ஒரு பொய் அது பல்லாயிரம் தடவை கூறப்பட்டுகொண்டிருந்தாலும் அது மெய்யாகாது என்பது உண்மையாயிருந்தும் கடந்த நூறாண்டுகாலமாக அஹ்மதிய்யா ஜமாத்திற்க்கும், அதன் தூய ஸ்தாபகருக்கும் எதிராக வானத்தின் கீழ் மிகப்பெரும் குழப்பவாதிகள் என்றும், கேட்ட ஜந்துக்கள் என்றும், எம்பெருமானார்(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இன்றைய ஆலிம்சாக்கள் தொடர்ந்து பொய் கூறிக்கொண்டு அல்லாஹ்வின்- "லஹ்னதுல்லாஹி அலல் காதிபீன்" என்ற திருவசனத்திற்க்கினங்க இறைவனது சாபத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.இதற்க்கு உதாரணமாக ஆகஸ்ட் மாத ஜமாத்துல் உலமா ஏட்டில் அதன் ஆசிரியர், பசுங்கதிர் மாத ஏட்டில் எம். கே. இ . மௌலான என்பவர் "ஆங்கிலேயர் தோற்றுவித்த நபி" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு புழுகு மூட்டையை மிகுந்த நன்றியுடன் எடுத்து சேர்த்து இருக்கின்றார், "ஆம்" ஒரு பொய்யருக்கு மற்றொரு பொய்யரின் திலகம் ஒத்தாசை செய்து ஊக்கமும், ஆக்கமும் அளித்திருக்கின்றார்.
எம்பெருமானார்(ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் இறுதி வேதமாக அருளப்பட்டதினால் இதற்குப் பிறகு புதிய ஒரு சீர்திருத்தமோ, புதிய தூதுத்துவமோ தேவையாகிவிட்டது என்று ஆசிரியர் வரைகின்றார். அவ்வாறென்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றிய சீர்திருத்தவாதிகளான, இமாம்கள், முஜத்தித்மார்கள் மற்றும் அவ்லியாக்கள் அனைவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள். "நவூதுபில்லாஹ்" அதாவது மௌலானாவின் திருப்பார்வையில் இவர்கள் அனைவரும் பொய்யர்கள் ஆவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு புதிய ஒரு ஷரியத்தோ முகம்மதியாவிலிருந்தும் மாறுபட்ட ஒரு நுபுவத்தோ தோன்றாது. அஹ்மதியா இயக்கத்தின் ஸ்தாபகர் அப்படிப்பட்ட ஒரு வாதம்புரியவுமில்லை.
ஷரியத் பூரணமாக இருந்தும் நபி (ஸல்) மூலமாக நபித்துவம் முழுமைப் பெற்றிருந்தும் இறுதி காலத்தில் இஸ்லாத்தின் அதன் பெயரும், திருமறையில் அதன் எழுத்தும் மட்டும் எஞ்சி இருக்கும் என்றும், மௌலானாவைப் போன்ற ஆலிம்கள் வானத்தின் கீழ் மிகப் பெரும் கேட்ட ஜந்துக்களாக இருப்பார்கள் என்றும் எல்லாவிதமான குழப்பங்களுக்கும் அவர்களே உறைவிடமாக இருப்பார்கள் என்றும், நபி(ஸல்) அவர்களின் உன்னத சமுதாயத்தை சார்ந்தவர்கள் யகூதி, நசராக்கள பின் தொடர்வார்கள் என்றும், முஸ்லீம்கள் 73 பிரிவுகளாக பிரிவார்கள் என்றும், அப்போது 14 ஆம் நூற்றாண்டில் இமாம் மஹ்தி தோன்றுவார்கள் என்றும், அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சீடராக, உம்மத்தி நபியாக இருப்பார் என்றும் மிகவும் விளக்கமான முறையில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பல ஹதீதுகளில் ஏன் கூறியிருந்தார்கள்.
