அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 20, 2011

இமாம் மஹ்தி(அலை) அவர்கள் மக்களின் பணத்தை மோசடி செய்தார்களா? - கடையநல்லூர் அக்ஸாவிற்கு பதில்

அல்லாஹ் கூறுகின்றான்:


"மேலும் நிச்சயமாக உமக்கு முன்னரும் தூதர்கள் ஏளனத்திற்கு ஆளானார்கள். ஆனால் அவர்கள் எந்த ஆக்கினையைக் குறித்து ஏளனம் செய்தார்களோ அதே ஆக்கினை அவர்களை வந்தடைந்தது"


"உலகை சுற்றிப் பாருங்கள் நபிமார்களைப் பொய்யராக்கி கொண்டிருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் காணுங்கள்" என்று (நபியே நீர் அவைகளுக்குக்) கூறுவீராக!


இன்னுமொன்றையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அஹ்மதியா இயக்கம் இறைவனால் உருவாக்கப்பட்ட ஓர் ஆன்மீக இயக்கமாகும். இதனை எதிர்த்தவர்களெல்லாம் தோல்வியையே தழுவியிருந்தார்கள். ஆனால் அஹ்மதிய்யா இயக்கமோ எவ்வித தங்கு தடையுமின்றி வெற்றி நடை போட்டே வந்திருக்கின்றது இதனை அஹ்மதிய்யா இயக்கத்தை எதிர்திருந்தவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் 'அல்-முனீர்'எனும் ஏடு கூறுவதைப் பாருங்கள்.


"நம்முடைய மதிப்பிற்குரிய பல ஆலிம்கள் தமது எல்லா தகுதிகளுடன் 'காதியானியத்தை'எதிர்த்திருந்தார்கள். ஆனால் 'காதியானி ஜமாஅத்' முன்பை விட அதிக பலத்துடன் உலகெங்கும் பரவிக்கொண்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது. மிர்ஸா சாஹிபுக் கெதிராக பணியாற்றியவர்களின் ஸையித் நதீர் ஹுசைன் தெஹ்லவி, மௌலான அன்வர்ஷா தேவ்பந்தி, மௌலான முஹம்மத் ஹுசைன் பட்டாலவி, மௌலான சனாவுல்லாஹ் அமிர்தசரி போன்ற பெரியவர்களைப் பற்றி கூறுவதென்றால் அவர்கள் உளப்பூர்வமாக'காதியானியத்தை' எதிர்த்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். ஆனால் அத்துணை பலமான எதிர்ப்பிருந்தும் காதியானி ஜமாஅத் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதென்பது ஒரு கசப்பான உண்மையே ஆகும் (al muneer)


ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஆரம்ப நாட்களில் பராஹீனே அஹ்மதியாவின் நான்கு பாகங்கள் எழுதியிருந்தார்கள். பிறகு 1905 ஆம் ஆண்டு ஐந்தாவது பாகத்தை எழுதினார்கள். இந்த ஐந்து பாகங்களும் எந்த அளவுக்கு அதிக பக்கங்களை கொண்ட 5 நூல்களாக இருந்தனவென்றால் அவை 50 பாகங்களுக்கு சமமானவையாகவே இருந்தன. அதிலுள்ள தெளிவான ஆதாரங்கள் மறுக்க முடியாத சான்றுகளும் 50 பாகங்கள் எழுதவேண்டிய அவர்களது நோக்கத்தை நிறைவு செய்துவிட்டன. எனவே, இஸ்லாத்தின் உண்மைக்கும் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மைக்கும் இந்த நூலில் அன்னார் எழுதியுள்ள சான்றுகளை இன்று வரை மாற்று மதத்தை சார்ந்த எவராலும் மறுக்க முடியவில்லை.


இதற்குப் பிறகுதான் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் உண்மையை நிரூபித்து காட்டும் வகையில் மேலும் 80 நூல்களை எழுதியுள்ளார்கள். மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தின் உண்மையை நிரூபிக்கும் முகமாக போட்டிக்கு அழைத்தவாறு அவர்கள் எழுதிய சில நூல்களை (அவற்றின் பெயரை) இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.


1. ஆயினே கமாலாத்தே இஸ்லாம்

2. சுர்மா சஸ்மே ஆரியா

3. நூருல் குர் ஆன்

4. ஜங்கே முகத்தஸ்

5. சஸ்மயே மஸீஹ்

6. சிராஜுத்தீன் ஈஸாயி கே சார் சவாலோன் கே ஜவாப்

7. சத் பஜன்

இது போன்ற இன்னும் பிற நூல்களையும் சேர்த்துப் பார்ப்பதாயிருந்தால் அவற்றின் பக்கங்கள் பராஹீனே அஹ்மதியாவின் 50 பாகங்களிலுள்ள பக்கங்களை விட குறைவாகத்தான் இருக்கும்.

பராஹீனே அஹ்மதிய்யாவின் மற்ற பாகங்களை எழுதுவதை விட்டுவிட்டு மற்ற நூல்களைஎழுதுவதன் பக்கம் அவர்களது கவனம் திரும்பியது கூட இறைவனின் கட்டளையினாலேயாகும். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இது தொடர்பாக இவ்வாறு கூறுகின்றார்கள்.


ஆரம்பத்தில் இந்த நூலை (பராஹீனே அஹ்மதிய்யாவை) எழுதிய சமயத்தில் இதன் நிலை வேறானதாக இருந்தது இதற்குப் பிறகு இறைவனின் வல்லமையின் திடீர் வெளிப்பாடானது இந்த எளியவனுக்கு இதற்க்கு முன்னர் நான் அறியாத ஒரு உலகத்தை பற்றி தெரிவித்தது ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களை போன்றே இந்த எளியவன் எனது சுய எண்ணங்களின் இருள்களில் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் திரை மறைவிலிருந்து "இன்னி அன ரப்புக" (நான் உனது இறைவன்) என்ற குரல் வந்தது. இதுவரை எனது அறிவுக்கு எட்டாத பிற ஞானங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இப்போது இந்த நூலை எழுதுவதில் எனக்கு வழிகாட்டுபவனும் உதவி செய்பவனும் ரப்புல் ஆலமீனாக இருக்கின்றான். இதனை எந்த அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவன் நாடியுள்ளான் என்று தெரியாது. உண்மை என்னவென்றால் இதன் நான்கு பாகங்கள் வரை இஸ்லாத்தின் உண்மைக்கு ஆதரவாக நாம் எழுதியவை அனைத்துமே தெளிவை நிறைவடைய செய்ய போதுமானவையாகும். எதுவரை எல்லா சந்தேகங்களின் இருள்களும் அகலவில்லையோ அதுவரை இறைவனின் அருளும் கருணையும் நமக்கு துணையாக நின்று உதவி செய்யும் என்று நான் நம்புகின்றேன். ( Title page Barahin-E-Ahmadiyyaa பாகம் 4)


எனவே நிலைமைகள் மாறியதற்கு ஏற்ப்பவே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தமது வாக்குறுதியிலும் மாற்றம் செய்தார்கள்.


நபிமொழி

முஜாஹித் அவர்கள் அறிவிக்கிறார்கள் . யூதர்கள் குரைசியர்களிடம் இந்த நபியிடம் ரூஹ்,குகைவாசிகள் (அஸ்ஹாபுல் கஹ்ப்), துல்கர்னைன் தொடர்பாக கேளுங்கள் என்றனர். நபி(ஸல்) அவர்களிடம் இவை பற்றி கேட்டார்கள் அதற்க்கு "நாளை வாருங்கள், இந்தக் கேள்விகளுக்கு அப்போது நான் பதில் கூறுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதில் எந்த விதிவிலக்கையும் அவர்கள் கூறவில்லை. இதற்குப் பிறகு சில நாட்கள் வரை வஹி வராமல் இருந்தது. அவர்கள் எதுவும் கூறாமல் இருந்ததால் குரைசியர்கள் அவரை பொய்யர் என்று கூறினார்கள்.


  1. தப்சீர் கமாலைன், ஜலாலைன் அடிக்குறிப்பு பக்கம் 241
  2. முஜ்தபாயி


ஆக இறை நாட்டத்திற்கேற்ப வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதி கொடுத்தவர் தமது தப்பெண்ணம் காரணமாக அதை நிறைவேற்றாமல் இருந்தால்தான் இறைவனால் பிடிக்கப்பட தகுதியுடையவராகின்றார்.


ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

நாம் இரண்டு முறை பிரசுரம் மூலம் எவர் பராஹீனே அஹ்மதிய்யாவிற்காக அவர் தந்த தொகையை திரும்பப் பெற விரும்புகிறாரோ அவர் புத்தகத்தை தம்மிடம் ஒப்படைத்துவிட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். பலர் அவ்வாறு புத்தகத்தை திருப்பி அனுப்பி தொகையை பெற்றுக் கொண்டனர். பலரும் அந்த நூலை மிகவும் மோசமாக சேதப்படுத்தி அனுப்பிய பிறகும்கூட நாம் அவர் தந்த தொகையை அவருக்கு கொடுத்துவிட்டோம். (தப்லீகே ரிஸாலத் பாகம் 7 பக்கம் 87 அய்யாமே ஸுல்ஹ முதல் பதிப்பு பக்கம் 173)

Read more »

Nov 12, 2011

மௌதூதி சாஹிபின் அபத்தமான திருக்குர்ஆன் விளக்கவுரை

திருக்குரானில் 69வது அத்தியாயம் 43 முதல் 47 வரையுள்ள வசனங்களுக்கு மௌதூதி சாஹிப் அவர்கள் செய்துள்ள தர்ஜுமாவும் அதற்க்கு அவர் வழங்கியுள்ள வியாக்யானத்தையும் கீழே தருகிறோம். இதை இஸ்லாமிக் பௌண்டேஷன் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் மூலமும்-தமிழாக்கமும் விளக்கவுரையில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 576-ல் காணலாம்

"மேலும் இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனும் ஒரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்து சொல்லிருந்தால், நாம் அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம். பிறகு அவருடைய்ய பிடரி நரம்பை துண்டித்திருபோம். பிறகு உங்களில் எவரும் இப்படி செய்வதிலிருந்து (நம்மை) தடுப்பவராய் இருக்க முடியாது. "

