அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 14, 2014

கெண்டைக்கால் திறத்தல் என்பதன் விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 249 இல் கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 68:42) கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்பட்டதில்லை என்பதை இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று கூறவில்லை.

மாறாக, மனிதன் திரும்ப உய்ர்ப்பிக்கப்பட்ட பின் மறுமை நாளில் இறைவனைக் காண முடியும் என்றும் கூறுகிறது.

மறுமையில் விசாரணை நடத்துவதற்காக வானவர்கள் புடை சூழ இறைவன் வருவான் என்றும் கூறப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 89:22)

அவ்வாறு வரும்போது தன் காலில் விழுந்து பணியுமாறு மக்களுக்கு உத்தரவு விடுவான். அதுதான் இங்கே கூறப்பட்டுள்ளது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக் காலில் விழுந்து மக்களை பணியச் செய்வான் என்று பொருள்.

இவ்வுலகில் இறைவனுக்கு பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்: மற்றவர்கள் இறைவன் காலில் விழ முடியாது. இது நபிகள் நாயகம் அளித்த விளக்கம். (புகாரியில் 4919 வது ஹதீஸில் இதைக் காணலாம்)

நம் விளக்கம்:

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்படவில்லை. என்பதை இஸ்லாம் கூறுகிறது என்பது தவறாகும். இவ்வுலகில் இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. ஆனால் அகக் கண்ணால்  காண முடியும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும். நபி (ஸல்) அவர்கள் இறைவனை தம் அகக் கண்ணால் இருமுறை கண்டது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக்காலில் விழுந்து மக்களைப் பணியச் செய்வான் என்று பொருள் என்று பி.ஜே எழுதியுள்ளார். கெண்டைக்கால் திறக்கப்படும் நாள் என்றால் உண்மை வெளிப்படும் நாள் என்றுதான் பொருள்படும்.

உண்மை வெளிப்படுத்தப்படும் நாளில் சிரம்பணிந்து வணங்குவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் (அதற்கான) ஆற்றல் பெற்றிருக்க மாட்டார்கள் என்றுதான் பொருள். (திருக்குர்ஆன் 68:43)

2) காலில் விழுந்து வணங்குதல் என்பதுதான் சொல் வழக்காகும். கெண்டைக்காலில் விழுந்து வணங்குதல் என்பது சொல் வழக்கன்று.

3) சிரம்பணிந்து வணங்குவதற்கு கெண்டைக்கால் திறந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கெண்டைக்கால் திறக்காவிட்டாலும் காலில் விழுந்து வணங்கலாம்

4) 68:42 வசனத்திற்கு, M.அப்துல் வஹ்ஹாப் தன் திருக்குர்ஆன் தர்ஜுமாவின் அடிக்குறிப்பு எண் 385 இல் கெண்டைக்கால் வெளியாக்கப்படுவது என்பது அரபு இலக்கிய வழக்காற்றில் எந்தவித திரை மறைவின்றி ஒன்றின் கடுமையான தன்மை வெளியாக்கப்படும் போது என்று பொருள்படும். இது சர்வசாதாரணமாக அரபி மொழியில் வருகிறது. கஷ்பில் அம்ரு அன்ஸாகிஹி கெண்டைக்கால் முற்றிலும் தெரிந்தது – அதாவது ஒன்றின் நிலை சந்தேகத்துக்கு இடமின்றி முழுவதாகத் தெரிந்தது – என்று இமாம் குர்துபீ ஓர் உதாரணம் கொடுக்கிறார்கள்.

கியாமத் நாளைச் சந்திக்கும் வரை மனிதர்கள் அதைப் பற்றிய அறிவை செவி வழிச் செய்தியாகவோ, எழுத்தின் வாயிலாகவோ ஓரளவுதான் தெரிந்திருப்பார்கள். ஆனால் அதை நேரெதிரே பார்க்கும் போதுதான் அதன் பயங்கரத் தன்மையை உணர்வார்கள் என்று எழுதுகிறார்.

5) தமிழ் தர்ஜுமாக்களில், மௌதூதி, தப்ஸீருல் ஹமீது ஆகியோரும், ஆங்கில மொழியாக்கங்களில் யூசுப் அலி, இப்னு கஸீர், M.H ஸாகிர், வஹீதுத்தீன் கான், மௌலவி முகம்மதலி ஆகியோரும் கெண்டைக்கால் என்பதற்கு அல்லாஹ்வின் கெண்டைக்கால் என்று எழுதவில்லை. மறுமையின் கடுமையான நிகழ்வுகள் வெளிப்படுதல், மறுமையில் உண்மைகள் வெளிப்படுதல் என்றுதான் விளக்கம் தந்துள்ளனர். பாகவியோ திரை அகற்றப்பட்டு விடும் நாள் என்று எழுதியுள்ளார். மௌலவி முகம்மதலி தன் கருத்துக்கு பைழாவி, ஜம்ஹஷ்ரி ஆகிய திருக்குர்ஆன் விரிவுரைகளை மேற்கோள் காட்டுகிறார்.

திருக்குர்ஆன் 89:23 வசனத்தில், வானவர்கள் அணியணியாக நிற்கும் நிலையில் உமது இறைவன் வருகை தருவான் என்று வருகிறது. விசாரணைக்காக வருவான் என்று பி.ஜே கூறியிருப்பது தவறாகும். அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நிராகரிப்பவர்களிடம் வருகின்றனர் என்றால். அவர்கள் தண்டனையைக் கொண்டு வருகின்றனர் என்று பொருள் என திருக்குர்ஆன் விளக்குகிறது. (இது குறித்து 59:3; 2:211 - ஆகியவற்றில் காண்க) அதுவே இப்போதும் ஏற்படும். இறைவனுடைய வருகையும், வானவர்களின் வருகையும் நிராகரிப்பவர்களுக்கு அழிவு ஏற்படப் போகிறது என்பதைத் தெரிவிக்கிறது. வரலாறுகளில் வானவர்களைக் கண்டனர்: வானவர்கள் அவர்களை எதிர்த்துப் போர் செய்து கல்மாரி பொழிந்தனர். அந்த வானவர்களைக் கண்டதால் ஏற்பட்ட உறுதிப்பாட்டினால், பின்னர் அவர்கள் முஸ்லிம்களைச் சந்தித்த போது, பத்ருப் போரில் உங்கள் அருகில் இவ்வகையான போர்க் கருவிகள் அணிந்த குதிரைபடை வீரர்கள் போர் செய்து கொண்டிருந்தனர் என்றார்கள். இதற்கு நபித்தோழரும், ஆம்: நானும் கண்டேன் எனக் கூறி அதனை உண்மைப்படுத்தினர். பத்ருப் போரின்போது நிராகரித்தவர்களும் நம்பிக்கை கொண்டவர்களும் வானவர்களைக் காணும் அளவிற்கு அந்த ஆன்மீகக் காட்சி பொதுவாகவும், தெளிவாகவும் நிகழ்ந்தது என்று இதிலிருந்து புலனாகிறது. (அடிக்குறிப்பு எண் 5, அஹ்மதிய்யா முஸ்லிம்ஜமாஅத் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம், பக்கம் 1358)

பி.ஜே யின் தவறான விளக்கம்: 89:23 வசனத்துக்கு புகாரி 4919 நபிமொழியை பி.ஜே தவறாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் புகாரி இமாம் அவர்கள் இந்த நபிமொழிக்கு 68:42 வசனத்தைத் தான் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இதற்கு ஒன்றின் நிலை சந்தேகத்திற்கிடமின்றி முழுவதுமாக தெரிகிறது என்ற இமாம் குர்துபி தரும் விளக்கமே சரியாகும்.

ஹதீஸ் எண் 4910 ன் படி, இறைவனுக்கு மூமின்கள் சஜ்தா செய்வார்கள் என்றும், மற்றவர்களால் சஜ்தா செய்ய முடியாது என்றுதான் கூறப்பட்டுள்ளது.
Read more »

Nov 11, 2014

ஹஸ்ரத் இப்ராஹீம் நபிக்கு பி.ஜே செய்த அவமரியாதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 336 இல் நான் நோயாளி எனக் கூறினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இப்ராஹீம் நபி அவர்கள் ஊர் மக்களெல்லாம் திருவிழாவைக் கொண்டாட வெளியேறிய பின் சிலைகளைத் தகர்ப்பதற்காக தாம் நோயாளி என்று கூறி திருவிழாவுக்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள் (37:89)

இது போல் ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற்காக நல்ல விளைவை ஏற்படுத்துவதற்காக கூறப்படும் பொய் குற்றமாகாது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று எழுதியுள்ளார். மேலும் சத்தியப் பிரச்சாரத்தின் போது இது போன்ற வழிமுறைகளை கையாளுவது தடுக்கப்பட்டதல்ல என்றும் கூறியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432)

நம் விளக்கம்:

இந்த வசனத்தில் 37:90 இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்பதை திருக்குர்ஆன் அல்லது நம்பத்தகுந்த நபிமொழியில் இருந்து பி.ஜே நிரூபிக்க முடியுமா?

அல்லாஹ்வும் ரஸுலும் கூறாத ஒன்றை பி.ஜே இட்டுக்கட்டி கூறியுள்ளார் என்பதை அவரால் மறுக்க முடியுமா?

நான் நோயாளி என்று ஒரு நபி கூறுகின்ற போது அவர் நோயாளி இல்லை என்று கூறுகின்ற அதிகாரம் பி.ஜே க்கு எப்படி வந்தது?

இப்ராஹீம் நபி ஒரு உண்மையான நபியாக இருந்தார் என்று அல்லாஹ் கூறுகிறான். (19:42) ஆனால் பி.ஜே இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்று கூறுகின்றார். அல்லாஹ்வின் வார்த்தையை மறுக்கின்ற பி.ஜே தவ்ஹீதுவாதியா?

ஒரு நபி பொய் சொல்லமாட்டார்: பொய் சொல்லக் கூடியவர் நபியாக இருக்கமாட்டார் என்ற ஒரு நபியைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை எவ்வாறு அழைப்பது.?

இப்ராஹீம் நபியின் இந்த சம்பவத்திலிருந்து ஒரு கொள்கையை நிலைநாட்ட பொய் கூறலாம் என்று பி.ஜே கூறுகிறார். இதிலிருந்து தவ்ஹீது ஜமாஅத்தின் கொள்கைகள் பொய்யினால் நிலைநாட்டப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகவில்லையா?

நல்ல விளைவை ஏற்படுத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று கூறுகிறார். ஆனால் திருக்குர்ஆனோ பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக(3:62) என்றும் ஒவ்வொரு பொய்யரின் மீதும் சைத்தான் இறங்குகின்றனர் (26:223) என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட நல்ல விளைவை (!) ஏற்படுத்தும் எத்தனை பொய்களை பிறரை ஏமாற்ற பி.ஜே கூறினாரோ! அல்லாஹ்வே நன்கறிவான்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் இல், 432 இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? எனும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

திருக்குர்ஆன் 21:63 இல், இப்ராஹீமே, நீர் தாம் எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தீரா? என்று கேட்டனர். இல்லை அவற்றில் பெரிய சிலை தான் செய்தது என்று தமிழாக்கம் செய்துவிட்டு விளக்க அட்டவணையில் பெரிய சிலைதான் உடைத்தது என்று கூறினார்கள்... ஆனால் அவர் கூறியது உண்மையல்ல.

நம் விளக்கம். பி.ஜெக்கு ஒரு நபியின் இலக்கணமும் தெரியவில்லை. பொய்யின் இலக்கணமும் தெரியவில்லை. ஒரு கூற்று பொய் என்பதற்கு நிபந்தனை, அது பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாதது சொல்லப்பட்டிருக்க வேண்டும், சிலை உடைப்பு விசயத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்மை ஏமாற்றுவதற்காக அவர்களது சமுதாயத்தினர் துளியும் கருதவில்லை. காரணம் இச்செயலை செய்தவர் ஒருவர் உண்டு, யார் என்று பெரிய சிலையிடம் கேளுங்கள் என்று கூறினார். எனவே அவர்கள் வெட்கத்தால் தலைகுனிந்தவர்களாக, திரும்பிச் சென்றதாக அடுத்து வரும் வசனங்கள் கூறுகிறது. (21:65,66) எனவே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) கூறியது பொய் அல்ல. alim.org இல் மாலிக் அவர்கள் திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தை இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்.  He replied, "Surely someone has done it; the chief of them, that is! Ask them, if they can speak!" மேல் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். ஆனால் சிலை வணங்கிகளாக இருந்த அந்த சமுதாயத்தினர் சுமத்தாத குற்றச் சாட்டை பி.ஜே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) மீது சுமத்துகின்றார் இல்லை என்று பொய் கூறியதுடன் பெரிய சிலை மீது அக்குற்றத்தைப் போட்டதாக எழுதியுள்ளார். இதனை நியாயப்படுத்த திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432 இல் அவர் கூறுவதாவது, சொல்பவருக்கும் பொய் சொல்கிறோம் என்று தெரிகிறது. கேட்பவருக்கும் வேறு ஒரு அர்த்தத்தில் சொல்லப்படுகின்ற பொய் என்று தெரிகிறது அப்படியிருந்தால் இது பொய் வடிவில் அமைந்த மெய் என்றுதான் கூற வேண்டும் என்று பி.ஜே எழுதுகிறார்.

அதாவது இப்ராஹீம் நபிக்கும், அந்த மக்களுக்கும் அது பொய் என்று தெரிகிறதாம். இப்படியிருந்தால் அது பொய் வடிவில் அமைந்த மெய்தான் என்கிறார். பி.ஜே.

நான் கேட்கிறேன்: இன்று ஏதோ சில அமைப்புகள் செய்கின்ற தீவிரவாத செயல்களுக்கு, ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதி என்றும் கூறுகின்றன. இதனை பி.ஜே மேலே சொன்ன அளவுகோலின் அடிப்படையில், முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை பொய். பொய் வடிவில் அமைந்த மெய் என்று ஏற்றுக் கொள்வார் போலும். உண்மையை வேறு வடிவில் கூற வேண்டுமே ஒழிய பொய்யை எந்த வடிவில் யார் கூறினாலும் அது பொய் தான். மெய்யாகாது. எனவே பி.ஜே எதிர்காலத்தில், பொய்க்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதை விட்டு விட வேண்டும். என்பதுதான் நம் வேண்டுகோள்.
Read more »

மலக்குகளைப் பற்றிய தவறான விளக்கம்.


