அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 29, 2014

ஆங்கிலத்தில் வஹி


எந்த நபிக்கும் அவரது தாய் மொழியிலேயே வஹி வந்திருக்கிறது. ஆனால் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் வஹிவந்திருக்கிறது. இது குறித்து ஒரு மௌலவி எள்ளி நகையாடியுள்ளார். 

நம் பதில்: 

ஏளனம் செய்யப்படாத எந்த நபியும் மக்களிடத்தில் வரவில்லை. என்கிறது திருக்குர்ஆன். நிராகரிப்போர் எள்ளி நகையாடுவது இயல்பு அது அவர்களின் ஆணவத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது. 

நபிமார்களுக்கு அவர்களுடைய தாய் மொழியில் ‘வஹி’ வந்ததாக திருக்குர்ஆனில் எங்கும் காணப்படவில்லை. திருக்குர்ஆன் இவ்வாறே கூறுகிறது:- 

ஒவ்வொரு தூதரையும் (மக்களுக்கு) தெளிவு படுத்துவதற்கு அவர்களுடைய சமுதாயத்தின் மொழியிலேயே நாம் அனுப்பி வைத்தோம்! (14:5) 

இந்த திருவசனத்திற்கு, திருக்குர்ஆன் விளக்கவுரைகளில் கீழ்வருமாறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளது. 

எந்த சமுதாயத்திடமும் ஒரு நபியை அல்லாஹ் அனுப்புகிரானோ அந்த சமுதாயத்தின் மொழியில்தான் அந்த நபி போதனை செய்வார். 

(தப்ஸீர் ரூஹுல் மஆனி பாகம் 4, பக்கம் 209) 

நபிமார்கள், அவர்களுடைய சமுதாயங்களின் மொழியிலேயே பேசுவர். (தப்ஸீர் காஸின் பாகம் 3, பக்கம் 82, தப்ஸீர் மதாரிகுத் தன்ஸில்) 

நபிமார்களுக்கு அவர்களின் தாய்மொழியில் மட்டுமே ‘வஹி’ வரும் என்பதற்கு இந்த வசனத்தில் எந்தச் சான்றும் இல்லை. ‘அவ் ஹைனா’ என்றோ ‘அல்ஹம்னா’ என்றோ அதாவது ‘வஹி’ இறக்கினோம். ‘இல்ஹாம்’ இறக்கினோம் என்று இவ்வசனத்தில் இல்லை. 

அடுத்து இந்த வசனம் அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய நபிமார்களைப் பற்றியதாகும். ‘அர்ஸல்னா’ (நாம் அனுப்பி வைத்தோம்) என்ற சொல் கடந்த காலத்தையே குறிக்கும். அந்த நபிமார்கள் அனைவருமே ஒவ்வொரு சமுதாயங்களுக்காக மட்டும் வந்தவர்களாவர். அனவே இந்த வசனம் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கோ அவர்களைப் பின்பற்றித் தோன்றும் நபிமார்களுக்கோ பொருந்தாது. 

இக்கருத்து சரியாது என கீழ்வரும் அறிவிப்பு உறுதி செய்கின்றது. ஹஸரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்;- 

“ஒவ்வொரு நபியையும் நாம் அவருடைய சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பியிருந்தோம் என்று அல்லாஹ் கூறியுள்ளான். ஆனால் நமது ரஸுல் (ஸல்) அவர்களைப்பற்றி ‘வமா அர்ஸல்னாக இல்லா காபத்தன் லின்னாஸி” – நாம் உம்மை முழு மனித சமுதாயத்திற்காக அனுப்பியிருக்கின்றோம். என்று இறைவன் கூறியிருக்கிறார்.” ( மிஷ்காத் கிதாபுல் பிதன் பீ பளாயில் நபியினா (ஸல்) )

அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள், உலக சமுதாயங்கள் அனைத்திற்கும் இறைத்தூதராகத் தோன்றினார்கள் எனவே, அவர்கள் ‘உம்முல் குரா”வில் அதாவது அனைத்து நாடுகளின் தாய் எனத்திருமறை கூறும் மக்காவில் தோன்றி “உம்முல் அல்ஸினா” வில் அதாவது அனைத்து மொழிகளின் தாயாகிய அரபி மொழியில் போதனை செய்தார்கள். 

அந்த மாநபியைப் பின்பற்றி அவர்களின் பிரதிநிதியாகத் தோன்றிய ஹஸரத் அஹ்மது (அலை) அவர்கள் பல்வேறு மொழிகளில் அந்த மாநபியின் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அரபியிலும், உருதுவிலும், பஞ்சாபியிலும் அவர்கள் 80 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்கள். 

ஹஸரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் வஹி வந்தது குறித்து ஆச்சர்யப்படுவதற்கோ ஏளனம் செய்வதற்கோ எந்தக் காரணமுமில்லை. ஏனெனில் அனைத்து மொழிகளும் அரபி மொழியில் இருந்து தோன்றியவையாகும். இதற்க்கான சான்றுகளை ஹஸரத் அஹமது (அலை) அவர்களே தமது “மினனுர் ரஹ்மான்” எனும் நூலில் தந்துள்ளார்கள். 

ஆங்கிலத்தில் வஹி வந்தது குறித்து எள்ளி நகையாடியுள்ள ஆலிம்சா, “ஆங்கிலம் காபிர் மொழி” என்ற பத்தாம் பசலிக் கொள்கையுடையவராக இருப்பார் போலிருக்கிறது! ஹஸரத் ஸுலைமான் நபி (அலை) அவர்கள் தமக்கு பட்சிகளின் மொழி கற்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள் என திருக்குரானில் (27:17) காணப்படுகிறது. இது குறித்து இந்த ஆலிம்சா எள்ளி நகையாடுவாரா? இன்று உலகில் பொது மொழியாகிய ஆங்கிலத்தில் “I shall give you a large party of Islam” என்ற நற்செய்தி தாங்கிய வஹி வந்தது பொருத்தமானதே.
Read more »

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3


“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது: 

“என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய் எனது உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். மேலும் உனது உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை அறிகின்ற்றவன் நீ ஒருவனே. 

“எனது இறைவனும் உங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என எனக்குக் கூற நீ கட்டளையிட்டதையல்லாமல் வேறெதனையும் நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களோடு இருந்தவரை அவர்களுக்கு நான் ஒரு சாட்சியாவேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய். மேலும் நீயே அனைத்தையும் கவனிப்பவனாவாய்! (5:117,118) 

‘ஒட்டக் கூத்தருக்கு இரட்டைத் தாழ்பாள் என்று கூறப்படுவது போன்று இந்த வசனம் நஜாத் ஆசிரியரின் இரண்டு கூற்றுகளையும் அடியோடு தகர்த்து விடுகிறது. இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதையும் அவர்கள் திரும்ப வரபோவதில்லை என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கிவிடுகின்றது. “நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொற்றொடர், ஈஸா நபியின் சமுதாயம் இறைவனுக்கு இணைவைப்பதற்கு முன்பே அதாவது ஈஸா நபியையும் அவர்களுடைய தாயாரையும் இரு தெய்வங்களாக எடுத்துக் கொளவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே ஈஸா நபியின் சமுதாயம் இணை வைத்தலில் இறங்கிவிட்டது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. எனவே நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்னரே ஈஸா(அலை) அவர்கள் மரணித்துப் போனார்கள் என்றே சொல்லவேண்டும். 

அடுத்து ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற கருத்தும் மிகத் தவறானது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து புலனாகிறது. அவர்கள் அவ்வாறு வருவதாயிருந்தால் அவர்களுடைய சமுதாயம் இறைவனுக்கு இணை வைப்பதையும், அவர்களையும் அவர்களுடைய தாயாரையும் கத்தோலிக்கர்களும் மற்றவர்களும் வணங்கிவருவதையும் அவர்கள் காண்பார்கள். அதன் பிறகு அவர்களால் அது குறித்து தனக்குத் தெரியாது என்று இறைவனிடம் எவ்வாறு கூறமுடியும்? மேற்கண்ட இறைவசனத்திலோ அவர்கள் அந்தச் சமுதாயத்தினரோடு இருந்தவரை அவர்கள் இணைவைத்தலில் ஈடுபடவில்லை என்று கூறுவதாக வருகிறது. எனவே, ஈஸா நபியின் சமுதாயம் இணைவைத்தலில் ஈடுபடுவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துபோனார்கள் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதை உணரலாம். 

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்கள் என எப்படியாவது எடுத்துக் காட்டவேண்டும் எண்ணமுள்ளவர்கள் இந்தத் திருமறை வசனத்திலுள்ள ‘பலம்மா தவபைத்தனி’ என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்த பின் எனப் பொருள் தருவதற்குப் பகரமாக வெகு தந்திரமாக, நீ என்னை (உடலுடன்) கைப்பற்றியபின்’ என்று பொருள் கூறுவார்கள். இந்த தவப்பி என்ற சொல்லுக்கு மரணிக்க செய்தல் அல்லது ரூஹை அதாவது உயிரைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். 

இது தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 

உலகில் அரபு நாடு உருவாகி அங்கு அரபி மொழி வழக்கில் வந்த நாள் முதல் இதுவரை வந்த எந்த உரையிலிருந்து அது புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் ‘தவப்பி’ என்ற சொல்லுக்கு உடலைக் கவர்தல் என்ற பொருள் தரப்பட்டிருந்த ஓர் உதாரணத்தை யாராலும் காட்டமுடியாது. மாறாக, தவப்பி என்பது இறைவன் மனிதனுக்கு இழைக்கின்ற செயலாக கூறப்பட்ட இடங்களிலெல்லாம் அதற்கு மரணிக்கச் செய்தல் உயிரைக் கவர்கள் என்ற அர்த்தங்களே தரப்படுகின்றன. உடலைக் கவர்தல் என்ற அர்த்தம் எங்கும் காணப்படவில்லை. எந்த அகராதியிலும் நாம் தரும் அர்த்தத்திற்கு மாற்றமான அர்த்தம் தரப்படவில்லை. 

எவராவது, திருக்குரானிலிருந்தோ அல்லது நபி மொழிகளிலிருந்தோ அல்லது அரபி மொழிக் கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தோ மேற்கண்ட சொல்லுக்கு மரணிக்கச் செய்தல், உயிரைக் கவர்தல் என்பதைத் தவிர வேறு பொருள் உண்டு என்பதற்கு உதாரணம் காட்டினால் அவருக்கு எனது சொத்தில் ஒரு பகுதியை விற்று ஆயிரம் ரூபாய் தருவேன் என இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். (இஸாலே ஔஹாம் – பக்கம் 603) 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் இந்த சவாலை அவர்களின் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாரும் ஏற்கவில்லை. இதிலிருந்து இந்த ஆலிம்சாக்கள் உண்மையை மறைத்து இட்டுக்கட்டிப் பொருள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இந்த “பலம்மா தவபைத்தனி’ – நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொல்லை அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் நாம் கூறும் அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் மேற்கண்ட ஆயத்தைக் குறிப்பிட்டே கூறியுள்ளார்கள். புஹாரி ஷரீபில் இவ்வாறு காணப்படுகிறது:-

இறுதி நாளில் நான் (நபி பெருமானார் (ஸல்) அவர்கள்) ஹவ்ல் கவ்ஸரில் நிற்கும்போது சிலர் என் முன் காணப்படுவார்கள் அவர்களை மலக்குகள் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவார்கள். அவர்களைப் பார்த்து நான் உஸைஹாபி, உஸைஹாபி (இவர்கள் என் தோழர்கள்) என்று உரத்த குரலில் கூறுவேன். அப்போது, இவர்கள் உங்களுடைய காலத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இவர்கள் இஸ்லாத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று என்னிடம் கூறப்படும். அதற்கு நான் இறைவனின் அந்த நல்லடியாரான ஈஸா நபி கூறியிருந்ததைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன், ஆனால் (பலம்மா தவப்பைத்தனி) நீ என்னை மரணிக்கச் செய்தபின் நீயே அவர்களைக் கண்காணிக்கின்றவனாக இருந்தாய் என்று கூறுவேன். (புஹாரி, கிதாபுத் தப்ஸீர்) 

“பலம்மா தவபைத்தனி” என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்தபின் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை. இதை நபி பெருமானார் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதனைப் படித்தப்பிறகும் ஒருவர் அந்த சொற்றொடருக்கு வேறு அர்த்தம் இருப்பதாகக் கூறுவாரேயானால் அவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தை மறுக்கின்றவர் ஆகிறார். எனவே அவருடன் தொடர்ந்து விவாதம் செய்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 

இப்படி, பல்வேறு கோணங்களில் ஈஸா நபியின் மரணம் திருக்குரானால் உறுதி செய்யப்படுகிறது. இந் நிலையில் ‘நஜாத்’ ஆசிரியரைப் போன்றவர்களுக்கு குட்டையைக் குழப்புவதை தவிர வேறு வழியில்லை! ஈஸா நபி உயிருடன் உள்ளார் எனபதற்கு திருக்குர்ஆனிலிருந்து ஆதாரம் தருவதற்குப் பகரமாக அர்த்தமற்ற சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் வாசகர்களைத் திசை திருப்பவே அவர் முயன்றிருக்கிறார். “ஹஸரத் ஈஸா நபி (அலை) சிலுவைச் சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன? நபி கோழையாவார்களா? என்று அவர் கேட்கிறார். 

திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாற்றினை படித்திருந்தால் அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையாவது படித்திருந்தால் அதுபோன்ற அபத்தமான கேள்வியை நஜாத் ஆசிரியர் கேட்டிருக்கவேமாட்டார். பொதுவாக சொந்த நாட்டை துறந்து வேறு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்வது நபிமார்களின் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. எதிரிகள், அவர்களின் அநியாயச் செயல்களில் எல்லை மீறிப் போகும்போது அல்லது நபிமார்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்போது அந்த நபிமார்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இது அறிவுடமையே தவிர கோழைத்தனம் அன்று ஏனெனில் அந்த நபிமார்கள் உயிர்வாழ்ந்திருந்தால் தான் இறைவன் அவர்கள் மீது சுமத்திய பொறுப்புகளை நிறைவேற்றிடமுடியும். 

இந்தப் பொது விதிக்கு நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூட உட்பட்டவர்களாகவே இருந்தார்கள். மக்காவின் ‘காபிர்’கள் நபி பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்துவிட திட்டமிட்டு அவர்களுடைய வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர்கள் இரவோடிரவாக மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்யவில்லையா? 

நஜாத் ஆசிரியரைக் கேட்க்கிறோம், இஸ்ரவேலர்களுக்கு இறை தூதராக வந்த ஈஸா நபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்றியதாகக் கூறுகின்றீர்களே. அதே நிலை, அகில உலகிற்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டபோது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்தவில்லையே ஏன்? ஈஸா நபியை நேசித்த அளவுக்கு இறைவன் நபி பெருமானாரை நேசிக்கவில்லையா? அல்லது கிருஸ்தவர்கள் கூறுவது போன்று ஈஸா நபி (நவூதுபில்லாஹ்) இறைவனின் நேச குமாரன் என்பதுவும் உங்களின் எண்ணமா? 

ஏனைய நபிமார்களுக்கு ஆபத்து வந்த நேரத்தில் அவர்களை இந்த பூமியிலேயே காப்பாற்றிய இறைவன் ஈஸா நபியை மட்டும் வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன? வானத்திற்கு உயர்த்த இறைவனுக்கு வல்லமையில்லையா? என்று கேட்பவர்களிடம் கேட்கிறோம், ஏன், பூமியிலேயே அவர்களைக் காப்பாற்றக்கூடிய வல்லமை இறைவனுக்கு இல்லையா? தவ்ர் குகையில் மறைந்திருந்த நபி பெருமானார் (ஸல்) அவர்களையும் ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களையும் ஓர் அற்பப் பிராணியான சிலந்தியைக் கொண்டு எதிரிகளிடம் பிடிபடாது இறைவன் காப்பாற்றினான். இத்தகைய வல்லமை மிகுந்த இறைவன் ஈஸா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவன் வகுத்துள்ள நியதிகளை தவிடு பொடியாக்கி வானத்திற்கு உயர்த்தியிருப்பானா? நிச்சயமாக அவன் அவ்வாறு செய்யவில்லை! மாறாக, ஏனைய நபிமார்களைப் போல் ஈஸா நபியையும் இப்பூமியிலே காப்பாற்றினான். இது குறித்து இறைவனே கூறுவதைப் பாருங்கள்:- 

“மேலும் நாம் மரியமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். நீரூற்றுகளுள்ள மலைப்பாங்கான ஒரு இடத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம்” (23:51) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் ஈஸா(அலை) அவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்ட இடம் பற்றி, 

ரப்வ – மலைப் பிரதேசம் 

மயீன் – நீரருவி நீரூற்று நிரம்பிய இடம். 

தாது ‘கரார்’ – மக்கள் வசிக்குமிடம் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. இந்த வர்ணனைகள் காஷ்மீருக்குப் பொருந்துமா? வானத்திற்கு பொருந்துமா? 

அடுத்து, ஈஸா நபி (அலை) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ சென்றதாக அதாவது தமது சொந்த நாட்டைத் துறந்து சென்றதாக நபிபெருமானார் (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள். 

அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா நபி அவர்களுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான், “ஈஸாவே நீர் மற்றவர்களால் அறிந்து கொள்ளப்படாமலும் துன்புருத்துதளுக்கு இலக்காகாமலும் இருக்க இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு ‘ஹிஜ்ரத்’ செய்வீராக” (கன்ஸுல் உம்மால்) 

இவற்றிலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவை சம்பவத்திற்குப் பிறகு தமது நாட்டைத் துறந்து சென்றார்கள் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டும். 

ஈஸா நபி (அலை) அவர்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் பரவலாக வசித்துவந்த இஸ்ரவேல் இன மக்களுக்கு இறைத்தூதை எட்டவைத்து, இறுதியாக காஷ்மீர் வந்தடைந்தார்கள், அங்கெ தமது 120 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள் என்பதையெல்லாம் இறையறிவிப்பின் அடிப்படையிலும் ஹஸரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது மஸீஹ் ஹிந்துஸ்தான் மேய்ன் (தமிழில் இந்தியாவில் இயேசு) என்ற நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, ஈஸா (அலை) அவர்கள் இந்தியா வந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன என முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் மற்றும் நல்லரிஞர்களும்கூட கூறியுள்ளார்கள். 

இவற்றை மறுக்க இயலாத நிலையில் நஜாத் ஆசிரியர், சிலுவையில் அடிக்கப்பட்டவர் வேறொருவர். அவரே “காஷ்மீருக்கும் ஓடிப் போயிருக்கலாம். பின்னர் மாண்டிருக்கலாம். அவர்களின் கல்லறை காஷ்மீரில் இருப்பதாக எழுதியிருக்கலாம்” என்று வரைந்துள்ளார். இவற்றிலிருந்து இந்தச் சம்பவங்களலெல்லாம் உண்மை, ஆனால் ஆள்தான் வேறு என நஜாத் ஆசிரியர் கூறுவதாகவே நாம் கொள்ளவேண்டும். அதாவது ஈஸா நபியை கொல்ல முயற்சித்த யூதர்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் பல்வேறு இனங்களைச் சார்ந்த வரலாற்றாசிரியர்களும் முஸ்லிம் நல்லரிஞர்களும் கூட ஏமாந்து போனார்கள் தாம் மட்டும்தான் அது உண்மையான ஈஸா அல்ல அது வேறொரு நபர் என்று கண்டு பிடித்துள்ளதாக நஜாத் ஆசிரியர் கூற விழைகிறார். அப்படியானால் அதற்க்கான ஆதாரத்தை தரட்டும்! ஓர் “அற்புதகரமான ஆராய்ச்சியாளரை” உலகம் கண்டுகொள்ளட்டும். 

ஆனால் இறைவசனங்களுக்கெதிராக, நபிமொழிக்கெதிராக யாராலும் எந்த சான்றையும் காட்ட இயலாது! ஏனெனில் அது உண்மையே உருவானவை. “உண்மைக்கு எதிராக யூகங்கள் எந்தப் பயனும் அளிக்காது” (10:37) என்பதற்கேற்ப உண்மையின் முன்னால் எந்தப் பொய்யும், யூகமும், கற்பனையும் நிற்கயியலாது.
Read more »

ஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகை தொடர்பாக சிராஜுதீன் இப்ன் அல் வர்தி அவர்களின் கூற்று



சிராஜுதீன் இப்ன் அல் வர்தி 

ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் சிராஜுதீன் இப்ன் அல் வர்தி அவர்கள் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகையை அவரின் பண்பை கொண்ட வேறொருவரின் வருகையாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதை தன்னுடைய خريدة العجائب وفريدة الغرائب (ஹரீததுல் அஜாயிபு வ பரீததுல் ஹராயிப்) என்ற நூலில் 120 வது பக்கத்தில் கூறுகிறார்கள். 

وقالت فرقة: نزول عيسى خروج رجل يشبه عيسى في الفضل والشرف؛ كما يقال للرجل الخير ملك وللشرير شيطان، تشبيهاً بهما، ولا يراد الأعيان. (خريدة العجائب وفريدة الغرائب، ص120)
Read more »

Apr 22, 2014

சனிக்கிழமை மீன் பிடித்தவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாறினார்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 23 இல் சனிக்கிழமை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

சனிக்கிழமை முழுவதும் மீன் பிடிக்கும் தொழில் செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதை அவர்கள் மீறியதால்தான் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றப்பட்டனர். 

நம் விளக்கம்: 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

எனது உம்மத்தில் சிதறுண்ட அமைதியிழந்த ஒரு காலம் வரும். அப்போது அவர்கள் தமது ஆலிம்களிடம் நேர்வழிக்கான நம்பிக்கையுடன் செல்வார்கள். அப்போது அவர்கள் அந்த ஆலிம்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் காண்பார்கள். (கன்ஸுல் உம்மால், பாகம் 7, பக்கம் 190) 

இந்த ஹதீஸின் படி இக்காலத்திலுள்ள ஆலிம்கள் பன்றி, குரங்குகளாக உருவத்தால் காணப்படுகின்றார்களா? அல்லது பன்றியின் குணமும், குரங்கின் குணமும் கொண்டவர்களாக இருக்கின்றார்களா? பி.ஜே எதை நம்புகிறார்? 

ஒரு மனித இனத்தின் ஒரு பகுதி, குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்படுவதற்கு உருமாற்றம் என்று பெயர். அல்லாஹ் அந்த உருமாற்றம் என்ற சொல்லை ஏன் எடுத்தாளவில்லை? 

ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரு பகுதி மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். இது பற்றிய செய்தி ஊரெங்கும் பரவி, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும். அப்படி ஏதாவது வரலாற்று சான்று உள்ளதா? 

எல்லா மொழிகளிலும் இவை போன்ற சொல் வழக்குகள் உள்ளன. தமிழில் குரங்கு, பன்றி, மாடு, நாய், சிறுத்தை, சிங்கம், புலி, எருமை என்றெல்லாம் மனிதர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எல்லாம் அந்தந்த விலங்குகளாக பறவைகளாக உருவத்தால் மாறிவிட்டனர் என்பதற்காக அழைக்கப்படுவதில்லை. மாறாக ஏதோ ஒரு ஒற்றுமை அந்த மனிதனுக்கும் அவன் அழைக்கப்படும் பெயர்க்காகவும் அந்தப் பெயரை வைத்திருக்கலாம். இது போன்றுதான் அல்லாஹ் அந்த இஸ்ரவேலர்களை பன்றி குரங்கு என்று குணப் பொருத்தம் காரணமாக வைத்திருக்கிறான். இல்லை என்றால் உருமாற்றம் என்ற சொல்லை அல்லாஹ் எடுத்தாண்டிருப்பான். 

