திருக்குரானில் 69வது அத்தியாயம் 43 முதல் 47 வரையுள்ள வசனங்களுக்கு மௌதூதி சாஹிப் அவர்கள் செய்துள்ள தர்ஜுமாவும் அதற்க்கு அவர் வழங்கியுள்ள வியாக்யானத்தையும் கீழே தருகிறோம். இதை இஸ்லாமிக் பௌண்டேஷன் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் மூலமும்-தமிழாக்கமும் விளக்கவுரையில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 576-ல் காணலாம்
"மேலும் இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனும் ஒரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்து சொல்லிருந்தால், நாம் அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம். பிறகு அவருடைய்ய பிடரி நரம்பை துண்டித்திருபோம். பிறகு உங்களில் எவரும் இப்படி செய்வதிலிருந்து (நம்மை) தடுப்பவராய் இருக்க முடியாது. "
விளக்கம்: இங்கு அசல் நோக்கம் பின் வரும் கருத்தை எடுத்துரைப்பதேயாகும். "இறைத்துதருக்கு தன் தரப்பிலிருந்து வஹியில் எந்த வித கூடுதலும், குறைவும் செய்திட அதிகாரமில்லை. அவர் அப்படி செய்தால் நாம் அவருக்கு கடும் தண்டனை அளிப்போம்."ஆனால் இந்தக்கருத்து எத்தகைய பாணியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றால் ஓர் அரசனால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரி அந்த அரசனின் பெயரால் ஒரு மோசடி செய்துவிடும் பொது அரசன் அவ்வதிகாரியைப்பிடித்து அவரது தலையை கொய்துஎரியும் சித்திரம் நம் கண் முன் தீட்டப்படுகிறது. ஆனால் சிலர் இந்த வசனத்திலிருந்து ஒருவன் தன்னை நபி என்று வாதாடி அவனது இதய நரம்பு அல்லது கழுத்து நரம்பு அல்லாஹ்வினால் உடனே துண்டிக்கப்படாவிட்டால் அவர் ஒரு இறைத்தூதர் என்பதற்கு ஆதாரமே இது! என்று தவறான வாதம் புரிகின்றார்கள். ஆனால் இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்து. உண்மையான தூதரைப்பற்றியதேயாகும். நபித்துவம் பெற்றிருப்பதாக பொய்யாக வாதிடுவோர் தமக்கு நபித்துவம் இருப்பதாக, தமக்கு இறைத்தன்மையே இருப்பதாக வாதிடுகின்றார்கள். இவ்வாறு வாதிட்டவண்ணம் பூமியின் மீது பல காலம் வரை நெஞ்சு நிமிர்த்தி இறுமாப்புடன் திரிகின்றார்கள். இது ஒன்றும் அவர்களுடையா வாய்மைக்கான ஆதாரம் அல்ல!- இவ்வாறு மொழியாக்கமும், விளக்கமும் தரப்பட்டுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ உண்மைக்கு ஆதாரமாக, அல்லாஹ் திருக்குர்ஆன் மூலமாக நம்முன் எடுத்துவைக்கும் மேலேகண்ட ஆதாரங்களின் அடிப்படையில் எல்லா இறைத்துதர்களின் உண்மையையும் பரிசோதித்து அறிய நம்மால் முடியும். பொய்யாக வாதிப்பவர்களை அல்லாஹ் விட்டு வைக்காமல் அழித்தொழிப்பதொடு மட்டுமல்லாது அவர்களின் முயற்சிகளுக்கு வெற்றியும் வழங்காமல் தோல்விக்கு மேல் தோல்வி அளித்து வரும் தெளிவான இறைச்சட்டம் நம்முன் சாட்சிகளாக உள்ளன. இவை பொய் வாதிகளை நாம் பிரித்தரிவதர்க்காக அல்லாஹ் காட்டும் அடையாளங்களாகும். இப்னு ஜரீர்(ரஹீ), இப்னு கசீர் (ரஹீ), சம்கஷரி (ரஹீ, சுயூத்தி(ரஹீ) போன்ற இமாம்களும். அல்லாமா சித்திக் ஹசன்கான் போன்ற மார்க்க மேதைகளும் கூட மேற்கண்ட 69: 43-47 இறைவசனத்திற்கு இவ்வாறே விளக்கமளித்துள்ளனர். உண்மைவாதிகளையும், போய்வாதிகளையும் பிரித்தரிவதர்க்காகவே அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி கூறக்கூடிய பொய்வாதியை அழிப்பதென்பது இறைவனின் கடமையாகும் என இமாம் (ரஹீ) அவர்கள் தப்சீர் கபீர், பாகம் 8 பக்கம் 291 ல் கூறுகிறார்கள்.