விளக்கம்: இங்கு அசல் நோக்கம் பின் வரும் கருத்தை எடுத்துரைப்பதேயாகும். "இறைத்துதருக்கு தன் தரப்பிலிருந்து வஹியில் எந்த வித கூடுதலும், குறைவும் செய்திட அதிகாரமில்லை. அவர் அப்படி செய்தால் நாம் அவருக்கு கடும் தண்டனை அளிப்போம்."ஆனால் இந்தக்கருத்து எத்தகைய பாணியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றால் ஓர் அரசனால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரி அந்த அரசனின் பெயரால் ஒரு மோசடி செய்துவிடும் பொது அரசன் அவ்வதிகாரியைப்பிடித்து அவரது தலையை கொய்துஎரியும் சித்திரம் நம் கண் முன் தீட்டப்படுகிறது. ஆனால் சிலர் இந்த வசனத்திலிருந்து ஒருவன் தன்னை நபி என்று வாதாடி அவனது இதய நரம்பு அல்லது கழுத்து நரம்பு அல்லாஹ்வினால் உடனே துண்டிக்கப்படாவிட்டால் அவர் ஒரு இறைத்தூதர் என்பதற்கு ஆதாரமே இது! என்று தவறான வாதம் புரிகின்றார்கள். ஆனால் இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்து. உண்மையான தூதரைப்பற்றியதேயாகும். நபித்துவம் பெற்றிருப்பதாக பொய்யாக வாதிடுவோர் தமக்கு நபித்துவம் இருப்பதாக, தமக்கு இறைத்தன்மையே இருப்பதாக வாதிடுகின்றார்கள். இவ்வாறு வாதிட்டவண்ணம் பூமியின் மீது பல காலம் வரை நெஞ்சு நிமிர்த்தி இறுமாப்புடன் திரிகின்றார்கள். இது ஒன்றும் அவர்களுடையா வாய்மைக்கான ஆதாரம் அல்ல!- இவ்வாறு மொழியாக்கமும், விளக்கமும் தரப்பட்டுள்ளது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ உண்மைக்கு ஆதாரமாக, அல்லாஹ் திருக்குர்ஆன் மூலமாக நம்முன் எடுத்துவைக்கும் மேலேகண்ட ஆதாரங்களின் அடிப்படையில் எல்லா இறைத்துதர்களின் உண்மையையும் பரிசோதித்து அறிய நம்மால் முடியும். பொய்யாக வாதிப்பவர்களை அல்லாஹ் விட்டு வைக்காமல் அழித்தொழிப்பதொடு மட்டுமல்லாது அவர்களின் முயற்சிகளுக்கு வெற்றியும் வழங்காமல் தோல்விக்கு மேல் தோல்வி அளித்து வரும் தெளிவான இறைச்சட்டம் நம்முன் சாட்சிகளாக உள்ளன. இவை பொய் வாதிகளை நாம் பிரித்தரிவதர்க்காக அல்லாஹ் காட்டும் அடையாளங்களாகும். இப்னு ஜரீர்(ரஹீ), இப்னு கசீர் (ரஹீ), சம்கஷரி (ரஹீ, சுயூத்தி(ரஹீ) போன்ற இமாம்களும். அல்லாமா சித்திக் ஹசன்கான் போன்ற மார்க்க மேதைகளும் கூட மேற்கண்ட 69: 43-47 இறைவசனத்திற்கு இவ்வாறே விளக்கமளித்துள்ளனர். உண்மைவாதிகளையும், போய்வாதிகளையும் பிரித்தரிவதர்க்காகவே அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி கூறக்கூடிய பொய்வாதியை அழிப்பதென்பது இறைவனின் கடமையாகும் என இமாம் (ரஹீ) அவர்கள் தப்சீர் கபீர், பாகம் 8 பக்கம் 291 ல் கூறுகிறார்கள்.

ஹஸ்ரத் இமாம் இப்னுல் கையும் (ரஹீ) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்."பொய் தீர்க்கதரிசிகள் அநேகர் தோன்றியுள்ளார்கள். என்றாலும் அவர்களில் யாராவது வெற்றி அடைந்ததாகவோ அதிக நாட்கள் உயிரோடு இருந்ததாகவோ சான்று இல்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டார்கள் இது உலகம் தோன்றிய நாள் முதல் இறுதி வரை நடந்து வரும் அல்லாஹ்வின் சட்டமாகும்."(சாதுள் மவூத், பாகம் 1, பக்கம் 500 )

மௌலவி சனாவுல்லாஹ் சாஹிப் தமது தப்சீரில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

"அல்லாஹ் ஒருபோதும் கள்ள தீர்க்கதரிசிக்கு பொய்வாதிக்கு வெற்றியின் முகத்தை காட்டவில்லை என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து நமக்குத் தெளிவாக கூடிய விஷயமாகும். உலகின் பல்வேறு மாதங்கள் இருந்தாலும். ஒரு பொய்வாதியை பின்பற்றக்கூடிய கூட்டம்(உம்மத்) இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த எதிரிகளால் கூட முடியாதிருப்பதற்கு காரணம் இதிவேயாகும். முஸைலமா கத்தாபுடையா சான்றும், அஸ்வது அன்சியுடையா சான்றும் வரலாற்றிலிருந்து மறைந்து விடவில்லை. இருவரும் அவரவர் காலத்தில், நபி(ஸல்) அவர்களின் மாண்பையும் மேன்மையையும் அறிந்து அவர்களைப் போல் வாதம் செய்தவர்களாவார்கள். இறைவனின் பெயரால் இட்டுக்கட்டி பலவாறும் கூறினார்கள். ஆனால் இறுதியில் அல்லாஹ்வின் வல்லமையான பிடியில் சிக்கி நாசமானார்கள். அவ்விதம் நடக்கும் என்று யாருமே எதிபார்த்திருக்கவில்லை. அவர்கள் குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி அடைந்திருந்தார்கள். ஆனால் எதுவரை...?முகத்திமா தப்சீர் சனாய், பக்கம் 17, 1-ஆம் பதிப்பு.

மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு (69:43-47) வியாக்கியானம் செய்தவர்களுக்கெல்லாம் நேர் மாற்றமாக மௌதூதி சாஹிப் இந்த வசனத்திற்கு ஒரு நூதன விளக்கம் அளிக்க முற்பட்டதன் நோக்கம், எப்படியாவது அஹ்மதியா இயக்கத்தின் தூய ஸ்தாபகரின் நுபுவத் வாதத்தின் உண்மையை வெளிக்கொணர விடாது தடுத்து விட வேண்டும் என்பதேயாகும். ஒரு அரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரி, அரசனின் பெயரால் ஏதாவது மோசடி அல்லது அயோக்கியத்தனம் செய்தால் அரசன் அவரை விசாரணை செய்து தண்டிப்பான் என்பதில் மௌதூதி சாஹிபுக்கு சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் ஒருவன் அந்த அரசனால் நியமிக்கப்படாமல், தான் அரசனிடம் இருந்து வந்துள்ள அரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரி என மக்கள் மத்தியில் பொய் கூறி மக்களை ஏமாற்றி கொண்டிருப்பானேயானால் அந்த அதிகாரியைப்பிடித்து தண்டிக்காமல் பூமியில் விட்டு வைத்து மேலும் மேலும் குழப்பங்களும் ஏமாற்றுதலும் நடைபெற அரசன் பார்த்து கொண்டிருப்பான் என்பதும் மௌதூதி சாஹிபின் வாதம் போலும், என்பதை மேற்கூறிய அந்த வசனத்திற்கு அவர் கொடுத்துள்ள விளக்கத்திலிருந்து நாம் புரிய முடிகிறது. மௌதூதி சாஹிபின் வாதப்படி பார்த்தால் இந்த மாதிரியான சட்டம் பூமியில் எங்குமே நடைமுறையில் இல்லாததாகவே உள்ளது. எந்த ஒரு அரசனுமே, தான் நியமிக்காத ஒருவன் தன்னை அதிகாரி என தன் பெயரைக் கூறிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் என்றால் அவனைப் பிடித்து கடுமையான தண்டனை வழங்குவான் என்பதே உலகில் உள்ள நடைமுறைச்சட்டம். இந்த உலகிலேயே இப்படிப்பட்ட சட்டம் உள்ளதென்றால் ஆன்மீக உலகிலும் இந்த மாதிரி நடத்திக்காட்டுவதர்க்காகவே இறைவன் இந்த 69:43-47 வசனத்தின் மூலம் சுட்டிக் காட்டுகிறான். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி கூறக்கூடிய ஒரு பொய்வாதி ஒருபோதும் தப்பித்துக் கொள்ள வழி கிடையாது என்பதும், பொய்வாதியையும். அவரது கூட்டத்தையும் அழித்து விடுவதே அல்லாஹ்வின் நடைமுறையிலுள்ள சட்டமாகும் என்ற உண்மையையும் திருக்குர்ஆன் முரண்பாடில்லாத விதத்தில் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

Read more »

Nov 8, 2011

தவ்ஹீதின் தத்துவம்

ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

புனித கலிமாவில் பொதிந்துள்ள கருத்தை கவனியுங்கள் ! லாயிலாக இல்லல்லாஹ்என்ற கலிமாவை ஒரு மனிதன் நாவினால் மொழிந்து அதன் பொருளான, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. என்பதை தனது உள்ளத்தில் உறுதிபடுத்துகிறான். இலாஹ்எனும் அரபி மொழிச் சொல் வணக்கத்திற்குரியவன், நேசத்திற்குரியவன், விருப்பத்திற்குரியவன் என்றெல்லாம் பொருள்படும்.

இந்தக் கலிமா முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள திருக்குர் ஆனின் சுருக்கமாகும்.. இதன் பொருள் என்னவெனில், இறைவனை முதன்மையானவனாகக் கொள்ளாதவரை இறைவனை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக எண்ணாத வரை இறைவனையே இலக்காகக் கொள்ளாத வரை மனிதனால் இரட்ச்சிப்புப் பெற இயலாது என்பதாகும்.

எவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என்றொரு நபிமொழி உண்டு. மக்கள் இதன் கருத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாவால் மட்டும் கலிமா சொன்னால் போதுமானது என இவர்கள் நினைக்கிறார்கள். அதன் மூலம் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணுகிறார்கள்.

இறைவன் சொற்களோடு தொடர்பு வைப்பதில்லை. அவன் இதயத்தோடு தொடர்பு கொள்கிறான். இந்த நபிமொழியின் கருத்து என்னவெனில், எவர் உண்மையில் இந்த கலிமாவை தமது இதயத்திலே பதிய செய்வாரோ, எவர் இறைவனின் எல்லா மகத்துவங்களையும் தமது இதயத்திலே இடம்பெறச் செய்வாரோ அவரே சுவர்க்கத்தில் நுழைவார் என்பதாகும்.

ஒரு மனிதன் கலிமாவை உண்மையாக ஏற்றுக்கொள்கின்றபோது அவனுக்கு இறைவனைத் தவிர வேறேதும் நேசத்திற்குரியதாகவோ வணக்கத்திற்குரியதாகவோ தோன்றுவதில்லை. இறைவனைத்தவிர வேறெதையும் அவன் விரும்புவதுமில்லை. இதுவே அப்தால்” “குத்துப்” “கவுஸ்என்பன போன்ற ஆன்மீக நிலைகளாகும். லாயிலாஹ இல்லல்லாஹ்என்ற கலிமாவின் மீது உளப்பூர்வமான நமிக்கைக்கொண்டு செயல்படுவதென்பது இதுவேயாகும்.

நாம் சிலையயோ மனிதனையோ வணங்கவில்லை என நீங்கள் பெருமைக் கொள்ள வேண்டாம். சிலைகளை வணங்குவதிலிருந்தும் மனிதனை வணங்குவதிலிருந்தும் விலகுவதென்பது ஒரு சாதாரண விஷயமாகும்.

இறை ஞானத்தையும் சத்தியத்தையும் அறியாத இந்து மத்தைச் சார்ந்தவர்கள் கூட தற்போது சிலை வணக்கத்தைக் கைவிட்டு வருகின்றனர். நீங்கள் சிலைகளை வணங்காததால் மட்டும் லாயிலாஹ இல்லல்லாஹ்என்ற கலிமாவின் நோக்கம் நிறைவேறாது. சிலைகளைத் தவிர வேறு பல பொய்த் தெய்வங்கள் உண்டு. அவை அனைத்தையும் விட்டொழிப்பது அவசியமாகும். மனோ இச்சை, உலக ஆசை இவையும் மனிதன் வணங்குகின்ற சிலைகளேயாகும். லாயிலாஹ இல்லல்லாஹ்இதனையும் தடை செய்கிறது.

ஒரே இறைவனைத் தவிர மற்ற எல்லாவிதத் தெய்வங்களையும் இவ்வுயரிய கலிமா மறுக்கிறது. மனயிச்சையின் தெய்வங்களையும், உலக நேசம் என்ற தெய்வத்தையும் இதயத்திலிருந்து அகற்றி ஏக இறைவனான அல்லாஹ்விற்கு மட்டுமே அதில் இடம் அளிப்பதே புனித கலிமாவை உண்மையில் ஏற்றுக் கொள்வது ஆகும்.

சில சிலைகள் வெளிப்படையானவை. சில சிலைகள் நுட்பமானவை. உதாரணமாக இறைவனைத் தவிர ஏனையவற்றில் நம்பிக்கை வைப்பதென்பது ஒரு சிலையாகு. ஆனால் அது ஒரு நுட்பமான சிலை என்று கூறலாம். மனிதனுக்கு டைஃபாய்டு போன்ற வெளிப்படையான நோய்களும் காசநோய் போன்ற நுட்பமன நோய்களும் ஏற்படுவதுண்டு. வெளிப்படையான நோய்களிலிருந்து அவன் குணமடைவது எளிது..ஆனால் மக்கள் தங்கள் கையிடுக்குகளில் வைத்துக் கொண்டுத் திரியும் நுட்பமான சிலை(களெனும் நோய்க)ளை அகற்றுவது சிரமமானது. பெரிய தத்துவ மேதைகளாலும் அறிஞர்களாலும் கூட தமது உள்ளங்களிலிருந்து இத்தகு சிலைகளை எடுத்தெறிய இயலாதிருக்கிறது.

ஏனெனில் அவை மிக நுட்பமான கிருமிகளைப் போன்றிருக்கின்றன. இறையருள் எனும் பூதக்கண்ணாடியின்றி அவற்றை கானயியலாது. இவை மனிதனுக்கு பெரும் தீங்கிழைக்கின்றன. இறைவனுக்குரியவற்றையும் பிறருக்குரியவற்றையும் இவை தங்கு தடையின்றி மோசம் செய்கின்றன. மார்க்கத்தை கற்றறிந்தவர்களென கருதப்படும் ஆலிம்களும் மவ்லவிகளும் நபி மொழிகளை கற்றிருக்கிறார்கள் ஆனாலும் தம்மிடமுள்ள இத்தகு சிலைகளை இவர்களால் கூட கண்டறிய முடிவதில்லை. இவற்றை அவர்கள் வணங்கி வருகின்றனர்.

இச்சிலைகளை விட்டு விடுவதென்பது மன உறுதிமிக்க ஒரு செயலாகும். ஆனால் இச்சிலைகளில் பின்னால் செல்கின்றவர்களோ தமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்களின் சொத்துகளை அபகரிக்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் வேட்டையாடி விட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் உலகப் பொருட்களுக்காக அலைவதோடு அவற்றின் மீது அதிக நம்பிக்கை வைக்கின்றனர்.

எதுவரை இத்தகு செயல்கள் ஒழிவதில்லையோ அதுவரை ஏகத்துவம் நிலை நாட்டப்பட்டுவிட்டது என்று கூற இயலாது. பெரும்பாலான மக்கள் இதனை உணர்வதில்லை. நாங்கள் கலிமா சொல்லவில்லையா? என இவர்கள் கேட்கிறார்கள். நிச்சயமாக நீங்கள் கலிமா வை படிக்கவில்லை என்றே இவர்களிடம் கூறவேண்டியதிருக்கிறது. கலிமா என்பது உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் ! (இவர்களிடம் உணர்வு இல்லையெனில் இவர்கள் கலிமா வைப் படித்தவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்?)……………….. ஆணவம், தற்பெருமை, வஞ்சகம், ஏமாற்று, துரோகம் இன்னும் இவைப்போன்ற கேடுகளிலிருந்து மனிதன் விலகுவதே தவ்ஹீதின்-ஏகத்துவத்தின் அடிப்படை நோக்கமாகும். இத்தகைய சிலைகளை ஒருவன் தனது உள்ளத்திலிருந்து அகற்றாதவரை அவன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவதில் உண்மையாளனாக இருக்கின்றான் என்று எவ்வாறு கூற முடியும்? இவற்றை உதறித்தள்ளாமல் நாவினால் மட்டும் கலிமா கூறுவதால் என்ன பயன் ஏற்பட முடியும்? மனயிச்சையினால் ஏற்படும் பொறாமை, துவேஷம் ஆகியவற்றை நிரந்தரமாக விட்டுவிடுபவனே, இறைவன் ஒருவனென்றும் அவனுக்கு இணை எதுவுமில்லை என்று உளப்பூர்வமாக நம்புகின்றவனாவான். மனிதனின் இதயமெனும் நிலத்தில் எலிகளைப்போல் நோய்களைப் பரப்பும் இத்தகைய பொய்த் தெய்வங்களை எரித்து சாம்பலாக்காதவரை மனிதன் தூய்மை பெறயியலாது. எவ்வாறு எலிகள் பிளேக் எனும் கொள்ளை நோயை கொண்டு வருகின்றனவோ அவ்வாறே இந்த எலிகளும் மனிதனின் உள்ளத்தை கெடுத்து அவனை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

Read more »

Nov 5, 2011

கிருஸ்தவர்களிடம் நாம் கேட்கும் கேள்விகள்.

