அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Dec 30, 2013

அபூ அப்தில்லாஹ்வின் அறிவீனம்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 37 இல் “ஒரு மனிதனின் உயிர் உறக்கத்தின் நிலையில் கைப்பற்றபட்டாலும் அவனை சுற்றி நடைபெருபவைகளை அவன் அறியமாட்டான். இந்நிலையில் அவன் அவைகளின் நிமித்தம் குற்றம் சாட்டப்படவும் மாட்டான். இந்த அடிப்படையிலேயே ஈஸா (அலை) அவர்கள் 5:117 வசனத்தில் என்னைக் கைப்பற்றிய பின், உலகில் இல்லாத காலத்தில் அவர்கள் செய்தவைகளை நான் அறியேன், நீயே நன்கறிந்தவனாக இருக்கிறாய் என்று கூறுகிறார்கள். எனவே 5:117 வசனத்தை ஆதாரமாக காட்டி ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று காதியானிகள் கூறுவது அறிவீனமாகும்” என்று எழுதியுள்ளார். 

நம் பதில்:-

இவ்வாறு அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் எழுதுவார்கள் என்று தெரிந்துதான் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதற்கு இடம் வைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மூலம் 5:117,118 வது வசனத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளான் போலும். அந்த நபி மொழியின் படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தன் மக்கள் மத்தியில் வாழ்ந்தகாலம், பின்னர் அங்கிருந்து ரூஹ் மட்டும் கைப்பற்றபடுதல், பின்னர் தன் மரணத்திற்குப் பிறகு தன் தோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாத மறுமை வாழ்வு ஆகியவை தனக்கு நடந்தது போன்று ஈஸா நபிக்கும் நடந்தது என்று நபி (ஸல்) அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ، ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ سورة الأنبياء آية 104 وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ : أَصْحَابِي ، أَصْحَابِي ، فَيَقُولُ : إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ فَأَقُولُ كَمَا ، قَالَ : الْعَبْدُ الصَّالِحُ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي إِلَى قَوْلِهِ الْعَزِيزُ الْحَكِيمُ سورة المائدة آية 117 - 118 

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 3349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்

5:117,118 வசனத்தில் (தற்காலிக மரணமாகிய) தூக்கம், இரவு என்ற சொற்கள் இடம் பெறவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்களைப் போன்று ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் மீனும் இவ்வுலகிற்கு வரமாட்டார் என்றும் அந்த நபி மொழி உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல, ஈஸா நபி (அலை) உயிரோடு உயர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வருவார் என்றும் உலகில் அவர் இல்லாத காலத்தில் நடந்தவைகளை அவர் அறியமாட்டார் என்பதும் தவறு ஏனென்றால் அபூ அப்தில்லாஹ்வின் தவறான கருத்துப்படி அந்த ஈஸா மீண்டும் உலகில் வரும்போது அவரையும் அவரது தாயரையும் கிருஸ்தவர்கள் வணங்கிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு மரணித்து மீண்டும் மறுமையில் இறைவனை சந்திக்கின்றபோது என்னை உயர்த்திய பிறகு நடந்தவைகளை நான் அறியவில்லை. ஆனால் மீண்டும் உலகிற்கு சென்ற பிறகு கிருஸ்தவர்கள் என்னையும் என் தாயாரையும் வணங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்றுதான் கூறவேண்டும். அப்படிக் கூறாததனால் அவர் மீண்டும் வரப்போவதில்லை என்பது தெளிவாகிறது.
Read more »

Dec 29, 2013

இப்னு மர்யம் பற்றி அபூ அப்தில்லாவின் தவறான கருத்து



அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்.

திருக்குரானில் குறிப்பிடப்படும் எந்த நபியும் அவர் இன்னாரின் மகன் என்று குன்யத்துப் பெயரால் அல்லாஹ் அழைக்கவில்லை. ஈஸா (அலை) அவர்களை மட்டும் இப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயரால் இறைவன் அழைப்பதன் மர்மம் என்ன? சுமார் 2000 வருடங்களுக்கு முன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்ட அதே ஈசப்னு மர்யம் மீண்டும் உலகில் இறங்குவார் என்பதை மக்களுக்கு சந்தேகமற அறிவிக்கவே தனது திருமறையில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஈசப்னு மர்யம் என்றே குறிப்பிடுகின்றான். 

