸ்தவ மதத்தின் உண்மைக்கு சான்றாக காட்ட முயன்றால் அதற்கெதிரான ஆட்சேபனைகளை கிருச்தவனல்லாத ஒருவனால் கூற இயலும். முதலில் அந்தக் கதைகளில் உண்மை எவ்வளவு இருக்கிறது என்பது கூற இயலாத ஒன்று. கிறிஸ்தவர்களின் வரலாற்றை எழுதியவர்கள் எல்லைகளைக் கடந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. உதாரணமாக, சுவிசேஷங்கள் ஒன்றில் கிறிஸ்து செய்த வேலைகளை நூல்களில் எழுதுவதென்றால் அந்நூல்களை வைப்பதற்கு இவ்வுலகம் போதாது என்று கூறப்பட்டுள்ளது. இது எல்லை கடந்த எழுத்தேயாகும். உலகின் ஒரு மூலையில், ஒரு மனிதன் மூன்றரை ஆண்டுகள் செய்த பணிகளை, எழுதி வைக்க இவ்வுலகம் போதாததாகிவிடுமா? அடுத்து கிறிஸ்துவால் காட்டப்பட்ட அற்புதங்கள் மோசே காட்டிய அற்புதங்களை விடச் சிறந்தவைகள் அல்ல. எலியா தீர்க்கதரிசியால் காட்டப்பட்ட அற்புதங்கள் கிறிஸ்துவின் அற்புதங்களை விடச் சக்தி வாய்ந்தவை. எனவே ஒரு சில அற்புதங்களை செய்து கிறிஸ்து இறைவனாக முடியுமென்றால் அநேக தீர்க்கதரிசிகளையும் இறைவனாக நாம் கருத வேண்டி வரும்.
சுருக்கமாக கூறுவதென்றால் கிருஸ்தவ சமயம் இரெட்சிப்பின் வழியினை காட்டவில்லை. பாவத்திலிருந்து மீட்சிபெற வழி காட்டாவுமில்லை. அதுவுமல்லாமல், மற்றவர்களை மீட்க ஒருவர் பலியானார் என்று கூறப்படுகிறது. தற்கொலையே ஒரு பாவமல்லவா? கிறிஸ்து தாமாகவே தம்மை சிலுவையில் அர்பணித்து கொள்ளவில்லை. என்பதை ஆணையிட்டு நம்மால் கூற இயலும். அது அவருடைய்ய எதிரிகள் அவருக்கு இழைத்த கொடுமை! சிலுவை மரணமான சபிக்கப்பட்ட மரணத்திலிருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இயேசு இரவெல்லாம் கண்ணீர் விட்டு தொழுது பரம பிதாவிடத்தில் வேண்டியிருக்கிறார். இவ்வாறே நாம் சுவிசேஷத்தில் நாம் காண்கிறோம். அவருடைய்ய பிராத்தனையின் பயனாகவும், நற் செயல்களின் பயனாகவும் அவர் அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றப்பற்றார். இயேசு சிலுவையில் தம்மை அர்பணித்து கொண்டார் என்று கூறுவது இயேசு மீது சுமத்தப்படும் ஒரு பெரிய அபாண்டமாகும். மேலும் ஜோனுடைய தலை நொறுங்கியதால் பீட்டருடைய தலைவலி குணமானது என்று கூறுவது பகுத்தறிவு வாதமாகுமா?
Read more »

பயங்கரவாத முல்லாக்கள்


உலகில் தோன்றிய எந்த சமயம் எதுவும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. குறைகளற்ற இறைமார்க்கமான இஸ்லாத்தில் பயங்கரவாததிற்கு அறவே இடமில்லை. அது மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு பதிலடியாக போது மன்னிப்பையும், கருணையையும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், தமது அன்பு மகளை கீழே தள்ளி அவளுடைய அகால மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிக்கும் தமது உற்ற தோழரின் உடலைக்கிழித்து அவருடைய ஈரலைக் கடித்து துப்பிய பயங்கரவாதிக்கும் இன்னும் தமக்கும் தம்மைச் தார்ந்தவர்களுக்கும், கொடுமைகள் பல இழைத்த கொடியவர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்கியதன் மூலம் பயங்கரவாதத்தை அன்பால், அரவணைப்பால், மன்னிக்கும் மனோபாவத்தால் வென்றிட முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் போர்கள் பலவற்றைக் கண்டிருந்தாலும் அவையாவும் தற்காப்பு நடவடிக்கையாகவும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கின்ற களங்களாகவும் இருந்திருக்கின்றன. அப்பாவி மக்களும் ஆலயங்களும், மடங்களும் அவர்களின் இலக்குகளாக எப்போதும் இருந்ததில்லை.

ஆனால், இன்று பயங்கரவாதத்திற்கு இஸ்லாமிய முலாம் பூசப்படுகிறது. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இதில் பங்கிருந்தாலும் முஸ்லிம்களின் சிறுபகுதியினர் பயங்கரவாதத்திற்கு துணை போயிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மனித நேயத்தை பெரிதும் மதிக்கின்ற ஒரு மார்க்கத்தை சார்ந்த இவர்கள், பயங்கரவாதப் படுகுழியில் விழக் காரணமானவர்கள் யார்?

மாறுபட்ட சமயக் கருத்து கொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் கொடுமைகளுக்கு இலக்காவது வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒன்று, இந்தக் கொடுமைகளுக்கும் பயங்கரவாதத்திற்க்கும் அடிகோலியவர்கள் சீர் கெட்ட மதக் குருமார்களே! மாற்றுக் கருத்துக் கூறியதற்காக மக்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்க்கு காரண கர்த்தாக்கள் புரோகிதர்களே! இயேசுவை சிலுவையில் அறைந்து பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர்கள் யூத மதப் பண்டிதர்களே! இவர்களின் வழியில் இஸ்லாத்தின் பெயரால், அல்லாஹ்வின் பெயரால் அராஜகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் அடித்தளம் அமைத்தவர்கள் பெயர்தாங்கி முல்லாக்களே!

பிரசித்தி பெற்ற முல்லாக்களில் ஒருவரான மௌலான மௌதூதி கூறுவதைப் பாருங்கள்:

"இது (ஜமாஅத்தே இஸ்லாமி) ஒரு பிரச்சார அமைப்பல்ல. பிரச்சாரகர்கள், போதகர்கள் ஆகியவர்களின் கூட்டமல்ல. மாறாக இது அல்லாஹ்வின் இராணுவமாகும்" (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம் , லாஹூர் தாஜ் நிறுவன வெளியீடு - ஆண்டு)

மார்க்கப் பிரச்சாரம் செய்வதிலோ மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்குப் போதனை செய்வதிலோ இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக வன்முறை மூலம் இவர்களின் தவறான கொள்கைகளை நிலைநாட்டுவதே இவர்கின் குறிக்கோள் என்பது இந்த வாசகங்களின் மூலம் புலனாகிறது. இதனை உறுதிப்பாடுத்தும் வகையில் மௌதூதி சாஹிப் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்:

"குழப்பங்களையும் தவறான கொள்கைகளையும் இந்த உலகிலிருந்து அகற்றி மனித இனத்தை சீர்திருத்த எவரேனும் விரும்பினால் அதனை சொர்ப்பொழிவுகள் அறிவுரைகள் மூலமாக செய்ய முடியாது என்பதை உணர வேண்டும். அவை பயனற்றவை!" (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம்11 )

"நீர் நினைவூட்டிக் கொண்டே இருப்பீராக, நினைவூட்டிக் கொண்டிருப்பது நிச்சயமாக பயனளிக்கக் கூடியதாகும். இறைவனுக்கு அஞ்சுபவர் நிச்சயமாக அறிவுரையை ஏற்றுக்கொள்வார்" (திருக்குர்ஆன்,87:10,11 )

போதனை, அறிவுரை ஆகியன நிச்சயமாகப் பயனளிக்கும் எனத் திருக்குரானிலே இறைவன் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மக்களை சீர்திருத்த இதே முறையைத்தான் தன் வாழ் நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் மௌதூதி சாஹிபோ முற்றிலும் கோணலான ஒரு வழியையே காட்டுகிறார். அவர் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்:

"தவறான ஆட்சிக்கெதிராக அவர் எழ வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதிகார பீடத்திலிருந்து தவறிழைப்பவர்களை அகற்ற வேண்டும். உறுதியான கொள்கைகளையும் நியாயமான நிர்வாகத்தையும் கொண்ட ஓர் அரசை நியமிக்க வேண்டும். (ஹகீகத்தே ஜிஹாத் - பக்கம்11 )

ஓர் அரசு தவறான கொள்கையுடையது என்று இவர்கள் கருதினால் அதற்க்கெதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும்: அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; என்கிறார் மௌதூதி!இது திருக்குரானின் போதனைகளுக்கும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.

இஸ்லாத்திற்கு முரண்பாடான இத்தகைய நச்சுக் கருத்துக்களையே உலகெங்கும் வாழும் முஸ்லிம்களிடையே இந்த சீர்கெட்ட முல்லாக்கள் பரப்பி வந்திருக்கிறார்கள். இவையே நாளடைவில் வழுப்பெற்று நாசகார செயல்களில் பாமர முஸ்லிம்களை ஈடுபட வைக்கிறது. இவையே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் சீரழிவுக்கு காரணம்.

இறுதி காலத்தில் தோன்றும் இத்தகைய சீர்கெட்ட முல்லாக்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். வானத்தின் கீழ் இந்த முல்லாக்கள் கெட்ட உயிரினங்களாக இருப்பார்கள் எனவும் குழப்பங்கள் அவர்களிலிருந்தே தோன்றி அவர்களிடமே முடிவுபெறும் எனவும் அவர்கள் அறிவுருத்தியுல்லார்கள்.

எனவேதான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டவும் நபி(ஸல்) அவர்களின் உயரிய நடைமுறைகளை செயல்படுத்தவும் இக்காலத்தில் தோன்றியுள்ள இமாம் மஹ்தி (அலை) அவர்களை நாம் பின்பற்றியாகவேண்டும்.

முஸ்லிம்கள் அவர்கள் பெற்றிருந்த மகோன்னத நிலையை மீண்டும் பெறுவதற்கு திருக்குர்ஆன் கூறுவதற்கேற்ப உயர்ந்த சமுதாயமாக உலகில் ஒளிர்வதர்க்கும் முல்லாயிசம் முற்றாகத் தொலைக்கப்பட வேண்டும்.

Read more »

Apr 1, 2012

அஹ்மதியா கருத்துக்களை ஆமோதிக்கும் ஆலிம்கள்


திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பற்ற அஹ்மதியா ஜமாத்தின் கொள்கைகளை சில அரைகுறை ஆலிம்சாக்கள் தான் மறுக்கின்றார்களேயொழிய கற்றரிந்த மேதைகளான ஆலிம்கள் அவற்றை ஆமோதிக்கவே செய்கின்றனர்.

சவுதி அரேபியாவைச் சார்ந்த "ராபிதத்துள் ஆலமில் இஸ்லாம்" என்ற அமைப்பு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் விரிவுரையில் அல்லாமா முஹம்மத் அஸத் அவர்கள ஈசா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டார்கள், என்ற கதையை மறுத்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.

The verb RAFA' AHU -he raised him or elevated him has always, when ever the act of RAFA'A of human being is attributed to God the meaning is honouring or exalting. No where in the Quran is there any warrant for popular belief of man muslim that Gog has taken up Jesus bodily to heaven. PP 177

ரஃபாஅஹு - aவான் அவரை உயர்த்தினான் எனும் வினைச்சொல் மனிதனைப்பற்றி இறைவன் கூறியதாக குறிப்பிடப்படும் இடங்களில் அதன் கருத்து 'கௌரவித்தல்' - பதவி கொடுத்தல் என்பதாகும். இறைவன் ஈசா நபி அவர்களை உடலுடன் வானத்திற்கு உயர்த்தினான் என்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் திருக்குரானில் இல்லை. பக்கம் 177


சிலுவை சம்பவம் தொடர்பாக மேற்கண்ட விரிவுரையாளர் கூறுவதைப் பாருங்கள்:-

"There exist among muslims many fanciful legends telling us that at the last moment God substituted for Jesus a person closely resembling him who was subsequently crucified in his who was subsequently crucified in his place. However none of these legends finds the slightest support in the quran or authontic Traditions and the stories produced in this Connection by the classical commentators of the Quran must be summarily rejected".

"ஈசா நபியோடு உருவ ஒப்புமையுள்ள வேறு ஒருவரை இறைவன் அவருடைய இடத்தில் கடைசி நேரத்தில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டான் என்றும் அந்நபர் ஈசா நபிக்கு பகரமாக சிலுவையில் அறையப்பட்டார் என்ற ஒரு கட்டுக்கதை முஸ்லிம்களிடையே நிலவிவருகிறது ஆனால் இதற்க்கு திருக்குராநிலோ நம்பகமான ஹதீதுகளிலோ ஆதாரமில்லை. எனவே இது தொடர்பாக சில விரிவுரையாளர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் அனைத்தும் நிராகரிக்கப்படவேண்டும்.

