அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Oct 24, 2011

இறைவனின் தீர்ப்பே இறுதியானது

'ஜமாத்துல் உலமா' ஆசிரியரை ஒரு விஷயத்திற்காக நாம் பாராட்ட வேண்டும்! அவர் தனது தந்தை வழியை தப்பாது கடைப்பிடித்து வருவதோடல்லாமல் தந்தையாரின் அந்தக்கால சரக்குகளுக்கு, அவை 'அவுட் ஆப் டேட்' ஆனவையாய் இருந்தும், தகுந்த 'மார்கெட்' பிடிக்க தவறாது முயன்று வருகிறார்.

எங்கேயாவது அஹ்மதியா இயக்கத்திற்கு எதிரான செய்திகள் காணப்படுகிறதா என எதிர்பார்த்து காத்திருந்து அவற்றைக் கண்டவுடன் தனது ஏட்டில் வெளியிட்டு தனது தந்தையாரின் நூல்களுக்கு அதோடு விளம்பரமும் செய்து வருகிறார். இந்தச் சாதுர்யம் யாருக்கு வரும்?

என்றாலும் அஹ்மதியா இயக்கம் பற்றிய தவறான கருத்துக்களை பாமர மக்களிடையே அவர் பரப்பி வருவதையும் 'ஹயாத்தே மஸீஹ்' போன்ற நூல்களை விற்பனை செய்வதன் மூலம் ஈசா நபி இன்னும் உயிருடன் வானத்தில் இருக்கிறார் என்ற மூட நம்பிக்கைக்கு வலுவூட்டி இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படும் கிறிஸ்தவப் பிரச்சாரகர்களுக்கு ஊக்கமளித்து வருவதையும் நாம் அனுமதிக்க இயலாது.

'ஜமாத்துல் உலமா' ஏட்டின் பிப்ரவரி இதழில் பாகிஸ்தான் நீதிமன்றம் அஹ்மதிகளுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பை வெளியிட்டு இதற்க்கு முன்னர் அரசுகளும் அமைப்புகளும் அஹ்மதிகளுக்கு எதிராக வழங்கியிருந்த தீர்ப்புகளையும் நினைவு கூறுகிறார் அதன் ஆசிரியர்.

ஆனால்,

'ராபிதத்துல் ஆலமீன் இஸ்லாம்' என்ற அமைப்பு அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர் என அறிவிக்க காரணமாயிருந்த மன்னர் பைசலுககு நேர்ந்த கதியென்ன? அஹ்மதிகளை முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என சட்டம் இயற்றிய அதிபர் பூட்டோவிற்கு நேர்ந்த கதி என்ன? அஹ்மதிகளின் அடிப்படை உரிமைகளை பறித்த ஜியா உல் ஹக் நேர்ந்த கதி என்ன? இவற்றையெல்லாம் "ஜமாத்துல் உலமா ஆசிரியர் எண்ணிப் பார்க்கவில்லை.

அஹ்மதிகளுக்கு எதிராக செயல்பட்ட இத்தகையோருக்கு இறைவன் வழங்கிய தீர்ப்பு என்ன? மன்னர் பைசல் தனது சொந்த மருமகனாலேயே கொலையுண்டதும் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தும் காப்பாற்றஇயலாமற் போய் அதிபர் பூட்டோ தூக்கிலிடப்பட்டதும் எளிதில் மறக்கக் கூடியவையா? அஹ்மதிகளுக்கு எதிராக இவர்கள் அளித்த தீர்ப்பு சரியானது என்றால் இவர்களுக்கு அவமானகரமான அகால மரணம் என் ஏற்பட்டது?

அஹ்லே சுன்னத்து வல் ஜமாத்தை சார்ந்த முஸ்லிம் அறிஞ்சர்களும், ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம் அறிஞ்சர்களும் "அஹ்மதிகளை முஸ்லிம்கள் அல்ல" என ஏகோபித்த மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஜமாத்துல் உலமா ஆசிரியர் வரைகிறார்.

ஜமாத்துல் உலமா ஆசிரியர் சார்ந்துள்ள அஹ்லே சுன்னத்துவல் ஜமாஅத் கூட முஸ்லிம் அல்லாதவர்கள் என ஷியா அறிஞ்சர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனரே!

"ஷியாக்கள் தவிர எல்லா பிரிவாரும் காபிர்கள் அவர்கள் கொலையுண்டாலோ இயற்கையாக மரணமடைந்தாலோ ஒரு போதும் சுவர்க்கம் புக மாட்டார்கள்." (ஹக்கீகத்து ஷுஹதா பக்கம்.65)

ஷியாக்கள் அளித்துள்ள இந்த மார்க்கத் தீர்ப்பை ஜமாத்துல் உலமா ஆசிரியர் ஏற்பாரா?

இந்த ஷியாப் பிரிவினரைப்பற்றி "சுன்னத் ஜமாஅத்"தினரின் தீர்ப்பை பாருங்கள்.

"ஷியாக்கள் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களுடைய கிலாபத்தை நிராகரிக்கின்றார்கள். எவர் ஹஸ்ரத் அபூபக்கருடைய கிலாபத்தை நிராகரிக்கின்றாரோ அவர் காபிராகிவிட்டார். அவ்வாறுள்ள காபிர்கள் கொல்லப்பட வேண்டும். (ரத்தே தபாரக் 30)

இவ்வாறு ஒருவர் தாடியை இன்னொருவர் பிடித்துக் கொண்டு நெடுங்காலமாக தங்களுக்குள் "குப்ர் பத்வா" வழங்கிக் கொண்டிருக்கும் இந்த ஷியா, சன்னி ஆலிம்சாக்களுக்கு அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர்கள் எனத் தீர்ப்பு சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது? முதலில் இவர்களுக்குள் யார் முஸ்லிம் என்பதில் ஒரு முடிவு ஏற்படட்டும். அதன் பிறகு மற்றவர்களைப் பற்றி இவர்கள் பேசட்டும்.

1953- இல் பாகிஸ்தானில் அஹ்மதிகளுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியின் போது அன்றைய அந்நாட்டு அரசு ஒரு விசாரணைக் கமிஷனை நியமனம் செய்தது. அந்த விசாரணைக் குழுவின் தலைவர் தமது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்:-

("முஸ்லிம் எனப்படுபவர் யார்?) என்ற மிக எளிதான இந்தக் கேள்விக்கு பல முஸ்லிம் பண்டிதர்களிடம் பதில் கேட்ட போது எந்த இரண்டு பண்டிதர்களும் ஒரே விதமான கருத்தைக் கூறவில்லை. இந்நிலையில் முஸ்லிம் யார்? என்ற கேள்விக்கு நாங்கள் எங்களுடைய கருத்தை sonnaal அதை ஏற்காது ஆலிம்சாக்கள் நிச்சயமாக எங்களையும் காபிர்கள் என்று தீர்ப்பளித்து விடுவார்கள்.(முனீர் விசாரணைக் கமிஷன் அறிக்கை பக்கம் 236)

இந்த விசாரணைக் கமிஷன் பல்வேறு பிரிவுகளை சார்ந்த ஆளிம்சாக்களிடம் 'யார் முஸ்லிம்' என்ற வினாவை விடுத்த போது அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு நமது கைவசமிருக்கிறது. அவற்றின் அடிப்படையில் பார்த்தால் யாருமே முஸ்லிம்களாக இருக்க முடியாது. யாரையும் புதிதாக முஸ்லிமாகக திராணி இல்லாத இந்த ஆலிம்சாக்கள் முஸ்லிம்களை காபிராகக முன்வருகிறார்கள். இது இவர்களின் மூலையிலுள்ள கோளாறை எடுத்துக் காட்டுகிறதல்லவா?

இந்த "மூளைக் கோளாறு" பற்றி நீதிபது முனீர் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:-

"இந்தச் சாதாரண விஷயத்தில் நம்முடைய உலமாக்களின் மூளையில் இவ்வளவு கோளாறு இருக்கும் பொது சிக்கலான பிரச்சனைகளில் அக்கோளாறு எவ்வளவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்." (முனீர் விசாரணைக் குழு அறிக்கை பக்கம்.231)

அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர் என்று இந்த ஆலிம்சாக்கள் கூறிய பொது அன்றைய நீதிபதிகள் அந்தனை ஏற்கவில்லை. ஆலிம்சாக்களின் அந்த அபத்தக் கூற்றை அலட்சியப்படுத்தி உள்ளத்தில் பட்டதை அவர்கள் துணிவோடு வெளியிட்டார்கள். அதற்க்குக் காரணம் அன்றைய பாகிஸ்தானில் ஜனநாயகம் இருந்தது. நீதியும், நியாயமும் இருந்தது. இன்றோ சர்வாதிகார ஆட்சி அங்கு நடக்கிறது இந்நிலையில் நீதிபதிகள் என்ன செய்வார்கள்?

Read more »

Oct 23, 2011

ஒப்புதல் வாக்குமூலம்

"நபிவழியில் செயல்படுகிறோம் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிரிவுகள், ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகி, நான்கு ஐந்தாகி பல்கிப் பெருகிவருகிறது. பிரிவினை வாதத்தில் மத்ஹபு வாதிகளை இந்த இயக்க கழக வாதிகள் மிஞ்சிவிட்டார்கள். இது ஒன்றே இவர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இல்லை, வழி கேட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். வழி கேட்டில் செல்லும் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை லட்சமென்ன? எத்தனை கோடியாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் எந்த மதிப்புமில்லை. சிப்பிகள் உடைக்கப்பட்டு, பிரித்து வெத்து சிப்பிகள் ஒரு பெரும் அம்பாரமாகவும் முத்துச் சிப்பிகள் ஒன்றிரண்டும் வைக்கப்பட்டிருக்கிற நிலையில் வெத்து சிப்பிகலான அந்த பெரிய அம்பாரத்திற்கு மதிப்பிருப்பதாக நீங்கள் கருதினால் இவர்களுக்கு மதிப்பிருப்பதாக நீங்கள் கணக்கிடலாம்."

(செப்டம்பர் 1999, அந்நஜாத் இதழில் அதன் ஆசிரியரின் கூற்று)

Read more »

இறுதி வெற்றி இறைத்தூதர்களுக்கே

ஓர் இறைத்தூதருக்கு எதிராக அவரின் எதிரிகளின் வாயிலிருந்து வெளிப்படும் வசை மொழிகள், சத்தியத்திற்கு எதிராக எழுதப்பாடும் எழுத்துக்கள் ஆகியன இறை கோபத்திற்கு ஆளானவைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றை அவர்கள் தங்களின் கரங்களாலே தேடிக் கொள்கின்றனர். பிறரை வசைமொழிவதும், இட்டுக்கட்டிப் பேசுவதும் இறைசாபத்திற்கு உரியனவையே . தங்களுடைய திட்டங்களாலும் அடிப்படையில்லாத ஆதாரமற்ற போய்க்கூற்றுகளாலும் இறைவனின் என்னத்தை முறியடிக்கலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா? அல்லது உலகை ஏமாற்றி, வானத்திலிருந்து தீர்ப்பளிக்கப்பட்ட இறைவனுடைய பணிகளை நிறுத்தி விடலாம் என கருதுகின்றார்களா? சத்தியத்திற்கு எதிராக இவர்களது திட்டங்களில் இதற்க்கு முன் எப்போதாவது வெற்றி இவர்களுக்கு கிடைத்திருக்குமானால், இப்போதும் இவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும். ஆனால் அப்போதெல்லாம் இவர்கள் தோல்வியை தழுவியிருப்பதால், இப்போதும் தோல்வியும் அவமதிப்பும் தான் கிடைக்கும். ஏனெனில் இறை அருள் என்றுமே தவறான பாதையில் சென்றதுமில்லை. இனி செல்லப்போவதுமில்லை. தானும், தனது தூதர்களும் நிச்சயமாக வெற்றிபெறுவோம் என்று இறைவன் கூறியுள்ளான்.

நான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதராக இருக்கிறேன். நான் புதிய ஷரியத்துடனோ, புதிய வாதத்துடனோ வந்தவனல்ல. மாறாக, ஹஸ்ரத் ஹாத்தமுன்னபியீன்(ஸல்) அவர்களின் வழித்தோன்றலாக, பிரதிப்பிம்பமாக இருக்கின்றேன். ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை இறை வசனங்கள் எவ்வாறு சத்தியத்திற்கு சான்று பகர்ந்ததோ, அவ்வாறே எனது சத்தியத்திற்கும் உண்மைக்கும் இந்த இறை வசனங்கள் சான்று பகரும் என நான் கூறுகிறேன்.

இந்த மௌலவிமார்களும், அவர்களுடைய சீடர்களும், என்னைப் பொய்யன் என்றும், காபிர் என்றும், தாக்கிகொண்டிருந்தபோது, என்னை பையத் செய்து ஒப்புக்கொண்டவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருந்தனர். ஆனால், இறையருளினால் இன்று (௧௯0௮-ஆம் ஆண்டிற்கு முன்பு) என்னிடம் பையத் செய்தவர்கள் எழுபதாயிரத்திற்கும் மேல் இருக்கிறார்கள். இவர்கள் என்னுடைய தனிப்பட்ட முயற்சிகளால் வந்தவர்களல்ல, மாறாக, வானத்திலிருந்து ஏற்பாட்டால் ஓன்று சேர்ந்தவர்கள். இந்த இறை இயக்கத்தை நாசம் செய்ய இவர்கள் செய்திருந்த முயற்சிகளை சற்று சிந்தனை செய்யட்டும். இவர்கள் தீட்டியிருந்த சதித்திட்டங்கள் தான் எத்தனை, எத்தனை? அரசாங்கத்தை எனக்கு எதிராக தூண்டிவிட்டார்கள். கொலை வழக்கு உட்பட, பல்வேறு பொய் வழக்குகள் என்மீது தொடரப்பட்டன. எனக்கெதிராக ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டன. குப்ர் பத்வாக்கள் பல என்னை நோக்கிப் பாய்ந்தன. பல்வேறு கமிட்டிகள் மூலம் எனக்கெதிராக திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் இவர்களின் இந்த அனைத்து முயற்சிகளும். கானல் நீர் போல் மாறின. தோல்வி ஒன்றே இவர்களுக்கு கிடைத்த வெகுமதிகலாயிருந்தன.

