அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Sep 30, 2011

முஜாஹிதா முனாபிக்கா?

அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் அஹ்மதிகள் மீது கூறப்படுவது புதிதானதன்று.எனினும் அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கெதிராக கூறப்படும் நச்சுக் கருத்துக்களை மறுப்பதும் மக்களுக்குத் தப்பெண்ணம் ஏற்பட்டுவிடாது தடுப்பதும் எங்கள் கடமையாகும். அலட்டலுக்கும் வெறும் ஆவேசப் பேச்சுகளுக்கும் பேர் போன முன்னால் அரசியல்வாதி ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் ஏடு நம்மைப் பற்றி புதிதாக ஒரு புரளியை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அஹ்மதி இளைஞர்கள் துணை...
Read more »

ஆதம் நபி முதல் மனிதரா?

ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களே உலகில் தோன்றிய முதல் மனிதர் என முஸ்லிம்களில் பெரும்பாலாரும் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். ஆதம் நபி முதல் மனிதெரென்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறதோ இல்லையோ திருக்குரானிலோ நபிமொழிகளிலோ அவ்வாறு கூறப்படவே இல்லை. எனவே ஆதம் நபி முதல் மனிதர் என்ற தவறான நம்பிக்கை, ஈஸா(அலை) அவர்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் போன்று கிறிஸ்தவர்களிடம் இருந்து இந்த முஸ்லிம்களுக்குத் தொற்றியிருக்க வேண்டும். திருக்குரானில் 2:31 ஆம் வசனத்தில் ஹஸ்ரத்...
Read more »

ஆதம் நபி சொர்க்கத்தில் வாழ்ந்தார்களா?

அந்-நஜாத் ஆசிரியர் கூறுகிறார் ஆதம் (அலை) அவர்கள் சொர்கத்திளிருந்துதான் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்று குரான் (2:35, 7:20,22, 20:121)ஆகிய ஐந்து இடங்களிலும் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகளிலும் தெளிவாகக் குறிப்ப்பிடப்பட்டிருக்கிறது".இதற்க்கு விளக்கம் எழுதுவதற்கு முன் ஆசிரியர் எடுத்துக்காட்டிய ஐந்து திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்ப்போம். இந்த ஐந்து வசனங்கள், ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களையும் அவரது மனைவியையும் ஒரு தோட்டத்தில் வாழச்செய்து, அங்கு ஒரு குறிப்பிட்ட...
Read more »

இறைவனின் வல்லமையை நம்பாதவர்களா அஹ்மதிகள்?

ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்று திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஆதாரங்களைக் காட்டி நிரூபித்துவரும் அஹ்மதி முஸ்லிம்களின் வாதத்தை மறுக்க முடியாத சில மௌலவிகள் தற்போது குரான், நபிமொழியை ஒருபுறம் வைத்துவிட்டு ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை உடலுடன், உயிருடன் வானத்திற்கு உயர்த்துவதற்கு இறைவனுக்கு வல்லமை இருக்கிறது: அஹ்மதிகள் இறைவனின் வல்லமையை மறுக்கின்றனர்: அவர்களுடன் பேசாதீர்கள் என்று கூற ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்ல ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இரண்டாயிரம்...
Read more »

'லா நபிய்ய பஃதீ' - ஓர் ஆய்வு

நான் சொன்னதாக ஓர் அறிவிப்பு (உங்களுக்கு)க் கிடைத்தால் அதைக்குரானுடன் ஒத்துப் பாருங்கள். குரானுக்கு இணக்கமாக அது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் (நான் சொன்னதாக இருக்காது என்று) அதைத் தள்ளி விடுங்கள்' (1.பைஹகீ, 2.தாருல் குத்னீ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு, 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸைக் குர் ஆனுடன் ஒத்துப் பார்க்க வேண்டும்.அல்லாஹ் திருக்குரானில் பல வசனங்களில் நபிமார்கள் வரலாம் என்று கூறியிருக்கும்...
Read more »

ஈசா(அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்.

திருக்குர்ஆன் ஹதீஸ் ஆதாரமின்றி மார்க்க விஷயத்தில் மனித அபிப்ராயம் எதையும் நம்ப மாட்டோம் என கொட்டி முழக்கி வருபவர்கள் நஜாத் குழுவினர்.ஆனால் ஈசா நபி உயிருடன் இன்று வரை வாழ்ந்த கொண்டிருக்கிறார்கள் என்று ஏனைய மூட முல்லாக்கள் நம்புவது போன்றே இவர்களும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு திருக்குரானிலும் ஆதாரமில்லை. ஹதீஸிலும் ஆதாரமில்லை. இது முழுக்க முழுக்க மனித அபிப்ராயமே!திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி மார்க்க விஷயத்தில் எதையும் ஏற்றதில்லை, ஏற்க்கவும்...
Read more »

Sep 17, 2011

அந்-நஜாத்தும் புரோகிதமே !

மவ்லவி O.M. முஸ்ஸம்மில் அஹ்மத் H.A ஹஸ்ரத் ஈஸா (அலை) 2000 ஆண்டுகளாக பௌதீக உடலுடன் வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள். அதே ஈஸா நபியே மீண்டும் இந்த உலகிற்கு இறங்கிவருவார் என்ற புரோகிதக் கொள்கையை திருக்குர்ஆன்,ஹதீஸ்களிலிருந்து நிரூபிக்க முடியுமா? என்று மௌலவிP.M. முஹம்மது அலி H.A அவர்கள் கேட்டிருந்த கேள்விக்கு அந்நஜாத் மே2011 இதழில் கொடுத்த பதிலை திருக்குர்ஆன் ஹதீஸ்களின் ஒளியில் அலசி ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம். வழிகேடு என திருக்குர்ஆன்...
Read more »

Sep 16, 2011

சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் கூற்றுக்கு பதில் (அஹ்லே குர்ஆன்)

சென்னை சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் நிர்வாகி அவர்களுக்கு நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் உறுப்பினர் முஹம்மது அலி எழுதிய கடிதம் அஸ்ஸலாமு அலைக்கும்,வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு.நான் 2010 ஏப்ரல் மாத இறுதியில் சென்னைக்கு வந்திருந்தேன். அது சமயம் எண்கள் அஹ்மதி சகோதரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சில தினங்களுக்கு முன் தாங்கள் எண்கள் ஜமாஅத் சகோதரர்களை கருத்து பரிமாற்றத்திற்கு அழைத்ததால் சில சகோதரர்களுடன் தங்களை சந்தித்து...
Read more »