ஈமான் கொள்ள வேண்டியவற்றுள் ஓர் அம்சம் மலக்குகள் மீது ஈமான் கொள்வதாகும். மலக்குகளைப்பற்றி பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்:

மனிதனின் தகுதியைப்பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.

இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள் இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபனை செய்திருப்பார்கள்? மலக்குகள் ஆரம்பத்தில் ஆட்சேபனை செய்தபோது அவர்களுடன் செய்த்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்?

செய்த்தான் அவர்களை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபனைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபனை செய்திருப்பார்கள்?

நம் விளக்கம்:


சொர்க்கத்தில் மலக்குகளுடன் சைத்தானும் இருந்தால் ஆதமின் படைப்பு பற்றி ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்
– என்று பி.ஜே எழுதுகிறார்.

இந்த அபத்தமான கருத்துக்கு பி,ஜே.


1. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் தரமுடியுமா?

2. அல்லாஹ் அவர்களுக்கு (மலக்குகளுக்கு) எதைக் கட்டளை இடுகின்றானோ அதற்கு அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 66:6) என்ற இறைவசனத்திற்கு மாற்றமாக சைத்தானின் தூண்டுதலுக்கு இரையாகி மலக்குகள் ஆட்சேபனை செய்து சூடுபட்டார்கள் என்று பி.ஜே யினால் எப்படி என்ன முடிகிறது?

இரண்டாவதாக கலைச் சொற்கள் (அரபி) எனும் தலைப்பில் இப்லீஸ் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தால் இப்லீஸ்

நம் விளக்கம்:

இவருடைய இக்கூற்றுக்கு, திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்களை இவர் காட்ட முடியுமா? அவன் (ஏற்கனவே) நிராகரிப்பவர்களைச் சேர்ந்தவனாக இருந்தான். (2:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே இப்லீஸ் நல்லவனாக இருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவன் நிராகரிப்பவனாகவே இருந்தான் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

மூன்றாவதாக வானவர்கள் – மலக்குகள் நம்புதல் எனும் தலைப்பில் வானவர்கள் நரகின் காவலர்கள் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

வானவர்கள் சொர்க்க வாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள். – 13:23, 15:46, 21:103, 41:31

நம் விளக்கம்:

பி.ஜே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்களை நாம் பார்க்கின்ற போது மலக்குகள் பணிவிடை செய்தார்கள் என்று எங்கும் வரவில்லை. மாறாக, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்து சுவர்க்கவாசிகளுக்கு ஸலாம் ச்கூருவார்கள் என்றும் சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கக்கூடிய அருட்கொடைகளை எடுத்துக்கூறுவார்கள் என்றுமே வருகிறது. எனவே பி.ஜே கூறியுள்ள மலக்குகள் பணிவிடை செய்வார்கள் என்பது தவறான கருத்தாகும்.

நான்காவதாக, மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் மலக்குகளை மலைக்குள் மௌத் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பி.ஜே சுயமாக தரும் விளக்கத்தின் அடிப்படையில், ஈஸா நபி இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார் என்றால், மலைக்குள் மௌத்தால் கைப்பற்றப்பட்ட உயிர்களைத் திரும்ப அவர்களின் உடலில் புகுத்தும் மலக்கின் பெயர் என்ன? அந்த மலைக்கு அப்படி ஒரு செயலைச் செய்வார் என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் உண்டா?
Read more »

Nov 10, 2014

இவ்வுலகில் இறைவனை காணமுடியும்!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல் பி.ஜே இறைவனைக் காண முடியுமா? என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார்.

அவனை பார்வைகள் அடைய முடியாது. அவனோ பார்வைகளை அடைகிறான். என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 6:103)

நம் விளக்கம்:

இறைவனை இவ்வுலகில் யாரும் புறக்கண்ணால் காண முடியாது அவனோ அகக்கண்ணின் மூலம் பார்வைகளை அடைகிறான். மறுமையில் அல்லாஹ்வை காண முடியும் என்று நபிமொழி மூலம் அறிகிறோம். இம்மையில் குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவே இருப்பார் (17:73) என்ற திருக்குர்ஆன் வசனம். இம்மையில் யார் தம் அகக்கண் மூலம் அல்லாஹ்வை காணவில்லையோ அவர்கள் மறுமையிலும் காண முடியாது என்பதை விளக்குகிறது.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல், திருக்குர்ஆன் 6:104 வசனத்துக்கு அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்று பொருள் கூறும் பி.ஜே தன் தர்ஜுமாவில்,

அவனைக் கண்கள் பார்க்காது: அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று தவறான பொருளைக் கூறியுள்ளார். இவ்வாறு தவறான பொருளை பி.ஜே கூறுவதன் காரணம் இவ்வுலகில் இறைவனை அகக்கண்ணாலும் காண முடியாது என்ற தன் கருத்தை தவறான பொருளின் மூலம் நிலை நாட்ட முயன்றுள்ளார்.

ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புறத்தில் இறைவனைப் பார்க்க முடியாதே தவிர அகத்தில் இறைவனைப் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது அகத்தால் இறைவனை இரண்டு முறை பார்த்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 285) இது அகக்கண்ணால் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பி.ஜே கூறுகிறார். இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடுதான் ஏற்படும் நன்மை ஏற்படாது என்று எழுதுகிறார். இது தவறான வாதமாகும். நாத்திகர்கள், இறைவன் உண்டு; மறுமை உண்டு என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடு தான் ஏற்படும். நன்மை ஏற்படாது என்று கூறுவதற்கும் பி.ஜே கூறுவதற்கும் அணுவளவும் வித்தியாசம் இல்லை.

இறைவனை இவ்வுலகில் அகக்கண்ணால் காண முடியும். என்று ஒருவன் நம்பி அவனைக் கண்டறிவதே அறிவுடைமையாகும்.

திருக்குர்ஆன் 17:73 வசனம். இந்த இ(ந்த உலகத்)தில் குருடராக இருப்பவர், மறுமையிலும் குருடராகவே இருப்பார் என்று கூறுகிறது. இந்த வசனம் இவ்வுலகில் இறைவனை காண முடியும் என்றும். அகக்கண்ணால் இவ்வுலகில் இறைவனைக் காணாதவர்கள் மறுமையில் குருடராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறது.

பி.ஜே எழுதுகிறார்:

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விடமுடியும் இது பி.ஜே யின் வாதம்.

இறைவன் இருப்பதாக கூறி எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவன் இல்லை என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும் என்று இறை மறுப்பாளர்கள் கூறுவதற்கும், பி.ஜே யின் வாதத்திற்கும் இடையில் இம்மியளவும் வேறுபாடில்லை.

இறைவனை அகக்கண்ணால் காண முடியும் என்பது உண்மையா? பொய்யா? என்பதைக் காண வேண்டும். உண்மை என்றால் நன்மைதான் விளையும். பொய் என்றால் கேடுதான் விளையும் என்று நம்புவதே அறிவுடையோரின் செயலாகும்.

கனவும் இறைச் செய்தியும்.

1) நபி (ஸல்) அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். (புகாரி ஹதீஸ் எண் 3)

ஹஸ்ரத் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் தன் மகனை அறுப்பது போல் கண்ட கனவும் ஓர் இறைச் செய்தியே. அதனால்தான் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையே! அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள் என்று கூறி தந்தை கண்ட கனவி இறை கட்டளை என்று கூறுகிறார்.

புறக்கண்ணை விட அகக்கண்ணுக்கு ஆற்றல் மிகமிக அதிகம் என்பதினாலும் இறைவன் தன் கட்டளைகளையும், வஹியையும், இறைக் காட்சியையும் அகக்கண்ணால் இரு முறை கண்டதைத் திருக்குர்ஆன் கூறுகிறது. (53:12,14) ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதனையே (முஸ்லிம்285) கூறியுள்ளார்கள்.

எனவே இம்மையில் இறைவனை அகக் கண்ணால் காண முடியும் என்று திருக்குரானும் நபிமொழியும் கூறுகிறது. இவ்வாறு கூறுபவர்கள் வறுபட்ட கருத்தைக் கூறுகின்றனர் என்பது தெளிவு.

மேலும் மூஸா நபி, என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக என்று வேண்டினார் இதற்கு அவன் உம்மால் என்னை ஒரு போதும் காணவியலாது.(7:144) என்று கூறுகிறான். அதாவது புறக்கண்ணால் தன்னைக் காணவியலாது என்றே இறைவன் கூறுகிறான். அதனை நிரூபிக்க மலையைத் தவிடுபொடியாக்கிக் காட்டுகிறான். அவ்வளவு ஏன்? நம் புறக்கண்ணால் சூரியனின் ஒளியைக் காணும் போது கண் கூசுகிறது. எனவே, ஒளிமயமான இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. அகக்கண்ணால் காண முடியும் என்பதையே அந்த உள்ளம் தான் கண்டதைக் குறித்துப் பொய்யுரைக்கவில்லை. அவர் பார்த்தது குறித்து நீங்கள் அவருடன் வாக்குவாதம் செய்கிறீர்களா? நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:12-14) இந்த வசனங்கள் கூறுகின்றன.

உள்ளம் கண்டது என்றும், மறு முறையும் அவனைக் கண்டார் என்றும், இறைவனை நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜில் தன் அகக் கண்ணால் இருமுறை கண்டது கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தது மிஹ்ராஜ் சம்பவத்தைத்தானே தவிர, ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி அன்று, இச்சம்பவங்கள் மிஹ்ராஜ் சம்பவங்கள் என்பதை நபிமொழியுடன் ஒப்பு நோக்கிப் பார்த்தால் தெளிவாகும். திருக்குர்ஆன் முதல் வசனம் இறங்கும் போதே நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை ஹிரா குகையில் கண்டுவிட்டார்கள். அதன் பின்னர் பல முறை அவர்களைக் கண்டு விட்டார்கள். எனவே மிஹ்ராஜின் போது நபி (ஸல்) அவர்கள் தன் மனக்கண்ணால் கண்டது இறைக்காட்சியைத் தவிர ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்ல.

மேலும் மிஹ்ராஜ் பயணத்தின் இறுதியில் அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்று ஜிப்ரீல் கூற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளியின் விழித்து எழுந்தார்கள். (புகாரி 7517) என்று நபிமொழியில் காணப்படுகிறது.

புனிதப்பள்ளியில் விழித்து எழுந்தார்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும். அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்பது தூக்கத்தின் போது அல்லாஹ்வைக் கண்டது ரூஹ் என்பதும் மிஹ்ராஜின் இருமுறை அல்லாஹ்வை கண்டது ரூஹ் ஆகிய ஆத்மா புறக்கண் இல்லை என்றும் தெளிவாகிறது.
Read more »

வானத்தில் வாசல் திறத்தல் – பி.ஜே யின் தவறான விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 177 இல் வானத்தின் வாசல் திறக்கப்பட மாட்டாது என்னும் தலைப்பில் பி.ஜே திருக்குர்ஆன் 7:40 வது வசனத்திற்கு இவ்வாறு எழுதுகிறார்.

இறைவசனங்களை மறுத்துப் பெருமையடித்தவர்கள் இவ்வுலகில் வாழும் போது செய்யும் பிராத்தனைகள் வானத்தை அடையாது. இவ்வுலகிலும் நஷ்டமடைவார்கள்: மறுமையில் நரகத்தையும் அடைவார்கள் எனபது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 7:40 வது வசனத்தின் பொருள் பி.ஜே தன் தமிழாக்கத்தில்,

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம். இந்த வசனத்தில் சொர்க்கமும் நரகமும் எடுத்துக் கூறப்படுகிறது. இதற்கு முன் பின் வசனங்களும் (7:39; 7:41) சொர்க்கம் நரகம் பற்றியே கூறுகின்றன. எனவே இங்கு வானத்தின் வாசல் என்பது சொர்க்கத்தின் வாசல் என்றே பொருள்படும். மேலும் 7:40 வது வசனத்தை 7:36 வது வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். 
 
திருக்குர்ஆன் 7:40 வது வசனம்
திருக்குர்ஆன் 7:36 வது வசனம்
1) நமது வசனங்களைப் பொய் எனக் கருதி
1) நமது வசனங்களைப் பொய் எனக் கருதி
2) அதைப் புறக்கணிப்போருக்கு
2) அதைப் புறக்கணிப்போர்
3) வானத்தின் வாசல் திறக்கப்படமாட்டாது.
3) நரகவாசிகளே

 
இதிலிருந்து வானத்தின் வாசல் திறந்தால் சொர்க்கம் என்றும், திறக்கவில்லை என்றால் நரகம் என்றும் வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.

நபி (ஸல்) அவர்கள், எனக்கு முன்னர் வந்த இஸ்ரவேல் சமுதாயத்தினர் 72 பிரிவுகளாகப் பிரிந்தனர். என் சமுதாயம் 73 பிரிவுகளாகப் பிரியும், அந்த 72 பிரிவுகளாகப் பிரியும். அந்த 72 பிரிவுகளும் என்னைச் சேர்ந்தவர்கள் இல்லை. நான் அவர்களைச் சேர்ந்தவனும் இல்லை. அவர்கள் நரகிற்கு உரியவர்கள். அந்த ஒரு பிரிவு யார் என்றால், நானும் என் தோழர்களும் எப்படி இருக்கிறோமோ அப்படி அவர்கள் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். இதில் சொர்க்கத்திற்கு உரிய ஜமாஅத்தும், நரகிற்கு உரிய 72 பிரிவுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பைசல் மன்னர் காலத்தில் இஸ்லாத்தின் 72 பிரிவுகளும் அவரது தலைமையில் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்கியதும், பூட்டோ தலைமையில் பாகிஸ்தானில் 72 பிரிவுகளும் காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும் அந்த 72 பிரிவுகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு விளக்கி விட்டது.
Read more »

ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்;

இவ்வசனத்தில் (22:31) இணை கற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

மனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான் இது சாத்தியமாகும்.

இது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன எனபதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

யானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.

இப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும்.

கடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புண்டு என்பதாலும்தான், பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல் என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 22:32 வசனம் வானத்திலிருந்து விழுந்தவனைப் போல் ஆவான். அவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று கூறுகிறது. ஆனால் பி.ஜே பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று தலைகீழாக விளங்கிக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு கற்பனை விளக்கத்தைக் கூறி படிப்பவர்களை தவறான கருத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறார்.

இறந்து கிடக்கின்றவற்றின் உடலைப் பறவைகள் கொத்தித் தின்பதை நீங்கள் டிஸ்கவரி சேனலில் தெளிவாகக் காணலாம். அதுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வானத்திலிருந்து விழுந்தவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று பறவைகள் என்பது பன்மையில் வந்திருப்பதால் மனிதனை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு ராட்சதப் பறவை என்பது தவறு என்று தெரிகிறது. தூக்கிச் செல்லும் அப்பறவை அவனை ஏன் வீசி ஏறிய வேண்டும்? நடமாடித்திரியும் மனிதர்களை தூக்கிச் சென்று வானத்திலிருந்து வீசி எறிந்து விளையாடும் செயலைத்தான் அப்பறவை செய்யுமா? பூமியில் கிடக்கும் உணவையும், எலி, முயல் போன்றவைகளையும் பறவைகள் தூக்கிச் சென்று தின்று தீர்க்கின்றன. இதுவே பறவைகள் இயல்பாகும். பி.ஜே யின் கற்பனை ராட்சதப் பறவை வீசி எறிந்து விளையாடும் போலும்.

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன், எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட வேதம். அதில் கூறப்படும் கருத்து அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கும் என்பதை அறிவுடையோர் அறிவர். ஒரு மனிதனை ஒரு ராட்சதப் பறவை வானில் தூக்கிச் சென்றது என்று அன்று கூறப்பட்டிருந்தால் அவ்வசனம் ஏளனத்திற்கு ஆளாகியிருக்கும். அவ்வாறு ஆகவில்லை. என்பதிலிருந்து அது அப்படி ஒரு பொருளைத் தராது என்று அறிதல் வேண்டும். இரண்டாவதாக எதிர்காலத்திற்கும் ஏற்புடையதாக – பொருந்துவதாக இருக்கவேண்டும். மனிதர்களை தூக்கிச் செல்லும் ராட்சதப் பறவைகளை மனிதனே உருவாக்குவான் என்பது எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஒரு வாதத்திற்காக இந்தக் கற்பனையை நாம் ஏற்பதாக இருந்தால் அவ்வாறு உருவாக்கப்படும் ராட்சதப் பறவையினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் சிந்தித்துப் பின்னர் தான் அதனைச் செயல்படுத்துவார்கள். அப்பறவையால் மனித குலத்துக்கும் பிறவற்றுக்கும் தீங்கு விளையும் என்றால் அதனைச் செய்யமாட்டார்கள் என்பதையாவது புரிந்து கொள்ளவேண்டும்.
Read more »

ஓரங்களில் குறையும் பூமி என்பது கடல் அரிப்பில்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 243 – இல் ஓரங்களில் குறையும் பூமி என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு வருவதை சமீப காலத்தில்
விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இவ்வசனங்கள் (13:41, 21:44) தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு நாம் பொருள் கூறி விளக்கும் போது முன் பின் வசனங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு முன்பின் வசனங்களை கருத்தில் கொள்ளாவிட்டால் அல்லாஹ் எக்கருத்தை வலியுறுத்த நினைக்கின்றானோ அக்கருத்து திசை திருப்பப்பட்டோ, மாற்றப்பட்டோ போய்விடும். என்பதற்கு இவ்விருவசனங்களும் சான்றாகும். நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வந்துள்ளது என்பது உண்மை. என்றாலும் இவ்விரு வசனங்களும் அதைக் குறித்துக் கூறவில்லை என்பதை அவ்விரு வசனங்களுக்கு முன்னர் உள்ள வசனங்களை கருத்தூன்றி படிப்போர் அறியலாம்.

13:41 வசனத்தில், தூதுச் செய்தியை தெரிவிப்பது மட்டுமே உம்மீது (பொறுப்பாக) உள்ளது. (அவர்களிடம்) கேள்விக் கணக்குக் கேட்பது எம்முடைய போருப்பெயாகும் என்றும்,

13:42 இல் நாம் (அவர்களின்) நிலத்தை அதன் எல்லைகளிலிருந்தும் சுருக்கிக் கொண்டே வருவதை அவர்கள் கண்டதில்லையா? மேலும் அல்லாஹ்வே தீர்ப்பு வழங்குகிறான். அவனுடைய தீர்ப்பை மாற்றுபவர் எவரும் இல்லை. மேலும் அவன் விரைவில் கணக்கெடுப்பவன் ஆவான் என்றும்.

13:43 இல், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் திட்டங்கள் தீட்டினர். ஆனால் (நிறைவேறும்) திட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. ஒவ்வொரு மனிதனும் செய்வதனை அவன் அறிகின்றான். வரவிருக்கின்ற அந்த வீட்டின் (நல்ல) முடிவு எவருக்கு உரியதாகும் என்பதை அந்த நிராகரிப்போர் விரைவில் அறிவர் என்றும் வருகிறது.

அதாவது, அல்லாஹ்வின் தூதர் தன் சமுதாய மக்களிடம் தன் தூதுச் செய்தியைக் கூறி அம்மக்களை இறைவழியில் அழைக்கிறார். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு நிராகரிக்கும் அம்மக்களின் நாடு சுருங்கிக் கொண்டே வருகிறது. இதுவே கடந்த கால வரலாறு, நிராகரிப்போர் இதனை நன்கு அறிவார்கள் என்ற கருத்து கூறப்படுகிறது.

21:45 நாம் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையர்களுக்கும் ஒரு நீண்ட காலம் வரை மிகுதியான வசதிகளை வழங்கியிருந்தோம். நாம் அவர்களின் நாட்டை அதன் எல்லா எல்லைகளிலிருந்தும் சிறிதாக்கிக் கொண்டே வருவதை அவர்கள் காணவில்லையா?

21:46 நீர் அவர்களிடம்.... கேட்க முடியாது.

21:47 உம்முடைய இறைவனது தண்டனையின் வெப்பக் காற்று அவர்களைத் தீண்டினால், அவர்கள் எங்களுக்கு அழிவுதான், நாங்கள் அநீதியே இலைத்துக் கொண்டிருந்தோம் எனக் கட்டாயம் கூறுவர்.

இவ்வாறு திருக்குர்ஆன் நெடுகிலும் முழு உலகுக்கும் பல்வேறு காலகட்டங்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு, ஓரிறைக் கொள்கை மூலம் மக்கள் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் இவ்வாறு நிராகரிப்பவர்களின் நிலப்பகுதி சுருங்கியதையும் எடுத்துக் கூறப்படுகிறது. இதனையே நீங்கள் பூமியில் பயணம் செய்து (நபிமார்களைப்) பொய்ப்படுத்தியவர்களின் முடிவினைப் பாருங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 16:37, 3:138, 6:12, 12:110, 22:47, 35:45, 47:11)

நாம் வாழ்கின்ற இந்த நூற்றாண்டிலும் ஏகத்துவக் கோட்பாட்டை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் முழு உலகிலும் பரப்பி வருவதையும், ஏறக்குறைய 200 நாடுகளில் 20 கோடி மக்கள் அதனைத் தழுவி உண்மையான முஸ்லிம்களாகி நிராகரிப்பவர்களின் எல்லைகள் சுருங்குவதையும் அறிவுக்கண்ணுடையவர் காணலாம். மேலும் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை பொய்ப்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட தீய முடிவையும் காணலாம். உண்மையான நபிமார்களை பொய்ப்படுத்தியவர்களை அல்லாஹ் வெள்ளப்பெருக்கு, கொள்ளை நோய், பூமி அதிர்ச்சி, புயல் காற்று போன்றவற்றை அனுப்பி அளித்துள்ளான். அப்பேரழிவுகள். இன்று நாளும் நடப்பது மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) ஒரு உண்மையான தூதர் என்பதற்கு அடையாளங்களாகும்.
Read more »

Sep 21, 2014

அல்லாஹ் என்ற சொல்!


கிறிஸ்த்துவர்களில் பலரும் முஸ்லிம்களில் சிலரும் இஸ்லாத்தின் உண்மை நிலையை அறியாது பல்வேறு கருத்துக்களை பாமர மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். அதில் ஒன்று “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு பொருள் உண்டு என்று கூறுவதாகும். இவர்கள் கூறும் வாதம், “அல்லாஹ்” என்ற சொல் “இலாஹ்” பதத்திலிருந்து வந்த சொல் ஆகும். இதன் பொருள் “இறைவன்” என்பதாகும் என்பதே இவர்களின் ஆதாரமற்ற வாதமாக இருக்கின்றது. “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு பொருள் உண்டா? என்பதையும், இந்த சொல் வேறு சொல்லிலிருந்து உருவானதா இல்லையா? என்பதை நாம் கீழே விரிவாக காண்போம். 

அல்லாஹ் என்பது ஆதியும் அந்தமும் இல்லாதவனும் தானும் உயிருடன் இருந்து மற்றவர்களை உயிருடன் வைக்கின்றவனும், எஜமானனும், படைப்பாளனும், எல்லா படைப்பினங்களையும் படைத்து காத்தோம்புபவனாகிய ஏக இறைவனுக்குரிய பெயர் ஆகும். அல்லாஹ் என்பது இடுகுறிப்பு பெயராகும்; பண்பு பெயர் அன்று. படைத்து காத்தோம்புகின்ற, எல்லாவற்றிற்கும் எஜமானனாகிய இறைவனுக்கு அரபு மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் சொந்தமான தனிப் பெயர் காணப்படவில்லை. அரபியில் மட்டுமே அல்லாஹ் என்ற தனிப்பெயர், சொந்த பெயர் இறைவனுக்கென்று உள்ளது. அது ஒரே இறைவனுக்கு கூறப்படுகின்றது. அதுவும் பெயர் என்ற அளவில் கூறப்படுகிறது.

அல்லாஹ் என்ற சொல் ஜாமித் ஆகும். முஷ்தக் அல்ல. அதாவது, அல்லாஹ் என்ற சொல் வேறு எந்த சொல்லிலிருந்து உருவாகவுமில்லை. இதிலிருந்து வேறு எந்த சொல்லும் உருவாகவுமில்லை. அல்லாஹ் என்ற இச்சொல், “லாஹ”, “எலீஹு” என்பதிலிருந்து தோன்றியது எனச் சிலர் கூறுகின்றனர். அதன் பொருள் உயர்வு என்பதாகும். (பார்க்க: அக்ரப் அகராதி) ஆனால் இது சரியன்று. அல்லாஹ் என்பது லாஹ – யலூஹு என்பதிலிருந்து தோன்றியதாகும் என இன்னும் சிலர் கூறுகின்றனர். அதன் பொருள், பிரகாசித்தல் என்பதாகும். மேலும் “லாஹல்லாஹுல் கல்க” என்றால், அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான் என்று பொருள். ஆனால் லிசானுல் அரபி அகராதியில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், இந்த பொருள் சரியன்று. எனவே அல்லாஹ் என்ற சொல் லாஹ, யலூஹு என்பதிலிருந்து வந்தது என்ற அனுமானம் முற்றிலும் தவறாகும்.
 
சிலர் இதனை வேற்று மொழியாக குறிப்பிட்டு, இது சுர்யாணி மொழிச் சொல்லாகிய “லாஹா” என்பதிலிருந்து தோன்றியது எனக் கூறுகின்றனர். ஆனால் இதுவும் முழுக்க முழுக்க தவறாகும். இன்னும் சொல்லப் போனால் சுர்யாணி மொழியைப் பற்றிய அறியாமையின் விளைவாகும். ஏனெனில், அரபி சொல்லாகிய இலாஹ என்பது ஆரம்ப வேர்ச் சொல்லுக்கு மிகவும் அண்மையில் இருக்கிறது என்பது ஐரோப்பிய ஆய்வாளர்களின் கருத்தாகும்.
 

ஜெர்மன் அறிஞராகிய Noldeke எழுதுகிறார்: “அரபியிலுள்ள “இலாஹ்” என்ற சொல்லும், எபிரேய மொழியிலுள்ள “யேல்” என்ற சொல்லும் பண்டைக் காலத்திலிருந்து தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. எபிரேய மொழி, அரபு மொழியிலிருந்து பிரிவதற்கும் முன்னரே இந்த சொல் சாமி மொழியில் உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது”. (என்ஸைக்லோ பீடியா பப்ளிகா தொகுதி 3 Names என்ற தலைப்பின் கீழ்)
 
அல்லாஹ் என்ற சொல் இஸ்மே முஷ்தக் ஆகும் என்பது சிலரது கருத்து என்பதை மேலே கூறியிருந்தோம்......(இன்னும் சொல்லப்போனால்) அல்லாஹ் என்பது “அலம்” வகையை சார்ந்தது, முஷ்தக் (பிற சொல்லிலிருந்து தோன்றியது) அல்ல என சீபவிய்யா, கலீல் ஆகியோர் கூறுகின்றனர். (பார்க்க தஃப்சீர் கபீர் தொகுதி 1 பக்கம் 156)
 
பல்வேறு அறிஞர்கள் இதற்குக் கொடுத்த சான்று என்னவென்றால், இந்த சொல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்காகவும் உபயோகிக்கப்படவில்லை. அரபு நாட்டிலுள்ள இணை வைப்பவர்களும் வேறு எந்த கடவுளுக்காகவும் (அல்லாஹ் என்ற) இந்த சொல்லைக் கூறியதில்லை. “அல்” மற்றும் “இலாஹ்” என்பதிலிருந்தோ “அல்” மற்றும் “லாஹ” என்பதிலிருந்தோ (அல்லாஹ் என்ற) இந்த சொல் உருவாகியிருக்குமானால் இந்த சொற்கள் உபயோகிக்கப்படுவது போன்று அல்லாஹ் என்ற சொல்லும் உபயோகிக்கப்பட்டிருக்கும். ஆனால் அரபிகள் அல்லாஹ் என்ற சொல்லை அப்படி ஒரு போதும் உபயோகப்படுத்தியதில்லை.
 
