அறிவியல் துறையில் பல் வேறு ஆய்வுகளைப் பற்றியும் கண்டு பிடிப்புகள் பற்றியும் திருக்குர்ஆன் முன்னறிவித்த போதிலும் அண்மைக்கால கண்டுபிடிப்பான படியாக்கத்தை அது வன்மையாக கண்டிக்கின்றது.
படியாக்கம் என்பது என்ன?
இயான் வில்மட் என்ற விஞ்ஞானி ஓர் ஆட்டின் பால் மடுவில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணு (cell) விலிருந்து மரபணு (gene) வை - பரம்பரையாய் இயல்புகள் அமைவதை நிர்ணயிக்கும் நுட்ப அறிவை தனியாக பிரித்தெடுத்தார். பின்னர் இன்னொரு ஆட்டின் கருவுற்ற முட்டை உயிரணுவிலிருந்து மரபணு அடங்கிய நியுக்கிளியஸ் எனப்படும் உட்கருவை மொத்தமாக அகற்றிவிட்டு முந்தைய ஆட்டின் மரபணுவை அதனுடன் இணைத்தார். இந்த இணைப்பிலிருந்து 'ப்ளஸ் டோசிஸ்ட் (blostocyst) எனப்படும் கரு உயிரணுவை உருவாக்கினார். இதுவே படியாக்கம் (cloning) எனப்படுகிறது. பின்னர் இதனை மற்றொரு ஆட்டின் கருவறையில் வைத்து விட்டார். இதன் பயனாக அந்த ஆடு ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு குட்டியை ஈன்றது. இந்த ஆட்டுக்குட்டி அதனை ஈன்ற ஆடு போன்றோ கருவுற்ற முட்டையைத் தந்த ஆட்டைப் போன்றோ இருக்கவில்லை. மாறாக உயிரணு தந்த ஆட்டைப் போன்றிருந்தது.
இவ்வாறே இரண்டு வேறுபட்ட மனிதர்களின் மரபணுவையும் கருமுட்டை உயிரணுவையும் இணைத்து மரபணுவைத் தந்த மனிதனைப் போன்ற குணயியல்பும் தோற்றமும் கொண்ட மனிதனைப் அல்லது பல மனிதர்களை உருவாக்கலாம். அதாவது, இந்த முறையில் ஹிட்லரைப் போன்ற பலரையோ ஐன்ஸ்டீன் போன்ற பலரையோ உருவாக்கிவிடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பை மத அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்த மாதிரியான முயற்ச்சிகள் வாழ்வின் அழகைக் குலைத்துவிடும் என வாடிகன் கருத்து தெரிவித்துள்ளது. கர்மங்களின் நிலை என்னவாகும் என பௌத்த அமைப்புகள் கவலையடைந்துள்ளன.
எந்த ஒரு அறிவியல் சாதனையும் மனித சமுதாயத்திற்கு பரவலாக பயன் அளிக்கவேண்டும். ஆனால் வணிகமயமான இன்றைய உலகில் சமுதாய நலனைவிட தனிமனித அல்லது தனி அமைப்பின் ஆதாயமே பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதனால் இத்தகைய சாதனைகள் ஒருசிலரின் பணம் சேர்க்கும் வழியாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அப்படியாகும்போது சமுதாயத்திற்கு நன்மை ஏற்படுவதற்கு பதிலாக தீமையே விளையும்.
இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், திருக்குர்ஆன் இந்தப் படியாக்கத்தை தீய சக்திகளின் செயல்பாடாக குறிப்பிடுகின்றது. திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
'இறைவனுடைய படைப்பில் மாற்றத்தை உண்டாக்குமாறு
அவர்களுக்குக் கட்டளையிடுவேன். (என்று ஷைத்தான் கூறினான்) அல்லாஹ்வை விட்டுவிட்டு
ஷைத்தானை நண்பனாக்கிக் கொள்கின்றவன், தெளிவான இழப்பிற்க்கு ஆளாகிவிட்டான். (எனப்
புரிந்து கொள்ளுங்கள்)' (4:120)
அல்லாஹ்வின் படைப்பில் மாற்றத்தை ஏற்ப்படுத்த தீய சக்திகள் முயலும் என்பதும் அதன் விளைவாக அழிவை சந்திக்கும் என்பதும் இதிலிருந்து புலனாகிறது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.