"அவர்கள் குரானை சிந்தித்துப் பார்ப்பதில்லையா? அவர்களின் இதயங்களில் பூட்டுகளா போடப்பட்டிருக்கின்றன? (47:25) இப்படி கேட்கிறது திருக்குர்ஆன். ஆம்! தங்களுக்கு மட்டுமே மார்க்கம் தெரியும், தாங்களே மார்க்க அறிஞ்சர்கள் என்று கூறும் இக்கால முல்லாக்களின் இதயங்களில் அகங்காரம் என்ற பூட்டுப் போடப்பட்டிருக்கிறது அதனால் அவர்கள் ஆழமாக சிந்திப்பதில்லை எடுத்துக் கூறினாலும் தெரிந்துகொள்வதுமில்லை. "கு. கு" ஏடு "ஜின்னும் மனிதர்களே" என்ற நமது கருத்துக்கு தரப்பட்டிருக்கும் மறுப்பு!
"ஜின்" என்று திருக்குரானில் கூறுவது மக்களின் ஒரு வகுப்பினரை குறித்தேயாகும் என்ற எமது கருத்திருக்கு திருக்குரானிலிருந்து ஆதாரங்களை தந்திருந்தோம். அவைகளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு ஏதோ நாம் திருக்குரானையே மறுப்பதாகக் கூக்குரலிடுகிறது கு.கு ஏடு.
இக் கு.கு ஏடு குர்ஆனை குற்றமில்லாது தெரிந்திருந்தால் நாம் அதிலிருந்து காட்டிய அத்தனை ஆதாரங்களுக்கும் மறுப்புரை தரவேண்டும்.
மாறாக,
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டிருக்கிறான். ஜின் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறும் குரான் வாக்கியத்தை எடுத்துக் காட்டி மனிதும் ஜின்னும் இரு வெவ்வேறு படைப்பினமே என்று வாதிக்கிறது,
மனிதன் அவசரத்தால் படைக்கப்பட்டிருக்கின்றான். (21:38)
உங்களைப் பலகீனத்தைக் கொண்டு படைத்தவன் இறைவனேயாகும்.(30:56)
இப்படியும் திருகுரானில் காணப்படுகிறது. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான். ஜின் நெருப்பால் படைக்கப்பட்டான் அதனால் அவை இரண்டும் வெவ்வேறு படைப்பினங்கள் என்றால் அவசரத்தால் படைக்கப்பட்ட மனிதனும், பலகீனத்தால் படைக்கப்பட்ட மனிதனும் வெவ்வேறு படைப்பினமாகக் காணப்படவேண்டுமே.
மனிதன் புழுதியினாலும், தண்ணீராலும், இரத்தக்கட்டியினாலும், தசைப் பிண்டத்தினாலும் படைக்கப்பட்டிருக்கிறான் என்றும் குர்ஆன் கூறுகிறதே! அவைகளுக்கும் கு. குரல் கூறும் பதில் என்ன?
நெருப்பைப் போன்ற குணங்களான கோபம், கீழ்ப்படியாமை, கர்வம் ஆகிய குணங்கள் ஜின் என்று குறிப்பிடப்பட்ட மனிதர்களிடத்தில் அமைந்துள்ளன. என்று கூறுவதற்கே ஜின் நெருப்பினால் படைக்கப்பட்டான் என்று குரான் கூறுகிறது.
ஜின் என்ற சொல்லிற்கு பொதுப்பார்வையிலிருந்து மறைவானது என்ற பொருளை தந்திருந்தோம். அது கீழ்க்கண்ட அரபிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டது.
ஜனன அலைஹில் லைலு (6:77) - இரவு அவன் மேல் மறைப்பைப் போட்டது.
அஜன்ன - மறைத்தல்
- ஜூன்னதுன் - மறைப்பு, தடை, கேடயம்
- ஜனின் - வயிற்றிலிருக்கும் குழந்தை (மறைவிலிருக்கிறது)
- ஜின்னுன்னாஷி - மனிதர்களில் பெரியவன்
- அஜன்ன - மறைத்தல்
இவைகளிலிருந்து ஜின் என்ற சொல் பொதுப்பார்வையில் இருந்து மறைந்து வாழும் மனிதர்களைக் குறிக்கும் என்பது புலனாகிறது.