திருக்குர்ஆன் 2:66 வது வசனத்திற்கு முஜாஹித் (ரக) அவர்கள் கூறியதாவது, அவர்களின் உள்ளங்கள் தாம் குரங்குகளாக மாற்றப்பட்டனவே ஒழிய அவர்களின் உருவம் அவ்வாறு மாற்றப்படவில்லை. இது அல்லாஹ் கூறியுள்ள ஒரு குறியீடு தான். இதற்கு எடுத்துக்காட்டாக, ஏடுகளை சுமக்கின்ற கழுதையைப் போன்று (62:6) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம். (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 2:65 வது வசனத்தின் விளக்கவுரை) 

திருக்குர்ஆன் மனிதர்களை சைத்தான் என்றும், 17:28 வது வசனத்தில் வீண் விரயம் செய்பவனை சைத்தானின் சகோதரன் என்றும், புறக்கண் உள்ளவர்களை குருடர்கள் என்றும் காது கேட்கக் கூடியவர்களை செவிடர்கள் என்றும், வாய் பேசுபவர்களை ஊமைகள் என்றும் அழைக்கிறது. அவர்கள் சைத்தானின் குணம் கொண்ட மனிதர்களாகவும் கருத்துக் குருடர்களாகவும் உள்ளனர் என்பதை பி.ஜே ஏற்றுக் கொண்டுள்ளார். ( காண்க திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 390,5). இவர் மனிதனே இல்லை. இவர் கண்ணியமான வானவர் தவிர வேறு இல்லை என்றனர். (ஆதாரம் திருக்குர்ஆன் 12:32). இவ்வாறு யூசுப் நபி மலக்கு என்று அழைக்கப்படுகிறார். எனவே, இவர்களும் பன்றிக் குணம், குரங்குக் குணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை பன்றி குரங்கு என்று அல்லாஹ் அழைத்துள்ளான். சொத்துப் பாகப்பிரிவினை சம்பந்தமாக உமர் (ரலி) அவர்களது காலத்தில் தாய் மற்றும் தந்தை வழி உடன்பிறப்புகள் உமர் (ரலி) அவர்களிடம், இறை நம்பிக்கையாளரின் தலைவரே! எங்கள் தந்தை ஒரு கழுதை (விவரமில்லாதவர்) நாங்கள் ஒரே தாய் மக்கள் இல்லையா? எங்களையும் கவனியுங்கள் என்று கூறினார்கள் (பைஹகீ ஹாக்கிம், தப்ஸீர் இப்னு கஸீர் 4:12 வசனத்தின் விளக்கம்) 

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழும் சமயம் அபூ லுலுஆ பைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் குத்தி விடுகிறான். உமர் (ரலி) அவர்கள்! என்னை, நாய் குத்தி தின்று விட்டது என்று கத்தியால் குத்தியவனை நாய் என்று கூறினார்கள். (புஹாரி எண் 3700) 

மனிதனை அல்லாஹ் உயர்ந்த தோற்றத்தில் குணத்தில் படைத்தான். அவன் தன் செயலால் தன்னை இழிந்தவனாக மாற்றிக் கொள்கிறான். அப்போது அவனின் செயல் குணத்திற்கு ஏற்ப அவனை நாய் என்று அழைக்கிறான். திருக்குர்ஆன் 7:176 வசனம் இதனைக் கூறுகிறது. பி.ஜே அவன் நாயாக மாறிவிட்டான் என்று கருதுவாரா? அவனுக்குரிய உதாரணம் நாய் என்று அல்லாஹ் உதாரணம் என்ற சொல்லைக் கூறியிருப்பதால் அவன் நாயாக மாறவில்லை என்று பி.ஜே கூறுவது என்றால் பன்றி குரங்கு என்று உருமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அல்லாஹ் கூறவில்லை. என்பதை பி.ஜே அறியவேண்டும். 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உஹது மலையைப் பற்றி “இது நம்மை நேசிக்கிறது. அதனை நாம் நேசிக்கிறோம். இது சுவனத்தின் வாயில்களில் ஒரு வாயில் மீது அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்கள். இது பற்றி கத்தாபி கூறுகின்றார்கள், இதன் கருத்து மதீனா வாசிகள் நம்மை நேசிக்கிறார்கள். நாம் அவர்களை நேசிக்கிறோம் என்பதாகும். இதற்கு சான்று ஊரைக் கேளுங்கள்” (திருக்குர்ஆன் 12:82) என்று அல்லாஹ் திருக்குரானில் கூறுகிறான். அதன் கருத்து ஊர் வாசிகளை கேளுங்கள் என்பதாகும். (ஆதாரம் இப்னு கஸீர் அல் அஸ்கலானி தொகுத்த, முக்தஸர் – நபிமொழிக் களஞ்சியம் பாகம் 1, பக்கம் 379) 

மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் உஹது மலை என்பது மதீனா வாசிகளையும் ஊர் வாசிகளையும் குறிக்க வருகிறது. 

எனவே குரங்கு பன்றி என்பதால் குரங்குகளாகவும் பன்றியாகவும் மனிதன் மாறுவதில்லை.
Read more »

Apr 20, 2014

தவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்களில் உயிரினம் வாழ முடியுமா? முடியாதா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 175 இல் இதில்தான் வாழ்வீர்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்; 

இதில் தான் வாழ்வீர்கள் என்பது பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்று அடித்துக் கூறுகிறது... எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் எனபதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது (பார்க்க திருக்குர்ஆன் 2:36, 7:10, 7:24-25, 30:25) 

நம் விளக்கம்: 

இவ்வசனங்களில் எம்மனிதனும் இப்பூமியை விட்டு வெளியே சென்று வாழ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு சென்று அங்கு வாழ்ந்து வருகின்றார் என்ற தவறான கருத்தை ஏற்பதாயின் இந்த வசனம் தவறு என்று கூற வேண்டும். அல்லது ஈஸா நபி அவர்கள் இன்றும் வானத்தில் வாழ்ந்து வருவதாகக் கருதினால் அவர் ஒரு மனிதர் இல்லை என்று கூற வேண்டும். ஏனென்றால் மனிதர்களைக் குறித்தேதான் இங்கேயே வாழ்ந்து, இங்கேயே மரணித்து, இங்கிருந்துதான் எழுப்பபடுவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டில் எது சரி? 

திருக்குர்ஆன் 7:26 இல், இதே பூமியில் நீங்கள் வாழ்வீர்கள். அதிலேயே மரணமடைவீர்கள். இதிலிருந்தே நீங்கள் வெளியாக்கவும் படுவீர்கள் என்று கூறுகிறது. அப்படி என்றால், வானங்கள் பூமியில் எல்லைகளைத் தாண்டி செல்ல முடியும் என்றால் செல்லுங்கள். ஆனால் அதற்கென ஆதாரம் இன்றிச் செல்ல முடியாது – என்று 55:34 வசனம் கூறுகிறது. இது மனிதன் பூமியையும் தாண்டிச் செல்ல முடியும் என்பதைக் காட்டவில்லையா? 6:126 இல் வானத்தில் ஏறிச்செல்கின்றவனின் உள்ளத்தைப் போல் என்று வருகிறது. இது பூமியைத் தாண்டி மனிதன் செல்ல முடியும் என்பதைக் காட்டவில்லையா? 

பூமியின் மொத்த கனபரிமாணத்தை ஒரு குண்டூசியின் தலையுடன் ஒப்பிடும் போது எவ்வளவு வேறுபாடோ அவ்வளவு வேறுபாடுதான் அண்ட சராசரங்களில் உள்ள அனைத்துக் கோள்களுடன் பூமியை ஒப்பிட்டால் உண்டாகும். அதாவது அண்ட சராசரங்கள் பூமியளவு என்றால் பூமி ஒரு குண்டூசியின் தலையளவுதான் இருக்கும். 

இந்த ஒப்பீட்டை உள்ளத்தில் பதிய வையுங்கள். அப்படி என்றால் பூமியைத் தவிர ஏனைய அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை கோள்களும் உயிரினங்கள் வாழ தகுதியற்றதும் வீணாக படைக்கப்பட்டதும் ஆகிவிடும். மேலே பி.ஜே காட்டிய வசனத்துக்கு அடுத்த வசனம், மேலும் வானங்களிலும், அவனுக்கே கட்டுப்பட்டவராவார்கள் என்று கூறுகிறது. இந்த வசனம் மனிதர்களைப் போல் வானங்களிலும் உள்ளவர்களைப் பற்றிப் பேசுகிறது. அவர்கள் இறைவனுக்கு கட்டுப்படுவதாகவும் கூறுகிறது. 

இது போன்ற வசனங்கள் திருக்குரானில் பல உள்ளன. (10:67; 13:16; 17:45; 16:50; 39:69; 30:27; 42:30) 

மனிதன் மட்டும் தான் பூமியில் வாழ்கிறான். பிற கோள்களில் மனிதன் அல்லாத பிறர் யாரும் வாழவில்லை என்றால் அல்லாஹ் பூமி அல்லாத அண்ட சராசரங்களை அனைத்தையும் வீணாகப் படைத்துள்ளானா? 

ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) நான்காவது கலீபத்துல் மஸீஹ் அவர்களிடம் ஒருவர் வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பும், அவற்றில் உயிரினங்களின் வகையினை அவன் பரப்பியிருப்பதும். அவனுடைய அடையாளங்களைச் சேர்ந்தவையாகும். அவன் விரும்பும் போது அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டுவதற்கு ஆற்றல் பெற்றவனாவான் என்ற (42:30) வசனத்தில் வருகின்ற வானத்தில் உள்ள உயிரினங்கள் எப்படிப்பட்டவை என்று கேட்டதற்கு அவர்கள் இந்த வசனத்தில் இறைவன் வானங்களிலும், பூமியிலும் தப்பாவைப் பரப்பி வைத்திருப்பதாகக் கூறுகிறான். தப்பா என்ற அரபிச் சொல், இடம் விட்டு இடம் பெயரக் கூடிய உயிரினங்களையே குறிக்கம். இந்த அடிப்படையில், மலக்குகளையோ, ஆன்மாக்களையோ, தாப்பா என்ற சொல்லினால் அழைக்க முடியாது. மாறாக, தப்பா என்ற சொல்லின் கீழ் பூச்சி வகைகளும், பறவையினங்களும், நீரில் வாழும் மீன் இனங்களும், கால் நடைகளும், மனிதர்களும் அடங்குவர். எனவே, பூமியைப் போன்றே இடம் விட்டு இடம் நகரக் கூடிய உயிரினங்களைக் கொண்ட பல கோளங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. 

அறிவியலால் இன்னும் உறுதி செய்யப்படாத (ஆனால் பின்னர் உறுதி செய்யப்படவிருக்கிற) இந்தக் கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்க விசயமாகும். 

