அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 1, 2012

அஹ்மதியா கருத்துக்களை ஆமோதிக்கும் ஆலிம்கள்


திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பற்ற அஹ்மதியா ஜமாத்தின் கொள்கைகளை சில அரைகுறை ஆலிம்சாக்கள் தான் மறுக்கின்றார்களேயொழிய கற்றரிந்த மேதைகளான ஆலிம்கள் அவற்றை ஆமோதிக்கவே செய்கின்றனர்.

சவுதி அரேபியாவைச் சார்ந்த "ராபிதத்துள் ஆலமில் இஸ்லாம்" என்ற அமைப்பு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் விரிவுரையில் அல்லாமா முஹம்மத் அஸத் அவர்கள ஈசா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டார்கள், என்ற கதையை மறுத்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.

The verb RAFA' AHU -he raised him or elevated him has always, when ever the act of RAFA'A of human being is attributed to God the meaning is honouring or exalting. No where in the Quran is there any warrant for popular belief of man muslim that Gog has taken up Jesus bodily to heaven. PP 177

ரஃபாஅஹு - aவான் அவரை உயர்த்தினான் எனும் வினைச்சொல் மனிதனைப்பற்றி இறைவன் கூறியதாக குறிப்பிடப்படும் இடங்களில் அதன் கருத்து 'கௌரவித்தல்' - பதவி கொடுத்தல் என்பதாகும். இறைவன் ஈசா நபி அவர்களை உடலுடன் வானத்திற்கு உயர்த்தினான் என்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் திருக்குரானில் இல்லை. பக்கம் 177


சிலுவை சம்பவம் தொடர்பாக மேற்கண்ட விரிவுரையாளர் கூறுவதைப் பாருங்கள்:-

"There exist among muslims many fanciful legends telling us that at the last moment God substituted for Jesus a person closely resembling him who was subsequently crucified in his who was subsequently crucified in his place. However none of these legends finds the slightest support in the quran or authontic Traditions and the stories produced in this Connection by the classical commentators of the Quran must be summarily rejected".

"ஈசா நபியோடு உருவ ஒப்புமையுள்ள வேறு ஒருவரை இறைவன் அவருடைய இடத்தில் கடைசி நேரத்தில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டான் என்றும் அந்நபர் ஈசா நபிக்கு பகரமாக சிலுவையில் அறையப்பட்டார் என்ற ஒரு கட்டுக்கதை முஸ்லிம்களிடையே நிலவிவருகிறது ஆனால் இதற்க்கு திருக்குராநிலோ நம்பகமான ஹதீதுகளிலோ ஆதாரமில்லை. எனவே இது தொடர்பாக சில விரிவுரையாளர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் அனைத்தும் நிராகரிக்கப்படவேண்டும்.

இதைப்போன்று எகிப்து அல்-அசர் பல்கலைகழகத்தின் அதிபராகவும் உலமாக்களின் பேரவைத் தலைவராகவுமிருந்த அறிஞ்சர் அல்லாமா செய்ஹு மஹ்மூத் ஷல்தூத் அவர்களும் ஈசா நபி அவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று மரணமடைந்து விட்டார்கள் என்றே தீர்ப்பளித்துள்ளார்கள். இந்தத் தீர்ப்பு 11-5-1942 அர்ரிசாலாவில் வெளியாகி இருந்தது. சென்னை தாருல் இஸ்லாம் ஏட்டில் 1956 ஆம் ஆண்டு ஜனவரி இதழிலும் 'முஸ்லிம் முரசு' ஏட்டின் 1964 டிசம்பர் இதழிலும் இது பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்தன.
Read more »