இதைப்போன்று எகிப்து அல்-அசர் பல்கலைகழகத்தின் அதிபராகவும் உலமாக்களின் பேரவைத் தலைவராகவுமிருந்த அறிஞ்சர் அல்லாமா செய்ஹு மஹ்மூத் ஷல்தூத் அவர்களும் ஈசா நபி அவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று மரணமடைந்து விட்டார்கள் என்றே தீர்ப்பளித்துள்ளார்கள். இந்தத் தீர்ப்பு 11-5-1942 அர்ரிசாலாவில் வெளியாகி இருந்தது. சென்னை தாருல் இஸ்லாம் ஏட்டில் 1956 ஆம் ஆண்டு ஜனவரி இதழிலும் 'முஸ்லிம் முரசு' ஏட்டின் 1964 டிசம்பர் இதழிலும் இது பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்தன.
Read more »

பொய்யன் ஜைனுலாப்தீனுக்கு மறுப்பு- முகம்மதி பேகம் பற்றிய ஆட்சேபனைக்கு பதில்


இஸ்லாம் மீண்டும் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும். முஸ்லிம்கள் முன்பு பெற்றிருந்த பெருமைகளையும் மகத்துவங்களையும் மீண்டும் பெற வேண்டும். அழிவைநோக்கி சென்றுகொண்டிருக்கும் மனித சமுதாயம் இறைவன் பால் திரும்ப வேண்டும். என்பன போன்ற உயரிய நோக்கங்களை உலகில் நிலை நாட்ட இறைவன் புறமிருந்து இக்காலத்தின் இறைத்தூதராக இமாம் மஹ்தியாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தோன்றினார்கள். இத்தகைய உயர்ந்த இலட்சியங்களுக்காக இவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத், இன்று உலகின் எல்லைகள் வரை கிளை பரப்பி தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

எனினும் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றபோது அவற்றால் பாதிக்கப்படும் தீய சக்திகள் அவற்றை எதிர்க்கும் என்பது ஒரு நியதியேயாகும். இதற்க்கேற்ப முஸ்லிம் சமுதாயத்தில், ஏன், முழு மனித சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை-மறுமலர்ச்சியை ஏற்படுத்தத் தோன்றிய இமாம் மஹ்தி (அலை) அவர்களும் தீய சக்திகளின் பலமான எதிர்ப்பிற்கு இலக்கானார்கள். உண்மையே நிலைக்கும், பொய் அழிந்தே தீரும் என்ற இறைவாக்கில் நம்பிக்கையற்ற ஷைத்தானிய உடன்பிறப்புகள், இமாம் மஹ்தி தோன்றிய நாள்முதல் அவர்களுக்கெதிராக அவதூறு களையும் போய்க் குற்றச்சாட்டுகளையும் கூறியே வந்துள்ளன.

இமாம் மஹ்தி (அலை) அவர்களை ஏற்ற நல்லவர்கள் ஆன்மீகத்தில் முன்னேறி வரும் அதே சமயத்தில் ஷைத்தானிய உடன்பிறப்புகள் தங்களின் எதிர்ப்பில் மிகத் தாழ்ந்து தரங்கெட்டு தங்களின் இயல்பிற்கு ஏற்ப, தங்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப மிக அசிங்கமான ஆட்சேபனைகளை செய்கின்றனர். இவர்களின் அருவருக்கத்தக்க பேச்சுக்களும், எழுத்துக்களும் இவர்கள் இழிவானவர்கள் என்பதையே வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.

இறை தூதர்களை எதிர்க்கின்றவர்கள் எப்போதுமே மூன்று வழிகளைக் கையாளுகின்றனர். சிலர் அவர்களை மார்க்கத்திற்குப் புறம்பானவர்கள் எனப் பறை சாற்றுகின்றனர். இன்னும் சிலரோ அரசியல் ரீதியிலான அல்லது சமூக ரீதியிலான குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துகின்றனர். இவர்களில் கடைநிலையில் உள்ளவர்கள், தூய்மையே உருவான அந்த இறைத்தூதர்கள் மீது ஒழுக்கம் தொடர்பான குற்றச் சாட்டுகளை சுமத்துகின்றனர்.

'நான் உங்களோடு வாழ்ந்த ஒருவனல்லவா? அதாவது என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனது நன்னடத்தைக்கு நீங்களே சாட்சி என்று தமது அப்பழுக்கற்ற வாழ்க்கையையே சவாலாக விடுத்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கூட இத்தகைய ஒழுக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இன்றும் கூட கிருஸ்தவர்களாலும், யூதர்களாலும், சல்மான் ருஷ்டி போன்ற நயவஞ்சகர்களாலும் இத்தகைய அவதூறுகள் கூறப்பட்டு வருகின்றன.

எனவே இக்காலத்தின் இறைத்தூதராகவும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக இமாம் மஹ்தியாகவும் தோன்றிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீதும் இத்தகைய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் கூறப்படுவது நூதனமான ஒன்றல்ல

அஹ்மதியா ஜமாத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்ற அவதூறுகளில் ஒன்று, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள், முகம்மதி பேகம் என்ற பெண்ணை விரும்பி, அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் அவளைத் தமக்கு மணமுடித்து தரவேண்டும் என்று கேட்டதாகவும் அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் இறைவனின் தண்டனை அவர்களுக்கு கிடைக்குமென அறிவித்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்பதாகும். இவ்விசயத்தை அது எந்த அளவுக்கு உண்மை என்பதி இவர்கள் ஆராயாது தமது கீழ்த்தரமான எண்ணங்களுக்கு ஏற்ப கொச்சைப்படுத்தி கூறி வருகின்றனர்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துலகுக்கும் அருளாகத் தோன்றிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை இறைவனது கட்டளைக்கேற்ப செய்தார்கள். ஆனால் அந்த மாநபியை எதிர்த்தவர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி தம் மனம் போன போக்கில் கீழ்த்தரமாக விமர்சித்தனர். இன்று கூட அவ்வாறு விர்மர்சிப்பவர்கள் உண்டு. இவ்வாறே ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை விமர்சிப்பவர்களும் தரங்கெட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.

உண்மையில் நடந்தது என்ன?

முகம்மதி பேகம் என்பவர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தந்தை வழி உறவினரான மிர்ஸா அஹ்மத் பேக் என்பவரின் மகளாவார். இந்த மிர்ஸா அஹ்மத் பேக் ஒரு நாஸ்த்தீகர். இவர் முஸ்லிம் பெயரை கொண்டிருந்த போதிலும் இறைவன் இருக்கின்றான் என்பதிலோ, திருக்குர்ஆன் இறைவேதம் என்பதிலோ, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதிலோ நம்பிக்கை இல்லாதவராவார்.

இறைவனின் ஏகத்துவத்தையும் திருக்குரானின் மகத்துவத்தையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேன்மையையும் மீண்டும் உலகில் நிலை நாட்டுவதையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்த ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்குத் தமது உறவினர்களின் மார்க்க விரோதப்போக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் பலமுறை அந்த உறவினர்களுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் அந்த உறவினர்களோ தங்களைத் திருத்திக்கொள்ளாமல் ஏளனம் செய்வதிலும் எள்ளி நகையாடுவதிலும் காலத்தைக் கழித்தார்கள்.

இது பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 'தமது ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம்' என்னும் நூலில் 566 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:-

"அவர்கள் நாளுக்கு நாள் தங்களது தவறான போக்கிலும், அகங்காரத்திலும் முன்னேறி தங்களது தீயக் கருத்துக்களைப் பரப்பி அப்பாவி மக்களை வழிகெடுத்தார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏசினார்கள். இறைவசனங்களை (திருக்குரானை) மறுத்தும் இறைவனையே நிராகரித்தும் பிரசுரம் ஒன்றை வெளியிட்டார்கள்."

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் குறிப்பிட்ட அந்த பிரசுரத்திற்கு அக்காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த கிருஸ்தவ அமைப்புகள் தமது பத்திர்கைகளில் விளம்பரம் செய்தனர். அதுமட்டுமல்ல, அந்த உறவினர்கள் அக்காலத்தில் இஸ்லாத்திற்கு பெரும் பகைவர்களாக விளங்கிய ஆரிய சமாஜ் காரர்களுடன் கைகோர்த்து மார்க்க விரோதத் செயல்களில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்களின் நடத்தைகள் எல்லை மீறிப் போனதால் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்கள் கீழ்வருமாறு இறைவனை வேண்டினார்கள்.

"என்னுடைய இறைவனே! உன்னுடைய இந்த அடியானுக்கு உதவி செய்வாயாக. உன்னுடைய பகைவர்களை இழிவுபடுத்துவாயாக. என்னுடைய இறைவனே ! எனது பிராத்தனையை ஏற்றுக் கொள்வாயாக எவ்வளவு காலந்தான் இவர்கள் உன்னையும் உன்னுடைய திருத்தூதரையும் ஏளனம் செய்வார்கள்? எவ்வளவு காலம்தான் உனது திருக்குர்ஆனைப் பொய்யாகி உன்னுடைய திருத்தூதரை அவமதிப்பார்கள்? என்றும் நிலைத்திருப்பவனே, சுயமாக நின்று உதவி செய்பவனே, உனது கருணையை வேண்டுகிறேன். (ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் 569)

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் செய்த இந்தப் பிராத்தனையிலிருந்து அவர்களுக்கும் மேற்கூறப்பட்ட அவர்களின் உறவினர்களுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை என்பது புலனாகும். உண்மையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மார்க்கப்பற்றும் இறைவன் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசமுமே இவ்வாறு பிராத்தனையை ஏற்று வரம்பு மீறி செயல்படும் அந்த உறவினர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப் போவதாக அறிவித்தான்.

எனினும்.

'ஒருவன் அநீதியிழைத்தப் பின் மனம் வருந்தி திருந்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவனை மன்னித்து அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மென்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.' (திருக்குர்ஆன் 5:40)

என்ற இறைவனின் வாக்குறுதிக்கு ஏற்ப அந்த உறவினர்களுக்கு அவர்கள் திருந்திக் கொள்ள அவகாசம் அளித்தான். மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு அறிவித்தான்.

" நான் அவர்களை ஒரே அடியாக அல்லாமல் படிப்படியாகவே அழிப்பேன். ஏனெனில் அவர்கள் அவர்களின் தீயப் பாதையிலிருந்து திரும்பலாம். எனது சாபம் அவர்களின் வீட்டின் மீது இறங்கும். மூத்தவர்கள் மீதும், இளையவர்கள் மீதும், ஆண்கள் மீதும், பெண்கள் மீதும், அவர்களுடைய விருந்தினர் மீதும் இறங்கும். நம்பிக்கை கொண்டு அவர்களிடமிருந்து விலகிக் கொள்பவர் இறை கருணையின் கீழ் இருப்பார். ஏனைய அனைவரும் சபிக்கப்படுவார்கள்." (ஆயினையே கமாலாத்தே இஸ்லாம், பக்கம் 569)

இந்த இறையறிவிப்பை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பிரகடனம் செய்து அவர்களின் அந்த உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள். முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய முன்னறிவிப்பு, முழுமையாக நிறைவேறவில்லை என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் திருக்குர் ஆன் வசனத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பெற்ற இறையறிவிப்பிலுள்ள நிபந்தனையைக் குறித்து சிந்திப்பதுமில்லை. இந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டபடி மார்க்க விரோதச் செயலில், இறைவனுக்கு அஞ்சாது தொடர்ந்து ஈடுபட்டவர்கள் இழிவடைந்து அழிந்து போனார்கள். மனத்திரும்பியவர்களோ காப்பற்றப் பட்டார்கள் என்பதே உண்மை.

முகம்மதி பேகத்தின் பெற்றோர் தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள்:-

'மிக அருளாளனான இறைவன் வஹி மூலம் எனக்கு அறிவித்திருப்பதாவது.' அவர்கள் திருந்தவில்லையென்றால் அவர்கள் தண்டனை மூலம் திருத்தப்படுவார்கள். அவர்கள் தீய வழிகளிலிருந்து திரும்பவில்லைஎன்றால் விதவைகளால் அவர்களின் வீட்டை நான் நிரப்புவேன். அவர்கள் திருந்தி தங்களைச் சீர்திருத்திக் கொண்டால் நாம் அவர்களிடத்து கருணையுடன் திரும்புவோம். அவர்களுக்கு தரவிருக்கும் தண்டனையை நிறுத்திவிடுவோம். இவ்வாறு அவர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதை அனுபவிப்பார்கள். (அன்ஜாமே ஆத்தம் பக்கம் 211)

மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கண்ட ஆன்மீகக் காட்சியில் முகம்மதி பேகத்தின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதைத் தொடர்ந்து முகம்மதி பேகத்தின் தாய் வழிப் பாட்டிக்கு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்தார்கள். 'நீங்கள் மனம் திரும்பி, திருந்த வேண்டும். ஏனெனில் துன்பங்கள் உங்களைத் துரத்துகிறது என்று அவரிடம் கூறினார்கள்' (தப்லீகே ரிஸாலத் பக்கம் 162)

ஆனால் முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் எச்சரிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை. மிகுந்த அகங்காரத்தோடு அவற்றைப் புறக்கணித்தார்கள். அவர்களுள் சிலர் கிறிஸ்தவர்களோடும், சிலர் ஆரியர்களோடும் தங்களை இணைத்துக் கொண்டனர். ( நூற் அப்ஸ்ஸான் mஎ 10, 1888)

மிக வெளிப்படையாக அவர்கள் இவ்வாறு கூற ஆரம்பித்தார்கள்:

எங்களுக்கு அல்லாஹ்வோ அவனது வேதமோ அவனுடைய தூதரோ
அவசியமில்லை. எங்களின் வாழ்க்கையில் நிகழும் அடையாளத்தைத் தவிர எந்த அடையாளத்தையும் நாங்கள் ஏற்க்க மாட்டோம். நாங்கள் குரானை நம்பவில்லை. நபித்துவம் என்றால் என்னவென்றோ மார்க்கம் என்றால் என்னவென்றோ எங்களுக்குத் தெரியாது. இவற்றையெல்லாம் நாங்கள் மறுக்கின்றோம். (கரமத்துஸ் சாதிக்கீன்)

இதன் விளைவாக ஏற்கனவே அறிவித்தபடி இறைவனின் தண்டனைகள் அந்தக் குடும்பத்தில் இறங்க ஆரம்பித்தன. முகம்மதி பேகத்தின் சிறிய தகப்பனார் மிர்ஸா நிசாமுத்தீன் மிகப் பெரிய துன்பத்தை சந்தித்தார். இருபத்தைந்து வயதே நிரம்பிய அவருடைய மகள் ஒரு குழந்தையை நிர்க்கதியாக விட்டுவிட்டு அகால மரணமடைந்தார் . (தப்லீக்கே ரிஸாலத் பக்கம் 1)

இந்த சம்பவம் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் அவர்கள் மனம் மாறவில்லை. இதனைத் தொடர்ந்து மிர்ஸா நிசாமுத்தீனும் காலமானார்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியை உணர்ந்து இவருடைய மகன் மிர்ஸா குல் முகம்மதுவும் மற்றொரு மகளும் மனம் திருந்தி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் 'பை அத்' செய்தார்கள். மிர்ஸா நிசாமுத்தீன் சகோதரர் மிர்ஸா இமாமுத்தீனின் ஒரே வாரிசான குர்ஷீது பேகம் என்பவரும் இவர்களைத் தொடர்ந்து 'பை அத்' செய்தார்கள்.