மேலும் இந்த வசனத்தில் ஒரு மகத்தான முன்னறிவிப்பும் இருக்கிறது. இந்த வசனத்தில் இறைவன், நாம் விரும்பும் போது அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறியுள்ளான். நாம் விரும்பினால் அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறவில்லை. விரும்பும்போது என்று கூறியதிலிருந்து வேற்று கிரக மனிதர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படக் கூடிய காலகட்டம் நிச்சயமாக வரவிருக்கிறது. என்பதை நாம் அறியலாம். இந்தத் தொடர்பு வானொலி, தொலைகாட்சி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் நிகழலாம். இந்தத் தொடர்பின் மூலம் கோளங்களுக்கிடையே தொடர்பின் ஆலோசனைகள் பரிமாறப்படும். இந்தக் குறிப்பிட்ட வசனம் திருக்குர்ஆனின் அஷ்ஷூரா (ஆலோசனை) என்ற பெயரைக் கொண்ட அதிகாரத்தில் இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும் என்று பதில் கூறினார்கள். (ஆதாரம்: நபி வழி செப்டம்பர் 2012. கேள்வி – பதில், பக்கம் 24) 

பிற கோள்களில் மனிதனை விட மேலான, மனிதனைப் போன்றவர்கள் வாழ முடியும் என்பதற்கு வானவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் எனும் நூலில், இரவில் ஆகாயத்தைப் பார்த்தால் அந்த இருண்ட வெளியில் நாம் காண்பது என்ன? கண்சிமிட்டி மின்னும் நட்சத்திரக் கூட்டங்களையும், சந்திரனையும்தானே. ஒரு தெளிவான ஆகாயத்தில் ஆரோக்கியமான கண்கள் மூலம் தொலை நோக்கி இல்லாமல் 4,500 நட்சத்திரங்களை நாம் காணமுடியும் என்கிறார்கள். ஆனால் உண்மையில் பல லட்சம் நட்சத்திரங்கள் இவ்வுலகைச் சுற்றியுள்ள அண்ட வெளியில் இருக்கின்றன அவைகளைப் பல தொகுதிகளாகப் பிரித்துள்ளனர் வானியல் அறிஞர்கள். 

அண்டங் கடந்த அண்டம் 

1923 - ஆம் ஆண்டில் டாக்டர் எட்வின் ஹப்பில் (Dr. Edwin Hubble) என்ற வானியல் அறிஞர் நாற்பது அங்குலத் தொலை நோக்கியின் மூலம் ஆண்ட்ரோ மெடா(Adromeda) என்ற நட்சத்திரத் தொகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது அவைகளுக்கும் அப்பால் வெகு தூரத்தில் இருண்ட ஆகாய வெளியில் மேகம் போன்ற ஒன்றைக் கண்டு அதைச் சக்தி வாய்ந்த காமிரா மூலம் புகைப்படம் எடுத்தார். 

அந்தப் படத்தை பெரியதாக்கிக் கவனமாக ஆராய்ந்தபோது, அது எண்ணற்ற நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு மாபெரும் அண்டம் என்பது தெரியவந்தது. அது குறைந்தபட்சம் 7,50,000 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாக டாக்டர் ஹப்பில் மதிப்பிட்டார். (ஆனால் அது உண்மையில் அதனைவிடம் இரண்டு பங்கு தொலைவில் இருப்பதாகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) 

ஓர் ஒளியாண்டு என்பது ஒரு வினாடிக்கு ஒளி செல்லும் வேகம் 1,86,000 மைல்கல். இதே வேகத்தில் அது தொடர்ந்து சென்றால் ஒரு ஆண்டில் 5,878 பில்லியன் மைல் தூரம் செல்லும். இதைத்தான் ஓர் ஒளியாண்டு தூரம் என்பார்கள். 

டாக்டர் ஹப்பில் தமது தொலைநோக்கியைக் கொண்டு வானத்தின் பிற பகுதிகளை ஆராய்ந்து இதே போன்ற ஆயிரக்கணக்கான அண்டங்களைக் கண்டுபிடித்தார். 

நமது அண்டம் எப்படிச் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றிலும் அமைந்து வட்ட வடிவமாகச் சுற்றி வருகின்றதோ அதைப் போன்ற அமைப்பு அந்தந்த அண்டங்களிலும் காணப்படுகின்றன. 

அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து 

இவைகளைப் பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளில் முக்கியமானவர் டாக்டர் வில்லி லே (Dr.Willilay) என்ற அமெரிக்கர். இவரது கருத்து நம்முடைய விண்வெளியில் இதுவரை 1800 கோடி கிரகங்கள் நம்மால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளில் நம்மைப் போலவே உயிரினங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டா? 

உயிரினம் வாழ்வதற்கு தேவையான சூரிய ஒளி. இந்த ஒளியானது நமக்கு அளவு மீறியும் கிடைக்கக் கூடாது. அளவுக்குக் குறையவும் கூடாது. அதற்கு ஏற்ற அளவான தூரத்தில் நமது சூரியனும், பூமியும் அமைந்துள்ளன. ஆனால் இதே போன்ற அமைப்பு எல்லாக் கிரகங்களிலும் காணப்படுமா என்ற கேள்வி எழுகிறதல்லவா? 

1800 கோடிகளில் நூற்றில் ஒரு கிரகத்தில் இத்தகைய சூரிய ஒளி பரவும் வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் பதினெட்டு கோடி கிரகங்கள் தேறுகின்றன

இவற்றில் நூற்றில் ஒரு கிரகம்தான் உயிர்வாழ்வதற்கு தகுதியுடையது என்று வைத்துக் கொண்டாலும் 18 இலட்சம் கிரகங்கள் தேறுகின்றன. 

இவற்றில் நூற்றில் ஒன்றுதான் நமது பூமியில் உள்ளதைப் போன்ற உயிரினங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளவை என்றாலும், 18 ஆயிரம் கிரகங்கள் இருக்கின்றன. 

இவற்றிலும் நூற்றுக்கு ஒன்றில்தான் மனிதனைப் போன்ற அறிவுள்ள உயிரினங்கள் தோன்ற முடியும் என்று வைத்துக் கொண்டாலும். 180 கிரகங்கள் இருக்கின்றன. இவைகளில் நிச்சயம் உயிரினம் வாழ வாய்ப்புகள் உண்டு என்கிறார் விஞ்ஞானி டாக்டர் வில்லி – லே (ஆதாரம்: முத்தாரம் 28.1.2013 பக்கம் 1)

இவை எதை எடுத்துக்காட்டுகிறது என்றால், மனிதர் அல்லாத மனிதனைக் காட்டிலும் முன்னேறிய, மனிதனைப் போன்ற ஒரு இனம் வேறு கிரகங்களில் வாழ்கிறது என்பதுதான். எனவே இதில்தான் வாழ்வீர்கள் என்றால் மனிதன் வானத்தில் எல்லையைக் கடந்து பிற கோள்களுக்குச் செல்ல முடியும் என்று பொருள்படாதா? 

திருக்குர்ஆன் 55:34 இல், 

ஜின்கள், மனிதர் கூட்டத்தினரே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை விட்டும் வெளியேறிச் செல்ல உங்களுக்கு வலிமை இருந்தால் செல்லுங்கள். ஆனால் சான்று வலிமையினாலன்றி உங்களால் செல்ல முடியாது என்று கூறுகிறது. சான்று வலிமையிருந்தால் செல்ல முடியும் என்றால் பூமியின் சூழ்நிலையை உள்ளடக்கிய ஆடைகளை அணிந்து கொண்டு அதற்குரிய ராக்கெட் போன்ற விண்கலங்களில் செல்ல முடியும். அப்போது அவன் பூமியின் சூழலில் தான் வாழ்கிறான். மரணித்தாலும் பூமியின் சூழலில்தான் மரணிக்கின்றான். அதாவது மிகச் சிறிய ஒரு குட்டி பூமியை தன்னுடன் கொண்டு செல்கிறான். இதன்படி மனிதன் பூமியில்தான் வாழ்கிறான். பூமியின் சூழ்நிலையை உள்ளடக்கிய ஒன்றில் மரணிக்கின்றான் என்று திருக்குர்ஆன் வசனம் கூறுவது சரிதான். எனவே பி.ஜே யின் கருத்து தவறாகிறது.
Read more »

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா? இல்லையா?


பீ.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357 இல் சூனியம் என்னும் தலைப்பில் கடைசி 5 வரிகளில் இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பதுதான் சரியான கருத்தாகும் என்றும் ஆனால் அவரே திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பக்கம் 88-90 இல், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றும் எழுதியுள்ளார். 

நம் கேள்வி; 

இத்தகு சுய முரண்பாடு ஏன்? ஆண்டுக்கு ஆண்டு நூலுக்கு நூல் இப்படி சுய முரண்பாடுகளைக் கூறி வந்தால், அவரை அப்படியே தக்லீது செய்யும் – விரலை ஆட்டினால் விரலை ஆட்டியும், தொப்பியைக் கழற்றினால் தொப்பியைக் கழற்றியும் அப்படியே அடிக்கு அடி முழத்துக்கு முழம் பின்பற்றும் அவரது முரீதுகளின் கதி என்னாவது? 

சாதாரண விஷயம் முதல் ஈமான் சம்பந்தப்பட்ட முக்கியமான நம்பிக்கை வரை பி.ஜே யின் தவறான கருத்தை நம்பியும், பேசியும் செயல்பட்டும் வாழ்ந்து மரணித்தவர்களின் மறுமை வாழ்வு என்னாவது? பி.ஜே வை கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள், மாற்றுக் கருத்துக்களை அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற கருத்தை நம்பிக் கொண்டு நாம் சூனியம் செய்யப்படவில்லை என்ற உண்மையான கருத்தை கூறும்போது செவி கொடுத்து கேட்பதில்லை. சிந்தித்துப் பார்க்க முன்வருவதும் இல்லை. திருக்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கூறினாலும் ஏற்பதில்லை. பி.ஜே நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறிவிட்டார். அதற்கு மாற்றமாக யார் என்ன கூறினாலும் ஏற்பதில்லை என்று பிடிவாதமாகப் பேசுகின்றனர். அவர்களின் கதி என்ன? 

இது ஒரு புறம் இருக்க, மாற்றுக் கருத்தை யார் கூறினாலும் சென்று கேளுங்கள், சிந்தியுங்கள். அதன் வழியில் செயல்படுங்கள் என்று கூறும் தெம்பும் தம் கொள்கையில் நம்பிக்கையும் கொஞ்சமும் இல்லை. அவர்களிடம் போகாதே! அவர்களிடம் பேசாதே! அவர்களின் கருத்துக்களைப் படிக்காதே! அதைப் பற்றி என்னிடம் கேட்காதே! என்றுதான் தன்னைத் தக்லீது செய்பவர்களிடம் அவர்கள் கூறுகிறார்கள். 

பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357 இல், 

தங்களைப் போலவே உள்ள ஒரு மனிதரை இறைவனின் தூதர் என்று மக்கள் ஏற்க மறுப்பது இயல்பானது தான் என்பதால்தான் எல்லாத் தூதர்களும் தம்மைத் தூதர்கள் என்று மெய்ப்பிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டு அனுப்பட்டனர். எந்தத் தூதரும் அற்புதம் வழங்கப்படாமல் அனுப்பபடவில்லை. (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357) 

பி.ஜே கூறுவது உண்மை என்றால், நபி (ஸல்) அவர்களிடம் மக்கத்து மக்கள் அற்புதங்களைக் கேட்ட போது அவர்கள், என் ரப்பு தூயவன் நான் ஒரு மனிதத் தூதரேயன்றி வேறில்லை (17:94) என்று கூறி அவர்கள் கேட்ட எந்த அற்புதத்தையும் காட்டவில்லையே! 

தாஜ்ஜாலும் அற்புதம் செய்வான் என்று பி.ஜே நம்புகிறாரே! இது சரியா? 

அற்புதங்கள் மூலம் தான் இறைத்தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்க முடியும் என்றிருக்கும் போது இறைத்தூதராக இல்லாதவரும், இறைவனின் எதிரிகளாக இருப்போரும் இறைத்தூதர்கள் செய்வதைப் போன்று அற்புதங்கள் நிகழ்த்தினால் இறைத்தூதர்களின் அற்புதத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பி.ஜே கூறுகிறார். 

பி.ஜே யின் இக்கருத்து சரி என்றால், சாமிரி செய்தது அற்புதம் இல்லை. அவன் தங்கக் கன்றுக் குட்டியை இரத்தமும் சதையும் கொண்ட கன்றாக மாற்றினான் என்று பி.ஜே நம்புவது உளறலின் உச்சகட்டமா? 