திருக்குரானிலுள்ள 'ஜின்' என்ற அத்தியாயம் ஜின்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து ஈமான் கொண்ட வரலாற்றை கூறுவதாக கு.குரல் சாற்றுகின்றது. மறுப்புரையாளர், அவர் குறிப்பிடும் அத்தியாயத்தையே சரியாகப் படிக்கவில்லை போலும்.
ஜின்கள் கூறுவதாகவே கீழ்வரும் வாக்கியங்கள் அவ்வத்தியாயத்தில் காணப்படுகின்றன.
'மேலும் நிச்சயமாக பாமரர்களிலிருந்து சில மனிதர்கள் ஜின்களை சார்ந்த சில மனிதர்களுக்கு பாதுகாப்புத்தேடும் வழக்கமுடையவர்கள் அதன் மூலம் அவர்களின் (ஜின்களின்) கர்வத்தை அதிகப்படுத்தினார்கள்.' (72:8)
ஜின்களையும் மனிதர்களையும் இணைத்துக் கூறும் இந்த வாக்கியங்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கலென்று பறைசாற்றுகிறது. மேலும் இந்தத் திருமறை வசனத்தில் காணப்படும் 'ரிஜாலுன்' என்ற பதம் மனிதர்களைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
மேற்குறிப்பிட்ட திருமறைவாக்கியத்திற்கு அடுத்துவரும் வாக்கியம் இவ்வாறு அமைந்துள்ளது.
மேலும் நீங்கள் நினைப்பதுபோல் இறைவன் யாரையும் (தூதராக) எழுப்ப மாட்டான் என்றே அவர்களும் (ஜின்களும்) எண்ணினார்கள். (72:7)
இதிலிருந்து ஜின்கள் மனிதர்களே என்பது சந்தேகத்திற்கிடமின்றி புலனாகிறது.
கு.குரல் குறிப்பிடும் 'ஈமான் கொண்ட ஜின்களைப் பற்றி 'அஹ்சாப்' என்ற அத்தியாயத்தில் கீழ்வருமாறு காணப்படுகிறது.
'திருக்குரானை வாசித்துக் கேட்க விரும்பிய ஜின்களின் ஒரு கூட்டத்தினரை உங்கள் பக்கம் நாம் திருப்பியதை (நினைவு கூறுவீராக) அவர்கள் அங்கு ஆஜரானபோது அவர்கள் (ஒருவருக்கொருவர்) 'அமைதியாக இருங்கள்' (கேளுங்கள்)' என்று கூறினார்கள். அது முடிந்ததும் எச்சரிப்பவர்களாக அவர்கள் அவர்களின் மக்களிடம் திரும்பிப் போனார்கள்:
"ஓ எங்களின் மக்களே மூஸாவிற்குப் பிறகு அனுப்பப்பட்ட ஒரு கிரந்தத்தை முன்னுள்ளவற்றை நிறைவேற்றும் (ஒரு கிரந்தத்தை) நாம் செவியுற்றோம். அது உண்மைக்கும் நேர்வழிக்கும் வழிகாட்டுகிறது. என்று கூறினார்கள்.(46:30-31)
இந்த வாக்கியங்கள் கு. குரலுக்கு ஆதாரமாக அமையவில்லை. 'நாசிபைன்' என்னுமிடத்திலிருந்து சில யூத தலைவர்கள் மக்காவாசிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி இரவோடு இரவாக நபி(ஸல்) அவர்களை ச்நதித்து குரானை ஓதக்கேட்டு நம்பிக்கைக் கொண்டதையும் பின்னர் அவர்களின் இடத்திக்கு திரும்பி தமது மக்களுக்கு நடந்ததை எடுத்துக் கூரியதையுமே மேற்கூறப்பட்ட திருமறை வசனங்களும் 'ஜின்' என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வாக்கியங்களும் அறிவுறுத்துகின்றன.(ஆதாரம் பத்ஹுள் பயான் வால்யும் 8 பக்கம் 355 )
