அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 3, 2022

மாற்று மத சகோதரர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையை போல் மாபெரும் ஆன்மீக அருளான முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா?

முஸ்லிஹ் மவ்வூது பற்றி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு :--

ராஜுல் ஹக் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) கூறினார்கள் :

இறைவன் என்னிடம் இவ்வாறு தெரிவித்தான்; அதாவது, இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப் பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக சிரியா தோன்றும். இதுவே வாக்களிக்கப்பட்ட மகன் தோன்றும் காலம் ஆகும்.

இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட அவர் வருகையுடன் தொடர்பு படுத்தியுள்ளான். இதற்கு பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நீங்கள் வாக்களிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, 2009 edition).

இந்த முன்னறிவிப்பை அஹ்மதிகள் இரண்டாவது கலீபதுல் மஸிஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீரூத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) அவர்கள் மட்டுமே என்று கூறுகின்றார்கள். ஆனால், ஒருசில இறை அறிவிப்புக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிறைவேறுகின்றன என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹமத் (ரழி) (1889-1965) அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது (அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள் மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக

1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள். அந்தச் சொற் பொழிவில் அவர்கள் கூறுகின்றார்கள்: -

நான் இவ்வாறாக வாதம் செய்யவில்லை. நான் ஒருவனே வாக்களிக்கப்பட்ட மகன் என்றும் எனக்கு பிறகு கியாமத் நாள் வரை எவருமே தோன்ற மாட்டார் என்றும், மாறாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) முன்னறிவிப்பின்படி மேலும் வாக்களிக்கப்பட்டவர்கள் வருவார்கள். அவர்களில் சிலர் நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றுவார்கள். (Ref: Ahmadiyyat, the Renaissance of Islam by Sir Zafrullah Khanp.293-294)

நிச்சயமாக உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக் கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன்: 41:53)

பொதுவாக ஒரு சில அஹ்மதி நண்பர்கள் இவ்வாறு கேட்கின்றார்கள்:
அதாவது 'இறைபுறத்திலிருந்து நமது சமுதாயத்தின் வரக்கூடியவர்கள் பற்றி அஹ்மதி கலிஃபாக்கள் கூறியுள்ளார்களா? என்று

இதற்கான நமது பதில் ஆம்!கூறியுள்ளார்கள் என்பதாகும்.

ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத்(ரழி) (1889-1965) அவர்கள் ஒரு அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் கலீஃபா மட்டுமல்ல மாறாக, அவர்கள் தன்னை ஹஸ்ரத் அஹ்மது(அலை) முன்னறிவித்த முஸ்லிஹ் மவ்வூது என்றும் வாதம் செய்துள்ளார்கள். மேலும், இவர் தன் வாதத்தை அதிகாரப்பூர்வமாக 1944 வருடம் பிப்ரவரி மாதம் இருபதாம்(20.02.1944) தேதி நடந்த கூட்டத்தில் அறிவித்தார்கள்.

இது சம்பந்தமாக இறைவனால் இந்நூற்றாண்டின் மஸீஹாஹ அனுப்பப்பட்ட ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) கூறுகின்றார்கள்:-

நான் உங்கள் முன்னே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களின் ஆன்மீக மகனாகவும் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஹதி (அலை ) அவர்களின் ஆன்மீக மகனாகவும் வந்துள்ளேன். என்னை இறைவன் முஸ்லீஹ் மவ்வூதே என்று 20 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு அழைத்தான். மேலும் அவன் என்னை படிப்படியாக உயர்த்தி கண்ணியப்படுத்தினான். அதாவது, முதலில் என்னை கமரன் முனீராவிலிருந்து காஜா நூருதீன், அமீனுல் முஃமினீன், முஹையதீன், கலீஃதுல்லாஹ் மற்றும் அவனது நபியாகவும் ரஸூலாகவும் உயர்த்தினான். இம் மதிப்பை நான் எவரிடமும் சண்டையிட்டு பெறவில்லை மாறாக, அந்த ஏக இறைவனே இந்த எளியவன் மீது கருணையாக பொழிந்தான். மேலும், இதை அனைத்தையும் ஒரு அடிப்படை குறிக்கோளுக்காக அளித்துள்ளான், அதாவது அவனது தூது செய்தியைக் கூறுவதற்காகவும் உலக மக்கள் அனைவரையும் சிலைகளை விட்டு விட்டு ஓரிறை கொள்கைக்கு திரும்புவதற்காக இதை அவன் எனக்கு அளித்தான். கடந்த 12 ஆண்டுகளில் இறைவன் என்னை பஷீர் என்றும் நதீ(d)ர் மற்றும் முபஷ்ஷிர் என்றும் பலமுறை அழைத்துள்ளான்.

எனது நோக்கம் உங்களை எச்சரிப்பது மட்டுமே! உங்கள் உள்ளங்களை மாற்றும் சக்தி எனக்கில்லை, அது இறைவனிடம் மட்டுமேயுள்ளது, மேலும் நான் மிக பெரிய அறிவாளி இல்லை. மாறாக நான் நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் ஸூரா ஜுமுஆவில் உருவகமாக கூறப்பட்ட அவரது இரண்டாவது வருகையாவேன். நான் அசாதாரணமான கல்வியோ அல்லது பெரிய பட்டமோ பெற வில்லை. ஆனால், அந்த ஏக இறைவனே என் வழிநடத்துபவனும் என் ஆசானுமாவான், அவனே இந்த எளியவனை நபியாக தேர்தெடுத்து அறிவிக்குமாறு கூறினான்.

எனக்கு எந்த மனிதனை பார்த்தும் அச்சமில்லை. என் இறைவன் என்னை வழிநடத்தும் போது நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்.

- ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்கள்
Read more »

Jun 2, 2022

இந்த நூற்றாண்டில் அருளுக்குரிய இந்த ரமலானின் கடைசி 10 இரவில் இரண்டு லைலத்துல் கத்ர்

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) கூறுகின்றார்கள்:-

என் அருமை ஸஹாபிகளே! மற்றும் அனைத்து முஸ்லீம் பெருமக்களே! திருகுர்ஆன் மற்றும் சுன்னத்தை பின்பற்றுவது தலையாய முக்கியத்துவம் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இதிலும் முக்கியமாக அந்த ஏக இறைவன் நமக்கு மற்றுமொரு ரமலான் மாதத்தை அடையச்செய்து அதை சாட்சி ஆக்கியுள்ளான், எனவே இத்தகைய அருளுக்குரிய *இரவையும் பகலையும் வீணாகக்கழித்து விடாதீர்கள்* இந்த நேரங்களில் உங்கள் இபாதத்துகளை அதிகப்படுத்தி அந்த மேலான கண்ணியம்மிக்க இரவுகளின் அருள்களை நீங்கள் பெறுவீர்கள் என்று திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களிடம் விருப்பமும் அல்லாஹ்வின் மீது திட்டமாக நம்பிக்கையும் இருக்கும் என்றால், அல்லாஹ் சுபஹானஹு தாலா நிச்சயமாக அவனது அருளை உங்கள் நம்பிக்கையின் மீது வைத்து, அவனுடைய கருணையையும் அருள்களையும் அவனது மேலான மன்னிப்பையும் பெறக்கூடியவர்களாக ஆக்கிவிடுவான். இன்னும் அவன் உங்களுக்கு நரக நெருப்பிலிருந்து மேலான பாதுகாப்பு அளிப்பான், இத்தகைய பாதுகாப்பு நீங்கள் உங்களுடைய நப்ஸ்சை கட்டுப்படுத்தும்போது அதாவது உங்களுடைய பொறாமை மற்றும் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்தும்போது மேலும் அது உறுதி செய்யப்படுகின்றது. இன்னும் அல்லாஹ் உங்கள் மீது அவனுடைய கருணையை பொழிய செய்து உங்களுள் உள்ள ஷைத்தானை வெல்ல செய்வான் இன்ஷாஅல்லாஹ். அன்றியும் இந்த விஷயத்தில் நமது எஜமானார் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் முன்மாதிரியை பின்பற்றி அன்னார் தன்னுள் உள்ள ஷைத்தானை முஸ்லீம் ஆக்கியது போல், நாமும் முயன்று அதன் மூலம் நரகத்தின் கதவுகளை என்றென்றும் அடைத்துவிட்டு, நமக்காக சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ். ஆமீன்.