உலக நடைமுறையில் ..... சொத்துக்கள் பதியப்படும் போது நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போதும் இன்னாரின் மகன் என்று குரிப்ப்டப்படுவதைப் பார்க்கிறோம். அதற்கு அடிப்படைக் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கே ஆகும். அதாவது இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிட்டால் அது குறிப்பாக ஒரே ஒரு நபரைக் குறிக்கும் சொல்லாகும். இதன் காரணமாகவே முஹம்மது என்ற பெயரை மற்றவர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்த நபி (ஸல்) அவர்கள் தனது குன்யத்துப் பெயரான அபுல் காஸிம் என்ற பெயரை மற்றவர்களுக்கு வைப்பதைவிட்டும் தடுத்துள்ளார்கள். (ஆதாரம் புகாரி) 

உலக வரலாற்றில் யாரும் ஈஸா (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் அல்லர். 

காதியானிகள் சொல்வதுபோல் ஈசப்னு மர்யத்தைப் போன்ற குணாதிசியங்கள் உடைய இந்த உம்மத்தில் தோன்றும் ஒருவர் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. காதியானிகள் நபியாக ஒப்புக் கொண்டிருக்கும் பொய் நபி (நவூது பில்லாஹ் மின் தாலிக்) மிர்ஸா குலாமின் தாயார் பெயர் மர்யம் என்று இருந்தாலும் கூட இவர் தந்தையின்றி பிறக்காத காரணத்தால் மிர்ஸா குலாமை இப்னு மர்யம் என்று ஒருபோதும் சொல்லமுடியாது

ஹாதிம் தாய், அப்லத்தூன், எலியா என்னும் பெயர்களில் இன்னார் மகன் இன்னார் என்ற குறிப்பு இல்லை. ஆதலால் இப்பெயர்களை இன்னொருவருக்கு உவமையாகச் சுட்டிக்காட்டி குறிப்பிடுவதால் தவறில்லை. ஆனால் இப்னு மர்யம் என்று ஒருவரை உவமையாகக் குறிப்பிடக் கூடாது. காரணம் இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நம் பதில் : 

இப்னு மர்யம் குறித்து அல்லாஹ் கூறும் போது இஸ்முஹுல் மஸீஹ் ஈசப்னு மர்யம் அவரின் பெயர் மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும் என்று 3:46 இல் கூறுகிறான். எனவே அல்லாஹ் அவருக்கு வைத்தக் முழுப் பெயரே மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும். அதன் ஒரு பகுதியைப் பிரித்து குன்யத்துப் பெயர் எனக் கூறி கற்பனைக் கதை புரியும் இவரை என்ன சொல்வது?

ஈசப்னு மர்யம் என்று குர்ஆனில் ஒரு சொல் வருகிறதென்றால் இறைவன் ஏன் இன்னாரின் மகன் இன்னார் என்று கூறினான் என்பதற்குரிய விடை குரானிலேயே இருக்கும் அல்லது ஹதீஸிலும் கிடைக்கும். அதைப் பற்றி ஆராயாமல் அபூ அப்தில்லாஹ் அச்சொல்லுக்கு தவறான ஒரு கருத்தை தந்துள்ளார். குர்ஆனில் எந்த நபியையும் அவர் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயரால் குறிப்பிடாமல் ஈஸா (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடக் காரணம் என்ன? கிருஸ்தவர்கள் குரான் இறங்கும் கால கட்டத்தில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் நம்பினர். எனவே அவர்களுடைய நம்பிக்கையை மறுக்கவே அவரை மர்யத்தின் மகன் ஈஸா என்று கூறுகிறது

இப்னு மர்யம் என்ற சொல் திருக்குரானில் 23 இடங்களில் வருகிறது. இவ்வாறு 23 முறை அல்லாஹ், ஈஸாவை மனித குமாரன், மர்யத்தின் மகன் என்று கூறுகிறான். 

குன்யத்து தொடர்பான நபிமொழியை காண்போம். அபூ அப்தில்லாஹ் அதற்க்கு எடுத்துக் காட்டும் தந்துள்ளதால் அதனை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன். 