இந்த இயக்கம் மனிதனால் உண்டாக்கப்பட்டதொன்ற்றாக இருக்குமேயானால். இந்த பயங்கர சதித்திட்டங்களினால் இது எப்போதோ நாசமாகிப்போயிருக்கும். பொய்யான ஒரு இயக்கத்திற்கு எதிராக இது போன்று பெரும் பெரும் முயற்சிகள் செய்திருந்தும் அது நாசமடையாமல் முன்னேறியிருந்ததாக ஏதாவது சான்றுகள் உங்களால் காட்ட முடியுமா?

இந்த இயக்கத்திற்கான விதை விதிக்கப்பட்டதுமே அதை சுக்கு நூறாக்குவதற்காக பெரும் முயற்சிகள் செய்யப்பட்டும், அந்த விதை முளைத்து, செடியாகி, மரமாகி பூத்துக் குலுங்கி, கனிகள் கொடுத்து கிளைகள் பலவிட்டு வளர்ந்து கொண்டிருப்பதிலும் அற்புதமான அடையாளம் இல்லையா? இன்று இந்த மாபெரும் மரத்தின் கிளைகளில் எண்ணற்ற பறவைகள் அமர்ந்திருக்கின்றன.

இந்த இயக்கத்தை நாசம் செய்வதற்காக, எதிரிகள் பெரும் முயற்சிகள் செய்வார்கள். ஆனால் நான் இந்த இயக்கத்தை வளரச் செய்து முழுமையடையச் செய்வேன் இறுதி நாள் வரை வெற்றி பெரும் பட்டாளமாக அதை மாற்றுவேன். நான் உம்முடைய நாமத்தை பூமியின் எல்லை வரை புகழ் அடையச் செய்வேன். மக்கள் கூட்டம் கூட்டமாக தொலைதூரங்களில் இருந்து வருவார்கள். அதிகமான பொருளுதவி கிடைக்கும் எனவே நீர் உம்முடைய வீட்டை விரிவு படுத்தும் என்றெல்லாம் இறைவன் இருபத்துமூன்று வருடங்களுக்கு முன்பே கூறியிருந்ததை நான் பராஹீனே அஹ்மதிய்யா எனும் நூலில் எழுதியிருக்கிறேன்.

பாருங்கள், அன்று கூறப்பட்ட முன்னறிவிப்புகள் இன்று பூர்த்தியாகி இருக்கின்றன. கண்ணுள்ளவர்களுக்கு இந்த இறை அடையாலத்தக் காண முடியும் ஆனால் குருடர்களுக்கு இதுவரை ஒரு அடையாளத்தையும் காண முடியவில்லை. (நுசூளுள் மஸீஹ் பக் 2-7)

Read more »

கிறிஸ்மஸ் ஒரு கேள்விக்குறி

டிசம்பர் 25 ஆம் நாளைக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக - கிறிஸ்மஸ் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் 25 அல்ல!

இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பதற்குப் பைபிளிலேயே ஆதாரம் இருக்கிறது. லூக்கா 2:8 இல் இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கையில், "அப்போது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசு பிறந்த யூதேயா நாட்டில் டிசம்பர் மாதம் குளிர்காலமாகும். இக்காலத்தில் இரவில் பனி கொட்டும். அதனால் இரவில் வயல் வெளிகளில் தங்க இயலாது. எனவே இயேசு பிறந்த நாட்களில் மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கினார்கள் என்றால், அது டிசம்பர் மாதமாக இருக்க இயலாது.

லூக்காவின் இந்த வசனம் குறித்து, பிஷப் பார்ன்ஸ் என்பவர் தமது 'ரைஸ் ஆப் கிறிஸ்டியானிட்டி' (Rise of chiristianity) என்ற நூலில் 79 - ஆம் பக்கத்தில் கீழ்க்காணுமாறு வரைந்துள்ளார்:

"டிசம்பர் 25 -இல் தான் இயேசு பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு எந்த அடிப்படையுமில்லை! லூக்காவின் இயேசு பிறந்த கதைக்கு நாம் முக்கியத்துவம் தந்தாள், பெத்தலகம் அருகில் உள்ள வயல் வெளிகளில் இரவில் மேய்ப்பர்கள் மந்தையைக் காத்தது குர்லிகாலத்தில் நிகழ வாய்ப்பில்லை. யூதேயா நாட்டின் மலைப்பிரதேசமான இப்பகுதியில் இரவில் பனி கொட்டும். இதனால் இயேசு குளிர் காலத்தில் பிறந்திருக்க முடியாது என்ற முடிவிற்கே வர வேண்டியதிருக்கிறது. மிகுந்த சர்ச்சைக்களுக்குப் பிறகு கி.பி. 300-இல் நமது கிறிஸ்மஸ் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது குறித்து "என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா" வில் 'கிறிஸ்மஸ்' என்ற தலைப்பில் கீழ்க்காணுமாறு காணப்படுகிறது:

"கிரிஸ்து பிறந்த சரியான நாளும் ஆண்டும் திருப்திகரமாகத் தீர்மானிக்கப்படவில்லை. ஆயினும் கி.பி. இல் திருச்சபையினர் இந்தக் கொண்டாட்டத்திற்காக ஒரு நாளைத் தீர்மானித்தார்கள். மக்களின் மனதில் ஆழப் பதிந்திருந்த பனிக்காலத்தில் மிகப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத்தார்கள்."

(15 ஆம் பதிப்பு, பாகம் 5, பக்கம் 642)

சேம்பர்ஸ் என்சைக்ளோ பீடியாவில் இது குறித்து கீழ்க்காணுமாறு காணப்படுகிறது:

"......... மேலும் ரோமாபுரியில் டிசம்பர் 25 ஆம் நாள், நாட்டுப் புற மக்களின் பண்டிகை நாளாகும். கிறிஸ்தவ திருச்சபையினரால் இந்தப் பண்டிகையை மக்களின் பழக்கத்திலிருந்து அகற்ற முடியவில்லை. இதனால் அதையே புனிதப்படுத்தி விட்டார்கள்."

இந்த இரண்டு என்சைக்ளோ பீடியாக்களின் கருத்தையும் பீக் என்பவரின் பைபிள் விரிவுரை ஆதரிக்கிறது. அவர் தமது விரிவுரை நூலில் 727 ஆம் பக்கத்தில் கூறுவதைப் பாருங்கள்:

"(இயேசு பிறந்த) அந்தக் காலம் டிசம்பர் மாதம் அல்ல. நமது கிறிஸ்மஸ் மேலை நாட்டவரால் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்டதொன்றாகும்.

இவற்றிலிருந்து இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது உறுதியாகிறது.

கிறிஸ்த்துவத்தின் தோற்றம் பற்றி வரலாற்று ஆய்வு மற்றும் லூக்காவின் மேற்கண்ட கூற்று இவற்றைக் கண்ட பிறகும் இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்பி வருவது விநோதமாக இருக்கிறது. ஆதாரமற்றவற்றில் நம்பிக்கை கொள்வதுதான் கிறிஸ்தவமா?

லூக்காவின் மேற்கண்ட கூற்றுப் படிப் பார்த்தால் இயேசு கோடைக் காலத்திலேதான் பிறந்திருக்க வேண்டும். கோடைக் காலத்தில்தான் லூக்கா கூறுவது போன்று இரவில் வயல் வெளிகளில் மந்தையை விட இயலும். எனவே இயேசுவின் பிறப்பு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

இதனையே திருக்குர்ஆன் உறுதிப்படுத்துகின்றது. இயேசுவின் பிறப்பு நிகழ்ந்த போது மரியாளிடம் (மரியம் (அலை) அவர்களிடம்) மலைக்கு என்னும் வானவர் கீழ்க்காணுமாறு கூறியதாகத் திருக்குரானில் காணப்படுகிறது.

"(உமக்குப் பக்கத்திலுள்ள) பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உமது பக்கமாகக் குளுக்குவீராக. அது உம்மீது புத்தம் புதிய பழங்களை உதிர்க்கும்." (19:26)

யூதேயா நாட்டில் பேரீச்சம்பழம் கோடைக்காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே கிடைக்கும். டாக்டர் டி, டேவிஸ் என்பவர் தமது "டிக்ஷனரி ஆப் தி பைபிள்' (Dictionary of the bible) என்னும் நூலில் 'ஆண்டு' என்ற தலைப்பின் கீழ் பேரிச்சம்பழம் யூத மாதமான 'எலுல்' மாதத்திலேயே கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பீக் என்பவரின் கமெண்டரி ஆன் தி பைபிள் ' (commentary on the bible) என்ற நூலில் 117 ஆம் பக்கத்தில் யூத மாதமான எலுல் ஆகஸ்ட், செப்டம்பரில் தான் வரும் எனக் கூறியுள்ளார்.

இவற்றிலிருந்து திருக்குர்ஆன் கூறுவது போன்று, பேரிச்சம்பழம் கிடைக்கும் கோடைக்காலமான ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே இயேசு பிறந்திருக்க வேண்டும் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

Read more »

இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்ட கதை

தம் இன மக்களுக்குப் போதித்து நல்வழிகாட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் முன்னர் அனேகமாக அனைத்து தீர்க்கதரிசிகளும் இறையடியார்களும் தனிமையை நாடிச் சென்றதாகவும், விரதமிருந்து ஏக இறைவனை வழிபாட்டு வருவதிலேயே தம் நேரத்தை செலவிட்டதாகவும் நாம் அறிவோம். மோசே தீர்க்கதரிசி சீனாய் மலைக்கும், புத்த பிரான் ஒரு போதி மரத்துக்கும், இஸ்லாம் தந்த நபிகள் நாயகம் மக்கா அருகில் உள்ள ஒரு மலைக் குகைக்கும் சென்று இறைவனை தியானித்ததை இங்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். தினசரி குடும்ப வாழ்வின் சிக்கல்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் தூர விலகிச் சென்று எவருடைய இடையூறுமின்றி இறைவணக்கத்தில் தம்மை ஈடுபடுத்தி இறைவனின் தொடர்பைப் பெற்றுக் கொள்வதற்கு இத்தகைய தனிமையும் அவர்களுக்கு மிகவும் அவசியமே. இதைப் போன்றே யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவுடன் இயேசுநாதரும் யூதேயாவின் வனாந்திரத்திற்குச் சென்று விட்டார் என அறிகிறோம். 'அவர் இரவும் பகலும் நாற்ப்பது நாள் உபவாசம் இருந்த பின்பு, அவருக்கு பசி உண்டாயிற்று' என மத்தேயு 4:2 கூறுகிறது. ஆனால் தேவகுமாரனாகிய - ஏன் தேவனாகிய - இயேசுவுக்கு இத்தகையா தனிமையும், வணக்க வழிபாடும் தேவைதானா?

இயேசு சரியாக நாற்ப்பது பகல்கள், நாற்ப்பது இரவுகளும் தொடர்ந்து நோன்பு நோற்றார் என்பதை விவிலியச் சொல் வழக்குப் படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாற்பது என்ற எண் பைபிளில் ஒரு நீண்ட காலத்தைக் குறிப்பதற்காகவே கையாளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை பொழியச் செய்து வெள்ளப் பெருக்கினை ஏற்ப்படுத்தியதாகவும் (ஆதியாகமம் 7:4). யூதர்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்ததாகவும் (எண்ணாகமம் 14:33) மோசே தீர்க்கதரிசி நாற்பது நாள் இரவும் பகலும் சீனாய் மலையில் தங்கி நோன்பிருந்ததாகவும் (உபாகமம் 9:9) எலியா நாற்பது நாள் இரவு, பகல் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான் என்றும் (1இராஜாக்கள் 19:8) பைபிளில் பரவலாக கூறப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

நாற்ப்பது நெடிய நாட்கள் இயேசு ஏதும் உண்ணாமலும் பருகாமலும் தம் நாட்களைக் கழித்தார் என்றும் கூறுவதே நம் வியப்பைத் தூண்டும் போது சுவிசேசகர்கள் இயேசுவுக்கு வனாந்திரத்தில் கிடைத்த அனுபவத்தைக் குறித்து கூறுகையில் நாம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறோம். வனாந்திரத்தில் இயேசுவைப் பிசாசு சந்தித்துத் தனது சாத்தானிய வழியில் அவரை நடத்திச் செல்லும் பொருட்டு பேச்ச்சு வார்த்தையை எவ்வாறு தொடங்கினான் எனக் காணுங்கள். தன்னை யாரென அறிமுகப் படுத்திக் கொள்ளாமலும், தான் இயேசுவிடம் டுத்தொத வந்த கருத்தை நேரிடையாகக் கூறாமலும் அவன் இயேசுவைப் பார்த்து இவ்வாறு கேட்டான்.

'... நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படிச் சொல்லும்...' பிசாசின், இந்த சவாலுக்குரிய பதிலாக இயேசு தம்மை தேவகுமாரன் என்று நிரூபிக்கத்தக்க ஒரு சொல்லைக் கூட அவனுக்கு எடுத்துக் காட்டவில்லை. இந்தச் சம்பவம் நிகழும் காலக்கட்டத்தில் நாட்டில், நகரில் போது மக்களுக்கு மத்தியில் அவரைத் தேவ குமாரன் என்று யாரும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. குறைந்த பட்சம், யாரும் அவரை தேவகுமாரன் என அறிந்து கொள்ளவோ அடையாளம் கண்டுகொள்ளவோ இல்லை. உண்மையாதெனின் கிருஸ்தவ பெருங்குடிமக்களின் அபிலாஷைக்கு முரணாக புதிய ஏற்பாட்டின் எந்தப் பகுதியிலும். எந்த ஓர் இடத்திலும் இயேசுவின் திருவாயிலிருந்து தம்மை தேவ குமாரன் என வாதிடும் ஒரு வார்த்தை வெளிப்பட்டதாக சிறு குறிப்புக் கூட இல்லை. மற்றவர்களே அவர் மீது அவருக்குச் சற்றும் பொருத்தமில்லாத இந்த தெய்வீகப் போர்வையைப் போர்த்தி வைக்கக் காண்கின்றோம். இக்குறிப்பிட்ட சம்பவத்திலும் இப்பதவி , இந்த அந்தஸ்து அவருக்கு சிறிதும் பொருந்தவில்லை என்பதையும் இந்த அந்தஸ்த்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக இயேசு ஏதும் கூறவில்லை எனவும் நாம் அறிந்து கொள்ளும்போது வியப்பு மேலிடுகிறது.

கல்லுகளை அப்பங்களாக மாற்றுதல் இயேசுவால் இயலாத செயல் அன்று. ஏனெனில் உண்மையிலேயே பின்னொரு காலத்தில் தேவை ஏற்ப்பட்டபோது ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோருக்குப் போதிய அளவு அவர் அப்பத்தையும் மீனையும் வெறும் காற்றிலிருந்தே அவர் உருவாக்கிக் காட்டியுள்ளார். ஆகவே கல்லிலிருந்து அப்பத்தை உண்டாக்குவது இயேசுவுக்கு ஒரு பெரிய காரியம் ஆகாது. ஆனால் லூசிபர் என்னும் அந்தப் பொல்லாப் பிசாசை திருப்திப்படுத்தும் அளவுக்குக் தன தரத்தை தாழ்த்திக் கொள்ள இயேசுவுக்கு இஷ்டம் இல்லை போலும். எனிவே மிகுந்த கெட்டிக்காரத்தனத்துடன், 'மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ..... (உபாகமம் 8:3) என மோசே தீர்க்க தரிசியை மேற்கோள் காட்டி சாத்தனுடைய வாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

தேவகுமாரனுடன் பிசாசு பேச்சுவார்த்தை நடத்தி அவரைச் சோதனைக்குல்லாக்கிய இடம் ஜெரிக்கோவின் எல்லைப் பகுதி என கிறிஸ்தவ பாரம்பரிய ஏடுகள் பகர்கின்றன. இதனை அடுத்து இயேசுவை 'பரிசுத்த நகரத்திற்க்குச் கொண்டு போய் தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி : நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்....' (மத்தேயு 4:5-6) என்று பிசாசு தனது அடுத்த சோதனையை இயேசுவின் மேல் வைத்தது. இவ்வளவு அதி உயரமான உப்பரிகையின் மேல்மட்டத்திலிருந்து ஒரு மனிதன் கீழே குதிப்பது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு குதிப்பவனின் எலும்புகள் நொறுங்கிப் போய்விடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தேவகுமாரனும் சாதாரண மனிதனும் ஒன்றாவாரோ?

இயேசுவுக்குத் தெய்வீகத் தன்மை உண்டு என்பதற்கான ஆதாரத்தைக் கெட்ட பிசாசின் செயல் அற்ப்பமானதென்றோ, அபத்தமானதென்றோ, அறிவுப்பூர்வமற்றதென்றோ நாம் கொள்ள முடியாது. ஏனெனில் தொடர்ந்து இயேசுவிடம் பிசாசு எடுத்துக் கூறிய சொற்கள் வேதாகமத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது, 'தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடராத படிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதை எழுதியிருக்கிறது....' (மத்தேயு 4:6) என்ற வேதாகம வாக்குறுதியைப் பிசாசு எடுத்துக்காட்டி இயேசுவுக்குத் தகுந்த தருணத்தில் ஞாபகமூட்டியது தவறாகுமா? இருப்பினும் பிசாசு கேட்டபடி இந்த அபாயகரமான சோதனையை நிகழ்த்திக் காட்டி பிசாசை வென்று தமது தெய்வீகத்தன்மையை நிரூபிக்க இயேசு துணியவில்லை. ஒரு வேலை மேற்சொன்ன வேதாகம வசனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு-அதாவது தேவ தூதர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்ற உறுதிமொழி தம்மைப் பற்றித்தானா? அல்லது யாரைப் பற்றிக் கூறப்பட்டது - என்ற விஷயத்தில் அவருக்கு உறுதிப்பாடு இல்லாதிருக்கக்கூடும். எனவே இம்முறை இயேசு, '....உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்ச்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே.....' (மத்தேயு 4:6) என்று கூறி பிசாசு விடுத்த சவாலை ஏற்க்க மறுத்துவிட்டார்.

இறுதியாக, '....மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளை எல்லாம் உமக்குத் தருவேன்....' என்று பிசாசு இயேசுவுக்கு ஆசை காட்டியுள்ளது. முந்தைய இரு சோதனைகளைக் காட்டிலும் பிசாசின் இந்த சோதனை நம்மை மேலும் அதிர்ச்சி அடையச்செய்கிறது. ஏனெனில் தேவகுமாரனான இயேசுவே உலகத்தின் சகல ராஜ்யங்களுக்கும் அவற்றின் மகிமைக்கும் அதிபதியாக இருக்கும்போது, இருளின் அதிபதியாக இருக்கும்போது, இருளின் அதிபதியான பிசாசு இயேசுவுக்கு இவற்றையெல்லாம் தருவதாக சொவது வியப்புக்குரியது அல்லவா? பிசாசு தன முன்னால் இயேசு சாஷ்டாங்கமாய் விழுந்து தன்னைப் பணிய வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல், உலகத்தின் சொத்துகளையெல்லாம் தேவகுமாரனுக்கு இலஞ்சமாக தர முன் வந்ததையும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

மேற்கண்ட நிகழ்வுகளில் அடங்கியுள்ள ஆன்மீகக் கருத்து என்ன? இக்கதை புகட்டும் பாடம்தான் என்ன?

Read more »

சிலுவையின் வீழ்ச்சியும் இஸ்லாத்தின் வெற்றியும்!

ஆங்கிலேயர்கள் உலகின் பல நாடுகளை தம்வசப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் கிருஸ்தவ மார்க்கம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அக்காலத்தில் இந்தியாவை ஒரு கிருஸ்தவ நாடாக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிருஸ்தவ பிரசாரகர்கள் பெருவாரியாக இங்கு வந்திருந்தனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கிருஸ்தவ மார்க்கத்தை இந்தியாவெங்கும் பரப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். கிருஸ்தவ மார்க்கத்தை பரவச்செய்வதில் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு பெரும் ஒத்துழைப்பு தந்ததோடு அதற்க்கான எல்லா உதவிகளையும் அளித்திருந்தனர்.

லார்ட் லாரன்ஸ் என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி இவ்வாறு கூறியிருந்தார்.
"பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் பலப்படுத்த வேண்டுமானால் கிருஸ்தவ மார்க்கத்தை இங்கு பரவ செய்வதே ஒரே வழியாகும்." (லாரன்ஸ் லைப் பக்கம் 312)

அக்காலத்தில் இங்கிலாந்தில் பிரதமராக இருந்த லார்ட் பாமர்ஸ்டன் என்பவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்:-
"கிருஸ்தவ பிரசாரத்தை பலப்படுத்துவதில்தான் நமக்கு நன்மை இருக்கிறது. ஆகையால் இந்தியாவின் எல்லா மூளை முடுக்குகளிலும் கிருஸ்தவ மார்க்கத்தை பிரச்சாரம் செய்யுங்கள் ( தி மிஷன்)

சுருக்கமாக கூறுவதென்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிகுந்த பலத்துடனும் விளங்கியபோது இந்தியாவிலும் முழு உலகிலும் கிருஸ்தவ மார்க்கம் மிகுந்த வேகத்துடன் பரவத் தொடங்கியிருந்தது. முழு உலகிலும் கிருஸ்தவ மார்க்கத்தை தழுவிவிடும் என்று கிருஸ்தவ பிரசாரகர்கள் நம்பியிருந்தனர்.
அக்காலத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்த வில்லியம் ஹென்றி பெரோஸ் என்ற பாதிரி கீழ்வருமாறு கூறியிருந்தார்.

முஸ்லிம்களின் நாட்டில் என் இயக்கத்தை நான் பரப்பியே தீருவேன் லெபனானிலே, பாரசீக மலைகளிலே சிலுவையின் ஒளிக்கதிர்கள் பட்டுவிட்டன. கெய்ரோவும், டமாஸ்கசும், தெஹ்ரானும் இயேசுவின் சேவர்களாக மாறும் நாள் நெருங்கிவிட்டது. என்பதை இது அறிவுருத்துகிறது. அரபு நாடுகளில் ஒற்றுமை உடைக்கப்பட்டு இயேசு வானவர் தமது அடியார்களின் உருவத்தில் மக்காவின் கஹ்பாவில் நுழைவார். அப்போது, "உம்மை உண்மையான கர்த்தர் என்றும் இயேசு உம்மால் அனுப்பப்பட்டவர் என்றும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று அங்கு பேசப்படும். (பெரோஸ் சொற்பொழிவு 1896-97)

கிருஸ்தவர்கள் தமது மார்க்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில் முஸ்லிம்களின் நிலையோ மிக மோசமானதாக இருந்திருந்தது. கிறிஸ்தவர்களின் பிரசாரத்தை தடுத்து நிறுத்த சக்தியற்றவர்களாக அக்கால முஸ்லிம்கள் வாழ்ந்திருந்தனர். இதை குறித்து மதமாறிய ஒரு முஸ்லிம்-பாதிரி இமானுத்தீன் என்பவர் கூறியிருப்பதை பாருங்கள்:-

"இப்போது முகம்மதிய மார்க்கத்தின் உருவம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அதற்க்கு உயிர் இல்லை. அது மரணித்து விட்ட ஒருமார்க்கமாக தற்போது இருக்கிறது. ஒரு மனிதனால் மிகச் சிரமத்துடன் உருவாக்கப்பட்டு ஆனால் உயிர் கொடுக்கமுடியாத ஓர் உருவம் போன்று இஸ்லாம் ஆகிவிட்டது." (தஹ்லீமே முகம்மதி பக்கம்: 35
1880 )

ஒரு பக்கம் கிருஸ்தவ மார்க்கம் மிகுந்த பலத்துடன் பரவல் செய்யப்படுகிறது. மறுபக்கத்தில் முஸ்லிம்கள் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார்கள். இத்தகைய ஒரு மோசமான காலத்திலேதான் இமாம் மஹ்தியும் வாக்களிக்கப்பட்ட மசீஹுமான ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் தோன்றினார்கள். இரு முக்கிய பணிகளை அவர்கள் தமது வாழ்க்கையின் இலட்சியாங்களாக கொண்டிருந்தார்கள். ஒன்று முஸ்லிம்களை சீர்திருத்துவது. மற்றது, சிலுவையை முறிப்பது கிறிஸ்தவர்களின் தீவிர பிரசாரத்தை தர்க்கரீதியிலான தமது பிரச்சாரத்தால் முறியடிப்பது. ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் வருகை காலத்தின் பெரும்தேவையை பூர்த்தி செய்தது என்றே கூறவேண்டும்.

தற்கால கிருஸ்தவ மார்க்கக் கொள்கை ஒரு அடித்தள மற்ற கட்டிடத்திற்கு ஒப்பானது. இயேசு மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் மரணித்தார் என்ற அவர்களின் கூற்று ஒன்றே கிருஸ்தவ மார்க்கத்தின் உயிராகும். எப்போது இயேசு சிலுலவ்யில் மரணமடையவில்லை அவர் மரணித்து உயிர்தெழவுமில்லை என்று நிரூபிக்கப்படுமோ அப்போது கிருஸ்தவ மதம் ஒரு உயிரற்ற சடலமாகிவிடும்.