உண்மையான அற்புதம் எப்படி சூனியம் ஆக முடியும்? சூனியம் எப்படி உண்மையான அற்புதமாக முடியும்? எடுத்துக்காட்டாக், ஈஸா நபி (அலை) அவர்கள் இறந்தவர்களை உயிர் பெறச் செய்தார் என்றால், உயிர் பெற்றவர்கள் உயிருடன் ஊரில் அங்குமிங்கும் நடமாடுவதையும், உண்பதையும், குடிப்பதையும், நான் செத்துப் பிழைத்தவன் என்று பேசி மகிழ்வதையும், செய்த பின் மீண்டும் உயிர் பெறுவதற்குள் தான் அனுபவித்த உணர்வுகளை, கண்ட காட்சிகளை கதை கதையாக பேசுவதையு, இஸ்ரவேலர்கள் தங்கள் கண்களால் கண்டும், காதால் கேட்டும், அறிவால் அறிந்த பின்பும் அதை எப்படி சூனியம் என்று மறுக்க முடியும்? 

இஸ்ரவேலர்கள் சூனியம் என்று மறுத்தார்கள் என்றால் (5:111) உண்மையில் அவர்கள் இறக்கவில்லை என்றும், இறைமறுப்பு எனும் இறப்பில் இருந்தவர்களை ஈமான் எனும் உயிர் கொடுத்து எழுப்பினார் என்பதால் அதை சூனியம் என்று அவர்கள் கூறினர் என்று தெளிவாக வில்லையா? இவ்வாறு ஆன்மீக மரணமடைந்தவர்களைத் தான் ஈஸா உயிர் கொடுத்து எழுப்பினார் என்பதை அறியாதவர்களை என்னவென்பது? 

சூனியம் என்ற ஒன்று இருப்பதாகவும், ஆனால் அதனை நபிமார்க்ளுக்குச் செய்யமுடியாது என பி.ஜே நம்புவதாகத் தெரிகிறது. அவர், இதர நம்பிக்கைகள் – எனும் தலைப்பில் சூனியம் பற்றிக் கூறும் போது சூனியத்தால் எதுவும் செய்யமுடியாது (2:102) என்றும், அதிகபட்சமாக உறவினர்களிடையே பிளவு ஏற்படுத்தலாம் (2:102) என்றும், நபிமார்களுக்கு – சூனியம் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். அப்படியானால் மனிதர்களுக்குச் செய்ய முடியும் என்றும் அதிகபட்சமாக உறவினர்களிடையே பிளவு ஏற்படுத்தலாம் என்றும் (2:102) பி.ஜே நம்புகிறார். 

சூனியம் என்ற ஒன்றுக்கு பி.ஜே சொல்கின்ற கருத்திற்கு திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரம் தர முடியுமா? சூனியத்தை நல்ல தமிழில் செய்வினை என்று கூறுவார். உண்மையில் செய்வினை (Active Voice) என்றும் செயப்பாட்டுவினை (Passive Voice) என்பவை மொழிகளின் இலக்கணத்தில்தான் உள்ளது. உண்மையில் பொது மக்கள் நினைப்பது போன்றோ அல்லது பி.ஜே கூறுகின்ற கருத்திலோ அப்படி ஒன்றும் இல்லை. அவை முழுக்க முழுக்க மூட நம்பிக்கை ஆகும். பி.ஜே இனிமேலாவது குரான் நபிவழியில் தூய இஸ்லாத்தை நாங்கள் போதிக்கிறோம். என்று வாய்கிழிய பேசுவதை நிறுத்துவாரா?
Read more »

Apr 19, 2014

இஞ்சீலும் சபூரும் வேதங்களா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. 

நம் பதில்:

ஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா? திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம்.

46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிளைப்பவர்களை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி வழங்குவதற்காகவும், (முந்தைய வேதங்களின் முன்னறிவிப்புகளை) உண்மைப்படுத்தக்கூடிய (வகையில்) அரபி மொழியிலுள்ள வேதமாகும். இதில் திருக்குர்ஆன் ஒரு வேதம் என்றும் கூறப்பட்டுள்ளது. இஞ்சீலைப் பற்றியோ, ஸபூரைப்பற்றியோ திருக்குர்ஆன் கூறவில்லை. இதற்கு முன்னர் என்று தவ்ராத் மட்டுமே கூறப்பட்டுள்ளது. 

46:31-31 குர்ஆனை செவியேற்க விரும்பிய ஜின்களுள் ஒரு குழுவினரை நாம் உம்மை நோக்கித் திருப்பிய நேரத்தை (நினைவு கூறுவீராக) அவர்கள் அங்கு (குர்ஆன் ஓதும் இடத்திற்கு) வந்திருந்த போது, ஒருவருக்கொருவர் மவுனமாக இரு(ந்து கேளு)ங்கள் என்று கூறினர். அது முடிவடைந்ததும் அவர்கள் தங்கள் சமுதாயத்தினரிடம் அவர்களை எச்சரித்தவர்களாக திரும்பிச் சென்றனர். 

அவர்கள் கூறினார்: சமுதாயத்தினரே! நாங்கள் மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டுள்ள ஒரு வேதத்தை செவியேற்றுள்ளோம் அது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துகின்றதும் உண்மையின் பக்கமும் நேர்வழியின் பக்கமும் வழிகாட்டுகின்றதும் ஆகும். 

இந்த வசனத்தில் மூசாவின் வேதத்துக்குப் பின்னர் திருக்குர்ஆன்தான் வேதம் என மூஸாவின் வேதம் மட்டும் கூறப்படுவதையும் காண்கிறோம். இதில் இஞ்சீலும், ஸபூரும் வேதங்கள் என்று கூறப்படவில்லை. 

28:49-50 எம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது மூசாவுக்குப் கொடுக்கபப்ட்டுள்ள போதனையை போன்றது இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் கேட்டனர். இதற்க்கு முன்னர் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா?.....

நீங்கள் உண்மையாளர்களாயின் இவ்விரு வேதங்களை விடச் சிறந்த நேர்வழியினை காட்டும் வேதமொன்றை நான் பின்பற்றுவதற்காக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள் என்று நீர் (முஹம்மது நபியே) கூறுவீராக. 

இந்த வசனங்களில் திருக்குரானுக்கு முன்னர் வந்த வேதம் என்பது மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட வேதமே என்றும் திருக்குர்ஆனும் தவ்ராத்தும் இரு போதனைகள் என்றும் கூறப்படுகிறது. இதில் ஸபூர், இஞ்சீல் பற்றி வேதம் என்று கூறப்படவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை என்பதை கவனிக்கவும். 

61:7 இல் மர்யமின் மகன் ஈஸா தன் சமுதாயத்தினரிடம் இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக்கூடியவன் என்று கூறியுள்ளார். 5:47 இக்கருத்தை ஆவது வசனம் கூறுகிறது. இவ்விரண்டு வசனங்களிலும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதராகவே வந்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டு வசனங்களிலும் ஸபூர் என்பது ஒரு வேதம் என்று கூறப்படவில்லை. ஸபூர் என்பது வேதம் என்றால் ஈஸாவுக்கு முன்னர் வந்தது அதுதான். அதனை உண்மைப்படுத்த வந்துள்ளேன் என்று ஈஸா நபி சொல்லியிருப்பார். அவ்வாறு சொல்லாததினாலும் தவ்ராத்தை உண்மைப்படுத்த வந்திருப்பதாக சொல்வதினால் ஸபூர் ஒரு வேதம் இல்லை என்பது தெளிவாகிறது. 

73:16 நாம் பிர்அவ்னிடம் ஒரு தூதரை அனுப்பியது போன்று நிச்சயமாக நாம் உங்களுக்கு சாட்சியாக இருக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். இதில் நபி (ஸல்) அவர்களுடன் தாவூது நபியோ, ஈஸா நபியோ கூறப்படததினால் இருவரும் வேதமுடைய நபிமார்கள் இல்லை என்று அறிக!

6:93 நாம் இறக்கிய இந்த மறை (திருக்குர்ஆன்) அருள் நிறைந்ததாகும். இது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக் கூடியது. இதில் தவ்ராத் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸபூரும் இஞ்சீலும் குறிப்பிடப்படவில்லை. 

5:111 வது வசனத்தில், நான் உமக்கு - ஈஸா நபிக்கு – வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இஞ்சீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப்பாரும்). இவ்வசனத்தில் தவ்ராத் வேதம் என்றும் இஞ்சீல் ஞானம் என்றும் விளங்குகின்றது. 43:65 - இல் நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று தான் கூறுகிறார். இதன் மூலம் தவ்ராத் வேதத்தின் ஞானத்தை அதாவது இஞ்சீலை கொண்டு வந்துள்ளேன் என்று விளங்குகிறது. 57:27 - இல் மர்யமின் குமாரர் ஈஸாவை(அவர்களைத்) தொடரச் செய்து, அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். 3:4; 3:49 - அவருக்கு (ஈஸாவுக்கு) வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான் என்று வருகிறது. இதில் வேதம் என்பது தவ்ராத்தையும், ஞானம் என்பது இன்ஜீலையும் குறிக்கிறது. 

47:17 நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும் ஆட்சியையும் நபித்துவத்தையும் வழங்கினோம். இதற்கு விளக்கமாக 5:45 -இல் நிச்சயமாக நேர்வழியும் ஒளியும் பெற்றிருந்த தவ்ராத்தை இறக்கினோம். (நமக்கு) கட்டுப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டு யூதர்களுக்கு தீர்ப்பு வழங்கினர். 

எனவே வேதம் என்பது தவ்ராத் என்பதும் இஸ்ரவேலில் வந்த ஈஸா நபியும் உட்பட எல்லா நபிமார்களும் இதனையே பின்பற்றி போதித்தனர் என்பதும் தெளிவாகிறது. 

வேதம் எனும் பொருளைத் தரும் அரபிச் சொல் கிதாப் என்பதாகும். இச்சொல் ஹஸ்ரத் மூஸா (அலை), ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) ஆகிய நபிமார்களுக்குத்தான் வருகிறது. அதாவது மூஸாவுக்கு ஒரு கிதாபை – வேதத்தைக் கொடுத்தோம் என்றும், முஹம்மதுக்கு ஒரு கிதாபை கொடுத்தோம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குரானில் எங்கும் தாவூதுக்கு ஒரு கிதாபைக் கொடுத்தோம்; ஈஸாவுக்கு ஒரு கிதாபைக் கொடுத்தோம் என்று கூறப்படாததினால் ஸபூரும் இஞ்சீலும் வேதம் இல்லை என்று தெளிவாகிறது. 

வேதம் எனும் பொருளைத்தரும் இன்னொரு சொல் சுஹ்பு ஆகும். இச்சொல்லும் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) (87:20) , ஹஸ்ரத் மூஸா (அலை) (53:37) , ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) (80:14-15; 98:3) ஆகிய நபிமார்களுடன்தான் வருகிறது. ஹஸ்ரத் தாவூது (அலை), ஹஸ்ரத் ஈஸா (அலை) ஆகிய நபிமார்களுடன் வரவில்லை. 53:37 இல் மூஸாவின் வேதத்திடம், 87:20 - இல் இப்ராஹீம், மூஸா ஆகியோர்களின் வேத நூல்களில் உள்ளது. 98:3 - இல் தூய வேதம் என்று திருக்குர்ஆனும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஸபூரும் இஞ்சீலும் சுஹ்பு என்று கூறப்படவில்லை. ஆனால் இப்ராஹீம் நபிக்கு சுஹ்பு கொடுக்கப்பட்டதாக 87:20 வது வசனம் கூறுகிறது. எனவே ஸபூரும் இஞ்சீலும் வேதம் இல்லை. 

35:26; 3:185 வசனத்தில் சுபுர் எனும் சொல் வேதத்தைக் குறிக்காது என்பது விளங்குகிறது. 3:185 - இல் உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களிலும் ஆகமங்களையும் (சுபுர்) ஒளிமயமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் பொய்யக்கப்பட்டனர். இதில் கிதாப் – வேதம் என்றும் சுபுர் – ஆகமம் என்றும் வருகிறது. இதே கருத்து 35:26 இல் சுபுர் என்பதும் கிதாப் என்பதும் வந்து இரண்டும் வெவ்வேறானவை என்று விளக்குகிறது. 