இன்னும் ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இந்த காலமும் அதாவது நூற்றாண்டும் கூட ஒரு லைலத்துல் கத்ரே ஆகும். “ரூஹுல் குத்தூஸினால்" பலப்படுத்தப்பட்டு அதன் மூலம் இறை செய்தியை பெற்று, இந்த உலகத்தில் சமாதானத்தையும் இறைவனின் ஏகத்துவத்தை மீண்டும் மக்களின் இதயத்தில் மீட்டெடுக்க தோன்றிய ஒருவரை ஏற்று அவரின் தோழமைக்குள் வருவதிற்கான பொன்னான வாய்ப்பை பெற்ற ஒருவர் எப்படிப்பட்ட அதிஷ்டத்திற்குரியவராக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள். அனைத்து முஸ்லிம் களுக்கும் எனது அருமை சகாபிகளுக்கும் *லைலத்துல் கத்ர் முபாரக்* வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

எனது சகாபிகளுக்கு அந்த ஏகஇறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரண்டு லைலத்துல் கத்ரின் அருள்களை வழங்குவானாக! ஆமீன். ஒன்று நீங்கள் வாழும் காலத்தில் அல்லாஹ்வின் நபியை ஏற்று சாட்சியாக இருந்த அருளுக்காகவும் இரண்டாவது இந்த அருளுக்குரிய ரமலான் மாதத்தில் இறைவனின் அருளாக தோன்றும் "லைலத்துல் கத்ரை" நீங்கள் பெறுவதன் மூலமும் ஆகும். ஆக இந்த இரண்டு லைலத்துல் கத்ரை பெறக்கூடிய பாக்கியம் கொண்ட மக்களாக ஆக்குவானாக! ஆமீன்!
Read more »

Mar 23, 2022

'கப்ல மௌதிஹீ' - ஒரு விளக்கம்

(வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)

கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ்(அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார் கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது "வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) 'மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்தில் நம்பிக்கை கொள்வார்கள்'.

எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தை யுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது.

பதில் : கேள்வி கேட்டவர் தவறான கருத்துக் கொண்டுள்ளார். அதாவது வேதத்தையுடையவர் களில் எல்லாப் பிரிவினர்களும் மஸீஹின் மரணத்திற்கு முன் அவரிடம் கட்டாயம் நம்பிக்கை கொண்டாக வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் பொருள் என்று அவர் எண்ணிக் கொண்டார்.

ஏனெனில் அந்த வசனத்தின் பொருள் கேள்வி கேட்டவர் புரிந்து கொண்டதுதான் என்று நாம் கற்பனையாக ஏற்றுக் கொண்டாலும் அவர் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து இறங்கும் காலம் வரையில், உலகில் இறந்து விட்ட வேதத்தையுடை யவர்களும், தற்போது இருப்பவர்களும், இனிமேல் வருபவர்களும் எல்லோரும் அவர் மீது நம்பிக்கை கொள்பவர்களாக கட்டாயம் இருப்பார்கள் என்றாகிவிடும்.

ஆனால் இவ்வாறு எண்ணுவது பொருத்தமற்றது. வேதத்தை யுடைய எண்ணற்ற மக்கள் மஸீஹின் நுபுவத்தை மறுத்த நிலையில் இது நாள் வரை நரகத்தை அடைந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் நன்கறிவர். இனிமேலும் அவர்களில் எத்தனை பேர் அவரை மறுப்பதன் காரணமாக அந்த நெருப்பில் நுழைவார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

இறந்துபோன வேதத்தையுடையவர்கள் எல்லோரும் அவர் இறங்கும் காலத்தில் அவரிடம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருந்திருப்பின், அவன் அவர்கள் எல்லோரையும் அவர் இறங்கும் காலம் வரையிலும் உயிரோடு வைத்திருப்பான். அனால் வர்கள் இறந்து போனபின் அவர்கள் இனி எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?

சிலர் மிகவும் செயற்கையான முறையில் ஒரு பதில் கூறுவார்கள். அதாவது மஸீஹ் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து அவர் மீண்டும் இறங்கும் காலம் வரை மறுக்கும் நிலையில் இறந்து போன வேதத்தையுடைய மக்களை அவர் இறங்கும் பொது ஒரு வேளை இறைவன் மீண்டும் உயிர்பெறச் செய்யலாமே என்பார்கள்.

இதற்க்கு பதில் என்னவென்றால் இறைவனால் இயலாதது எதுவும் இல்லைதான்! ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் இந்த எண்ணங் களுக்கான எந்த அறிகுறியாவது திருக்குரா னிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ உள்ளதா? உண்டு என்றால் அவற்றை ஏன் இவர்கள் எடுத்து வைப்பதில்லை?

சிலர் சிறிது வெட்கத்துடன் தாழ்ந்த குரலில் இதற்க்கு ஒரு விளக்கமளிப்பார். அதாவது வேதக்காரர்கள் என்றால் மஸீஹின் இரண்டாவது வருகையின் போது உலகில் வாழக்கூடிய மக்களா வார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டதும் நம்பிக்கை கொள்வார்கள். மேலும் அவர் இறப்பதற்கு முன் அவர்கள் எல்லாரும் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களின் அணியில் இணைந்து கொள்வார்கள் என்பர்.

ஆனால் இந்த எண்ணமும் எந்த அளவு தவறு என்றால், முதலாவதாக் மேலே குறிப்பிட்ட அந்த வசனம் மிகத் தெளிவாக பொதுவான மக்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலி ருந்து வேதக்காரர்கள் என்ற சொல் ஈஸா நபியின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ உள்ள வேதக்காரர்களையும் குறிக்கும் எனத் தெரிகிறது. அந்த வசனத்தைக் ஒரு குறிப்பிட்ட ஒரு காலவறையோடு தொடர்புபடுத்தக் கூடிய எந்த ஒரு சொல்லும் அந்த வசனத்தில் இல்லை. தவிர எடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொருளும் தவறாகும்.

ஏனெனில் மஸீஹை மறுப்போர் வேதக்காரராயினும் வேதக்காரர்களல்லாதவராயி னும் அவரின் மூச்சினால், குப்ரின் நிலையிலேயே இறந்துபோவார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸுகள் உரத்த குரலில் கூறுகின்றன, (மஸீஹின் மூச்சால் இறப்பது என்பதன் உண்மையான பொருளை நாம் விளக்கி வந்துள்ளோம். இதன் பொருள், சான்றுகளின் அடிப்படையில் இறப்பதாகும். ஏதேனும் நஞ்சு நிறைந்த நச்சுப் பொருள் அவரது வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலந்து பலவீனமான காபிர்களைக் கொல்லும் என்றோ, ஆயினும் அதனால் தஜ்ஜாலைக் கொல்ல முடியாது என்றோ எண்ணுவது தவறாகும்).

திரும்ப திரும்ப அந்த ஹதீஸுகளை நாம் எடுத்து எழுதத் தேவையில்லை. இந்த நூலிலோ அதற்குரிய இடத்தில் காணலாம். இது தவிர தாஜ்ஜாலும் வேதக்காரர்களை சேர்ந்தவனாவான் என்பது முஸ்லிம்களின் ஒருமித்தக் கருத்தாகும். அவன் அவர் மீது நம்பிக்கைக்கொள்ளமாட்டான் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த எண்ணத் தைப் பின்பற்றுவோர் இந்த ஹதீசுகளைப் படித்து எந்த அளவு வெட்கப்படுவார்கள் என்று என்னால் இப்போது யூகிக்கவே முடியவில்லை.

இன்னொன்றும் நம்பப்படுகிறது. முஸ்லிம் ஹதீஸில் உள்ளது. அதாவது மஸீ ஹிற்குப் பின் தீயவர்கள் எஞ்சியிருப்பர். அவர் மேல் கியாமத் (பேரழிவு) நிகழும் என்பதே அது. எந்தக் காபிரும் எஞ்சியிருக்கமாட்டான் என்றால் அது (கியாமத்) எங்கிருந்து வரப்போகிறது?

இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. மேற்குறிப்பிட்ட வசனத்தில் அந்தப் பொருள் சரியில்லை என்றால் எந்தப் பொருள்தான் சரியானது? அந்த இடத்திலேயே அதனுடன் தொடர்புடைய எல்லா வசனங்களையும் கவனித் தால் அந்த வசனத்தின் சரியான பொருள் தெரியவரும். அந்தப் பொருள்தான் சரியானது என ஒப்புக் கொள்வதில் தயக்கம் ஏற்படாது.