  1. காணமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரத்தார்களுக்குப் போதிப்பதற்காகவே இயேசு அவதரித்தார் என்றால், இரண்டே, இரண்டு இஸ்ரவேல் கோத்திரத்தார் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டில் மட்டுமே போதித்து விட்டு, சிலுவையில் இயேசு உயிர் துறந்தார் என்றால், இயேசு தமது போதிக்கும் கடமையில் தோற்று விட்டார் என்ற கூற வேண்டுமல்லவா?
  2. புற ஜாதியாருக்கு சுவிசேசத்தை போதிக்க, ஒரு புறத்தில் தடை விதித்துவிட்டு, மறுபுறத்தில் இயேசு தமது சீடர்களை நோக்கி '....சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.' என்று கூறியது ஏன்?
  3. இயேசு தாம் போதித்து வந்த காலத்தில் புற ஜாதியாருக்கு சுவிசேசத்தை போதிப்பதை தடுத்திருந்தும் (மத்தேயு 10:5; 7:6;15:24-26) தாம் உயிர்த்தெழுந்த பின்னர் '....நீங்கள் உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிஷேசத்தைப் பிரசங்கியுங்கள்.' என்றது ஏன்?உண்மையில் இயேசு மேற்கண்டபடி சகல சிருஷ்டிகளுக்கும் போதிக்குமாறு சொல்லியிருந்தால் புற ஜாதியாருக்குச் சுவிசேசத்தை போதிக்க வேண்டுமா வேண்டாமா?என்பது பற்றி ஆரம்பக் கால திருச்சபையில் கடுமையான வாக்குவாதம் (குறிப்பாக பேதுருவுக்கும் பவுலுக்குமிடையில்) ஏற்பட்டது ஏன்? (அப்போஸ்தலருடைய நடபடிகள்15:6-30)
  4. இயேசு யோனாவின் அடையாளத்தைத் தமக்கு ஆதாரமாகக் காட்டினாரல்லவா? (லூக்கா11:29) யோனா தீர்க்கதரிசி மீன் வயிற்றினுள் உயிரோடு நுழைந்தார்; மீன் வயிற்றினுள் மூன்று தினங்கள் உயிருடனே இருந்தார்; உயிரோடு வெளியே வந்தார். யோனாவின் இந்த அடையாளம் இயேசுவிடம் நிறைவேற வேண்டுமாயின், அவர் பூமியின் வயிற்றில் அதாவது கல்லறையினுள் நுழைந்து உயிரோடு தங்கி இருந்து, கல்லறையை விட்டு உயிருடனேயே வெளியே வரவேண்டும். உண்மை இவ்வாறிருக்க இயேசு சிலுவையில் மரித்து,உயிரற்றவராய்க் கல்லறையில் கிடத்தப்பட்டுப் பின்னர் உயிர்த்தெழ வேண்டுமென்றிருந்தால், அவர் யோனாவின் உதாரணத்தை ஏன் எடுத்துக் கூறினார்?
  5. இயேசு போதனை முழு மனித குலத்துக்கும் பொருந்தும் என்றால், அவர் தமது சீடர்கள் (இஸ்ரவேலர்கள் தவிர இதர) புற ஜாதியாருக்குப் போதிப்பதைத் தடுத்தது ஏன்? (மத்தேயு10:5-6)
  6. நித்தியா ஜீவனை அடைவதற்கு (அதாவது உண்மையான இரட்சிப்புப் பெறுவதற்கு) வழி யாது? என இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, இயேசு '....நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.' (மத்தேயு 19:17) இங்கு கற்பனைகள் என்பவை மோசே தீர்க்கதரிசியின் பத்துக் கட்டளைகளைக் குறிக்கும். அக்கட்டளைகளில் தலையாயது ஏக தெய்வ வணக்கமாகும். (யாத்திராகமம் 20:3) இறைவன் மூவர் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்த இயேசு அவதரித்திருந்தால் ஏக தெய்வக் கொள்கையை மேற்கண்டவாறு ஏன் வலியுறுத்தினார்? இறைவன் மூவர் என்ற நூதனக் கருத்தில் இயேசுவுக்கு நம்பிக்கை இருந்து, மூவரில் ஒருவராகத் தாமும் இருந்திருந்தால் அக்கேள்விக்குரிய விடையாக பிதா, மகன், பரிசுத்த ஆவி ஆகியோரைக் குறித்து ஏன் கூறவில்லை?
  7. மோசேயின் நியாயப் பிரமாணத்தை மாற்றுவதற்காகத் தாம் வரவில்லை என்றார் இயேசு (மத்தேயு 5:17) மோசேயின் நியாயப் பிரமாணம் ஏக இறைவனை வணங்குவதையே போதிக்கிறது. (யாத்திராகமம் 20:3) இறைவன் மூவர் என்ற கடவுள் கொள்கையை இயேசு புதிதாய் யூத மக்களிடையே போதிப்பதாயின், மோசேயின் நியாயப் பிரமாணத்தை தாம் மாற்றி விட்டதாகவும் ஒரு புத்தம் புதிய கடவுள் கொள்கையை அறிமுகப்படுத்துவதாகவும் அப்போது இயேசு ஏன் கூறவில்லை?
  8. தமது சந்ததியார் தமது இரண்டாம் வருகையை காணாமல் மரணித்துப் போக மாட்டார்கள் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். (மார்க்கு 9:1,13:30) இந்தத் தீர்க்க தரிசனம் ஏன் நிறைவேற வில்லை? தமது சந்ததியாரின் வாழ்நாளிலேயே இயேசு ஏன் மீண்டும் திரும்பி வரவில்லை?
  9. இயேசு யூதத் தலைவர்களை விரியன் பாம்புக்குட்டிகள் என்றும், விபச்சாரப் புத்திரார்கள் என்றும், தாமே அழைத்திருக்கும்போது, தம் சீடர்கள் மக்களை மூடர்கள் என்றழைப்பதை இயேசு தடுத்தது ஏன்? தேவனுடைய குமாரனாகிய ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று கூறமுடியுமா?
  10. யூதர்கள் இயேசுவை விசாரணை செய்தபோது '... நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்க்கு அவர் : நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.' (லூக்கா 22:70) அதன் பொருள், நான் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள் : நான் கூறவில்லை என்பது தானே. இவ்வுலகில் தமது திரு அவதார நோக்கத்தை அழகிய முறையில் எடுத்துரைக்கக் கிடைத்த இந்த அறிய சந்தர்ப்பத்தில் தமது பதிலை இவ்வாறு தெளிவற்ற வார்த்தைகளில் சொல்வதை விடுத்து 'ஆம்' என்று இயேசு தெளிவாகவும் நேரிடையாகவும் இயேசு ஏன் கூறவில்லை?
  11. பழைய ஏற்பாட்டில் இறைவன் தாவீதை தன் முதற்பேறானவன்' (மூத்த மகன்) (சங்கீதம்89:27) என்றும், இஸ்ரவேலைத் தன குமாரன்; தன் சேஷ்ட புத்திரன் (மூத்த மகன்) (யாத்திராகமம்4:22) என்றும், இஸ்ரவேலின் மக்களை உன்னதமான தேவனின் குமாரர்கள் (சங்கீதம்82:6) சாலமோனைத் தன் குமாரன் (நாளாகமம் 22:10) என்றும், குறிப்பிட்டு அழைத்துள்ளான். இயேசுவும் சமாதானம் பன்னுவோரைக் குறித்து தேவனுடைய புத்திரர்கள் (மத்தேயு 5:6) எனக் குறிப்பிட்டுள்ளார். சொற்பொருளின் படி, இயேசு உண்மையிலேயே தம்மைத் தேவ குமாரன் (இறைவனே பெற்றடுத்த மகன்) என்று கருதினார் என்றால், பழைய ஏற்பாட்டில் உவமை வடிவத்தில் 'தேவனுடைய புத்திரன்'என்று கூறப்பட்டதற்க்கும், இயேசு தம்மைச் சொற்பொருள்படி 'தேவனுடைய புத்திரன்'என்றழைத்ததற்கும் உள்ள வேறுபாட்டை இயேசு சுட்டிக்காட்டி தெளிவு படுத்தாது ஏன்?
  12. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களில் கூறியுள்ளபடி இயேசு மெசயாவாகத் தோன்றியுள்ளார். அந்த மெசயாவைக் குறித்து, அவர் கொலை செய்யப்படமாட்டார் என இறைவன் வாக்குறுதி அளித்துள்ளான். (சங்கீதம் 34:19; ஏசாயா 53:10) இயேசு சிலுவையில் கிடந்தது மரித்தார் என்றால், இறைவனின் திட்டம் தோல்வி கண்டதாகவும், யூதர்கள் மேசாயாவைக் கொள்வதில் வெற்றிபெற்றுவிட்டதாகவும் கூறும் நிலை ஏற்ப்படும், இது சரியாகுமா?
  13. தம்மை யூதாஸ் காட்டிக் கொடுக்கப் போவதை இயேசு அறிந்திருந்தால், அவனைத் தமது சீடனாக ஏன் தொடர்ந்து வைத்திருந்தார்? தமது மற்றச் சீடர்களிடம் அதைக் குறித்து அவர் ஏன் சொல்லவில்லை? தமது சீடர்களின் நெருங்கிய பழக்கத்திலிருந்து யூதாசை விலக்கி நடத்தும் வண்ணம் அவர் ஏன் நடந்து கொள்ளவில்லை?
  14. தமது சீடர்களின் ஒருவன் தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தால், தமது பன்னிரண்டு சீடர்களும் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பார்கள் என்று அவர் ஏன் கூறினார்?
  15. தாம் சிலுவையில் மரணமடையப் போவதாக இயேசு ஏற்கெனவேஅறிந்திருந்தால்,கெத்செமனே தோட்டத்தில் சிலுவையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்டது ஏன்? (மத்தேயு 26:39)
  16. மனிதர்களின் பிராத்தனைகள் நிறைவேற்றப்படும் என இயேசு போதித்து வந்துள்ளார். (மத்தேயு 21:22) கெத்செமனே தோட்டத்தில் இயேசு மனமுருகிப் பிராத்தனை செய்தும், அது நிறைவேறாதது ஏன்? இயேசு போதித்ததற்கு மாற்றமாக, அவரது பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை அறியும் சீடர்கள் மற்றும் அவரைப் பின்பற்றியோரின் விசுவாசத்தில் இச்சம்பவம் என்ன விளைவை ஏற்ப்படுத்தும்.
  17. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றால், அவர் தமது சீடர்களிடம் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னதாகக் கூறியது ஏன்?
  18. இயேசுவின் பிராத்தனை கெத்செமனே தோட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படப்போவதில்லை என்றால், தம் சீடர்களைத் தம்முடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு எதனைக் காட்ட அல்லது எதனைக் கற்ப்பிக்க இயேசு நாடினார்? அவரது பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றால் இந்த சம்பவத்தால் யாருக்கு என்ன பயன்?