4:164; 17:56; 21:106 எனும் வசனங்கள் தாவூது நபிக்கு நாம் ஸபூரை வழங்கினோம் என்று வருகிறது. இந்த ஸபூர் என்னும் சொல் தாவூது நபிக்கு வழங்கப்பட்ட வேத நூல் இல்லை என்றும், 

அவை ஞான நூல்களைக் குறிக்கும் என்றும் 3:185; 35:26 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்கிறோம். இதற்க்கு முன் வந்த தூதர்கள் ஸபூரையும், ஒளிமயமான வேதத்தையும் கொண்டு வந்தனர் என்றும் 35:26; 3:185 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. இதில் வேதமும் ஸபூரும் தனித்தனியாகக் கூறப்படுவதால் ஸபூர் வேதம் இல்லை என்று தெரிகிறது. 

21:49 - நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பிரித்தறிவிக்கும் அடையாளத்தையும் ஒளியையும் இறையச்சம் உடையவர்களுக்கு ஞாபகமூட்டும் போதனைகளையும் வழங்கினோம். இதில் தவ்ராத் மட்டுமே புர்கான் என்றும், திக்ர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு புர்கான், திக்ர் என்று ஸபூரும், இஞ்சீலும் கூறப்படவில்லை. தவராத்தும் திருக்குர்ஆனுமே கூறப்பட்டுள்ளதால் அவை வேதங்கள் என்று அறியலாம். 

திருக்குர்ஆன் 3:51; 5:47; 61:7 ஆகிய வசனங்களில் ஈஸா நபி பற்றி வரும்போது அவர் தவ்ராத்தை மெய்ப்பிக்க வந்தவர் என்று கூறப்பட்டிருப்பதால், அவர் வேதமுடைய நபி இல்லை என்றும், வேதத்தை மெய்ப்பிக்க வந்த நபி என்றும் தெளிவாகிறது. மேலே கூறப்பட்டவற்றை தொகுத்துப் பார்த்தால், தவ்ராத்தும், திருக்குர்ஆனும் வேதங்கள் என்றும், ஸபூரும், இன்சீலும் வேதங்கள் இல்லை என்றும் உறுதியாகிறது.
Read more »

Apr 16, 2014

திருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அப்தில்லாஹ் தரும் தவறான விளக்கம்


அபூ அப்தில்லாஹ் ஆதாரம் எண் 3, 4

அபூ அப்தில்லாஹ் தன் நூலின் பக்கம் 22 முதல் 25 வரை, ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை; இனிமேல் மரணிப்பார் என்பதற்கு ஆதாரமாக 5:75, 3:144 வசனங்களை விளக்கியுள்ளார். 

“முஹம்மது தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா?” (திருக்குர்ஆன் 3:144) மேலும் மர்யம் உடைய குமாரர் மஸீஹ் இறைத் தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்பும் தூதர் பலர் சென்று விட்டார்கள். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர்.” (திருக்குர்ஆன் 5:75) 

அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பக்கம் 25இல் கடைசி பத்தியில் அப்படியாயின் அதன் பொருள் என்ன? 5:75 வசனம் இறங்கும் போது ஈஸா(அலை) மரணமடைந்துவிடவில்லை, பின்னர் மரணமெய்துபவர்களாக இருக்கிறார்கள். 3:144 வசனம் இறங்கி சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்களின் வபாத் சம்பவித்தது போல், 5:75 வசனம் இறங்கி, இதுவரை மரணமடையாத நிலையில் இருக்கும் ஈஸா(அலை) அவர்கள், உலகம் அழியும் முன் பூமிக்கு இறங்கி வந்து, வாழ்ந்து திண்ணமாக மடிந்து அடக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

மேற்சொன்ன 2 வசனங்களுக்கும் அபூ அப்தில்லாஹ் தவறாகப் பொருள் கூறியுள்ளார். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணித்த வேளையில் அன்னார் மரணிக்கவில்லை என ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களும், நபித்தோழர்களுள் ஒரு பகுதியினரும் நம்பினார். அச்சமயம் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்து திருக்குர்ஆனின் 3:145 வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இதில் முஹம்மது ஒரு தூதர் என்று கூறி, முஹம்மது நபி இறந்துவிட்டார் என்று கூறப்படவில்லை. மாறாக அன்னாருக்கு முன்னர் தோன்றிய தூதர்கள்தான் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று எடுத்துக் காட்ட, ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் முஹம்மது ஒரு தூதரே. அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் இறந்துவிட்டனர் என்று கூறி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நிரூபித்தார். அன்னார் இறக்கவில்லை. என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த உமர்(ரலி) அவர்களும் பிற நபித்தோழர்களும், அன்னார் இறந்துவிட்டார்கள் என்றும் ஏற்றுக் கொண்டனர். 

அதாவது, முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அந்த வசனத்தில் கூறப்படவில்லை. மாறாக அன்னார் ஒரு தூதர் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு முன்னர் வந்த தூதர்கள்தான் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று வெளிப்படையாக கூறாத இந்த வசனம் (3:145) அன்னார் இறந்துவிட்டார்கள் என்று பொருள் தந்து நபித்தோழர்களுக்கிடையே ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டு வந்துவிட்டது. இந்த அளவுகோலை நாம் 5:75 ஆம் வசனமாகிய ஈஸா(அலை) ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னர் வந்த தூதர்கள் இறந்துவிட்டனர் என்பதற்கும் பொருத்தினால் நமக்கிடையே நிலவும் கருத்துவேறுபாடும் நீங்கும். 3:145 வசனத்திற்கு நபித்தோழர்கள் எல்லோரும் அன்று பொருள் கொண்டதுபோல், 5:75 வசனத்திற்கும் பொருள் கொண்டால், ஈஸா நபி (அலை) அவர்களும் இறந்துவிட்டார் என்பது தெளிவாகும். 

மேலும் 5:76, 3:145 ஆகிய வசனங்களில் அவர்களுக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் சென்றுவிட்டனர் என்று பொருள் கொள்ளவேண்டுமேயொழிய அவருக்கு முன்னர் தூதர்கள் பலர் சென்றுவிட்டார்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவருக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் சென்று விட்டனர் என்று பொருள் கொண்டால்தான் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்கும் மரணம் உண்டு என்பது உறுதியாகும். மாறாக அவருக்கு முன்னர் தூதர்கள் பலர் சென்றுவிட்டனர் என்று பொருள் கொடுத்தால், முன்னர் உள்ள தூதர்களில் சிலர் செல்லவில்லை என்று பொருள் கொள்ளவேண்டியதுவரும். அப்படியாயின் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஈஸா(அலை) ஆகியோர் மரணிக்கவும் மரணிக்காமல் இருக்கவும் (அதாவது இனிமேலும் மரணிக்காமல் இருக்கவும்) வாய்ப்பு ஏற்படுகிறது. 

இதனைப் புரிந்து கொள்வதற்காக ஓர் உதாரணத்தை இங்கே காட்ட விரும்புகிறேன். முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர். அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் பலர் ஆண்களாக இருந்ததனர். இவ்வாறு திருக்குரானில் இல்லைஎன்றாலும் இதை ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னர் சில பெண்களும் தூதர்களாக இருந்தனர் என்றுதான் பொருள் கொள்ளமுடியும். ஆனால் முகம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர், அவருக்கு முன்னர் வந்த எல்லா தூதர்களும் ஆண்களாக இருந்தனர் என்று வந்தால் மட்டுமே, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் ஆண்கள்தான் என்று பொருள் கொள்ள முடியும். 

திருக்குர்ஆன் 5:76 வசனத்திற்கு அபூ அப்தில்லாஹ்வின் கற்பனை விளக்கத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் இவ்வசனத்தில் ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அதற்கு முன்னால் உள்ள வசனங்கள் அமைந்துள்ளன. 

திருக்குரானில் 5:73 இல், நிச்சயமாக மர்யமின் மகன் அல்லாஹ்தான் எனக் கூறுகிறவர்கள் திட்டவட்டமாக நிராகரிப்பவர்கள் ஆவர். மேலும் திருக்குர்ஆன் 5:74 இல் நிச்சயமாக, அல்லாஹ் மூவருள் ஒருவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்று கூறியவர்கள் நிராகரித்துவிட்டனர். 

இவ்விரு வசனங்களிலும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் என்றும் அல்லாஹ்வின் மகன் (சுதன்) என்றும் மக்கள் கூறியதை குப்ர் என்று அல்லாஹ் கண்டிக்கின்றான். 

மேலும் இவ்விருவசனங்களையும் தொடர்ந்து 5:76 இல் “மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னாலுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர். அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்” என அல்லாஹ் கூறுகின்றான். 

முதலில் 5:73, 74 வசனங்களில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கடவுள் என்றும் கடவுள் குமாரன் என்றும் மக்கள் நம்புவதை மறுத்து, அதாவது அவர் கடவுளோ அல்லது கடவுளின் குமாரரோ இல்லை என்று நிரூபிக்க அதற்கான நான்கு காரணங்களை 5:76 வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். அதாவது, 
  • அவர் ஒரு தூதர் மட்டுமே. எனவே அவர் கடவுள் இல்லை. 
  • அவருக்கு முன்னர் வந்த தூதர்களைப் போல் ஈஸாவும் இறந்துவிட்டார். இறந்தவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுளுக்கு இறப்பு இல்லை. எனவே அவர் கடவுள் இல்லை.
  • அவர் மர்யத்தின் மகனாவார். எனவே அவர் கடவுள் குமாரர் அல்ல. மேலும் கடவுளுக்குப் பிறப்பு இல்லை. ஒரு பெண்ணுக்கு பிறந்தவர் கடவுளும் இல்லை. 
  • ஈஸா (அலை) அவர்களும் அவரின் தாயாரும் உணவு உண்டனர். எனவே அவர் கடவுள் இல்லை. காரணம் கடவுளுக்கு உணவு தேவை இல்லை. உணவின் தேவைக்கு உட்பட்டவர் கடவுளும் இல்லை. 
இவ்வாறு 5:76 வசனத்தில் ஈஸா(அலை) கடவுள் இல்லை என்பதை விளக்குவதற்கு நான்கு கருத்துக்களைக் கூறிய இறைவன் அதில் ஒன்றாக் ஈஸாவின் மரணத்தையும் குறிப்பிடுகின்றான். 

இவ்வாறு ஒவ்வொன்றையும் காரண காரியத்துடன் கூறும் திருக்குரானுடைய அழகையும் ஆழிய ஞானத்தையும் சிந்தித்துப் பார்க்காமல் முல்லாக்களைப் பின்பற்றி வெறும் கற்பனை கிஸ்ஸாக்களை ஈஸா நபியின் பெயரில் அவிழ்த்துவிட்டுள்ளார் அபூ அப்தில்லாஹ். பரிதாபம்!

5:76 வசனத்தில் கூறப்பட்டுள்ள நான்கு கருத்துக்களில் இரண்டாவது கருத்தாகிய, எல்லா தூதர்களையும் போல ஈஸாவும் மரணித்துவிட்டார் என்று தெளிவாகக் கூறியிருந்தும், அபூ அப்தில்லாஹ் அவர்கள் இனிமேல் தான் ஈஸா நபி (அலை) மரணிப்பார் என்று எழுதியிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாகும். 