எனவே முதலில் அந்த வசனங்கள் எல்லாவற்றை யும் கீழே குறிப்பிடுகிறேன். அதன்பின் அந்த வசனங்களின் அடிப்படியில் நிரூபணமாகும் பொருளையும் குறிப்பிடுகிறேன். அந்த வசனங்களாவன:-

'வ கவ்லிஹீம் இன்னா கத்தல்னல் மஸீஹ.... யக்கூனு அலைஹிம் ஷஹீதா' (4:158-160) பொருள்: இறைவனின் கருணையையும் நம்பிக்கையையும் யூதர்கள் இழந்துவிட்டதற்க்குக் காரணம்,அவர்கள் செய்த அவர்களின் தீய செயல்களாகும். அவற்றுள் ஓன்று என்ன வென்றால், அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதரென்றும் மஸீஹ் என்றும் வாதித்த ஈசப்னு மர்யத்தை நாங்கள் கொன்றுவிட்டோம். (நாங்கள் ஈஸா ரெசூளுல்லாஹ்வை கொன்று விட்டோம் என்று யூதர்கள் கூறினார்களென்றால், அவர்கள் ஹஸ்ரத் மஸீஹை ரெசூல் என்று நம்பினார்கள் என்று பொருளன்று.

ஏனெனில் அவர்கள் அவரை உண்மையான ரெஸூல் என்று நம்பியிருந்தால் சிலுவையில் அறைய முற்பட்டிருக்க மாட்டார்கள். எனவே "இதோ இந்த ரெஸூலை நாங்கள் சிலுவையில் அறைந்து கொன்றோம் என்ற அவர்களின் கூற்று, கேலி செய்யும் முறையிலாகும். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவன் சாபத்திற்குரியவன் என்ற தவ்ராத்தின் கூற்றுதான் இந்த கேலி கிண்டலுக்கு அடிப்படைக் காரணம்)

யூதர்களின் இந்தக் கூற்றின் நோக்கம் என்னவென்றால் ஈசப்னு மரியம் உண்மையான ரெஸூலாக இருந்திருந்தால் அவரைத் தூக்கிலிட நாங்கள் ஒருநாளும் ஆற்றல் பெற்றிருக்க மாட்டோம். ஏனெனில் சிலுவைக் தண்டனை பெற்றவன் சாபத்திற்குரியவன் ஆவான் என தவ்ராத் உரத்த குரலில் கூறுகிறது என்று காட்டுவதேயாகும்.

திருக்குர்ஆன் இந்த வசனங்களுக்குப் பின் கூறுவதாவது, உண்மையில் யூதர்கள் மசீஹிப்னு மர்யமைக் கொல்லவில்லை. தூக்குத் தண்டனை வழங்கவுமில்லை. மாறாக இந்த எண்ணம் அவர்களின் உள்ளங்களில் யூகமாகவே உள்ளது. உறுதியானதன்று. மேலும் அவர்களின் மடமை யையும் தன் வல்லமையையும் அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ்வே அவர் களைச் சந்தேகத்தில் ஆக்கினான்.

அதன்பின் கூறினான்; மஸீஹிற்கு சிலுவை தண்டனை கிடைத்திருக்கலாமோ என்ற ஐயத்தில் இருக்கும் மக்களிடம் அதக்கான எந்தத் திட்டவட்டமான சான்றும் இல்லை. ஒரு யூகத்தையே அவர்கள் பின்பற்றுகின்றனர். மேலும் மஸீஹிற்கு சிலுவை தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கு உறுதியான அறிவு அவர்களிடமில்லை என்பதை அவர்களே நன்கறிவார்கள். மாறாக உண்மையான (உறுதியான) செய்தி என்னவென்றால் அவர் இறந்து விட்டார் என்பதேயாகும். அதாவது அவர் தமது முதிய வயதில் இயற்கையாக மரணமடைந்தார்.

மேலும் இறைவன் அவரை நல்லடியார்களாகிய மக்களைப் போல் தன்பால் எடுத்துக் கொண்டான், மேலும் இறைவன் மிகைத்தவனாவான், அவனுக் காக ஆகிவிடுகின்றவர்களுக்கு அவன் கண்ணியத்தை வழங்குகின்றான். மேலும் அவன் 'ஹக்கீம்' (நுண்ணறிவுள்ளவன்) ஆவான் அவன் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு தன் நுண்ணறிவால் பயனடையச் செய்கிறான்.

தொடர்ந்து இறைவன் கூறுவதாவது, வேதக்காரர்களில் ஒவ்வொருவரும் மஸீஹ இயற்கையாக இறந்தார் என்ற உண்மையை நம்புவதற்கு முன்(வேதக்காரர்களின் எண்ணங் களைப் பற்றி) நாம் மேலே குறிப்பிட்ட விதமாக நம்பிக்கைகொண்டவராகவே இருப்பார்.

அதாவது மஸீஹ் உண்மையில் சிலுவையில் அறையப்பட்டு மறைந்தார் என்ற விஷயத்தில் எந்த வேதக்காரர்களுக்கும் உள்ளத்தளவில் உருதிகிடையாது. என்று நாம் ஏற்கனவே விளக்கி வந்துள்ளோம். கிறிஸ்தவர்களாயினும் சரி, யூதர்களாயினும் சரி, யூகம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று எண்ணு கின்றனர்.

எமது இந்தக் கூற்று உண்மையானது. எவரும் இதனை மறுக்க முடியாது. எனினும் அவரின் மரணம் பற்றி அவர் எப்போது இறந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே அது குறித்து நாம் தெரிவிக்கிறோம். அவர் இறந்துவிட்டார் அவருடைய ஆன்மா கண்ணியத்துடன் நம் பக்கம் உயர்த்தப்பட்டது என இறைவன் கூறுகின்றான்.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் எண்ணங்கள் தொடர்பாக நாம் வெளிப்படுத்திய விஷயத்தில் நம்பிக்கை வைத்திராத எவரும் அவர்களிடையே இல்லை என்ற இறைவனின் கூற்று அற்புதமான ஒரு கூற்றாகும். இது யூதர்களைப் பார்த்து "நீங்கள் உண்மையாளர்கள் என்றால் மரணத்தை நாடுங்கள்" ((2:95) என்ற வசனத்தைப் போன்ற ஒன்றாகும் இது. எனவே இந்தக் கூற்றின் மூலம், "நாங்கள் உண்மையிலேயே மஸீஹிற்குத் சிலுவை தண்டனை வழங்கினோம்" என்று யூதர்கள் கூறுவதிலிருந்து, அவர் சாபத்திற் குரியவராவார். உண்மையான நபியில்லை (நவூதுபில்லாஹ்) என்ற முடிவுக்கு வருவதே அவர்களின் நோக்கம்.

அவ்வாறே மஸீஹ் உண்மையிலேயே சிலுவை தண்டனையால் இறந்தார் என்று கிருஸ்தவர்கள் கூறுவதன் நோக்கம், மஸீஹ் கிறிஸ்தவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிவிட்டார் என்ற முடிவுக்கு வருவதாகும்.

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய இவ்விரு எண்ணங்களும் தவறாகும். இவ்விரு பிரிவினருள் எவருக்கும் இவ் எண்ணங்களில் திடமான உறுதியில்லை. மாறாக மஸீஹ் உறுதியாகவே சிலுவை தண்டனைக்கு ஆளாகவில்லை என்பதில் மட்டுந்தான் அவர்களுக்குத் திடமான உறுதியுள்ளது.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் மவுனம் கொள்வதி லிருந்தும் அவர்களிடம் சந்தேகத்தைத் தவிர ஏதும் இல்லை என்பதை நேர்மையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்தக் கூற்றினால் அல்லாஹ் விளக்க விரும்புகிறான்.

மேலும் யூதர்களும் கிறித்தவர்களும் இந்த வசனத்தைக் கேட்டும் மவுனமாக இருந்தனர்; மறுப்பதற்காக களத்தில் இறங்கவில்லை என்றால் அதற்க்குக் காரணம், நாம் இதற்க்கு எதிரில் நம் உள்ளத்தில் இல்லாத ஒரு வாதத்தை விடுத்தால் நாம் பொய்யர் என்பதைத் தெளிவு படுத்தக்கூடிய ஏதேனும் அடையாளம் இறைவனிட மிருந்து வெளியாகிவிடும் என்றும் அவர்கள் நன்கு அறிந்ததேயாகும். எனவே அவர்கள் மூச்சு விடவில்லை;மவுனமாக இருந்தனர்.

நாம் மவுனம் சாதிப்பதால் நாம் அதனை ஒப்புக் கொண்டுவிட்டோம் என்பது நிரூபணமாகி விடும் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தனர். மேலும் அதனால் ஒருபக்கம் அந்த மறுபபோரின் கொள்கையின் வேர் அறுந்துவிடும். அதே சமயத்தில் இன்னொருபக்கம் மஸீஹ் இறை வைனின் உண்மையான தூதரும் நல்லடியாரும் இல்லை; இறைவன் பால் கண்ணியத்துடன் உயர்த்தப்படக் கூடியர்வர்களை சேர்ந்தவரில்லை என்ற தங்களின் கொள்கை பொய்யாகிவிடும் என்பதையும் யூதர்கள் அறிந்திருந்தாலும் முஹம்மது ரெசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உண்மையின் ஒளியின் வாள் அவர்களின் கண்களை கூசச் செய்து விட்டது.