மிர்ஸா நிசாமுத்தீனின் இன்னொரு சகோதரரான மிர்ஸா கமாலுத்தீன் என்பவர் குடும்ப வாழ்வைத் துறந்து இந்தியாவின் கபருஸ்தான்களில் தமது எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க காதியானை விட்டு வெளியேறினார். இவர் தமது ஆண்மையைத் தாமாக அழித்துக் கொண்டு அதற்காக வாழ்நாள் பூராவும் வருந்தினார். இறுதியில் சந்ததியின்றி இறந்து போனார்.

இந்நிலையில் மேற்கண்ட குடும்பத்தினர் திருந்துவதற்கும் நல்வழி பெறுவதற்கும் ஒரு வாய்ப்பு அளிக்கும் முகமாக அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பின்வருமாறு அறிவித்தான்.

"அவருடைய (மிர்ஸா அஹ்மத் பேக்குடைய) மகளான முகம்மதி பேகத்தை உமக்கு மணமுடித்து உம்முடன் ஓர் உறவை அவர் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் உமது ஒளியிலிருந்து அவர் ஒளி பெறவேண்டும். "

இதனைத் தொடர்ந்து இறைவன் மேலும் பின்வருமாறு அறிவித்தான்:

இதனை ஏற்காமல் அவர் தம்முடைய மகளை வேறெவருக்காவது மணமுடித்துக் கொடுத்தால் அந்தத் திருமணம் அவருக்கோ அவரது மகளுக்கோ அருளாக அமையாது. அவரிடம் கூறுவீராக: அவர் வேறு விதமாக நடக்க முற்பட்டால் துன்பங்கள் அவரைத் தொடர்ந்து வந்தடையும். அவற்றின் இறுதி கட்டமாக அவருடைய இறப்பு நிகழும். அது அவருடைய மகளை இன்னொருவருக்கு மணமுடித்து மூன்று ஆண்டுகளுக்குள் நிகழும் அவருடைய மரணம் மிக அருகில் உள்ளது என்றும் அது அவர் எதிர்பாராத நேரத்தில் நிகழும் என்றும் அவரை எச்சரிப்பீராக. அவருடைய மகளின் கணவர் இரண்டரை ஆண்டுகளுக்குள் இறந்து போவார். இது இறை தீர்ப்பாகும். (ஆயினையே கமாலாத்தே இஸ்லாம் . பக்கம் 572)

இறைவனின் கட்டளைக்கேற்ப தாம் இந்தச் செய்தியை அறிவிப்பதாகவும் தமது சொந்த விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் இதில் இல்லைஎன்றும் இன்னொரு திருமணம் செய்யவேண்டிய எவ்விதத் தேவையும் தமக்கு தற்போது இல்லைஎன்றும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் அச்சமயத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார்கள் (அறிக்கை 15 ஜூலை 1888)

இது முழுக்க முழுக்க உண்மையென்பதை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை ஆராயகின்றவர்கள் உணர்ந்துகொள்ளலாம்.

ஹம்ரத் பீபீ என்பவரோடு அவர்களுடைய முதல் திருமணம் நடந்ததென்றாலும் அவர்களுக்கு 21 வயதான பொது அதில் முறிவு ஏற்பட்டது. பின்னர் ஏறத்தாழ 28 ஆண்டுகள் அவர்கள் மணமுடிக்காது வாழ்ந்தார்கள். இக்காலகட்டத்தில் அவர்கள் இல்லற வாழ்க்கைப் பற்றிய எண்ணமே இல்லாது முழுக்க முழுக்க இறைப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது தமது இளமைப் பருவத்தை இஸ்லாமிய சேவைக்காக அர்ப்பணித்தார்கள். பின்னர் நவாப் மீர் தர்த் என்பவரின் வழித்தோன்றலும் உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவருமான ஹஸ்ரத் நுஸ்ரத் ஜஹான் பேகம் அவர்களை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 1884 இல் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில், நாத்தீக வாதமும் இஸ்லாத்தின் எதிரிகளோடு தொடர்பும் உள்ள ஒரு குடும்பத்தில் பெண் கேட்க, இறை கட்டளையைத் தவிர எந்தக் காரணமும் ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்களுக்கு இல்லை என்பதை நியாயஉணர்வுள்ள எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்த வரலாற்று உண்மையைத் தெரிந்து கொள்ளாது தங்களின் சொந்த மன விகாரங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீது அருவருக்கத்தக்க அவதூறுகளை பி.ஜே யைப் போன்ற பொய்யர்கள் சிலர் சுமத்துகின்றனர். இது இவர்களின் இறையச்சமற்ற மனப்போக்கையே காட்டுகின்றது. இதனால் இவர்களுக்கு ஏற்படவிருக்கும் சாபங்களையும் இறை தண்டனைகளையும் இவர்கள் உணர்வதில்லை.

முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் நிறைவேறிய விதமும் அந்தக் குடும்பத்தினரே அதற்க்குச் சாட்சிகளாக விளங்கியதும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஓர் உண்மையாளர் என்பதற்கு சான்றுகளாக விளங்குகின்றன.

மேற்கண்ட இறை அறிவிப்பை கேட்ட பிறகும் முகம்மதி பேகத்தின் தந்தையிடம் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இதன் விளைவாக இறைவனின் சாபம் அவரைத் தொடர்ந்தது. அவரது மகன் மிர்ஸா மஹ்மூத் பேக் ஜூலை1890 இல் அகால மரணமடைந்தார். அடுத்தடுத்து அவருடைய குடும்பத்தில் இறப்புகள் நிகழ்ந்தன.

ஆயினும் அவர் மிகுந்த பிடிவாதத்தோடு தமது மகளை - முகம்மதி பேகத்தை மிர்ஸா சுல்தான் அஹ்மத் என்பவருக்கு மணமுடித்து வைத்தார். இந்தத திருமணம் நடைபெற்று ஆறு மாதங்கள் முடிவடையுமுன் டைபாய்ட் நோய் கண்டு முகம்மதி பேகத்தின் தந்தை இறந்து போனார். இது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் முன்னறிவித்தபடியே நிகழ்ந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இறப்புகளைக் கண்ட முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் தமது தவறான போக்கைக் கைவிட்டு பாவ மன்னிப்புத்தேட ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, அந்த குடும்பத்தைச் சார்ந்த அநேகர், முகம்மதி பேகத்தின் தாயாரும் சகோதரிகளும் உட்பட ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களிடம் "பை அத" செய்து அஹ்மதியா ஜமாத்தில் இணைந்தார்கள்.

"அவர்கள் திருந்தி தங்களைச் சீர்திருத்திக் கொண்டால் நாம் அவர்களிடத்து கருணையுடன் திரும்புவோம்" என்ற இறை அறிவிப்பிற்கு ஏற்ப முகம்மதி பேகத்தின் குடும்பத்திற்கு ஏற்பட்டு வந்த சாபங்கள் நீங்கின. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள், இறைவன் தங்களுக்குச் சொன்னதாக எவற்றை அறிவித்தார்களோ அவையெல்லாம் அவற்றில் கூறப்பட்டபடியே நிறைவேறின. என்பதற்கு அவற்றோடு தொடர்புடையவர்களே சாட்சி கூறினார்கள். முகம்மதி பேகத்தின் மகன் மிர்ஸா இஸ்ஹாக் பேக், ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறியது குறித்துக் கூறியிருப்பதைப் பாருங்கள்:

"என்னுடைய பாட்டனார் மிர்ஸா முஹம்மது பேக், முன்னறிவிப்பின் படியே இறந்து போனார். இதற்குப் பின் எஞ்சிய குடும்பத்தினர் பயந்து போய் தங்களைத் திருத்திக் கொண்டார்கள். அவர்களில் அநேகம் பேர் அஹ்மதியத்தில் இணைந்தது, இதற்கொரு மறுக்கயியலாத சான்றாகும் (அல்-பஸல் 1923)

அக்காலத்தில் அஹ்மதியா ஜமாத்தின் மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அஹ்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"இந்த முன்னறிவிப்புகள் நிறைவேறின ஆனாலும் அவை ஜோதிடமாகும்" (இஷா அத்துஸ் சுன்னா, வால்யும்5)

மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு வஹி என்னும் இறையரிவிப்பு வருகிறது என்பதை நம்பாவிட்டாலும் அவர்கள் முகம்மதி பேகம் தொடர்பாக கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறின என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

முகம்மதி பேகத்தின் கணவரான மிர்ஸா சுல்தான் முஹம்மது, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பற்றித் தமது கைப்பட எழுதிய ஒரு கடிதம் தஸ்கிஸுள் அஸான் என்னும் எட்டில் மே,1913 இதழில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:

"நான் எப்போதுமே மறைந்த மிர்ஸா சாஹிப் அவர்களை நேர்மையான, கண்ணியத்திற்குரிய ஒருவராகவே எண்ணுகிறேன். அவர்கள் ஒரு உன்னதமான ஆன்மாவாகவும் எப்போதும் இறைவனை எண்ணத்தில் கொண்டவருமாவார்கள். நான் அவர்களைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கின்ற்றவன் அல்ல. சில காரணங்களால் அவர்களுடைய வாழ்நாளில் அவர்களை சந்திக்கின்ற நற்பேறு எனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது. "அந்த முன்னறிவிப்பின் பொது ஹிந்து ஆரியர்களும், கிருஸ்தவர்களும், லேக்ராம், ஆத்தம் ஆகியோரும் மிர்ஸா சாஹிப் மீது வழக்கு தொடர்ந்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக என்னிடம் சொன்னார்கள். நான் அந்தப் பணத்தைப் பெற்றிருந்தால் பெரும் செல்வந்தனாகி இருப்பேன். ஆனால் அவர்கள் (ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ) மீது நான் கொண்டிருந்த உயர்வான நம்பிக்கையே என்னை அவ்வாறு செய்ய விடாது தடுத்தது."

"நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் மீது மிக உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. இத்தகையதொரு நம்பிக்கை இருப்பதாக அவர்களைப் பின்பற்றும் உங்களால் கூட வாதிக்க இயலாது என எண்ணுகிறேன்." (அல் - பஸல் 9 ஜூன் 1921)

இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் கண்ணியத்திற்கும் உண்மைக்கும் அவர்களுடைய முன்னறிவிப்புகள் நிறைவேறியதற்கு முகம்மதி பேகத்தின் குடும்ப அங்கத்தினர்களே சாட்சி கூறியிருக்கும் போது மற்றவர்கள் அதைப் பற்றி கதைக் கட்டுவதைக் காணுகின்றபோது அவர்களை ஷைத்தானின் வாரிசுகள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் மக்களின் மனங்களில் தீய எண்ணங்களை விதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல இவர்கள் இமாம் மஹ்தி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) இவர்கள் மூலமாக மக்கள் நேர்வழி பெறுவதற்கு முட்டுக்கட்டையாகயும் நிற்கிறார்கள்.

ஆனால் இவர்களின் எண்ணங்களும், திட்டங்களும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் இறைத்தூதர்களை எதிர்த்தவர்கள் எக்காலத்திலும் வெற்றிபெறவில்லை. மாறாக இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள் என்பது வரலாறாகும்
Read more »

இறைவன் புறமிருந்து வந்த நபி "ஜமாத்துல் உலமா ஏட்டிற்கு மறுப்பு

ஒரு பொய் அது பல்லாயிரம் தடவை கூறப்பட்டுகொண்டிருந்தாலும் அது மெய்யாகாது என்பது உண்மையாயிருந்தும் கடந்த நூறாண்டுகாலமாக அஹ்மதிய்யா ஜமாத்திற்க்கும், அதன் தூய ஸ்தாபகருக்கும் எதிராக வானத்தின் கீழ் மிகப்பெரும் குழப்பவாதிகள் என்றும், கேட்ட ஜந்துக்கள் என்றும், எம்பெருமானார்(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இன்றைய ஆலிம்சாக்கள் தொடர்ந்து பொய் கூறிக்கொண்டு அல்லாஹ்வின்- "லஹ்னதுல்லாஹி அலல் காதிபீன்" என்ற திருவசனத்திற்க்கினங்க இறைவனது சாபத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.இதற்க்கு உதாரணமாக ஆகஸ்ட் மாத ஜமாத்துல் உலமா ஏட்டில் அதன் ஆசிரியர், பசுங்கதிர் மாத ஏட்டில் எம். கே. இ . மௌலான என்பவர் "ஆங்கிலேயர் தோற்றுவித்த நபி" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு புழுகு மூட்டையை மிகுந்த நன்றியுடன் எடுத்து சேர்த்து இருக்கின்றார், "ஆம்" ஒரு பொய்யருக்கு மற்றொரு பொய்யரின் திலகம் ஒத்தாசை செய்து ஊக்கமும், ஆக்கமும் அளித்திருக்கின்றார்.