  19. மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியோர், தமக்குத் தரப்பட்ட மரணப் பாத்திரத்தை அகற்றுமாறு இயேசு வேண்டிக் கொண்டதாகக் கூறினார்கள். ஆனால் யோவான் மட்டும்,இயேசு சிலுவைத் தண்டனையை விரைந்து ஏற்க்க நாடி, '....பிதா எனக்கு கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பன்னாதிருப்பேனா....' என்று சொன்னதாகக் கூறியது ஏன்?
  20. இயேசு வருகையின் நோக்கம் சிலுவையில் மரணமடைய வேண்டும்என்றிருந்தால்,பிலாத்துவின் மனைவிக்கு இறைவன் ஒரு கனவைக் காட்டி அதன் மூலம் அவள் இயேசுவை சிலுவையை விட்டு விடுவிக்குமாறு பிலாத்துவை வலியுறுத்தியது ஏன்? அது இறைவனின் திட்டத்திற்கே எய்திரானது இல்லையா?
  21. சப்பாத்து நாள் தொடங்கும் முன்னர், யூதர்கள் இயேசுவை சிலுவையை விட்டுக் கீழே இறக்கிவிடுவார்கள் என்பதையும், இயேசு சிலுவையில் தொன்ன்கும் நேரம் குறைவானது;ஒருவன் உயிர் துறப்பதற்குப் போதுமானதல்ல என்பதையும் பிலாத்து நன்கறிந்திருந்தார். இந்நிலையில், இயேசு சிலுவையில் மரிக்க வேண்டுமென உண்மயிலேயே பிலாத்து விரும்பியிருந்தால் ஒரு வெள்ளிக்கிழமை மாலையை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?
  22. சிலுவையில் அறையுண்டு மரிப்பதே தமது வாழ்வின் நோக்கம் என்று இயேசு எப்போதும் கருதி வந்திருந்தார் என்றால் சிலுவையில் அறையப்பட்டு கிடக்கையில் எலீ! எலீ! லாமா சபக்தானி (மத்தேயு 27:46) என்று ஏன் கதறினார்?
  23. உயிர் பிரியப்போகும் அத்தருணத்தில் இயேசு தெளிவாக உரத்த குரலில் தாம் தாகமாயிருப்பதாக எவ்வாறு சப்தம் போட முடிந்தது? (யோவான் 19:38)
  24. எலீ! எலீ! லாமா சபக்தானி (மத்தேயு 27:46) என்ற இயேசுவின் சொற்கள் அவரது தாய்மொழியான அரமேக் மொழியில் இருப்பது ஏன்?
  25. வினிகர் (காடி) உடலுக்குத் தெம்பளிக்கும் பானமாகக் கருதப்படுகிறது. ஆனால் இயேசு வினிகர் வழங்கப்பட்டதும் அவர் மிக விரைவாக மரணமுற்றது ஏன்? (யோவான் 19:29,30)
  26. சிலுவையில் மரணமுற்று கிடக்கும் ஒருவனுக்கு, மயக்க நிலையில் கிடக்கும் ஒருவனுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை (மார்க்கு 15:39) அதிலும் குறிப்பாக அந்த நேரம் இருள் சூழ்ந்திருந்தபோது (மார்க்கு 15:33, மத்தேயு 27:45, லூக்கா 23:44) அந்நிகழ்ச்சியில் சம்பந்தப்படாத ஒரு பார்வையாளன் எவ்வாறு கண்டுகொள்ள முடியும்.
  27. உயிரற்ற சடலத்திலிருந்து இரத்தமோ, நீரோ வெளிவருவதில்லை. சிலுவையைவிட்டுக் கீழே இறக்கும்போது இயேசு மரித்திருந்தால், அவரது உடலிலிருந்து இரத்தமும் நீரும் ஏன் வெளிவந்தன? (யோவான் 19:34)
  28. இயேசுவுடன் சிலுவையில் அறியப்பட்ட இருவரின் கால்கள் முறிக்கப்பட்டிருந்தும் அவர்களை விட மிக விரைவில் இயேசு ஏன் இறந்துவிட்டார். (யோவான் 19:32)
  29. செத்துப் போன பரிசுத்தவான்கள் தமது புதை குழியிலிருந்து புறப்பட்டு அநேகருக்குத் தம்மைக் காட்டிக் கொண்டதாக (மத்தேயு 27:52) கூறுகிறது. இந்த அற்புத நிகழ்ச்சி காரணமாக யூதர்கள் இயேசுவிடம் உடனடியாக நம்பிக்கைக் கொள்ளாதது ஏன்? இந்தப் பரிசுத்தவான்கள் எங்கே போனார்கள்? அவர்கள் யாரைப் பார்த்தார்கள்? மேலும் இந்தக் கதை, மத்தேயு சுவிசேசத்தை தவிர மற்ற சுவிசேசங்களில் காணப்படாதது ஏன்?
  30. செத்துப்போன பரிசுத்தவான்கள் உயிர் பெற்று எழுந்த இந்தக் கதை, வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொள்ளாதிருந்தால் வரலாற்று அடிப்படையற்ற வேறு எந்தெந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சுவிசேசங்களில் எழுதப்பட்டுள்ளன?
  31. இயேசு கடவுளாக இருந்தால், அவர் பிராத்தனை செய்வதற்கு என்ன தேவை இருக்கிறது? (மார்க்கு 1:35; லூக்கா 5:16)
  32. இயேசு கடவுளாக இருந்தால், அத்தி மரத்தில் பழங்கள் இல்லாததால், அதிலும் குறிப்பாக அந்த மரம் பழுக்கக் கூடிய பருவமாக இல்லாத போது அம்மரத்தினை இயேசு ஏன் சபித்தார்? (மார்க்கு11:12-14;மத்தேயு 21:18, 19)
  33. இயேசு கடவுளாக இருந்தால், செபதேயு தன இரு குமாரர்களும் இயேசுவின் வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்குமாறு அருள் செய்யக் கேட்டபோது,அதற்க்கான வல்லமை தம்மிடம் இல்லை என்றும் அது தம் பிதாவுக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியது ஏன்? (மத்தேயு 20:23)
  34. இயேசு கடவுளாக இருந்தால், அவர் மிகத் தெளிவாக தம்மை மனிதன் என்று குறிப்பிட்டது ஏன்? (யோவான் 8:39-40)
  35. தமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவைக் கூறும்போது, ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியா ஜீவன் ... எனக் கூறி கடவுளிடமிருந்து தம்மைத்தனியே பிரித்துக் காட்டியது ஏன்? (யோவான் 17:3)
  36. இயேசு கடவுளாக இருந்தார் என்றால், யாவற்றையும் அறிந்தவராக இருக்க வேண்டும்,அவ்வாறாயின், யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுக்க அனுமதித்ததேன்?
  37. சாதாரண மனிதர்கள் சிலுவையில் கிடந்தது மரணமடைய பல நாடர்கள் ஆகும்போது,இயேசு கடவுளாக இருந்தால், சிலுவையில் அறையப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மரணமடைந்தது ஏன்? முழு உலகப் பாவங்களையும் சுமந்ததால் அவர் பலமிலந்துவிட்டார் என்றால், முழு உலகப் பாவங்களிலிருந்து விமோசனம் தர அவர் வந்ததாக ஏன் சொல்ல வேண்டும்?
  38. உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான். (மத்தேயு 10:40) என்று இயேசு சொன்னதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் லூக்கா 10:16, யோவான்12:44வசனங்களைப் பார்க்கவும். இயேசு கடவுள் என்றால், அவரை அனுப்பியது யார்?
  39. இயேசு பிறவிப்பாவம் (அதாவது எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகவே பிறக்கின்றன) என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து அதனைப் போதித்தார் என்றால், ஒரு மனிதன் சிறுபிள்ளையைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் அதில் நுழைவதில்லை (மார்க்கு 10:4-15) என்று ஏன் கூறினார்?
  40. இயேசு கடவுளாக இருந்தால், அவர் பிராத்தனை செய்வதற்கு என்ன தேவைஇருக்கிறது? (மார்க்கு 1:35; லூக்கா 5:16)
  41. இயேசு கடவுளாக இருந்தால், அத்தி மரத்தில் பழங்கள் இல்லாததால்,அதிலும் குறிப்பாக அந்த மரம் பழுக்கக் கூடிய பருவமாக இல்லாத போது அம்மரத்தினை இயேசு ஏன் சபித்தார்? (மார்க்கு11:12-14)
  42. மத்தேயு 21:18, 19) இயேசு கடவுளாக இருந்தால், செபதேயு தன இரு குமாரர்களும் இயேசுவின் வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்குமாறு அருள் செய்யக் கேட்டபோது, அதற்க்கான வல்லமை தம்மிடம் இல்லை என்றும் அது தம் பிதாவுக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியது ஏன்? (மத்தேயு 20:23)
  43. இயேசு கடவுளாக இருந்தால், அவர் மிகத் தெளிவாக தம்மை மனிதன் என்று குறிப்பிட்டது ஏன்? (யோவான் 8:39-40)
  44. தமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவைக் கூறும்போது, ஒன்றான மெய்த்தேவனாகியஉம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியா ஜீவன் ... எனக் கூறி கடவுளிடமிருந்து தம்மைத்தனியே பிரித்துக் காட்டியது ஏன்? (யோவான் 17:3)
  45. இயேசு கடவுளாக இருந்தார் என்றால், யாவற்றையும் அறிந்தவராக இருக்க வேண்டும்,அவ்வாறாயின், யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுக்கஅனுமதித்ததேன்?
  46. சாதாரண மனிதர்கள் சிலுவையில் கிடந்தது மரணமடைய பல நாடர்கள்ஆகும்போது,இயேசு கடவுளாக இருந்தால், சிலுவையில் அறையப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மரணமடைந்தது ஏன்? முழு உலகப் பாவங்களையும் சுமந்ததால் அவர் பலமிலந்துவிட்டார்என்றால், முழு உலகப் பாவங்களிலிருந்து விமோசனம் தர அவர் வந்ததாக ஏன் சொல்ல வேண்டும்?
  47. உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான். (மத்தேயு 10:40) என்று இயேசு சொன்னதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் லூக்கா 10:16, யோவான்12:44வசனங்களைப் பார்க்கவும். இயேசு கடவுள் என்றால், அவரை அனுப்பியது யார்?
  48. இயேசு பிறவிப்பாவம் (அதாவது எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகவே பிறக்கின்றன) என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து அதனைப் போதித்தார் என்றால், ஒரு மனிதன் சிறுபிள்ளையைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் அதில் நுழைவதில்லை ( மார்க்கு ) என்று ஏன் கூறினார்
Read more »