திருக்குரானில் அவர்களைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்கள் என்றால், மரணத்தை நாடுங்கள் என்று கூறியும் அச்சத்தால் எவரும் மரணத்தை நாடாததைப் போன்று அச்சத்தால் நடுங்கிய அவர்களால் மறுக்க முடியவில்லை. அதாவது மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் என்று நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் உறுதி கொள்ளாதவர்களுடன் சேர்க்கின்றீர்கள்? என அவர்கள் வாதிக்கவில்லை. எனவே நபி(ஸல்) அவரளின் காலத்தில் அவர்கள் மவுனம் சாதித்ததே நிரந்தரமான முறையில் அவர்களுக்கு எதிரான சான்றாக அமைந்துவிட்டது.

அவர்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனையான கருத்தின் தாக்கத்திற்கு அவர்களின் வழித் தோன்றல்களும் ஆளாகிவிட்டனர். ஏனென்றால் முன்சென்றோர் பின் வருபவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அவர்களின் சாட்சியத்தை வருங்கால வழித்தோன்றல்கள் என்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது.

மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளாகவில்லை. மாறாக இயற்கையாக இறந்தார் என்ற பிரச்சனையை இறைவன் எழுப்பினான் என்றால் இந்த வாதத்தின் குறிக்கோள் இதுதான் என்பதைத் தற்போது வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். அதாவது மஸீஹ் சிலுவை தண்டனையால் வெவ்வேறான இரு பிரிவினர்கள் - அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தத்தமது குறிக்கோளுக்குச் சாதகமாக வெவ்வேறான இரு முடிவுகளை எடுத்துக் கொண்டார்கள்.

அவர் சிலுவை தண்டனைக்காளானவர் தவ்ராத் தின்படி சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் சாபத்திற்குறியவர்; இறை நெருக்கத்தை இழந்தவர். "ரபாஆ" வின் கண்ணின்யம் இழந்து விட்டார்; மேலும் நுபுவத்தின் அந்தஸ்து என்பது இந்த இழிநிலைக்கு அப்பாற்பட்டது என்று யூதர்கள் கூறினர்.

கிறித்தவர்களோ யூதர்களின் இந்த அவதூறுக்கு, மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானது அவருக்குத் தீயதன்று மாறாக பாவிகளைச் சாபத்திலிருந்து காப்பாற்றவே இந்த சாபத்தைத் தமக்காக மேற்கொண்டாரென்ற பதிலைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டனர்.

எனவே இறைவன் அவ்விரு பிரிவினரின் மேற்குறிப்பிட்ட கூற்றுகளையும் அழித்துவிடத் தீர்மானித்தான். மேலும் அவ்விரு பிரிவினருக்கும் மஸீஹின் சிலுவைதண்டனைக்கு ஆளாதல் குறித்து உறுதியில்லை என்றும் உறுதியிருந்தால் முன்வரவேண்டும் என்று வெளிப்படுத்தினான். ஆனால் அவர்கள் ஓடிவிட்டனர். எவரும் மூச்சு விடவில்லை. இது நபிகள் நாயகம் மற்றும் திருக்குரானின் ஓர் அற்புதமாகும். இது தற்கால அறிவற்ற மவுலவிகளின் பார்வைகளிலிருந்து மறைந்துள்ள ஒன்றாகும்.

எவன் கையில் ஏன் உயிர் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நான் கூறுகிறேன்; இப்பொழுது இந்த நேரத்திலே மேற் குறிப்பிட்ட உண்மை ஆன்மீகக் காட்சியின் மூலம் எனக்கு வெளிப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது எழுதியதெல்லாம் அந்த உண்மையான கற்பிப்போனின் போதனை யால்தான் எழுதினேன். இதற்காக எல்லாப் புகழும் இறைவனுக்கே!

பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தாலும் இக்கூற்றின் உண்மைக்கு ஒவ்வொரு நேர்மையான உள்ளமும் சான்று பகரும். ஏனெனில் இறைவனின் கூற்று வீண் விஷயங்களைவிட்டும் தூயதாக இருத்தல் வேண்டும். இந்தச் சர்ச்சையின் இடையில் மிகப்பெரும் இந்த நோக்கங்கள் இல்லைஎன்றால் இந்தக் கூற்றுகள் அத்தனையும் எந்த உண்மையும் இல்லாத வெறும் வீணானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவராலும் உணர முடியும். ஏனெனில் அந்நிலையில் ஒரு நபிக்குத் சிலுவைதண்டனை கிடைத்ததா அல்லது இயற்கையான மரணத்தால் இறந்தாரா என்ற இந்த பிரச்சனை, பயனற்ற ஒரு சர்ச்சையாகும். இதனால் எந்தப் பயனும் விளையாது!

எனவே எந்த யூதருக்கும் எந்தக் கிறித்தவருக்கும் மஸீஹின் சிலுவைத் தண்டனை குறித்து உறுதியான நம்பிக்கை இல்லை என அல்லாஹ் மிகவும் விளக்கமாக வலுவான ஆற்றலுடன் கூறுவதில் என்னதான் பெரிய நோக்க மிருக்கிறது? என்பதையும் எந்தனை நிரூபிப்பதற் காக யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் பதில் சொல்ல முடியாமல் மவுன மாக்கியதன் பின்னால் இருந்த மாபெரும் குறிக்கோள் என்ன? என்பதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அந்த நோக்கத்தைத் தான் மவுலவிகளின் பார்வையில் காபிராகவும் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனாகவும் இருக்க இவ்வடியா னுக்கு அவன் தன் சிறப்பான ஆன்மீகக் காட்சியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றான். (இஸாலேயே அவ்ஹாம், பக்கம் : 288 - 294)
Read more »

Nov 14, 2014

கெண்டைக்கால் திறத்தல் என்பதன் விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 249 இல் கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 68:42) கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்பட்டதில்லை என்பதை இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று கூறவில்லை.

மாறாக, மனிதன் திரும்ப உய்ர்ப்பிக்கப்பட்ட பின் மறுமை நாளில் இறைவனைக் காண முடியும் என்றும் கூறுகிறது.

மறுமையில் விசாரணை நடத்துவதற்காக வானவர்கள் புடை சூழ இறைவன் வருவான் என்றும் கூறப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 89:22)

அவ்வாறு வரும்போது தன் காலில் விழுந்து பணியுமாறு மக்களுக்கு உத்தரவு விடுவான். அதுதான் இங்கே கூறப்பட்டுள்ளது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக் காலில் விழுந்து மக்களை பணியச் செய்வான் என்று பொருள்.

இவ்வுலகில் இறைவனுக்கு பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்: மற்றவர்கள் இறைவன் காலில் விழ முடியாது. இது நபிகள் நாயகம் அளித்த விளக்கம். (புகாரியில் 4919 வது ஹதீஸில் இதைக் காணலாம்)

நம் விளக்கம்:

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்படவில்லை. என்பதை இஸ்லாம் கூறுகிறது என்பது தவறாகும். இவ்வுலகில் இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. ஆனால் அகக் கண்ணால்  காண முடியும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும். நபி (ஸல்) அவர்கள் இறைவனை தம் அகக் கண்ணால் இருமுறை கண்டது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக்காலில் விழுந்து மக்களைப் பணியச் செய்வான் என்று பொருள் என்று பி.ஜே எழுதியுள்ளார். கெண்டைக்கால் திறக்கப்படும் நாள் என்றால் உண்மை வெளிப்படும் நாள் என்றுதான் பொருள்படும்.

உண்மை வெளிப்படுத்தப்படும் நாளில் சிரம்பணிந்து வணங்குவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் (அதற்கான) ஆற்றல் பெற்றிருக்க மாட்டார்கள் என்றுதான் பொருள். (திருக்குர்ஆன் 68:43)

2) காலில் விழுந்து வணங்குதல் என்பதுதான் சொல் வழக்காகும். கெண்டைக்காலில் விழுந்து வணங்குதல் என்பது சொல் வழக்கன்று.