பொய்யன் ஜைனுலாப்தீனுக்கு மறுப்பு- முகம்மதி பேகம் பற்றிய ஆட்சேபனைக்கு பதில்


இஸ்லாம் மீண்டும் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும். முஸ்லிம்கள் முன்பு பெற்றிருந்த பெருமைகளையும் மகத்துவங்களையும் மீண்டும் பெற வேண்டும். அழிவைநோக்கி சென்றுகொண்டிருக்கும் மனித சமுதாயம் இறைவன் பால் திரும்ப வேண்டும். என்பன போன்ற உயரிய நோக்கங்களை உலகில் நிலை நாட்ட இறைவன் புறமிருந்து இக்காலத்தின் இறைத்தூதராக இமாம் மஹ்தியாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தோன்றினார்கள். இத்தகைய உயர்ந்த இலட்சியங்களுக்காக இவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத், இன்று உலகின் எல்லைகள் வரை கிளை பரப்பி தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

எனினும் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றபோது அவற்றால் பாதிக்கப்படும் தீய சக்திகள் அவற்றை எதிர்க்கும் என்பது ஒரு நியதியேயாகும். இதற்க்கேற்ப முஸ்லிம் சமுதாயத்தில், ஏன், முழு மனித சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை-மறுமலர்ச்சியை ஏற்படுத்தத் தோன்றிய இமாம் மஹ்தி (அலை) அவர்களும் தீய சக்திகளின் பலமான எதிர்ப்பிற்கு இலக்கானார்கள். உண்மையே நிலைக்கும், பொய் அழிந்தே தீரும் என்ற இறைவாக்கில் நம்பிக்கையற்ற ஷைத்தானிய உடன்பிறப்புகள், இமாம் மஹ்தி தோன்றிய நாள்முதல் அவர்களுக்கெதிராக அவதூறு களையும் போய்க் குற்றச்சாட்டுகளையும் கூறியே வந்துள்ளன.

இமாம் மஹ்தி (அலை) அவர்களை ஏற்ற நல்லவர்கள் ஆன்மீகத்தில் முன்னேறி வரும் அதே சமயத்தில் ஷைத்தானிய உடன்பிறப்புகள் தங்களின் எதிர்ப்பில் மிகத் தாழ்ந்து தரங்கெட்டு தங்களின் இயல்பிற்கு ஏற்ப, தங்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப மிக அசிங்கமான ஆட்சேபனைகளை செய்கின்றனர். இவர்களின் அருவருக்கத்தக்க பேச்சுக்களும், எழுத்துக்களும் இவர்கள் இழிவானவர்கள் என்பதையே வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.

இறை தூதர்களை எதிர்க்கின்றவர்கள் எப்போதுமே மூன்று வழிகளைக் கையாளுகின்றனர். சிலர் அவர்களை மார்க்கத்திற்குப் புறம்பானவர்கள் எனப் பறை சாற்றுகின்றனர். இன்னும் சிலரோ அரசியல் ரீதியிலான அல்லது சமூக ரீதியிலான குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துகின்றனர். இவர்களில் கடைநிலையில் உள்ளவர்கள், தூய்மையே உருவான அந்த இறைத்தூதர்கள் மீது ஒழுக்கம் தொடர்பான குற்றச் சாட்டுகளை சுமத்துகின்றனர்.

'நான் உங்களோடு வாழ்ந்த ஒருவனல்லவா? அதாவது என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனது நன்னடத்தைக்கு நீங்களே சாட்சி என்று தமது அப்பழுக்கற்ற வாழ்க்கையையே சவாலாக விடுத்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கூட இத்தகைய ஒழுக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இன்றும் கூட கிருஸ்தவர்களாலும், யூதர்களாலும், சல்மான் ருஷ்டி போன்ற நயவஞ்சகர்களாலும் இத்தகைய அவதூறுகள் கூறப்பட்டு வருகின்றன.

எனவே இக்காலத்தின் இறைத்தூதராகவும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக இமாம் மஹ்தியாகவும் தோன்றிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீதும் இத்தகைய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் கூறப்படுவது நூதனமான ஒன்றல்ல