இஸ்மி மௌலானாவின் கலப்பட மார்க்கம்



ஜிஹாதும் அஹ்மதிய்யா ஜமாத்தும்

இஸ்மி ஏட்டின் அக்டோபர் இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா இயக்கத்திற்கும், அதன் தூய ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் எதிரான தமது காழ்ப்புணர்ச்சியை வெளியிட்டு பின்வருமாறு எழுதுகிறார்.

'ஆங்கிலேயர் விருப்பப்படி மிர்ஸா குலாம் இரண்டு காரியங்களை செய்தார். ஒன்று புனிதப் போர் என்ற பெயரில் மிக்க அலங்காரமான வார்த்தைக் கோவைகளை அமைத்து முஸ்லிம்களை தன்பக்கம் ஈர்த்தார். இரண்டாவது ஆங்கிலேய அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆயுதம் எடுக்காமல் இருக்கவேண்டும் என்று போதித்தார். இத்துடன் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று திருக்குரானில் இருந்து ஆதாரம் காட்டி மக்களை மடக்கினார். (பக்கம் 11)......... திருக்குரானில் வரும் ஜிஹாத் என்ற வார்த்தைக்கு ஆங்கிலேயருக்கு சாதகமாக விளக்கம் எழுதினார். "அந்த வார்த்தைக்குப் புனிதப் போர் என்பது பொருளல்ல. மக்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பது மட்டும் குறிக்கும் என்றார்'. 

மௌலான கூறியிருக்கும் வசனங்களில் பின்வரும் விஷயங்கள் அடங்கியிருக்கும்.

ஆங்கிலேயர்கள் விருப்பப்படி, ஜிஹாத் என்ற புனிதப் போருக்கு அரசாங்கத்திற்கு எதிராக வாளெடுத்துப் போரிடுதல் என்ற விளக்கத்திற்குப் பதிலாக மக்களுக்கு இஸ்லாத்தைப் போதித்தல் என்று அஹ்மதிகள் பொருள் கொள்கின்றனர்.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று திருக்குரானில் இருந்து ஆதாரம் காட்டி மடக்கினார்கள்.

இந்த இரண்டு விஷயங்களையும் திருக்குரான், ஹதீஸ் அடிப்படையில் என்ன விளக்க நாடுகிறேன்.

'ஜிஹாத்' என்ற சொல், ஒருவன் தன சக்திகள் அனைத்தையும் திரட்டி முழு மூச்சாக ஒன்றில் ஈடுபடுவதைக் குறிக்கும்' (தாஜுல் உரூஸ்)

மூன்று வகையான 'ஜிஹாத்' இருப்பதாக திருக்குர்ஆன் திருநபி மொழிகளிலிருந்து தெரியவருகிறது. அவை,

தற்காப்பிற்காக போரிடுவது.

தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுவது.

மன இச்சைகளை அடக்குவது (முஹாஷபதுள் குலூப் பக்கம் 14)

ஒரு முறை தபூக் என்னும் போர்களத்திலிருந்து மீண்ட சஹாபாப் பெருமக்களை நோக்கி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"நீங்கள் இப்போது ஒரு சிறு ஜிஹாத் (ஜிஹாதே அஸ்கர்) செய்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள்; இனி நீங்கள் 'பெரிய ஜிஹாத்' (ஜிஹாதே அக்பர்) ஈடுபடவேண்டும். பெரிய ஜிஹாத் என்னவென்று கேட்கப்பட்டதற்கு, மன இச்சைகளுடன் போராடுவதே பெரிய ஜிஹாத் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'. (முஹாஷபதுல் குலூப் பக்கம் 213)

ஜிஹாத் மூன்று வகைப்படும் என்று திருக்குரானும் நமக்கு தெரிவிக்கிறது.

ஜிஹாதே அக்பர் - மிகப் பெரிய ஜிஹாத்

ஜிஹாதே கபீர் - பெரிய ஜிஹாத்

ஜிஹாதே அஸ்கர் அல்லது ஜிஹாதே ஷகிர் - சிறிய ஜிஹாத்

'ஜிஹாதே அக்பரைப்' பற்றி திருக்குரான் இவ்வாறு கூறுகிறது.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்கள் நப்சிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நப்சை (மன இச்சையை) கட்டுப் படுத்தினால்தான் உங்களால் நேர்வழி பெற இயலும். (சூரா மாயிதா)

தனது மன இச்சையுடன் போராடி அதனை அடக்குபவரே உண்மையான போர்வீரராவார். (திருநபி மொழி - திர்மிதி)

'ஜிஹாதே கபீரைப்' பற்றி பின்வருமாறு திருக்குர்ஆன் கூறுகிறது 'நீர் நளினமாகவும் அழகான போதனைகளின் மூலமாகவும் (மக்களை) இறைவழியின் பக்கம் அழைப்பீராக! (சூரா நஹ்ல்)

மேலும், 'வஜாஹித்ஹும் பிஹி ஜிதாதன் கபீரா' 'நீங்கள் திருக்குர்ஆன் மூலம் 'பெரிய ஜிஹாத்' (ஜிஹாதே கபீர்) செய்வீர்களாக'

என்றும் திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

'ஜிஹாதே அஸ்கர்' என்பதுதான் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக செய்யப்படும் தற்காப்புப் போர். இதனைப் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

யார் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு போர் செய்ய அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் அநீதிக்கும், கொடுமைக்கும் ஆளானவர்கள். அத்தகையவர்களுக்கு உதவி புரிய இறைவன் வல்லமையுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள் அநியாயமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு துரத்தப்பட்டவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று கூறியதே இவர்கள் செய்த குற்றம். இவ்வாறு இறைவன் சிலரை வேறு சிலரைக் கொண்டு தடுக்காமலிருந்திருந்தால், இறைவனின் திருநாமம் பெருமளவும் நினைக்கப்படும் யூத, கிறிஸ்தவ ஆலயங்களும், முஸ்லிம் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டிருக்கும்.(22:40)

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'வாளேந்திப் போர் செய்வதற்கான எந்தக் காரணமும் இப்போது இல்லை. மார்க்கத்தின் பெயரால், 'ஜிஹாத்! ஜிஹாத்!' என்று கூறி அனாவசியமாகப் போர் செய்வதற்கோ, இஸ்லாத்தை நிராகரிப்பவர்களுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கோ இஸ்லாம் அனுமதி தரவில்லை, சமாதானம் நிலைத்திருக்கும் காலத்தில், மார்க்கத்தின் பெயரால் அனாவசியமாகப் போர் செயவதுக் கூடாது என்றே இறைவன் கூறியிருக்கின்றான். (துஹ்பே கோல்டவிய்யா பக்கம் 34)

திருக்குர்ஆன், திருநபி மொழிகளின் ஆகியவற்றின் போதனைகளின் அடிப்படையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஜிஹாதிற்கு கூறிய விளக்கத்தை வைத்துதான் 'திருக்குரானில் வரும் ஜிஹாத் என்ற வார்த்தைக்கு அங்கிலேயருக்குச் சாதகமாக விளக்கம் எழுதினார்' என்று கூறி 'இஸ்மி'யின் மௌலான குழப்பம் விளைவிக்க எண்ணுகிறார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக புனிதப் போர் என்ற பெயரில் முஸ்லிம்கள் வாளெடுத்து யுத்தம் செய்யக்கூடாது, என்று அன்றைய இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர்கள் பலரும் முப்திகளும் செய்த அறிக்கைகளிலிருந்தும், மார்க்க தீர்ப்புகளிலிருந்தும் (பத்வா) சிலவற்றை கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன் அதில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக கிளர்சிகளில் ஈடுபடுவது ஹராம் (விலக்கப்பட்டது) என்று கூட மௌலானாவின் மத குரு ஒருவர் பத்வா கொடுத்திருந்தார். (இஷா அத்து சுன்னா பாகம் 6, பக்கம் 10)

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

அவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். என்று திருக்குரான் கட்டளையிட்டிருக்கிறது. எதுவரை அவர்கள் நமக்கெதிராக வாள் எடுப்பதில்லையோ, அதுவரை நாமும் அவர்களுக்கெதிராக வாள் எடுக்கக்கூடாது. (ஹக்கீகத்துல் மஹ்தி)

இக்காலத்தில் செய்யவேண்டிய புனிதப் போர் என்னவென்பதைப் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'இஸ்லாத்தின் போதனைகளை சமாதான வழியில் உலகெங்கும் பரவச் செய்வதுதான் இந்த காலத்தில் நாம் செய்யவேண்டிய புனிதப் போர். இஸ்லாத்திற்கெதிராக செய்யப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவேண்டும். புனித இஸ்லாத்தின் மகத்துவங்களை உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும். அண்ணலார்(ஸல்) அவர்களின் உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டவேண்டும். அல்லாஹ் நமக்கு வேறொரு வழிகாட்டி தருவது வரை நாம் செய்ய வேண்டிய ஜிஹாத் இதுவேயாகும். (மக்தூப் பக்கம் 66)

அஹ்மதியா ஜமாஅத் கடந்த நூறு வருடங்களாக உலகெங்கும் இப்புனிதப் போரில் ஈடுபட்டு கோடிக் கணக்கான மக்களின் உள்ளங்களை வென்று இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால் இஸ்மியின் மௌலானாவைப் போன்றவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களாக இருப்பவர்களைக் காபிர்களாக்குவதில்தான் கவனமும், வேகமும் காட்டுகிறார்களேயொழிய உலகில் இஸ்லாத்தைப் பரவச் செய்ய அவர்களால் இயலாது ஏனென்றால் அதற்குப் பல தியாகங்கள் செய்ய வேண்டும். இவர்களுக்குத்தான் கத்தம், ராத்தீபு, மௌலூது, கந்தூரி போன்ற பித்அத்துகளைச் செய்வதற்கே நேரம் போதாதே! முஷ்ரிக்கீன்களின் ஆசாரங்களை அப்படியே பின்பற்றி நடப்பதற்கு பொழுது போதாதே! இதில் இந்தக் குழப்பவாதிகளுக்கு இஸ்லாத்தைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமேது?

