அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Dec 24, 2013

இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தன்னை அல்லாஹ் என்று வாதிதார்களா?


ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் 578 ஆம் பக்கத்தில் அவர் குறிப்பிடுகின்றார்.

"நான் ஒரு நாள் இல்லாமல் போய்விட்டேன். அல்லாஹ் எனக்குள் வந்துவிட்டான். அப்போது எனக்கு என்ன தோன்ற ஆரம்பித்ததென்றால். நான் தான் இந்த வானத்தைப் படைத்தேன். பூமியைப் படைத்தேன்."

இதை தொடர்ந்து இவர்  இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி விமர்சனம் செய்தவாறு, பாருங்கள் இவர் தன்னை இறைவனுடைய மகன் என்று மட்டும் சொல்லவில்லை, பிர் அவ்ன் எப்படி தன்னை இறைவன் என்று சொன்னானோ, அது போல இவர் தன்னை அல்லாஹ்வாகிவிட்டதாக சொல்கிறார். என்று இவர் குறிப்பிடுகின்றான்.

இது ஒரு கனவாகும். கனவு என்று அவர்களே கூறுகிறார்கள். ர அய்து பில் மனாமி நான் கனவில் கண்டேன். கஷ்ப் காட்சிகளுக்கு நேரடியாக பொருள் கொள்வது மூடத்தனமாகும். அதன் அடிப்படையில் காலத்தின் மகத்தான ஓரிறைக் கொள்கை உடையவர்கள் மீது ஷிர்க் குற்றச்சாட்டு சுமத்துவது முற்றிலும் கொடுமையாகும். எதிரிகள் எந்த நூலிலிருந்து இந்த வார்த்தையை எடுத்து ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இறைவனுக்கு நிகராக தன்னை கூறியுள்ளார்கள் என நிரூபிக்க முயன்றுள்ளார்களோ அதே நூலில் அந்த இடத்தில், இவ்வாறான இறையறிவிப்புகள் ஓர் இறையடியாருக்கு கிடைத்தால் அவற்றிக்கு நேரடி பொருள் கொடுப்பதில்லை என்பதை இமாம் மஹ்தி(அலை) அவர்களே நிரூபிக்கின்றார்கள். இந்த விஷயத்தை மறைப்பது எந்த அளவுக்கு அநீதி, மேலும் கிறிஸ்தவர்களை நோக்கிக் கூறுகிறார்கள்.: இயேசுவிற்கு கிடைக்கப்பெற்ற எந்த இறையறிவிப்புகளிலிருந்து அவரை நீங்கள் கடவுளாக்குகின்றீர்களோ அவரை விட அதிகமதிகமாக எனக்கும் இறையறிவிப்புகள் கிடைக்கின்றன. இதை விட அதிகமாக எமது தலைவர் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறையறிவிப்புகள் கிடைத்தன. அவற்றின் மூலமாக அன்னாரை பெரும் கடவுளாக நிரூபிக்க முடியும். அவ்வாறு இருந்தும் இந்த இறையறிவிப்புகளுக்கு நேரடி பொருள் கொடுத்து தூய நபி (ஸல்) அவர்கள் நவூதுபில்லாஹ் தமக்கு இறைவன் என்ற அந்தஸ்தை வழங்காதிருக்கும்போது இயேசுவின் இறைமை(கடவுள் தன்மை) எவ்வாறு நிரூபணமாகும்? என்று கிறிஸ்தவர்களைப் பார்த்து இமாம் மஹ்தி(அலை) அவர்கள் கேட்கிறார்கள். அசல் வாக்கியத்தை கீழே தருகிறோம்.

“நான் எனது ஒரு கஷ்பில் (ஆன்மீகக் காட்சியில்) என்னை இறைவனாகப் பார்த்தேன். இறைவன் தான் என உறுதி கொண்டேன். எனக்கென எந்த விருப்பமும், எந்த எண்ணமும் எந்த செயலும் இருக்கவில்லை. நான் துளையுடைய ஒரு பாத்திரத்தைப் போல் ஆகிவிட்டேன். அல்லது ஒரு பொருள் தன்னுள் அடக்கிக் கொண்ட மற்றொரு பொருளைப் போல் ஆகிவிட்டேன். எந்த அளவுக்கென்றால், அந்த பொருளில் எந்த அடையாளமும் எஞ்சியிருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் ரூஹ் என்னை சூல்வதாகப் பார்க்கிறேன். எனது உடலில் அந்த ரூஹ் முற்றிலும் ஆட்கொண்ட பின்பு எனது உடலை பார்க்கிறேன். எனது கைகள் அவனது கைகளாக, எனது கண் அவனது கண்ணாக எனது காது அவனது காதாக, எனது நாவு அவனது நாவாக மாறியிருந்தது. முற்றிலும் அவனுள் மாய்த்துவிடும் அளவுக்கு எனது இறைவன் என்னைப் பிடித்தான். அவனது வல்லமை மற்றும் ஆற்றல் என்மீது ஆர்ப்பரிக்கிறது. அவனது இறை பண்பு என்னுல் அலை மோதவும் கண்டேன். கண்ணியமிக்க இறைவனின் கூடாரம் என் உள்ளத்தில் நாலாப்புறமும் நாட்டப்பட்டது. வல்லமைமிக்க அரசன் எனது உள்ளத்தை தூலாக்கிவிட்டான். இவ்வாறு நான் நானாக இல்லை. எனது எந்தவொரு சொந்த விருப்பமும் எஞ்சியிருக்கவில்லை. எனது கட்டடம் விழுந்துவிட்டது. மேலும் ரப்புல் ஆலமீன் கட்டடம் தென்படத் துவங்கியது. இறை பண்பு மிக அழுத்தமாக என்மீது மேலோங்கியது. நான் உச்சி முதல் உள்ளங்கால்வரை அவன் பக்கம் ஈர்க்கப்பட்டேன்.