அஹ்மதியா ஜமாத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்ற அவதூறுகளில் ஒன்று, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள், முகம்மதி பேகம் என்ற பெண்ணை விரும்பி, அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் அவளைத் தமக்கு மணமுடித்து தரவேண்டும் என்று கேட்டதாகவும் அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் இறைவனின் தண்டனை அவர்களுக்கு கிடைக்குமென அறிவித்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்பதாகும். இவ்விசயத்தை அது எந்த அளவுக்கு உண்மை என்பதி இவர்கள் ஆராயாது தமது கீழ்த்தரமான எண்ணங்களுக்கு ஏற்ப கொச்சைப்படுத்தி கூறி வருகின்றனர்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துலகுக்கும் அருளாகத் தோன்றிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை இறைவனது கட்டளைக்கேற்ப செய்தார்கள். ஆனால் அந்த மாநபியை எதிர்த்தவர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி தம் மனம் போன போக்கில் கீழ்த்தரமாக விமர்சித்தனர். இன்று கூட அவ்வாறு விர்மர்சிப்பவர்கள் உண்டு. இவ்வாறே ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை விமர்சிப்பவர்களும் தரங்கெட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.

உண்மையில் நடந்தது என்ன?

முகம்மதி பேகம் என்பவர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தந்தை வழி உறவினரான மிர்ஸா அஹ்மத் பேக் என்பவரின் மகளாவார். இந்த மிர்ஸா அஹ்மத் பேக் ஒரு நாஸ்த்தீகர். இவர் முஸ்லிம் பெயரை கொண்டிருந்த போதிலும் இறைவன் இருக்கின்றான் என்பதிலோ, திருக்குர்ஆன் இறைவேதம் என்பதிலோ, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதிலோ நம்பிக்கை இல்லாதவராவார்.

இறைவனின் ஏகத்துவத்தையும் திருக்குரானின் மகத்துவத்தையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேன்மையையும் மீண்டும் உலகில் நிலை நாட்டுவதையே தமது இலட்சியமாகக் கொண்டிருந்த ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்குத் தமது உறவினர்களின் மார்க்க விரோதப்போக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் பலமுறை அந்த உறவினர்களுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் அந்த உறவினர்களோ தங்களைத் திருத்திக்கொள்ளாமல் ஏளனம் செய்வதிலும் எள்ளி நகையாடுவதிலும் காலத்தைக் கழித்தார்கள்.

இது பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 'தமது ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம்' என்னும் நூலில் 566 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:-

"அவர்கள் நாளுக்கு நாள் தங்களது தவறான போக்கிலும், அகங்காரத்திலும் முன்னேறி தங்களது தீயக் கருத்துக்களைப் பரப்பி அப்பாவி மக்களை வழிகெடுத்தார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏசினார்கள். இறைவசனங்களை (திருக்குரானை) மறுத்தும் இறைவனையே நிராகரித்தும் பிரசுரம் ஒன்றை வெளியிட்டார்கள்."

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் குறிப்பிட்ட அந்த பிரசுரத்திற்கு அக்காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த கிருஸ்தவ அமைப்புகள் தமது பத்திர்கைகளில் விளம்பரம் செய்தனர். அதுமட்டுமல்ல, அந்த உறவினர்கள் அக்காலத்தில் இஸ்லாத்திற்கு பெரும் பகைவர்களாக விளங்கிய ஆரிய சமாஜ் காரர்களுடன் கைகோர்த்து மார்க்க விரோதத் செயல்களில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்களின் நடத்தைகள் எல்லை மீறிப் போனதால் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்கள் கீழ்வருமாறு இறைவனை வேண்டினார்கள்.

"என்னுடைய இறைவனே! உன்னுடைய இந்த அடியானுக்கு உதவி செய்வாயாக. உன்னுடைய பகைவர்களை இழிவுபடுத்துவாயாக. என்னுடைய இறைவனே ! எனது பிராத்தனையை ஏற்றுக் கொள்வாயாக எவ்வளவு காலந்தான் இவர்கள் உன்னையும் உன்னுடைய திருத்தூதரையும் ஏளனம் செய்வார்கள்? எவ்வளவு காலம்தான் உனது திருக்குர்ஆனைப் பொய்யாகி உன்னுடைய திருத்தூதரை அவமதிப்பார்கள்? என்றும் நிலைத்திருப்பவனே, சுயமாக நின்று உதவி செய்பவனே, உனது கருணையை வேண்டுகிறேன். (ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் 569)

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் செய்த இந்தப் பிராத்தனையிலிருந்து அவர்களுக்கும் மேற்கூறப்பட்ட அவர்களின் உறவினர்களுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை என்பது புலனாகும். உண்மையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மார்க்கப்பற்றும் இறைவன் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசமுமே இவ்வாறு பிராத்தனையை ஏற்று வரம்பு மீறி செயல்படும் அந்த உறவினர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப் போவதாக அறிவித்தான்.

