மிர்ஸா குலாம் மதத்தைப் பின்பற்றும்
காதியானிகள் எதை இறைச் செய்தி என்று கூறுகின்றார்களோ அதை அனைத்து மக்களும்
சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள்
எழுப்பும் கேள்விக்கு இன்று வரை அந்த மதத்தினர் பதில் கூறவில்லை. அதைப்
பரப்பவுமில்லை. திருட்டுப் பொருளைப் பதிக்கி வைத்திருப்பதைப் போன்று தான் காதியானி
மதத்தவர்கள் மிர்ஸா குழாமின் உளறல்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் (9 வது
பதிப்பு பக்கம் 1264)
நம் பதில்:
1. உலக மகாப் பொய்யர் பி.ஜேயின் இந்த
உளறல், இவரது திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் 9 வது பதிப்பில் உள்ளது. இது மே 2010 இல்
வெளியானது.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
அவர்களின் நூல்கள் அனைத்தும், அதன் இணையதளம் www.alislam.org
இல் உள்ளது. இது 1995 இல் எமது இணைய தளத்தில் வெளிவந்துவிட்டது. கடந்த நூறு
ஆண்டுகளுக்கு முன்னால் வரை திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகளும் நபிமொழிகளின் தமிழ்
மொழிபெயர்ப்புகளும் இருந்ததில்லை. எனவே இறை வேதம் திருக்குரானையும், நபி (ஸல்)
அவர்களின் கூற்றையும் 1300 வருடங்களாக திருடர்களைப் போல் பதுக்கி வைத்ததாக ஆகுமா?
அல்லது அவை பி.ஜே கூறுவது போல் உளறல்கள் ஆகுமா? (நவூதுபில்லாஹ்)
2) அனைத்து மக்களும் சென்றடையும் வகையில்
பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள் எழுப்பும் கேள்விக்குப் பதில்
இல்லை என்று பி.ஜே எழுதியுள்ளார்.
பொதுவாக தமிழ் நாட்டிலும், குறிப்பாக மேலப்பாளையத்திலும்
TNTJ சம்பந்தமாக பல பிரசுரங்களை, பல சுவரொட்டிகளை, 50 க்கும் மேற்பட்ட டிஜிட்டல்
போர்டுகளின் மூலமும் எங்கள் கருத்துக்களை வெளியிட்டோம். பல பொதுக் கூட்டங்களில்
மூலமும் எங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளோம்.
அதற்கு TNTJ யின் நிலைப்பாடு என்னவென்றால்,
அவற்றைப் படிக்காதீர்கள், அவர்களின் கூட்டங்களுக்கு செல்லாதீர்கள். அது பற்றி
எங்களிடம் எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று கண்ணைக் கட்டி, காதை அடைத்து, வாயையும்
மூடவைத்துள்ளார்கள் .
மேலப்பாளையும் தவ்ஹீது ஜமாத்தினர் ஈஸா
(அலை) அவர்கள் மரணம், நபிக்குப் பிறகு நபி வரமுடியமா? ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது
(அலை) அவர்களின் உண்மைத்துவம் இந்த மூன்று தலைப்புகளைப் பற்றி கருத்தரங்கம் ஒன்று
நடத்தினார்கள். இதற்கு மேலப்பாளையம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சார்பாக 11.05.2002,
12.05.2002 ஆகிய நாட்களில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் எழுதியா
நூல்கள் அனைத்தையும் பஜார் திடலில் மேடையில் வைத்து மேலப்பாளையம் தவ்ஹீது ஜாக்கிற்கும்
பிற அமைப்பிற்கும் அழைப்பு விடுத்தோம். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
அவர்களின் நூல்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், விளக்கம் தேவைப்பாட்டால் எங்களிடம்
மூல நூல்கள் உள்ளன. நேரில் வந்து சந்தேகங்களைக் கேட்டு விளக்கத்தைப் பெறலாம். முவருவோர்
யாரும் உண்டா என்று அழைப்பு விடுத்தோம். தௌஹீது ஜமாத்தினர் யாரும் முன்வரவில்லை.
காதியானிகள் நூல்களை திருடர்கள் போல் பதுக்கி வைத்து பிறருக்கு காட்டுவதில்லை
என்று கூறுகின்ற இவருக்கும் இவரது கூட்டத்தாருக்கும் இது தெரியாமல் போனதுதான்
பெரும் வியப்பு.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகளை
அஹ்லே குரான்வாதிகள் உளறல்கள் என்று கூறுகின்றனர். இந்த அஹ்லே குரான் வாதிகளைப்
போல் பி.ஜே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூல்களை உளறல்கள்
என்கிறார்.
அல்லாஹ்வின் வசனங்களை அக்கால காபிர்கள்
கட்டுக் கதைகள் என்று கூறியாதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (8:32, 16:25, 27:69)
இதிலிருந்து இறைச் செய்திகளையும், நபியின் கூற்றுகளையும் உளறல்கள் என்று கூறுவது
அதன் உண்மைக்கு ஒரு அடையாளம் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.