பின்னர் மூடப்படாத ஒரு உட்பொருளைப் போல் நான் ஆகிவிட்டேன். மேலும் தூசியில்லாத எண்ணெய் போல் ஆகிவிட்டேன். எனக்கும் என் நப்சிற்கும் இடையே பிளவு ஏற்படுத்தப்பட்டது. எனவே நான் கண்ணிற்கு தென்படாத பொருளைப் போல் ஆகிவிட்டேன். அல்லது ஆற்றில் கலந்த நீர்த்துளி ஆற்றில் மறைந்து போவதைப் போல் ஆகிவிட்டேன். இந்நிலையில் இதற்குமுன் நான் என்னவாக இருந்தேன். மேலும் என்னுடைய வடிவம் என்னவாக இருந்தது என்பதை நான் அறியவில்லை. இறை பண்பு  என் நாடிகளிலும் நரம்புகளிலும் ஊடுருவிவிட்டது. மேலும் நான் என்னிடமிருந்து முழுமையாக தொலைந்துவிட்டேன். மேலும் அல்லாஹ் எனது அனைத்து உறுப்புகளையும் தன பணிகளில் ஈடுபடுத்தினான். மேலும் எந்த அளவிற்கு வலிமையுடன் என்னை கைப்பற்றினான் என்றால் இதைவிட அதிகம் சாத்தியமில்லை. எனவே அவனுடைய கைப்பிடியில் நான் ஒன்றுமில்லாமல் போனேன். மேலும் நான் அந்த நேரத்தில் என்னுடைய உறுப்புகள் என்னுடையதல்ல: மாறாக அல்லாஹ்வின் உறுப்புகள் என்று உறுதிகொண்டேன். மேலும் எனது ஆற்றல்கள் ஒன்றுமில்லாமல் போனது. எனது வடிவத்திலிருந்து நான் முற்றிலும் வெளியேறிவிட்டேன். இனி எந்தவொரு இணையும், தடுக்கக் கூடியவனும் இல்லை என நான் எண்ணினேன். இறைவன் என்னுள் நுழைந்துவிட்டான். மேலும் என்னுடைய கோபம் மற்றும், மென்மை, தன்னடக்கம், அசைவு மற்றும் அமைதி அனைத்தும் அவனுடையதாகிவிட்டது. அந்நிலையில் நான், நாம் ஒரு புதிய திட்டம், புதிய வானம் மற்றும் புதிய பூமியை விரும்புகிறோம் எனக் கூறினேன். எனவே நான் வானத்தையும் பூமியையும் மொத்தமாகப் படைத்தேன். அந்தப் படைப்பில் எந்தவொரு ஒழுங்குமுறையோ அல்லது வேறுபாடோ இருக்கவில்லை. பிறகு நான் உண்மையின் விருப்பத்திற்கேற்ப அதனை ஒழுங்கு படுத்தினேன். வேறுபடுத்தினேன். மேலும் நான் அதன் படைப்பின் மீது என்னை ஆற்றல் பெற்றவனாகக் கண்டேன். பின்னர் நான் வானத்தையும் உலகத்தையும் படைத்தேன். மேலும் கூறினேன்: நிச்சயமாக நாம் கீழ் வானத்தை விளக்குகளைக் கொண்டு அழகுபடுத்தினோம். பின்னர் நான் கூறினேன். இப்பொழுது நாம் மனிதனை மண்ணின் தொகுப்பிலிருந்து படைப்போம். பின்னர் எனது நிலை கஷ்பிலிருந்து இல்ஹாமின் பக்கம் மாறியது. பின்னர் எனது நாவில் “அரத்து அன் அஸ்தக்லிப ப கலக்த்து ஆதம, இன்ன கலக்னால் இன்ஸான பீ அஹ்சனி தக்வீம் என வெளிப்பட்டது. அதாவது நான் (பூமியில்) கலீபாவை உருவாக்க எண்ணினேன் எனவே ஆதமை படைத்தேன். நிச்சயமாக நாம் மனிதனை சிறந்த முறையில் படைத்துள்ளோம்.”

இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இந்த ருஹ்யாவில் (கனவுகாட்சியில்) காரணத்தால். அன்னார் மீது இணைவைப்பவர் என்ற குற்றம் சாட்டப்படுகிறது என்றால் மேலும் அன்னார் தன்னை இறைவன் என வாதித்தது நிரூபணமாகிறது என்றால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் கூறுவதைப் பற்றி இவர்களின் கருத்தென்ன?

“நான் என் இறைவனை ஒரு இளைஞனின் வடிவத்தில் பார்த்தேன். அவனுக்கு நீண்ட முடியும், அவனது கால்களில் தங்க காலணிகளும் இருந்தன (அல்யவாகீது வல் ஜாவாஹிரு பாகம் 1 பக்கம் 71, திப்ராணி மற்றும் மௌஸுஆதே கபீர் பக்கம் )

இக்காரணத்தைக் கொண்டு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் மீது ஆட்சேபனை செய்பவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இணைவைக்கும் குற்றத்தை சுமத்தி அன்னாரை விட்டு விலகி விடுவார்களா?

கனவுக்கு நேரடி விளக்கம் கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. உதாரணமாக யூசுப் நபியைப் பற்றி திருக்குரானில் வருகிறது 



   إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ

 யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சஜ்தா செய்வதாக  மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.

சஜ்தா அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. 'லா இலாஹா இல்லல்லாஹ். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இது திருக்குரானுடைய முஹ்கமாத் என்று சொல்லப்படக்கூடிய அடிப்படையான வசனம். இதைத்தான் யூசுப் நபி தன்னுடன் சிறையிலிருந்த இரு தோழர்களுக்கு பிரச்சாரம் செய்தார்கள். இந்த ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த யூசுப் நபி சூரியன், சந்திரன், நட்ச்சத்திரங்கள் தன்னை வணங்கியதாக குறிப்பிடுகின்றார்கள். இந்த வசனத்திலிருந்த யூசுப் நபி தன்னை அல்லாஹ் என்று வாதித்துவிட்டார்கள் பிர்அவ்ன் வாதம் செய்துவிட்டார்கள் என்று கூறுவார்களா?  இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தான் கண்ட கனவைப் பற்றி கூறும்போது அதற்க்கு நேரடி விளக்கம் கொடுக்கும் இவர்கள்  யூசுப் நபி கண்ட கனவுக்கும் நேரடி விளக்கம் கொடுப்பார்களா? 