இதனை நன்கு உணர்ந்த ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் முஸ்லிம்களை நோக்கி கீழ்வருமாறு கூறி இருந்தார்கள்.:-

"என் இனிய நண்பர்களே! ஒரு இரகசியத்தை கூறுகிறேன் கேளுங்கள். இது எனது இறுதி போதனையாகும். இதனை நீங்கள் மனதில் வையுங்கள். கிறிஸ்தவர்களோடு நீங்கள் நடத்தும் விவாதங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். இயேசு என்றோ மரணித்துவிட்டார் என்பதை நிலைநாட்டுங்கள். அப்போதுதான் அவர்களோடு நீங்கள் நடத்தும் விவாதங்களில் உங்களால் வெற்றிபெற முடியும். மஸீஹ இப்னு மர்யம் (ஈசா (அலை) அவர்கள்) இன்னும் வானத்தில் உயிரோடு வாழ்கிறார் என்ற உங்களின் நம்பிக்கையே அவர்களின் மார்க்கத்தின் தூணாக இருக்கிறது. இந்த தூணை நீங்கள் தகர்த்துவிடுங்கள் பிறகு கிருஸ்தவ மார்க்கம் உலகில் எங்கு இருக்கிறது என்பதைப் பாருங்கள். இந்த தூண் உடைக்கப்பட்டு தவ்ஹீதின் தென்றல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் வீசவேண்டும் என்று இறைவன் விரும்புகின்றான். அதற்காகவே என்னை அனுப்பியுள்ளான். (இசாலே ஔகாம். பக்கம் 233)

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாம் மஹ்தியைப் பற்றி குறிப்பிடும் போது அவர் சிலுவையை முறிப்பார் என்று கூறி இருந்தார்கள். இதன் பொருள் வெளிப்படையில் சிலுவைகளை உடைப்பதல்ல, மாறாக சிலுவையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்தவர்களின் கொள்கையை தவறானதென்று நிரூபிப்பதாகும். ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் சிலுவையை முறிப்பதற்காக கிருஸ்தவ பிரசாரத்தை முறியடிப்பதற்காக தமது வாழ்க்கையை அற்பணித்திருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இன்றைய உலகில் கிருஸ்தவ பிரச்சாரத்திற்கு ஒரு தடைக்கல்லாகவும் இஸ்லாத்திற்கு ஒரு அரணாகவும் இலங்குவது ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதியா இயக்கமே. அஹ்மதியா இயக்கம் கிருஸ்தவ கோட்டையை தகர்க்கும் பீரங்கி படையாக அகில உலகத்திலும் செயல் பட்டு வருகிறது. இதனைக் குறித்து பல்வேறு நாட்டு பத்திரிகைகள் கூறுவதைப் பாருங்கள்!

"கிருஸ்தவ மதம் மிக விரைவாக அடிவாரத்தை நோக்கி செல்கிறது" தங்கனீக்க ஸ்டாண்டர்ட் 23-9-61)

"அஹ்மதியா இயக்கம் பெரும் பெரும் வெற்றியை அடைந்து வருகிறது. கானா விரைவில் முஸ்லிம் நாடாகி விடும் என்று பெருவாரியாக நம்பப்படுகிறது. இங்கு கிருஸ்தவ மார்க்கம் அபாயகரமான நிலையில் உள்ளது. படித்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் அஹ்மதியா இயக்கத்தால் கவரப்பட்டு வருகின்றனர். கிருஸ்தவ மதத்திற்கு இது ஒரு சவால் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்றைய ஆப்ரிக்காவை ஆளப்போவது சிலுவையா, இளம்பிறையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. (டெய்லி கிராபிக் கானா 7-12-57)

"நைஜீரியாவெங்கும் குறிப்பாக லாகோஸில் இஸ்லாம் மார்க்கம் பெரும் வாய்ப்பை பெற்றிருக்கின்றது என்று லாகோசின் பிரதம பிஷப் எழுதுகின்றார்." (நைஜீரியா ஹெரால்ட் 19-8-55)

அவர்கள் (ஆப்பிரிக்க முஸ்லிம்கள்) 30 வருடங்களுக்கு முன்னதாக தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து வந்தனர். எப்போது அஹ்மதிகள் தங்களுடைய பிரச்சாரத்தை இங்கு ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அவர்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. (டெய்லி டைம்ஸ் நைஜீரியா 23-2-55)

இன்றைய , உலகில் ஒரு பக்கம் கிருஸ்தவ மார்க்கம் வீழ்ச்சி அடைகிறது. மறு பக்கம் இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று? ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு இவைகளெல்லாம் இருந்தும் இன்று கிருஸ்தவர்கள் உலக நாடுகளில் வீழ்ச்சி அடைகிறார்கள் எவ்வித உலகாய சக்தியுமற்ற அஹ்மதியா இயக்கத்தின் மூலமாக இஸ்லாம் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருகிறது. இது அஹ்மதியா இயக்கம் இறைவனால் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் என்பதற்கும் அதன் ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஒரு சத்திய வாதி என்பதற்கும் மறுக்க முடியாத சான்றுஆகும்.

Read more »

Oct 12, 2011

"இறுதி நபித்துவ பேரவை"யின் சூழ்ச்சியும் இயக்கத்தின் எழுச்சியும்


அஹ்மதியா இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தானிலுள்ள முல்லாக்கள் அங்குள்ள பாமர மக்களைத் தூண்டி வன்முறையிலும் காட்டுமிராண்டித்தனத்திலும் அவர்களை ஈடிபடுத்தி வருவதைப் போன்று இங்கும் குழப்பத்தை ஏற்படுத்த சில முல்லாக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முயன்று வருகின்றனர். 'தஹப்புஸே கதமுன் நுபுவத்'.இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை இவர்கள் ஏற்படுத்தி இருப்பதும் அதன் முதல் கூட்டத்தை சென்னையில் நடத்தி அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக சில அபத்தமான தீர்மானங்களை வெளியிட்டிருப்பதும் பாகிஸ்தான் பயங்கரவாத முல்லாக்களை இவர்கள் பின்பற்ற நினைக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில் இந்த 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' முதன் முதலில் உருவாக்கி செயல்பட்டு வருவது பாகிஸ்தானிலேயேயாகும்.

இவர்களின் அமைப்பிற்கு இவர்கள் சூட்டியுள்ள 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' என்ற பெயரே வேடிக்கையானது. இறுதி நபித்துவத்தை இவர்கள் பாதுகாக்கிறார்களாம்! நபித்துவம், கிலாபத் ஆகியன கிடைப்பதற்க்கரிய இறையருட்கலாகும். இஸ்லாமிய சமுதாயத்திற்கு இந்த அருட்கள் கிடைக்கும் என்பது இறைவன் அளித்துள்ள வாக்குறுதி!இந்த அருட்கள் கிடைக்கப் பெற்றால் அவையே பேணிப் பாதுகாக்கப் பட வேண்டியவையாகும். நபித்துவமோ, கிலாபத்தோ இனி ஏற்படாது என்று கூறும் இவர்கள் எதனைப் பாதுகாக்க விழைகிறார்கள் என்று நமக்கு புரியவில்லை! போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போன்றிருக்கிறது இது!

இவர்களின் உண்மையான நோக்கம் பாதுகாப்பது அன்று, அழிப்பது! வீண் குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கும் நற்பெயரை அழிப்பதுதான் இவர்களின் நோக்கமென்பது இவர்களின் நடவடிக்கைகளிலிருந்து புலனாகிறது.

ஆனால் அஹ்மதியா இயக்கத்தை இது போன்று எதிர்த்தவர்கள் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்தார்கள் என்பதும் அந்தத் தோல்வியை அவர்களே ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதும் வரலாறு ஆகும்.

அஹ்மதியா இயக்கத்தை அதன் ஆரம்ப காலத்தில் கடுமையாக எதிர்த்திருந்தது அஹ்ராரி ஜமாஅத் ஆகும். அந்த அஹ்ராரி இயக்கத்தின் தோல்வி பற்றி அதன் தலைவரான அதாவுல்லா கூறி இருப்பதைப் பாருங்கள்.

"நிச்சயமாக அஹ்ராரி ஜமாஅத் ஒரு பாக்கியம் கெட்ட ஜமாத்தாக இருக்கிறது. எல்லா செயலரன்குகளிலும் இதற்க்கு தோல்வி மேல் தோல்விதான் கிடைத்துக் கொண்டிருக்கிறது". ("தாரிக்கே அஹ்றார்" பக்கம் 152)

1954- இல் பாகிஸ்தானில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' என்ற அமைப்பே இதனை செய்தது. இதனை தலைமை தாங்கி நடத்தியவர் பாகிஸ்தான் ஜமாத்தே இஸ்லாமி நிறுவனர் அபுல் அஹ்லா மௌதூதி ஆவார். ஆனால் இவர்களின் காட்டுமிராண்டித்தனம் ஐயூப்கானின் "மார்ஷல் லா" வால் ஒடுக்கப்பட்டது. மௌதூதி சாஹிபிற்க்கும் மௌலவி நியாசியிக்கும் பதினான்காண்டு கடுங்காவல் சிறை தண்டனை கிடைத்தது.

இவர்களின் படு தோல்வி பற்றி இவர்களின் ஏடான தர்ஜுமாநுல் குர்ஆனில் மௌதூதி சாஹிப் குறிப்பிடுவதைப் பாருங்கள் :-

"மிர்ஸா குலாம் அஹ்மதின் இயக்கத்திற்கு இவ்வளவு மாபெரும் வெற்றிகள் ஏன் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து நான் சிந்தனை செய்வதுண்டு மிர்ஸா சாஹிபின் எதிரிகளுக்கு தோல்விக்கு மேல் தோல்வி கிடைத்து வருவதையும் காண முடிகிறது.

இப்படி ஏன் நடைபெறுகிறது? ஒருவர் அல்லாஹ்வுக்கும் நபிபெருமானார் (ஸல்) அவர்களுக்கும் எதிராக நின்று கொண்டு (?) நீங்கள் எல்லோரும் ஒன்றுதிரன்டாலும் எனது இயக்கத்தை தோல்வியடையச் செய்ய இயலாது என்று சவால் விடுகின்றார். தனக்கு கிடைத்து வரும் இறையுதவிகளும் தனது எதிரிகள் பெற்றுவரும் தோல்விகளும் தனது உண்மைதன்மைக்கு ஆதாரம் என்று இவர் கூறுகிறார். அவ்வாறே நடைபெற்று வருவதையும் நாம் காண்கிறோம்.

காதியானிகளுடைய பாதுகாப்பிற்கு மறைமுகமான ஏற்பாடுகள் உள்ளன. இதற்க்கு ஓர் எடுத்துக்காட்டு கூற வேண்டுமாயின் "மார்ஷல் ல"வைக் கூறலாம். எவ்வளவு சக்தியுடன் 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' துவங்கப்பட்டது. அது எப்படி முடிவடைந்தது என்பதைப் பாருங்கள். (தர்ஜுமானுள் குர் ஆன், ஆகஸ்ட்1954)

கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் அஹ்மதியா இயக்கம் வளர்ந்தோங்கி வந்திருக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் மௌதூதி சாஹிப் அதற்க்கான உண்மையான காரணத்தை உணராதது பரிதாபத்திற்குரியது. ஆனாலும். இங்குள்ள 'தஹப்புஸே கதமுன் நுபுவ்வத்' காரர்களும் ஜமாத்தில் உலமாவின் அங்கங்களும் இதனைச் சிந்திக்க வேண்டியவர்களாவார்கள்.

1954-இல் அஹ்மதியா இயக்கத்திற்கு பாதுகாப்பளித்தது அதன் வளர்ச்சிக்கு வழி கோலியது ஐயூப் கானின் 'மார்ஷல் லா' என்றால் அதற்க்கு முன் தனிமனிதராய் நின்றிருந்த ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பாதுகாப்பும் அவர்கள் தோற்றுவித்த இயக்கத்திற்கு வளர்ச்சியும் தந்தது எது? முழுக்க முழுக்க மௌதூதி இயக்கத்தின் ஆதரவாளரான ஜெனரல் ஜியா, பாகிஸ்தானை ஆளுகின்ற நேரத்தில், அவருடைய அதிகார பலமும், அடக்குமுறைகளும் மேலோங்கி இருந்த நேரத்தில் அஹ்மதியா இயக்கத்திற்கு பாதுகாப்பும், அதன் வளர்ச்சிக்கு உதவியும் தந்த அந்த சக்தி எது? நிச்சயமாக அது எல்லாம் வல்ல இறைவனேயாகும். இதனை இந்த உலமாக்கள் உணராவிட்டாலும் அஹ்மதியா இயக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் நிச்சயமாக உணர்வார்கள்.
Read more »

Oct 5, 2011

காத்தமுன்னபிய்யீன் - ஓர் ஆய்வு

அகிலத்திற்கும் அருட்கொடையாகத் தோன்றிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறமிருந்து கிடைத்த் ஒப்பற்ற, மகத்துவமிக்க பட்டம் தான் காத்தமுன்னபிய்யீன் என்பது. இதைக் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

மாகான முஹம்மதுன் அபா அஹதின் மின் ரிஜாலிகும் வலாகின் ரசூலுல்லாஹி வ காத்தமுன்னபிய்யீன். (33:40)

'முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தையல்ல. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் காதமாகவும்(முத்திரை) விளங்குகின்றார்கள்.' (33:40)

காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு நபிமார்களுக்கெல்லாம் இறுதியானவர் என்று தவறாகப் பொருள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் அது திருமறையில் காணப்படும் போதனைகளுக்கும் அரபு அகராதிகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட கருத்தாகும்.