மற்ற இறை பண்புகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு பண்புப் பெயராகவே உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் அல்லாஹ் என்ற சொல் எந்தப் பெயர்ச் சொல்லுக்கும் பண்புப் பெயராக உபயோகிக்கப்படுவதில்லை. (அல்லாஹ் என்ற) அச்சொல் ‘அலம்’ (Proper noun – இயற்பெயர்) என்பதற்கு இதுவே அடையாளம் ஆகும்.
 
சிலர் சூரா இப்ராஹீமில், அல் அசீஸில் ஹமீதில்லாஹி” என்று வருகிறது (14:3) இதில் அல்லாஹ் என்பது பண்புப் பெயராக உபயோகிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவார்கள். ஆனால் அது சரியல்ல. இங்கு பண்புப் பெயராக உபயோகிக்கப்படவில்லை அதஃப் பயான் என்ற வகையில் உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ‘அலமை’ (இயற்பெயர்) உபயோகிப்பது ஆகுமானதாகும். உதாரணமாக, ஹாதிஹித் தாருல் மில்குன் லில் ஆலிமில் ஃபாழிலி ஸைதின் (இந்த வீடு அறிஞரும் கற்றுத் தேர்ந்தவருமாகிய மன்னர் ஸைதின் வீடாகும்) அந்த மாதிரியான இடங்களில் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ‘அலம்’ (இயற்பெயர்) உபயோகிக்கப்படுகிறது. வசனத்தின் பொருள், அசீஸ், ஹமீத் என்று நாம் சொல்வதன் கருத்து நமது அல்லாஹ் என்பதாகும்.
 
ஹுவல்லாஹு ஃபிஸ்ஸமாவாத்தி வல் அர்ல் (அவனே வானங்களிலும், பூமியிலுமுள்ள அல்லாஹ் ஆவான் (6:4)) என்ற வசனத்திலிருந்து அல்லாஹ் என்பது அலம் (இயற்பெயர்) வகையை சார்ந்தது என நிரூபணமாகிறது என்று சிலர் கூறுகின்றார்கள்.
 
அதற்குரிய விடை என்னவென்றால், ஒரு பெயர்ச்சொல் தனது பண்புடன் புகழ் பெற்றதாகி விட்டால், பிறகு அந்தப் பெயர்ச் சொல்லும் பண்புப் பெயராக பயன்படுத்தப்படத் தொடங்கி விடுகின்றது. உதாரணமாக, “ஹாதிம்” தாராள குணத்திற்க்காகவும், ருஷ்தம்” தைரியத்தைக் குறிப்பிடுவதற்காகவும் புகழ் பெற்றுவிட்டது. இப்போது தாராள குணம் கொண்டவருக்காக ஹாதிம் என்ற சொல்லும், தைரியம் கொண்டவருக்காக ருஷ்தம் என்ற சொல்லும் பயன்படுதப்படுகின்றது. உதாரணமாக, இன்னவர் ருஷ்தம் ஆவார், இன்னவர் ஹாதிம் ஆவார் எனக் கூறுகிறார்கள்.
 
அவ்வாறே அல்லாஹ் என்ற சொல், தான் பண்புகளுடன் முழுமை கொண்டவனுக்காகக் குறிப்பிடப்பட ஆரம்பித்துவிட்டது. எனவே, வானங்களிலும், பூமியிலுமுள்ள அல்லாஹ் அவனே என்று கூறுவது ஆகுமானதாகி விட்டது. அதாவது எல்லா பண்புகளிலும் முழுமை பெற்ற அல்லாஹ் என்ற பெயர் கொண்டவன் ஒருவனே. அவனுடைய இந்தப் பெயரில் வேறு எவரும் இணையில்லை; அவனுடைய செயலிலும் எவரும் இணையில்லை.
 
அல்லாஹ் என்ற இந்தச் சொல் ‘ஃபஃஆலுன்’ என்ற எடையில் வந்துள்ளது. எனவே இதில் தன்வீன் (அதாவது அல்லாஹுன் என) வர வேண்டும். ஆனால் எழுதும் போது தன்வீன் வரவில்லை எனக் கூறுகின்றார்கள். எனவே அல்லாஹ் என்பதிலுள்ள ‘அல்’ என்பது அதன் மூல வடிவத்திலுள்ள சொல் அல்ல; மாறாக ‘அல்’ என்பது இங்கு சிறப்பைக் குறிக்க வந்துள்ளது. எனவே இச்சொல் இரு சொற்களால் இணைந்ததாகும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
 
இதற்குரிய விடை என்னவென்றால், எல்லா விதிகளிலும் விதிவிலக்கு உண்டு. அல்லாஹ் என்ற சொல்லில் தன்வீன் (தோ பேஷ் - அதாவது அல்லாஹுன் என) வராததும் ஒரு விதிவிலக்கான நிலையாகும். இதற்குரிய சான்று, ‘அல்’ என்பதற்கு முன்னால் “ஹர்ஃபே நிதா” (விளிச் சொல்) வந்தால் அதற்கு பிறகு ‘அய்யுஹா’ என்ற சொல் அதிகமாக்கி கூறப்படும். உதாரணமாக, “அன்னாசு” (இதில் ‘அல்’ உள்ளது) என்பதை அழைக்க வேண்டுமென்றால் “யா அய்யுஹன்னாசு” (மக்களே!) என்று கூறுவார்கள். ஆனால் “யா அய்யுஹல்லாஹு” என்று கூறப்படாது. இதுவே அல்லாஹ் என்பதிலுள்ள ‘அல்’ அதில் உள்ள அசல் சொல்லாகும். விளிவேற்றுமையைக் குறிக்கும் ‘அல்’ அல்ல என்பதற்கு சான்றாகும்.
 
இன்னும் சிலர் அல்லாஹ் என்ற சொல்லிலுள்ள ஹம்ஸா என்ற எழுத்து வஸ்லீ வகையை சார்ந்தது. இதிலிருந்து இது அஸலீ ஹம்ஸா அல்ல, சாயித் (மிகுதியான ஒரு சொல்) ஆகும் எனக் கூறுகிறார்கள். அல்லாஹ் என்பதற்கு முன்னால் ‘லாம்’ என்ற எழுத்து வரும்போது அதாவது “லில்லாஹ்” என்று எழுதும் போதும் அல்லாஹ் என்பதிலுள்ள ‘அலிஃப்’ நீங்கி விடுகிறது. இது அஸலீ ஹம்ஸா (மூலச் சொல்லில் உள்ள ஹம்ஸா) அல்ல என்பதற்கு இதுவும் சான்றாகும் எனக் கூறுகிறார்கள். 

இதற்குரிய விடையாவது, ஹம்ஸா (இன்னொரு சொல்லுடன் இணையும் போது) நீங்கி விடுதல், அந்த ஹம்ஸா மிகுதியானது என்பதற்கு அடையாளமன்று. உதாரணமாக இஸ்ம், இப்ன் போன்ற சொற்களில் உள்ள ஹம்ஸா மிகுதியான எழுத்து அல்ல, மாறாக இன்னொரு எழுத்துக்கு பதிலாக வந்தவையாகும். ஆனால் அதுவும் இன்னொரு சொல்லுடன் இணையும் போது நீங்கி விடுகிறது. பிஸ்மில்லாஹ் என்பதில் ‘இஸ்ம்’ என்ற சொல்லில் உள்ள ஹம்ஸா (அதாவது பி + இஸ்மில்லாஹ் = பிஸ்மில்லாஹ் – என்பதில் ‘இ’ என்பது) நீங்கிவிட்டது. ஆனால் அந்த ஹம்ஸா மிகுதியாக வந்ததல்ல; மாறி வந்ததாகும். எனவே, ஒரு ஹம்ஸா வஸ்லீ வகையை சார்ந்திருப்பதோ அல்லது இணைக்கும் போது நீங்கி விடுவதோ அந்த ஹம்ஸா மிகுதியானது என்பதற்கு ஆதாரமன்று. 

சுருக்கமாக, இஸ்லாமிய காலத்திலும் இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலும் அல்லாஹ் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட விதத்திலிருந்து அல்லாஹ் என்ற அந்தச் சொல் ‘அலம்’ (இடுகுறிப்பெயர்) மற்றும் முஷ்தக் அல்லாதது (அதாவது அச்சொல் எதிலிருந்தும் பிறந்தது அல்ல; அச்சொல்லிலிருந்து வேறு சொற்கள் தோன்றவும் செய்யாது) என்பதை குறிப்பிடுகின்றது. இதன் சில சிறப்புத்தன்மைகளின் காரணமாக அது முஷ்தக் வகையை சார்ந்தது என்பதற்கு எடுத்து வைக்கப்பட்ட சான்றுகள் சரியானவை அல்ல. இன்னும் சொல்லப்போனால், மற்ற உதாரணங்களின் மூலமாக அவை தவறு என நிரூபனமாகிறது. (சூரா பாத்திஹா விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது.)
Read more »

Aug 19, 2014

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா?


(இலண்டனில் நடைபெற்ற மஜ்லிசே – இர்ஷாத் என்னும் கேள்வி பதில் கூட்டத்தில் ஹஸ்ரத் கலீபதுல் மஸீஹ் மாற்றுமதத்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அந்த கேள்வி பதிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.) 

கேள்வி: ஹஸ்ரத் மிர்ஸா குலாம்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா? 

இல்லை ஒரு போதும் இல்லை. ஜிஹாதின் பெயரால் போர் மூட்டுவதைத்தான் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். ஜிஹாதும். போரும் இரண்டு தனித்தனி விஷயங்களாகும். ஜிஹாதிலும் சில சந்தர்ப்பங்களின் போர் இடம் பெறுகின்றது. ஆனால் ஒவ்வொரு ஜிஹாதும் ஒரு போரல்ல. ஜிஹாதிற்கு திருக்குர்ஆன் தரும் விளக்கத்திற்கு மாறாக நீங்கள் என்ன விளக்கமளித்தாலும் அது இஸ்லாம் கூறும் விளக்கமாக இருக்காது. ஜிஹாதைப் பற்றித் திருக்குர்ஆனில் வரும் முதலாவது கட்டளைப்படித்தாலே அது பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளமுடியும். ‘ஸுரத்துல் ஹஜ்’ஜில் தான் முதன் முதலில் ஜிஹாது செய்வதற்க்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அது கூறுவதாவது, 

“அநியாயமான விதத்தில், போர் செய்யக் கட்டாயப்படுத்தப் படுபவர்களுக்குப் போர் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உண்டு அவர்கள் தங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக மட்டும், வேறு காரணமுமின்றி அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் இவர்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்கவில்லை என்றால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், யூதர்களின் வணக்க இடங்களும், அல்லாஹ்வின் திருநாமம் அதிகமாக உச்சரிக்கப்படும் (முஸ்லிம்களின்) பள்ளிவாசல்களும் இடித்து நாசம் செய்யப்பட்டிருக்கும். ( திருக்குர்ஆன் 22:40,41) 

அதாவது ஏற்கனவே வாளெடுத்து முஸ்லிம்களைத் தாக்கிப் போரிடுபவர்களுக்கெதிராக போரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இஸ்லாத்தின் விரோதிகள் முஸ்லிம்களிடம் போர் செய்ய வந்தால் மட்டுமே ஜிஹாது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது. ஆக்கிரமிப்பிற்கும், அக்கிரமத்திற்கும் அநியாயத்திற்கும், ஆளாக்கப்பட்டிருக்கவேண்டும் மென்றும் தெரிகிறது. அது மட்டுமன்று அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும் ஆளானவர்களுக்கு உதவி செய்ய தான் வல்லமையுள்ளவன் என்று அதாவது போர் செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டவர்களைதான் வெற்றி பெறச் செய்வேன் என்று அல்லாஹ் கூறுகிறான். 

இதிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் மார்க்கத்தின் பெயரால் – முதலில் வாளெடுத்துப் போர் செய்வதற்கு எங்கேயும் அனுமதி அளிக்கப்படவில்லையென்று புலனாகிறது. 

போர் செய்வதற்கு அல்லாஹ் சில நிபந்தனைகளை விதிக்கிறான். 

விரோதிகள் முதலில் ஆயுதமேந்திப் போர் செய்ய வேண்டும். 

யுத்தம் செய்யப்படுபவர்கள் எந்த குற்றமும் செய்யாதவர்களாகவும், அநியாயத்திற்காளானவர்களாகவும் இருக்க வேண்டும். 

இங்கு சிந்திக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையினரும், சக்தி மிக்கவரும், அகம்பாவக்காரர்களும், அக்கிரமக்காரர்களுமான ஒரு பெருங்கூட்டதிற்கெதிராகப் போர் செய்வதற்கு, மிகவும் பலவீனமான, அக்கிரமங்களுக்குகாளான சிறுபான்மையினரான ஒரு ஜமாத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, அந்தப் பலவீனமான சிறுபான்மையினரின் தற்கொலைக் கொப்பானதாகி விடுமே! ஆனால் இந்தச் சந்தேகத்திற்கும் அல்லாஹ்வே பதிலளிக்கிறான். சக்திமிக்கவனும், எல்லா வல்லமையுள்ளனவனுமான அல்லாஹ் அந்தப் பலவீனமான சிறுபான்மையினருக்கு உதவி செய்து அவர்களை வெற்றி பெறச் செய்வான். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதிக்கிணங்க எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் ஒருபோரும் தோல்விக் கண்டதே இல்லை. சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பான்மையினரான நிராகரிப்பவர்களை வெற்றி கொண்ட வரலாற்றைத்தான் நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் காண்கிறோம். 

தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான். 

“எந்தக் காராணமும் இல்லாமல் அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் செய்த மிகப் பெரிய குற்றம் எங்களுடைய இரட்சகனான இறைவன் அல்லாஹ் என்று கூறியதாகும்.” 

