கடந்த 1997 டிசம்பர் மாதத்தில் சென்னையில் பிரிவுப் பெயர்கள் கூடுமா?கூடாத? என்ற தலைப்பில் ஒரு விவாதக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தற்போது தங்களுக்குள் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை தங்களுக்குள் மாறி மாறி அள்ளி வீசிக்கொண்டு சத்திய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எத்திவைக்கப்பாடுபடுவதாக வரிந்துகட்டிக்கொண்டு பேசியும், எழுதியும் வரக்கூடிய இருபெரும் தௌஹீது(?) அறிஞர்களும், பல அறிஞர்களும் (ஆலிம்களும்) தௌஹீது(?) வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த விவாதத்தில் தாங்கள்தான் தௌஹீதை உண்மையிலேயே குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று பிரகடனப்படுத்தும், பல குட்டிப்பிரிவுகளில் ஒரு பிரிவினரை வழிநடத்தும் முன்னால் அந்நஜாத், அல்-ஜன்னத் பத்திரிகையின் ஆசிரியரும் உணர்வு பத்திரிகையின் ஆசிரியரும், மௌலவி p.j. என்று அறியப்படும் பி.ஜைனுலாப்தீன் உலவி அவர்கள் ஒரு ஹதீஸை எடுத்து வைக்கிறார். அந்த ஹதீஸை மற்றொரு பிரிவினரை வழி நடத்தும் சத்திய இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி எடுத்துரைப்பதாக வாதிடக் கூடிய அந்நஜாத் என்ற பத்திரிகையின் முன்னால் நிர்வாகியும் இன்றைய ஆசிரியருமாகிய அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த சபையில் உள்ள அனைவரும் அதற்கு சாட்சியாக இருந்துள்ளார்கள் அந்த பி.ஜே. கூறியது போன்றே அப்படியே கீழே தருகிறோம்.
م أما بعد: روى الإمام أحمد عن حذيفة بن اليمان -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيّاً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ" ثم سكت.
நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்றார். பஷீர் பின் சஃது என்பவரிடம் நான் கேட்டேன், உமராக்களைப் பற்றி எதாவது ஒரு ஹதீஸை நீர் மனனம் செய்து வைத்திருக்கின்றீரா? என்று, அந்த இடத்தில் (நேரத்தில்) ஹுதைஃபா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர் வழிய வந்து சொன்னார்கள். அன அஹ்ஃபலு ஹுத்பதஹு நான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனனம் செய்து வைத்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். சொல்லிவிட்டு கூறினார்கள், தகூனு நுபுவ்வத்ஃபீகும் - உங்களிடத்தில் நுபுவாத் நிலைத்து நிற்கும், மாஷா அல்லாஹு அன் தகூன - எவ்வளவு நாளைக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அவ்வளவு நாட்களுக்கு நான் இருப்பேன் என்று கூறுகிறார்கள். ஃதும்ம யர்ஃபஉஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா அதை எடுக்க நினைக்கும் போது அதை அல்லாஹ் எடுத்துக் கொள்வான். (நபி (ஸல்) அவர்களின் மரணம் பற்றி கூறப்படுகிறது) ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - நுபுவ்வத்தின் அடிச்சுவட்டில் கிலாபத் நடக்கும். ஃபதகூனு மாஷா அல்லாஹு அன் தகூன - கிலாஃபத் எவ்வளவு நாட்களுக்கு என்று அல்லாஹ் நினைக்கின்றானோ அதுவரை இருக்கும் ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய்யர் ஃபஅஹா - அல்லாஹ் எடுக்க நினைக்கும் போது அதையும் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் அழ்ழன் - பிறகு கொடூரமான ஆட்சி ஏற்படும் பயகூனு மாஷா அல்லாஹு அன்ய்யகூன - அது எவ்வளவு நாங்கள் இருக்க வேண்டுமோ அது வரை இருக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - பிறகு எடுக்க நினைக்கும் போது அதையும் அல்லாஹ் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் ஜப்ரிய்யதன் - பிறகு இன்னும் அடக்குமுறை செய்யக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படும், தகூனு மாஷா அல்லாஹு அன் தகூன -அல்லாஹ் எவ்வளவு நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று நினைக்கிறானோ அது கொஞ்சம் நாட்களுக்கு நீடிக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - எப்போது அதையும் எடுக்கவேண்டும் என்று நாடுகிறானோ அப்போது அதையும் எடுத்துவிடுவான். ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத் ஏற்படும். என்றும் கூறுகிறார்கள்.
ஆதாரம் பி.ஜே ( vs ) அபூ அப்தில்லாஹ் 1997 டிசம்பர் 17 to 20 தேதிகளில் நடைபெற்ற விவாத கேசட்
இங்கு இறுதியில் கூறப்படும் வாசகத்தை கவனிக்க வேண்டும் 'பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத்' ஏற்படும் என்று தெளிவாக கூறப்படுகிறது.
(மேற்கண்ட ஹதீஸ் மிஷ்காத் என்னும் ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது)
சுமார் 100 வருடங்களுக்கு மேலாக உலக மக்கள் மத்தியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களின் ஷரியத்தைப் பின் பற்றி அவர்களின் உம்மத்தில் நபி வர முடியும் என்பதற்கான பல சான்றுகளை திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எடுத்து வைத்துவருகிறது. மூடத்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் எவ்வித சரியான ஆதாரமுமில்லாமலும் வேண்டுமென்றே மறுத்து வந்து கொண்டிருந்த ஆலிம்கள் தற்போது தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்குள் கருத்துவேறுபாடு வந்ததன் காரணமாக ஏற்பட்ட விவாத அரங்கில் நபி வர முடியும் என்பதற்கு அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் எடுத்து வைக்கும் அதே ஹதீஸை ஒப்புக் கொண்டு விட்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)
உண்மையை நாடும் சகோதரர்கள் குறிப்பாக தௌஹீது சகோதரர்கள் இதை ஒப்புக் கொண்டு தங்களின் பிடிவாதத்தை விட்டு விலகி உண்மையை ஏற்க முன்வருவார்களா? எது எப்படியாயினும் இந்த காலத்தின் இமாமாக மஹ்தி(அலை) அவர்கள் ஒரு முன்னறிவிப்பு செய்துள்ளதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் அவர்கள் கூறுகிறார்கள்.
"உண்மை நிச்சயமாக சிறிது சிறிதாக வெளிவந்தே தீரும் பொய் ஓடி ஒளிந்து கொள்ளும் இதை வரக்கூடிய காலம் கண்டு உணரும்"
இந்த முன்னறிவிப்பு அழகிய முறையில் நிறைவேறி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் உண்மை ஒளி வீசிக்கொண்டிருப்பதை நல் உள்ளம் கொண்ட உண்மையை நாடுபவர்கள் அறிந்து இந்த ஜமாத்தில் இணைந்துகொண்டிருக்கிரார்கள். கடின உள்ளம், வெறுப்பு, துவேஷம்,கர்வம், அகம்பாவம் மற்றும் இறைவனால் உள்ளத்தில் முத்திரை குத்தப்பட்டவர்களும் இதனை மறுப்பதில் எவ்வித ஆச்சர்யத்திற்கும் இடமில்லை. அல்லாஹ் நேர்வழியை, சத்தியத்தை நாடுபவர்களுக்கு வழங்கியருள்வானாக, ஆமீன்.
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.