எனினும்.

'ஒருவன் அநீதியிழைத்தப் பின் மனம் வருந்தி திருந்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவனை மன்னித்து அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மென்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.' (திருக்குர்ஆன் 5:40)

என்ற இறைவனின் வாக்குறுதிக்கு ஏற்ப அந்த உறவினர்களுக்கு அவர்கள் திருந்திக் கொள்ள அவகாசம் அளித்தான். மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு அறிவித்தான்.

" நான் அவர்களை ஒரே அடியாக அல்லாமல் படிப்படியாகவே அழிப்பேன். ஏனெனில் அவர்கள் அவர்களின் தீயப் பாதையிலிருந்து திரும்பலாம். எனது சாபம் அவர்களின் வீட்டின் மீது இறங்கும். மூத்தவர்கள் மீதும், இளையவர்கள் மீதும், ஆண்கள் மீதும், பெண்கள் மீதும், அவர்களுடைய விருந்தினர் மீதும் இறங்கும். நம்பிக்கை கொண்டு அவர்களிடமிருந்து விலகிக் கொள்பவர் இறை கருணையின் கீழ் இருப்பார். ஏனைய அனைவரும் சபிக்கப்படுவார்கள்." (ஆயினையே கமாலாத்தே இஸ்லாம், பக்கம் 569)

இந்த இறையறிவிப்பை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பிரகடனம் செய்து அவர்களின் அந்த உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள். முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய முன்னறிவிப்பு, முழுமையாக நிறைவேறவில்லை என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் திருக்குர் ஆன் வசனத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பெற்ற இறையறிவிப்பிலுள்ள நிபந்தனையைக் குறித்து சிந்திப்பதுமில்லை. இந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டபடி மார்க்க விரோதச் செயலில், இறைவனுக்கு அஞ்சாது தொடர்ந்து ஈடுபட்டவர்கள் இழிவடைந்து அழிந்து போனார்கள். மனத்திரும்பியவர்களோ காப்பற்றப் பட்டார்கள் என்பதே உண்மை.

முகம்மதி பேகத்தின் பெற்றோர் தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள்:-

'மிக அருளாளனான இறைவன் வஹி மூலம் எனக்கு அறிவித்திருப்பதாவது.' அவர்கள் திருந்தவில்லையென்றால் அவர்கள் தண்டனை மூலம் திருத்தப்படுவார்கள். அவர்கள் தீய வழிகளிலிருந்து திரும்பவில்லைஎன்றால் விதவைகளால் அவர்களின் வீட்டை நான் நிரப்புவேன். அவர்கள் திருந்தி தங்களைச் சீர்திருத்திக் கொண்டால் நாம் அவர்களிடத்து கருணையுடன் திரும்புவோம். அவர்களுக்கு தரவிருக்கும் தண்டனையை நிறுத்திவிடுவோம். இவ்வாறு அவர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதை அனுபவிப்பார்கள். (அன்ஜாமே ஆத்தம் பக்கம் 211)

மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கண்ட ஆன்மீகக் காட்சியில் முகம்மதி பேகத்தின் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதைத் தொடர்ந்து முகம்மதி பேகத்தின் தாய் வழிப் பாட்டிக்கு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்தார்கள். 'நீங்கள் மனம் திரும்பி, திருந்த வேண்டும். ஏனெனில் துன்பங்கள் உங்களைத் துரத்துகிறது என்று அவரிடம் கூறினார்கள்' (தப்லீகே ரிஸாலத் பக்கம் 162)