அடுத்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 

“இறைவன் தற்காபிற்கான அனுமதி வழங்கவில்லை என்றால் யூதர்கள் கிறிஸ்தவர்களின் வணக்க இடங்களும், இறைவன் அதிகமாக நினைக்கப்படும், அவனது பெயர் அதிகமாக உச்சரிக்கப்படும் பள்ளிவாசல்களும் நாசமடைந்திருக்கும்” 

சற்று சிந்தனை செய்துபாருங்கள். இங்கு இஸ்லாமிய தர்மயுத்ததைப் பற்றிய விஷயம் விவரிக்கபடுகிறது. ஆனால் இதல் யூத, கிறிஸ்தவ தேவாலயங்களைப் பாதுகாப்புப் பற்றியும் கூறப்படுகிறது. இங்கேதான் இஸ்லாத்தின் பெருமை விளங்குகிறது. தற்பாதுகாப்பிற்காக ஜிஹாது செய்வதற்கு அனுமதி தந்தவுடன், திருக்குர்ஆன் இறைவனின் பெயரால் முஸ்லிம்களுடையவையோ, அல்லது முஸ்லிம் அல்லாதவர்களுடையவோ வழிபாட்டிடங்களின் பாதுகாப்பைப் பற்றியும் கூறுகின்றது. இஸ்லாம் கூறும் போதனை இதுதான்! ஏதேனும் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுகின்றனவென்றால் இந்த போதனையின்படி அவற்றைக் காக்கவேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. இஸ்லாத்தின் இந்த போதனைகளை நீங்கள் உலகத்தின் முன் வைத்துப் பாருங்கள் இஸ்லாத்திற்கெதிராக ஆட்சேபனை செய்வதற்கு இஸ்லாத்தின் விரோதிகளிடம் வேறு என்ன காரணம் இருக்கிறது என்பதை பாருங்கள்? இந்தப் போதனைகளைப் புறக்கணித்துவிட்டு மார்க்க ரீதியாக கொள்கை வேறுபாடு கொண்டவர்களுடன் போர் செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை இடித்து தரைமட்ட மாக்கவேண்டும்; வீட்டை விட்டும், நாட்டைவிட்டும் அவர்களை வெளியேற்றவேண்டும்; அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; என்ற எண்ணம் இஸ்லாத்தின் போதனைக்கும் கட்டளைக்கும் எதிரானதாகும். ஜிஹாதின் பெயரால் நடத்தப்படும். இத்தகைய அராஜகங்களைத்தான் ஹஸ்ரத் மஸீஹ் மவூத் (அலை) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். 

எத்தகைய தருணத்தில் ஜிஹாத் செய்யவேண்டுமென திருக்குர்ஆன் கூறுகிறதோ அத்தகைய தருணத்திலே அது கூறும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜிஹாத் செய்யவேண்டும். இப்படிப்பட்ட ஜிஹாதை இரத்து செய்வதற்கான அதிகாரம் எவருக்குமில்லை. ஆனால் விரோதிகள் உங்கள் மீது மார்க்கத்தின் பெயரால் அநியாயம் செய்யாமலும் உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாமலும் இருக்கும்போது, அந்த விரோதிகளுக்கெதிராக யுத்தம் செய்வதற்கான அனுமதியே இல்லை. அவ்வாறு செய்யப்படும் யுத்தத்தை ‘ஹிஹாத்’ என்று கூறக்கூடாது. 

அரசியல் போராட்டங்கள் பல விதத்திலும் இருக்கின்றன. உதாரணமாக ஈரானும், ஈராக்கும் பல வருடங்களாக போர் செய்து வருகின்றன. இது ஜிஹாத் அல்ல, அரசியல் போராகும். 

ஆகவே பகுத்தறிவின் அடிப்படையில் இஸ்லாத்தின் போதனைகளைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், போதனைகளையும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பின்னர் அரசியல் போர்களையும் தர்ம யுத்தங்களையும் பற்றி ஆராய்ந்து அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாததுவரை இஸ்லாத்திற்கெதிராக செய்யப்படும் ஆட்சேபனைகளுக்கு மறுப்பளிக்க முடியாது. 

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பகால கட்டத்தில் நடைபெற்ற ஜிஹாதுகளில் அதன் நிபந்தனைகள் பூரணமாகக் கடைபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக எம்பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு ஜிஹாதைப் பற்றியும் எவராலும் ஆட்சேபனை செய்யமுடியாது; பின்னர் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களின் பௌதீகமான அரசாங்கங்களின் நடை பெற்ற அரசியல் போர்களில் ஜிஹாதிற்கான நிபந்தனைகளை நிறைவேறாத காரணத்தினால் அவை ஜிஹாதுகளாக இருந்ததில்லை. அந்த நிபந்தனைகள் நிறைவேறியவை மட்டுமே ஜிஹாதுகளாக இருந்தன. இதே போன்று அரசியல் போர்களில் கிறிஸ்தவ நாடுகளும் ஈடுபட்டிருந்தன. இன்றும் ஈடுபட்டுவருகின்றன. அதற்காக நீங்கள் கிறிஸ்தவ மதத்தைக் குறை கூறுவீர்களா? 

பாலஸ்தீனத்திலிருந்து வந்த ஒரு சகோதரர் தற்போது இஸ்ரேலில் நடைபெற்றுவரும் யுத்தம் ஜிஹாதுதானே என்று வினவினர். நான் அவருக்கு இவ்வாறு பதிலளித்தேன். இஸ்ரேல் நாட்டில் ஆட்சி புரிவதற்கு யூதர்களுக்கு எந்த விதமான உரிமையும் அதிகாரமும் இல்லை. இது இஸ்லாமிய உலகிற்கு எதிராகச் செய்யப்பட்ட ஒரு சதித்திட்டமாகும். அடையாளங்களாலும், தெளிவுகளாலும் யூதர்களுகெதிராக அணிசேர்ந்து அவர்களை முறியடிப்பதில் அஹ்மதிய்யா ஜமாஅத் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. ஐ.நா சபையில் பாலஸ்தீனப் பிரச்சனைப் பற்றி ஹஸ்ரத் சௌத்திரி ஸபருல்லாக்கான் ஸாஹிப் செய்த வாதத்தைப் பற்றி உலக முஸ்லிம் நாடுகள் இன்றும் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனையில் அது போன்ற ஒரு வாதத்தை இது வரை எவரும் செய்ததில்லை. ஆனால் இந்தப் போரை நபி (ஸல்) அவர்கள் செய்த ஜிஹாதுடன் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள் என்றால் முதலில் நீங்கள் என்னுடைய கேள்வி ஒன்றுக்கு பதில் தந்தாகவேண்டும். என்ன! அல்லாஹ் தனது வாக்குறுதியை (நவூதுபில்லாஹ்) மீறி விட்டானா? அல்லது பொய் கூறுகிறான் என்று நினைக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஜிஹாது செய்ய அனுமதி தருகிறேன். நான் உங்களுக்கு உதவி செய்து உங்களை வெற்றி பெற செய்வேன். என்று அல்லாஹ் வாக்குறுதி அளிக்கவில்லையா? ஆனால் நீங்கள் தற்போது செய்துவரும் யுத்தத்தில் உங்களுக்கு ஏன் இறைவன் புறமிருந்து உதவியும், வெற்றியும் கிடைப்பதில்லை? 

ஒரு பக்கம் நான் முஹ்மீன்களுக்கு உதவி புரிந்து கொண்டிருப்பேன் என்று இறைவன் கூறுகிறான். மறுபக்கம் முஸ்லிம்களுக்கு தோல்வியும், விரோதிகளுக்கு வெற்றியும் கிடைக்கிறது எனவே ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இங்கே ஏதோ குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ளமுடியும். அதனை நீங்கள் திருத்தினால், ‘இந்த நாடு நல்லடியார்களுக்கு சொத்தாகக் கிடைக்கும்’ என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி பூர்த்தியாகிவிடும். எனவே மார்க்கரீதியான உங்களுடைய குறைபாடுகளை போக்கி உண்மையான முஹ்மீன்களாகுங்கள் அப்போது அல்லாஹ்வின் வாக்குறுதி உங்களிடம் பூர்த்தியாகும் (அந்நஸர் )
Read more »

Aug 9, 2014

எல்லா நபிமார்களை விட எல்லா வகையிலும் சிறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே!


அபூ அப்தில்லாஹ் பக்கம் 28 இல், தூதர்களில் சிலரை சிலரைவிட மேன்மையாக்கி இருக்கிறோம்... என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்ற எல்லா நபிமார்களையும் விட எல்லா விசயங்களிலும் உயத்த்தி இருப்பதாகச் சொல்லவில்லை என்று எழுதி, ஈஸா (அலை) தகப்பனின்றி பிறந்தது, வானிற்கு உயர்த்தப்பட்டது போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை என்றும் எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளாரா? என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. 
 
இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு ஒரு கூட்டம் முஸ்லிம்களிடையே இருப்பது எத்துனை வேதனைக்குரியது!

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் திருக்குரானை ஓதி அதன் வசனங்களைச் சிந்தித்து உணராததேயாகும். அல்லாஹ்வின் அந்த அருள்மறை

அபலா தஹ்கிலூன்

அபலா ததபக்கரூன்

அபலா ததப்பரூன்

என்றெல்லாம் கூறி அதன் வசனங்களை சிந்தித்து அது கூறும் உண்மைகளை உணரவேண்டுமென எடுத்துரைக்கிறது.

1. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் இமாம் ஆவார். (முஸ்லிம் விளக்க எண். 278) 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; (பைத்துல் முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர்... அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்து விடவே இறைதூதர்களுக்கு நான் தலைமை தாங்கி தொழுகை நடத்தினேன். 

2) நபிமார்களின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என இப்னு கஸீர் கூறுகிறார். 

பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களும் கூடினர். அப்பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். இது அவர்கள் அனைத்து நபிமார்களின் தன்னிகரற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறார். (17:1 வசனத்தின் தப்ஸீர் இப்னு கஸீரின் விளக்கம்) 

எல்லா நபிமார்களையும் விட ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலானவர்கள் என்பதையே மிஹ்ராஜ் பயணம் காட்டுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஒவ்வொரு வானத்தையும் கடந்து 7 வானத்தையும் தாண்டி, சித்ரதுல் முன்தஹா வரை சென்று இறைவனுடன் உரையாடி வந்துள்ளார்கள். 

உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் தத்தமது தகுதிகளுக்கு ஏற்ப 7 வானங்களில்தான் உள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அனைத்து நபிமார்களின் ஆத்மீக பதவிகளாகிய 7 வானத்தையும் தாண்டி சித்ரதுல் முன்தஹா சென்றுள்ளார்கள். பூமியில் நின்று ஒருவர் வானத்தைப் பார்த்தால் 7 வானங்களிலும் அனைத்து நபிமார்கள் இருப்பதையும் அவர்களையும் தாண்டி இறுதி எல்லையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இருப்பதையும் காணலாம். இப்பதவி நுபுவத்தின் இறுதிப் பதவியாகும். 

4) காத்தம் எனும் சொல்லை அடுத்து நபிமார்கள் எனும் பன்மைச் சொல் வந்தால் – நபிமார்களுள் காத்தம் என்று வந்தால் அரபி மொழி வழக்கிர்கேற்ப அதற்கு நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றே பொருளாகும். அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே காத்தமுன்னபியீன் – நபிமார்களில் மிகச் சிறந்தவர் எனக் கூறுகிறான். இந்த பட்டம் வேறு எந்த நபிக்கும் தரப்படவில்லை. 

5) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வந்த எல்லா நபிமார்களுக்கும் இல்லாத 5 சிறப்புகள் எனக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. (புகாரி , முஸ்லிம், நஸயி) 

1) ஒவ்வொரு நபியும் அவர்களின் கூட்டத்தினருக்கு மட்டுமே சொந்தமாக அனுப்பபட்டிருந்தனர். நானோ கறுப்பர், சிவப்பர் ஆகியோம் (மனித இனம்) முழுமைக்கும் அனுப்பப்பட்டுள்ளேன். 11) போரில் கிடைத்த பொருள்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் அவை எவருக்கும் ஆகுமாக்கப்படவில்லை. 111) எனக்கு பூமி முழுவதும் துப்புரவாகவும், தொழுமிடமாகவும் ஆக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே எவரேனும் தொழுகை நேரத்தை அடைந்து விடின் அவர் எங்கிருப்பினும் சரியே தொழுதுகொள்ளவும். 1V) ஒரு மாதப் பயணத் தூரதிற்குமிடையில் எதிரிகள் இருப்பினும் அவர்கள் எனக்கு அஞ்சி நடுங்கும் அளவுக்கு எனக்கு இறைவன் உதவி நல்கியுள்ளான். V)சிபாரிசு செய்யும் முதல் உரிமை. 

6) திருக்குர்ஆன் 17:80 - இல் இதனால் உம்முடைய இறைவன் உம்மை புகழுக்குரிய இடத்திற்கும் (மகாமே மஹ்மூத்) உயர்த்தக் கூடும். இந்தப் பதவி வேறு எந்த நபிக்கும் இறைவன் வழங்கவில்லை. 

7. திருக்குர்ஆன் 108:2 இல் (நபியே) நிச்சயமாக நாம் உமக்கு (அல்கவ்ஸர்) மிகுதி (யான நன்மை) யினை வழங்கியுள்ளோம். இச்சிறப்பு வேறு எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை. 

8. மறுமையில் சொர்க்கத்திற்குப் பரிந்துரைக்கும் முதல் உரிமை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. (முஸ்லிம் ஹதீஸ் எண். 330) 

9. இறைத் தூதர்களில் மிகுதியான மக்கள் பின்பற்றபப்டுவதும் நானே. (முஸ்லிம் ஹதீஸ் எண் 330) 

10. என் அடியார்களே! (குல் யா இபாதி) என்று அழைப்பதற்குரிய தனது உரிமையை அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். (39:54) 

11. வேதங்கள் பெற்ற நபிமார்களுள் முழு மனித இனத்திற்கும், கியாமத் வரை முழுமையான இறுதியான வேதம் பெற்றவர் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. 

12. நபி (ஸல்) அவர்கள் நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன் என்று கூறியுள்ளார். ( புகாரி 3340) 

ஆதம் நபி (அலை), நூஹ் (அலை), இப்ராஹீம் நபி (அலை), மூஸா நபி (அலை), ஈஸா நபி (அலை) ஆகியோரிடம் சென்று மக்கள் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டி பரிந்துரை கிடைக்கவில்லை. இறுதியில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்காக வருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதி பரிந்துரை செய்ய இறைவனும் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான். (அல் ஹதீஸ் 2 ஆம் பாகம் பக்கம் 630-631) 

13. (கப்ருகளிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான்தான் மனிதர்களில் முதல்வனாக வெளிப்படுவேன். அவர்கள் இறைவன்பால் செல்லும்போது நான் தான் அவர்களுக்கு முன்னோடியாக இருப்பேன். அன்றி அவர்கள் நம்பிக்கை இழக்கும் போது நான் அவர்களுக்கு நன்மாராயம் (நற்செய்தி) கூறுவேன். அன்று என் கையில் புகழின் கொடி இருக்கும். என் இறைவனிடம் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவன் நான்தான். (ஆதாரம்: திர்மிதி, அறிவிப்பாளர் : அனஸ் (ரலி). 