முஹம்மது என்ற பெயரை பிள்ளைகளுக்கு சூட்டச் சொல்லிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுல் காசிம் என்ற குன்யத்துப் பெயரை பிறருக்கு சூட்டுவதைத் தடுத்திருக்கிறார்கள் என்றாலும் அதற்கு அவர் கூறும் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாகும். குன்யத்துப் பெயர் என்றால் அது ஒரே ஒரு ஆளை மட்டுமே குறிக்கும் என்று அபூ அப்தில்லாஹ் கூறுகிறார். அப்துல்லாஹ் என்பவருக்கு முஹம்மது என்ற ஒரு மகன் இருந்தால் அப்துல்லாஹ் வின் மகன் முஹம்மது. அதாவது முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று கூறினால் ஆள்மாறாட்டம் ஏற்படாதா? எனவே அபூ அப்தில்லாஹ் காட்டும் ஆதாரம் அர்த்தமற்றதாகும். இது பற்றிய ஹதீஸை காண்போம். 

என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள் ஆனால் (அபுல் காசிம் என்ற ஏன் குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3537)

இதிலிருந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காஸிமின் தந்தையாக இருப்பதனால் அபுல் காசிம் என்ற பெயரைச் சூட்டக் கூடாது என்ற பொருளில் கூறவில்லை. மாறாக காஸிம் அதாவது பங்கீடு செய்பவன் என்று தன்னை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதால் அந்தப் பதவிப் பெயர் தனக்கு மட்டுமே உரியதால் அதனை பிறருக்கு வைக்க வேண்டாம் என்ற கருத்தில்தான் கூறியுள்ளார்கள். அபூ அப்தில்லாஹ் ஹதீஸைக் குறிப்பிடும் போது அரைகுறையாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே காணப்படும் கருத்தை மறைக்கிறார். 

உலக வரலாற்றில் ஈஸா (அலை) அவர்களை தவிர வேறு யாரும் தந்தையின்றி தாயாருக்கு மட்டுமே பிறந்தவர் அல்லர் என்ற கூறும் தகுதியும் ஞனமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அபூ அப்தில்லாஹ்வுக்கோ அல்லது வேறு எவருக்கும் அந்த தகுதி கிடையாது. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும்தான் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். வேறு எவரும் அவ்வாறு பிறக்கவில்லை. இனிமேல் அவ்வாறு பிறக்கமாட்டார்கள் என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் அல்லாமல் வேறு ஒருவர் மர்யம் என்னும் பெண்ணுக்கு பிறந்து, ஈஸா என்று பெயர் பெற்றிருந்தால் அவரை ஈசப்னு மர்யம் என்று கூறும் உரிமை எல்லாருக்கும் உண்டு. 

மேலும் ஒருவரை மற்றவருக்கு உவமையாக ஒப்பிட்டுக் கூறும்போது இவருடைய பெற்றோர் பெயரும் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவ்விருவருக்கும் இடையில் எத்தனைப் பற்றி ஒப்பிட்டுக் கூறுகிறோமோ அது அவ்விருவருக்கும் இடையில் ஒன்றுபோல் இருந்தால் ஒப்பிட்டுக் கூறலாம். 

எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா அதாவது அபீகப்சாவின் மகன் என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள். (புகாரி) நபித்தோழர் அபூ ஸுப்யான் (ரலி)அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தை தாய் பெயர் நன்றாக தெரியும் அபீகப்சா என்பவர் நபி (ஸல்) அவர்களின் தந்தை இல்லை என்பதும் தெரியும். இவ்வாறு இருந்தும் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள். 

இதே விதத்தில்தான்  ஈஸா (அலை) அல்லாத வேறு ஒருவர் இப்னு மர்யம் என்று ஹதீஸில் அழைக்கப்பட்டுள்ளார். திருக்குரானில் மர்யத்தின் மகன் உவமையாக எடுத்துரைக்கப்ப்படும் போது உமது சமுதாயத்தினர் அதனைக் குறித்து கூச்சலிடத் தொடங்குகின்றனர். இவ்வசனத்தில் இப்னு மர்யத்தை உவமையாக எடுத்துக் கூறப்படும். என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இப்னு மர்யமாக வந்து விட்டார்கள் என்று கூறும்போது அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் போடுகின்ற கூச்சலைத்தான் அல்லாஹ் அதில் கூறியுள்ளான். எனவே இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர்களை உவமையாகக் கூறக் கூடாது என்ற அபூஅப்தில்லாஹ்வின் கூற்று அர்த்தமற்றதாகி விடுகிறது. 