எம்பெருமானார்(ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் இறுதி வேதமாக அருளப்பட்டதினால் இதற்குப் பிறகு புதிய ஒரு சீர்திருத்தமோ, புதிய தூதுத்துவமோ தேவையாகிவிட்டது என்று ஆசிரியர் வரைகின்றார். அவ்வாறென்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றிய சீர்திருத்தவாதிகளான, இமாம்கள், முஜத்தித்மார்கள் மற்றும் அவ்லியாக்கள் அனைவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள். "நவூதுபில்லாஹ்" அதாவது மௌலானாவின் திருப்பார்வையில் இவர்கள் அனைவரும் பொய்யர்கள் ஆவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு புதிய ஒரு ஷரியத்தோ முகம்மதியாவிலிருந்தும் மாறுபட்ட ஒரு நுபுவத்தோ தோன்றாது. அஹ்மதியா இயக்கத்தின் ஸ்தாபகர் அப்படிப்பட்ட ஒரு வாதம்புரியவுமில்லை.

ஷரியத் பூரணமாக இருந்தும் நபி (ஸல்) மூலமாக நபித்துவம் முழுமைப் பெற்றிருந்தும் இறுதி காலத்தில் இஸ்லாத்தின் அதன் பெயரும், திருமறையில் அதன் எழுத்தும் மட்டும் எஞ்சி இருக்கும் என்றும், மௌலானாவைப் போன்ற ஆலிம்கள் வானத்தின் கீழ் மிகப் பெரும் கேட்ட ஜந்துக்களாக இருப்பார்கள் என்றும் எல்லாவிதமான குழப்பங்களுக்கும் அவர்களே உறைவிடமாக இருப்பார்கள் என்றும், நபி(ஸல்) அவர்களின் உன்னத சமுதாயத்தை சார்ந்தவர்கள் யகூதி, நசராக்கள பின் தொடர்வார்கள் என்றும், முஸ்லீம்கள் 73 பிரிவுகளாக பிரிவார்கள் என்றும், அப்போது 14 ஆம் நூற்றாண்டில் இமாம் மஹ்தி தோன்றுவார்கள் என்றும், அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சீடராக, உம்மத்தி நபியாக இருப்பார் என்றும் மிகவும் விளக்கமான முறையில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பல ஹதீதுகளில் ஏன் கூறியிருந்தார்கள்.

இறைவன் புறமிருந்து தூதர்கள் தோன்றும் போதெல்லாம் நிராகரிப்போர்கள் அவர்களுக்கு எதிர்ப்புகள் தெரிவித்தார்கள் அதைப்போன்றே இக்காலத்தில் தோன்றிய இமாம் மஹ்திக்கு எதிராகவும் குழப்பவாதிகளான கெட்ட ஜந்துக்கள் பயங்கரமான குழப்பங்களும், கிளர்ச்சிகளும் உண்டாக்கி பொய்பிரச்சாரங்கள் மூலமாக தப்பெண்ணங்களை ஏற்படுத்தி உண்மையை ஒப்புக்கொள்வதில் இருந்தும் மக்களை விளக்கிக்கொண்டிருக்கிரார்கள்.

அந்த சூழ்ச்சிகளில் ஒன்றுதான் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) "ஆங்கிலேயர்களால் தோற்று விக்கப்பட்ட நபி" என்ற பொய் குற்றச்சாட்டு இந்தப்பொய் குற்றச்சாட்டுக்கு கடந்த நூறு வருடங்களாக அஹ்மதியா ஜமாஅத் பதில் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இறையச்சமற்ற இவர்களுக்கு இந்த பதில்கள் எருமை மாட்டின் முன்னாள் வீணை வாசிக்கின்றதற்கொப்பாகும்.

ஹசரத் அஹ்மத்(அலை) அவர்கள் தமது வருகையின் நோக்கத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.
நான் சிலுவையை உடைப்பதற்கும், பன்றியை கொள்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.(பத்ஹே இஸ்லாம் பக்கம் 17 )

"கிறிஸ்தவர்களுடைய கடவுளை இனியாவது மரணிக்க செய்யுங்கள். எவ்வளவு காலம்தான் நீங்கள் அவரை கடவுள் ஆக்கிக் கொண்டிருப்பீர்கள், இதற்க்கு ஒரு முடிவில்லைல்யா? (இசாலே ஔஹாம், பக்கம் 469)

இராணி விக்டோரியாவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ஒரு கடிதம் எழுதி அதைப் புத்தகமாக வெளிப்படுத்தினார்கள். அதில் இவ்வாறு வரைகிறார்கள்.

"தாங்கள் பாவமன்னிப்புக் கோறவேண்டும் மகனோ, பங்காளியோ இல்லாத ஏக இறைவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும். இந்த நாட்டை ஆளுகின்ற ராணியே! தாங்கள் இஸ்லாத்தை தங்களின் மார்க்கமாக ஏற்ற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தாங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். (ஆயினயே கமாலாத்தே இஸ்லாம். பக்கம். 522) ராணி விக்டோரியாவை இஸ்லாத்தை ஏற்குமாறு கூறும் ஒருவர் எவ்வாறு பிரிட்டிஷ் காரர்களால் நியமிக்கப்பட்ட ஒருவராக இருக்க முடியும்.

கிருஸ்தவ மார்க்கத்தை பின்பற்றும் ஆங்கிலேயர்களுக்கு, சிலுவை உயிரோடு ஒன்றிவிட்ட ஒன்றாகும். அதனை தகர்க்க வந்துள்ளதாக கூறும் ஒருவர், ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவராகவோ அவர்களுடைய ஆதரவாளர்களாகவோ எவ்வாறு இருந்திருக்க முடியும்? மேலும் கிருஸ்தவ கடவுள் மரணித்துவிட்டதாக கூறும் ஒருவர் எவ்வாறு ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்திருக்க முடியும்? ஆனால் கிறிஸ்தவர்களின் கடவுளாக கருதும் இயேசு, வானத்தில் இன்றும் உயிருடன் இருக்கிறார் என்று கூறும் இந்த ஆலிம் சாக்களின் வர்க்கம் வேண்டுமானால் ஆங்கிலேயர்களின் வாரிசாக இருந்திருக்கலாம், ஆங்கிலேய ஆட்சியாளர்களை குறித்து ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து இதுதான்.

"தற்போது எங்களுக்கு எதிராக எழுதுகோல் எனும் வாள் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆட்சேபனை எனும் அம்புகள் எங்களை நோக்கி எறியப்படுகின்றன. எனவே இறைவனின் புனித மார்க்கமான இஸ்லாத்தைக் காப்பாற்றுவதற்கும், நபி(ஸல்) அவர்களின் புனிதத் தன்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும் நாம் நமது எழுதுகோலைப் பயன்படுத்துகின்றோம்.

இதற்கான் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் வழிங்கியுள்ள ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இறைவன் நம்மை வாழவைத்திருக்கின்றான். அதற்காக அந்த மேலான இறைவனுக்கு நாம் நமது நன்றியை பிரகடனப்படுத்தும் போது இவர்கள் அதனை ஆட்சேபிக்கிறார்கள். நாம் யாரையும் சலுகைக்காக எதிர்பார்த்து எதையும் கூறவில்லை. ஆனால் நமது பிரச்சாரத்திற்கு எவ்விதத் தடையும் விதிக்காமல் அதற்க்கான முழு உரிமையும் வழங்கியுள்ள ஓர் ஆட்சிக்கு நாம் நன்றி கூறாமல் இருக்க முடியாது. (மல்பூசாத் பக்கம் 232)

இங்கு மத விஷயத்தில் ஆங்கிலேய அரசு பாரபட்சமின்றி நடந்ததையே ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்று ஆகாள மௌலவி மார்களே தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

தாருல் உலூம் நத்வதுல் உலமாவிளிருந்து கீழ் வருமாறு ஒரு மார்க்கத் தீர்ப்பு எனும் பத்வா விடுக்கப்பட்டிருந்தது. "ஆலிம்களுடைய ஒரு மகத்தான பொறுப்பும், கடமையும், அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் அருள்களை நன்குணர்ந்து இந்த ஆட்சிக்கு கீழ்படிந்து நடப்பதே நன்மை பயக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாகும்.(அன் நத்வா, லக்னோ ஜூலை 1908)

அஹ்லுஹதீதின் தலைவர்களில் ஒருவரான மௌலவி முஹம்மத் ஹுசைன் பட்டாலவி இவ்வாறு கூறியிருந்தார்:
" இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடுவது (ஹராம்) விலக்கப்பட்டதாகும்" (இஷா அத்துசுன்னா வா. 6 பக்கம் 10)

இவைகளைப் போலவே, ஹஸ்ரத் நவாப் சித்திக் ஹசன்கான் - மௌலவி நதீர் ஹுசைன் முஹத்த்தாஸ் தெஹ்லவி, சர் செய்யது அகமதுகான், மௌலவி நதீர் அஹ்மத் ஷம்சுல் உலமா போன்ற ஆலிம்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முஸ்லிம்கள் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்கத் தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். மேற்கண்டவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் துரோகிகள் என்று இவர்கள் கூறுவார்களா? ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட நபி என்று குற்றம் சாற்றுகின்ற மௌலானாவின் கவனத்தை ஒரு திருமறை வசனத்தின் பக்கம் ஈர்க்க நாடுகிறேன்:-

இறைவன் கூறுகின்றான்: எவன் நம் மீது பொய்யாக குற்றம் சாட்டி நம்மால் அனுப்பப்பட்டவன் என்று பொய்வாதம் செய்கிறானோ அவனை நாம் வலது கரத்தைப் பிடித்து அவனது உயிர் நாடியை அறுத்து விடுவோம். (௬௯:௪௬,௪௭) "எவன் இறைவன் மீது பொய்குற்றம் சாட்டி அல்லது அவனது வசனத்தை பொய்யாக்கு கின்றானோ, அவனை விட பெரிய துரோகி யார்? துரோகிகள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்" என்றும் இறைவன் கூறுகின்றான்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் வாதம் செய்ததிலிருந்து இன்றுவரை அவருக்கும் அவருடைய ஜமாத்திற்க்கும் மிகப் பெரிய வெற்றிதான் கிடைத்து கொண்டிருக்கிறது. இன்று உலகெங்கும் இந்த ஜமாஅத் பரவிக்கொண்டிருக்கிறது. அவர் ஆங்கிலேய ஆட்சியால் தோற்றுவிக்கப்பட்ட நபி என்றால் அவருக்கு இந்த வெற்றி எப்படி கிடைத்திருக்கும், இறைவன் என்ன? ஆங்கிலேய ஆட்சியின் முன்னால் சக்தியற்றவனாகிவிட்டானா? அல்லது திருமறையிலுள்ள மேற் குறிப்பிட்டுள்ள வசனம் பொய்யாகி விட்டதா? (நவூது பில்லாஹ்)

ஆங்கிலேயர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றதற்க்காக ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்ததாக மௌலான தனது கட்டுரையில் குற்றம் சாட்டுகிறார். இதுவும் அபாண்டமான ஓர் பொய்யாகும்.

ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் ஜிஹாதை தடை செய்து எந்த அறிக்கையும், போதனையும் தரவில்லை. மாறாக, இக்காலம் வாளால் ஜிஹாது செய்யவேண்டிய காலம் இல்லையென்றே கூறி இருந்தார்கள். இன்று பேனா முனையிலும், மேடை பேச்சுகளாலும் இஸ்லாம் தாக்கப்படுகிறது என்றும், அதே முறையில் நாமும் பதிலடி கொடுத்து இஸ்லாத்தைக் காக்க வேண்டும் என்றும் அதுவே தற்போது செய்ய வேண்டிய ஜிஹாத் என்றும் கூறியுள்ளார்கள்.

அஹ்மதிகள் இதர மதத்தவர்களுடன் அன்பாகவும், நேசத்துடனும், பரிமாருகின்றதையும், அந்ததந்த சமுதாயத்தில் தோன்றியிருக்கும் இறைத்தூதர்களை ஒப்புக்கொல்கின்றதையும், மத வெறி கொண்ட இந்த மௌலானவிற்க்கு பிடிக்கவில்லை. எனவே! காதியானிகள் எந்த சமுதாயத்தோடு வேண்டுமானாலும் இசைந்து செல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார்- நாஸ்திகர்களுக்கு கூட பணிந்து செல்ல தயங்கமாட்டார்கள்" என்றும் குற்றம் சாட்டுகிறார். இது மௌலானாவுடைய உள்ளத்தில் குடிகொண்டிருக்கும, துவேசம், பகைமை, வெறுப்பின் வெளிப்பாடாகும். உலகிலுள்ள எல்லா சமுதாயங்களுக்கும் "ஏன் நாஸ்திகர்களுக்கும் கூட, தனது ரஹ்மானியத் என்ற குணத்தி பிரகனப்படுத்தும் அல்லாஹ்வின் மீதும் இதே குற்றச்சாட்டை சுமத்த மௌலான தயங்க மாட்டார் போலும். பாகிஸ்தான் உருவாவதை மிர்ஸா முஹம்மத் அஹம்மத் இறுதி வரை எதிர்த்தார் என்று மௌலானா கூறுகின்றார் இந்த மிர்ஸா முஹம்மத் அஹம்மத் யார் என்பது மௌலானா தான் கூற வேண்டும். இந்த குர்ற்றசாட்டிற்கு இவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.

"பாகிஸ்தான் உருவானவுடன் காதியானிகள், தலைமறைவாகி, ரப்வா, என்ற பகுதியில் தனித்து வாழ்ந்தனர்" இந்த ஒரே வசனத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களை கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் உருவானதும் காதியானிகள் தலைமரைவாகிவிட்டார்கள். ரப்வா என்ற பகுதியில் தனித்து வாழ்ந்தார்கள். பொய் கூருகின்றவனுக்கு மறதி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதுண்டு.