பாகிஸ்தான் அரசு அங்கு வாழும் எழுபதுலட்சம் அஹ்மதிகளை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அறிவித்ததைக் கண்டு ஆனந்தக் கூத்தாடும் மௌலான அதே நிலை இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் உருவாக்க வேண்டுமென்று மனப்பால் குடிக்கிறார். ஆனால் அஹ்மதிகளை காபிர் பத்வா கொடுத்தவர்களின் நிலைமையை ஆசிரியர் சிந்திக்க தவறிவிட்டார். 'ராபிதத்துல் ஆலமீன் இஸ்லாம்' என்ற அமைப்பு அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர் என அறிவிக்க காரணமாயிருந்த மன்னர் பைசலுககு நேர்ந்த கதியென்ன? 1974 ஆம் ஆண்டு அஹ்மதிகளை முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என சட்டம் இயற்றிய அதிபர் பூட்டோவிற்கு நேர்ந்த கதி என்ன? அஹ்மதிகளின் அடிப்படை உரிமைகளை பறித்த ஜியா உல் ஹக் நேர்ந்த கதி என்ன? இவற்றையெல்லாம் இவர் எண்ணிப் பார்க்கவில்லை.

அஹ்மதிகளுக்கு எதிராக செயல்பட்ட இத்தகையோருக்கு இறைவன் வழங்கிய தீர்ப்பு என்ன? மன்னர் பைசல் தனது சொந்த மருமகனாலேயே கொலையுண்டதும் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தும் காப்பாற்றஇயலாமற் போய் அதிபர் பூட்டோ தூக்கிலிடப்பட்டதும் எளிதில் மறக்கக் கூடியவையா? அஹ்மதிகளின் அடிப்படை உரிமைகளை பறித்த ஜியாவுல் ஹக் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் மறக்கமுடியுமா? அஹ்மதிகளுக்கு எதிராக இவர்கள் அளித்த தீர்ப்பு சரியானது என்றால் இவர்களுக்கு அவமானகரமான அகால மரணம் ஏன் ஏற்பட்டது?

அடுத்து இஸ்மியின் ஆசிர்வாதத்துடன் மௌலான அஹ்மதிகள் மீது செய்திருக்கும் குற்றச்சாட்டு(?)

'ஆட்சியில் இருப்பவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று திருக்குரானில் இருந்து ஆதாரம் காட்டி மக்களை மடக்கினார்? என்பதாகும் (பக்கம் 11)

'நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதர்(ஸல்) அவர்களையும், உங்களுடைய ஆட்சியாளர்களையும் அனுசரித்து நடப்பீர்களாக!" என்று திருமறை தெளிவாகப் போதிக்கிறது. இறைவனின் இந்த போதனைகளின் படி கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக எந்தவிதமான கிளர்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ, அரசாங்கத்திற்கு எதிரான பணிகளிலோ ஈடுபடாமல் அமைதியோடும், சமாதானத்தோடும் அஹ்மதியா இயக்கம் செயல்பட்டு வருகிறது. உலகில் உள்ள எந்த அரசாங்கதிற்கும், எந்தத் தொந்தரவும்கொடுக்காமல், இஸ்லாமிய பிரச்சாரம் ஒன்றையே தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறது. அஹ்மதியா ஜமாத்தின் இந்தச் சமாதானக் கொள்கை மௌலானாவிற்கும், இஸ்மிக்கும் பிடிக்கவில்லை போலும்!

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'எந்த ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் அமைதியாகவும், சமாதானத்தோடும், சுதந்திரமாகவும் தங்கள் கடமைகளை நிறைவேற்றிவருகிறார்களோ நன்மையையும், நேரான மார்க்கத்தையும் பரவச் செய்வதில் அவர்களுக்கு எந்தத்தடையும் இல்லையோ அந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியோ, போராட்டமோ செய்யக் கூடாது என்பது இஸ்லாமிய ஷரியத்தின் கட்டளை என்பது எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொள்ளும் ஒன்றாகும்.
(தப்லீக்கே ரிசாலத் பாகம் 1)

சரியத்தின் இந்தக் கட்டளைப்படி அஹ்மதிகள் தாங்கள் வாழும் நாட்டில் ஆட்சிக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்றுக் கூறுவது அஹ்மதிகளைக் காபிர்களாக்குவதற்குரிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது மௌலானாவிற்கு!
Read more »

மரியத்தின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை. எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில் எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை உலகில் பெறும் மாற்றம் ஏற்பட்டு விடும். அதன் பிறகும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை. அக்கால மக்கள் தங்களுடைய அறிவு வளர்ச்சியால் இத்தகைய மூடநம்பிக்கைகளை வெறுப்புடன் நோக்குவார்கள். அந்த காலத்தில் மூன்று நூற்றாண்டுகள் முடிவு பெற்றிருக்காது. எவெரேல்லாம் ஈசாவின் வருகைக்காக காத்து கொண்டிருந்தார்களோ அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தனது மூடநம்பிக்கையினால் நிராசையடைந்து, பரிதாபத்திற்குரிய நிலையில் வேறுவழியின்றி அக்கொள்கையை கைவிட்டு விடுவார்கள். ஒரு தலைமையின் கீழ் உலகம் இயங்கும். அதற்கு விதையிடவே நான் வந்திருக்கிறேன். அதற்கான பணிகளுக்காகவே எனது கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அந்த விதைகள் வளர்ந்து பல்கிப் பெருகும். அவை பூக்களாக மலர்ந்து பழங்களை தரும். அதனை உலகில் எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது. (தத்கிரத்துஷ் ஷஹாததைன்: பக்கம்: 64-69)

Read more »

சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் கூற்றுக்கு பதில் (அஹ்லே குர்ஆன்)

சென்னை சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் நிர்வாகி அவர்களுக்கு நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் உறுப்பினர் முஹம்மது அலி எழுதிய கடிதம் அஸ்ஸலாமு அலைக்கும்,வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு.


நான் 2010 ஏப்ரல் மாத இறுதியில் சென்னைக்கு வந்திருந்தேன். அது சமயம் எண்கள் அஹ்மதி சகோதரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சில தினங்களுக்கு முன் தாங்கள் எண்கள் ஜமாஅத் சகோதரர்களை கருத்து பரிமாற்றத்திற்கு அழைத்ததால் சில சகோதரர்களுடன் தங்களை சந்தித்து பேசிய விபரங்களை என்னிடம் கூறினார்கள்.


தாங்கள் தங்கள் தலைவர், ரஷாது கலீபா கம்ப்யூட்டர் மூலம் திருக்குர்ஆனை ஆய்வு செய்து அத்தௌபா என்ற அத்தியாயம் 128 வது வசனம் இடைச் செருகல் என்று கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறீர்கள். மேலும் அந்த வசனத்தில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ரவூபுர் ரஹீம் என்று கூறப்பட்டிருக்கிறது. ரவூபுர் ரஹீம் என்ற பண்பு அல்லாஹ்விற்கு மட்டும் உரியது. அதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு இருப்பதாக அந்த வசனத்தில் வருவதால் அது ஷிர்க் என்ற இணை வைத்தல் ஆகும். எனவே அந்த வசனம் இடைச்செருகல்தான் என்றும் கூறியிருக்கிறீர்கள். தாங்கள் இவ்வாறு கூறியதாக எனது சகோதரர் என்னிடம் கூறியதும் நான் மிகப் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். நான் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த முஸ்லிம் சகோதரரும் அதிர்ச்சி அடைவதுடன் மனவருத்ததிற்கும் உள்ளாவார் என்பது உறுதி.


திருக்குரானில் இருந்து ஒரு கேள்வி எழுந்தால் திருக்குரானிலிருந்தே அதற்கான பதில் கிடைக்கும் என்பது அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்திற்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதே போன்று எங்கள் சகோதரர் அதிலிருந்து அழகான ஒரு வசனத்தை உங்களிடம் எடுத்துக் கூறினார். இன்னா நஹ்னு நஸ்ஸல்னத் திக்ர வ இன்னா லஹு லஹாபிழூன் (15:10) நாமே இந்த குர்ஆனை இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதை பாதுகாத்து வருவோம்.


இந்த இறைவசனத்தின்படி இறுதிகாலம் வரை திருக்குரானை பாதுகாத்து வருவதாக அல்லாஹ் கூறியிருப்பதால் இதில் இடைச்செருகல் இப்போதும் கிடையாது. இனி எப்போதும் எவராலும் நுழைக்கவும் முடியாது ஏனென்றால் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பதால் அதனுடைய பரிசுத்ததன்மைக்கும், மகிமைக்கும் இறுதிகாலம் வரை பொறுப்பு ஏற்று அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். என்று எங்கள் சகோதரர் கூறியிருக்கிறார். தாங்கள் அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டாலும் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீங்கள் கூறிய விளக்கம், திருக்குர்ஆன் அல்லாஹ் இறக்கிய இறுதி வேதம் என்றும் இதற்குப் பின் வேறு மார்க்கமும் இல்லை. வேறு வேத நூலும் இல்லை. திருக்குர்ஆன் இறுதி காலம் வரை ஜீவித்திருக்கும் வேத நூல் ஆகும். ஆகவே இந்த குர்ஆனை இறுதி காலம் வரை நாமே பாதுகாத்து வருவோம் என்று நாம் அறிந்து கொள்வதற்காக இந்த இறை வசனத்தை இறக்கியிருக்கின்றான் என்று கூறியிருக்கிறீர்கள்.


அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் உறுதியான நம்பிக்கை யாதெனின்,ஹஸ்ரத் கத்தமுன்னபியீன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இறுதி காலம் வரை இறங்கிய இறை வசனங்களால் அவர்களின் காலத்திலேயே பரிபூரணமாக்கப்பட்ட பரிசுத்த வேதநூலாகிய திருக்குர்ஆனுக்கும், இன்று நம்முடைய நடைமுறையில் இருக்கும் திருக்குரானுக்கும் ஒரு மாற்றமும் இல்லை, அதாவது ஒரு எழுத்துக்கூட, ஒரு புள்ளி கூட அதில் சேர்க்கப்படவில்லை: எடுக்கப்படவுமில்லை. அல்லாஹ்வின் வார்த்தைப்பாடாகிய (15:10) இறைவசனத்தின் ஒளியில் திருக்குரானின் இடைச்செருகல் இல்லவேயில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளோம்.