சூரியன், சந்திரன், நட்ச்சத்திரங்கள் இவையெல்லாம் தன்னை வணங்கியதாக யூசுப் நபி குறிப்பிடுகிறார்கள் ஆனால் இவை யாரை வணங்குகின்றன? 


   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ  ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ ۗ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ ۩

வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.

இந்த கேள்விக்குரிய பதில், இந்த ஹதீஸ் உண்மையில் ஒரு கனவாகும். மேலும் கனவு உலகத்தில் உருவமில்லாத பொருட்களுக்கும் உருவம் கிடைப்பதுண்டு என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் இல்லை. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கஷ்பும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கஷ்பும் ஒன்றுபட்டுள்ளது.

பின்னர் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இந்த கஷ்பிற்கு விளக்கம் அளித்துள்ளார்கள். ஆனால் ஆட்சேபனை செய்பவர்கள் அறிந்தும் அதனைப் புறக்கணித்து விட்டார்கள். இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகிறார்கள்.

நாங்கள் இந்த கஷ்பிற்கு வஹ்ததுல் வுஜூது (அத்வைதக் கொள்கையுடையவர்கள்) மற்றும் ஹலூல் (மனிதர்களுள் இறைவன் தோன்றுவான்) என்ற கொள்கையுடையவர்களைப் போல் பொருள் தருவதில்லை. மாறாக இந்த கஷ்ப் புகாரியில் நபில் தொழுபவர்களின் இறைநெருக்கத்தை குறிக்கும் ஹதீஸிற்கு முற்றிலும் ஒத்ததாக இருக்கிறது.”

புகாரியில் வரும் ஹதீஸ்:

“நபில் தொழும் அடியான் என்னுடைய நெருக்கத்தில் எந்த அளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றான் என்றால் நான் அவனை நேசிக்கத் துவங்குகிறேன். அப்பொழுது நான் அவன் கேட்கின்ற காதாக ஆகிவிடுகின்றேன். அவன் பார்க்கின்ற கண்கலாகிவிடுகிறேன். அவன் பிடிக்கின்ற கைகலாகிவிடுகிறேன். அவன் நடக்கின்ற கால்களாகி விடுகிறேன்.”

இந்த ஹதீஸிற்கு என்ன பொருள் தருவீர்களோ அதே பொருள்தான் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் கஷ்பின் பொருளாகும்.

மேலும் எதிரிகள் இமாம் மஹ்தி அவர்கள் அவர்கள் வானம் மற்றும் பூமியை படைத்ததாக வாதித்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். நினைவில் கொள்ளுங்கள் இந்த இயற்கையான வானமும், பூமியும், ஏற்கனவே படைக்கப்பட்ட ஒன்றாகும். அவற்றைப் படைத்ததாக அவர்கள் வாதம் புரியவில்லை என்பது மட்டுமின்றி இது சாத்தியமற்றதுமாகும். இமாம் மஹ்தி(அலை) அவர்கள் கூறுகிறார்கள்.

“இந்த பிரபஞ்சத்தை (வானம், பூமி) ஒரு தொன்மையான, வல்லமையுடைய மற்றும் மதிப்பிற்குரிய இறைவன் படைத்தான். அவன் அனைத்து வெளிப்படையானவற்றின் மீதும், மறைவானவற்றின் மீதும் ஆற்றல் உடையவன் என்று நான் உறுதியான உள்ளத்துடன் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”

உண்மை இவ்வாறிருந்தும் நபிமார்களின் நடைமுறையைப் போல் ஒரு ஆன்மீக வானமும், பூமியைப் படைத்ததாக இமாம் மஹ்தி(அலை) அவர்களின் வாதம் உள்ளது. எல்லா நபிமார்களும் அப்படிப்பட்ட ஆன்மீக வானத்தையும் பூமியையும் படைத்துள்ளார்கள். சந்தேகத்திற்கிடமின்றி அண்ணரும் அத்தகைய ஒரு வானத்தையும் பூமியையும் படைத்துள்ளார்க. அந்த வானம் பூமி ஆன்மீகமானதாகும். மேலும் கூறுகிறார்கள்.

“ஒவ்வொரு மாபெரும் சீர்திருத்தவாதி தோன்றும் வேளையில் ஆன்மீக ரீதியில் ஒரு புதிய வானம், பூமி படைக்கப்படுகின்றது.” (ஹகீகத்துள் வஹி பக்கம் 99)

இவ்வாறான புதிய வானம், புதிய பூமி ஒவ்வொரு நபியின் காலத்திலும் படைக்கப்பட்டு வருகிறது எனவே தான் பைபிளில் பேதுருவின் வார்த்தைகள் இவ்வாறு உள்ளது

“அந்த வாக்குறுதிக் கேற்ப நல்லவர்கள் வசிக்கக்கூடிய புதிய வானம் மற்றும் பூமியை எதிர்நோக்கியுள்ளோம்.” (பேதுரு 2-3:13)

மேலும் திருக்குர்ஆன் நிலத்திலும் நீரிலும் குழப்பம் பரவியுள்ளது (30:42) என்பதில் இதன் பக்கமே சுட்டிக் காட்டுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பிரமாண்டமான புதிய வானும் புதிய பூமியும் படைக்கப்படும். 


இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தான் கண்ட கனவுக்கு அவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆயினே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் ஐநூற்றி அறுபத்தி ஆறாவது பக்கத்தில் கூறுகிறார்கள் என் உள்ளத்தில் போடப்பட்டது நான் பார்த்த அந்த படைத்தல் என்பது வானங்கள், பூமியினுடைய ஆதரவுகளை சுட்டிக்காட்டுகிறது.


நான் இந்த கனவுக்கு அத்வைதகொள்கைவுடையவர்களைப் போன்று நானே அல்லாஹ்வாகிவிட்டேன் என்று பொருள்கொடுக்கவில்லை. ஹுலூளியுன்களைப் போல அல்லாஹ் எனக்குள் வந்த்துவிடான் என்றும் நான் இதற்க்கு பொருள் கொடுக்கவில்லை. மாறாக நபில்களின் மூலமாக அல்லாஹ்வின் நல்லைடியார்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துகளைப் பற்றி ஹதீஸ்களின் வந்துள்ள அதே அர்த்தத்தைத்தான் நான் கொடுக்கிறேன்,

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூருகிறார்கள்.