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் நிலவி வந்த இதுபோன்ற தவறான கருத்துக்களை திருக்குர்ஆன் மறுத்து உண்மையை நிலைநாட்டி உள்ளது. கிறித்தவர்கள் மர்யத்தின் மகனான ஈஸா(அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுள் குமாரன் என்றும் கூறி வந்தனர். இதனை மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் மறுக்கிறது. ஈஸா(அலை) இனிமேல்தான் மரணிப்பார் என்றால், அவர் கடவுள் இல்லை என்ற வாதம் எடுபடாது. ஈஸா நபி (அலை) மரணித்த பிறகே இந்த வாதம் முழுமையாகும். தௌஹீதுவாதி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அபூ அப்தில்லாஹ் தௌஹீதை வலியுறுத்தும் இந்த இறைவாக்கை மறுக்கின்றார். 

திருக்குர்ஆன் தோன்றும் போது ஏறக்குறைய 600 ஆண்டுகளும், இன்று ஏறக்குறைய 2000 ஆண்டுகளும் ஆகிவிட்டது. ஒரு மனித தூதர் 2000 ஆண்டுகளாக இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் அவர் அவர் கடவுள்தான் ஏனென்றல் “ நபியே உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் மிக நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லை. நீர் இறந்து அவர்கள் உயிரோடு இருப்பதா” (21:35) என்ற வசனத்தின்படி எந்த மனிதருக்கும் நீண்ட ஆயுள் இல்லை என்பதும் ஈஸா(அலை) ஒரு மனிதர். எனவே அவரும் நபி (ஸல்) காலத்தில் உயிரோடு இல்லை என்பதும் தெளிவாகிறது.

அபூ அப்தில்லாஹ் தனது நூலில் 24 வது பக்கத்தில் 5:76 இறை வசனம் மூலம் ஈஸா(அலை) அவர்களின் மரணம் குறித்து அன்றும் மக்களிடையே சந்தேகம் நிலவியது, ஈஸா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூல உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவரா? மரணமற்றவராயின் அல்லாஹ்வுக்கு இணையாகுமே என காதியானிகள் இன்று கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம் என்று எழுதியுள்ளார். (பக்கம் 24), மேலும் (3:144) இந்த இறைவசனம் இறங்கியவுடன் குறைஷி குப்பார்கள், இன்று காதியானிகள் ஈஸா(அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று 5:75 வசனத்திற்கு பொருள் கொள்வது போல் 3:144 வசனத்திற்கு பொருள் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கவே, அவர்கள் உஹது யுத்தக்களத்தில் மாண்டு விட்டார்கள் என்ற வதந்தியைப் பரப்பினார்கள், ஆனால் பின்னர் குறைஷிக் காபிர்களும் தெள்ளத் தெளிவாக 3:144 வசனத்திற்கு பொருள் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிடவில்லை, இனிதான் இறப்பார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்கள்.... (பக்கம் 25) மேலும் 5:75 வசனம் இறங்கி இதுவரை மரணமடையாத நிலையிலிருக்கும் ஈஸா(அலை) அவர்கள் உலகம் அழியும் முன் பூமிக்கு இறங்கி வந்து வாழ்ந்து திண்ணமாக மடிந்து அடைக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது, அதன் பின்னரும் ஈஸா (அலை) அவர்கள் மீது கொண்ட பாசம், பற்று காரணமாக தம் நிலைமாறி மக்கள் ஈஸா(அலை) அவர்கள் மரிக்கவில்லை என்றும், முன்பு போல் திரும்பவும் வருவார்கள் என்றும் கூறத் தலைப்படுவார்கள், அத்தருணத்தில் இந்த வசனம் ஓதிக்காட்டப்படும்; ஈஸா(அலை) அவர்களின் மரணம் உறுதி செய்யப்படும், பக்கம் (25, 26)

நம் பதில்: 

கடந்தகால, எதிர்கால ஞானம் அபூ அப்தில்லாஹ்வுக்கு எப்படி கிடைத்தது? மேலே சொல்லப்பட்ட கற்பனை நயம் செறிந்த கதைகளுக்கு ஹதீது சான்றுகள் இருப்பின் தருமாறு அபூ அப்தில்லாஹ்விடம் வேண்டுகிறேன். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்வது வழிகேடேயன்றி வேறில்லை. 

திருக்குர்ஆன் 3:145 வசனம் பற்றிய விளக்கம்: 

முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தோன்றிய எல்லாத் தூதர்களும் மரணமடைந்துவிட்டனர். எனவே அவர் மரணமடைந்துவிட்டாலோ கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களா? (3:145) 

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய எல்லா தூதர்களும் மரணித்திருந்தால் மட்டுமே இந்த வசனத்தில் இவ்வாறு கூற முடியும். அவ்வாறு அனைவரும் மரணித்திருந்தால் தான் முஹம்மது (ஸல்) அவர்களின் மரணமும் உறுதி என்று பொருள் கொள்ளமுடியும். மேலும் இவ்வசனத்தில் வரும் அவர் மரணித்துவிட்டாலோ கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களா என்ற பகுதி அன்னார் போரில் கொல்லப்பட்டு விட்டார் என்று வதந்தி பரவியதன் காரணமாக பலர் நிலைகுலைந்து மனம் தடுமாறி விட்டனர் என்பதையும், திரும்பிச் செல்லத் தொடங்கினர் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறக்கமாட்டார்கள் என்று எண்ணியிருந்தனர். என்பதனையும் தெளிவாக்குகிறது. எனவே எல்லாம் அறிந்த அல்லாஹ் திருக்குர்ஆன் 3:145 வசனத்தை இறக்கினான். 

இந்த வசனத்தின் மூலம் முஹம்மது ஒரு மனிதர் ஆவார். அவர் இறக்காமல் இருக்க கடவுள் அல்லர். முஹம்மதுக்கு முன்னர் தோன்றிய எல்லா தூதர்களும் இறந்துவிட்டனர். அவர்களுள் யாராவது ஒருவர் இறக்காமல் இன்று உயிரோடு இருந்தால்தானே இவரும் இறக்காமல் இருக்க முடியும். முஹம்மதுக்கு முன்னர் வந்த எல்லா தூதர்களும் இறந்ததுபோல் இவரும் இறப்பார் என்ற கருத்தை தெரிவிக்கிறது. இவ்வாறு இந்த வசனம் ஈஸா நபி (அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்துவிடுகிறது. 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வசனம் இறங்கி 9 வருடங்களுக்குப் பின் மரணம் அடைகிறார்கள். அப்போது அன்னார் மரணிக்கவில்லை என்று சிலர் கருதினர். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும் அன்னார் மூஸா(அலை) அவர்கள் 40 நாள்கள் தமது சமுதாயத்தைப் பிரிந்து இறைவனைக் காண்பதற்குச் சென்றதைப் போன்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தற்காலிகமாக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள். மீண்டும் வந்து அன்னார் இறந்துவிட்டதாகக் கூறிய முனாபிக்குகளைத் தண்டிப்பார் என்றும் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 

இதிலிருந்து நபித்தோழர்கள் மத்தியில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் இறக்காமல் இறைவன் அளவில் உயர்த்தப்பட்டார்கள் என்ற தவறான நம்பிக்கை இருக்கவில்லை என்று தெளிவாகிறது. அப்படி இருந்திருந்தால் அவர்கள் ஈஸா(அலை) அவர்களைப் பற்றிதான் கூறியிருப்பார்கள். அவ்வாறு ஈஸா(அலை) அவர்களைப் பற்றி கூறாமல் மூஸா(அலை) அவர்களின் சம்பவத்தைக் கூறி இருப்பதனால் நபித்தோழர்கள் ஈஸா(அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இருந்தார்கள் என்று உறுதியாகிறது. 

பின்னர் ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் வந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்து முத்தமிட்டு 3:145 வசனத்தை ஓதினார்கள். இங்கே ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர். அவருக்கு முன்னர் தோன்றிய எல்லா தூதர்களும் மரணித்து விட்டனர் என்ற வசனத்தை ஓதி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்தார்கள். 

மேலும் யார் முகம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்; அந்த முஹம்மது இறந்துவிட்டார் என்றும் ஹஸ்ரத் அபூபக்கர் (ரயில்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, எண். 4454) இதிலிருந்து இறந்துபோன முஹம்மது (ஸல்) அவர்களை இறக்கவில்லை என்று கருதினாலோ, அல்லது அபூ அப்தில்லாஹ்வின் கற்பனையைப் போன்று இனிமேல்தான் இறப்பார் என்று கருதினாலோ அது முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குவதற்கு ஒப்பாகும் என்றுதான் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதன்படி ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இறக்கவில்லை; ஆயினும் இறப்பவர்களே என்று கூறுவதன் மூலம் அபூ அப்தில்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்கள் இறக்கவில்லை; ஆயினும் இறப்பவர்களே என்று கூறுவதன் மூலம் அபூ அப்தில்லாஹ் ஈஸா(அலை) அவர்களை வணங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
Read more »

Apr 14, 2014

முஹம்மது அஸத் திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தில் ஈஸா நபியின் மரணம்




Nothing did I tell them beyond what Thou didst bid me [to say]: 'Worship God, [who is] my Sustainer as well as your Sustainer.' And I bore witness to what they did as long as I dwelt in their midst; but since Thou hast caused me to die, Thou alone hast been their keeper: for Thou art witness unto everything. Surah 5 - Al-Maida , Ayah 116 Commentary - 139

Sc., "after Jesus' death": this is fully evident from Jesus' subsequent reference, in the past tense, to his own death ("since Thou hast caused me to die") in verse {117}. On the other hand, the verb qala (lit., "He said") can also have the meaning of "He will say" (see note [141] below). Asad - Sura 3, Al-i'Imran Ayah 55

Lo! God said: "O Jesus! Verily, I shall cause thee to die, and shall exalt thee unto Me, and cleanse thee of [the presence of] those who are bent on denying the truth; and I shall place those who follow thee [far] above those who are bent on denying the truth, unto the Day of Resurrection. In the end, unto Me you all must return, and I shall judge between you with regard to all on which you were wont to differ.


Cf. 3:55, where God says to Jesus, "Verily, I shall cause thee to die, and shall exalt thee unto Me." The verb rafa'ahu (lit., "he raised him" or "elevated him") has always, whenever the act of raf' ("elevating") of a human being is attributed to God, the meaning of "honouring" or "exalting". Nowhere in the Qur'an is there any warrant for the popular belief that God has "taken up" Jesus bodily, in his lifetime, into heaven. The expression "God exalted him unto Himself" in the above verse denotes the elevation of Jesus to the realm of God's special grace - a blessing in which all prophets partake, as is evident from19:57, where the verb rafa'nahu ("We exalted him") is used with regard to the Prophet Idris. (See also Muhammad 'Abduh in Manar III, 316 f., and VI, 20f.) The "nay" (bal) at the beginning of the sentence is meant to stress the contrast between the belief of the Jews that they had put Jesus to a shameful death on the cross and the fact of God's having "exalted him unto Himself". Surah 4 - An-Nisaa , Ayah 157 Commentary - 171

Thus, the Qur'an categorically denies the story of the crucifixion of Jesus. There exist, among Muslims, many fanciful legends telling us that at the lastmoment God substituted for Jesus a person closely resembling him (according to some accounts, that person was Judas), who was subsequently crucified in his place. However, none of these legends finds the slightest support in the Qur'an or in authentic Traditions, and the stories produced in this connection by the classical commentators must be summarily rejected. They represent no more than confused attempts at "harmonizing" the Qur'anic statement that Jesus was not crucified with the graphic description, in the Gospels, of his crucifixion. The story of the crucifixion as such has been succinctly explained in the Qur'anic phrase wa-lakin shubbiha lahum, which I render as "but it only appeared to them as if it had been so" - implying that in the course of time, long after the time of Jesus, a legend had somehow grown up (possibly under the then-powerful influence of Mithraistic beliefs) to the effect that he had died on the cross in order to atone for the "original sin" with which mankind is allegedly burdened; and this legend became so firmly established among the latter-day followers of Jesus that even his enemies, the Jews, began to believe it - albeit in a derogatory sense (for crucifixion was, in those times, a heinous form of death-penalty reserved for the lowest of criminals). This, to my mind, is the only satisfactory explanation of the phrase wa-lakin shubbiha lahum, the more so as the expression shubbiha li is idiomatically synonymous with khuyyila li, "[a thing] became a fancied image to me", i.e., "in my mind" - in other words, "[it] seemed to me" (see Qamus, art. khayala, as well as Lane II, 833, and IV, 1500).