ஆனால் முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் எச்சரிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை. மிகுந்த அகங்காரத்தோடு அவற்றைப் புறக்கணித்தார்கள். அவர்களுள் சிலர் கிறிஸ்தவர்களோடும், சிலர் ஆரியர்களோடும் தங்களை இணைத்துக் கொண்டனர். ( நூற் அப்ஸ்ஸான் mஎ 10, 1888)

மிக வெளிப்படையாக அவர்கள் இவ்வாறு கூற ஆரம்பித்தார்கள்:

எங்களுக்கு அல்லாஹ்வோ அவனது வேதமோ அவனுடைய தூதரோ
அவசியமில்லை. எங்களின் வாழ்க்கையில் நிகழும் அடையாளத்தைத் தவிர எந்த அடையாளத்தையும் நாங்கள் ஏற்க்க மாட்டோம். நாங்கள் குரானை நம்பவில்லை. நபித்துவம் என்றால் என்னவென்றோ மார்க்கம் என்றால் என்னவென்றோ எங்களுக்குத் தெரியாது. இவற்றையெல்லாம் நாங்கள் மறுக்கின்றோம். (கரமத்துஸ் சாதிக்கீன்)

இதன் விளைவாக ஏற்கனவே அறிவித்தபடி இறைவனின் தண்டனைகள் அந்தக் குடும்பத்தில் இறங்க ஆரம்பித்தன. முகம்மதி பேகத்தின் சிறிய தகப்பனார் மிர்ஸா நிசாமுத்தீன் மிகப் பெரிய துன்பத்தை சந்தித்தார். இருபத்தைந்து வயதே நிரம்பிய அவருடைய மகள் ஒரு குழந்தையை நிர்க்கதியாக விட்டுவிட்டு அகால மரணமடைந்தார் . (தப்லீக்கே ரிஸாலத் பக்கம் 1)

இந்த சம்பவம் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் அவர்கள் மனம் மாறவில்லை. இதனைத் தொடர்ந்து மிர்ஸா நிசாமுத்தீனும் காலமானார்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியை உணர்ந்து இவருடைய மகன் மிர்ஸா குல் முகம்மதுவும் மற்றொரு மகளும் மனம் திருந்தி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் 'பை அத்' செய்தார்கள். மிர்ஸா நிசாமுத்தீன் சகோதரர் மிர்ஸா இமாமுத்தீனின் ஒரே வாரிசான குர்ஷீது பேகம் என்பவரும் இவர்களைத் தொடர்ந்து 'பை அத்' செய்தார்கள்.

மிர்ஸா நிசாமுத்தீனின் இன்னொரு சகோதரரான மிர்ஸா கமாலுத்தீன் என்பவர் குடும்ப வாழ்வைத் துறந்து இந்தியாவின் கபருஸ்தான்களில் தமது எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க காதியானை விட்டு வெளியேறினார். இவர் தமது ஆண்மையைத் தாமாக அழித்துக் கொண்டு அதற்காக வாழ்நாள் பூராவும் வருந்தினார். இறுதியில் சந்ததியின்றி இறந்து போனார்.

இந்நிலையில் மேற்கண்ட குடும்பத்தினர் திருந்துவதற்கும் நல்வழி பெறுவதற்கும் ஒரு வாய்ப்பு அளிக்கும் முகமாக அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பின்வருமாறு அறிவித்தான்.

"அவருடைய (மிர்ஸா அஹ்மத் பேக்குடைய) மகளான முகம்மதி பேகத்தை உமக்கு மணமுடித்து உம்முடன் ஓர் உறவை அவர் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் உமது ஒளியிலிருந்து அவர் ஒளி பெறவேண்டும். "

இதனைத் தொடர்ந்து இறைவன் மேலும் பின்வருமாறு அறிவித்தான்:

இதனை ஏற்காமல் அவர் தம்முடைய மகளை வேறெவருக்காவது மணமுடித்துக் கொடுத்தால் அந்தத் திருமணம் அவருக்கோ அவரது மகளுக்கோ அருளாக அமையாது. அவரிடம் கூறுவீராக: அவர் வேறு விதமாக நடக்க முற்பட்டால் துன்பங்கள் அவரைத் தொடர்ந்து வந்தடையும். அவற்றின் இறுதி கட்டமாக அவருடைய இறப்பு நிகழும். அது அவருடைய மகளை இன்னொருவருக்கு மணமுடித்து மூன்று ஆண்டுகளுக்குள் நிகழும் அவருடைய மரணம் மிக அருகில் உள்ளது என்றும் அது அவர் எதிர்பாராத நேரத்தில் நிகழும் என்றும் அவரை எச்சரிப்பீராக. அவருடைய மகளின் கணவர் இரண்டரை ஆண்டுகளுக்குள் இறந்து போவார். இது இறை தீர்ப்பாகும். (ஆயினையே கமாலாத்தே இஸ்லாம் . பக்கம் 572)

இறைவனின் கட்டளைக்கேற்ப தாம் இந்தச் செய்தியை அறிவிப்பதாகவும் தமது சொந்த விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் இதில் இல்லைஎன்றும் இன்னொரு திருமணம் செய்யவேண்டிய எவ்விதத் தேவையும் தமக்கு தற்போது இல்லைஎன்றும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் அச்சமயத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார்கள் (அறிக்கை 15 ஜூலை 1888)

இது முழுக்க முழுக்க உண்மையென்பதை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை ஆராயகின்றவர்கள் உணர்ந்துகொள்ளலாம்.

ஹம்ரத் பீபீ என்பவரோடு அவர்களுடைய முதல் திருமணம் நடந்ததென்றாலும் அவர்களுக்கு 21 வயதான பொது அதில் முறிவு ஏற்பட்டது. பின்னர் ஏறத்தாழ 28 ஆண்டுகள் அவர்கள் மணமுடிக்காது வாழ்ந்தார்கள். இக்காலகட்டத்தில் அவர்கள் இல்லற வாழ்க்கைப் பற்றிய எண்ணமே இல்லாது முழுக்க முழுக்க இறைப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது தமது இளமைப் பருவத்தை இஸ்லாமிய சேவைக்காக அர்ப்பணித்தார்கள். பின்னர் நவாப் மீர் தர்த் என்பவரின் வழித்தோன்றலும் உயர்ந்த பாரம்பரியத்தில் வந்தவருமான ஹஸ்ரத் நுஸ்ரத் ஜஹான் பேகம் அவர்களை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 1884 இல் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில், நாத்தீக வாதமும் இஸ்லாத்தின் எதிரிகளோடு தொடர்பும் உள்ள ஒரு குடும்பத்தில் பெண் கேட்க, இறை கட்டளையைத் தவிர எந்தக் காரணமும் ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்களுக்கு இல்லை என்பதை நியாயஉணர்வுள்ள எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்த வரலாற்று உண்மையைத் தெரிந்து கொள்ளாது தங்களின் சொந்த மன விகாரங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீது அருவருக்கத்தக்க அவதூறுகளை பி.ஜே யைப் போன்ற பொய்யர்கள் சிலர் சுமத்துகின்றனர். இது இவர்களின் இறையச்சமற்ற மனப்போக்கையே காட்டுகின்றது. இதனால் இவர்களுக்கு ஏற்படவிருக்கும் சாபங்களையும் இறை தண்டனைகளையும் இவர்கள் உணர்வதில்லை.

முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் நிறைவேறிய விதமும் அந்தக் குடும்பத்தினரே அதற்க்குச் சாட்சிகளாக விளங்கியதும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஓர் உண்மையாளர் என்பதற்கு சான்றுகளாக விளங்குகின்றன.

மேற்கண்ட இறை அறிவிப்பை கேட்ட பிறகும் முகம்மதி பேகத்தின் தந்தையிடம் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இதன் விளைவாக இறைவனின் சாபம் அவரைத் தொடர்ந்தது. அவரது மகன் மிர்ஸா மஹ்மூத் பேக் ஜூலை1890 இல் அகால மரணமடைந்தார். அடுத்தடுத்து அவருடைய குடும்பத்தில் இறப்புகள் நிகழ்ந்தன.