ஹஸ்ரத் இமாம் இப்னுல் கையும் (ரஹீ) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்."பொய் தீர்க்கதரிசிகள் அநேகர் தோன்றியுள்ளார்கள். என்றாலும் அவர்களில் யாராவது வெற்றி அடைந்ததாகவோ அதிக நாட்கள் உயிரோடு இருந்ததாகவோ சான்று இல்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டார்கள் இது உலகம் தோன்றிய நாள் முதல் இறுதி வரை நடந்து வரும் அல்லாஹ்வின் சட்டமாகும்."(சாதுள் மவூத், பாகம் 1, பக்கம் 500 )
மௌலவி சனாவுல்லாஹ் சாஹிப் தமது தப்சீரில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
"அல்லாஹ் ஒருபோதும் கள்ள தீர்க்கதரிசிக்கு பொய்வாதிக்கு வெற்றியின் முகத்தை காட்டவில்லை என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து நமக்குத் தெளிவாக கூடிய விஷயமாகும். உலகின் பல்வேறு மாதங்கள் இருந்தாலும். ஒரு பொய்வாதியை பின்பற்றக்கூடிய கூட்டம்(உம்மத்) இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த எதிரிகளால் கூட முடியாதிருப்பதற்கு காரணம் இதிவேயாகும். முஸைலமா கத்தாபுடையா சான்றும், அஸ்வது அன்சியுடையா சான்றும் வரலாற்றிலிருந்து மறைந்து விடவில்லை. இருவரும் அவரவர் காலத்தில், நபி(ஸல்) அவர்களின் மாண்பையும் மேன்மையையும் அறிந்து அவர்களைப் போல் வாதம் செய்தவர்களாவார்கள். இறைவனின் பெயரால் இட்டுக்கட்டி பலவாறும் கூறினார்கள். ஆனால் இறுதியில் அல்லாஹ்வின் வல்லமையான பிடியில் சிக்கி நாசமானார்கள். அவ்விதம் நடக்கும் என்று யாருமே எதிபார்த்திருக்கவில்லை. அவர்கள் குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி அடைந்திருந்தார்கள். ஆனால் எதுவரை...?முகத்திமா தப்சீர் சனாய், பக்கம் 17, 1-ஆம் பதிப்பு.
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு (69:43-47) வியாக்கியானம் செய்தவர்களுக்கெல்லாம் நேர் மாற்றமாக மௌதூதி சாஹிப் இந்த வசனத்திற்கு ஒரு நூதன விளக்கம் அளிக்க முற்பட்டதன் நோக்கம், எப்படியாவது அஹ்மதியா இயக்கத்தின் தூய ஸ்தாபகரின் நுபுவத் வாதத்தின் உண்மையை வெளிக்கொணர விடாது தடுத்து விட வேண்டும் என்பதேயாகும். ஒரு அரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரி, அரசனின் பெயரால் ஏதாவது மோசடி அல்லது அயோக்கியத்தனம் செய்தால் அரசன் அவரை விசாரணை செய்து தண்டிப்பான் என்பதில் மௌதூதி சாஹிபுக்கு சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் ஒருவன் அந்த அரசனால் நியமிக்கப்படாமல், தான் அரசனிடம் இருந்து வந்துள்ள அரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரி என மக்கள் மத்தியில் பொய் கூறி மக்களை ஏமாற்றி கொண்டிருப்பானேயானால் அந்த அதிகாரியைப்பிடித்து தண்டிக்காமல் பூமியில் விட்டு வைத்து மேலும் மேலும் குழப்பங்களும் ஏமாற்றுதலும் நடைபெற அரசன் பார்த்து கொண்டிருப்பான் என்பதும் மௌதூதி சாஹிபின் வாதம் போலும், என்பதை மேற்கூறிய அந்த வசனத்திற்கு அவர் கொடுத்துள்ள விளக்கத்திலிருந்து நாம் புரிய முடிகிறது. மௌதூதி சாஹிபின் வாதப்படி பார்த்தால் இந்த மாதிரியான சட்டம் பூமியில் எங்குமே நடைமுறையில் இல்லாததாகவே உள்ளது. எந்த ஒரு அரசனுமே, தான் நியமிக்காத ஒருவன் தன்னை அதிகாரி என தன் பெயரைக் கூறிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் என்றால் அவனைப் பிடித்து கடுமையான தண்டனை வழங்குவான் என்பதே உலகில் உள்ள நடைமுறைச்சட்டம். இந்த உலகிலேயே இப்படிப்பட்ட சட்டம் உள்ளதென்றால் ஆன்மீக உலகிலும் இந்த மாதிரி நடத்திக்காட்டுவதர்க்காகவே இறைவன் இந்த 69:43-47 வசனத்தின் மூலம் சுட்டிக் காட்டுகிறான். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி கூறக்கூடிய ஒரு பொய்வாதி ஒருபோதும் தப்பித்துக் கொள்ள வழி கிடையாது என்பதும், பொய்வாதியையும். அவரது கூட்டத்தையும் அழித்து விடுவதே அல்லாஹ்வின் நடைமுறையிலுள்ள சட்டமாகும் என்ற உண்மையையும் திருக்குர்ஆன் முரண்பாடில்லாத விதத்தில் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.