அஹ்மதிகள் தலைமறைவாகிவிட்டால் பிறகு ரப்வா என்னும் தலை நகரம் உண்டாகி தங்களுடையா பிரச்சார பணிகளை எவ்வாறு அவர்களால் தீவிரப்படுத்த முடியும்? பாகிஸ்தான் உருவானதும் அதன் வெளி நாட்டு அமைச்சராகவும், ஐ. நா. சபைக்கு அந்நாட்டின் பிரதிநிதியாகவும், உலகப் புகழ் பெற்ற அஹ்மதியான சர் முஹம்மது சபருல்லாகான் சாஹிபு எவ்வாறு நியமிக்கப் பட முடியும்.

பாகிஸ்தானில் அஹ்மதியா ஜமாஅத் என்பது லெட்சம் நபர்களைக் கொண்ட பெரும் சக்தியாக விளங்கிக்கொண்டிருக்கின்றது உலகம் அறிந்த உண்மை! ஆனால் மௌலானாவின் அபிப்ராயத்தில், அஹ்மதிகள் அங்கே தலை மறைவாக இருக்கின்றார்களாம். இந்த மௌலானா முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார். தனது கட்டுரையின் இறுதியில் இவ்வாறு வரைகிறார்.

"காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என்று உலகத்தின் அனைத்து தேசங்களும் அறிவித்தும் கூட அவர்கள் போக்கில் கொஞ்சமும் திருத்தம் ஏற்படவில்லை.

"இந்த அனைத்து தேசங்களும்" என்று கூறியிருக்கும் தேசங்களைப்பற்றி மௌலான சற்று விளக்கித் தருவாரா? அஹ்மதிகள் முஸ்லிம்களா? இல்லையா என்பதைப்பற்றி அறிவிக்க இவர்களுக்கு யோக்கியதையும் உரிமையும் என்ன இருக்கின்றது? இறைவன் புறமிருந்து இவர்களுக்கு இதற்க்கான அதிகாரம் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கின்றதா? அஹ்மதிகள் இஸ்லாத்தை இவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கவில்லை. மூளை கெட்ட இந்த முல்லாக்களை இஸ்லாத்தின் காவலர்களாகக் கருதவுமில்லை. அவர்கள் இஸ்லாத்தின் துரோகிகளான பயங்கர விஷமிகள் என்பதை இஸ்லாத்தை நமக்கு அளித்த நபி(ஸல்) அவர்களே சொல்லித்தந்திருக்கிறார்கள். "அஹ்மதிகள் மஸ்ஜிதுக்கு செல்வது நோன்பு வைப்பது, இஸ்லாமிய வாழ்வு முறையை பின்பற்றுவது இவைகள் ஒன்றும் "நம்முடைய இந்த மௌலானா விற்கு பிடிக்கவில்லை. அதாவது அஹ்மதிகள் தங்களுடைய மஸ்ஜித்களுக்கு போகக்கூடாது. நோன்பு வைக்கவோ, தொழவோ கூடாது. எவ்வளவு அருமையான சேவைகள் வானத்தின் கீழுள்ள இந்த கெட்ட ஜந்துக்கள் இஸ்லாத்திற்கு செய்கிறார்கள். இஸ்லாத்துடன் எந்த பற்றும் இல்லாத, தொழாத நோன்பு வைக்காத, மஸ்ஜித்களுக்கு போகாத, வேஷத்திலும், பாவனையிலும் கூட ஒரு முஸ்லிம் என்று தங்களைக் காட்டிக்கொள்ளாத முஸ்லிம்கள், 'பக்கா' முஹ்மீன்கள்! அவர்களுக்கு இந்த ஆலிம்சாக்கள் சொர்கத்திற்க்கான அனுமதி சீட்டு வழங்குவார்கள். ஆனால் இஸ்லாமிய ஐந்து கடமைகளையும் சரிவர கடைப்பிடித்து முஸ்லீமாகவும், முஹ்மீனாகவும் வாழ்கின்ற அஹ்மதிகளை அவ்வாறு செய்ய இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

நான் இறுதியாக மௌலானாக்களிடம் கூறுகின்றேன். நீங்கள் அல்லாஹ்வை சற்று பயப்படுங்கள் அவனுடைய பயங்கரமான தண்டனை வரும் பொது உங்களால் உங்களை காப்பாற்றமுடியாது. இறைத்தூதர்களை எதிர்த்தவர்களுக்கு மோட்சம் கிடைத்ததாக வரலாறு கிடையாது. சற்று திருக்குரானை திருப்பி பாருங்கள். அரபி தெரிந்தால் மட்டும் ஒருவர் மூமினாக இருக்க முடியாது! உங்களுக்கு அப்பூஜஹளை விட அரபி தெரியாது. ஆனால் இறைத்தூதரை எதிர்த்த காரணத்தால் அபுல் ஹக்கமாக இருந்த அவன் அபூஜஹிலாக மாறிவிட்டான்! இறைவா! இவர்களுக்கு உண்மையை அறிந்து அதை கைகொள்ளுகின்றதற்குள்ள தௌபீக்கை தந்தருள்வாயாக! ஆமீன்.
Read more »

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்?


"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒரு உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம்." (திருக்குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் அவர்களது தாயார் மர்யம் (அலை) அவர்களையும் "அல்லாஹ் உயிருள்ளவன். வல்லமையுள்ளவன்" என்பதை நிரூபிப்பதற்கான ஓர் அடையாலமாக்கினான் என்பது தெரிய வருகிறது. மேலும் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு அவர்களது எதிரிகள் அதிகமாக துன்பங்கள் கொடுத்தபோது அல்லாஹ் அவர்களையும் அவரது தாயாரையும் எதிரிகளின் தீமையிலிருந்து காப்பாற்றி தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் வாழச் செய்தான் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான்.

மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு அஹ்மதிய்யா இயக்கத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்கள் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மேற்குறிப்பிட்ட வசனத்தில் "ஆவைனாஹுமா" "அவ்விருவருக்கும் நாம் தஞ்சமளித்தோம்" என்ற சொல் வந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் ஏதாவதொரு துன்பத்திளிருந்தோ, கவலையிளிருந்தோ காப்பாற்றி உதவி புரிவதைக் குறிப்பிடுவதற்கே அரபி மொழியில் "ஆவா" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திருககுரானில் ஹஸ்ரத் ரசூல்(ஸல்) அவர்களைப் பார்த்து "அவன் உம்மை அநாதையாகக் கண்டு (தன் நிழலில் உமக்குப்) புகலிடம் அளிக்கவில்லையா?" (93:7) என்று இறைவன் கேட்கின்றான்.

இந்த வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது "நீர் உமது தாயாரின் கருப்பையில் இருக்கும் போதே உமது தகப்பனார் இறந்து விட்டார். பின்னர் நீர் அநாதையாகி விட்டதைக் கண்ட இறைவன் தானாகவே உமது கருணையின் நிழலில் உமக்கு அடைக்கலம் வழங்கினான்" என்பதையே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறியுள்ளான்.

"ஆவா" என்ற சொல் திருககுரானில் இதே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் சில உதாரணங்களைக் கீழே தருகிறோம்.

"நீங்கள் சிறுபான்மையினராக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பூமியில் நீங்கள் பலவீனமாகக் கருதப்பட்டீர்கள். மக்கள் உங்களைப் பிடித்துச் சென்று விடுவார்களோ என்று பயந்தீர்கள். அவ்வாறிருந்தும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்தான். தன் உதவியினால் உங்களை உறுதிப் படுத்தினான். மேலும், தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான். (8:27) அல்லாஹ் இந்த வசனத்தில் "ஆவா" என்ற சொல்லை ஒரு பெரும் துன்பத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு அவன் மதீனாவில் அடைக்கலம் வழங்கி உதவி செய்த சந்தர்ப்பத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளான்.

அவ்வாறே வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்ட சமயத்தில் ஹஸ்ரத் நூஹ் (அலை) தமது மகனிடம் "எனது மகனே! எங்களுடன் நீயும் கப்பலில் ஏறிக்கொள்" எனக் கூறிய போது அவன் "நான் இப்பொழுது இந்த வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ஏதாவதொரு மலையைச் சென்றடைந்து தங்கிக் கொள்வேன்" (11:44) என்று பதில் கூறுவதாக வரும் திருக்குர்ஆன் வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்ட பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களுடன் பிறந்த அவர்களது சகோதரர் புன்யாமீன் மீது அவர்களது மற்ற சகோதரர்கள் பெரும் பெரும் கொடுமைகளை இழைத்ததால் அவர்கள் மிகுந்த துயரத்துடன் தமது நாட்களைக் கழித்து வந்தார்கள். ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களிடம் அவர் திரும்பி வந்தபோது தனது சகோதரருக்கு பெரும் துயரத்திலிருந்து அவர்கள் அடைக்கலம் வழங்கியது பற்றி திருககுரானில் இவ்வாறு வந்துள்ளது:

"அவர்கள் யூசுபிடம் சென்றபோது, அவர் தம் சகோதரரை தம் பக்கத்தில் இடமளித்து (அவரிடம்) நிச்சயமாக நானே (காணாமற் போன) உம்முடைய சகோதரன். எனவே, இவர்கள் செய்து கொண்டிருப்பது குறித்து நீர் கவலையடைய வேண்டாம்" என்றார். (12:70)

"ஆவா" என்ற சொல் மேற் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் இந்த வசனத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அரபி அகராதியின்படி "ஆவா இலா மன்சிலிஹா" என்று கூறினால் அது அமைதியற்ற ஓர் இடத்திலிருந்து அமைதியான ஓர் இடத்திற்கு ஒருவர் வந்து சேர்ந்ததைத்தான் குறிப்பிடும். இந்தப் பொருளில்தான் "அல்லாஹும்ம ஆவா இலா ஸில்லி கரமிக வ ஆஃபிக" எங்கள் இறைவா! உனது கருணை, மன்னிப்பு ஆகியவற்றின் நிழலில் எனக்கு அடைக்கலம் வழங்குவாயாக" என்று நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம் . (ஆதாரம் அரபி அகராதி நூல் "அகரப்" )

எனவே திருக்குரானின் (23:51) வசனம் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கும் அவர்களது தாயாருக்கும் ஒரு பெரும் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி இவ்வுலகிலேயே அவ்விருவருக்கும் தங்குவதற்கேற்றதும்  நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தான். என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், "ஆவா" என்ற சொல்லின் பொருள் "அவன் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி அடைக்கலம் தந்தான்" என்பது மட்டுமேயாகும்.

வரலாற்றைக் கவனமாகப் பார்க்கும் போது ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும், அவரது தாயாருக்கும் அடைக்கலம் தேவைப்படும் அளவில் சிலுவை சம்பவத்திற்கு முன்பு எந்த ஒரு பெருந்துயரமும் எந்தக் காலக் கட்டத்திலும் வரவில்லை என்பது தெளிவாகத் தெரியும். சிலுவை சம்பவம்தான் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும் அவரது தாயாருக்கும் கடுமையான துன்பத்தைத் தந்தது. இறைவன் தனது அளவற்ற அருளால் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை சிலுவை மரணத்திலிருந்து காப்பற்றி இருப்பதால் அவர்கள் வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டியது அவசியமானதாக இருந்தது. ஏனெனில், ஸாம் நாடு ரோமானிய அரசுக்குக் கீழிருந்ததால் ரோம் நாட்டு மன்னர் கிசருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்தனர்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்து வந்தால் நிச்சயமாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு அவர்கள் தமது நாட்டை விட்டு இடம் பெயர்ந்து வேறு நாட்டிற்கு செல்ல கட்டளையிட்டான். வரலாற்று சாட்சிகளின்படி இந்த இடம் காஷ்மீர்தான். என்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதி நீரூற்றுகளும் செழிப்பான தோட்டங்களும் நிறைந்த அழகிய சூழலைக் கொண்ட நகரமாக இருப்பதால் இதனை சொர்க்கத்திற்கு இணையாக மக்கள் புகழ்ந்து கூறுகின்றனர். மேலும் "காஷ்மீர்" என்ற சொல்லே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் காஷ்மீர் பயணத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஏனெனில், காஷ்மீரிய மொழியில் "காஷ்மீர்" என்பதற்கு பகரமாக "கஸீர்" என்றுதான் காஷ்மீர் அழைக்கப்படுகிறது. இது உண்மையிலேயே ஒரு எபிரேய மொழியின் சொல்லாகும். "காஃப்" என்ற சொல்லும் "அஸீர்" என்ற சொல்லும் இணைந்தே இந்தச் சொல் உருவாகியுள்ளது. "காஃப்" என்ற சொல்லின் பொருள் "அதைப் போன்றது" என்பதாகும். எபிரேய மொழியில் "அஸீர்" என்றால் ஸாம் நாடு என்பதுதான் அதற்குப் பொருள். எனவே, கஸீர் என்பதன் பொருள் "ஸாம் நாட்டைப் போன்றது" என்பதாகும். காஷ்மீரிய மொழியில் காஷ்மீருக்கு "கஸீர்" என்றுதான் இன்றும் கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. காஷ்மீரில் வாழ்பவர்களை காஸ்மீரில் உள்ளவர்கள் "காஸீர்" என்றே அழைக்கின்றனர்.