நபி மொழிகளில் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயர்கள் ஒரு ஆளை மட்டும் குறிப்பிடுவதற்கோ ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கோ தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் என்பதை மட்டும் குறிக்கவோ வரவில்லை. உதாரணமாக, ஹுதைபிய்ய உடன்படிக்கையில் அப்துல்லாஹ்வைன் மகன் முஹம்மது என்று எதிரிகள் எழுதச் சொன்னது முஹம்மது ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்பதை மறுப்பதர்க்காகத்தானேயொழிய ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடும் என்பதற்கல்ல. இதே விதத்தில் தான் ஈஸா கடவுளின் மகன் இல்லை. அவர் மர்யத்தின் மகன் ஆவார் என்று கிறித்தவ கடவுள் கொள்கையை மறுக்கவே இப்னு மர்யம் என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்விடத்தில் இன்னொரு கருத்தையும் விளக்க விரும்புகிறேன். அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பக்கம் 12 இல் 4:157 அல்லாஹ் ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது) என்று குறிப்பிடுகிறான் (காதியானிகளோ அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என பொருள் கொள்கின்றனர்) என்று எழுதியுள்ளார். அதாவது சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா (அலை) இல்லை என்றும் யாரோ ஒரு அப்பாவி இரையாக்கப்பட்டான் என்றும் அபூ அப்தில்லாஹ் நம்புகிறார். 

இதற்க்கு நபிமொழி வரலாற்று சான்றுகள் எதுவும் தரவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும். குன்யத்துப் பெயர் பற்றி அபூ அப்தில்லாஹ் மேலே எழுதியிருப்பதில் ஆள்மாறாட்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்குத்தான் அல்லாஹ் ஈசப்னு மர்யம் என்று – இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர் வைத்துள்ளான். என்று பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். அதாவது ஆள் மாறாட்டம் ஏற்படுவதை ஒரு சொல்லின் மூலம் அல்லாஹ் தடுத்துவிட்டான் என்கிறார் அவர். 

அல்லாஹ் ஆள்மாறாட்டம் ஏற்படக் கூடாது என்று கருதியே ஈசப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயர் வைத்தான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ், அல்லாஹ் தன் செயல் மூலம் ஆள்மாறாட்டம் செய்வான். என்றும் அதனை ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம்) செய்யப்பட்டது என்ற சொல் விளக்குகிறது என்றும் நம்புவது முரண்பாடாக இல்லையா? 

ஆள்மாறாட்டம் என்பது உலகில் எத்தனை பெரிய குற்றம். அவமானம், தலை குனிவு, அச் செயலை அல்லாஹ் செய்துள்ளான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ்களை அல்லாஹ்தான் மன்னிக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு இதனை விட அவமானும் களங்கமும் கேவலமும் (நவூதுபில்லாஹ்) இருக்கமுடியுமா? 

அச்சொல்லுக்கு அவருடைய நிலைமை சந்தேகத்திற்கு உரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது, என்று மௌதூதியும் அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர் என்று அப்துல் ஹமீது பாக்கவியும் நாங்கள் கொண்ட பொருளையே கொண்டுள்ளனர். இதுவே சரியான பொருள் அல்லது “But he was made to appear to them as such” – (Mohammed Ali) என்று பொருள் கொள்ளலாம்.
Read more »

Dec 27, 2013

இரு ஈஸா நபிமார்களின் இரு வேறு தோற்றங்கள்.


ஹதீஸ்களிலும் காதியானிகள் கை வரிசை என்ற எனும் தலைப்பில் பக்கம் 56 இல் கூறுகிறார் நான் ஈஸாவையும், மூஸாவையும் கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும், விரிவடைந்த நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்)

நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட பொது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)

............ஜக்து என்ற பதத்திற்கு சுருண்ட கேசம் என்பது மட்டும் பொருளல்ல. உறுதியான உடம்பிற்கும் ஜக்து என்று சொல்லலாம்.ஆனால் அது தனியாக ஜக்து என்று மட்டும் கூறப்பட்டிருப்பதால் சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது. ஜக்து என்ற சொல்லுடன் க்ரு என்ற சொல் இணைக்கப்பட்டு ஜக்துக்ரு என்று கூறப்பட்டிருந்தால் மட்டுமே சுருண்ட கேசம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியும். குறிப்பிட்ட அந்த ஹதீஸில் ஜக்துக்கு முன்னாள் சிவந்த மேனி என்றும் ஜக்துக்கு பின்னால் அகன்ற நெஞ்சு என்றும் உடலின் அமைப்பைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் மத்தியில் உள்ள ஜக்து என்ற சொல்லுக்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. என்று அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்.