3) சிரம்பணிந்து வணங்குவதற்கு கெண்டைக்கால் திறந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கெண்டைக்கால் திறக்காவிட்டாலும் காலில் விழுந்து வணங்கலாம்

4) 68:42 வசனத்திற்கு, M.அப்துல் வஹ்ஹாப் தன் திருக்குர்ஆன் தர்ஜுமாவின் அடிக்குறிப்பு எண் 385 இல் கெண்டைக்கால் வெளியாக்கப்படுவது என்பது அரபு இலக்கிய வழக்காற்றில் எந்தவித திரை மறைவின்றி ஒன்றின் கடுமையான தன்மை வெளியாக்கப்படும் போது என்று பொருள்படும். இது சர்வசாதாரணமாக அரபி மொழியில் வருகிறது. கஷ்பில் அம்ரு அன்ஸாகிஹி கெண்டைக்கால் முற்றிலும் தெரிந்தது – அதாவது ஒன்றின் நிலை சந்தேகத்துக்கு இடமின்றி முழுவதாகத் தெரிந்தது – என்று இமாம் குர்துபீ ஓர் உதாரணம் கொடுக்கிறார்கள்.

கியாமத் நாளைச் சந்திக்கும் வரை மனிதர்கள் அதைப் பற்றிய அறிவை செவி வழிச் செய்தியாகவோ, எழுத்தின் வாயிலாகவோ ஓரளவுதான் தெரிந்திருப்பார்கள். ஆனால் அதை நேரெதிரே பார்க்கும் போதுதான் அதன் பயங்கரத் தன்மையை உணர்வார்கள் என்று எழுதுகிறார்.

5) தமிழ் தர்ஜுமாக்களில், மௌதூதி, தப்ஸீருல் ஹமீது ஆகியோரும், ஆங்கில மொழியாக்கங்களில் யூசுப் அலி, இப்னு கஸீர், M.H ஸாகிர், வஹீதுத்தீன் கான், மௌலவி முகம்மதலி ஆகியோரும் கெண்டைக்கால் என்பதற்கு அல்லாஹ்வின் கெண்டைக்கால் என்று எழுதவில்லை. மறுமையின் கடுமையான நிகழ்வுகள் வெளிப்படுதல், மறுமையில் உண்மைகள் வெளிப்படுதல் என்றுதான் விளக்கம் தந்துள்ளனர். பாகவியோ திரை அகற்றப்பட்டு விடும் நாள் என்று எழுதியுள்ளார். மௌலவி முகம்மதலி தன் கருத்துக்கு பைழாவி, ஜம்ஹஷ்ரி ஆகிய திருக்குர்ஆன் விரிவுரைகளை மேற்கோள் காட்டுகிறார்.

திருக்குர்ஆன் 89:23 வசனத்தில், வானவர்கள் அணியணியாக நிற்கும் நிலையில் உமது இறைவன் வருகை தருவான் என்று வருகிறது. விசாரணைக்காக வருவான் என்று பி.ஜே கூறியிருப்பது தவறாகும். அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நிராகரிப்பவர்களிடம் வருகின்றனர் என்றால். அவர்கள் தண்டனையைக் கொண்டு வருகின்றனர் என்று பொருள் என திருக்குர்ஆன் விளக்குகிறது. (இது குறித்து 59:3; 2:211 - ஆகியவற்றில் காண்க) அதுவே இப்போதும் ஏற்படும். இறைவனுடைய வருகையும், வானவர்களின் வருகையும் நிராகரிப்பவர்களுக்கு அழிவு ஏற்படப் போகிறது என்பதைத் தெரிவிக்கிறது. வரலாறுகளில் வானவர்களைக் கண்டனர்: வானவர்கள் அவர்களை எதிர்த்துப் போர் செய்து கல்மாரி பொழிந்தனர். அந்த வானவர்களைக் கண்டதால் ஏற்பட்ட உறுதிப்பாட்டினால், பின்னர் அவர்கள் முஸ்லிம்களைச் சந்தித்த போது, பத்ருப் போரில் உங்கள் அருகில் இவ்வகையான போர்க் கருவிகள் அணிந்த குதிரைபடை வீரர்கள் போர் செய்து கொண்டிருந்தனர் என்றார்கள். இதற்கு நபித்தோழரும், ஆம்: நானும் கண்டேன் எனக் கூறி அதனை உண்மைப்படுத்தினர். பத்ருப் போரின்போது நிராகரித்தவர்களும் நம்பிக்கை கொண்டவர்களும் வானவர்களைக் காணும் அளவிற்கு அந்த ஆன்மீகக் காட்சி பொதுவாகவும், தெளிவாகவும் நிகழ்ந்தது என்று இதிலிருந்து புலனாகிறது. (அடிக்குறிப்பு எண் 5, அஹ்மதிய்யா முஸ்லிம்ஜமாஅத் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம், பக்கம் 1358)

பி.ஜே யின் தவறான விளக்கம்: 89:23 வசனத்துக்கு புகாரி 4919 நபிமொழியை பி.ஜே தவறாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் புகாரி இமாம் அவர்கள் இந்த நபிமொழிக்கு 68:42 வசனத்தைத் தான் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இதற்கு ஒன்றின் நிலை சந்தேகத்திற்கிடமின்றி முழுவதுமாக தெரிகிறது என்ற இமாம் குர்துபி தரும் விளக்கமே சரியாகும்.

ஹதீஸ் எண் 4910 ன் படி, இறைவனுக்கு மூமின்கள் சஜ்தா செய்வார்கள் என்றும், மற்றவர்களால் சஜ்தா செய்ய முடியாது என்றுதான் கூறப்பட்டுள்ளது.
Read more »

Nov 11, 2014

ஹஸ்ரத் இப்ராஹீம் நபிக்கு பி.ஜே செய்த அவமரியாதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 336 இல் நான் நோயாளி எனக் கூறினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இப்ராஹீம் நபி அவர்கள் ஊர் மக்களெல்லாம் திருவிழாவைக் கொண்டாட வெளியேறிய பின் சிலைகளைத் தகர்ப்பதற்காக தாம் நோயாளி என்று கூறி திருவிழாவுக்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள் (37:89)

இது போல் ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற்காக நல்ல விளைவை ஏற்படுத்துவதற்காக கூறப்படும் பொய் குற்றமாகாது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று எழுதியுள்ளார். மேலும் சத்தியப் பிரச்சாரத்தின் போது இது போன்ற வழிமுறைகளை கையாளுவது தடுக்கப்பட்டதல்ல என்றும் கூறியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432)

நம் விளக்கம்:

இந்த வசனத்தில் 37:90 இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்பதை திருக்குர்ஆன் அல்லது நம்பத்தகுந்த நபிமொழியில் இருந்து பி.ஜே நிரூபிக்க முடியுமா?

அல்லாஹ்வும் ரஸுலும் கூறாத ஒன்றை பி.ஜே இட்டுக்கட்டி கூறியுள்ளார் என்பதை அவரால் மறுக்க முடியுமா?

நான் நோயாளி என்று ஒரு நபி கூறுகின்ற போது அவர் நோயாளி இல்லை என்று கூறுகின்ற அதிகாரம் பி.ஜே க்கு எப்படி வந்தது?

இப்ராஹீம் நபி ஒரு உண்மையான நபியாக இருந்தார் என்று அல்லாஹ் கூறுகிறான். (19:42) ஆனால் பி.ஜே இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்று கூறுகின்றார். அல்லாஹ்வின் வார்த்தையை மறுக்கின்ற பி.ஜே தவ்ஹீதுவாதியா?

ஒரு நபி பொய் சொல்லமாட்டார்: பொய் சொல்லக் கூடியவர் நபியாக இருக்கமாட்டார் என்ற ஒரு நபியைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை எவ்வாறு அழைப்பது.?

இப்ராஹீம் நபியின் இந்த சம்பவத்திலிருந்து ஒரு கொள்கையை நிலைநாட்ட பொய் கூறலாம் என்று பி.ஜே கூறுகிறார். இதிலிருந்து தவ்ஹீது ஜமாஅத்தின் கொள்கைகள் பொய்யினால் நிலைநாட்டப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகவில்லையா?

நல்ல விளைவை ஏற்படுத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று கூறுகிறார். ஆனால் திருக்குர்ஆனோ பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக(3:62) என்றும் ஒவ்வொரு பொய்யரின் மீதும் சைத்தான் இறங்குகின்றனர் (26:223) என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட நல்ல விளைவை (!) ஏற்படுத்தும் எத்தனை பொய்களை பிறரை ஏமாற்ற பி.ஜே கூறினாரோ! அல்லாஹ்வே நன்கறிவான்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் இல், 432 இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? எனும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

திருக்குர்ஆன் 21:63 இல், இப்ராஹீமே, நீர் தாம் எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தீரா? என்று கேட்டனர். இல்லை அவற்றில் பெரிய சிலை தான் செய்தது என்று தமிழாக்கம் செய்துவிட்டு விளக்க அட்டவணையில் பெரிய சிலைதான் உடைத்தது என்று கூறினார்கள்... ஆனால் அவர் கூறியது உண்மையல்ல.