  1. காத்தம் என்ற சொல்லுக்கு அரபு நோழியில் இறுதியானவர் (கடைசியானவர்) என்ற பொருளே இல்லை. அதாவது 'காதம்' என்ற சொல், ஒரு பன்மைச் சொல்லுடன் இணைந்து வரும்போது அதாவது ஒரு கூட்டத்துடன் சேர்த்து பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம், அந்தக் கூட்டத்தில் சிறந்தவர், அந்தக் கூட்டத்தில் பரிபூரணத் தன்மையைப் பெற்றவர் என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது. இதனைப் பற்றி இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கின்றேன்.
  2. இந்தச் சொல் நபிகள் நாயகத்தின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்க்காகத்தான் கூறப்பட்டிருக்கிறது. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இறுதியாகவும், கடைசியாகவும் வருவதால் அவருக்கு எந்தவிதமான சிறப்பும் கிடைப்பதில்லை. ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் கலீபாக்களில் இறுதியானவர் என்று கூறினால் அதனால் அவருக்கு எந்தவிதச் சிறப்பும் கிடைப்பதில்லை. அதைப் போன்றே இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்களில் கடைசியானவர் என்பதால் பஹதூர் ஷாஹ் சபருக்கும் எந்தச் சிறப்பையும் வரலாறு கொடுப்பதில்லை. ஒருவருடைய சந்ததிகளில் கடிசியானவர் என்ற காரணத்தால் எந்த ஒரு மகனுக்கும் சிறப்பு கிடைப்பதில்லை. அதைப் போன்றே ரஹ்மத் துன் லில் ஆலமீன் ஆகத் தோன்றிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுபுவ்வத் என்ற ரஹ்மத்தை நிறுத்துவதற்க்காக நபிமார்களில் இறுதியாகத் தொன்றியவராவார்கள் என்று கூறினால் நபிகள் நாயகத்திற்கு அதனால் எந்த ஒரு சிறப்பும் கிடைக்கப்போவதில்லை என்பதோடு மட்டுமல்ல, ஓர் இறையருளை நிறுத்துவதற்காகத் தோன்றிய ஒருவராகத்தான் அவர்கள் கணிக்கப்படுவார்கள். (நவூதுபில்லாஹ்)
  3. ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் சிறப்புமிக்கவர்கள் என்பதில் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆனால் இந்தக் கருத்தை எடுத்துக்காட்டுவதற்கு திருக்குரானில் 'காத்தமுன் நபிய்யீன்' என்ற சொல்லைத் தவிர வேறு எந்த ஒரு சொல்லும் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்க காத்தமுன்னபிய்யீன் என்ற சொல்லுக்கு நபிமார்களில் இறுதியானவர் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்கில் சிறந்தவர் என்பதை எடுத்துக் காட்டும் எந்த சொல்லையும் திருக்குர் ஆனில் நாம் காண முடியாது. மேலும் நாம் பொதுவாக அன்றாடம் பயன்படுத்திவரும் நபிகள் நாயகம் (ஸல்) என்ற சொல்லுக்கும் திருக்குரானில் காத்தமுன்னபிய்யீன் என்ற சொல்லைத் தவிர வேறொரு சொல்லையும் காணமுடியாது.
  4. திருக்குர் ஆனில் ஏராளமான இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபிமார்கள் தோன்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (3:180, 22:76, 7:36, 16:3, 40:16, 6:89, 17:16, 4:70-71,57:17-18) ஆகிய திருவசனங்கள் இதற்குச் சான்றாக திகழ்கின்றன. அவ்வாறு தோன்றும் இறைத்தூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஷரியத்தின் கீழ் தாம் தோன்றுவார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்றால், மேற்கூறப்பட்ட திருவசனங்கள் இதற்க்கு முரண் பட்டவையாக அமைந்துவிடும். (நவூதுபில்லாஹ்)
  5. 'காத்தமுன்னபியீன்' என்ற சொல்லுக்கு இறுதி நபியென்று பொருள் கொடுக்கப்பட்டால், இந்தத் திருவசனத்தின் சிறப்புத் தன்மையே சிதறிவிடும். இந்த வசனத்தில் கூறப்பட்ட விளக்கம் இதுவேயாகும்.

அதாவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உங்களில் எந்த ஆண் மகனுக்கும் தந்தையல்ல என்று கூறப்பட்டிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பௌதீகமான முறையில் எந்த ஆண்மகனுக்கும் தந்தையல்லாதது போன்று ஆன்மீகமான முறையிலும் அவர்கள் எவருக்கும் தந்தை அல்ல என்ற சந்தேகம் எழுப்பப்படலாம். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்காகவே அல்லாஹ், 'வலாகின் ரசூலுல்லாஹி - ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்' என்று கூறியதன் மூலம் அன்னாரை ஏற்றுக்கொண்ட கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்கள் ஆத்மீகத் தந்தையாக விளங்குகிறார்கள். எவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னர் தோன்றிய எல்லா நபிமார்களுடைய உண்மைக்கும் சாட்சியாக விளங்குகிறார்களோ அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாட்சி முத்திரை இல்லாமல் இனிமேல் எந்த ஒரு நபியும் வர இயலாது என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆத்மீகத் தலைவராக ஏற்றுக்கொண்டு அன்னாருடைய ஷரியத்திற்க்குப் பூரணமாகக் கீழ்ப் படிந்து அன்னாரின் சீடராக இல்லாத எவருமே நபித்துவம் என்ற அருளைப் பெற முடியாது.

திருக்குரானின் இந்த உண்மை விளக்கத்திற்கு மாறுபட்ட முறையில், திருக்குரானுக்கும், நபிமொழிகளுக்கும் முரணான வகையில், அஹ்மதியா ஜமாத்தின் கொடும் எதிரிகள் தவறான முறையில் விளக்கம் கொடுத்து, சமுதாயத்தில் பல குழப்பங்கள் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இலங்கையில் மௌலவி அப்துல் வதூது என்பவரும் ஒருவர்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை அஹ்மதியா ஜமாத்திர்க்கும் அங்குள்ள பஹாயி இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்ற விவாதத்தின் போது குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த அப்துல் வதூது மௌலவியும் அவருடைய கூட்டத்தினரும் அரங்கத்தினுள் புகுந்து, அஹ்மதிகலாகிய நாங்கள் விவாதம் செய்யவேண்டும் என்று அடம் பிடித்தனர். காத்தமுன்னுபுவத்தை தவிர வேறு எந்த ஒரு விஷயத்தையும் பற்றியும் விவாதிக்க அவர் தயாராக இல்லை. ஆகவே இந்தத் தலைப்பிலேயே விவாதம் நடைபெற்றது. காத்தமுன்னுபுவ்வத் என்ற சொல்லுக்கு அஹ்மதிகள் கொடுத்த விளக்கத்திற்க்கோ நபிகள் நாயகத்திற்குப் பிறகு நபி வரலாம் என்ற வாதத்திற்க்குள்ள சான்றுகளுக்கோ பதில் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த வதூது மௌலவி தமது சீடர்களுடன் பலவகையிலும் குழப்பம் விளைவிக்க முயன்றார்.

அவர் அல் ஜன்னத் என்னும் மாத ஏட்டில் மேற்குறிப்பிட்ட விவாதத்தைப் பற்றி முற்றிலும் பொய்யான ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். வானத்தின் கீழ் மிகவும் கெட்டவர்கள் என்று நபி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட முல்லாக்களில் ஒருவராகிய இவர் சிறிதும் இறையச்சமில்லாமல் மேற் கூறப்பட்ட விவாதத்தைப்பற்றி பொய்யும் புரட்டும்தான் எழுதியிருக்கிறார். இதற்க்கு முதல் பதில் 'லஹ்னத்துல்லாஹி அலல் காதிபீன்' - பொய்யர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்' என்பதே.

அந்த விவாதத்தின் ஒலி நாடாக்கள் அஹ்மதியா ஜாமாத்திடம் இருக்கின்றன. அதனை இலங்கை அஹ்மதியா ஜமாத்தினர் தங்களுடைய பிரச்சாரத்திற்க்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்த மக்கள் உண்மையை ஏற்றுக் கொண்டும் இருக்கிறார்கள். மௌலவி அப்துல் வதூது, அந்த ஒலி நாடாக்களை (கேசட்டுகளை) அப்படியே எழுத்து வடிவமாக மாற்றி அல் ஜன்னத்திலோ தமது வான்சுடரிலோ வெளியிடத் தயாரா? என்று நாங்கள் கேட்கிறோம். அப்போதுதான் அல் ஜன்னத் மற்றும் வான்சுடர் வாசகர்களுக்கு உண்மையை புரிய இயலும்.

மேற்கூறப்பட்ட அல்ஜன்னத் ஏட்டில் அந்த மௌலவி பின்வருமாறு எழுதியுள்ளார்:

"நபியவர்கள் அலி (ரலி) அவர்களை நோக்கி "அலியே! நான் நபிமார்களுக்கு காத்தம் ஆவேன். நீர் அவுலியாக்களுக்கு காதமாக இருக்கின்றீர்" என்று நபியவர்கள் கூறியதாக ஹதீத் என்ற பெயரில் பொய்யொன்றை முன்வைத்த முஹம்மது உமர், காதம் என்ற சொல்லுக்கு இறுதி என்று அர்த்தம் இல்லை. சிறப்பு என்பதே அர்த்தமாகும். அவ்வாறு இறுதி என்று அதற்க்கு அர்த்தம் கொடுக்கப்படுமானால் அலி(ரலி) அவர்களுக்குப் பின்னால் அவுலியாக்கள் எவருமே இல்லை எனபதா என்றொரு பீடிகையைப் போட்டார்"- அதாவது மேற்கூறப்பட்ட பொய்யானது என்றும் சஹீஹானதாக (நமபத்தகுந்ததாக) இல்லை என்றும் அவர் அந்தக் கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார்.

மேற்கூறப்பட்ட விவாதம் முழுவதையும் கேட்பவர்களுக்கு உண்மையைப் புரிய முடியும் என்றாலும் இதற்க்கு மட்டும் சிறு விளக்கமளிகக் விரும்புகிறேன்.

இந்த ஹதீத் தஹ்தீபுத் தஹ்தீபில் ஹஸ்ரத் இப்னு ஹைஜர் (ரலி) அவர்கள் சரிபார்த்ததாகும். இந்த ஹதீதிலுள்ள எல்லா ராவிகளும் (அறிவிப்பாளர்களும்) முஹம்மதிப்னு சவ்வாரிலிருந்து அனஸ்வரை உறுதிவாய்ந்தவர்களாவார்கள்.

மேலும் 'தப்சீர் ஸாஃபி' என்னும் திருக்குர்ஆன் விளக்கவுரையில் காத்தமுன்னபிய்யீன் என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கையிலும், 'குனூசுல் ஹகாயிக்' என்னும் நூலிலும் 'அல் மனாகிப்' என்னும் நூலிலும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது. தப்சீருல் பயான் என்னும் நூலிலும் இந்த ஹதீஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஹாளிப்னு அப்துல்லாஹ் என்பவரிளிருந்து முஹம்மது பின் சவ்வார், மாலிகிப்னு தீனார், அல்ஹசனுல் பஸரீ, அனஸ் வரையுள்ள ராவிகள் இந்த ஹதீஸை ரிவாயத் செய்துள்ளனர்.

நாங்கள் தரும் விளக்கம், காதம் என்ற சொல் ஒரு கூட்டத்துடன் (பன்மையாக) வரும் போது அதற்க்குச் சிறந்தது என்ற பொருள் மட்டும்தான் இருக்கிறது என்று காட்டுவதற்காக இந்த ஹதீஸை நாங்கள் எடுத்துக் காட்டியுள்ளோம். இந்த ஹதீஸைப் பற்றி அது சஹீஹானதல்ல என்று ஒரு வாதத்திற்காக ஏற்ற்றுக் கொண்டாலும் அதனால் காதம் என்ற சொல்லுக்குச் சிறந்தது என்று அர்த்தமல்ல: இறுதியானது என்ற அர்த்தம் மட்டும் தான் இருக்கிறது என்று எவராலும் நிரூபித்துக் காட்ட இயலாது.

மேலும் சில சான்றுகளை இங்குத் தருகிறோம்.

  1. அபூ தம்மாம் தாயீ என்னும் கவிஞ்சர் மரணமடைந்த போது ஹசன் பின் வஹ்ஹாப் என்ற கவிஞ்சர் எழுதிய ஒரு கவிதையில் அபூ தம்மாம் தாயீயை 'காத்தமுஷ்ஷூ அராயி கவிஞ்சர்களில் காத்தம் அதாவது சிறந்தவர் என்று வர்ணித்துள்ளார்கள். (வபாயத்துள் அய்யான், பாகம் ௧ பக்கம் )
  2. தேவ்பந்து அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் அல்லாமா முஹம்மத் காசிம் அவர்கள், ஷாஹ் அப்துல்லாஹ் அஸீயைப் பற்றி "ஹாத்தமுல் முஹத்திசீன் வல் முபஸ்ஸீரி (ஹத்யத்துஷ்ஷியா) என்றும்
  3. சைஹுள் ஹிந்து மௌலானா மக்மூதுல் ஹசன், தமது 'மர்சிய்யா' என்னும் நூலில் மௌலானா ரஷீது அஹ்மத் அவர்களைப் பற்றி 'ஹாத்தமுல் அவ்லியா வல் முஹத்திசீன்' என்றும்
  4. ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ்வைப் பற்றி ஷாஹ் அப்துல் அசீஸ் அவர்கள், தமது 'உஜாலா நாபியா' என்னும் நூலில் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்
  5. மகாமத்தே ஹரீரி என்னும் நூலில் அதன் ஆசிரியர், அல்காசிம் பின் அலியை, 'காத்தமுல் புல்கா' என்றும்
  6. 'முஅத்தா' ஹதீஸ் நூலில் ஷரஹில் அல்லாமா முஹம்மது சர்க்கானியை காத்தமுல் முஹக்கிகீன்' என்றும்
  7. 'இத்கான்' என்னும் நூலின் ஆசிரியர் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தியை 'காத்தமுல் முஹக்கிகீன்' என்றும் 'காத்தமுல் முஹத்திசீன்' என்றும்
  8. 'புதுஹாத்தே மக்கிய்யா' என்னும் நூலின் 'ஷேக் முஹியித்தீனிப்னு அரபியை 'காத்தமுல் அவ்லியா' என்றும்
  9. பத்ஹுல் முயீன் என்னும் நூலில், அல்லாமா இப்னு ஹஜரில் ஹைதமியை, 'காத்தி மத்துல் முஹக்கிகீன்' என்றும்
  10. மின்ஹாஜூ சுன்னத்' என்னும் நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தீமிய்யா வை 'காத்திமத்துல் முஜ்தஹிதீன்' என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே மௌலவி அப்துல் வதூது எப்படிக் கூச்சல் போட்டாலும் எங்களுடைய வாதம் என்னவென்றால் காதம் என்ற சொல், ஒரு பன்மைச் சொல்லுடன் இணைந்து வந்தால், அந்தச் சொல்லுக்கு சிறந்தது என்ற பொருள் மட்டும்தான் வரும். இறுதியானது, கடைசியானது என்று பொருள் வராது என்பதாகும். இதனை மறுக்க அப்துல் வதூது மௌலவியாலும் முடியாது. வேறு எந்த மௌலவியாலும் முடியாது.