மேலெழுந்தவாரியாக குரானைப் பார்த்துவிட்டு அதனை ஆராய்ந்து பார்க்காமல், தான் என்ற அகம்பாவத்தால் பிறரை ஏளனம் செய்வது இந்த முல்லாக்களுக்கு கைவந்த கலைபோலும், அதுமட்டுமல்லாமல் இவர்கள் 'அரபி மதரஸாக்களில்' கதைக்கு உதவாத அரபிக் கல்வியையே பெற்றிருக்கின்றனர் என்பதை அவர்கள் தரும் விளக்கங்கள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
திருக்குரானின் (6:128) ஆம் வசனத்திற்கு நாம் கொடுத்திருந்த கருத்தை கீழ்வருமாறு விமர்சனம் செய்கிறது, கு.குரல்
'குரான் ஷரீபில் (6:128) ஆம் வசனத்தில் 'இஸ்தக்தாதும்' என்று வருகின்றது, சாதரணமாக அரபியில் அஜ்நாஸ் ஓதும் ஆரம்பமாணவர்கள் இதற்க்கு அதிகப்படுத்தினீர்கள் என்று கூறிவிடுவான். அதாவது 'கதுர' அதிகமானான். இஸ்தக்தர அதிகமாக்கிவிட்டான். அதாவது முந்தியது லாஜிம் எனும் தன்வினைச் சொல் பிந்தியது பிறர்பால் கடக்கும் முதஅத்தி எனப்படும் செயற்பால் இந்த இஸ்தக்தர என்னும் அரபிச் சொல் மின் என்பதுடன் சேர்ந்துவரும்போது அரபி அகராதிப்படி அதற்க்கு தனது செயலை பின்னால் வரும் அந்தப் பொருளில் அதிகமாக்கினான். என்பதுதான் பொருள்'
இப்படியெல்லாம் கூறி அரபிமொழி அறியாத பாமரர்களை எமாற்றலாமே தவிர அரபி மொழி தெரிந்தவர்களை ஒருக்காலும் ஏமாற்ற முடியாது.
'லாஜிம்' என்னும் தன்வினைச் சொல் 'முத அத்தியாக' மாற்றுவதற்கு இஸ்திக்பால் எனும் வழியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது கு.குரலின் புதுக் கண்டுபிடிப்பு! ஆனால் அரபிமொழி இலக்கணத்திற்கு அது அப்பாற்ப்பட்டது.
அதாவது ஒரு வினைச்சொல்லை இஸ்திப்ஆலாக மாற்றினால் அதுவே உதவிதேடும் பொருளாக மாறிவிடும். இதை 'பாகவி' படித்திராதது வியப்பாகவுள்ளது. அவர் அறிந்துகொள்வதர்க்காக சில உதாரணங்களை கீழே தருகிறோம்.
நஸர - உதவி செய்தான்: இஸ்தன்ஸற - உதவி தேடினான். ஸகா - தண்ணீர் கொடுத்தான். இஸ்தஸ்கா - தண்ணீர் கேட்டான். கபர - மன்னித்தான். இஸ்தக்பர - பிழை பொறுக்கக் கேட்டான்.
இதைப்போல் 'கதுர' என்றால் அதிகமானான், இஸ்தக்தர - அதிகமானோரை தேடிக்கொண்டீர்கள் என்பதே பொருள்
. "இஸ்தக்தர" என்னும் அரபிச் சொல் 'மின்' என்னும் சொல்லுடன் இணைந்து வரும்போது அதற்க்கு தனது செயலை பின்னால் வரும் பொருளில் அதிகமாக்கினான் என்று அர்த்தமாம். கு. குரலின் ஆதாரமற்ற தவறான கூற்று இது!