14. மறுமை நாளில் நான் நபிமார்களுக்கெல்லாம் தலைவனாகவும் அவர்களின் பேச்சாளனாகவும் இருப்பேன். (ஆதாரம்:திர்மிதி) 

15. மறுமை நாளில் நான் சுவனபதியின் வாசலை அடைந்த அதனைத் திறக்குமாறு கோருவேன். அப்போது அதன் காவலர், நீர் யார் என்று என்னை வினவுவார். அதற்கு நான் முஹம்மது (ஸல்) என்பேன். அப்போது அவர் தங்களுக்கு முன்னர் எவருக்கும் வாசலைத் திறக்க வேண்டாம் என்றும், தங்களுக்கே அதனைத் திறக்க வேண்டும் என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனக் கூறுவார் என அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (அறிவிப்பாளர் ; அனஸ் (ரலி) ஆதாரம் : முஸ்லிம் ) 

16. அனைத்துலகுக்கும் அருட்கொடை (21:108) யாக வந்த ஒரே ஒரு நபி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே ஆவார்கள்.
Read more »

இரு வேறு ஈஸா நபிமார்கள்


பக்கம் 53 இல் அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்: 

ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும், கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது. இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா (அலை) இருந்தார்கள். 

நம் பதில்: 

ஈஸா நபி (அலை) முதலில் வந்த போது செய்த அற்புதங்களை அபூஅப்தில்லாஹ் கூறியுள்ளார். ஈஸாநபியின் இரண்டாவது வருகையின் போது அவர் சிலுவையை முறிப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா வரியை நீக்குவார்; செல்வங்களை வாரி வாரி வழங்குவார்; நீதியை நிலைநாட்டுவார் தீர்ப்பு வழங்குவார்; தஜ்ஜாலைக் கொல்வார் என்று நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது. 

நம் கேள்வியாவது, முதலில் வந்த போது செய்த செயல்கள் அவர் இரண்டாவது வரும் போது செய்வார் என்று ஏன் கூறப்படவில்லை? இரண்டாவது வருகையில் செய்யும் செயல்கள் முதல் வருகையில் ஏன் சொல்லப்படவில்லை? இவ்விரண்டாம் தனித்தனியாகவும், வெவ்வேறானதாகவும் உள்ளனவே! ஏன்? 

ஈஸா நபி (அலை) அவர்களுக்கு மட்டும் கொடுத்த அந்த அற்புதங்களை அவர் இரண்டாவது வரும் போதும் செய்வார் என்று ஏன் கூறவில்லை? அப்போது உலகில் யாரும் இறக்கமாட்டார்கள் என்பதாலா? அல்லது குருடர்கள், தொழுநோயாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதாலா? அல்லது பறவைகளைப் படைப்பதற்கு களிமண் இருக்காது என்பதினாலா? அல்லது பறவைகள் போதிய அளவுக்கு இருந்ததினால் இனி பறவைகளைப் படைக்க வேண்டிய தேவை இல்லை என்பதனாலா? அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அவர் முன்பு படைத்தார். ஆனால் இரண்டாவது வருகையின் போது அல்லாஹ் அனுமதி கொடுக்க மறுத்து விட்டதனால் அவ்வாறு செய்யவில்லையா? ஈஸா நபி (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள் அனைத்தும் உவமை வடிவில் அமைந்தவை என்பதை அபூ அப்தில்லாஹ் உணரத் தவறி விட்டார். 

அடுத்து ஈஸா நபி (அலை) மீண்டும் வரும் பொது செய்வார் என்று கூறப்படும், பன்றியைக் கொல்வார் என்ற செயலை முதல் வருகையின் போது அவர் ஏன் செய்யவில்லை? பன்றிகள் அக்காலத்தில் இல்லை என்பதினாலா? 

முதல் வருகையின் போது ஈஸா நபி (அலை) ஏன் செல்வங்களை வாரி வாரி வழங்கவில்லை? ஈஸா நபி (அலை) அவர்களிடம் செல்வம் இல்லை என்பதாலா? அல்லது எல்லோரும் செல்வர்களாக இருந்ததினால் வாரி வழங்க வேண்டிய தேவை இல்லை என்பதலா? இச்செயல்கள் எல்லாம் உவமை வடிவில் அமைந்தவை என்பதை அபூ அப்திலாஹ் உணரத் தவறிவிட்டார். அது மட்டும் இல்லை. முதல் வருகையில் நீதியை நிலைநாட்டித் தீர்ப்பு வழங்காதது ஏன்? அக்காலத்தில் அவை சரியாக இருந்தன என்பதினாலா? அல்லது ஈஸா நபியால் அப்போது செய்ய முடியாது என்பதாலா? நவூதுபில்லாஹ். முதலில் வந்த போது தஜ்ஜாலைக் கொல்லவில்லையே! ஏன்? அவன் அப்போது இல்லை என்பதினாலா? அல்லது ஈஸா நபியால் கொல்ல முடியாது என்பதினாலா? நவூதுபில்லாஹ்? 

இருவேறு ஈஸா நபி என்பதால், இரு வேறு நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன என்பதை அபூஅப்தில்லாஹ் உணர்ந்து கொள்ளவேண்டும். 

மேலும், முதலில் வந்தவர் இஸ்ரவேலர் சமுதாயத்திற்கு மட்டும் வந்தவர். அவர் முழு உலகுக்கும் நபியாக வரமுடியாது. 

இரண்டாவது வரக்கூடியவர் முழு உலகுக்கும், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி வரும் உம்மத்தி நபி என்பதால் இருவேறு விதமாகக் கூறப்பட்டுள்ளன. இதுவே உண்மை.
Read more »

Aug 8, 2014

இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது


அபூ அப்தில்லாஹ்வின் அபத்தமான கூற்று.

அபூ அப்தில்லாஹ் தன்நூல் பக்கம் 36, 37-இல் திருக்குர்ஆன் 39:42 வசனத்தில் விளக்கியதற்கொப்ப, ஒருவரின் உயிரை 100 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 2:259 வசனத்திலும் அதே போல் சிலருடைய உயிர்களை சுமார் 300 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 18:25 வசனத்திலும் தெளிவுபடுத்தப் படுகின்றன. இதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களின் சில ஆயிரங்களோ பல ஆயிரங்களோ ஆண்டுகள் இறைவன் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவிப்பது பற்றி ஈமான் கொண்டவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழாது என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இந்த 5:117,118 வசனங்களில் கூறப்பட்டுள்ள கருத்திற்கும் 2:259, 18:25 என்ற வசனங்களைக் காட்டுவது பொருந்தாது. இப்போது இவ்விரு வசனங்களின் பொருளையும் விளக்கத்தையும் காண்போம். 

வசனம் 2:260 ன் பொருள்: அல்லது கூரை கீழாக விழுந்து கிடந்த ஒரு நகரத்தின் வழியாகச் சென்றவரைப் போல் ஆன ஒருவரைப் பற்றி நீர் கேள்விப்பட்டதில்லையா? அவர் இதன் அழிவிற்குப் பின்னர், இதனை எப்போது அல்லாஹ் உயிர்பிப்பான் என்று கேட்டார். பிறகு அல்லாஹ். அவரை எழுப்பி நீர் எவ்வளவு காலம் இந்நிலையில் இருந்தீர் எனக் கேட்டான். இதற்கு அவர் ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதி நான் (இந்நிலையில்) இருந்தேன் என்றார். அதற்கு அவன் ஆனால் நீர் (இந்நிலையில்) 100 ஆண்டுகள் இருந்தீர். எனவே நீர் உமது உணவையும் உமது குடிநீரையும் பாரும். அது கெட்டுப்போகவில்லை. மேலும் உமது கழுதையைப் பாரும். நாம் உம்மை மக்களுக்கு ஓர் அடையாளமாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்துள்ளோம்). மேலும் எலும்புகளைச் சீராக இணைந்த பின்னர் அவற்றின் மீது தசையைப் போர்த்தியுள்ளோம். என்பதையும் பாரும் என்றான். எனவே அவருக்கு இது தெளிவாகிய போது. அவர் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன் என்பதை நான் அறிவேன் என்றார். 

1. இமாம் பக்ருதீன் ராஸி (அத்தப்ஸீருல் கபீர்), இமாம் அதீருத்தீன் முஹீத் அபூ அப்தில்லாஹ் அபூ ஹைய்யானுள் உந்துலூலி, மௌலான அபுல்கலாம் ஆஸாத் ஆகியோம் 2:259 வசனத்தில் வரும் நூறு ஆண்டுகள் எனபது, நூறு ஆண்டு காலத்தைக் குறிக்காது என்றும், இது இஸ்ரவேல் தூதர் எசக்கியேலுக்கு காட்டப்பட்ட ஆன்மீகக் காட்சி என்றும் கூறுகின்றனர். 

மேலும் முகம்மது பிக்த்தால், மௌலவி முஹம்மது அலி, தாருல் இஸ்லாம் பத்திரிக்கை ஆசிரியர் தாவூத்ஷா ஆகியோர் தாங்கள் எழுதிய திருக்குர்ஆன் தர்ஜுமாக்களில் மேற்கூறிய கருத்துக்களையே கூறியுள்ளார்கள். 

2. அழிந்து கிடக்கும் நகரம் எப்போது உயிர் பெரும் என்று கேட்கிறார். அதற்குப் பதிலாகத் தான் இறைவன் 100 ஆண்டுகள் ஆகும் என்பதை அவரை கனவில் 100 ஆண்டுகள் மரணித்தவராக்கி உயிர்பித்துக் காட்டி அந்த நகரம் உயிர் பெற, மக்கள் வாழுமிடமாக மாற 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறான். 

இறந்தவர் மீண்டும் மறுமையில்தான் உயிர் பெறுவார் எனபதும் இவ்வுலகிற்கு மீண்டும் வர முடியாது எனபதும் திருக்குர்ஆன் கூறும் அடிப்படைச் சட்டமாகும். திருக்குர்ஆன் ஏறக்குறைய 16 இடங்களில் இதுபற்றி கூறுகிறது அவையாவன: 39:43, 23:101, 21:96, 44:57, 40:12, 36:32, 36:38, 6:28-29, 2:168, 26:103, 39:59, 32:13, 56:84-87, 36:51, 57:14, 23:17-18, இந்த வசனங்கள் தவிர நபிமொழி (திர்மிதி, இப்னு மாஜா) களிலும் இந்த அடிப்படைச் சட்டம் கூறப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக இறைவன் செய்யமாட்டன். எனவே 2:260 இல் கூறப்பட்ட சம்பவம் ஒரு கனவு என்பது தெளிவாகிறது. 

திருக்குர்ஆன் 21:96 “ஏதேனும் ஓர் ஊரை நாம் அளித்துவிட்டால், அவ்வூரில் வாழ்ந்து வந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப வரமாட்டார்கள் என்பது விதிக்கப்பட்டுள்ளது.”

திர்க்குறான் 23:16,17 “பின்னர் நீங்கள் அதற்குப் பிறகு நிச்சயமாக மரணமடைபவர்களே. பிறகு மறுமை நாளில் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.” 

திருக்குர்ஆன் 23:100,101 “அவர்களுள் ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால் அவர் கூறுவார்: என் இறைவா! என்னைத் திரும்ப அனுப்பி விடு. நான் விட்டு வந்த இடமாகிய (உலகத்தில்) நற்செயல்களை நான் செய்வதற்காக (என்னைத் திரும்பவும் அங்கு அனுப்பிவிடு) அது நடக்கக் கூடியதன்று. நிச்சயமாக அது அவன் பெரும் வெறும் பேச்சாகும். அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரையுள்ளது.” 

எனவே இவ்வசனங்களிலிருந்து இறந்த ரூஹ் மீண்டும் உலகிற்கு வர முடியாது என்றும் இது இறைவனின் நியதி என்றும் விளங்குகிறோம். 

இதிலிருந்து நூறு ஆண்டுகள் அவர் மரணித்தவராக இருக்கவில்லை. என்றும் அவருக்குக் காட்டப்பட்ட கனவு, கஷ்பில் 100 ஆண்டுகள் மரணித்தவராகக் காணப்பட்டார் என்றும் விளங்கிக்கொள்கிறோம். 

ஹதீது 1: 

அப்துல்லாஹ் (ரலி) எனும் நபித்தோழர் போரில் வீர மரணம் அடைந்தார். அன்னாரைக் கனவில் கண்ட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ்வின் மகன் ஜாபிர் (ரலி) அவர்களிடம் அது குறித்து கூறியதாவது. 

உன் தந்தையிடம் அல்லாஹ் உங்கள் விருப்பம் என்ன? கேளுங்கள் தருகிறேன் என்றான். அதற்கு அவர் தான் மீண்டும் உலகுக்குச் சென்று இறைவழியில் போரிட்டு மரணம் அடைய வேண்டும் என்று கூறினார். அதற்கு இறைவன் அது நடக்காது. இறந்தவர் மீண்டும் உலகிற்கு திரும்ப முடியாது என்று விதித்து விட்டேன் என்று கூறினான். (ஆதாரம்: இப்னுமாஜா – நஸயி) 

ஹதீது 2: 

தப்ஸீர் இப்னு கஸீரில் வருகிறது. உயிர்த் தியாகிகளின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் வயிறுகளில் இருக்கும். அவை தாம் விரும்பியவாறு சொர்க்கத்தில் உண்டு கழிக்கும். பின்பு அவை அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள அலங்கார விளக்குகளில் வந்து அடையும். 

அப்போது உம்முடைய இறைவன் அவர்களைப் பார்த்து உங்களுக்கு ஏதேனும் தேவைகள் உள்ளனவா என்று கேட்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவா! உன் படைப்புகளுள் யாருக்கும் நீ வழங்காதவற்றை எல்லாம் எங்களுக்கு வழங்கியுள்ளாய். அதற்குப் பிறகு எங்களுக்கு என்ன தேவை என்று கூறுவார்கள். 