எபிரேய சமுதாயத்தினர் காஷ்மீரில் வாழ்ந்தனர் என்பதற்கு "காஷ்மீர்" என்ற சொல் மட்டும் சான்றாக இல்லை. மாறாக, வரலாற்று நூல்களிலிருந்தும் இன்றிலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபி காஷ்மீர் வந்திருந்தார் என்றும் அவர் இஸ்ரவேல் சந்ததியிலிருந்து தோன்றியவர் என்றும் அந்த நபி இளவரசர் என்று அழைக்கப்பட்டார் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது கல்லறை கான்யார் வீதியில் உள்ளது. அது யூஸ் ஆஸப்பின் கல்லறை என்றே பிரபலமாகியுள்ளது. இந்தச்சொல் "இயே ஆஸப்" என்ற சொல்லிலிருந்து வந்த திரிபு சொல்லாகும். இதனை அஹ்மதியா இயக்கத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) தமது ஒரு நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

எபிரேய மொழியில் "ஆஸிப்" என்ற சொல் தமது சமுதாயத்தைத் தேடிச் செல்பவரைக் குறிக்கும். மேலும் "யூஸ்" என்ற சொல் "இயேசு" என்ற சொல்லின் திரிபு சொல்லாகும். ஈசா (அலை) அவர்களுக்கு இந்தப்பெயர் வைக்கப்பட்டதன் காரணம் அவர்கள் பஹதே நஸர் என்ற மன்னரின் காலத்தில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பத்து இஸ்ரவேல் கோத்திரத்தினரை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு இறைவனின் தூதுச்செய்தியை எட்ட வைக்கப் பயணம் மேற்க்கொண்டதேயாகும். பஹதே நஸர் என்ற மன்னர் அந்த இஸ்ரவேல் கோத்திரத்தைச் சார்ந்தவர்களை அடிமைகளாக்கி அவர்களை அப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் குடியேறச் செய்தார்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தனது வருகையின் நோக்கம் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே அன்றி மற்றபடியல்ல' (மத்தேயு 15:24)

'இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே எனக்கு ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோவான் 10:16)

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தமது சீடர்களுக்கு ஒரு முறை தனது தூதுச் செய்தியை பரப்புவது குறித்து அறிவுரை கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:

'நீங்கள் புற ஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். ' (மத்தேயு 10:4,5)

இந்த மேற்கோள்களிலிருந்து பாலஸ்தீனத்தில் வாழும் யூதர்களுக்கு ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எவ்வாறு இறை தூதுச் செய்தியை எட்ட வைத்தார்களோ அவ்வாறே கிழக்கத்திய நாடுகளிலும் வாழும் யூதர்களுக்கும் இறைவனின் தூதுச் செய்தியை எட்டவைப்பது அவர்களது கடமையாக இருந்தது. அந்த யூதர்களும் அவர்களது குரலை ஏற்று நடக்க வேண்டியிருந்தது. ஏனெனில், ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் கூற்றுப்படி பாலஸ்தீனத்தின் ஆடுகளிலிருந்தும் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களாவார்கள். ஆனால், மற்ற ஆடுகள் அவரது குரலைக் கேட்டதும் மிக விரைவில் ஒன்று கூடிவிடும் நிலையில் இருந்தன.

இந்த முன்னறிவிப்புகளுக்கேற்ப அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்தான். முதலில் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கெதிராக எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில் அரசாங்க தரப்பிலிருந்து நாட்டிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்கள் மீது தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் அல்லாஹ் எவ்வாறு யோனாதீர்க்கதரிசியை மரணத்தின் வாயிலிருந்து காப்பாற்றினானோ அவ்வாறே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் சிலுவை மரணத்திலிருந்தும் காப்பாற்றினான். ஏனென்றால் இதற்குப் பிறகு அவர்கள் தமது நாட்டில் இருக்க முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதற்க்கான காரணம் எவரைக் குறித்து அரசாங்கம் ஒருமுறை அவரை சிலுவையிலேற்றி கொள்ள வேண்டும் என தீர்மானித்து விடுகிறதோ அப்படிப்பட்டவர் தப்பித்துச் சென்றாலும் அவர் மீண்டும் பிடிபடும்போது அவர் கொல்லப்படுவது உறுதி. எனவே, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் அந்த நாட்டைத் துறந்தார்கள். பாலஸ்தீனத்தை விட காஷ்மீர், ஆப்கனிஸ்தான் ஆகிய பகுதியிலுள்ள வழி மிகவும் அபாயகரமானதாக இருந்தது. என்றாலும், அவர்கள் இடம்பெயர்ந்து இந்த நாடுகளுக்கு வந்தார்கள்.

திருக்குர்ஆன் கூறுவது போன்று தங்குவதர்க்கேற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான காஷ்மீரைத்தான் அல்லாஹ் அவர்கள் இடம்பெயர்ந்து செல்லும் இடமாக்கினான். அவர்கள் அங்கு எவ்வித இடையூறுமின்றி சமாதானத்துடனும் சுகத்துடனும் தங்கி வாழ்ந்து வந்தார்கள். காஷ்மீரில் நீரூற்றுகள் மட்டுமின்றி இந்தப் பகுதி தனது குளிர்ச்சியிலும் செழிப்பிலும் ஸாம் நாடு போன்று இருந்ததால் அங்குச் சென்றதும் அவர்களது எல்லாத் துன்பங்களும் நீங்கி விட்டன. அவர்கள் தமது 120 வது வயது வரை இறைவனின் தூதுச் செய்தியை மக்களுக்கு எட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அங்கேயே மரணித்தார்கள். பின்னர் ஸ்ரீ நகரிலுள்ள கான்யார் பகுதியில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்று வரை அவர்களது கல்லறை அங்கு இருந்து வருகிறது. ( தப்ஸீரே கபீர் பாகம் 6 பக்கம் 175 லிருந்து 179 வரை)
Read more »

Mar 26, 2012

அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலிமா - பொய்யர்களின் அட்டூழியம் தொடர்கிறது.


ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளமான ABUMUZAIN என்ற தளத்தில் அஹ்மதிய்யா ஜமாத்தின் கலிமா 'லா இலாஹா இல்லல்லாஹ் அஹ்மதூர் ரசூலுல்லாஹ்' என்பதுதான் என்ற அப்பட்டமான ஒரு பொய்யை வெளியிட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் அஹ்மதிய்யா ஜமாத்தை பற்றி தவறான எண்ணத்தைப் பரப்பும் ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளங்கள் ஏராளம் இருக்கிறது. இந்தப் பொய்யர்களுக்கு இறைவனைப்பற்றியோ, மறுமையைப் பற்றியோ எந்த அச்சமும் இல்லை என்பதற்கு இவர்களின் எழுத்துக்களே சான்றாக இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் நயவஞ்சகனின் செயலாக கூறுகிறார்கள் ஒரு செய்தியை கேட்டவுடன் அதைப் பற்றி விசாரிக்காமல் பரப்புவது. இதை இந்தப் பொய்யர்கள் தங்களுடைய தொழிலாகவே செய்துவருகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர் வெளியிட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். அஹ்மதியா ஜமாஅத்திற்கெதிராக மக்களை தூண்டுவதுதான் இவர்களின் முக்கிய பணியாகும். இந்தப் பொய்யர்கள் alhafeez.org என்ற இணைய தளத்திலிருந்து இதை திருடி வெளியிட்டிருக்கிறார்கள். அஹ்மதியா ஜமாஅத்தின் சார்பாக alislam.org என்ற இணைய தளத்தில் இதற்க்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Abdul Hafeez also accuses the Ahmadiyya Muslim Community of altering Islamic fundamentals and the first allegation he makes is in relation to the Islamic credo, the Kalimah:
    Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah', i.e., There is none worthy of worship but God, and Muhammad is His Messenger.
He asserts that Ahmadi Muslims have changed the Kalimah1 by substituting the name of the Holy Prophet of Islam, Hadhrat Muhammadsa with that of Hadhrat Ahmadas, the Founder of the Ahmadiyya Muslim Community.2 Hence he alleges that, God forbid:
    'The kalimah of Qadianis is There is no God but Allah and Ahmad is His messenger. Note: Ahmad has been substituted for Muhammad. The illustrated booklet AFRIKA SPEAKS issued on the occasion of the tour of Africa by Mirza Nasir Ahmad Qadiani contains a photograph of Ahmadiyya central mosque, Nigeria, which has this Kalima written on it.'3




The author of Two in One also includes an alleged photo of the mosque at Ijebuode in Nigeria on which this altered Kalimah is stated by him to have been written.
Now, any intelligent man who studies this photograph with honesty would agree that the disputed word in the context of this Kalimah is Muhammadsa and not Ahmadas. It is an established fact that Arabic calligraphy has adopted numerous forms throughout the length and breadth of the Islamic world and the Islamic credo at the entrance of the Ahmadiyya Central Mosque at Ijebuode, Nigeria has been written in a traditional style of calligraphy adopted by the people of the local area which requires the first alphabet mim, the equivalent of the alphabet m to be lengthened. This system of lengthening alphabets is a perfectly normal practice in the system of Arabic calligraphy adopted by Muslims of this region, as for instance, one also observes the taller than normal lines to teeth of the alphabet sn in the letter Rasul.
In this particular instance, the first alphabet mim or m has thus been first lengthened upwards and then brought down to join the second alphabet ha or h to make and when these two are joined to the third and fourth alphabets  mim and dal, it reads , i.e., Muhammadsa.
A honest person with even a meager knowledge of Arabic writing would never express an opinion that the disputed word in the above credo does not represent Muhammadsa on account of the fact that in Ahmad, the first two alphabets  Alif or A and ha or h are not joined together but stand separately and hence, the name Ahmad is written thus . This is evident from Abdul Hafeez's own book where he states that the Kalimah of the Ahmadi Muslims is, God forbid:




PHOTOCOPY OF ALLEGED KALIMAH OF AHMADI MUSLIMS WRITTEN IN ARABIC BY ABDUL HAFEEZ. VIDE. TWO IN ONE, P.22
One would observe that in this Arabic version of the alleged Kalimah of Ahmadi Muslims, the first alphabet of the name Ahmad, i.e.,  Alif is separated from the second alphabet, ha. Now, if the first two alphabets, i.e., mim and ha in the picture of the Kalimah written on the Ahmadiyya Central Mosque at Ijebuode, Nigeria were to be separated and, for the sake of an argument, it was accepted that the first alphabet in the picture is not  mim for Muhammad but  Alif for Ahmad, then the word would read  i.e., Al Hamd and not Ahmad. This credo would then, God forbid, read:




SLIGHTLY ENLARGED COPY OF THE PICTURE IN ABDUL HAFEEZ'S PUBLICATION TWO IN ONE, P.23 WITH THE FIRST TWO ALPHABETS OF THE DISPUTED WORDS SEPARATED

In English Transliteration, this would read as, God forbid: Laa 'ilaaha 'il-lal-laah al Hamd-Rasuu-lullaah. A Kalimah of this nature would not make any sense at all since the Arabic word at Hamd means all praise and Hamd, praise of God.
Other evidence contained within this photograph establishes that the name here is Muhammad and not Ahmad, as for instance, the placing of the diacritical marks and also the existence of above min of Muhammad. If the name in the above photograph was Ahmad, then this particular diacritical mark would have been absent because it is not used in writing Ahmad. It is, therefore, thoroughly dishonest of Abdul Hafeez to attempt to manipulate this perfectly Islamic credo written on the entrance of the Ahmadiyya Muslim mosque in question to allege that it reads.
If Ahmadi Muslims had changed their Kalimah and substituted Ahmad for Muhammad, then they would not have the Kalimah with Muhammad written on their mosques throughout the world. Nor would the Pakistan Government have to employ its police to erase the Kalimah ,with Muhammad an integral part of it, from the fascia of numerous Ahmadiyya Muslim mosques in Pakistan in the wake of Ordinance XX of 1984 after Ahmadi Muslims had refused to erase it with their own hands. An evidence of one such desecration of the Islamic Kalimah by the Pakistan Police under instructions of Zia ul Haq's junta is presented below.