நம் பதில்:

1. ஒரு வாதத்திற்காகக இந்த புளுகு மூட்டையை ஏற்றுக் கொண்டாலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹீ) அவர்கள் இரு நபிமார்களுடைய தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு எழுதவில்லை. என்பதைக் கவனித்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. முதலாவது ஹதீஸில் ஈஸா நபி (அலை) அவர்களை மூஸா நபி (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து அந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டவர் மூஸா நபியுடன் தொடர்புள்ள மஸீஹ் என்பது புலனாகிறது. இரண்டாவதாகக் கூறப்பட்ட மஸீஹ் பிற்காலத்தில் தோன்றுபவர் என்பதற்கு ஆதாரமாவது, அந்த ஹதீஸை தொடர்ந்து வரும் வாசகங்களில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தஜ்ஜாலின் குழப்பம் மிகுந்த காலத்தில் தோன்றுவார் எனக் கூறப்பட்டிருப்பதேயாகும்.

2. இப்னு மர்யம் தோன்றும் போது உங்களுடைய நிலைமை எவ்வாறு இருக்குமோ? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாம்மாக இருப்பார். (புகாரி முஸ்லிம் : நுஸுலிப்னு மர்யம்) எனும் நபி மொழியைக் கூறி உங்களிலிருந்து தோன்றி, உங்களுக்கு இமாமாக இருப்பார் என்று இந்த நபிமொழியில் வந்திருப்பதால் இதில் கூறப்பட்டிருப்பவர் முஸ்லிம்களிலிருந்தே தோன்றும் ஒருவர் என்பதை உறுதி செய்கிறது.

3. உங்களுள் உயிருள்ளவர் ஈஸப்னு மர்யமைச் சந்திப்பார் அவர் மஹ்தியாகவும் தீர்ப்புவழங்குபவராகவும். நீதியை நிலைநாட்டுபவராகவும் விளங்குவார். (முஸ்னது அஹ்மதிப்னு ஹம்பல் – பாகம் 2, பக்கம் )

4. ஈசாவை தவிர மஹ்தி இல்லை. (இப்னு மாஜா ஷித்ததுஸ் ஸமான்)

5. இதன் காரணமாகவே இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும் தத்தமது ஹதீஸ் தொகுப்புகளில் இப்னு மர்யமின் வருகையைப் பற்றியும் இமாம் மஹ்தியைப் பற்றியும் தனித்தனியாக வெவ்வேறு அத்தியாயங்கள் அமைத்து குறிப்பிடாமல் ஒன்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலே குறிப்பிட்ட ஐந்து ஆதாரங்களையும் அபூ அப்தில்லாஹ் வழக்கம்போல் பதில் தரவில்லை.

ஜக்து என்ற சொல்லை ஆராயப் புறப்பட்ட அபூ அப்தில்லாஹ் இப்னு மர்யம் ஒரு நபிமொழியில் மூஸா (அலை) அவர்களுடனும் இன்னொரு நபி மொழியில் தஜ்ஜால் மற்றும் கஹ்பதுல்லாஹ்வுடனும் வருவதால் , ஒருவர் இஸ்ரவேலர்களுக்காக வந்த ஈஸா(அலை) என்றும் மற்றொருவர் கஹ்பதுல்லாவுடன் தொடர்புடையவர் என்றும் பிரித்தறிய தவறியது ஏன்? ஜஅது என்பதற்கு உறுதியான உடல் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது அண்டப் புழுகேயாகும். ஏனெனில் Islamic Universiy Madina – வின் Dr.Momammad Muhsin Khan ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள Sahih Bukhari Arabic English மொழியாக்கத்தில் பாகம் – 4 பக்கம் – 432-433 ஹதீஸ் எண் 648-649 இல் ஜஅது என்ற சொல்லுக்கு Curly Hair (சுருண்ட முடி) என்றே மொழி பெயர்த்துள்ளார்கள். தொடர்ந்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹதீஸ் எண் 650இல் இரண்டு மஸீஹுகளைக் குறிப்பிட்டு ஒன்று ஸப்துஷ் – அர் இன்னொன்று ஜஅது என வந்துள்ளது. அதாவது ஒருவர் நீளமான முடியுடையவரும் இன்னொருவர் சுருண்ட முடியுடையவரும் ஆவார் என்றே கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழில் வெளிவந்த புகாரி மொழிபெயர்ப்பிலும் ஜஅத் என்ற சொல்லுக்கு சுருள் முடி உடையவர் என்ற மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.(ஆதாரம் புகாரி -3438)