இறைவன் புறமிருந்து தூதர்கள் தோன்றும் போதெல்லாம் நிராகரிப்போர்கள் அவர்களுக்கு எதிர்ப்புகள் தெரிவித்தார்கள் அதைப்போன்றே இக்காலத்தில் தோன்றிய இமாம் மஹ்திக்கு எதிராகவும் குழப்பவாதிகளான கெட்ட ஜந்துக்கள் பயங்கரமான குழப்பங்களும், கிளர்ச்சிகளும் உண்டாக்கி பொய்பிரச்சாரங்கள் மூலமாக தப்பெண்ணங்களை ஏற்படுத்தி உண்மையை ஒப்புக்கொள்வதில் இருந்தும் மக்களை விளக்கிக்கொண்டிருக்கிரார்கள்.
அந்த சூழ்ச்சிகளில் ஒன்றுதான் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) "ஆங்கிலேயர்களால் தோற்று விக்கப்பட்ட நபி" என்ற பொய் குற்றச்சாட்டு இந்தப்பொய் குற்றச்சாட்டுக்கு கடந்த நூறு வருடங்களாக அஹ்மதியா ஜமாஅத் பதில் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இறையச்சமற்ற இவர்களுக்கு இந்த பதில்கள் எருமை மாட்டின் முன்னாள் வீணை வாசிக்கின்றதற்கொப்பாகும்.
ஹசரத் அஹ்மத்(அலை) அவர்கள் தமது வருகையின் நோக்கத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.
நான் சிலுவையை உடைப்பதற்கும், பன்றியை கொள்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.(பத்ஹே இஸ்லாம் பக்கம் 17 )
"கிறிஸ்தவர்களுடைய கடவுளை இனியாவது மரணிக்க செய்யுங்கள். எவ்வளவு காலம்தான் நீங்கள் அவரை கடவுள் ஆக்கிக் கொண்டிருப்பீர்கள், இதற்க்கு ஒரு முடிவில்லைல்யா? (இசாலே ஔஹாம், பக்கம் 469)
இராணி விக்டோரியாவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ஒரு கடிதம் எழுதி அதைப் புத்தகமாக வெளிப்படுத்தினார்கள். அதில் இவ்வாறு வரைகிறார்கள்.
"தாங்கள் பாவமன்னிப்புக் கோறவேண்டும் மகனோ, பங்காளியோ இல்லாத ஏக இறைவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும். இந்த நாட்டை ஆளுகின்ற ராணியே! தாங்கள் இஸ்லாத்தை தங்களின் மார்க்கமாக ஏற்ற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தாங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். (ஆயினயே கமாலாத்தே இஸ்லாம். பக்கம். 522) ராணி விக்டோரியாவை இஸ்லாத்தை ஏற்குமாறு கூறும் ஒருவர் எவ்வாறு பிரிட்டிஷ் காரர்களால் நியமிக்கப்பட்ட ஒருவராக இருக்க முடியும்.
கிருஸ்தவ மார்க்கத்தை பின்பற்றும் ஆங்கிலேயர்களுக்கு, சிலுவை உயிரோடு ஒன்றிவிட்ட ஒன்றாகும். அதனை தகர்க்க வந்துள்ளதாக கூறும் ஒருவர், ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவராகவோ அவர்களுடைய ஆதரவாளர்களாகவோ எவ்வாறு இருந்திருக்க முடியும்? மேலும் கிருஸ்தவ கடவுள் மரணித்துவிட்டதாக கூறும் ஒருவர் எவ்வாறு ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்திருக்க முடியும்? ஆனால் கிறிஸ்தவர்களின் கடவுளாக கருதும் இயேசு, வானத்தில் இன்றும் உயிருடன் இருக்கிறார் என்று கூறும் இந்த ஆலிம் சாக்களின் வர்க்கம் வேண்டுமானால் ஆங்கிலேயர்களின் வாரிசாக இருந்திருக்கலாம், ஆங்கிலேய ஆட்சியாளர்களை குறித்து ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து இதுதான்.
"தற்போது எங்களுக்கு எதிராக எழுதுகோல் எனும் வாள் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆட்சேபனை எனும் அம்புகள் எங்களை நோக்கி எறியப்படுகின்றன. எனவே இறைவனின் புனித மார்க்கமான இஸ்லாத்தைக் காப்பாற்றுவதற்கும், நபி(ஸல்) அவர்களின் புனிதத் தன்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும் நாம் நமது எழுதுகோலைப் பயன்படுத்துகின்றோம்.