ஆகவே காதம் என்ற சொல், அந் நபிய்யீன் என்ற பன்மைச் சொல்லுடன் வந்தால் அதற்க்கு நபிமார்களில் சிறந்தவர் பூரணத் தன்மையைப் பெற்றவர் என்பது மட்டும்தான் பொருள். விவாதத்திற்க்குரிய மேற் குறிப்பிட்ட ஹதீஸ், தப்ஸீர் ஸாபியைத் தவிர ஹதீஸ் விளக்க நூல் 'உம்தத்துல் பயான்' என்னும் நூலிலும் மௌலவி மக்பூல் அஹ்மத் எழுதிய தர்ஜுமத்துல் குரான் என்னும் திருக்குர்ஆன் விளக்க நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. காத்தமுன்னபிய்யீன் என்ற தொடரின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள இறைவன் நம் எல்லோருக்கும் வாய்ப்பளிப்பானாக.

Read more »

Oct 3, 2011

ஆங்கிலேயர்களின் கைக்கூலி யார்?


அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு இவர்களின் தாஜ்ஜாலியத்திற்கான (பொய்யர்கள்) சிறந்த உதாரணமாகும். அஹ்மதியா இயக்கத்தின் உலகளாவிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு பொறாமையும், காழ்புணர்ச்சியும் கொண்ட அல் அமீன் ஏட்டின் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.

"காதியானி இயக்கம் என்ற ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மூலையில் ஆங்கிலேயர்களின் ஒத்துழைப்புடன் உருவானது". 

இந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முக்கிய ஆயுதமே பிரித்து ஆளுவதுதானே! அவர்களின் இந்த முயற்சி முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பிரிவை உண்டு பண்ணியதில் வெற்றியை தந்தது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரின் துணை கொண்டு இதனை செய்து முடித்தனர்."

இந்தக் கூற்றைக் கேட்கும் போது, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடைய வருகைக்கு முன்னுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஒரே இயக்கமாக இயங்கி வந்து கொண்டிருந்தார்கள் என்றும் ஆனால் ஆங்கிலேய ஆட்சியின் சூழ்ச்சியின் காரணமாக, ஹஸ்ரத் அஹ்மத் அவர்களே முஸ்லிம்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினார்கள் என்றும் தெரிகின்றது இது கிணற்று தவளையின் கருத்தேயன்றி வேறில்லை. வரலாறு கூறும் உண்மைக்கும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பிற்க்கும் நேர் மாற்றமான கருத்தாக இருக்கிறது.

எனது உம்மத் 72 கூட்டமாகப் பிரிந்துவிடும் என்று நபி பெருமானார் (ஸல்) அவர்கள் உரைத்த வண்ணம் அஹ்மதியா இயக்கம் உலகில் தோன்றுவதற்கு முன்பே முஸ்லிம் சமுதாயத்தில் 72 பிரிவுகள் இருந்தன. இவ்வியக்கம் தோன்றுவதற்கு முன்னர் இந்த முஸ்லிம் சமுதாயம் பிளவுபடாமலா இருந்தது? சுன்னிகள் என்றும், ஷியாக்கள் என்றும், காதிரிய்ய என்றும், ஷாதுலியா என்றும், வஹ்ஹபிகள் என்றும் எத்தனையோ பிரிவுகள் எத்தனையோ தரீக்கத்துகள், எத்தனையோ ஜமாஅத்துகள்.

இந்தப் பிரிவினைகளுக்கும், வேற்றுமைகளுக்கும் காரணம் என்ன?

காரணம் கொள்கை கோட்பாடுகளில் கருத்து வேறுபாடேயாகும். காரணகர்த்தாக்கள்: அக்கொள்கைகளை நிர்ணயிக்கும் முல்லாக்கள்; வானத்தின் கீழ் மிக கெட்ட ஜந்துக்கள் என்று நபி(ஸல்) அவர்களால் வருணிக்கப்பட்ட சீர்கெட்ட ஆலிம்சாக்கள்!! 

இனி இவர் கூறிய குற்றச்சாட்டுக்கான பதிலைப் பார்ப்போம்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு வால்பிடித்த அக்கால ஆலிம்சாக்கள் அஹ்மதியா இயக்கத்தை ஒழித்துக் கட்ட அந்த அரசிடமே ஆதரவு தேடினார்கள் 26 மௌலவிகள் கொண்ட ஒரு தூதுக்குழு ஆங்கிலேய அரசிடம் சென்று இவ்வாறு முறையிட்டிருந்தது: 

"இந்த அரசு அஹ்மதிய்யா இயக்கத்தை நம்பக் கூடாது. இந்த அரசிற்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த இயக்கத்தினால் அதிகமான கெடுதி இவ்வரசிற்கு ஏற்படும். (இஷா அத்து சுன்னா 11௨ பக்கம் 405) 

அந்தக் காலத்து ஆலிம்களால் ஆங்கிலேய அரசிற்கு எதிராக அமைக்கப்பட்ட ஓர் இயக்கமாக வருணிக்கப்பட்ட அஹ்மதியா இயக்கம் இந்தக் கால ஆலிம்களாலும் அவர்களுடைய வாலில் தொங்கிக்கொண்டிருப்பவர்களாலும் அந்த ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட ஓர் இயக்கம் என்று கூறப்படுகிறது. என்ன விந்தை இது.

ஆங்கிலேய ஆட்சிக்கு வால் பிடித்தவர்கள் யார் எனபதைப் பார்ப்போம். 

லாஹூரிலிருந்து வெளிவரும் சட்டான் என்னும் பத்திரிகையில் அஹ்லேசுன்னத்துகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

"இவர்கள் அங்கிலேயர்களைக் குறித்து 'உலளுள் அம்ரி' (அதாவது மக்கள் எவர்களுக்கு கட்டுப்பட வேண்டுமோ அவர்கள்) என்று கூறினார்கள். இந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் இந்த நாடு 'தாருஸ் ஸலாம்' (அமைதியான நாடு) என்றும் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்குகிறார்கள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இவர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு ஒரு மார்க்க இயக்கமாக மாறிவிட்டார்கள்". (சட்டான் 15-10-83 )

இதற்குப் பதிலளித்த தூஃபான் என்னும் பத்திரிக்கை கீழ்வருமாறு எழுதுகின்றது.

ஆங்கிலேயர்கள் மாபெரும் தந்திரத்துடனும் சாமார்த்தியத்துடனும் 'அஹ்லே ஹதீஸ்' என்னும் வஹ்ஹாபி இயக்கத்தை இந்தியாவிலும் உருவாக்கி தமது கைகளாலேயே அதற்க்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி அதனை வளர்ச்சியடைய செய்தார்கள்.(தூஃபான். 7-11-83)

இவ்வாறு சுன்னிகளும் வஹ்ஹாபிகளும் அங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்றும் மேலும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

வஹ்ஹாபிகளின் நத்வதுல் உலமா என்ற நிறுவனம் அங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்றும் இந்நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து மாதந்தோறும் உதவித்தொகை கிடைத்துக்கொண்டிருந்ததென்றும் அதன் ஆலிம்கள் பிரிட்டீஸ் அரசிடமிருந்து சம்பளம் பெற்று வந்தார்கள் என்றும் கூறுகின்ற வரலாற்று உண்மையை எவராலும் மறுக்க முடியாது. 

வஹ்ஹாபிகளின் ஆலிம்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் நத்வத்துல் உலமா என்னும் பள்ளிக்கூடத்தின் நோக்கம் ஆங்கிலேய ஆட்சியின் அருட்கொடைகளை நன்கறிந்து இந்த அரசின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பாடுபடும் ஆலிம்களை உருவாக்குவதுமாகும். என்று அந் நத்வா என்னும் பத்திரிக்கை கூறுகிறது. 

எனவே, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து சம்பளம் பெற்று அவர்களுக்கு வால் பிடித்த கைக்கூலிகளும், கைப்பாவைகளும் யார் என்பதை உண்மையை ஒப்புக் கொள்பவர்களால் உணர முடியும். 

அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு இவர்களின் தஜ்ஜாலியத்திற்கான சிறந்த உதாரணமாகும். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது வருகையின் நோக்கத்தைப்பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள்.

"நான் சிலுவையை உடைப்பதற்கும் பன்றியை கொல்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்." (பத்ஹே இஸ்லாம் பக்-17)

"கிறிஸ்தவர்களுடைய கடவுளை இனியாவது மரணிக்கச் செய்யுங்கள். எவ்வளவு காலம்தான் நீங்கள் அவரை கடவுளாக்கிக் கொண்டிருப்பீர்கள்? இதற்க்கு ஒரு முடிவே இல்லையா?"(இஸாலே ஔகாம் பக்-469)

சிலுவை கொள்கை என்பது கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்களின் உயிரோடு ஒன்றிவிட்ட ஒன்று. அதனை தகர்க்க வந்துள்ளதாகக் கூறும் ஒருவர் அவர்களால் நியமிக்கப்பட்டவராகவோ, அவர்களுடைய ஆதரவாளர்களாகவோ எவ்வாறு இருந்திருக்க முடியும்?

மேலும் கிறிஸ்தவர்களுடைய கடவுளை மரணிக்கச் செய்ய வேண்டும் என்று கூறுபவர் எவ்வாறு ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்திருக்க முடியும்? 

ஆங்கிலேய ஆட்சியின் போது கிருஸ்தவ பாதிரிமார்களை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தஜ்ஜால் என்று துணிந்து சொன்னார்கள். இத்தகைய ஒருவர் ஆங்கில அரசின் பிரதிநிதியாக இருந்திருக்க முடியும்? கிருஸ்தவ தெய்வமான இயேசு இறந்துவிட்டதாக ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அப்போதிருந்தே கூறி வருகின்றார்கள். அதற்க்கு மாறாக இயேசு ஈசா நபி -அவர்கள் வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்று இவர்கள் அப்போதிருந்தே கூறிவருகின்றார்கள். இப்போது இங்கு எழுகின்ற கேள்வி, கிறிஸ்தவர்களான ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளின் கடவுள் இறந்து விட்டதாகக் கூறுகின்றவர் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களா? அல்லது அவர்களின் கடவுள் உயிருடன் வானத்தில் இருப்பதாக கூறும் இவர்கள் அவர்களின் ஆதரவாளர்களா?

தொடர்ந்து அல் அமீன் ஆசிரியர் எழுதுகிறார். "மிர்ஸாவின் எழுத்துக்களின் தரமும் தான் ஓர் இறை தூதுவர் என்று கூறும் பட்சத்தில் பொருந்தும்படியாக இல்லை. ஒரு சாதாரண நபர் எழுதுவது போல் அமைந்துள்ளது"

இவரிடம் நாம் கேட்க விரும்புவது, அவர் இறைவன் மீது ஆணையிட்டு தமது நெஞ்சத்தில் கைவைத்துக் கூறட்டும். ஹஸ்ரத் அஹமத்(அலை) உருது, பார்சி, அரபி மொழிகளில் எழுதிய புத்தகங்களில் ஏதாவது ஒன்றை அவர் வாசித்ததுண்டா? நிச்சயமாக கிடையாது. இவ்வாறிருக்க ஹஸ்ரத் நபிகள் நாயகத்திற்கு வேதம் கற்றுக் கொடுத்தவர் ஒரு யூதர்தாம்: பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்றுக் கூறிக்கொண்டிருக்கும் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் பின்பற்றி நீர் எதற்க்காக இறைவனுடைய கோபங்களுக்கும், சாபங்களுக்கும் ஆளாகின்றீர்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் கிரந்தங்களைப் படித்து ஆராய்ந்து மௌலான அபுல் கலாம் ஆசாத் இவ்வாறு வரைகிறார்கள். 