நம் விளக்கம். பி.ஜெக்கு ஒரு நபியின் இலக்கணமும் தெரியவில்லை. பொய்யின் இலக்கணமும் தெரியவில்லை. ஒரு கூற்று பொய் என்பதற்கு நிபந்தனை, அது பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாதது சொல்லப்பட்டிருக்க வேண்டும், சிலை உடைப்பு விசயத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்மை ஏமாற்றுவதற்காக அவர்களது சமுதாயத்தினர் துளியும் கருதவில்லை. காரணம் இச்செயலை செய்தவர் ஒருவர் உண்டு, யார் என்று பெரிய சிலையிடம் கேளுங்கள் என்று கூறினார். எனவே அவர்கள் வெட்கத்தால் தலைகுனிந்தவர்களாக, திரும்பிச் சென்றதாக அடுத்து வரும் வசனங்கள் கூறுகிறது. (21:65,66) எனவே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) கூறியது பொய் அல்ல. alim.org இல் மாலிக் அவர்கள் திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தை இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்.  He replied, "Surely someone has done it; the chief of them, that is! Ask them, if they can speak!" மேல் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். ஆனால் சிலை வணங்கிகளாக இருந்த அந்த சமுதாயத்தினர் சுமத்தாத குற்றச் சாட்டை பி.ஜே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) மீது சுமத்துகின்றார் இல்லை என்று பொய் கூறியதுடன் பெரிய சிலை மீது அக்குற்றத்தைப் போட்டதாக எழுதியுள்ளார். இதனை நியாயப்படுத்த திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432 இல் அவர் கூறுவதாவது, சொல்பவருக்கும் பொய் சொல்கிறோம் என்று தெரிகிறது. கேட்பவருக்கும் வேறு ஒரு அர்த்தத்தில் சொல்லப்படுகின்ற பொய் என்று தெரிகிறது அப்படியிருந்தால் இது பொய் வடிவில் அமைந்த மெய் என்றுதான் கூற வேண்டும் என்று பி.ஜே எழுதுகிறார்.

அதாவது இப்ராஹீம் நபிக்கும், அந்த மக்களுக்கும் அது பொய் என்று தெரிகிறதாம். இப்படியிருந்தால் அது பொய் வடிவில் அமைந்த மெய்தான் என்கிறார். பி.ஜே.

நான் கேட்கிறேன்: இன்று ஏதோ சில அமைப்புகள் செய்கின்ற தீவிரவாத செயல்களுக்கு, ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதி என்றும் கூறுகின்றன. இதனை பி.ஜே மேலே சொன்ன அளவுகோலின் அடிப்படையில், முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை பொய். பொய் வடிவில் அமைந்த மெய் என்று ஏற்றுக் கொள்வார் போலும். உண்மையை வேறு வடிவில் கூற வேண்டுமே ஒழிய பொய்யை எந்த வடிவில் யார் கூறினாலும் அது பொய் தான். மெய்யாகாது. எனவே பி.ஜே எதிர்காலத்தில், பொய்க்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதை விட்டு விட வேண்டும். என்பதுதான் நம் வேண்டுகோள்.
Read more »

மலக்குகளைப் பற்றிய தவறான விளக்கம்.


ஈமான் கொள்ள வேண்டியவற்றுள் ஓர் அம்சம் மலக்குகள் மீது ஈமான் கொள்வதாகும். மலக்குகளைப்பற்றி பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்:

மனிதனின் தகுதியைப்பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.

இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள் இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபனை செய்திருப்பார்கள்? மலக்குகள் ஆரம்பத்தில் ஆட்சேபனை செய்தபோது அவர்களுடன் செய்த்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்?

செய்த்தான் அவர்களை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபனைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபனை செய்திருப்பார்கள்?

நம் விளக்கம்:


சொர்க்கத்தில் மலக்குகளுடன் சைத்தானும் இருந்தால் ஆதமின் படைப்பு பற்றி ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்
– என்று பி.ஜே எழுதுகிறார்.

இந்த அபத்தமான கருத்துக்கு பி,ஜே.


1. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் தரமுடியுமா?

2. அல்லாஹ் அவர்களுக்கு (மலக்குகளுக்கு) எதைக் கட்டளை இடுகின்றானோ அதற்கு அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 66:6) என்ற இறைவசனத்திற்கு மாற்றமாக சைத்தானின் தூண்டுதலுக்கு இரையாகி மலக்குகள் ஆட்சேபனை செய்து சூடுபட்டார்கள் என்று பி.ஜே யினால் எப்படி என்ன முடிகிறது?

இரண்டாவதாக கலைச் சொற்கள் (அரபி) எனும் தலைப்பில் இப்லீஸ் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தால் இப்லீஸ்

நம் விளக்கம்:

இவருடைய இக்கூற்றுக்கு, திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்களை இவர் காட்ட முடியுமா? அவன் (ஏற்கனவே) நிராகரிப்பவர்களைச் சேர்ந்தவனாக இருந்தான். (2:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே இப்லீஸ் நல்லவனாக இருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவன் நிராகரிப்பவனாகவே இருந்தான் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

மூன்றாவதாக வானவர்கள் – மலக்குகள் நம்புதல் எனும் தலைப்பில் வானவர்கள் நரகின் காவலர்கள் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

வானவர்கள் சொர்க்க வாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள். – 13:23, 15:46, 21:103, 41:31

நம் விளக்கம்:

பி.ஜே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்களை நாம் பார்க்கின்ற போது மலக்குகள் பணிவிடை செய்தார்கள் என்று எங்கும் வரவில்லை. மாறாக, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்து சுவர்க்கவாசிகளுக்கு ஸலாம் ச்கூருவார்கள் என்றும் சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கக்கூடிய அருட்கொடைகளை எடுத்துக்கூறுவார்கள் என்றுமே வருகிறது. எனவே பி.ஜே கூறியுள்ள மலக்குகள் பணிவிடை செய்வார்கள் என்பது தவறான கருத்தாகும்.

நான்காவதாக, மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் மலக்குகளை மலைக்குள் மௌத் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பி.ஜே சுயமாக தரும் விளக்கத்தின் அடிப்படையில், ஈஸா நபி இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார் என்றால், மலைக்குள் மௌத்தால் கைப்பற்றப்பட்ட உயிர்களைத் திரும்ப அவர்களின் உடலில் புகுத்தும் மலக்கின் பெயர் என்ன? அந்த மலைக்கு அப்படி ஒரு செயலைச் செய்வார் என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் உண்டா?
Read more »

Nov 10, 2014

இவ்வுலகில் இறைவனை காணமுடியும்!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல் பி.ஜே இறைவனைக் காண முடியுமா? என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார்.

அவனை பார்வைகள் அடைய முடியாது. அவனோ பார்வைகளை அடைகிறான். என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 6:103)

நம் விளக்கம்:

இறைவனை இவ்வுலகில் யாரும் புறக்கண்ணால் காண முடியாது அவனோ அகக்கண்ணின் மூலம் பார்வைகளை அடைகிறான். மறுமையில் அல்லாஹ்வை காண முடியும் என்று நபிமொழி மூலம் அறிகிறோம். இம்மையில் குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவே இருப்பார் (17:73) என்ற திருக்குர்ஆன் வசனம். இம்மையில் யார் தம் அகக்கண் மூலம் அல்லாஹ்வை காணவில்லையோ அவர்கள் மறுமையிலும் காண முடியாது என்பதை விளக்குகிறது.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல், திருக்குர்ஆன் 6:104 வசனத்துக்கு அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்று பொருள் கூறும் பி.ஜே தன் தர்ஜுமாவில்,

அவனைக் கண்கள் பார்க்காது: அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று தவறான பொருளைக் கூறியுள்ளார். இவ்வாறு தவறான பொருளை பி.ஜே கூறுவதன் காரணம் இவ்வுலகில் இறைவனை அகக்கண்ணாலும் காண முடியாது என்ற தன் கருத்தை தவறான பொருளின் மூலம் நிலை நாட்ட முயன்றுள்ளார்.

ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புறத்தில் இறைவனைப் பார்க்க முடியாதே தவிர அகத்தில் இறைவனைப் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது அகத்தால் இறைவனை இரண்டு முறை பார்த்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 285) இது அகக்கண்ணால் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பி.ஜே கூறுகிறார். இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடுதான் ஏற்படும் நன்மை ஏற்படாது என்று எழுதுகிறார். இது தவறான வாதமாகும். நாத்திகர்கள், இறைவன் உண்டு; மறுமை உண்டு என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடு தான் ஏற்படும். நன்மை ஏற்படாது என்று கூறுவதற்கும் பி.ஜே கூறுவதற்கும் அணுவளவும் வித்தியாசம் இல்லை.

இறைவனை இவ்வுலகில் அகக்கண்ணால் காண முடியும். என்று ஒருவன் நம்பி அவனைக் கண்டறிவதே அறிவுடைமையாகும்.

திருக்குர்ஆன் 17:73 வசனம். இந்த இ(ந்த உலகத்)தில் குருடராக இருப்பவர், மறுமையிலும் குருடராகவே இருப்பார் என்று கூறுகிறது. இந்த வசனம் இவ்வுலகில் இறைவனை காண முடியும் என்றும். அகக்கண்ணால் இவ்வுலகில் இறைவனைக் காணாதவர்கள் மறுமையில் குருடராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறது.

பி.ஜே எழுதுகிறார்:

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விடமுடியும் இது பி.ஜே யின் வாதம்.

இறைவன் இருப்பதாக கூறி எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவன் இல்லை என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும் என்று இறை மறுப்பாளர்கள் கூறுவதற்கும், பி.ஜே யின் வாதத்திற்கும் இடையில் இம்மியளவும் வேறுபாடில்லை.

இறைவனை அகக்கண்ணால் காண முடியும் என்பது உண்மையா? பொய்யா? என்பதைக் காண வேண்டும். உண்மை என்றால் நன்மைதான் விளையும். பொய் என்றால் கேடுதான் விளையும் என்று நம்புவதே அறிவுடையோரின் செயலாகும்.

கனவும் இறைச் செய்தியும்.

1) நபி (ஸல்) அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். (புகாரி ஹதீஸ் எண் 3)

ஹஸ்ரத் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் தன் மகனை அறுப்பது போல் கண்ட கனவும் ஓர் இறைச் செய்தியே. அதனால்தான் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையே! அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள் என்று கூறி தந்தை கண்ட கனவி இறை கட்டளை என்று கூறுகிறார்.

புறக்கண்ணை விட அகக்கண்ணுக்கு ஆற்றல் மிகமிக அதிகம் என்பதினாலும் இறைவன் தன் கட்டளைகளையும், வஹியையும், இறைக் காட்சியையும் அகக்கண்ணால் இரு முறை கண்டதைத் திருக்குர்ஆன் கூறுகிறது. (53:12,14) ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதனையே (முஸ்லிம்285) கூறியுள்ளார்கள்.

எனவே இம்மையில் இறைவனை அகக் கண்ணால் காண முடியும் என்று திருக்குரானும் நபிமொழியும் கூறுகிறது. இவ்வாறு கூறுபவர்கள் வறுபட்ட கருத்தைக் கூறுகின்றனர் என்பது தெளிவு.

மேலும் மூஸா நபி, என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக என்று வேண்டினார் இதற்கு அவன் உம்மால் என்னை ஒரு போதும் காணவியலாது.(7:144) என்று கூறுகிறான். அதாவது புறக்கண்ணால் தன்னைக் காணவியலாது என்றே இறைவன் கூறுகிறான். அதனை நிரூபிக்க மலையைத் தவிடுபொடியாக்கிக் காட்டுகிறான். அவ்வளவு ஏன்? நம் புறக்கண்ணால் சூரியனின் ஒளியைக் காணும் போது கண் கூசுகிறது. எனவே, ஒளிமயமான இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. அகக்கண்ணால் காண முடியும் என்பதையே அந்த உள்ளம் தான் கண்டதைக் குறித்துப் பொய்யுரைக்கவில்லை. அவர் பார்த்தது குறித்து நீங்கள் அவருடன் வாக்குவாதம் செய்கிறீர்களா? நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:12-14) இந்த வசனங்கள் கூறுகின்றன.

உள்ளம் கண்டது என்றும், மறு முறையும் அவனைக் கண்டார் என்றும், இறைவனை நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜில் தன் அகக் கண்ணால் இருமுறை கண்டது கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தது மிஹ்ராஜ் சம்பவத்தைத்தானே தவிர, ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி அன்று, இச்சம்பவங்கள் மிஹ்ராஜ் சம்பவங்கள் என்பதை நபிமொழியுடன் ஒப்பு நோக்கிப் பார்த்தால் தெளிவாகும். திருக்குர்ஆன் முதல் வசனம் இறங்கும் போதே நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை ஹிரா குகையில் கண்டுவிட்டார்கள். அதன் பின்னர் பல முறை அவர்களைக் கண்டு விட்டார்கள். எனவே மிஹ்ராஜின் போது நபி (ஸல்) அவர்கள் தன் மனக்கண்ணால் கண்டது இறைக்காட்சியைத் தவிர ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்ல.

மேலும் மிஹ்ராஜ் பயணத்தின் இறுதியில் அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்று ஜிப்ரீல் கூற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளியின் விழித்து எழுந்தார்கள். (புகாரி 7517) என்று நபிமொழியில் காணப்படுகிறது.

புனிதப்பள்ளியில் விழித்து எழுந்தார்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும். அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்பது தூக்கத்தின் போது அல்லாஹ்வைக் கண்டது ரூஹ் என்பதும் மிஹ்ராஜின் இருமுறை அல்லாஹ்வை கண்டது ரூஹ் ஆகிய ஆத்மா புறக்கண் இல்லை என்றும் தெளிவாகிறது.
Read more »

வானத்தில் வாசல் திறத்தல் – பி.ஜே யின் தவறான விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 177 இல் வானத்தின் வாசல் திறக்கப்பட மாட்டாது என்னும் தலைப்பில் பி.ஜே திருக்குர்ஆன் 7:40 வது வசனத்திற்கு இவ்வாறு எழுதுகிறார்.

இறைவசனங்களை மறுத்துப் பெருமையடித்தவர்கள் இவ்வுலகில் வாழும் போது செய்யும் பிராத்தனைகள் வானத்தை அடையாது. இவ்வுலகிலும் நஷ்டமடைவார்கள்: மறுமையில் நரகத்தையும் அடைவார்கள் எனபது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 7:40 வது வசனத்தின் பொருள் பி.ஜே தன் தமிழாக்கத்தில்,

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம். இந்த வசனத்தில் சொர்க்கமும் நரகமும் எடுத்துக் கூறப்படுகிறது. இதற்கு முன் பின் வசனங்களும் (7:39; 7:41) சொர்க்கம் நரகம் பற்றியே கூறுகின்றன. எனவே இங்கு வானத்தின் வாசல் என்பது சொர்க்கத்தின் வாசல் என்றே பொருள்படும். மேலும் 7:40 வது வசனத்தை 7:36 வது வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். 
 
திருக்குர்ஆன் 7:40 வது வசனம்
திருக்குர்ஆன் 7:36 வது வசனம்
1) நமது வசனங்களைப் பொய் எனக் கருதி
1) நமது வசனங்களைப் பொய் எனக் கருதி
2) அதைப் புறக்கணிப்போருக்கு
2) அதைப் புறக்கணிப்போர்
3) வானத்தின் வாசல் திறக்கப்படமாட்டாது.
3) நரகவாசிகளே

 
இதிலிருந்து வானத்தின் வாசல் திறந்தால் சொர்க்கம் என்றும், திறக்கவில்லை என்றால் நரகம் என்றும் வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.

நபி (ஸல்) அவர்கள், எனக்கு முன்னர் வந்த இஸ்ரவேல் சமுதாயத்தினர் 72 பிரிவுகளாகப் பிரிந்தனர். என் சமுதாயம் 73 பிரிவுகளாகப் பிரியும், அந்த 72 பிரிவுகளாகப் பிரியும். அந்த 72 பிரிவுகளும் என்னைச் சேர்ந்தவர்கள் இல்லை. நான் அவர்களைச் சேர்ந்தவனும் இல்லை. அவர்கள் நரகிற்கு உரியவர்கள். அந்த ஒரு பிரிவு யார் என்றால், நானும் என் தோழர்களும் எப்படி இருக்கிறோமோ அப்படி அவர்கள் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். இதில் சொர்க்கத்திற்கு உரிய ஜமாஅத்தும், நரகிற்கு உரிய 72 பிரிவுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பைசல் மன்னர் காலத்தில் இஸ்லாத்தின் 72 பிரிவுகளும் அவரது தலைமையில் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்கியதும், பூட்டோ தலைமையில் பாகிஸ்தானில் 72 பிரிவுகளும் காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும் அந்த 72 பிரிவுகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு விளக்கி விட்டது.
Read more »

ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்;

இவ்வசனத்தில் (22:31) இணை கற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

மனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான் இது சாத்தியமாகும்.

