இறை தூதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களை அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டு (நஜாத் மே 2011 பக்கம் 30) எழுதிய அவலத்தை கண்டித்து அப்துல் ஹமீது காதிர் என்பவர் எழுதிய விமர்சனத்தை அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 20 இல் படித்திருப்பீர்கள்.
வழிகேடர்களின் கொள்கை என திருக்குர்ஆன் வருணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை நிரூபித்துக் காட்ட திராணியற்ற நிலையில், அந்தப் புரோகிதக் கொள்கையை (40:35)...
Jul 25, 2014
Jul 22, 2014
இயேசு வந்துவிட்டார் -1
அசன் அபூபக்கர்
இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும்.
இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான்...
Labels:
ஈஸா நபி
இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!
O.M
முஸம்மில் அஹ்மது
“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை.
இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன்...
Labels:
ஈஸா நபி
Jul 8, 2014
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.
“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71)
முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள்...
Labels:
இறுதி நபி
தமக்கு ஞானம் இல்லை என்றால் ஹதீஸை பலகீனப்படுத்துவதா!?
இஸ்லாத்தில் சில பெயர்தாங்கி ஆலிம் பெருமக்கள் எந்த ஹதீஸ் தமக்கு தோதுவாக இருக்கிறதோ, எதுக்கு மட்டும் தம்மால் விளக்கம் அளிக்க முடியுமோ அதை உறுதியான ஹதீஸ் என்று கூறுகின்றார்கள். அதே சமயம் எந்த ஹதீஸிற்கு தம்மால் விளக்கம் கொடுக்க முடிவதில்லையோ அதை மிக எளிதாக பலகீனப்படுத்தியும் விடுகின்றார்கள். இந்த வரிசையில் பல ஹதீஸ்கள் இவர்களின் பார்வையில் உள்ளன..அதனை இந்த ஆலிம்கள் தனது சுய நலனை கருதி லயீஃப் அதாவது இந்த ஹதீஸ் பலகீனமானது என்று ஃபத்வா கொடுத்துவிடுகின்றார்கள்....
Jul 6, 2014
சுலைமான் நபியின் மீது கட்டுக்கதை
திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 327 இல் ஜின்களுக்கு மறைவானவை தெரியாது என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்:
ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸை கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். (குர்ஆன் 34:14)
ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார் ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார். பிறகு கைத்தடியை கரையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது....
சுலைமான் நபியைப் பற்றிய தவறான கருத்து.
திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 338 இல் அவரை ஒரு சடலமாக போட்டோம். பின்னர் அவர் திருந்தினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
இவ்வசனத்திற்கு (38:34) பெரும்பாலான மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழிபெயர்த்துள்ளனர் ஸுலைமானின் சிம்மாசனத்தின் மீது முண்டத்தைப் போட்டோம். சடலத்தைப் போட்டோம் என்று தங்கள் மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கேற்ப கட்டுக்கதைகளையும் விளக்கவுரை என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வசனத்தில் ஸுலைமானை ஒரு சடலாகப்...
ஷேர் அலி திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பை டவுன்லோட் செய்யுங்கள்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அவர்கள் கீழ்வரும் நிகழ்ச்சி ஒன்றை கூறினார்கள்.
ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் தோழரும் ஹாபிஸுமான முதியவர் ஒருவர் இருந்தார். இவர் கண்பார்வையற்றவர். மேலும் வயதானதன் காரணமாக அவருக்கு கேட்கும் சக்தியும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. அவர் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார்.
ஒருமுறை நான் ஹக்கீம் குத்புதீன் அவர்களிடம்...
Jul 4, 2014
குர்ஆனில் கைவைத்து தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்திய கீழ்தரமான ஆலிம்களின் செயல்

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்காக குர்ஆன் மென்பொருளில் இல்லாத எழுத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்று எதிரிகள் இப்போது புது பொய்யை பாமர மக்கள் முன் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் சூரா ஆலு இம்ரான் வசனம் 7 இல் "பில் ஹக், பில் ஹக், பில் ஹக்" என்று இல்லாத ஒரு சொல்லை இந்த காதியானிகள் சேர்த்துள்ளார்கள் என்பதே! இது பொய்யை மூலதனமாகக் கொண்டு பிழைப்பை நடத்தும்...
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை
திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 218 இல் நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா? என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அதை வேதமுடைய சமுதாயத்தினர் தீர்த்து வைப்பார்கள் என்று திருக்குர்ஆன் வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட போது தமக்கு இறைவனிடமிருந்து தான் வஹி வந்துள்ளதா? அல்லது தமக்கு வேறு ஏதும் ஏற்பட்டு விட்டதா?...
Subscribe to:
Posts (Atom)