இவ்வாறு மீண்டும் மீண்டும் அல்லாஹ் கேப்பான். ஏதாவது கேட்காமல் விடமாட்டான் என்று உணர்ந்து எங்களை இவ்வுலகிற்கு (மீண்டும்) அனுப்பி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறு அனுப்பி வைத்தால் மற்றொரு முறை உனக்காக கொல்லப்படும் வரை உன் வழியில் போராடுவோம் என்று அவர்கள் கூறுவார்கள். இறைவழியில் உயிர்த்தியாகம் புரிவதால் கிடைக்கும் பலன் என்ன என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டதே அவ்வாறு அவர்கள் கேட்பதற்குக் காரணமாகும். அப்போது இறந்தவர்கள் மறுபடியும் உலகத்திற்கு அனுப்பபடமாட்டார்கள் என்று ஏற்கனவே நான் முடிவு செய்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான். (தப்ஸீர் இப்னு கஸீர் – பாகம் 2, பக்கம் 253) 

4. கனவு என்ற சொல் 2:260 வது வசனத்தில் இடம்பெறவில்லை என்று கூறுவதாக இருந்தால், கனவு பற்றி திருக்குரானிலும் ஹதீதுகளிலும் கூறப்பட்ட சில இடங்களில் அச்சொல் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 12:5 இல் யூசுப் தன் தந்தையிடம் கூறிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக). “தந்தையே! நான், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கண்டேன். அவை எனக்கு சிரம்பணியக் கண்டேன். சிறையில் அவருடன் இரண்டு வாலிபர்களும் நுழைந்தனர். அவர்கள் ஒருவர் (அவரிடம் நான் என்னை திராட்சையைப் பிழிந்து கொண்டிருப்பதாகக் கண்டேன். (12:37) 

மேற்சொன்ன இரண்டு வசனங்களிலும் கனவு பற்றிக் கூறப்பட்டிருந்தாலும் கனவு என்ற சொல் இடம் பெறவில்லை. எனவே 2:260 வசனம் கனவுக் காட்சியாகும். 

5. அச்சம்பவத்தில் உணவும் நீரும் கேட்டுப் போகாததினால் உண்மையில் 100 ஆண்டுகள் என்பது இல்லை. கொஞ்ச நேரம் தான் என்பதும் கனவில்தான் 100 ஆண்டுகளாகக் காட்டப்பட்டது என்ற உண்மையும் புலனாகிறது. 

6. இந்த வசனத்தில் (2:260) மரணம் என பொருள் தரும் மௌத் என்ற சொல் வந்துள்ளதே எனக் கேட்டால் இந்த மௌத் என்ற சொல் தற்காலிகமாக உயிரைக் கைப்பற்றுதலாகிய தூக்கத்திற்கும் பொருந்தும் என 39:43 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். 

மேலும் மொழி வழக்கிலும் உறக்கம், சிறு மரணம் போன்றது என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறே நபிமொழி வழக்கும் உண்டு1) துஆ பற்றி வரும் நபிமொழிகளிலும் உறங்கும் முன்பும் பின்பும் செய்யும் துஆக்களில் மௌத் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உறக்கம் என்ற பொருள். 2) உங்கள் வீடுகளை கபர்களாக (உறங்கும் இடமாக) ஆகிக் கொள்ளாதீர்கள். என்னும் நபிமொழியில் வீடு உறங்குமிடமாக மட்டும் இருக்கக்கூடாது. தொழுகைக்கு பயன்படவேண்டும் என்னும் கருத்து உள்ளது. எனவே 2:260 வசனத்தில் இடம்பெறும் மௌத் எனும் சொல்லுக்கு ‘அவரை தூங்கச் செய்து’ என்பதே பொருள். 

7. தூக்கம் என்பது குர்ஆன் ஹதீது அடிப்படையிலும் நம் அன்றாட அனுபவத்தின் அடிப்படையிலும் கொஞ்ச நேரம் தான் என்பது தெளிவு. 300 ஆண்டுகள் உறங்கியதாக தவறாய்ப் பொருள் கொள்ளப்படுவதால் இதன் உண்மை விளக்கத்தைப் பார்ப்போம். திருக்குர்ஆன் 18:19 இல் நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பதாக கருதுகிறீர். ஆனால் அவர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அல்லாஹ் கூறுகின்றான். 

இவர்கள் 300 ஆண்டுகளாக உறங்கினர் என்று திருக்குரானில் எங்கும் கூறப்படவில்லை. மாறாக 300 மற்றும் 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கியிருந்த காலத்தை இறைவனே நன்கறிவான் என்று 18:27 வசனம் கூறுகிறது. 

குர்ஆன் ஆகிய நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மக்களின் உடல்கள் பூமியில் (இவ்வுலகில்) இருந்தன. அனால் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் உடலும் 2000 ஆண்டுகளாக பூமியில் இருந்திருக்கும் என்றால் ஒரு வாதத்திற்காக தூக்கம் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் உடல் பூமியில் இல்லை. எனவே அவ்வாறு நம்புவதாகவும் இடமில்லை. 

மேலும் திருக்குர்ஆன் 18:19 இல் நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறீர். ஆனால் அவர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதன் பொருள் சில தலைவர்கள் தமது சமுதாய மக்களை விழிப்புணர்வும், எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கா தூங்கியது போதும் விழித்தெழுங்கள் என்று கூறியது போலாகும். அக்குகைவாசிகளும் இன்னும் விழித்தெழவில்லை. தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும். அதாவது அவர்கள் குகையிலிருந்து வெளியேறும் எண்ணமோ, எழுச்சியோ, இன்னும் உருவாகவில்லை என்பதனைத்தான் அவ்வசனம் உணர்த்துகிறதேயொழிய உடல் உறக்கம் அன்று.
Read more »

Aug 5, 2014

ஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். 

நம் விளக்கம்

பி.ஜே யின் திருமறையின் தோற்றுவாய் எனும் நூலிலும் அந்த அற்புதங்களைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார். 

1. தந்தையின்றி பிறந்தது. 

2. தொட்டிலில் பேசியது.

3. பறவைகளைப் படைத்தது. 

4. இறந்தவரை உயிர்ப்பித்தது. 

5. பிறவிக் குருட்டையும் 

6. குஷ்டத்தையும் நீக்கியது. 

இக்கருத்துகள் திருக்குர்ஆனின் 5:110, 3:46, 3:47, 3:49 ஆகிய வசனங்களில் வருகின்றன. 

படைத்தல், உயிர் கொடுத்தல் என்று இறைவனுக்கு மட்டும் உரிய செயல்கள் ஈஸா நபிக்கும் வருகிறது. அதற்கு பொருள் கொடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவற்றை பி.ஜே போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை. 

ஒரு சொல்லை அல்லாஹ்வுக்கு பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு பொருள் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அச்சொல்லைப் பயன்படுத்தும் போது இறைவனின் தகுதியைக் குறைத்து விடாதபடியோ நபியின் தகுதியை அளவுக்கு மீறி உயர்த்தி விடாதபடியோ பொருள் கொடுக்க வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட பி.ஜே உணரவில்லை. இதனால் அவர் அல்லாஹ்வின் தகுதிக்கு ஈஸா நபியின் தகுதியை உயத்தி விட்டார். எப்படி, 

மக்களே உங்களிடம் கூறப்படுகின்ற உவமையைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்களால் ஒரு ஈயைக் கூடப் படைக்க முடியாது. அதற்காக அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் சரியே, இது மட்டுமின்றி, ஓர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளைப் பறித்துச் சென்றால், அவர்களால் அதனிடமிருந்து அதனை(க்கூட) விடுவிக்க முடியாது. அழைப்போரும் அழைக்கப்படுவோரும் மிகப் பலவீனமானவர்களேயாவர். 

அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக்க வல்லமையுள்ளவனும் மிகைத்தவனும் ஆவான். (திருக்குர்ஆன் 22: 74-75) பி.ஜே யின் தமிழாக்கம். 

ஒருவரை அழைத்து பிராத்தனை செய்ய வேண்டுமானால் அதற்குரிய ஒரு தகுதியை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். படைப்பாற்றல் எவனிடம் உள்ளதோ அவன் மட்டுமே பிராத்தனை செய்யப்பட தகுதியுடையவன், இறைவனை விட்டு விட்டு பிராத்திக்கப் படுபவர்கள் நபிமார்களாயினும், இறைநேசர்களாயினும் அவர்கள் எவருமே ஓர் ஈயைக் கூட படைத்ததில்லை. படைக்க இயலாது. எனவே, அல்லாஹ் பறவைகளைப் படைத்ததைப் போன்று ஈஸா நபி பறவையைப் படைக்கவில்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரிடம் பறவையைப் படைக்கும் ஆற்றல் உள்ளதால் அவரிடம் பிராத்தனை செய்யலாம் என்று ஏற்க வேண்டும். பி.ஜே எதனை ஏற்கப் போகிறார்? 

22:75 - இல் அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. அதாவது ஈஸா நபிக்கும் அல்லாஹ்வைப் போல் படைப்பாற்றல் இருக்கின்றது என்று நம்புவதன் மூலம் அல்லாஹ்வின் கண்ணியத்தை ஈஸா நபிக்கு கொடுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை குறைத்து விட்டார்கள். 

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால், படைத்தல் பண்பு அல்லாஹ்வுக்கு வரும் போது அவனுடைய கண்ணியத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப பொருள் கொடுக்க வேண்டும். அப்பண்பு ஒரு நபிக்கு வரும் போது ஒரு மனித நபி என்ற அளவில் களிமண் போன்ற மனிதர்களை பச்சை நிறப் பறவைகள் போன்று சொர்க்கத்தில் பறந்து திரிபவர்களாக மாற்றுபவர் என்று நம்பவேண்டும். 

அடுத்து திருக்குர்ஆன் 16:20-21 வது வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றார்களோ அவர்களால் (பொய்க்கடவுள்களால்) எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களோ (இறைவனால்) படைக்கப்பட்டவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்று கிறித்துவ மக்களால் கடவுள் என்று அழைக்கப்படும் ஈஸா நபி எதனையும் படைக்க முடியாது என்று கூறும்போது அவர் பறவையைப் படைத்தார் என்று நம்புவது சரியா? 

அப்படி நம்பினால், ஈஸா நபி இறைவனால் படைக்கப்பட்டவர் என்றால் அவரால் பறவையை படைக்க முடியாது என்று நம்பவேண்டும். பறவையை படைத்தார் எனில் இறைவனால் படைக்கப்பட்டவர் அல்லர் என்று நம்ப வேண்டும். பி.ஜே எதனை நம்ப போகிறார்? 

(பொய்க்) கடவுளர் எதனையும் படைத்ததில்லை. அவர்களோ படைக்கப் படுகின்றனர். (திருக்குர்ஆன் 16:17 ). பி.ஜே யின் தமிழாக்கம். 

இவ்வசனத்தில் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் எதனையும் படைக்க முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. 

இது அல்லாஹ்வின் படைப்பாகும். எனவே, நீங்கள் அவனையன்றி மற்றவர்கள் எதனைப் படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள். (திருக்குர்ஆன் 31:12) 

(பொய்த் தெய்வங்கள்) அவை பூமியில் படைத்திருப்பதை நீங்கள் எனக்குக் காட்டுங்கள். (35:40; 46:5 ) 

அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். வேறுயாரும் எதனையும் படைத்ததில்லை. என்றால், ஈஸா நபி பறவையைப் படைத்திருக்கிறார் என்று நம்புபவர்கள் அல்லாஹ்விடம் ஈஸா நபி படைத்த பறவையைக் கொண்டு காட்டுவார்களா? 

முதன் முறையாகப் படைத்து அதனையும் திரும்பவும் செய்கின்ற எவராவது இணை வைப்பவர்களுள் இருக்கின்றனரா? முதன் முறையாகப் படைத்து அதனைத் திரும்பவும் செய்கின்றவன் அல்லாஹ் (மட்டும்) தான் (10:35 ) 

எதோ ஒரு பறவையை முதலில் படைத்தவர் ஈஸா நபி தான் என்று இவர்கள் ஈஸா நபியை இறைவன் முன் நிறுத்தப் போகிறார்களா? 

அவன் படைத்ததைப் போன்று அவை (பொய்க் கடவுள்கள்) படைத்ததன் காரணமாகவா அவற்றை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டனர்? எனவே (தான் இரு) படைப்புகளும் அவர்களுக்கு ஒன்று போல் தெரிகிறதோ? (திருக்குர்ஆன் 13:17) 

ஈஸா நபி பறவையைப் படைத்தார் என்று நம்பும் பி.ஜே ஈஸா நபியை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொள்கிறார். மேலும் ஈஸா நபி படைத்த பறவையையும் அல்லாஹ் படைத்த பறவைகளும் ஒன்று போல் அவர்களுக்குத் தெரிகிறது என்று இந்த வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்கிறோம். 

அல்லாஹ்வே உங்களைப் படைத்தவன். பின்னர் அவனே உங்களுக்கு உணவு அளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்தான். பின்னர் அவன் உங்களை உயிர் பெறச் செய்வான். உங்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களுள் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூயவனும் மேலும் அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன். (திருக்குர்ஆன் 30:41) 

ஈஸா நபி பறவையைப் படைத்துள்ளார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். எனவே இரண்டு செயல்களைச் செய்துள்ளார் என்று நம்பும் பி.ஜே இறைவனின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அப்படி நம்பினால் அவர் இறைவனுக்கு இணை வைத்தவரும் அல்லாஹ்வின் தூய்மைக்கும் அல்லாஹ்வின் மேன்மைத் தன்மைக்கும் களங்கம் கற்பித்தவரும் ஆவார். 

அப்படி என்றால், ஈஸா நபி களி மண்ணால் பறவையைப் படைத்துள்ளார் என்று திருக்குர்ஆன் 2 இடங்களில் கூறுகிறதே? என்ற கேள்வி எழும். 