இது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன எனபதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

யானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.

இப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும்.

கடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புண்டு என்பதாலும்தான், பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல் என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 22:32 வசனம் வானத்திலிருந்து விழுந்தவனைப் போல் ஆவான். அவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று கூறுகிறது. ஆனால் பி.ஜே பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று தலைகீழாக விளங்கிக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு கற்பனை விளக்கத்தைக் கூறி படிப்பவர்களை தவறான கருத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறார்.

இறந்து கிடக்கின்றவற்றின் உடலைப் பறவைகள் கொத்தித் தின்பதை நீங்கள் டிஸ்கவரி சேனலில் தெளிவாகக் காணலாம். அதுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வானத்திலிருந்து விழுந்தவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று பறவைகள் என்பது பன்மையில் வந்திருப்பதால் மனிதனை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு ராட்சதப் பறவை என்பது தவறு என்று தெரிகிறது. தூக்கிச் செல்லும் அப்பறவை அவனை ஏன் வீசி ஏறிய வேண்டும்? நடமாடித்திரியும் மனிதர்களை தூக்கிச் சென்று வானத்திலிருந்து வீசி எறிந்து விளையாடும் செயலைத்தான் அப்பறவை செய்யுமா? பூமியில் கிடக்கும் உணவையும், எலி, முயல் போன்றவைகளையும் பறவைகள் தூக்கிச் சென்று தின்று தீர்க்கின்றன. இதுவே பறவைகள் இயல்பாகும். பி.ஜே யின் கற்பனை ராட்சதப் பறவை வீசி எறிந்து விளையாடும் போலும்.

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன், எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட வேதம். அதில் கூறப்படும் கருத்து அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கும் என்பதை அறிவுடையோர் அறிவர். ஒரு மனிதனை ஒரு ராட்சதப் பறவை வானில் தூக்கிச் சென்றது என்று அன்று கூறப்பட்டிருந்தால் அவ்வசனம் ஏளனத்திற்கு ஆளாகியிருக்கும். அவ்வாறு ஆகவில்லை. என்பதிலிருந்து அது அப்படி ஒரு பொருளைத் தராது என்று அறிதல் வேண்டும். இரண்டாவதாக எதிர்காலத்திற்கும் ஏற்புடையதாக – பொருந்துவதாக இருக்கவேண்டும். மனிதர்களை தூக்கிச் செல்லும் ராட்சதப் பறவைகளை மனிதனே உருவாக்குவான் என்பது எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஒரு வாதத்திற்காக இந்தக் கற்பனையை நாம் ஏற்பதாக இருந்தால் அவ்வாறு உருவாக்கப்படும் ராட்சதப் பறவையினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் சிந்தித்துப் பின்னர் தான் அதனைச் செயல்படுத்துவார்கள். அப்பறவையால் மனித குலத்துக்கும் பிறவற்றுக்கும் தீங்கு விளையும் என்றால் அதனைச் செய்யமாட்டார்கள் என்பதையாவது புரிந்து கொள்ளவேண்டும்.
Read more »

ஓரங்களில் குறையும் பூமி என்பது கடல் அரிப்பில்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 243 – இல் ஓரங்களில் குறையும் பூமி என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு வருவதை சமீப காலத்தில்
விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இவ்வசனங்கள் (13:41, 21:44) தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு நாம் பொருள் கூறி விளக்கும் போது முன் பின் வசனங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு முன்பின் வசனங்களை கருத்தில் கொள்ளாவிட்டால் அல்லாஹ் எக்கருத்தை வலியுறுத்த நினைக்கின்றானோ அக்கருத்து திசை திருப்பப்பட்டோ, மாற்றப்பட்டோ போய்விடும். என்பதற்கு இவ்விருவசனங்களும் சான்றாகும். நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வந்துள்ளது என்பது உண்மை. என்றாலும் இவ்விரு வசனங்களும் அதைக் குறித்துக் கூறவில்லை என்பதை அவ்விரு வசனங்களுக்கு முன்னர் உள்ள வசனங்களை கருத்தூன்றி படிப்போர் அறியலாம்.

13:41 வசனத்தில், தூதுச் செய்தியை தெரிவிப்பது மட்டுமே உம்மீது (பொறுப்பாக) உள்ளது. (அவர்களிடம்) கேள்விக் கணக்குக் கேட்பது எம்முடைய போருப்பெயாகும் என்றும்,

13:42 இல் நாம் (அவர்களின்) நிலத்தை அதன் எல்லைகளிலிருந்தும் சுருக்கிக் கொண்டே வருவதை அவர்கள் கண்டதில்லையா? மேலும் அல்லாஹ்வே தீர்ப்பு வழங்குகிறான். அவனுடைய தீர்ப்பை மாற்றுபவர் எவரும் இல்லை. மேலும் அவன் விரைவில் கணக்கெடுப்பவன் ஆவான் என்றும்.

13:43 இல், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் திட்டங்கள் தீட்டினர். ஆனால் (நிறைவேறும்) திட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. ஒவ்வொரு மனிதனும் செய்வதனை அவன் அறிகின்றான். வரவிருக்கின்ற அந்த வீட்டின் (நல்ல) முடிவு எவருக்கு உரியதாகும் என்பதை அந்த நிராகரிப்போர் விரைவில் அறிவர் என்றும் வருகிறது.

அதாவது, அல்லாஹ்வின் தூதர் தன் சமுதாய மக்களிடம் தன் தூதுச் செய்தியைக் கூறி அம்மக்களை இறைவழியில் அழைக்கிறார். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு நிராகரிக்கும் அம்மக்களின் நாடு சுருங்கிக் கொண்டே வருகிறது. இதுவே கடந்த கால வரலாறு, நிராகரிப்போர் இதனை நன்கு அறிவார்கள் என்ற கருத்து கூறப்படுகிறது.

21:45 நாம் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையர்களுக்கும் ஒரு நீண்ட காலம் வரை மிகுதியான வசதிகளை வழங்கியிருந்தோம். நாம் அவர்களின் நாட்டை அதன் எல்லா எல்லைகளிலிருந்தும் சிறிதாக்கிக் கொண்டே வருவதை அவர்கள் காணவில்லையா?

21:46 நீர் அவர்களிடம்.... கேட்க முடியாது.

21:47 உம்முடைய இறைவனது தண்டனையின் வெப்பக் காற்று அவர்களைத் தீண்டினால், அவர்கள் எங்களுக்கு அழிவுதான், நாங்கள் அநீதியே இலைத்துக் கொண்டிருந்தோம் எனக் கட்டாயம் கூறுவர்.

இவ்வாறு திருக்குர்ஆன் நெடுகிலும் முழு உலகுக்கும் பல்வேறு காலகட்டங்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு, ஓரிறைக் கொள்கை மூலம் மக்கள் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் இவ்வாறு நிராகரிப்பவர்களின் நிலப்பகுதி சுருங்கியதையும் எடுத்துக் கூறப்படுகிறது. இதனையே நீங்கள் பூமியில் பயணம் செய்து (நபிமார்களைப்) பொய்ப்படுத்தியவர்களின் முடிவினைப் பாருங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 16:37, 3:138, 6:12, 12:110, 22:47, 35:45, 47:11)

நாம் வாழ்கின்ற இந்த நூற்றாண்டிலும் ஏகத்துவக் கோட்பாட்டை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் முழு உலகிலும் பரப்பி வருவதையும், ஏறக்குறைய 200 நாடுகளில் 20 கோடி மக்கள் அதனைத் தழுவி உண்மையான முஸ்லிம்களாகி நிராகரிப்பவர்களின் எல்லைகள் சுருங்குவதையும் அறிவுக்கண்ணுடையவர் காணலாம். மேலும் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை பொய்ப்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட தீய முடிவையும் காணலாம். உண்மையான நபிமார்களை பொய்ப்படுத்தியவர்களை அல்லாஹ் வெள்ளப்பெருக்கு, கொள்ளை நோய், பூமி அதிர்ச்சி, புயல் காற்று போன்றவற்றை அனுப்பி அளித்துள்ளான். அப்பேரழிவுகள். இன்று நாளும் நடப்பது மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) ஒரு உண்மையான தூதர் என்பதற்கு அடையாளங்களாகும்.
Read more »