மர்ஹூம் (மறைந்த தலைவர்) மகத்துவம் மிக்கவராக விளங்கினார். அவருடைய நாவும், பேனாவும் மிகவும் சக்திவைந்தவையாகவும் மக்கள் உள்ளங்களை வசப்படுத்துபவையாகவும் இருந்தன. அவருடைய விரல்கள் மூலம் புரட்சிகள் தோன்றிக்கொண்டிருந்தன. அவருடைய இரண்டு கைகளும் சக்திவாய்ந்த மின்சாரக் கம்பிகளாக இருந்தன. மர்ஹூம் கடந்த முப்பது ஆண்டுகாலமாக மார்க்க உலகில் இத்தகு புரட்சியினை ஏற்படுத்தக்கூடிய இப்படிப்பட்ட பெரியவர்கள் உலகில் எல்லாக்காலங்களிலும் தோன்றுவதில்லை. ..... மர்ஹூம் மார்க்க உலகில் எவராலும் வெல்ல முடியாத மிகப் பெரும் வெற்றிவீரராக திகழ்ந்தார் என்பதை எம்மால் மறுக்க இயலாது. (வக்கீல் ஜூன் 1908)

மற்றொரு பேரறிஞரான அல்லாமா நியாஸ் பதஹ்பூரி இவ்வாறு எழுதுகிறார்:

"அஹ்மதியா இயக்கத்தின் தூய ஸ்தாபகர் அசாதாரமான அறிவும் ஞானமும் சிந்தனைத் திறனும் பெற்ற மனிதராக விளங்கினார். மிர்ஸா சாஹிபின் வாழ்க்கை வரலாறு அவருடைய போதனைகள், தத்துவங்கள், அவர் நிகழ்த்திய மாபெரும் ஆன்மீகப் புரட்சி, அவருடைய திருமறை ஞானம் கொள்கைகள் ஆகியவற்றை விளக்கமாகப் படித்து ஆராய்வதற்கு முழு மனித ஆயுளும் போதாது ஆனால் நான் இதுவரை செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்க்கும் போது ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் ஓர் அசாதரணமான ஆன்மீக சக்தி பெற்ற ஒரு மாமேதையும், மஹ்தி என்று வாதம் புரிவதற்கு முழு தகுதியும் பெற்றவர் என்று என்னால் தைரியமாக கூற முடியும் (நிகார்) 

உண்மை இவ்வாறிருக்க அல் அமீன் ஆசிரியர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மகத்துவமிக்க மாபெரும் கிரந்தங்களை கீழ்த்தரமாக எடைபோடுவது, தன்னை அறியாமையின் சிகரத்தில் அமர்த்தியிருக்கிறார் என்பதற்கு  சரியான எடுத்துக்காட்டாகும்.
Read more »

இமாம் மஹ்தியை நிராகரிப்பவர்கள் யார்?

இமாம் மஹ்தி (அலை) அவர்களை எதிப்பவர்கள், ஆலிம்களும் அவர்களைப் பின்பற்றுபவர்க்களுமாக இருப்பார்கள். ஆதம் நபி முதல் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த தூதர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார்கள். இறுதியில் இவ்விறை தூதர்களே வெற்றிபெற்றார்கள்.
ஆதமின் சந்ததிகள் மீது வருத்தப்பட்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். 'அந்தோ பரிதாபம்! மக்களிடம் எப்பொழுதெல்லாம் இறைத்தூதர்கள் தோன்றினார்களோ அப்பொழுதெல்லாம் மக்கள் அவர்களை எதிர்த்தும் ஏளனம் செய்தும் அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும் ஆளாக்கினார்கள்" அல்லாஹ் நமக்கு எடுத்துரைக்கும் சட்டம் இதுதான். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டப்படி மக்களால் எதிர்க்கப்பட்ட எதிர்ப்பு அணி திரட்டப்பட்ட -நபிமார்களை, மக்கள் எதிர்க்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக நீங்கள் ஒப்புக் கொள்ள மறுப்பீர்களா? மூசாவின் சமுதாயத்தில் இது நடைபெறவில்லையா? மூஸா நபிக்குப் பிறகு தோன்றிய நபிமார்களை மக்கள் எதிக்கவில்லையா?
உண்மைவாதிக்கும் பொய்வாதிக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.
இஸ்லாமிய சமுதாயத்தில் புகழ் பெற்ற மார்க்க அறிஞரும், தலை சிறந்த தத்துவ ஞானியும் பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள நூலில் 'இஸ்லாமிய சிந்தனையாளர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்பட்டவருமான ஹஸ்ரத் இமாம் இப்னு கையும் அவர்கள், இறைத்தூதர்கள் ஏன் எதிர்க்கப்படுகின்ற்றனர் என்பதைப் பற்றியும், அந்த எதிர்ப்புகள் ஒருவரைப் பொய்யராக்குவதர்க்குப் போதுமான ஆதாரமாகுமா என்பதைப் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
ஏராளமான பொய்யர்களும், பொயவாதிகளும் தோன்றினார்கள் என்பதை நாம் மறுக்க வில்லை. அவர்களுடைய ஆரம்பகால கட்டம் மிகவும் கௌரவமானதாக இருந்தது. ஆனால் அவர்கள் தங்களுடைய நோக்கத்தை அடைய முடியவில்லை. அவர்களுடைய காலம் நீண்டுபோகவுமில்லை' மாறாக இறைவனுடைய தூதர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் அவர்களைப் பெயரும் அடையாளமும் தெரியாதவர்களாக்கினார்கள். ஆரம்ப காலம் முதல் அல்லாஹ்வின் அடியார்களிடம் இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இறுதி காலம் வரை இதுதான் தொடர்ந்து நடைபெற்றுவரும். (ஸாதுல் மாஅத் பாகம் 1 பக்கம் 500)
நான் ஏற்கனவே கூறியது போன்று இந்த வரலாறு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து உள்ளதல்ல இவ்வுலகம் தோன்றியதிலிருந்து இந்த நடை முறை செயல்பட்டுவருகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் உண்மையாளர்களுக்கும், பொய்யர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடியும், பொய்வாதிக்கு ஆரம்பத்தில் மக்களுடைய ஒத்துழைப்பும் ஒத்தாசையும் கிடைத்துவந்ததாக மார்க்க வரலாறு கூறுகின்றன. நமது எதிரிகள் அடிக்கடி எடுத்துக் கூறிவரும் முஸைலமா கத்தாபுக்கு ஆரம்பத்தில் அவனுடைய சமுதாயம் ஒத்துழைத்தது. ஆரம்ப காலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மக்களுடைய ஒத்துழைப்போடு அவன் இயங்கி வந்தான் பின்னர் அவனும் அவனுடைய கூட்டத்தினரும் அழிந்து விட்டனர்.

ஆனால் அல்லாஹ்வின் உண்மையான தூதர்கள் ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளாகின்றனர். இறுதியில் இவ்இறைத்தூதர்கள் வெற்றி பெறுகின்றனர்.

இப்னு கையும் கூறுவதைப் பாருங்கள் பொயவாதிகளுக்கு நீண்ட கால அவகாசம் கிடைக்காதென அவர் கூறுகிறார். ஆனால் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் இயக்கத்திற்கு நூறுவருட ஆயுள் கிடைத்துள்ளதாகவும், உங்களுடைய ஒவ்வொரு எதிர்ப்புக்குப் பிறகும் வெற்றிக்குமேல் வெற்றி பெறுவதாகவும் நீங்களே உங்களுடைய வாயாலும், பேனாவாலும் ஒப்புக்கொள்கிறீர்கள்! ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான ஆற்றலோ அந்தஸ்தோ இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்ப காலத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நபித்துவ வாதம் செய்த போது அனைவரும் அவர்களை விட்டு விலகி விட்டதாக நீங்கள் பெருமையோடு கூறிக் கொள்கிறீர்கள் இதைத்தான் உண்மையான இறைத்தூதரின் அடையாளமாக திருக்குர்ஆன் கூறுகிறது. பொய்வாதியின் ஆரம்பம் மிகவும் ஆரவாரத்தோடும், ஆடம்பரத்தொடும் துவங்குகிறது. ஆனால் போகப்போக சிறிது காலத்திற்குள் அவர்கள் தோல்விக்கும் அவமானத்திற்கும், அழிவுக்கும் ஆளாகிறார்கள். ஆனால் உண்மைவாதியின் ஆரம்பம் மிகவும் வேதனைக்குரிய நிலையில் துவங்குகிறது. சொந்த பந்தங்கள் எல்லாம் அவர்களை விட்டு விலகுகிறார்கள். வெளிப்படையான நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை: முழு உலகமும் அவர்களை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும். ஆனால் அல்லாஹ் அவர்களை ஒருபோதும் அழியவிடமாட்டான். அல்லாஹ்வின் விதி வெற்றியடைகிறது. நானும் எனது தூதர்களும் வெற்றி பெறுவோம். என்ற இறைவனின் சட்டம் நிறைவேறுகிறது.

இமாம் மஹ்தியை எதிப்பவர்கள்:-

  • நவாப் நூருல் ஹசன்கான் ஸாஹிப் கூறுவதாவது, 'இதே நிலைதான் மஹ்தி (அலை) அவர்களுக்கும் வரப்போகிறது. அவர் தோன்றினாள் எல்லா முகல்லிதீங்களும் அவரைக் கொலை செய்ய ஆயத்தமாக இருப்பார்கள். இவர் எங்களுடைய மார்க்கத்தை சீர்குலைத்தார் என அவர்கள் கூறுவார்கள். (இக்திராபுஷ்ஷா பக்கம் 224)
  • முஸ்லிம் உலகம் முழுவதும் போற்றும் ஹஸ்ரத் ஷேய்க் முஹியித்தீன்இப்னு அரபி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள், "இமாம் மஹ்தி தோன்றினால் அவருடைய பகிரங்கமான எதிரிகள் ஆலிம்களையும், புக்கஹாக்களையும் தவிர வேறு யாராகவும் இருக்கமாட்டார்கள். (புதுஹாத்தே மக்கிய்யா பாகம் 2: பக்கம் 242)
  • இமாமா மஹ்தி தோன்றும் பொழுது நடப்பவற்றை நவாப் சித்திக் ஹசன்கான் பின்வருமாறு விவரிக்கிறார். "தங்களுடைய முன்னோர்களையும், ஷேய்க்மார்களையும், பின்பற்றும்(தக்லீது செய்யும்) பழக்கமுடைய ஆலிம்கள் இவர் (இமாம் மஹ்தி) நமது மார்க்கத்தையும், சமுதாயத்தையும் சீர் குலைக்கத் தோன்றியவர் என்று கூறி அவரை எதிர்க்க முன்வருவார்கள். மேலும் தங்கள் பழக்கத்திற்க்கேற்றவாறு அவருக்கேதிராக காபிர் பத்வா கொடுப்பார்கள். (ஹஜ்ஜுல் கராமா பக்கம் 363)
  • ஹஸ்ரத் முஜத்தித் அல்பிஸானி(ரஹ்) என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். முஹம்மதிய்ய உம்மத்தில் இவர்கள் மிகப்பெரும் மதிப்பிர்க்குரியவர்களாக திகழ்கிறார்கள். "இமாம் மஹ்தி (அலை) அவர்களின் கருத்துக்களையும், அவற்றின் ஆழிய மறைவான ஞானங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றலற்றவர்களான உலகாதாய வாதிகளான ஆலிம்கள் அவரை மறுத்து, அவற்றை (அக்கருத்துக்களை) திருக்குரானுக்கும், சுன்னத்துக்கும் எதிரானவை எனக்கருதுவார்கள்." (மக்துபாதே இமாம் ரப்பானி பாகம் - பக்கம் 55)

ஹஸ்ரத் முஜத்தித் அல் பிஸானி(ரஹ்) அவர்கள் நுணுக்கமான இறைஞான முள்ள ஒருவராவார். ஹஸ்ரத் மஸீஹ்(அலை) தோன்றும் போது மார்க்க ஞானமில்லாத ஆலிம்கள் அவர்கள் எதிர்ப்பார்கள் என்று கூறி அதற்க்கான காரணத்தையும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

Read more »

கு. குரல் கூறுமா பதில்?

"அவர்கள் குரானை சிந்தித்துப் பார்ப்பதில்லையா? அவர்களின் இதயங்களில் பூட்டுகளா போடப்பட்டிருக்கின்றன? (47:25) இப்படி கேட்கிறது திருக்குர்ஆன். ஆம்! தங்களுக்கு மட்டுமே மார்க்கம் தெரியும், தாங்களே மார்க்க அறிஞ்சர்கள் என்று கூறும் இக்கால முல்லாக்களின் இதயங்களில் அகங்காரம் என்ற பூட்டுப் போடப்பட்டிருக்கிறது அதனால் அவர்கள் ஆழமாக சிந்திப்பதில்லை எடுத்துக் கூறினாலும் தெரிந்துகொள்வதுமில்லை. "கு. கு" ஏடு "ஜின்னும் மனிதர்களே" என்ற நமது கருத்துக்கு தரப்பட்டிருக்கும் மறுப்பு!

"ஜின்" என்று திருக்குரானில் கூறுவது மக்களின் ஒரு வகுப்பினரை குறித்தேயாகும் என்ற எமது கருத்திருக்கு திருக்குரானிலிருந்து ஆதாரங்களை தந்திருந்தோம். அவைகளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு ஏதோ நாம் திருக்குரானையே மறுப்பதாகக் கூக்குரலிடுகிறது கு.கு ஏடு.

இக் கு.கு ஏடு குர்ஆனை குற்றமில்லாது தெரிந்திருந்தால் நாம் அதிலிருந்து காட்டிய அத்தனை ஆதாரங்களுக்கும் மறுப்புரை தரவேண்டும்.

மாறாக,

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டிருக்கிறான். ஜின் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறும் குரான் வாக்கியத்தை எடுத்துக் காட்டி மனிதும் ஜின்னும் இரு வெவ்வேறு படைப்பினமே என்று வாதிக்கிறது,

மனிதன் அவசரத்தால் படைக்கப்பட்டிருக்கின்றான். (21:38)

உங்களைப் பலகீனத்தைக் கொண்டு படைத்தவன் இறைவனேயாகும்.(30:56)

இப்படியும் திருகுரானில் காணப்படுகிறது. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான். ஜின் நெருப்பால் படைக்கப்பட்டான் அதனால் அவை இரண்டும் வெவ்வேறு படைப்பினங்கள் என்றால் அவசரத்தால் படைக்கப்பட்ட மனிதனும், பலகீனத்தால் படைக்கப்பட்ட மனிதனும் வெவ்வேறு படைப்பினமாகக் காணப்படவேண்டுமே.