அல்லாஹ் கூறுகிறான்: "நிச்சயமாக நாம் குரானை(மனிதர்கள்) நினைவு கூர்ந்து அறிவுரை பெரும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? (54:18)


மேற்கண்ட வசனத்தைப் பாருங்கள், மனிதர்கள் சிந்தித்து ஆராய்ந்து நல அறிவுரியாயினைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. ஆகவே நீங்கள் தக்வா என்னும் இறை அச்சத்துடன் (15:10) வசனத்தை சிந்தித்து ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது குர்ஆனுடைய மகிமையும்,பரிசுத்தத்தன்மையும் எத்தனை அற்புதமானது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். மேலும் திருக்குரானில் இடைச்செருகல் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள். இறைவனுடைய படைப்பில் சிந்திக்கக்கூடிய தகுதியைப் பெற்றிருப்பது மனிதர்கள் மட்டுமே,மனிதர்கள் உருவாக்கிய எந்திரமகிய கம்ப்யூட்டரால் நிச்சயமாக சிந்திக்கமுடியாது என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சுமார்1400 வருடத்திற்கு மேலாக திருக்குர்ஆன் அத்-தௌபா அத்தியாயத்தின்128 வது வசனம் நிரந்தரமாக இருந்து வருகிறது. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு பல்லாயிரக்கணக்கான இறைநேசர்கள்,அல்லாஹ்வுடன் தொடர்புகொண்ட வலிமார்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் எவரும் இந்த வசனத்தை இடைச் செருகல் என்று கூறவில்லை. ஆனால் தங்களுடைய தலைவர் கம்ப்யூட்டர் மூலம் இந்த 9:128 வசனம் இடைச் செருகல் என்று கண்டுபிடித்துள்ளார் என கூறுகிறீர்கள்.


எனவே இப்போது உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். திருக்குர்ஆன் 15:30 இல் உள்ள, நிச்சயமாக திருக்குரானை நாமே பாதுகாத்து வருவோம் என்ற வார்த்தைப்பாட்டின்படி இடைச்செருகல் ஏற்படாதபடி திருக்குரானின் மகத்துவத்தை அதனுடைய புனித தன்மையை அல்லாஹ் பாதுகாத்து வருகிறான் என்று நம்புகிறீர்களா?நீங்கள் குர்ஆன் 15:18 ஆயத்தின்படி சிந்தித்து ஆராய்ந்து திருக்குரானின் மகத்துவம், புனிதத் தன்மைக்கு இழிவு ஏற்படாத நல்ல முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்து ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் பண்பாகிய ரவூபுர் ரஹீம் என்று கூறப்பட்டிருப்பது ஷிர்க் என்னும் இணைவைத்தல் ஆகும். எனவே, இந்த வசனம் இடைச்செருகல் என்று கூறியிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் படைப்புகளில் மனிதானைப் போன்ற சிறந்த படைப்பு வேறு இல்லை. "லகது ஹலக்னல் இன்ஸான பீ அஹ்ஸனி தக்வீம் மனிதனை நாம் சிறந்த முறையில் படைத்துள்ளோம் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். (95:5)


அதைப் பற்றி சிறிது ஆராய்ந்து பார்க்கலாம் (ஹதீது குத்ஸியாக இவ்வாறு வருகிறது) ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்: " நான் மறைவானப் புதையல் போன்று இருந்தேன், அதற்காக நான் மனிதனைப் படைத்தேன்". (மிஷ்காத்) மேலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உம்மத்திற்கு கட்டளையாகக் கூறுகிறார்கள்.


"நீங்கள் அல்லாஹ்வின் அழகிய ஸிபத் என்னும் நற்பண்புகளை ஏற்று நடக்க வேண்டும்." (மிஷ்காத்). நற்பண்புகள் பற்றி நாம் அறிந்து அதனை நாம் ஏற்று நடக்க வேண்டும்.


திருக்குரானில் அல்லாஹ் தன்னுடைய சுமார் 100 சிபத்துக்கள் பற்றி அறிவித்திருக்கின்றான். அந்த பண்புகள் சிறப்பு பண்புகள் என்றும்,நற்பண்புகள் என்றும் இரண்டு விதமாக உள்ளன. இதில் நற்பண்புகள் என்ற அழகிய பண்புகளை ஏற்று நடந்து இறை நேசர்கள் ஆகுவதற்கு தகுதியனவர்களாக மனிதர்களை அல்லாஹ் படைத்திருக்கின்றான். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பண்புகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று மனித குளம் அனைத்திற்கும் முன் மாதிரியாக நடந்து காட்டியிருப்பதால், அல்லாஹ் அவர்களை ரவூபுர் ரஹீம் என்று மேன்மைப்படுத்தி கூறியிருக்கிறான். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தியாகிய நாமும் அந்த நற்பண்புகளை ஏற்று நடந்து உண்மையான நம்பிக்கையாளர்களாக, உண்மையான நல்லடியார்களாக ஆகுவதற்கு முயற்சி செய்யவேண்டும். மனிதர்கள் அந்த நற்பண்புகளை எவ்வளவு முழுமையாக ஏற்று நடந்தாலும் அது எல்லைக்கு உட்பட்டதே ஆகும். ஆனால் அல்லாஹ்விடம் அந்த பண்புகள் எல்லையற்றதாகும் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


அடுத்து அல்லாஹ்வின் சிறப்புப் பண்புகளை அல்லது வேறு படைப்பினங்களுக்கோ இருப்பதாக கூறுவது 'ஷிர்க்' என்னும் இணைவைத்தல் ஆகும். உதாரணமாக, அல்லாஹ் ஹையுல் கையூம். இதில் அல்ஹை, 'அல்-கையூம்' என்ற சிறப்புப் பண்புகள் இருக்கின்றன. அல்ஹய்யு என்றால் அல்லாஹ் என்றென்றும் ஜீவித்திருப்பவன். அல் கய்யூம் என்றால் மாற்றமே இல்லாமல் நிலைத்திருப்பவன். இந்த அல்ஹையும் என்ற சிபத்துகளை எவருக்கு கொடுத்தாலும் நிச்சயமாக அது ஷிர்க் ஆகிவிடும். அடுத்து அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் என்ற அல் - அலீம் என்ற பண்பையும் எவருக்கு கொடுத்தாலும் அது ஷிர்க் ஆகும். இதைப் போன்ற சிறப்புப் பண்புகள் பல உள்ளன. அவற்றை அல்லாஹ்வை தவிர எவருக்கு கொடுத்தாலும் அது இணை வைத்தல் ஆகிவிடும். அடுத்து திருக்குரானில் ஒரு கேள்வி எழுந்தால் அதற்கு திருக்குரானில் இருந்தே பதில் கிடைக்கும் என்று கூறியிருக்கிறேன். அதற்க்கான சில எடுத்துக் காட்டுகளை கூறுகிறேன். அல்லாஹ்வின் நற்பண்புகளில் ஒன்று அல்-ஹலீம், இதன் பொருள் அல்லாஹ் இரக்கமானவன், மென்மையானவன்,அமைதியானவன் என்பதாகும். அத்-தௌபா அதிகாரத்தின் 114 வது வசனத்தைப் பாருங்கள். அதில் ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்களை ஹலீம் என்ற பண்பு உள்ளவராக இருக்கிறார் என்று அல்லாஹ் கூறுகிறான். (9:114) தங்களுடைய கூற்றின்படி இந்த வசனத்தை ஷிர்க் என்று கூறி நீக்கிவிடுவீர்களா? (நவூதுபில்லாஹ் மின்ஹா)


அடுத்து, அல்லாஹ் அல் -அஹ்ப்வு என்ற பண்பு உடையவன், அடியார்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், திருந்தி, மனம் உருகி மன்னிப்பை வேண்டினால், அல்லாஹ் இந்த அஹ்ப்வு என்ற பண்பின் மூலம் மன்னிக்கின்றான். நீங்கள் அல்-அஹ்ராப் 200 வது வசனத்தைப் பாருங்கள்.


அதில் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான். (நபியே நீர்) அஹ்ப்வு என்ற (சிபத்தாகிய) மன்னிப்பை கடைபிடிப்பீராக என்று கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். (7:200) இந்த வசனத்தை ஷிர்க் என்று கூறுவீர்களா? மேலும் அஸ்-ஸபூர், அதாவது அல்லாஹ் பொறுமையாளன். நம்பிக்கையலர்களுக்கான ஒரு இறை கட்டளையாக பொறுமையையும், தொழுகையையும் மேற்கொண்டு (அல்லாஹாவிடம்) உதவி தேடுங்கள் (2:46) என்று வருகிறது. அல்லாஹ்வின் பண்பாகிய பொறுமையை ஏற்று நடக்காதவன் சிறந்த மனிதனாக, ஸாலிஹீனாக இருக்க முடியுமா? மேலும் அல்லாஹ்வின் நற்பண்பில் இருக்க முடியுமா?மேலும் அல்லாஹ்வின் நற்பண்பில் ஒன்று அல்-அத்ல் என்பதாகும். இதன் பொருள் அல்லாஹ் நீதியானவன். திருக்குரானில் சில இடங்களில் இந்த அத்ல் என்ற பண்பை நம்பிக்கையாளர்கள் ஏற்று நடக்க வேண்டும் என்ற கட்டளை இருக்கிறது.


இவ்வாறு இன்னும் பல ஆதாரங்கள் திருக்குரானில் எடுத்துக் காட்டலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட சான்றுகள் உங்கள் கருத்துக்களை மாற்றுவதற்கு போதுமானவையாக இருக்கும் என்ற அபிப்ராயத்துடன் எனது நிருபத்தை நிறைவு செய்கிறேன். மேலும் உங்களிடம் பணிவுடன் ஒரு செய்தியைக் கூறுகிறேன். அதாவது நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு கிடைத்த இஸ்லாம் மார்கத்தின் மகிமை, புனிதத் தன்மை அழகு பற்றி தெளிவாக அறிந்து கொள்ள அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்துடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம் முஹம்மது அலி, சங்கரன் கோயில்

Read more »