“ ஒரு முறை நான் கஷ்ப் காட்சியில், நான் புதிய பூமியையும் வானத்தையும் படைப்பதாக கண்டேன். பின்பு இப்போது மனிதனைப் படைக்கப் போகிறோம் எனக் கூறினேன். இதற்க்கு இந்த அறிவற்ற மௌலவிகள் பாருங்கள் இவர் இறைவாதம் புரிந்து விட்டார் எனக் கூச்சலிடுகின்றனர். இந்த கஷ்ப் (அன்மீக) காட்சிக்கான விளக்கம், இறைவன் எனது கையால் வானமும் பூமியும் புதிதாகி உண்மையான மனிதர்கள் தோன்றும் அளவிலான மாற்றத்தை ஏற்படுத்துவான் என்பதாகும்.” (சஷ்மயே மஸீஹீ, ரூஹானி கஸாயின் பாகம் 20 பக்கம் 275-276) 
Read more »

Dec 21, 2013

இயேசுவும் முக்கடவுள் கொள்கையும்


முக்கடவுள் கொள்கையில் அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி. என்ற மூவர் கூட்டணியில் – நம்பிக்கை வைப்பது கிருஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூவராகக் கடவுள் இருக்கிறார் என்றும் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரே கடவுளாக இருக்கிறார் என்றும், இம் மூவரும் ஒன்றாக இணைந்திருந்த போதிலும் இம் மூவரும் தனித்தனியே வல்லமையுடன் செயல்படத் தக்கவராய் இருக்கின்றனர் என்றுமே கிருஸ்தவ சமுதாயம் நம்பிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நூதனக் கொள்கையில் அவர்கள் நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும்.  

பைபிளில் இல்லாத கொள்கை: திரித்துவம் (trinity) என்ற முக்கடவுள் கொள்கை கிருஸ்தவ சமயத்தின் அடிப்படை என்ற அளவில் முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதால், கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிள் அக்கொள்கையை விரிவாகவும் அதிக ஆழத்துடனும் முழுமையாகவும் எடுத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கிருஸ்தவர்கள் மட்டுமல்ல உலகோர் அனைவரும் எதிர்பார்ப்பதில் வியப்பேதும் இல்லை. ஆனால் ஆட்சர்யமென்னவெனில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற அடிப்படையான சமயக் கருத்து திரித்துவம் என்ற முக்கடவுள் கொள்கை – வேதாகமத்தில் எவ்விடத்திலும் வலியுறுத்தப்படவில்லை. ஆதிகாலம் தொட்டு இப் பிரபஞ்சத்தை ஆண்டு பரிபாலித்துவரும் கடவுளைப் பற்றிய தத்துவமும் கொள்கை கோட்பாடும் காலம் கடந்ததாகவும் காலகாலமாக வரலாற்றில் நிரூபிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டுமல்லவா?

பிதா, குமாரன், பரிசுத்தஆவி

இயேசு கிறிஸ்துவின் காலத்தை கருத்தில் கொண்டு அவரது போதனைகளை சோதனைகளுக்கு உட்படுத்தினோம் என்றால் எந்த இடத்திலும் எந்த சந்தர்பத்திலும் முக்கடவுள் கொள்கையை இயேசு வலியுறுத்தவில்லை என்ற உண்மை பளிச்சென தெரியும். ஆயினும் கிருஸ்தவர்கள் முக்கடவுள் கொள்கையை ஆதரித்தவர்களாகக் பைபிளிருந்து சில மேற்கோள்களை நம் முன் எடுத்துவைக்கிரார்கள் எடுத்துக் காட்டாக.

“........நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞனஸ்தானாம் கொடுத்து...” மத்தேயு 28:19

பரலோகத்திலே சாட்சியிடுகிரரவர்கள் மூவர், பிதா வார்த்தை பரிசுத்த ஆவி என்பவர்களே இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.(1 யோவான் 5:7) ஆகிய வசனங்களை காட்டலாம்.

மேற்சொன்ன வசனங்கள் இரண்டில் முதல் வசனம் இயேசு கிருஸ்துவே தம் வாயால் மொழிந்ததாக பைபிள் கூறுகிறது. இரண்டாவது வசனம் யோவான் என்பவரின் சொந்தக் கருத்து. மேலும் இயேசு குறிப்பிடும் மூவர் கூட்டணியில் இரண்டாம் இடம் வகிக்கும் ‘குமாரன்’ யோவானிடத்தில் “வார்த்தை”யாக மாறி உள்ளதை கவனியுங்கள். இவ்விவரங்களை மனதில் வைத்துக் கொண்டு முக்கடவுள் கொள்கையை தொடர்ந்து ஆராய்வோம்.

ஏசுவின் போதனை ஏகத்துவமே:

முக்கடவுள் கொள்கையை உருவாக்கி இயேசுபிரான் அதில் நம்பிக்கையும் கொண்டு போதித்து வந்தார் என்பது உண்மையாயின். இந்த முக்கியமான அடிப்படைக் கொள்கையைக் குறித்து தமது யூத மக்களிடம் குறிப்பாக தனது சீடர்களிடம் வலியுறுத்தி கூறவேண்டிய இயேசுவின் கட்டாயக் கடமையாக இருந்திருக்கும். ஆனால் பைபிளில் இயேசுவின் போதனைகளை திரட்டி ஆராய்ந்து பார்க்கும்போது முக்கடவுள் கொள்கைக்கு நேர்மாறாக எப்போதும் போதித்துவந்துள்ளார் எனவும் அந்த ஏக தேவனையே – ஒரே இறைவனையே வணங்கி வரவேண்டும் என்று இயேசு தொடர்ந்து போதித்து வந்துள்ளார் எனவும் அறிந்துகொள்கிறோம்.