A PAKISTANI POLICE CONSTABLE ERASING THE NAME OF HADHRAT MUHAMMADsa FROM THE KALIMAH ON THE FASCIA OF THE AHMADIYYA MOSQUE AT SIR SHAMSHEER ROAD, FAISALABAD IN PAKISTAN
The fact that Ahmadi Muslims have never ever recited any other Kalimah except 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuulullaah' is also evident from the number of cases registered against them in Pakistan, the charge sheet of every one of which specifies the alleged offense as recitation of or wearing the badge of the Kalimah 'Laa 'ilaahaa 'il-lal-laah Muhammadur-Rasuulullaah.' If the Kalimah of the Ahmadiyya Muslim Community had, God forbid, substituted Muhammad with Ahmad then there would be absolutely no reason for these Ahmadi Muslims to be charged under Ordinance XX of 1984 enacted by the military regime of the Zia ul Haq. Nor any reason for them to be punished under Amendment of the Pakistan Penal Code [Act XLV of 1860], Additions of New Section 298C. One states that because the Ordinance requires that any member of the Ahmadiyya Muslim Community
    'who, directly or indirectly, poses himself as a Muslim, or calls, or refers to his faith as Islam' and who 'by words, either spoken or written, or by visible representation, or any manner whatsoever outrages the religious feelings of Muslims, shall be punished.'
There would, however, be absolutely no reason for these Muslims to feel outraged if Ahmadi Muslims so charged in Pakistan did not recite the Kalimah of which 'Muhammadur-Rasuu-lullaah' is an integral part since in reciting any other Kalimah except that of 'Muhammadur-Rasuu-lullaah,' they cannot be deemed to pose as Muslims.
In view of these facts which are a part of Pakistani history, one would ask Abdul Hafeez as to why should Ahmadi Muslims substitute their Kalimah and demonstrate it outside their mosque in Nigeria where the government does not penalize it for its beliefs and yet, in a country like Pakistan where they are threatened with severe penalization, they insist on proclaiming the Islamic Kalimah to which the government takes exception? The Kalimah written at the Ahmadiyya Central Mosque, Ijebuode in Nigeria is positively 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.' and irrespective of how Abdul Hafeez proposes to beguile his readers into believing otherwise, the fact will remain that Ahmadi Muslims know and recite the only Kalimah taught to them by Hadhrat Muhammadsa which is: 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.' Any reasonable man who considers this false charge against them to the effect that they have substituted the name of Hadhrat Muhammadsa with that of Hadhrat Ahmadas, would - in the light of the persecution being suffered by them in Pakistan for reciting and wearing the Islamic Kalimah badges - seriously think about the wisdom of them publicizing such a substituted Kalimah in a country where they command extraordinary respect as Muslims of the first order. In fact, people like Abdul Hafeez have often demanded that 'Ahmadis stop calling themselves Muslims and others would begin to be tolerant towards them.'5 In view of such offers of tolerance in Pakistan, if Ahmadi Muslims can, as falsely alleged, publicize any other Kalimah other than 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuulullaah' in a country where they are not persecuted for reciting their credo of faith, then what possible reluctance could they have in not declaring the same in Pakistan and rid themselves of the severe hardship to which they are being subjected?
The irony of this entire controversy is that while Ahmadi Muslims have, do and will continue to recite the Kalimat: 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah,' there exists ample evidence within Islamic literature to suggest that many a Muslim saints have substituted the name of Hadhrat Muhammadsa with that of other saints of Islam in the Kalimah. For instance, it is reported that such a Kalimah was pronounced with the name of Hadhrat Abu Bakr Shiblirh which read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Shibli-Rasuu-lullaah,' i.e., 'There is no god but Allah, and Shibli is His Messenger.'6
A Kalimah with the name of Hadhrat Muhammadsa substituted with that of Hadhrat Mu’in ud Din Chishtirh has also been pronounced to read as:
    'Laa 'ilaaha 'il-lal-laah Chishti-Rasuu-lullaah,' i.e., 'There is no god but Allah, and Chishti is His Messenger.'7
This Kalimah has been recorded in a different manner in another instance where it has been substituted to read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Mu'in ud Din-Rasuu-lullaah' i.e., 'There is no god but Allah, and Mu'in ud Din is His Messenger. '8
It is also recorded that once a man came to enter into the discipleship of Hadhrat Khawaja Mu'in ud Din Chishtira and Hadhrat Khawaja Ajmerira asked him to recite the Kalimah but when the man recited the Islamic Kalimat:
    'The Khawaja said to him: Say it like this, There is no god but Allah and Chishti is the Messenger of Allah. The man did so, and the Khawaja accepted the pledge from him and invested him with the robe of honor.'9
Such substitution has also been made in relation to Hadhrat Khawaja Habib Ullah Attarra who instructed a disciple:
    'Lengthen your saying of Ia ilaha, and efface the thought of all others, other than God from the heart. After that, ill-Allah should be stressed, and you should consider me the messenger of Allah.'10
Abdul Hafeez's own spiritual predecessor Maulvi Ashraf Ali Thanvi of the Deoband fame had a Kalimah concocted in his name by one of his disciples which read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Ashraf Al-Rasuu-lullaah,' i.e., There is no go but Allah, and Ashraf Ali is His Messenger.'11
Similarly, an Indian saint Sheikh Sadiq Gangohi told a disciple to pronounce his name in the Kalimah as a messenger of Allah.
He commanded his disciple to say:
    'There is no go but Allah and Sadiq is the messenger of Allah.'12
One would now leave it to Abdul Hafeez to either deny that any such Kalimah with the names of Hadhrat Abu Bakr Shiblirh; Hadhrat Mu'in ud Din Chishtirh and Hadhrat Khawaja Habib Ullah Attarra as well as the Indian saint Sheikh Sadiq Gangohi and the Deoband leader Maulvi Ashraf Ali Thanvi exist in literature published by the non Ahmadiyya Muslim publication houses or else pass his judgement on the people who substituted the name of Hadhrat Muhammadsa in these versions of their Kalimah.
Finally, the author of Two in One begs a question of the Ahmadi Muslims as to whether they recite Ahmad instead of Muhammad in the Kalimah.13 If, as it behove a Muslim, he is prepared to accept the sworn statement of every Ahmadi Muslim, then one can assure him that the official Kalimah of the Ahmadiyya Muslim Community is:
    'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.'
Therefore, there is absolutely no reason for Ahmadi Muslims to recite Ahmad instead of Muhammad in their Kalimah. They have never, in their entire history, recited Ahmad instead of Muhammad in the Kalimah nor do they now recite Ahmad instead of Muhammad and Inshallah, they shall never recite Ahmad instead of Muhammad in the Kalimah. It is now up to Abdul Hafeez to believe what he chooses to believe. But if he rather not accept this assurance as a statement of truth, then one suggest that he stop taking exception to the appellation of the title of a disbeliever and an enemy being applied to him.




REFERENCE

  1. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.5
  2. Ibid., p.22
  3. Ibid.
  4. Ibid., 23
  5. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.89
  6. Hasan, Maulana Shah Gul, Tadhkira Ghausiyya, p.315
  7. Attar, [Hadhrat] Farid ud Din, Fawa’id e Faridiyya, p.83
  8. Haft Aktalab, p.167. vide. Kitab e Mahfooz, p.22
  9. vide. Fawa'id as Salikeen, p.18
  10. Attar, [Hadhrat] Khawaja Habib Ullah. vide. Masnavi Bahr al Irfan, vol.1, p.179
  11. Al Imdad, Safar, 1336 AH, circa. 1918, p.35
  12. Gangohi, Shaikh Sadiq. vide. Al Takashaf an Mahmat al Tasawwuf, p.594
  13. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.36
Read more »

Mar 21, 2012

இந்திய சுந்தந்திரமும் அஹ்மதிய்யா ஜமாத்தும் - 1


சுதந்திரம் என்பது மனிதனின் பிறப்புரிமையாகும். இஸ்லாம் மனித இயல்புக்கேற்ற மார்க்கமாகும் எனவே இஸ்லாம் மனிதனின் இந்த உரிமையையும் பாதுகாத்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சுதந்திரமும் ஒன்றாகும் மார்க்க உரிமைக்காகவும், மனசாட்சி உரிமைக்காகவும், நாட்டுரிமைக்காகவும் குரல் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். இஸ்லாத்தின் எதிரிகளோ தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மற்றவர்கள் மீது திணிக்க முயன்றார்கள். அந்த எதிரிகள் பலவந்ததினாலும், பெரும்பான்மை என்ற ஆனவத்தினாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் எந்தக் குறையையும் விட்டுவைக்கவில்லை.

அத்தகைய காலத்தில் இஸ்லாத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் இறை கட்டளைக்கிணங்க 'மார்கத்தில் எந்த பலவந்தமும் இல்லை' (2:258) என்பதையும், 'இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்துள்ளதாகும். எனவே எவர் விரும்புகிறாரோ அவர் ஏற்றுக் கொள்ளட்டும். எவர் விரும்புகிறாரோ ஏற்றுக் கொள்ளட்டும் எவர் விரும்புகிறாரோ மறுக்கட்டும்' (18:30). அது அவருடைய விருப்பத்தைப் பொறுத்தது என்பதையும் அறிவித்தார்கள். ஆனால் அத்துடன் நாட்டுப்பற்று ஈமானை (இறை நம்பிக்கையை) ச் சார்ந்தது என்ற போதனையும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மார்க்கம் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், நாட்டு சுதந்திரம் ஆகியவற்றை ஒப்புக்கொள்வதுடன் வெளிப்படையான அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவும் எத்தகைய செயல்முறை திட்டத்தை எடுத்துரைத்துள்ளதென்றால், அதன் விளைவாக அடிமைகளுக்குப் படிப்படியாக சுதந்திரம் கிடைத்துக் கொண்டே சென்றது. கடைசியில் தனிநபர் அடிமைத்தனமும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இஸ்லாம் தனிநபர் அடிமைத்தனத்தை ஒழித்தது மட்டுமல்லாமல், மனித சமூகத்தை சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற அடிமைத்தனத்திலிருந்தும் விடுவித்துள்ளது. உண்மையான தூய தௌஹீதில் மக்களை நிலை நிறுத்த செய்வதும், தௌஹீதின் மூலமாக எல்லா மனித குலத்தையும் ஒற்றுமை சகோதரத்துவம் என்ற மணியில் கோர்ப்பதும் முழு உலகிலும் எலாவிதமான அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்தெறிந்து, சுதந்திரத்தையும், மனிதனுக்கு சம உரிமையையும் நிலை நாட்டுவதற்காகவும், எல்லா விதமான ஆதிக்கத்தின் வழியினை மூடுவதற்காகவும் பாடுபட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்தான்.

அஹ்மதிய்யா ஜமாத்தின் தோற்றுனர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் தோற்றத்திற்கும், அஹ்மதிய்யா ஜமாஅத்தை நிலை நாட்டியதற்கும் உள்ள காரணம் இஸ்லாத்தைப் புதுப்பிப்பதும், மார்க்கத்தை உயிரூட்டுவதுமாகும். அன்னார் கூறுகிறார்கள்:

"இறைவன் இந்த காலத்தை இருளடைந்ததாகக் கண்டு, உலகம் அறிவீனத்திலும், இறை மறுப்பிலும், இணை வைப்பதிலும் மூழ்கியதாகக் கண்டு, இறை நம்பிக்கை, இறையச்சம், நேர்வழி ஆகியவை அழிந்து போயிருப்பதைக் கண்டு, திரும்பவும் உலகில் அந்த இறைவன் ஞானத்தின் செயலின், நல்லொழுக்கத்தின், இறை நம்பிக்கையின் உண்மையை நிலைநாட்டுவதற்காக என்னை அனுப்பியுள்ளான்." (ஆயினே கமாலாத்தே இஸ்லாம் பக்கம் : 251)

அவ்வாறே அவர்கள் இன்னோரிடத்தில் கூறுகிறார்கள்:

"நான் இந்த எல்லா தவறுகளையும் அகற்றி, உண்மையான இஸ்லாத்தை நான் மீண்டும் உலகில் நிலை நாட்டவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இறைவன் என்னை நியமித்துள்ளான்" (அஹ்மதி, கைர் அஹ்மதி மேன் கியா பர்க் ஹே. பக்கம் :16)

இமாம் மஹ்தியாகவும், வாக்களிக்கப்பட்ட மசீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இஸ்லாத்திற்கு உயிரூட்டுவதற்காகவும், இஸ்லாமிய ஷரியத்தை நிலை நாட்டுவதற்காகவும் இறைவனால் நியமிக்கப்ப்பட்டிருக்கும் போது, இஸ்லாம் எடுத்துரைக்கும் சுதந்திரம் பற்றிய கொள்கைக்கு எதிராக அவர்கள் வேலை செய்வது சத்தியமே இல்லை. எனவே இன்று எவராவது, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் ஸ்தாபகர் மீதோ அல்லது அஹ்மதிகள் மீதோ, இவர்கள் இந்திய சுதந்திரக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்றால், அது அவருடைய முட்டாள்தனமாகும். இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் தம் முகத்திரை கிழிந்துவிடக் கூடாது என்ற பயத்தினால் கூறுகிறார்கள்.

இதை நாம் ஏன் தெளிவுபடக் கூறுகிறோம் என்றால், 1974 இல் 'ராபிததுல் ஆலமில் இஸ்லாமியா' மாநாட்டில் அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அஹ்மதிய்யா ஜமாஅத் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கட்டுப் பட்டிருந்த காரணத்தால் அது இந்திய சுதந்திரக் கொள்கைக்கு எதிராக நின்றது என்ற குற்றச்சாட்டு இந்தியாவிலுள்ள முஸ்லிம் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறப்பட்டது. இந்தியாவை அடிமைத்தனத்தில் பூட்டிவைப்பதையும், எப்பொழுதும் ஆங்கிலேயர்களே இந்தியாவை ஆல்வதியுமே அஹ்மதிய்யா ஜமாஅத் விரும்பியது என்ற தவறான ஒரு கருத்தை இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய பொது மக்களுக்கும் எடுத்துரைப்பதே இந்த முஸ்லிம் தலைவர்களின் நோக்கமாகும்.

ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறானதும், இட்டுக்கட்டுமாகும். அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நூல்களைப் படிக்காத, அதன் கொள்கை கோட்பாடுகளை அறவே தெரியாதவர்களாக இருக்கும் பத்திரிகையாளர்கள்தான் இவ்வாறு கூறுகிறார்கள். அல்லது அஹ்மதிய்யத்தின் எதிரிகள் கூறும் எமாட்டுகளை கொண்ட தலையங்கங்களினால் அவர்கள் எடுத்த தவறான முடிவாகும். இன்னும் சிலர் பொதுமக்களை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்திற்கெதிராகத் தூண்டி விடுவதற்காகவும் அவ்வாறு உண்மைக்கு மாறான கருத்துகளை எழுதுகின்றனர்:

1974- க்குப் பிறகு இன்று வருடங்கள் ஆகின்றன. இந்திய ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அஸ் அத்மதனி இந்தப் பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளார். காரணம், இந்தியாவில், அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் வளர்ச்சி அவருக்கு பயத்தை தந்துள்ளது. எனவே அவர் சென்றகால ஆலிம்களின் அடிச்சுவற்றைப் பின்பற்றியவாறு, அஹ்மதியா ஜமாத்தின் வளர்ச்சியை தடுக்க முனைகிறார். அதற்காக அவர் மஜ்லிசே தஹபுஸே கதமே நுபுவத்', அமைப்பின் ஏற்பாட்டில் தில்லி ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் பெரிய மாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மாநாட்டைச் சாக்காக வைத்து அதனை அவர் அரசியலாக்க முயன்றார். ஆனால் அதன் படுதோல்வியை உலகம் கண்டுகொண்டது. முஸ்லிம் பத்திரிகையாளர் கூட்டத்தில் தன்மானமுள்ள, உண்மையை நாடும் பத்திரிகையாளர்கள் அதற்கு எதிராக விமர்சனம் செய்தார்கள்; இது பொருத்தமற்ற, முட்டாள்தனமான நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்டார்கள்.