'வ லவ் குந்து அஹ்லமுள் கைப லஸ் தக்தர்து மினால் கைரி'
"மறைவானவற்றின் மீது எனக்கு அறிவிருந்தால் அதிகமான நன்மைகளை எனக்காகத் தேடிக்கொண்டிருப்பேன். (7:189)
இக் குரான் வாக்கியத்திலும் இஸ்தக்தர என்னும் சொல் காணப்படுகிறது. அதுவும் மின் என்பதுடன் இணைந்து காணப்படுகிறது. கு. குரல் கொடுக்கும் பொருளை இவ்வாக்கியத்தில் காணப்படும் 'இஸ்தக்தர' என்ற சொல்லிற்கு நிச்சயமாகத் தரமுடியாது என்பது தெளிவு.
திருக்குரானில் (6:128) ஆம் வசனத்திற்கு கு. குரல் தரும் பொருள்கூட, ஜின்களை சில மனிதர்கள் வசப்படுத்துகிறார்கள் என்ற அதன் கூற்றுக்கு ஆதரவாக இல்லை. எவ்வாறெனில் 'மனிதர்களில் உங்களது ( தீச் செயல்களை) அதிகமாக்கிவிட்டீர்கள். என்று மேற்படி (9:128) ஆம் வசனத்திற்கு கு.குரல் கூறும் அர்த்தம். மனிதர்கள் மீது ஜின்களுக்குள்ள ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறதே தவிர ஜின்கள் மீது மனிதர்களுக்குள்ள சக்தியை அறிவுறுத்தவில்லை.
கு. குரலின் விளக்கம் அதன் கருத்துகளுக்கே ஆதரவாக இல்லை.
ஜின்கள் ஈமான் கொண்டன என்று கூறுகிறது கு.குரல். ஈமான் கொண்டால் மட்டும் போதுமா? குர்ஆன் கூறும் நற்செயல்களை 'அவை செய்திடவேன்டாமா?' குர்ஆன் 'ருக்வு' செய்யுங்கள், பின் ஸுஜூது செய்யுங்கள் என்று கூறுகிறது. உண்ணுங்கள், குடியுங்கள் என்றும் அது உரைக்கிறது. இன்னும் மனிதனால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய பல கட்டளைகளை திருக்குர்ஆன் கூறுகிறது. உருவமற்றதாக கு.குரலால் கருதப்படும் ஜின்களால் இக் கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்ற இயலும்? கு. குரல் கூறுமா பதில்!
நபி(ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கே நபியாகத் தோன்றினார்கள். அவ்வாறிருக்க ஜின்கள் வேறு ஒரு படைப்பினமாக இருந்தால் 'அவை' நபிபெருமானார் மூலமாக 'ஈமான்' கொள்ளவேண்டிய அவசியமென்ன? அந்நிகழ்ச்சியை திருக்குரானில் இரு அத்தியாயங்களில் விவரிக்கப்படவேண்டிய அவசியமென்ன? கு. குரல் குருமா பதில்.
நபி(ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கு ஓர் முன்மாதிரி எனவும் அதனால் அவர்களின் நடைமுறைகளையும், சுன்னத்துகளையும் பின்பற்றவேண்டும் என்று கற்பிக்கப்படுகின்றோம். மனித தன்மைக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் ஜின்களால் எவ்வாறு நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள இயலும் கு.குரல் கூறுமா பதில்?
"மனிதனையா தனது தூதராக இறைவன் அனுப்பினான்?" என்ற கேள்விக்குப் பதில் பூமியில் மலக்குகள் வாழ்ந்திருந்தால் ஒரு மலக்கையே தொஊதராக அனுப்பியிருப்போம். என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். (17:93)
இவ்வ்வாறு கூறம் இறைவன் ஜின் என்று கூறப்பட்டது மனிதனல்லாமல் வேறு ஒரு படைப்பினமாக இருக்குமானால் அவைகளுக்காக ஒரு ஜின்னை நபியாக அனுப்பியிருக்கமாட்டானா? நபிபெருமானரையே "அவை" களுக்கும் நபியாக ஏன் அனுப்பினான்?
கூறு பதில் கூறு பதில் என்று எங்களைப் பார்த்து கூறும் கு.குரல் ஏடு இக்கேள்விகளுக்கு கூறுமா பதில்?
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.