மனிதன் புழுதியினாலும், தண்ணீராலும், இரத்தக்கட்டியினாலும், தசைப் பிண்டத்தினாலும் படைக்கப்பட்டிருக்கிறான் என்றும் குர்ஆன் கூறுகிறதே! அவைகளுக்கும் கு. குரல் கூறும் பதில் என்ன?

நெருப்பைப் போன்ற குணங்களான கோபம், கீழ்ப்படியாமை, கர்வம் ஆகிய குணங்கள் ஜின் என்று குறிப்பிடப்பட்ட மனிதர்களிடத்தில் அமைந்துள்ளன. என்று கூறுவதற்கே ஜின் நெருப்பினால் படைக்கப்பட்டான் என்று குரான் கூறுகிறது.

ஜின் என்ற சொல்லிற்கு பொதுப்பார்வையிலிருந்து மறைவானது என்ற பொருளை தந்திருந்தோம். அது கீழ்க்கண்ட அரபிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டது.

ஜனன அலைஹில் லைலு (6:77) - இரவு அவன் மேல் மறைப்பைப் போட்டது.

அஜன்ன - மறைத்தல்


  • ஜூன்னதுன் - மறைப்பு, தடை, கேடயம்
  • ஜனின் - வயிற்றிலிருக்கும் குழந்தை (மறைவிலிருக்கிறது)
  • ஜின்னுன்னாஷி - மனிதர்களில் பெரியவன்
  • அஜன்ன - மறைத்தல்


இவைகளிலிருந்து ஜின் என்ற சொல் பொதுப்பார்வையில் இருந்து மறைந்து வாழும் மனிதர்களைக் குறிக்கும் என்பது புலனாகிறது.

திருக்குரானிலுள்ள 'ஜின்' என்ற அத்தியாயம் ஜின்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து ஈமான் கொண்ட வரலாற்றை கூறுவதாக கு.குரல் சாற்றுகின்றது. மறுப்புரையாளர், அவர் குறிப்பிடும் அத்தியாயத்தையே சரியாகப் படிக்கவில்லை போலும்.

ஜின்கள் கூறுவதாகவே கீழ்வரும் வாக்கியங்கள் அவ்வத்தியாயத்தில் காணப்படுகின்றன.

'மேலும் நிச்சயமாக பாமரர்களிலிருந்து சில மனிதர்கள் ஜின்களை சார்ந்த சில மனிதர்களுக்கு பாதுகாப்புத்தேடும் வழக்கமுடையவர்கள் அதன் மூலம் அவர்களின் (ஜின்களின்) கர்வத்தை அதிகப்படுத்தினார்கள்.' (72:8)

ஜின்களையும் மனிதர்களையும் இணைத்துக் கூறும் இந்த வாக்கியங்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கலென்று பறைசாற்றுகிறது. மேலும் இந்தத் திருமறை வசனத்தில் காணப்படும் 'ரிஜாலுன்' என்ற பதம் மனிதர்களைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

மேற்குறிப்பிட்ட திருமறைவாக்கியத்திற்கு அடுத்துவரும் வாக்கியம் இவ்வாறு அமைந்துள்ளது.

மேலும் நீங்கள் நினைப்பதுபோல் இறைவன் யாரையும் (தூதராக) எழுப்ப மாட்டான் என்றே அவர்களும் (ஜின்களும்) எண்ணினார்கள். (72:7)

இதிலிருந்து ஜின்கள் மனிதர்களே என்பது சந்தேகத்திற்கிடமின்றி புலனாகிறது.

கு.குரல் குறிப்பிடும் 'ஈமான் கொண்ட ஜின்களைப் பற்றி 'அஹ்சாப்' என்ற அத்தியாயத்தில் கீழ்வருமாறு காணப்படுகிறது.

'திருக்குரானை வாசித்துக் கேட்க விரும்பிய ஜின்களின் ஒரு கூட்டத்தினரை உங்கள் பக்கம் நாம் திருப்பியதை (நினைவு கூறுவீராக) அவர்கள் அங்கு ஆஜரானபோது அவர்கள் (ஒருவருக்கொருவர்) 'அமைதியாக இருங்கள்' (கேளுங்கள்)' என்று கூறினார்கள். அது முடிந்ததும் எச்சரிப்பவர்களாக அவர்கள் அவர்களின் மக்களிடம் திரும்பிப் போனார்கள்:

"ஓ எங்களின் மக்களே மூஸாவிற்குப் பிறகு அனுப்பப்பட்ட ஒரு கிரந்தத்தை முன்னுள்ளவற்றை நிறைவேற்றும் (ஒரு கிரந்தத்தை) நாம் செவியுற்றோம். அது உண்மைக்கும் நேர்வழிக்கும் வழிகாட்டுகிறது. என்று கூறினார்கள்.(46:30-31)

இந்த வாக்கியங்கள் கு. குரலுக்கு ஆதாரமாக அமையவில்லை. 'நாசிபைன்' என்னுமிடத்திலிருந்து சில யூத தலைவர்கள் மக்காவாசிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி இரவோடு இரவாக நபி(ஸல்) அவர்களை ச்நதித்து குரானை ஓதக்கேட்டு நம்பிக்கைக் கொண்டதையும் பின்னர் அவர்களின் இடத்திக்கு திரும்பி தமது மக்களுக்கு நடந்ததை எடுத்துக் கூரியதையுமே மேற்கூறப்பட்ட திருமறை வசனங்களும் 'ஜின்' என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வாக்கியங்களும் அறிவுறுத்துகின்றன.(ஆதாரம் பத்ஹுள் பயான் வால்யும் 8 பக்கம் 355 )

மேலெழுந்தவாரியாக குரானைப் பார்த்துவிட்டு அதனை ஆராய்ந்து பார்க்காமல், தான் என்ற அகம்பாவத்தால் பிறரை ஏளனம் செய்வது இந்த முல்லாக்களுக்கு கைவந்த கலைபோலும், அதுமட்டுமல்லாமல் இவர்கள் 'அரபி மதரஸாக்களில்' கதைக்கு உதவாத அரபிக் கல்வியையே பெற்றிருக்கின்றனர் என்பதை அவர்கள் தரும் விளக்கங்கள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

திருக்குரானின் (6:128) ஆம் வசனத்திற்கு நாம் கொடுத்திருந்த கருத்தை கீழ்வருமாறு விமர்சனம் செய்கிறது, கு.குரல்

'குரான் ஷரீபில் (6:128) ஆம் வசனத்தில் 'இஸ்தக்தாதும்' என்று வருகின்றது, சாதரணமாக அரபியில் அஜ்நாஸ் ஓதும் ஆரம்பமாணவர்கள் இதற்க்கு அதிகப்படுத்தினீர்கள் என்று கூறிவிடுவான். அதாவது 'கதுர' அதிகமானான். இஸ்தக்தர அதிகமாக்கிவிட்டான். அதாவது முந்தியது லாஜிம் எனும் தன்வினைச் சொல் பிந்தியது பிறர்பால் கடக்கும் முதஅத்தி எனப்படும் செயற்பால் இந்த இஸ்தக்தர என்னும் அரபிச் சொல் மின் என்பதுடன் சேர்ந்துவரும்போது அரபி அகராதிப்படி அதற்க்கு தனது செயலை பின்னால் வரும் அந்தப் பொருளில் அதிகமாக்கினான். என்பதுதான் பொருள்'

இப்படியெல்லாம் கூறி அரபிமொழி அறியாத பாமரர்களை எமாற்றலாமே தவிர அரபி மொழி தெரிந்தவர்களை ஒருக்காலும் ஏமாற்ற முடியாது.

'லாஜிம்' என்னும் தன்வினைச் சொல் 'முத அத்தியாக' மாற்றுவதற்கு இஸ்திக்பால் எனும் வழியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது கு.குரலின் புதுக் கண்டுபிடிப்பு! ஆனால் அரபிமொழி இலக்கணத்திற்கு அது அப்பாற்ப்பட்டது.

அதாவது ஒரு வினைச்சொல்லை இஸ்திப்ஆலாக மாற்றினால் அதுவே உதவிதேடும் பொருளாக மாறிவிடும். இதை 'பாகவி' படித்திராதது வியப்பாகவுள்ளது. அவர் அறிந்துகொள்வதர்க்காக சில உதாரணங்களை கீழே தருகிறோம்.

நஸர - உதவி செய்தான்: இஸ்தன்ஸற - உதவி தேடினான். ஸகா - தண்ணீர் கொடுத்தான். இஸ்தஸ்கா - தண்ணீர் கேட்டான். கபர - மன்னித்தான். இஸ்தக்பர - பிழை பொறுக்கக் கேட்டான்.

இதைப்போல் 'கதுர' என்றால் அதிகமானான், இஸ்தக்தர - அதிகமானோரை தேடிக்கொண்டீர்கள் என்பதே பொருள்

. "இஸ்தக்தர" என்னும் அரபிச் சொல் 'மின்' என்னும் சொல்லுடன் இணைந்து வரும்போது அதற்க்கு தனது செயலை பின்னால் வரும் பொருளில் அதிகமாக்கினான் என்று அர்த்தமாம். கு. குரலின் ஆதாரமற்ற தவறான கூற்று இது!

'வ லவ் குந்து அஹ்லமுள் கைப லஸ் தக்தர்து மினால் கைரி'

"மறைவானவற்றின் மீது எனக்கு அறிவிருந்தால் அதிகமான நன்மைகளை எனக்காகத் தேடிக்கொண்டிருப்பேன். (7:189)

இக் குரான் வாக்கியத்திலும் இஸ்தக்தர என்னும் சொல் காணப்படுகிறது. அதுவும் மின் என்பதுடன் இணைந்து காணப்படுகிறது. கு. குரல் கொடுக்கும் பொருளை இவ்வாக்கியத்தில் காணப்படும் 'இஸ்தக்தர' என்ற சொல்லிற்கு நிச்சயமாகத் தரமுடியாது என்பது தெளிவு.

திருக்குரானில் (6:128) ஆம் வசனத்திற்கு கு. குரல் தரும் பொருள்கூட, ஜின்களை சில மனிதர்கள் வசப்படுத்துகிறார்கள் என்ற அதன் கூற்றுக்கு ஆதரவாக இல்லை. எவ்வாறெனில் 'மனிதர்களில் உங்களது ( தீச் செயல்களை) அதிகமாக்கிவிட்டீர்கள். என்று மேற்படி (9:128) ஆம் வசனத்திற்கு கு.குரல் கூறும் அர்த்தம். மனிதர்கள் மீது ஜின்களுக்குள்ள ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறதே தவிர ஜின்கள் மீது மனிதர்களுக்குள்ள சக்தியை அறிவுறுத்தவில்லை.

கு. குரலின் விளக்கம் அதன் கருத்துகளுக்கே ஆதரவாக இல்லை.

ஜின்கள் ஈமான் கொண்டன என்று கூறுகிறது கு.குரல். ஈமான் கொண்டால் மட்டும் போதுமா? குர்ஆன் கூறும் நற்செயல்களை 'அவை செய்திடவேன்டாமா?' குர்ஆன் 'ருக்வு' செய்யுங்கள், பின் ஸுஜூது செய்யுங்கள் என்று கூறுகிறது. உண்ணுங்கள், குடியுங்கள் என்றும் அது உரைக்கிறது. இன்னும் மனிதனால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய பல கட்டளைகளை திருக்குர்ஆன் கூறுகிறது. உருவமற்றதாக கு.குரலால் கருதப்படும் ஜின்களால் இக் கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்ற இயலும்? கு. குரல் கூறுமா பதில்!

நபி(ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கே நபியாகத் தோன்றினார்கள். அவ்வாறிருக்க ஜின்கள் வேறு ஒரு படைப்பினமாக இருந்தால் 'அவை' நபிபெருமானார் மூலமாக 'ஈமான்' கொள்ளவேண்டிய அவசியமென்ன? அந்நிகழ்ச்சியை திருக்குரானில் இரு அத்தியாயங்களில் விவரிக்கப்படவேண்டிய அவசியமென்ன? கு. குரல் குருமா பதில்.

நபி(ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கு ஓர் முன்மாதிரி எனவும் அதனால் அவர்களின் நடைமுறைகளையும், சுன்னத்துகளையும் பின்பற்றவேண்டும் என்று கற்பிக்கப்படுகின்றோம். மனித தன்மைக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் ஜின்களால் எவ்வாறு நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள இயலும் கு.குரல் கூறுமா பதில்?

"மனிதனையா தனது தூதராக இறைவன் அனுப்பினான்?" என்ற கேள்விக்குப் பதில் பூமியில் மலக்குகள் வாழ்ந்திருந்தால் ஒரு மலக்கையே தொஊதராக அனுப்பியிருப்போம். என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். (17:93)

இவ்வ்வாறு கூறம் இறைவன் ஜின் என்று கூறப்பட்டது மனிதனல்லாமல் வேறு ஒரு படைப்பினமாக இருக்குமானால் அவைகளுக்காக ஒரு ஜின்னை நபியாக அனுப்பியிருக்கமாட்டானா? நபிபெருமானரையே "அவை" களுக்கும் நபியாக ஏன் அனுப்பினான்?

கூறு பதில் கூறு பதில் என்று எங்களைப் பார்த்து கூறும் கு.குரல் ஏடு இக்கேள்விகளுக்கு கூறுமா பதில்?

Read more »