Read more »

Dec 26, 2013

ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே


ஆதம் நபி மட்டுமல்ல மனித இனமும் மண்ணினால் படைக்கப்பட்டதே
அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்:

36:77; 76:2; 80:19; ஆகிய இறைவசனங்களில் மனிதனை இந்திரியத்திலிருந்து படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படியாயின், ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்ததாக எப்படிச் சொல்ல முடியும்? இவ்வசனங்களிலெல்லாம் ஆதத்தை தவிர மற்றவர்களை என்றல்லவா கூறி இருக்கவேண்டும். என்று நாஸ்திகர் ஒருவர் கேட்பதற்கும் இந்த காதியானிகள் 3:144 வசனம் பற்றி கேட்பதற்கும் வேறுபாடு உள்ளதாக நமக்குப் புலப்படவில்லை.

நம் பதில்:

திருக்குரான் 3:145 வசனத்தில் முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னால் வந்த தூதர்கள் எல்லாம் சென்று விட்டனர் என்று எடுத்துக் காட்டி, நூலாசிரியர் மிர்ஸா தாஹிர் (ரஹீ) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய ஈசா நபி (அலை) உட்பட அனைத்து தூதர்களும் இறந்து விட்டனர் என்று இந்த வசனம் தெரிவிக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படி இல்லை என்றால், ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் ஈஸாவைத் தவிர என்று 3:145 வசனத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்கள். அக்கருத்தினை அபூ அப்தில்லாஹ் கற்பனை நாத்திகர் மூலம் மறுக்கிறார். அவர் எடுத்துக் காட்டும் திருக்குரானின் மூன்று வசனங்களும், மனிதனை விந்தினால் படைத்ததாக மட்டும் கூறுகிறது. எப்படி அந்த வசனங்கள் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மனிதர்களேயன்றி வேறில்லை. உங்களுக்கு முன்னர் தோன்றிய மனிதர்கள் எல்லோரும் விந்திலிருந்து படைக்கப்பட்டனர் என்று இருந்தால். கற்பனை நாத்திகரின் வாதம் சரி எனலாம். அப்படி இல்லாததனால் அவரது வாதம் தவறாகும். அதாவது 3:145 வசனத்தில், அவருக்கு முன்னர் தோன்றிய மனிதர்கள் எல்லோரும் என்ற சொற்றொடர் அவர் காட்டிய மூன்று வசனங்களிலும் இல்லாததினால் அபூஅப்தில்லாஹ்வின் வாதம் தவறானதாகும்.

ஆதம் நபி (அலை) அவர்கள் மண்ணால் படைக்கப்பட்டது போல், பிற மனிதர்களும் மண்ணால் படைக்கப்பட்டனர் என்ற கருத்து திருக்குரானில் 18:38, 22:6, 23:13, 35:12, 40:68, 37:12, 30:21 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளதால் ஆதம் (அலை) அவர்களைத் தவிர பிற மனிதர்கள் விந்தினால் படைக்கப்பட்டனர் என்று சொல்லத் தேவை இல்லை.

நான் மேலே காட்டிய ஏழு வசனங்களில் முதல் ஐந்து வசனங்களில் மனிதன் முதலில் மண்ணாலும் பின்னர் இந்திரியத்தாலும் படைக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே மனித இனப் படைப்பில் மண்ணும் இந்திரியமும் இரத்தக்கட்டியும் அமைந்துள்ளன.

கற்பனை – நாத்திகர் அபூஅப்தில்லாஹ் எடுத்துக் காட்டியுள்ள மூன்று வசனங்களிலும் மனிதப் படைப்பினைப் பற்றி மட்டும் கூறவில்லை மாறாக, இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்துள்ளதாகக் கூறுவதுடன். அவற்றில் வேறு சில கருத்துக்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதையும் காண்போம்.