Read more »

தவப்பா - திருக்குர்ஆன் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களின் விளக்கம்.


திருக்குர்ஆன் 

116.وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب 117.
ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد 

"மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம் அல்லாஹ்வை அன்றி என்னையும் ஏன் தாயாரையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லாஹ் கெட்ட பொழுது அவர் நீ தூயவன், எனக்கு தகாததை நான் கூறியதில்லை. நான் அவ்வாறு கூறியிருப்பின் நிச்சயமாக நீ அதனை தெரிந்திருப்பாய். என் உள்ளத்திலுள்ளதை நீ அறிவாய் உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவனாவாய். நீ எனக்கு கட்டளையிட்டப்படி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு நான் சாட்ச்சியாக இருந்தேன், ஆனால் நீ என் உயிரை கைப்பற்றிய பின் நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய் என்று கூறினார்.(5:116,117)

நபி (ஸல்) அவர்களின் விளக்கம் 

ثُمَّ يُؤْخَذُ بِرِجَالٍ مِنْ أَصْحَابِي ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ فَأَقُولُ أَصْحَابِي فَيُقَالُ إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ عِيسَى ابْنُ مَرْيَمَ ‏{‏وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَىْءٍ شَهِيدٌ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏الْعَزِيزُ الْحَكِيمُ‏}‏‏"‏‏.‏ قَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ ذُكِرَ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ عَنْ قَبِيصَةَ قَالَ هُمُ الْمُرْتَدُّونَ الَّذِينَ ارْتَدُّوا عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ، فَقَاتَلَهُمْ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه‏.
(3447 صحيح البخاري كتاب التفسير)

"என் தோழர்களில் சிலர் வலப் பக்கமும் இடப் பக்கமும் கொண்டு செல்லப் படுவார்கள். நான் இவர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். இவர்களை விட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள் தன் கால் சுவடுகளின் வழியே திரும்பி சென்று கொண்டிருந்தார்கள்." என்று சொல்லப்படும் அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்கள் சொன்னது போன்றே நான் இவர்களிடையே வாழ்ந்து வந்த வரை நான் இவர்களை கண்காணித்து கொண்டிருந்தேன். நீ என்னை மரணிக்க செய்த பிறகு நீயே இவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்............(புஹாரி 3447)

أَلاَ وَإِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ يَا رَبِّ أُصَيْحَابِي‏.‏ فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ‏.‏ فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ ‏{‏وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ‏}‏ فَيُقَالُ إِنَّ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ ‏"( 4670 صحيح البخاري كتاب التفسير)
Read more »

Apr 12, 2014

நபி கோழையாவார்களா? - அபூ அப்தில்லாஹ்விற்கு பதில்



அபூ அப்தில்லாஹ் 14 வது பக்கத்தில் எழுதுகிறார்

காதியானிகள் சொல்வதுபோல் உண்மையான ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டிருந்து இறக்கப்பட்டிருந்தால்,

  • அந்நிலையில் அவர்களை விட்டுவிட்டு அவர்களின் சீடர்கள் பிரிந்து சென்றிப்பார்களா?
  • ஈன்றெடுத்த தாயும், தன் உண்மை சீடர்களும் அறியாமல் ஈஸா(அலை) காஷ்மீருக்கு ஓடி ஒளிந்துகொண்டார்களா?
  • பெற்ற தாயையும், உற்ற சீடர்களையும் மறந்து தனக்குற்ற நபித்துவப் பணியையும் புறக்கணித்து ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றியிருபது வயது வரை வாழ்ந்திருப்பார்களா?
  • ஈஸா(அலை) உண்மை இறைத்தூதர், மிர்ஸா குலாம் அஹ்மதைப் போல் போலி நபி அல்ல சிந்திக்க வேண்டுகிறோம். 
  • காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன 
  • நபி கோழையாவார்களா?

நம் பதில்

அபூ அப்தில்லாஹ்விற்கு திருக்குர்ஆன் ஞானமும் நபிமார்களின் வரலாறும் அறவே தெரியவில்லை என்பதை பக்கம் 14 ல் உள்ள அவரது கேள்விகள் அம்பலப்படுத்துகின்றன. 

திருக்குர்ஆன் 5:22-25 வசனங்களில் மூஸா (அலை) தன் சமுதாயத்தை நோக்கி, என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ள புனித பூமியில் நுழையுங்கள். மேலும் புற முதுகு காட்டாதீர்கள் என்று கூற,

அதற்கு அவர்கள் மூஸாவே! கொடிய ஆற்றல் மிக்கவர்கள் அதில் இருக்கின்றார்கள் அவர்கள் அதில் இருக்கின்றவரை நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று அவர்களுடன் போரிடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருப்போம் என்று கூறினார்கள். 

மூஸா நபி (அலை) அவர்களின் சீடர்களின் நிலையைப் பாருங்கள்! திருக்குர்ஆன் 23:51 வது வசனத்தில். 

நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சம் – அடையாளம் அளித்தோம். 

ஆவைனாஹுமா – இச்சொல் திருக்குர்ஆனில் ஈமானையும் உயிரையும் காக்க ஹிஜ்ரத் செய்து வேறொரு இடத்தில் தஞ்சம் புகுதல் எனும் பொருளில் வருவதைக் காணலாம். குகையில் இளைஞர்கள் அடைக்கலம் புகுந்ததையும், முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் புகுந்ததையும் திருக்குர்ஆன் கூறுகிறபோது இச்சொல்லையே பயன்படுத்துகிறது. 

எனவே, ஈஸா நபி(அலை) அவர்களும், மர்யம்(அலை) அவர்களும் அல்லாஹ்வின் கட்டளைப்படி காஷ்மீரில் அடைக்கலம் புகுந்தனர் என்பது தெளிவாகிறது. 

திருக்குர்ஆன் 8:6, 9:40 ஆகிய வசனங்களில் நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) செய்கிறார் என்று வருகிறது. அபூ அப்தில்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றும் நபி கோழையாவார்களா? என்றும் எண்ணுவாரா? 

திருக்குர்ஆன் 21:88 இல் மீனுடையவர் (யூனுஸ் நபி) கோபித்துக் கொண்டு சமுதாயத்தை விட்டு விட்டு கப்பலில் ஏறிச்செல்கிறார். எனவே அவர் நபியில்லை என்று அபூ அப்தில்லாஹ் கருதுவாரா? 

திருக்குர்ஆன் 27:11 இல் மூஸா நபி(அலை) தன் கைத்தடியைப் பாம்பெனக் கண்டு பின்வாங்கிச் செல்கிறார். இறைவன் மூஸாவே! நீர் அஞ்சவேண்டாம் எனக் கூறினான். திருக்குர்ஆன் 20:67-68 இல் சூனியக்காரர்களின் கயிறுகளும், கம்புகளும் மூஸா நபியின் கண்களுக்குப் பாம்பாகக் காட்சியளிக்கிறது. மூஸா நபி (அலை) தன் மனதிற்குள் அச்சத்தை உணர்ந்தார் என்று வருவதால், அபூ அப்தில்லாஹ் மூஸா நபியை கோழை என்றும் நபியில்லை என்றும் நம்புவாரா?
Read more »

Apr 11, 2014

தவப்பா - மரணம்


நபி (ஸல்) அவர்களால் நீதி தீர்ப்பவராக முன்னறிவிக்கப்பட்டவராகவும் வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இதனை கீழ்வருமாறு தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

"திருக்குரானில் எல்லா இடங்களிலும் தவப்பீ என்பதன் பொருள்,மரணம் மற்றும் ரூஹை கைப்பற்றுதல் என்பதேயாகும். கடைசியாக குறிப்பிட்ட இரு வசனங்கள் வெளிப்படையில் தூக்கம் பற்றியதாக இருக்கின்றன என்றாலும், இந்த இரு வசனங்களிலும் தூக்கம் என்ற கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்த இடத்திலும் உண்மையான நோக்கமும் குறிக்கோளும் மௌத்(மரணம்) தான்: மரணத்தில் ரூஹ் கைப்பற்றப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவது நோக்கமாகும், ...... மற்றபடி சந்தேகமின்றி உறுதியான முறையில் ஆரப்பத்திளிருந்து கடைசி வரை திருக்குர்ஆனின் சொல்வழக்கில் எல்லா இடத்திலும் தவப்பீ என்ற சொல்லுக்கு மரணம் என்றே பொருள் இருப்பது நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. பிறகு விவாதத்திற்குரிய இரு வசனங்களில் (3:56, 5:118) மட்டும் திருக்குரானின் சொல் வழக்கிற்கு மாற்றமாக சுயமாக ஒரு பொருளை இட்டுக்கட்டி கூறுவது மார்க்கமிழந்த நிலையும் திரித்து கூறுவதும் அல்லாமல் வேறு என்ன?"(ரூஹானீ கஸாயின் தொகுதி3பக்கம் 269)

திருக்குர்ஆன் வசனங்கள் : - 

2:234 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

2:240 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் 'ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற் றப்படாமல், வசதிகள் வழங்கப்பட வேண்டும்' என மரண சாசனம் செய்ய வேண்டும். தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

3:193 ''உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங் களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!'' (என்றும் கூறுவார்கள்.)

4:15 உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்! அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்!

4:197 தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, ''நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். ''நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று இவர்கள் கூறுவார்கள். ''அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?'' என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

6:61 அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

7:37 அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர் களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களைக் கைப்பற்ற நமது தூதர்கள் அவர்களிடம் வரும் போது ''அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று கேட்பார்கள். ''எங்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். ''நாங்கள் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம்'' எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

7:126 ''எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ''எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.

8:50 (ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, ''சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!'' என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

10:46 (முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.

10:104 'மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வை யன்றி நீங்கள் வணங்குவோரை வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்ற வுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்டவனாக இருக்கக் கட்டளையிடப் பட்டுள்ளேன்' என்று கூறுவீராக!

12:101 'என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!' (என்றும் கூறினார்)

13:40 (முஹம்மதே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ (அதைப் பற்றி உமக்கென்ன?) எடுத்துச் சொல்வதே உமது கடமை. விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

16:28 தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, 'நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

16:70 அல்லாஹ்வே உங்களைப் படைத் தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாத வராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

22:5 மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படு வதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங் களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்ப டுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படு வோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

32:11 'உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்' என்று கூறுவீராக!

40:67 அவனே உங்களை மண்ணிலிருந்தும பின்னர் விந்துத் துளியிலிருந்தும் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின் னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்)

40:77 (முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.

47:27 அவர்களின் முகங்களிலும், பின் புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்

3:56- ல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உம்மை மரணிக்க செய்வேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கொடுத்திருப்பது நம் கூற்றுக்கு மேலும் சேர்ப்பதாக உள்ளது. ( புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273)

தவப்பீ என்ற சொல்லுக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளையே கொடுத்துள்ளார்கள். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:"என் சமுதாயத்தில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப்பக்கத் (திலுள்ள நரகத்) திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள் எனக் கூறுவேன். அதற்க்கு, இவர்கள் உங்களு (டைய மரணத்து) க்குப்பின் என்ன புதுமையை உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது' என்று கூறப்படும். அப்போது நான் நல்லடியாரான (ஈஸா அலை ஹிஸ்ஸலாம்) கூறியதைப் போன்று நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தேன்; நீ எனக்கு மரணத்தை தந்த போது நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்போது (என்னிடம்) நீர் இவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிக்கால்களின் வழியே மார்க்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர் எனக் கூறப்படும். (புஹாரி 3447,4625) ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 5:118)
Read more »