இயேசுவுக்கு முன்னர் யூத மக்களுக்குகிடையே அவதரித்த அத்தனை தீர்க்கதரிசிகளும் பதித்து வந்தது, ஏக இறைக் கொள்கையே எனப் பழைய ஏற்பாடு தெளிவாக கூறுகிறது. இந்நிலையில் மோசே தீர்க்கதரிசியின் நியாயப் பிரமாணத்தையே ‘நிறைவேற்றுவதற்காக’ வந்துதித்த இயேசு பெருமான். அந்த நியாயப் பிரமானத்திற்கே முரணாக முக்கடவுள் கொள்கையை எவ்வாறு எடுத்துக் கூறமுடியும்?

இயேசு வலியுறுத்தும் கொள்கை.

“..... உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக....” (மத்தேயு 5:10)

“....., கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால், இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்...(மார்க்கு 12:25)

“..... நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே ...” (லூக்கா 18:19)

‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். (யோவான் 17:3)

சுவிசேஷர்கள் நால்வரும் பதிவு செய்த மேற்கண்ட வேத வசனங்கள் தேவனாகிய கர்த்தர் வேறு குமாரனாகிய இயேசு வேறு எனத் தெளிவாக இனம் பிரித்து காட்டிடவில்லையா? இயேசு தன் வாயாலே வெளிப்படுத்தியுள்ள வசனங்களும் தற்காலக் கிறிஸ்தவர்களின் முக்கடவுள் கொள்கையை உடைத்தெறிவதற்கு போதுமானவையில்லையா?

இந்நிலையில் பைபிள் கூறும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை கவனத்துடன் படித்துப் பார்த்தால் அவர் தமது வாழ்நாள் நெடுகிலும் ஏக இறை தத்துவத்தையே போதித்தும் பரப்பியும் வந்துள்ளதாக எவரும் எளிதில் கண்டுகொள்ளமுடியும் இஸ்ரவேலில் தோன்றிய இயேசு தனது போதனையின் படி முக்கடவுள் கொள்கையே தமது கடவுள் கோட்பாடு தமது தெய்வ நம்பிக்கை என்று ஒரு இடத்தில் கூட வலியுறுத்தவில்லை. தமது கடவுள் மூன்றாய் பிளவு பட்டு போயிருக்கிறார் என்றோ, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என மூவர் கூட்டணி அமைத்துக் கொநிட்ருக்கிறார் என்றோ இயேசுநாதர் தனது போதனையில் எடுத்துரைக்கவில்லை. ஆனால் பைபிள் கூறும் அவரது வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் பலவற்றில் ஏக தெய்வக் கொள்கையில்தான் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறுவது மட்டுமின்றி தம்மை சுற்றியுள்ள யூத கோத்திரத்தார் அனைவருக்கும் அவ்வாறு போதிக்க தவறவுமில்லை. அவர் வாழ்வில் நிகழ்ந்த மிகக் கொடிய துயரமிக்க சிலுவை தண்டனைக்கு முன்னர் நடந்தேறிய சம்பவங்கள் அனைத்தும் இக்கருத்தையே கூறுகிறது.

தேவ குமாரன் என்றால் தேவ தூஷணமா?

இயேசுவை கைது செய்த யூதர்களுக்கு அவர் மீது குற்றம் சுமத்த தகுந்த காரணம் வேண்டும். அவரை சிலுவையில் அறையவேண்டுமாயில் அக்கொடிய தண்டனை கொடுக்குமளவுக்கு அவர் மீது குற்றம் சுமத்தவேண்டியது அவசியமல்லவா? அவர்கள் கண்டுபிடித்த குற்றம் என்ன தெரியுமா? கடவுளின் ஒரு பகுதியாக – ஓர் அங்கமாக – இயேசு தம்மையும் இணைத்துக் கொண்டார் என்பதுதான். அதாவது கடவுளின் குமாரன் என்று தன்னை வர்ணித்துக் கொண்டதால். அவர் தேவ தூஷணம் செய்தவராகிறார் என்பதே யூதர்களின் குற்றசாட்டு. ஏனெனில் ஏக தெய்வ வணக்க மூளையை கைக்கொண்டு நடந்து வந்த யூத சமுதாயத்தால் இறைவனுக்கு மகனாக தம்மைக் கற்பித்துக் கொண்ட இயேசுவின் செயலை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இயேசுவின் போதனைகளை பொறுமையுடன் செவிமடுத்து சிந்தித்திருந்தால் அவர் மீது தேவ தூஷனக் குற்றம் சுமத்தியிருக்கமாட்டார்கள்.

ஆனால் பைபிளிருந்து நாம் அறிந்துகொள்வதென்ன? பிரதான ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீடர்களைப் பற்றியும் அவரது போதனையைப் பற்றியும் விசாரித்தபோது இயேசுபிரான் பதிலளித்ததென்ன? இதைக் குறித்து யோவான் சுவிசேஷகர் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.

 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீசரைக் குறித்தும் போதனைக் குறித்தும் விஷாரித்தான். இயேசு அவனுக்கு பிரதியுத்தமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன். ஜெப ஆலயங்களிலும் யூதர்கள் எல்லோரும் கூடி வருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன். அந்தரங்கத்திலே ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளை கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றான் (யோவான் 8:29)

மேலே காட்டிய இயேசுவின் வாக்கு மூலத்திலிருந்து அவரது போதனை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே போதிக்கப்பட்டிருக்கிறது எனத் தெளிவாக தெரிகிறது. தமக்கு முன்னர் வந்த தீர்க்கதரிசிகள் இறைத்தூதர்கள் வழியையே அவரும் பின்பற்றியுள்ளார். தமக்கு கிடைத்த தேவ வசனங்களை இறை வெளிப்பாடுகளை யூத மக்களுக்கு கூடுதல் குறைவின்றி அப்படியே கொடுத்திருக்கிறார். அதாவது முந்தைய தீர்க்கதரிசிகள் ஏக தெய்வ வணக்கத்தை போதித்தது போன்று இயேசுவும் போதித்துள்ளார்.


தன்னை இறைவனின் குமாரன் என்று சொன்னதால் தேவதூஷணம் செய்ததாக யூதர்கள் செய்த குற்றச்சாட்டுக்கு இயேசு பதிலளிக்கும் போது

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையாதேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்கபிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமாஎன் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.