இதில் நூதனமான விஷயம் என்னெவென்றால், அஹ்மதிய்யா ஜமாத்தை 'முஸ்லிம் சிறுபான்மையினர்' என அறிவிக்க வேண்டும். என்ற ஒரு முட்டாள்தனமான கோரிக்கையை இந்த மாநாட்டில் இவர்கள் வைத்தனர்.

இந்தக் கோரிக்கையைப் படித்ததும். நம்மையுமறியாமல் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதில் அவர் இவ்வாறு கூறுகிறார். "குறுகிய மனத்தைக் கொண்ட முஸ்லிம் என்னை காபிராகக் கருதுகிறார். பொதுவானக் காபிர்கள் (மாற்று மதத்தினர்) என்னை முஸ்லிமாகக் கருதுகிறார்கள்."

அவர்களின் இந்தக் கோரிக்கையே அவர்களின் தோல்விக்கு சான்றாகும். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஐம்பது ஆண்டு காலக் கட்டத்தில், அஹ்மதியா ஜமாத்திற்கெதிரான ஆதாரங்களை எடுத்து வைப்பதிலும், சான்றுகளைத் தருவதிலும், இஸ்லாமிய நடத்தைகளை எடுத்துக் காட்டுவதிலும் அவர்கள் திராணியற்ற நிலையில் இருக்கின்றார்கள். எனவே பாமர முஸ்லிம்களை அஹ்மதிகளுக்கு எதிராக இவர்கள் தூண்டிகொண்டிருக்கிரார்கள். ஆயினும் அல்லாஹ்வின் அருளினால் ஒவ்வொரு ஆண்டிலும் இலட்சக்கணக்கான மக்கள் அஹ்மதிய்யா ஜமாத்தில் இணைந்து வருகிறார்கள்.

இந்தத் தோல்வியை அவர்கள் மறைப்பதற்காக அஹ்மதியா ஜமாஅத் இந்தியக் கொள்கைக்கு எதிராக இருந்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் ஒருபுறம் அரசாங்கத்திற்கு அஹ்மதியா ஜமாதிற்கெதிரான தப்பெண்ணங்களை உருவாக்குகிறார்கள். மறுபுறம், பெரும்பான்மையாக விளங்கும் இந்துக்களை தூண்டிவிடுகிறார்கள். ஆனால் இவர்களுடைய இந்த முயற்சியும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அஹ்மதியா ஜமாஅத் ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற ஜமாஅத் என்பதையும், அஹ்மதி முஸ்லிம்களின் ஒழுக்கம் மிகவும், தூய்மையானதும் கலங்கமற்றதாகும் என்பதையும் இந்திய அரசாங்கமும் பெரும்பாலான இந்தியர்களும் நன்கு அறிவார்கள்.

ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டுமென அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஏன் அறிவுரை வழங்கினார்கள் என்றால் அதற்குரிய பதில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் குரானின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்குமாறு கூறுவதுடன், ஆட்சியில் உள்ளவருக்கும் கட்டுப்பட்டு நடக்குமாறு கூறுகிறது, திருக்குரானின் இந்தக் கட்டளைப்படி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டுவருகிறது. இனியும் செயல்பட்டு வரும். இன்ஷா அல்லாஹ். இது வெறும் வாயளவில் சொல்லப்படும் கொகையல்ல. அஹமதிய்யா ஜமாஅத் 125 ஆண்டுகளும் இதற்கு சாட்சியாக விளங்குகின்றது. (international) அளவில் வளர்ந்துள்ளது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் அஹ்மதி முஸ்லிம்கள், சட்டப்படி தமது அரசுக்கு கட்டுப்படுபவர்கலாகத் திகழ்கின்றார்கள்.

இதே கொள்கையும், செயல்பாடும்தான் ஆங்கிலேய அரசாங்கம் இருந்த நேரத்திலும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தில் இருந்தது. இந்தய சுதந்திரத்திற்குப் பிறகும் அவ்வாறே இருக்கிறது. அஹ்மதி முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களைப் போன்று ஒரு போதும் இரட்டை வேடமாக நடந்துகொள்வதில்லை.

அந்நியர்கலிடமிருந்து தமது நாட்டை விடுவிப்பதும், தமக்கு ஆகுமான உரிமைகளைப் பெறுவதும், அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் பார்வையில் மிகவும் முக்கியமானதுதான். அவ்வாறு விடுதலை பெறுவது, சமுதாயத்தின் நல்லொழுக்க, ஆன்மீக முன்னேற்றங்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், தற்காப்புடன் வாழ்வதற்கும் காரணமாக அமையலாம். ஆயினும் அதற்காக நாட்டில் கூச்சல், குழப்பம், சமுதாய சொத்துக்களுக்கு நஷ்டம் போன்றவை ஏற்பட வழிவகுத்துவிடக் கூடாது என்பதே அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் போதனையும், கலீபாவின் போதனையுமாக இருந்தது.

இந்தக் கொள்கைப் பற்றி அக்கால பத்திரிகையாளர் ஜிஸ்வந்த் சிங் என்பவர் இவ்வாறு கூறுகிறார்:

"தாம் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புத் தர வேண்டுமென்பதும், எவ்விதத்திலும் போராட்டம் செய்வதோ, ஒத்துழையாமை, வரம்புமீறுதல், சட்ட விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது என்பதும் அஹ்மதிகளின் அடிப்படைக் கொள்கைகளிலும், மார்க்க கோட்பாடுகளிலும் உள்ள ஒன்றாகும்."(ஹிந்துஸ்தான் டைம்ஸ் கல்கத்தா 25 டிசம்பர் 1951)

தில்லியை சார்ந்த டாக்டர் சங்கரதாஸ் கூறினார்:

"சட்டத்தைப் பேணி நடப்பதுதான் அஹமதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் கொள்கையும் செயல்முரையுமாகும். நீதிமன்றத்தின் ஆதாரத்தின் படி குற்றத்திலிருந்து தூய்மையானதாக நிரூபணமாகியுள்ளது அஹ்மதிய்யா ஜமாஅத் மட்டும்தான். சென்ற குழப்பங்களிலும் (1947 - இல் நடந்தவை) அஹ்மதிகள் (கொலை, கொள்ளை ஆகியவற்றிலிருந்து) தமது கைகளைத் தூய்மையாக வைத்துள்ளார்கள்." (ஸ்டேட்ஸ் மேன் நாளிதழ் 2 டிசம்பர் 1949)

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெரும் விஷயத்திலும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இதே செயல் முறையைத்தான் கையாண்டது. நிச்சயமாக சுதந்திரம் பெறுவது ஒவ்வொரு மனிதனின் பிரப்புரிமையாகும். ஆயினும் சட்டத்திற்குள் இருந்துகொண்டு அந்த உரிமையைப் பெறவேண்டும்: இல்லைஎன்றால், நமக்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு, சுதந்திர இந்தியாவின் பொதுமக்களும், தமது கோரிக்கைகளை ஒப்புக் கொள்ள செய்வதற்காக இதே மாதிரியான போராட்டங்களை நடத்துவார்கள் என்பதை அஹ்மதி முஸ்லிம்கள் அன்றைய காலத்தில் இந்திய மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.

இன்று நாம் அதன் விளைவுகளை நம் கண்களால் கண்டு வருகிறோம். தினசரி போராட்டங்கள், கடையடைப்புகளால் நாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுகின்றன. மேலும் அந்த நஷ்டங்களின் சுமையும் பொது மக்கள் மீதே விழுகின்றது. இந்த வழிமுறையைத்தான் இந்தியா சுதந்திரம் பெரும் போதும் அஹ்மதிய்யா ஜமாஅத் விரும்பவில்லை. மற்றபடி, இந்திய சுதந்திரம் விஷயத்தில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத், எந்த இயக்கத்தை விடவும், அரசியல் பிரிவை விடவும் பின்தங்கியிருக்கவில்லை.

அஹமதிய்யா ஜமாஅத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்கள், சுதந்திரத்தைப் பெறுவதற்காக, இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து தமது தமது குறிக்கோளைப் பெறவேண்டுமென அறிவுரை கூறினார்கள். முஸ்லிம்கள் காங்கிரசுடன் சேராமல், முஸ்லிம் லீக் என்று தனக்கென தனிப்பட்ட அரசியல் பிரிவை ஏற்படுத்தியபோது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இதனை விரும்பவில்லை. இவ்வாறு ஒன்று சேர்ந்த சக்தி பிரிந்துவிடும். மேலும் அமைதி, சமாதானம் பற்றிய விஷயத்தில் விரும்பத்தகாத பிரச்சனைகள் உருவாகிவிடும் என்பதால்தான் அன்னார் இதனை விரும்பவில்லை.

இதன்படி 1908 ஆம் ஆண்டில், பை காமே ஸுல்ஹ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள். (இந்த நூல் 'சமாதானத் தூது') என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்துள்ளது) அதைப் படிக்கும் போது, இந்தியாவில் 39 வருடங்களுக்குப் பிறகு ஏற்படப்போகும் நிலைமைகளை ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள் அன்றே தமது தொலை நோக்குப் பார்வையினால் புரிந்திருந்தார்கள் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக ஒருவன் இன்னொருவரின் சான்றோர்களை மதிப்போம். எனவும் அந்தப் பெரியவர்களின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்வோம் எனவும் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு அந்நூலில் வலியுறுத்திக் கூறும்போது இவ்வாறுக் குறிப்பிட்டார்கள்:

"அன்பிற்குரியவர்களே! சமாதானத்தைப் போன்று எதுவுமில்லை. வாருங்கள் நாம் இந்த உடன்படிக்கையின் மூலம் ஒன்றுபடுவோம். ஒரு சமுதாயமாக மாறுவோம். ஒருவருகொருவரை மறுப்பதனால் எந்த அளவுக்கு பிரிவினை ஏற்பட்டுவிட்டது என்பதையும், நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் நீங்கள் பார்கிறீர்கள். வாருங்கள் ஒருவரையொருவர் உண்மைப்படுத்துவதில் எந்த அளவுக்கு அருள்கள், அபிவிருத்திகள் இருக்கின்றன என்பதையும் இப்போது சோதித்துப் பாருங்கள்." (பைகாமே ஸுல்ஹ பக்கம் 17, 18)
முஸ்லிம்களிடம் ஏற்பட்ட தவறு என்னவென்றால், இந்துக்களின்  இந்த முயற்சியில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் , நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம் என எண்ணினார்கள். மேலும் இந்த எல்லாமுயற்சிகளுக்கும் என்தாவது பலன் இருக்கிறதென்றால். அது இந்துக்களுக்குத்தான் கிடைக்கும்: முஸ்லிம்களுக்குக் கிடைக்காது எனக் கருதினார்கள். எனவே, முஸ்லிம்கள் கலந்துகொல்வதிளிருந்து விலகி இருந்ததுமட்டுமல்லாமல் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து, இந்துக்களின் முயர்த்திகளுக்கு தடைக்கல்லாக நின்றார்கள். அதனால் சீர்குலைவு அதிகமாகிவிட்டது. 

அன்னார் தொடர்ந்து கூறுகின்றார்கள்:
'முஸ்லிம்கள், தமக்கு ஆகுமான உரிமைகளைக் கோரும் விஷயத்தில் இந்துக்களுடன் சேர்ந்துகொள்ள என் பயப்படுகிறார்கள்? என்பதையும், இன்றுவரை காங்கிரசுடன் இணைவதிளிருந்து முஸ்லிம்கள் என் மறுத்துவருகிறார்கள் என்பதையும், பிறகு கடைசியில் ஏன் இந்துக்களின் கருத்தை சரியானது என உணர்ந்து அவர்களைப் பின்பற்றினார்கள் - ஆயினும் தனித்து நின்றார்கள் என்பதையும், அவர்களுக்குப் போட்டியாக ஏன் முஸ்லிம் லீக் என்ற கட்சியை உருவாக்கினார்கள். ஆயினும் (இந்துக்களாகிய) அவர்களின் தீங்குகளை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் ஒவ்வொரு நபரும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ( பைகாமே ஸுல்ஹ பக்கம் 12 ) 

எனவே, இந்தியாவுக்கு உண்மையான கண்ணியத்திற்குரிய சுதந்திரம் வேண்டும் என்பதுதான் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் விருப்பமாக இருந்தது. ஏனெனில் எந்த ஒரு நாடு அல்லது சமுதாயம் பல வருடங்களாக அடிமை என்ற சங்கிலியால் பினைக்கப்பட்டிருக்குமோ அதில் அநியாயங்களும், தீய நடத்தைகளும் உருவாகிவிடுகின்றன என்பதை அன்னார் நன்கு அறிந்திருந்தார்கள். இதன்படி யூதர்கள் அடிமையாக இருந்த காலத்தை உதாரணமாக குறிப்பிடும்போது கூறுகிறார்கள்: 


"அவர்கள் (யூதர்கள்) 400 வருடங்களாக அடிமைத்தனத்தில் இருந்தனர். அதனால் அவர்களிடம் தரங்கெட்ட நிலையம், அநியாயமும் அதிகமாக உருவாகியிருந்தன." ( பைகாமே ஸுல்ஹ பக்கம் 32) 

இனி இந்திய விடுதலைக்காக ஹஸ்ரத் மிர்ஸா பசீருத்தீன் (ரலி) அவர்கள் தியாகங்கள் பற்றி பார்க்கலாம்.
Read more »