ஓர் இறைத்தூதருக்கு எதிராக அவரின் எதிரிகளின் வாயிலிருந்து வெளிப்படும் வசை மொழிகள், சத்தியத்திற்கு எதிராக எழுதப்பாடும் எழுத்துக்கள் ஆகியன இறை கோபத்திற்கு ஆளானவைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை அவர்கள் தங்களின் கரங்களாலே தேடிக் கொள்கின்றனர். பிறரை வசைமொழிவதும், இட்டுக்கட்டிப் பேசுவதும் இறைசாபத்திற்கு உரியனவையே . தங்களுடைய திட்டங்களாலும் அடிப்படையில்லாத ஆதாரமற்ற போய்க்கூற்றுகளாலும் இறைவனின் என்னத்தை முறியடிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா? அல்லது உலகை ஏமாற்றி, வானத்திலிருந்து தீர்ப்பளிக்கப்பட்ட இறைவனுடைய பணிகளை நிறுத்தி விடலாம் என கருதுகின்றார்களா? சத்தியத்திற்கு எதிராக இவர்களது திட்டங்களில் இதற்க்கு முன் எப்போதாவது வெற்றி இவர்களுக்கு கிடைத்திருக்குமானால், இப்போதும் இவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும். ஆனால் அப்போதெல்லாம் இவர்கள் தோல்வியை தழுவியிருப்பதால், இப்போதும் தோல்வியும் அவமதிப்பும் தான் கிடைக்கும். ஏனெனில் இறை அருள் என்றுமே தவறான பாதையில் சென்றதுமில்லை. இனி செல்லப்போவதுமில்லை. தானும், தனது தூதர்களும் நிச்சயமாக வெற்றிபெறுவோம் என்று இறைவன் கூறியுள்ளான்.
நான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதராக இருக்கிறேன். நான் புதிய ஷரியத்துடனோ, புதிய வாதத்துடனோ வந்தவனல்ல. மாறாக, ஹஸ்ரத் ஹாத்தமுன்னபியீன்(ஸல்) அவர்களின் வழித்தோன்றலாக, பிரதிப்பிம்பமாக இருக்கின்றேன். ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை இறை வசனங்கள் எவ்வாறு சத்தியத்திற்கு சான்று பகர்ந்ததோ, அவ்வாறே எனது சத்தியத்திற்கும் உண்மைக்கும் இந்த இறை வசனங்கள் சான்று பகரும் என நான் கூறுகிறேன்.
இந்த மௌலவிமார்களும், அவர்களுடைய சீடர்களும், என்னைப் பொய்யன் என்றும், காபிர் என்றும், தாக்கிகொண்டிருந்தபோது, என்னை பையத் செய்து ஒப்புக்கொண்டவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருந்தனர். ஆனால், இறையருளினால் இன்று (௧௯0௮-ஆம் ஆண்டிற்கு முன்பு) என்னிடம் பையத் செய்தவர்கள் எழுபதாயிரத்திற்கும் மேல் இருக்கிறார்கள். இவர்கள் என்னுடைய தனிப்பட்ட முயற்சிகளால் வந்தவர்களல்ல, மாறாக, வானத்திலிருந்து ஏற்பாட்டால் ஓன்று சேர்ந்தவர்கள். இந்த இறை இயக்கத்தை நாசம் செய்ய இவர்கள் செய்திருந்த முயற்சிகளை சற்று சிந்தனை செய்யட்டும். இவர்கள் தீட்டியிருந்த சதித்திட்டங்கள் தான் எத்தனை, எத்தனை? அரசாங்கத்தை எனக்கு எதிராக தூண்டிவிட்டார்கள். கொலை வழக்கு உட்பட, பல்வேறு பொய் வழக்குகள் என்மீது தொடரப்பட்டன. எனக்கெதிராக ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டன. குப்ர் பத்வாக்கள் பல என்னை நோக்கிப் பாய்ந்தன. பல்வேறு கமிட்டிகள் மூலம் எனக்கெதிராக திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் இவர்களின் இந்த அனைத்து முயற்சிகளும். கானல் நீர் போல் மாறின. தோல்வி ஒன்றே இவர்களுக்கு கிடைத்த வெகுமதிகலாயிருந்தன.
இந்த இயக்கம் மனிதனால் உண்டாக்கப்பட்டதொன்ற்றாக இருக்குமேயானால். இந்த பயங்கர சதித்திட்டங்களினால் இது எப்போதோ நாசமாகிப்போயிருக்கும். பொய்யான ஒரு இயக்கத்திற்கு எதிராக இது போன்று பெரும் பெரும் முயற்சிகள் செய்திருந்தும் அது நாசமடையாமல் முன்னேறியிருந்ததாக ஏதாவது சான்றுகள் உங்களால் காட்ட முடியுமா?
இந்த இயக்கத்திற்கான விதை விதிக்கப்பட்டதுமே அதை சுக்கு நூறாக்குவதற்காக பெரும் முயற்சிகள் செய்யப்பட்டும், அந்த விதை முளைத்து, செடியாகி, மரமாகி பூத்துக் குலுங்கி, கனிகள் கொடுத்து கிளைகள் பலவிட்டு வளர்ந்து கொண்டிருப்பதிலும் அற்புதமான அடையாளம் இல்லையா? இன்று இந்த மாபெரும் மரத்தின் கிளைகளில் எண்ணற்ற பறவைகள் அமர்ந்திருக்கின்றன.
இந்த இயக்கத்தை நாசம் செய்வதற்காக, எதிரிகள் பெரும் முயற்சிகள் செய்வார்கள். ஆனால் நான் இந்த இயக்கத்தை வளரச் செய்து முழுமையடையச் செய்வேன் இறுதி நாள் வரை வெற்றி பெரும் பட்டாளமாக அதை மாற்றுவேன். நான் உம்முடைய நாமத்தை பூமியின் எல்லை வரை புகழ் அடையச் செய்வேன். மக்கள் கூட்டம் கூட்டமாக தொலைதூரங்களில் இருந்து வருவார்கள். அதிகமான பொருளுதவி கிடைக்கும் எனவே நீர் உம்முடைய வீட்டை விரிவு படுத்தும் என்றெல்லாம் இறைவன் இருபத்துமூன்று வருடங்களுக்கு முன்பே கூறியிருந்ததை நான் பராஹீனே அஹ்மதிய்யா எனும் நூலில் எழுதியிருக்கிறேன்.
பாருங்கள், அன்று கூறப்பட்ட முன்னறிவிப்புகள் இன்று பூர்த்தியாகி இருக்கின்றன. கண்ணுள்ளவர்களுக்கு இந்த இறை அடையாலத்தக் காண முடியும் ஆனால் குருடர்களுக்கு இதுவரை ஒரு அடையாளத்தையும் காண முடியவில்லை. (நுசூளுள் மஸீஹ் பக் 2-7)
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.