இந்த சூழலில் தேவ தூஷணம் இறைவனுக்கு அவமதிப்பு ஏற்படும்படியான செயல் எதையும் இயேசு செய்திருந்தார் என்றால் யூத ஆசாரியர்களும் மூப்பர்களும் ஆயிரக்கணக்கான் சாட்சிகளை கொண்டுவந்து சனாதரின் என்ற யூத உச்சநீதிமற்றத்தில் அவையோர் முன்னிலையில் நிறுத்தி எந்தக் கஷ்டமுமின்றி எளிதாக நிரூபித்திருக்கமுடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. வல்லமை மிக்க யூத சபையால் அவ்வாறு நடத்திக் காட்ட முடியவில்லை. அதற்க்கு நேர்மாறாகவே நடந்தது. இயேசுவுக்கு எதிராக சாட்சி கூற அதாவது பொய் சாட்சி பகர தமது மக்களுக்குள்ளேயே ஆட்களை அவர்கள் தேடியபோது தமது குற்றச்சாட்டை நிரூபிக்கதக்க விதத்தில் அதாவது இயேசுவின் தேவ தூஷணத்தை நிரூபிக்கும் பொருட்டு யூதர்களிளிருந்து ஒருவரை கூட கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை. உண்மையான சாட்சிகளைக் கொண்டுவரும் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவிக் கொண்டதையே அவர்கள் கண்டனர்.

கொலை முயற்சியும், பொய் சாட்சியும்

இந்நிலையில் இயேசுவின் மீது தாங்களே பொய்யாகப் புனைந்துகொண்ட குற்றச் சாட்டினை அவையின் முன்னர் நிரூபிப்பதற்காக பொய் சாட்சிகளை கொண்டு வரவேண்டிய இழிநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ஆயினும் சட்டப்பூர்வமான ஆதாரத்தையோ, அத்தாட்சியையோ அவர்களால் வழங்கமுடியவில்லை. இயேசுவை கொலை செய்வதற்கு சமயத் தலைவர்களுக்கிருந்து ஆர்வத்தை சுவிசெஷர் மத்தேயு இவ்வாறு கூறுகிறார்.

“பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் பொய் சாட்சி தேடினார்கள் ஒருவரும் அகப்படவில்லை. அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை..”(மத்தேயு 26:59-60)

சுவிசெஷர் மார்க்கும் இதே கருத்தை இன்னும் சற்று விரிவாக கூறக் காண்கிறோம்.

“அப்போது பிரதான ஆசாரியரும் ஆலோசனை சங்கத்தார் அனைவரும் இயேசுவை கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக சாட்சி தேடினார்கள் அகப்படவில்லை. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லியும் அந்த சாட்சிகள் ஒவ்வவில்லை. அப்போது சிலர் எழுந்து கைவேலையாகிய இந்த தேவாளையத்தை நான் இடித்துப் போட்டு கை வேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று அவருக்கு விரோதமாய் பொய் சாட்சியம் சொன்னார்கள். அப்படி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமல் போயிற்று (மார்க்கு 14:55-59)

Read more »

Oct 3, 2013

73 Divisions in Islam and One True Jama'at - Opinions of Some Muslim Saints



Hadhrat Ali (RA) 
"Mahdi Maoud will be colored with the glory of Muhammadiyya and will have the wealth of Ahmadiyya."
Hadhrat Muhammad bin Faris Misri wrote 
"Our scholar will be prophet and from among those who call towards the truth he will have the station of messengership and our A'arif will be in the period of Ahmadi, will be from among oolulazm (those who have strong determination) and will receive greatness."
Hadhrat Mujaddid Alif Thani wrote 
"Around one thousand and some years after the sad demise of the Holy Prophet (peace be upon him), the Haqeeqate (truth) Muhammadiyya will ascend from its station and will unite with the place of Haqeeqate (Truth) Ka'aba. At that time Haqeeqate Muhammadi (Muhammadi Truth) will be called Haqeeqate Ahmadi (Ahmadi Truth)."
Hadhrat Imam Ali Al-Qari wrote 
"so among seventy three sects all of them will be in fire and the Firqah Najiyya (sect deserving paradise) will be the one among ahle sunna (Sunnis) which will have the glory of Muhammadiyya and will be following the holy Tareeqatul (practices of) Ahmadiyya."
Hadhrat Abdur Raheem Grohri wrote 
"Hadhrat Mahdi Maoud has the Muhammadi appearance and will descend like a leader, he will have a mole near one of his eyes. He will re-establish din-e Ahmadi (the Ahmadi practices), our sahib will be bright like the sun and beloved of all. He will be learned, wise, king of wisdom and an eternal saint. O mir Muhammad Sahah! Mahdi will be decorated with the turban of prophethood."
Read more »

Aug 24, 2013

மிஹ்ராஜ் பயணம் ஆத்மீக காட்சியே – அந் நஜாத்திற்கு பதில்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 47, 48, இல் இவ்வாறு எழுதியுள்ளார். 

காதியானிகள், ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்துள்ளதை மறுத்து வருவதை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்களின் (மிஹ்ராஜ்) விண்வெளிப் பயணத்தையும், ஆதம் (அலை) அவர்கள் சுவர்கத்திலிருந்து பூமிக்கு பூத உடலுடன் இறங்கியதையும் மறுத்து வருகிறார்கள். இதற்க்குக் காரணம் இந்த இரண்டு நிகழ்சிகளையும் உண்மை என்று ஒப்புக் கொண்டால் அதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டதையும் ஒப்புக் கொள்ள வேண்டி வரும் என்ற தப்பான எண்ணமேயாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்கு சென்றது கனவில் கனவில் இடம் பெற்ற நிகழ்ச்சியே என்று அவர்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் குர்ஆனில் இஸ்ரா என்ற நிகழ்ச்சியை குறிப்பிடும் போது,

அல்லாஹ் மிக பரிசுத்தமானவன்: அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர் இரவில் அழைத்துச் சென்றான் (17:1) என்று குறிப்பிடுகின்றான். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களை அடியார் (அப்து) என்ற பதத்தையே குறிப்பிடுகின்றான். இதிலிருந்து தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விழித்த நிலையில் உடலுடன் மிஹ்ராஜ் சென்றதைக் குறிக்கும்.