அல்லாஹ் உலகில் உள்ள பறவைகள் முதல் ஈஸா நபி போன்ற மனிதர்கள் வரை அனைத்துப் படைப்புகளையும் படைத்தது போன்று ஈஸா நபி படைக்கவில்லை. மாறாக ஒரு மனித நபி களிமண் போன்ற மனிதர்களை மனிதனாக மாற்றி பிறகு அவனை மனிதப் புனிதனாக்கி ஆத்மீக வானில் பறந்து திரியும் பறவை போல் மாற்றினார் என்று பொருள். 

உயிர் கொடுத்தல் 

அல்லாஹ் மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறான். அவனைத் தவிர வேறு யாரும் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். 

1. ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று திருக்குர்ஆனில் வருகிறதே என்றால் இறந்தவர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வர முடியாது என்று ஏறக்குறைய 16 இடங்களில் வருகிறது. இதில் ஒன்று 23:100 வசனம். இந்த வசனத்தைப் பற்றி பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 298 இல். 

உயிர்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை எனும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில், ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 23:100) கூறுகிறது என்று எழுதியுள்ளார். 

பி.ஜே உண்மையில் இவ்வாறு நம்புகிறார் என்றால் ஈஸா நபி உயிர் பெறச் செய்த அந்த ரூஹ் அந்தத் திரையைத் தாண்டி எப்படி வந்தது? 

மலக்குல் மவ்த் – ரூஹைப் பறித்துச் செல்வார். ஆனால் பறித்த உயிரை திரையைக் கிழித்துக் கொண்டு எந்த மலைக்கு அந்த ரூஹைக் கொண்டு வந்து அந்த சடலத்தில் புகுத்தினார்? மலக்குல் மவ்த் போன்று மலக்குல் ஹயாத் பற்றி திருக்குரானிலோ நபிமொழியிலோ இல்லையே ஏன்? 

2. பேய் பிசாசு உண்டா எனும் தலைப்பில் பி.ஜே எழுதியுள்ள நூலில் இறந்து போன உயிர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வருவதில்லை என்பதற்கு பி.ஜே காட்டும் திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்கள் ஊருக்குத் தான் உபதேசமா? அந்நூலில் பி.ஜே எடுத்து வைக்கும் ஆதாரங்கள் ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுக்கவில்லை என்பதற்குப் பொருந்தாதா? 

3. திருக்குர்ஆன் 8:25 வசனத்தில், நபி (ஸல்) உயிர் கொடுப்பதற்காக உங்களை அழைக்கும் போது அவர்க்குப் பதிலளியுங்கள் என்று வருகிறதே, நபி (ஸல்) அவர்கள் இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா? ஈஸா நபியுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் உயிர் கொடுத்தல் எனும் ஒரே சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

4. என் இறைவன் உயிர் கொடுப்பவன். மரணிக்க செய்பவன் என்று இப்ராஹீம் நபி அவர்கள் கூறியபோது நானும் உயிர் கொடுப்பேன்: மரணிக்க செய்வேன் என்று அவன் (இறைமறுப்பாளன்) கூறினான் என்று வருகிறது. (திருக்குர்ஆன் 2:259) 

இப்ராஹீம் நபியுடன் வாதிட்ட இறைமறுப்பாளனுக்கும் அல்லாஹ்வைப் போல் இறந்தவனுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா? 

5. தஜ்ஜால் இறந்தவரை உயிர்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர் என்று பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் அவ்லியாக்களின் அற்புதங்கள் எனும் தலைப்பில் எழுதியுள்ளார். 

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணை வைத்தல் அன்று, மாறாக இறைவனது தன்மையில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போல மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். ஷிர்க்கின் இந்த இலக்கணத்தை பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் பரிந்துரையை வேண்டுவது குற்றமா எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் தஜ்ஜால் அல்லாஹ்வின் ஒரு பண்பாகிய உயிர் கொடுத்தல் எனும் பண்பை, ஒரே ஒரு முறை செய்ததாக பி.ஜே நம்புகிறார். இது இணை வைத்தல் இல்லையா? இணை வைத்தல் எனும் கொடிய விஷத்தை ஒருவன் ஒரே ஒரு முறை சாப்பிட்டால் அவன் சாக மாட்டான் என பி.ஜே நம்புகிறாரா? 

6. பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 24 இல் கொலையாளியைக் கண்டு பிடித்தல் எனும் தலைப்பில் 2:72 வசனத்திற்கு விளக்கமாக, மூஸா நபியவர்கள் இறந்தவனை மாட்டின் ஒரு பகுதியால் அடித்து அவனை உயிர் பெறச் செய்திருப்பதாக நம்புகிறார். ஆனால் மூஸா நபியின் மீது அவரது சமுதாயம் ஹரூன் நபியைக் கொன்றதாக பழி சுமத்திய போது மூஸா நபி, தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க மாட்டின் ஒரு பகுதியால் ஹாரூன் நபியின் உடலில் அடித்து உயிர் பெறச் செய்யவில்லையே ஏன்? (பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 394 காண்க) 

7. மேலே கூறியவற்றை தொகுத்துப் பார்க்கும் போது, 

1) அல்லாஹ்வுக்கு மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. வேறு எவர்க்கும் இல்லை. 

2) இறந்த உயிர்கள் மீண்டும் திரும்பி இந்த உலகத்திற்கு வராது என்ற கருத்தை நிரூபிக்கும் திருக்குர்ஆன், நபிமொழி சான்று பற்பல உள்ளன. இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ஈஸா நபி , நபி (ஸல்) மூஸா நபி, இறை மறுப்பாளன், தஜ்ஜால் ஆகியோர் இறந்தவருக்கு உயிர் கொடுத்துள்ளார் என்ற தவறான நம்பிக்கை காணப்படுகிறது. அப்படியெனில், திருக்குர்ஆனில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன என்று பி.ஜே நம்புகிறாரா? 

8. அல்லாஹ் இறந்தவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புவது கியாமத் நாளில்தான், அதற்கு முன் உயிர் கொடுப்பதில்லை, ஆனால் ஈஸா நபி (அலை) உடனே உயிர் கொடுத்து எழுப்பியதாக பி.ஜே நம்புகிறார். அப்படி எனில் ஈஸா நபியை அவர் அல்லாஹ்வை விட அதிகமாக உயர்த்தியிருப்பதாக தெரிகிறது (நவூதுபில்லாஹ்) 

9. திருக்குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் உள்ளன. ஒன்று அடிப்படை வசனங்கள். இரண்டு உவமை வடிவிலான வசனங்கள். 

அல்லாஹ் ஒருவனே: அவனே அனைத்தையும் படைப்பவன்: அவன் அனைத்தையும் மரணிக்கச் செய்பவன்: அவனே இறந்தவர்களை உயிர்பிப்பவன், இவை திருக்குர்ஆனின் அடிப்படை வசனங்களாகும். 

ஈஸா நபி படைத்தார்; உயிர் கொடுத்தார்; குருடர்களை குணப்படுத்தினார்; தொழு நோயாளிகளை குணப்படுத்தினார் என்பவை உவமை வடிவிலானவை. இவற்றிற்கு, அடிப்படை வசனங்களுக்கு முரண்படாத வகையில் பொருள் கொடுக்க வேண்டும். உதாரணமாக, ஈஸா நபி இறந்த பிறகு மறுமையில் அவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புபவன் அல்லாஹ்வே, ஆனால் ஈஸா, நபி என்ற அடிப்படையில் அவரது சமுதாய மக்கள் ஆன்மீக மரணம் அடைந்து கிடந்த போது அம்மக்களுக்கு ஆத்மீக உயிர் கொடுத்து எழுப்பியவர் ஈஸா நபி என்று அதற்குப் பொருள் கொடுக்க வேண்டும். ஈமான் இல்லாதவர்கள் இறந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஈமானை கொடுப்பது உயிர் ஊட்டுவதாகும். 

இக்கருத்தை திருக்குர்ஆன் 6:123 வசனம் விளக்குகிறது. ஒருவன் (நிராகரிப்பினால்) மரணித்தவனாக இருந்த பிறகு (நேர்வழியின் மூலம்) அவனை நாம் உயிர்ப்பித்து அவனுக்கு (ஈமான் எனும்) ஒளியை நாம் கொடுத்து அதன் மூலம் மனிதர்களிடையே நடக்கிற அவன் (குப்ர் எனும்) இருள்களில் (சிக்கி) இருந்து அவற்றை விட்டும் வெளியேற முடியாதவனைப் போல் ஆவானா? 

10. ஈஸா நபியின் சிறப்பு எதுவென்றால் அவர் உவமை வடிவில் தான் தூதுச் செய்தியை மக்களுக்கு ஊட்டினார். எனவே அவர் பற்றிய இந்த செய்திகளும் உவமை வடிவில் கூறப்பட்டுள்ளன. 

11. அல்லாஹ்வுக்கும் உவமை கூறாதீர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது ( ) 

இதற்கு பி.ஜே அல்லாஹ்வைப் பற்றி கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான் என்று திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில், உதாரணங்கள் ஆதாரங்களாகுமா? எனும் தலைப்பில் எழுதியுள்ளார். 

அல்லாஹ் தனக்கு உவமை கூறாதீர்கள் எனக் கூறியது வக்கீல், நீதிபதி என்று கூறும் உவமைகள் அல்ல. ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வை போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது தான் அல்லாஹ்வுக்கு, ஈஸா நபியை உவமை கூறுவதாகும். எனவே அவனைப் போல் எதுவுமில்லை. (திருக்குர்ஆன் 42:11) என்றும் அவனுக்கு நிகராக எவனுமில்லை (112:4) என்றும் திருக்குர்ஆன் கூறுவதால் ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வைப் போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு உவமை கூறுவதாகும். அதாவது ஈஸா நபி அல்லாஹ்வைப் போல அவனுக்கு நிகராக உள்ளார் என்று நம்புவதாகும். 

குருடர்களையும் நோயாளிகளையும் குணப்படுத்துதல்

இவையும் உவமை வடிவில் கூறப்பட்டவையாகும். ஈஸா நபி புறக்கண் குருடர்களையும், உடல் நோயாளிகளையும் குணப்படுத்த வரவில்லை. அவர் அகக் குருடர்களையும் அறிவுக் குருடர்களையும் ஆத்மீக நோயாளிகளையுமே குணப்படுத்த வந்தார். உலகில் வந்த அனைத்து நபிமார்களும் இந்தப் பணியைச் செய்யத்தான் வந்தனர். திருக்குர்ஆனில் புறக்கண் குருடர்களைப் பற்றி பொதுவாக சில இடங்களில் வருகிறது. (அவை 25:74, 6:105, 47:24, 41:18 ஆகிய வசனங்களாகும்.) 

1) உங்கள் வீடுகளிலோ சாப்பிடுவது நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. (திருக்குர்ஆன் 24:62) 

இந்த வசனங்களில் சில வீடுகளைக் குறிப்பிட்டு இவர்களின் வீடுகளில் நோயாளி, குருடர், ஊனமுற்றவர்கள் சாப்பிடுவது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

2) போருக்குச் செல்லாமல் இருப்பது குருடர் மீதும் குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. (திருக்குர்ஆன் 48:18) 

3) தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக அவர் முகம் சுளித்து புறக்கணித்து விட்டார். (80:1-2) 

இந்த இடங்களில் மட்டுமே புறக்கண் குருடர்களைப் பற்றி வந்துள்ளன. ஏனைய எல்லா இடங்களிலும் அகக்கண் குருடர்களைப் பற்றியே வந்துள்ளன. இத்தகு கருத்துக் குருடர்களை குணப்படுத்தவே ஈஸா நபி வந்தார்கள். ஏன் எல்லா நபிமார்களும் வந்துள்ளனர். (2:19, 2:172, 10:44, 27:82, 30:54, 43:21, 22:47, 5:72, 6:105, 17:98, 25:74) இவ்வாறே உடல் நோயாளிகளைப் பற்றியும் சில வசனங்களில் (24:62, 48:18, 9:91, 73:21, 26:81, 2:185-186, 2:196, 4:44,107, 5:7 ) வந்துள்ளன. நான் நோயாளியாக இருக்கின்றேன் (37:39) என இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் கூறினார்கள். இவை உடல் நோயாளிகளைப் பற்றி வரும் இடங்களாகும். ஏனைய இடங்களில் ஆத்மீக நோய்களைக் குறித்தே வருகிறது. ஈஸா நபி குணப்படுத்திய நோய் ஆத்மீக நோய் ஆகும். ஏனென்றால் உடல் நோய்களைக் குணப்படுத்த உலகில் பல மருத்துவர்களும், மருந்துகளும் உள்ளன. ஆனால் இறைவனுடன் தொடர்புடைய ஆத்மீக நோய்களைக் குணப்படுத்தவே நபிமார்களை அல்லாஹ் அனுப்புகின்றான். 

(உள்ளத்தின் நோயைப் பற்றி திருக்குரானில் 2:11, 5:53, 8:50, 9:125, 22:54, 24:51, 33:13, 33:33, 33:61, 47:21, 47:30, 74:32, 24:6 26:81, 48:18, 2:185-186,196; 4:44,103; 5:7, 9:91, 73:21 போன்ற வசனங்களில் கூறப்பட்டுள்ளன.) 

2:19,172; 10:44, 27:82, 30:54, 43:41, 17:98, 25:74, 6:105, 5:72, 22:47, 47:24, 41:18 போன்ற வசனங்களில் ஆத்மீகக் குருடர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஒரு வாதத்திற்காக அவை உடல் நோய்கள் என்று வைத்துக் கொண்டால், 

முஸ்லிம் ஹதீஸ் எண் 5735: 

ஒரு சாதாரண சிறுவன் குருடர்களைக் குணப்படுத்துகின்றான். தொழு நோயாளிகளையும் பிற நோய்களையும் குணப்படுத்துகின்றான். தன்னை மலையிலிருந்து உருட்டிக் கொள்வதற்கு அனுப்பட்ட அரச வீரர்களை மலையை குலுங்க வைத்து தப்புகிறான். தன்னைப் படகில் ஏற்றி கடலில் எறிந்து கொல்ல வந்த வீரர்களை மறக்களைத்திளிருந்து விழ வைத்து தப்புகிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. எனவே ஒரு சாதாரண சிறுவனும். துஆவினால் அந்த அற்புதங்களைச் செய்துள்ளான். எனவே ஈசா நபி மட்டும் செய்தார் என்பதற்கு இடமில்லை.
Read more »