அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்காக குர்ஆன் மென்பொருளில் இல்லாத எழுத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்று எதிரிகள் இப்போது புது பொய்யை பாமர மக்கள் முன் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் சூரா ஆலு இம்ரான் வசனம் 7 இல் "பில் ஹக், பில் ஹக், பில் ஹக்" என்று இல்லாத ஒரு சொல்லை இந்த காதியானிகள் சேர்த்துள்ளார்கள் என்பதே! இது பொய்யை மூலதனமாகக் கொண்டு பிழைப்பை நடத்தும் ஆலிம்களின் செயலாகும். உண்மை எது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்:
எதிரிகளால் Edit செய்து வெளியிட்ட ஃபோட்டோ இதோ:
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்கான குர்ஆன் மென்பொருளின் Screenshot கீழே:
Android Mobile Phone இன் Screenshot கீழே:
Android Mobile Phone இன் Screenshot கீழே:
i Phone இன் Screenshot கீழே:
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிடப்பட்ட ஒரிஜினல் குர்ஆன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்கான மென்பொருளின் படம் மேலே தரப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இந்த கீழ்தரமானவர்கள் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை நோக்கி குர்ஆனில் இடைசெருகள் செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனரோ அந்த இடத்தை கோடிட்டு நாம் காட்டியுள்ளோம். இதில் அதிகமாக எந்த எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து உண்மை எது பொய் எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட குர்ஆனின் iPhone மற்றும் Androidற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்:
இதில் ஓர் வேடிக்கை என்னவென்றால், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிடப்பட்ட குர்ஆன் மென்பொருள் ஆங்கில மொழியாக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கீழ் தரமானவர்கள் எதில் இந்த காதியானிகள் தவறு செய்துள்ளனர் என்று சுட்டி காட்டி படம் போட்டு காட்டிருக்கிறார்களோ அது மொழியாக்கம் இல்லாத குர்ஆன். ஆக நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப இவர்கள் செய்த இந்த இழிவான செயல்மூலம் இவர்களே மகா பொய்யர்கள் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்தி காட்டிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்...
எதிரிகளின் இந்த இழிவான செயல் பொறாமையின் உச்சகட்டம் என்பதை வெளிப்படுத்துகிறது. இல்லாததை இருக்கிறது என்று இட்டுக்கட்டி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் மீது அநியாயமாக பொய் கூறியுள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள த த ஜ பிரிவினர்களின் தலைவர் சகோ பி.ஜெ வும் இதில் உட்பட்டிருக்கிறார். தான் காணாத ஒரு விஷயத்தை கேள்வி பட்டு அதை அப்படியே தனது வலைதளத்தில் ஏற்றியுள்ளார். (காண: http://www.onlinepj.com/katturaikal/beware-of-qaadhiyani-quraan-app-/#.U7JhgJSSwuc) ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எவர்கள் தான் கேள்விபடுவதை எல்லாம் (தீர விசாரிக்காமல்) பரப்பி வருகிறாரோ அவர் மகா பொய்யன் என்று கூறியுள்ளார்கள். (நூல்:முஸ்லிம்) இவர்களை அல்லாஹ்வே பார்த்துக் கொள்வான். ஆனால் இவ்வாறான கீழ்தரமான மக்களை பாமர மக்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும். எங்களை மக்கள் முன் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் என சித்தரித்து கூறுவதற்காக இவர்கள் அல்லாஹ்வின் வசனத்திலேயே கை வைத்துவிட்டனர். இவர்களை அல்லாஹ்வே பார்த்து கொள்வான். அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் பொய்யர்கள் மீது இறங்கக்கூடியதாக இருக்கின்றது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.