கனவில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்திருக்குமேயானால் குறைஷிக் காபிர்கள் அதனை மறுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. காரணம் கனவில் அப்படிப்பட்ட நிகழ்ச்சி சம்பவிப்பது சாத்தியமானது என்பதை விழித்த நிலையில் உடலுடன் சென்று வந்த நிகழ்ச்சியாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாலேயே குறைஷிகள் அதனை மறுத்தனர். எனவே மிஹ்ராஜ் காதியானிகள் சொல்வது போன்று கனவில் இடம் பெற்ற சாதாரண நிகழ்ச்சி அல்ல. விழித்த நிலையில் உடலுடன் இடம் பெற்ற ஒரு மகா அற்புதமான நிகழ்ச்சியே மிஹ்ராஜ் ஆகும்.

நம் பதில்:

அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரு இரவில் அழைத்து சென்றான் (17:2) 

இதில் நபி (ஸல்) அவர்களை அடியார் (அப்து) என்று குறிப்பிடுகிறான். எனவே உடலுடன் விழித்த நிலையில் மிஹ்ராஜ் சென்றதைக் குறிக்கும் என எழுதுகிறார். அப்து அடியார் என்று சொல்லப்பட்டிருப்பதால், உண்மை நிகழ்ச்சி கனவு இல்லை என்பதற்கு திருக்குர்ஆன் நபிமொழி சான்று எதையும் அவர் தராததினால் இது ஒரு தவறான வாதமாகும். 

குறைந்த அளவு அந்த நிகழ்ச்சி கனவு நிகழ்ச்சியாக இருக்கும் என்றால் அதை எப்படி சொல்ல வேண்டும் என்றாவது திருக்குர்ஆன் நபி மொழி சான்றுகளின் அடிப்படையில் இவர் சொல்லியிருக்க வேண்டும். 

இவர் குறிப்பிடும் 17:2 வசனம் இஸ்ரா என்னும் இரவுப் பயணமாகும். இந்த இஸ்ராவும் மிஹ்ராஜும் இரு வெவ்வேறு நிகழ்வுகளாகும் அதனால்தான் இமாம் புகாரி அவர்கள் தனது நபி மொழித்தொகுப்பில் இஸ்ரா, மிஹ்ராஜ் இரண்டையும் இரு பாடங்களாகப் பிரித்து தனித்தனியே கூறியுள்ளார்கள்.

இது கனவுக் காட்சியே என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நாம் உமக்கு காட்டிய கனவுக் காட்சிகளையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மக்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம் திருக்குர்ஆன் (17:61) இந்த வசனத்தில் ருஹ்யா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு கனவுக் காட்சி என்ற பொருளை தவிர வேறு அர்த்தம் இல்லை 12:44, 37:106,48:28, 12:6, 12:101 ஆகிய திருக்குர்ஆன் வசனங்களில் இந்தச் சொல் கனவுக் காட்சி என்ற அர்த்தத்திலேயே கையாளப்பட்டுள்ளது.

17:2 ம் வசனத்தில் கூறப்பட்ட இஸ்ரா நிகழ்ச்சியை குறித்தே 17:61இல் கனவுக் காட்சி எனக் கூறப்பட்டுள்ளதாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் (புகாரி - என் 4716)

எனவே 17:2 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சி வெளிப்படையாக நடந்ததன்று மாறாக அது ஒரு ஆன்மீகக் காட்சியே என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியதிருக்கிறது.

ஏனெனின் திருக்குர்ஆன் அதனை உறுதிசெய்துள்ளது.

இஸ்ராவின் போது நபி (ஸல்) அவர்கள் ஜெருசலேம் சென்று அங்கிருந்த பள்ளியில் இமாமாக நின்று தொழுதார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முழு உலகிற்கும் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் அங்கு வந்து சேர, அத்தனை நபிமார்களும் நின்று தொழும் அளவுக்கு அங்கு இடவசதி கொண்ட பள்ளி இருந்ததா? இன்றாவது அங்கு இவ்வளவு பெரிய இடம் இருக்கிறதா? 

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் கிலாபத்தில் தான் ஜெருசலேம் முஸ்லிம்களின் கைக்கு வந்தது. மேலும் அத்தனை நபிமார்களும் புராக் போன்ற வாகனத்தில் மண்ணுக்கு வந்து விண்ணுக்கு சென்றார்களா? அத்தனை வாகனங்களை கட்டுவதற்கு அங்கு இடவசதி இருந்ததா? இல்லையென்றால் இஸ்ரா சம்பவம் உடலோடு நடந்தது அன்று என்றும், ஒரு கனவுக் காட்சி என்றும் விளங்கவில்லையா? 

எனவே அல்லாஹ் தன அடியாராகிய ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து அக்ஸா மஸ்ஜிதிறகு - பூமியிலுள்ள நம் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தான் அழைத்துச் சென்றதாக கூறுவதால், இது எதிர்காலத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்படப் போகும் ஹிஜ்ரத் பற்றியும், அவர் அனைத்து சமுதாய மக்களுக்கும் இமாமாக நபியாக விளங்குவார் என்றும் உலகில் எல்லா சமுதாய மக்களும் அவரைப் பின்பற்றி நடப்பார் என்றும் எடுத்துக் கட்டும் ஒரு கனவுக் காட்சி என்று விளங்குகிறது 

திருக்குரானில் 53ம் அத்தியாயத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் அவரது உள்ளம் தான் கண்டதைப் பற்றி பொய்யுரைக்கவில்லை (53:12) என்றும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார். மிகத் தொலைவிலுள்ள இலந்தை மரத்திற்குப் பக்கத்தில் (53:14,15) என்றும் திருக்குரானில் காணப்படுகிறது. மேலும் ஹதீஸில் மிஹ்ராஜ் பற்றிய பாடத்தில் இலந்தை மரணத்தின் பக்கத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டது அல்லாஹ்வை என்றும் தெளிவாக விளங்குகிறோம். இதிலிருந்து சித்ரத்துல் முன்தஹா ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தன் உள்ளத்தாலே கண்டார்கள் என்பது புலனாகிறது. 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தன் ஆத்மாவினால் கண்டார்கள் என்று ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் (முஸ்லிம் பக்கம் 1 ) 