36:78 வசனத்தில் அற்பத் துளியிலிருந்து படைக்கப்பட்டவன் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனை எதிர்த்து வாதம் செய்கிறானா? என்ற கருத்தும்,

76:3 வசனத்தில் விந்து என்று வராமல் கலப்பு விந்து என்ற சொல் வந்து, அதிலிருந்து படைத்து அவனை சோதிப்பதற்கு எனவும்,

80:20 வசனத்தில் விந்திலிருந்து படைத்து ( முன்னேற்றத்திகானவற்றை ) அவனுக்கு நிர்ணயித்து, அதற்குரிய வழியை எளிதாக்கினான் என்றும் வருகிறது.

மேலே எழுதிய திருக்குரானில் 3 வசனங்களிலும் மனிதன் விந்தினால் படைக்கப்பட்டதன் காரணத்தை அல்லாஹ் கூறி 1) இறைவனை எதிர்த்து வாதம் செய்யக்கூடாது. 2) மனிதன் சோதிக்கப்பட இருக்கிறான். 3)மனிதனின் எதிர்கால வாழ்வின் வழி நிர்ணயிக்கப்பட்டிருப்பதனையும் சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறியுள்ளான்.

மொத்தத்தில் கற்பனை நாத்திகரின் வாதம் பொருளற்றதாகும். 
Read more »

Dec 24, 2013

அதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர்களின் முன்னறிவிப்பு.


இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தத்கிரா பக்கம் 113-114

with regards to the death of a certain person, Allah revealed to me through the value of the letters of the alphabet that the date was comprised in the words of the revelation (Arabic) He is a dog and he will die according to the value of the letters in the word dog which amounts to fifty two this means that his age will not exceed fifty two and that he will die within the course of his fifty second year (Izala Auham pp 186-187)

இந்த நூல் இலண்டனின் 1976 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஐ.நா சபையில் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் இருந்த ஸபருல்லாஹ் கான் சாஹிப் ஆவார். இந்த இல்ஹாம் 1891ம் ஆண்டு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்களுக்கு வந்தது.

அதாவது, இந்தியா பாகிஸ்தானில் காஷ்மீர் பிரச்சனை ஐ.நா சபையில் எழுந்த போது பூட்டோ, ஐ.நா சபையில் இந்திய நாய்கள் குறைக்கின்றன என்று கூறினார். இதனால் இந்திய நாடு கொந்தளித்தது பத்திரிகைகள் நாயின் படத்தை வரைந்து அதில் பூட்டோ என்று எழுதி அந்த நாய் குறைப்பது போல் கார்ட்டூன்கள் வரைந்தன.

திருவிதாங்கூரில் நூற்றுக்கணக்கான நாய்களின் வயிற்றில் பூட்டோ என்று எழுதி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இவ்வாறு நாய் என்னும் பெயரால் உலகம் அறிந்த நபர் பூட்டோ ஆவார்.
ஜியா ஆட்சிக்கு வந்து. பூட்டோ மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விசாரணை நடத்தி பூட்டோ தூக்கிலடப்பட்டார்.

அவர் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 52. நான் மேலே எடுத்துக் காட்டிய இல்ஹாம் பாகிஸ்தானில் பரவியபோது, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் எதிரி அமைப்புகள். அதிபர் ஜியாவிடம் கெஞ்சிக் கூத்தாடி பூட்டோவின் 52 வது பிறந்த நாளுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ அவரை தூக்கிலிட கெஞ்சினர். அனால் ஜியா மறுத்துவிட்டார். அந்த இல்ஹாமின் படி தூக்கிலிடப்பட்டார்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களுக்கு 1891ம் ஆண்டில் இந்த இல்ஹாம், பூட்டோ தூக்கிலிடப்பட்ட 1979ஆம் ஆண்டு நிறைவேறியது.
பூட்டோவுக்கு இந்த இழிநிலை ஏன்?

அஹ்மதியா ஜமாஅத்திர்கெதிராக பூட்டோ, அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என்ற தீர்மானத்தை, பூட்டோ அதிபராக இருந்தபோது பாகிஸ்தான் சட்ட சபையில் நிறைவேற்றினார்.

அஹ்மதிகளுக்கு எதிராக, போலீஸ், இராணுவம் முன்னிலையில் அஹ்மதி அல்லாத ஆலிம்களின் தூண்டுதலின் பேரில் கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்ற அராஜகங்கள் நிறைவேறின.

பூட்டோ தூக்கிளிடப்பட்டதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை.

ஆனால், இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு வந்த ஒரு இல்ஹாம் நிறைவேறி, அன்னாரும் அவருடைய ஜமாஅத்தும் உண்மை என்று உலகில் நிரூபிக்கப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். 

Read more »