இதற்கான் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் வழிங்கியுள்ள ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இறைவன் நம்மை வாழவைத்திருக்கின்றான். அதற்காக அந்த மேலான இறைவனுக்கு நாம் நமது நன்றியை பிரகடனப்படுத்தும் போது இவர்கள் அதனை ஆட்சேபிக்கிறார்கள். நாம் யாரையும் சலுகைக்காக எதிர்பார்த்து எதையும் கூறவில்லை. ஆனால் நமது பிரச்சாரத்திற்கு எவ்விதத் தடையும் விதிக்காமல் அதற்க்கான முழு உரிமையும் வழங்கியுள்ள ஓர் ஆட்சிக்கு நாம் நன்றி கூறாமல் இருக்க முடியாது. (மல்பூசாத் பக்கம் 232)
இங்கு மத விஷயத்தில் ஆங்கிலேய அரசு பாரபட்சமின்றி நடந்ததையே ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்று ஆகாள மௌலவி மார்களே தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
தாருல் உலூம் நத்வதுல் உலமாவிளிருந்து கீழ் வருமாறு ஒரு மார்க்கத் தீர்ப்பு எனும் பத்வா விடுக்கப்பட்டிருந்தது. "ஆலிம்களுடைய ஒரு மகத்தான பொறுப்பும், கடமையும், அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் அருள்களை நன்குணர்ந்து இந்த ஆட்சிக்கு கீழ்படிந்து நடப்பதே நன்மை பயக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாகும்.(அன் நத்வா, லக்னோ ஜூலை 1908)
அஹ்லுஹதீதின் தலைவர்களில் ஒருவரான மௌலவி முஹம்மத் ஹுசைன் பட்டாலவி இவ்வாறு கூறியிருந்தார்:
" இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடுவது (ஹராம்) விலக்கப்பட்டதாகும்" (இஷா அத்துசுன்னா வா. 6 பக்கம் 10)
இவைகளைப் போலவே, ஹஸ்ரத் நவாப் சித்திக் ஹசன்கான் - மௌலவி நதீர் ஹுசைன் முஹத்த்தாஸ் தெஹ்லவி, சர் செய்யது அகமதுகான், மௌலவி நதீர் அஹ்மத் ஷம்சுல் உலமா போன்ற ஆலிம்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முஸ்லிம்கள் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்கத் தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். மேற்கண்டவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் துரோகிகள் என்று இவர்கள் கூறுவார்களா? ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட நபி என்று குற்றம் சாற்றுகின்ற மௌலானாவின் கவனத்தை ஒரு திருமறை வசனத்தின் பக்கம் ஈர்க்க நாடுகிறேன்:-
இறைவன் கூறுகின்றான்: எவன் நம் மீது பொய்யாக குற்றம் சாட்டி நம்மால் அனுப்பப்பட்டவன் என்று பொய்வாதம் செய்கிறானோ அவனை நாம் வலது கரத்தைப் பிடித்து அவனது உயிர் நாடியை அறுத்து விடுவோம். (௬௯:௪௬,௪௭) "எவன் இறைவன் மீது பொய்குற்றம் சாட்டி அல்லது அவனது வசனத்தை பொய்யாக்கு கின்றானோ, அவனை விட பெரிய துரோகி யார்? துரோகிகள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்" என்றும் இறைவன் கூறுகின்றான்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் வாதம் செய்ததிலிருந்து இன்றுவரை அவருக்கும் அவருடைய ஜமாத்திற்க்கும் மிகப் பெரிய வெற்றிதான் கிடைத்து கொண்டிருக்கிறது. இன்று உலகெங்கும் இந்த ஜமாஅத் பரவிக்கொண்டிருக்கிறது. அவர் ஆங்கிலேய ஆட்சியால் தோற்றுவிக்கப்பட்ட நபி என்றால் அவருக்கு இந்த வெற்றி எப்படி கிடைத்திருக்கும், இறைவன் என்ன? ஆங்கிலேய ஆட்சியின் முன்னால் சக்தியற்றவனாகிவிட்டானா? அல்லது திருமறையிலுள்ள மேற் குறிப்பிட்டுள்ள வசனம் பொய்யாகி விட்டதா? (நவூது பில்லாஹ்)
ஆங்கிலேயர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றதற்க்காக ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்ததாக மௌலான தனது கட்டுரையில் குற்றம் சாட்டுகிறார். இதுவும் அபாண்டமான ஓர் பொய்யாகும்.
ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் ஜிஹாதை தடை செய்து எந்த அறிக்கையும், போதனையும் தரவில்லை. மாறாக, இக்காலம் வாளால் ஜிஹாது செய்யவேண்டிய காலம் இல்லையென்றே கூறி இருந்தார்கள். இன்று பேனா முனையிலும், மேடை பேச்சுகளாலும் இஸ்லாம் தாக்கப்படுகிறது என்றும், அதே முறையில் நாமும் பதிலடி கொடுத்து இஸ்லாத்தைக் காக்க வேண்டும் என்றும் அதுவே தற்போது செய்ய வேண்டிய ஜிஹாத் என்றும் கூறியுள்ளார்கள்.
அஹ்மதிகள் இதர மதத்தவர்களுடன் அன்பாகவும், நேசத்துடனும், பரிமாருகின்றதையும், அந்ததந்த சமுதாயத்தில் தோன்றியிருக்கும் இறைத்தூதர்களை ஒப்புக்கொல்கின்றதையும், மத வெறி கொண்ட இந்த மௌலானவிற்க்கு பிடிக்கவில்லை. எனவே! காதியானிகள் எந்த சமுதாயத்தோடு வேண்டுமானாலும் இசைந்து செல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார்- நாஸ்திகர்களுக்கு கூட பணிந்து செல்ல தயங்கமாட்டார்கள்" என்றும் குற்றம் சாட்டுகிறார். இது மௌலானாவுடைய உள்ளத்தில் குடிகொண்டிருக்கும, துவேசம், பகைமை, வெறுப்பின் வெளிப்பாடாகும். உலகிலுள்ள எல்லா சமுதாயங்களுக்கும் "ஏன் நாஸ்திகர்களுக்கும் கூட, தனது ரஹ்மானியத் என்ற குணத்தி பிரகனப்படுத்தும் அல்லாஹ்வின் மீதும் இதே குற்றச்சாட்டை சுமத்த மௌலான தயங்க மாட்டார் போலும். பாகிஸ்தான் உருவாவதை மிர்ஸா முஹம்மத் அஹம்மத் இறுதி வரை எதிர்த்தார் என்று மௌலானா கூறுகின்றார் இந்த மிர்ஸா முஹம்மத் அஹம்மத் யார் என்பது மௌலானா தான் கூற வேண்டும். இந்த குர்ற்றசாட்டிற்கு இவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.
"பாகிஸ்தான் உருவானவுடன் காதியானிகள், தலைமறைவாகி, ரப்வா, என்ற பகுதியில் தனித்து வாழ்ந்தனர்" இந்த ஒரே வசனத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் உருவானதும் காதியானிகள் தலைமரைவாகிவிட்டார்கள். ரப்வா என்ற பகுதியில் தனித்து வாழ்ந்தார்கள். பொய் கூருகின்றவனுக்கு மறதி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதுண்டு.
அஹ்மதிகள் தலைமறைவாகிவிட்டால் பிறகு ரப்வா என்னும் தலை நகரம் உண்டாகி தங்களுடையா பிரச்சார பணிகளை எவ்வாறு அவர்களால் தீவிரப்படுத்த முடியும்? பாகிஸ்தான் உருவானதும் அதன் வெளி நாட்டு அமைச்சராகவும், ஐ. நா. சபைக்கு அந்நாட்டின் பிரதிநிதியாகவும், உலகப் புகழ் பெற்ற அஹ்மதியான சர் முஹம்மது சபருல்லாகான் சாஹிபு எவ்வாறு நியமிக்கப் பட முடியும்.
பாகிஸ்தானில் அஹ்மதியா ஜமாஅத் என்பது லெட்சம் நபர்களைக் கொண்ட பெரும் சக்தியாக விளங்கிக்கொண்டிருக்கின்றது உலகம் அறிந்த உண்மை! ஆனால் மௌலானாவின் அபிப்ராயத்தில், அஹ்மதிகள் அங்கே தலை மறைவாக இருக்கின்றார்களாம். இந்த மௌலானா முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார். தனது கட்டுரையின் இறுதியில் இவ்வாறு வரைகிறார்.
"காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என்று உலகத்தின் அனைத்து தேசங்களும் அறிவித்தும் கூட அவர்கள் போக்கில் கொஞ்சமும் திருத்தம் ஏற்படவில்லை.
"இந்த அனைத்து தேசங்களும்" என்று கூறியிருக்கும் தேசங்களைப்பற்றி மௌலான சற்று விளக்கித் தருவாரா? அஹ்மதிகள் முஸ்லிம்களா? இல்லையா என்பதைப்பற்றி அறிவிக்க இவர்களுக்கு யோக்கியதையும் உரிமையும் என்ன இருக்கின்றது? இறைவன் புறமிருந்து இவர்களுக்கு இதற்க்கான அதிகாரம் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கின்றதா? அஹ்மதிகள் இஸ்லாத்தை இவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கவில்லை. மூளை கெட்ட இந்த முல்லாக்களை இஸ்லாத்தின் காவலர்களாகக் கருதவுமில்லை. அவர்கள் இஸ்லாத்தின் துரோகிகளான பயங்கர விஷமிகள் என்பதை இஸ்லாத்தை நமக்கு அளித்த நபி(ஸல்) அவர்களே சொல்லித்தந்திருக்கிறார்கள். "அஹ்மதிகள் மஸ்ஜிதுக்கு செல்வது நோன்பு வைப்பது, இஸ்லாமிய வாழ்வு முறையை பின்பற்றுவது இவைகள் ஒன்றும் "நம்முடைய இந்த மௌலானா விற்கு பிடிக்கவில்லை. அதாவது அஹ்மதிகள் தங்களுடைய மஸ்ஜித்களுக்கு போகக்கூடாது. நோன்பு வைக்கவோ, தொழவோ கூடாது. எவ்வளவு அருமையான சேவைகள் வானத்தின் கீழுள்ள இந்த கெட்ட ஜந்துக்கள் இஸ்லாத்திற்கு செய்கிறார்கள். இஸ்லாத்துடன் எந்த பற்றும் இல்லாத, தொழாத நோன்பு வைக்காத, மஸ்ஜித்களுக்கு போகாத, வேஷத்திலும், பாவனையிலும் கூட ஒரு முஸ்லிம் என்று தங்களைக் காட்டிக்கொள்ளாத முஸ்லிம்கள், 'பக்கா' முஹ்மீன்கள்! அவர்களுக்கு இந்த ஆலிம்சாக்கள் சொர்கத்திற்க்கான அனுமதி சீட்டு வழங்குவார்கள். ஆனால் இஸ்லாமிய ஐந்து கடமைகளையும் சரிவர கடைப்பிடித்து முஸ்லீமாகவும், முஹ்மீனாகவும் வாழ்கின்ற அஹ்மதிகளை அவ்வாறு செய்ய இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
நான் இறுதியாக மௌலானாக்களிடம் கூறுகின்றேன். நீங்கள் அல்லாஹ்வை சற்று பயப்படுங்கள் அவனுடைய பயங்கரமான தண்டனை வரும் பொது உங்களால் உங்களை காப்பாற்றமுடியாது. இறைத்தூதர்களை எதிர்த்தவர்களுக்கு மோட்சம் கிடைத்ததாக வரலாறு கிடையாது. சற்று திருக்குரானை திருப்பி பாருங்கள். அரபி தெரிந்தால் மட்டும் ஒருவர் மூமினாக இருக்க முடியாது! உங்களுக்கு அப்பூஜஹளை விட அரபி தெரியாது. ஆனால் இறைத்தூதரை எதிர்த்த காரணத்தால் அபுல் ஹக்கமாக இருந்த அவன் அபூஜஹிலாக மாறிவிட்டான்! இறைவா! இவர்களுக்கு உண்மையை அறிந்து அதை கைகொள்ளுகின்றதற்குள்ள தௌபீக்கை தந்தருள்வாயாக! ஆமீன்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.