அல்லாஹ் ஒளியாக விளங்குகிறான் அவனை புறக் கண்ணால் பார்க்க முடியாது அவ்வாறுக் கண்டதாகக் கூறுவது அவன் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவதாகும். எனவே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை ஆன்மீகக் கண்ணால் கண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இதையே அபூதர் (ரலி) அவர்களும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒளியை (அல்லாஹ்வைக் ) கண்டதாகக் கூறுகிறார்கள் (முஸ்லிம் பாகம் 1 ஈமான் பாடம் ) 

மிஹ்ராஜ் பயணத்தின் இறுதியில் அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்று ஜிப்ரீல் கூற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் புனிதப் பள்ளியில் விழித்து எழுந்தார்கள் (புகாரி எண் 7517) என்றும் ஹதீஸில் காணப்படுகிறது. 

எனவே மிஹ்ராஜ் பயணம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்தின்போது புறப்பட்டு சென்றதையும் பயணம் முடிந்தவுடன் தூக்கத்திலிருந்து விழித்ததையும் தெளிவாகக் குறிப்பிடுவதால் இது ஆன்மீகக் காட்சி என்று விளங்குகிறது. 

நான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தபோது நுண்ணறிவினாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத்தட்டு ஓன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. என் நெஞ்சம் காறை எலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு சம்சம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது பிறகு (என் இதயம்) நுண்ணறிவினாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது (புகாரி பாடம் (படைப்பின் ஆரம்பம்) புஹாரி எண் 3207)

இங்கு தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை என்பது கஷ்பின் நிலையாகும். தங்கத்தட்டு இவ்வுலகில் முஹ்மினுக்கு விலக்கப்பட்ட ஒன்று. எனவே இது கனவுக் காட்சி என்று தெரிகிறது. நுண்ணறிவும், இறை நம்பிக்கையும் புறக்கண்ணால் காணக்கூடிய பொருள் அல்ல. இதிலிருந்து இங்கு விவரிக்கப்பட்டது ஆன்மீகப் பயணமே என்பது புலனாகும். 

பார்வைகள் அவனை அடையமுடியாது அவன் பார்வைகளை அடைகின்றான் ( 6:104) இவ்வசனம் புறக்கண்ணால் அல்லாஹ்வை காண முடியாது அவன் தான் நாடுபவர்களுக்கு கனவு கஷ்ப் மூலம் காட்சி தருகிறான் என்று கூறுகிறது. இத்தகைய இறை சந்திப்பு இவ்வுலகில் நடைபெறுகிறது இதனை 18:111, 84:7, 29:70 ஆகிய வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 22:47 வசனம் மனிதனுக்குள் புறக்கண், அகக் கண் பற்றிக் கூறுவதைக் காணலாம். 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் ஹஸ்ரத் மூஸா நபி (அலை) அவர்களும் இறைவனை இவ்வுலகில் கண்டனர். திருக்குர்ஆன் 20:85, 20:11 ஆகிய வசனங்கள் ஹஸ்ரத் மூஸா நபி (அலை) அவர்கள் இறைவனைக் சந்தித்ததை எடுத்துக் கூறுகிறது. 

மிஹ்ராஜ் என்ற அரபிச் சொல் அரஜ என்ற மூலச் சொல்லிலிருந்து வந்ததாகும். இந்தச் சொல்லுக்கு உடலுடன் வானம் செல்லுதான் என்ற பொருள் திருக்குரானிலோ ஹதீஸ்களிலோ கொடுக்கப்படவில்லை. எனவே மிஹ்ராஜ் பற்றிய சரியான அறிவு இல்லாதவர்களே அது உடலுடன் செய்யப்பட்ட வானுலகப் பயணம் என்று கூறுவார். 

இந்த நிகழ்வு ஆன்மீகப் பயணம் என்றால் குரைசிக் காபிர்கள் அதனை ஏன் மறுத்தார்கள்? 

ஹஸ்ரத் நபி (ஸல்)அவர்கள் மக்காவில் இருந்து பைத்துல் முகத்தஸ் வரை சென்ற இஸ்ரா பயணம் பற்றிக் கேள்விப்பட்ட குரைசிக் காபிர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சென்று, உங்கள் தோழர் பைத்துல் முகத்தஸ் சென்று திரும்பியதனை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டனர். அதற்க்கு ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், நான் அன்னாருக்கு வானிலிருந்து வஹி வருகிறது என்று (இதனைவிடப் பெரியதை) நம்புகிறேன் என்று கூறினார்கள். 

இச்சம்பவம் நபி (ஸல்) அவர்கள், மக்கவிலிருந்து மிஹ்ராஜ் சென்றது வேறு என்பதையும், மக்கவிலிருந்து பைத்துல் முகத்தஸ் சென்றது வேறு என்பதனையும் அன்னார் உடலோடு அந்த இரு பயணங்களையும் செய்யவில்லை என்பதனையும் தெளிவாக்குகிறது. 

அபூபக்கர் (ரலி) அவர்கள் வானிலிருந்து வஹி வருவதையே மிகப் பெரியதாகக் கருதி அதனை நம்புவதாகக் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உடலுடன் அப்பயணங்களை செய்திருப்பார்கள் என்றால், அன்னார் உடலோடு வானிற்கு சென்று வந்ததை நம்புகிறேன் என்றுதான் கூறியிருப்பார்கள். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அவ்வாறு கூராததிலிருந்து அவை ஆன்மீகப் பயணங்களே என்றே தெளிவாகின்றது. 

மேலும் அக்காபிர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பொய் நபியென்றும், வஹி பொய் என்றும் மட்டும் நம்பவில்லை. மாறாக, காணாத ஒரு புதிய இடத்தை கனவில் காணமுடியாது, எனவே நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டதை மறுத்து அக்கேள்வியை குரைஷிகள் கேட்டனர். எனவே மிஹ்ராஜும் , இஸ்ராவும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஆன்மீகக் பயணமே என்பது தெளிவாகிறது.
Read more »