ஆயினும் அவர் மிகுந்த பிடிவாதத்தோடு தமது மகளை - முகம்மதி பேகத்தை மிர்ஸா சுல்தான் அஹ்மத் என்பவருக்கு மணமுடித்து வைத்தார். இந்தத திருமணம் நடைபெற்று ஆறு மாதங்கள் முடிவடையுமுன் டைபாய்ட் நோய் கண்டு முகம்மதி பேகத்தின் தந்தை இறந்து போனார். இது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் முன்னறிவித்தபடியே நிகழ்ந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இறப்புகளைக் கண்ட முகம்மதி பேகத்தின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் தமது தவறான போக்கைக் கைவிட்டு பாவ மன்னிப்புத்தேட ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, அந்த குடும்பத்தைச் சார்ந்த அநேகர், முகம்மதி பேகத்தின் தாயாரும் சகோதரிகளும் உட்பட ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களிடம் "பை அத" செய்து அஹ்மதியா ஜமாத்தில் இணைந்தார்கள்.

"அவர்கள் திருந்தி தங்களைச் சீர்திருத்திக் கொண்டால் நாம் அவர்களிடத்து கருணையுடன் திரும்புவோம்" என்ற இறை அறிவிப்பிற்கு ஏற்ப முகம்மதி பேகத்தின் குடும்பத்திற்கு ஏற்பட்டு வந்த சாபங்கள் நீங்கின. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள், இறைவன் தங்களுக்குச் சொன்னதாக எவற்றை அறிவித்தார்களோ அவையெல்லாம் அவற்றில் கூறப்பட்டபடியே நிறைவேறின. என்பதற்கு அவற்றோடு தொடர்புடையவர்களே சாட்சி கூறினார்கள். முகம்மதி பேகத்தின் மகன் மிர்ஸா இஸ்ஹாக் பேக், ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறியது குறித்துக் கூறியிருப்பதைப் பாருங்கள்:

"என்னுடைய பாட்டனார் மிர்ஸா முஹம்மது பேக், முன்னறிவிப்பின் படியே இறந்து போனார். இதற்குப் பின் எஞ்சிய குடும்பத்தினர் பயந்து போய் தங்களைத் திருத்திக் கொண்டார்கள். அவர்களில் அநேகம் பேர் அஹ்மதியத்தில் இணைந்தது, இதற்கொரு மறுக்கயியலாத சான்றாகும் (அல்-பஸல் 1923)

அக்காலத்தில் அஹ்மதியா ஜமாத்தின் மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அஹ்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"இந்த முன்னறிவிப்புகள் நிறைவேறின ஆனாலும் அவை ஜோதிடமாகும்" (இஷா அத்துஸ் சுன்னா, வால்யும்5)

மௌலவி முஹம்மது ஹுசைன் பட்டாலவி, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு வஹி என்னும் இறையரிவிப்பு வருகிறது என்பதை நம்பாவிட்டாலும் அவர்கள் முகம்மதி பேகம் தொடர்பாக கூறிய முன்னறிவிப்புகள் நிறைவேறின என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

முகம்மதி பேகத்தின் கணவரான மிர்ஸா சுல்தான் முஹம்மது, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பற்றித் தமது கைப்பட எழுதிய ஒரு கடிதம் தஸ்கிஸுள் அஸான் என்னும் எட்டில் மே,1913 இதழில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:

"நான் எப்போதுமே மறைந்த மிர்ஸா சாஹிப் அவர்களை நேர்மையான, கண்ணியத்திற்குரிய ஒருவராகவே எண்ணுகிறேன். அவர்கள் ஒரு உன்னதமான ஆன்மாவாகவும் எப்போதும் இறைவனை எண்ணத்தில் கொண்டவருமாவார்கள். நான் அவர்களைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கின்ற்றவன் அல்ல. சில காரணங்களால் அவர்களுடைய வாழ்நாளில் அவர்களை சந்திக்கின்ற நற்பேறு எனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது. "அந்த முன்னறிவிப்பின் பொது ஹிந்து ஆரியர்களும், கிருஸ்தவர்களும், லேக்ராம், ஆத்தம் ஆகியோரும் மிர்ஸா சாஹிப் மீது வழக்கு தொடர்ந்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக என்னிடம் சொன்னார்கள். நான் அந்தப் பணத்தைப் பெற்றிருந்தால் பெரும் செல்வந்தனாகி இருப்பேன். ஆனால் அவர்கள் (ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ) மீது நான் கொண்டிருந்த உயர்வான நம்பிக்கையே என்னை அவ்வாறு செய்ய விடாது தடுத்தது."

"நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் மீது மிக உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. இத்தகையதொரு நம்பிக்கை இருப்பதாக அவர்களைப் பின்பற்றும் உங்களால் கூட வாதிக்க இயலாது என எண்ணுகிறேன்." (அல் - பஸல் 9 ஜூன் 1921)

இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் கண்ணியத்திற்கும் உண்மைக்கும் அவர்களுடைய முன்னறிவிப்புகள் நிறைவேறியதற்கு முகம்மதி பேகத்தின் குடும்ப அங்கத்தினர்களே சாட்சி கூறியிருக்கும் போது மற்றவர்கள் அதைப் பற்றி கதைக் கட்டுவதைக் காணுகின்றபோது அவர்களை ஷைத்தானின் வாரிசுகள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் மக்களின் மனங்களில் தீய எண்ணங்களை விதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல இவர்கள் இமாம் மஹ்தி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) இவர்கள் மூலமாக மக்கள் நேர்வழி பெறுவதற்கு முட்டுக்கட்டையாகயும் நிற்கிறார்கள்.

ஆனால் இவர்களின் எண்ணங்களும், திட்டங்களும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் இறைத்தூதர்களை எதிர்த்தவர்கள் எக்காலத்திலும் வெற்றிபெறவில்லை. மாறாக இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள் என்பது வரலாறாகும்
Read more »

இறைவன் புறமிருந்து வந்த நபி "ஜமாத்துல் உலமா ஏட்டிற்கு மறுப்பு

ஒரு பொய் அது பல்லாயிரம் தடவை கூறப்பட்டுகொண்டிருந்தாலும் அது மெய்யாகாது என்பது உண்மையாயிருந்தும் கடந்த நூறாண்டுகாலமாக அஹ்மதிய்யா ஜமாத்திற்க்கும், அதன் தூய ஸ்தாபகருக்கும் எதிராக வானத்தின் கீழ் மிகப்பெரும் குழப்பவாதிகள் என்றும், கேட்ட ஜந்துக்கள் என்றும், எம்பெருமானார்(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இன்றைய ஆலிம்சாக்கள் தொடர்ந்து பொய் கூறிக்கொண்டு அல்லாஹ்வின்- "லஹ்னதுல்லாஹி அலல் காதிபீன்" என்ற திருவசனத்திற்க்கினங்க இறைவனது சாபத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.இதற்க்கு உதாரணமாக ஆகஸ்ட் மாத ஜமாத்துல் உலமா ஏட்டில் அதன் ஆசிரியர், பசுங்கதிர் மாத ஏட்டில் எம். கே. இ . மௌலான என்பவர் "ஆங்கிலேயர் தோற்றுவித்த நபி" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு புழுகு மூட்டையை மிகுந்த நன்றியுடன் எடுத்து சேர்த்து இருக்கின்றார், "ஆம்" ஒரு பொய்யருக்கு மற்றொரு பொய்யரின் திலகம் ஒத்தாசை செய்து ஊக்கமும், ஆக்கமும் அளித்திருக்கின்றார்.

எம்பெருமானார்(ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் இறுதி வேதமாக அருளப்பட்டதினால் இதற்குப் பிறகு புதிய ஒரு சீர்திருத்தமோ, புதிய தூதுத்துவமோ தேவையாகிவிட்டது என்று ஆசிரியர் வரைகின்றார். அவ்வாறென்றால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றிய சீர்திருத்தவாதிகளான, இமாம்கள், முஜத்தித்மார்கள் மற்றும் அவ்லியாக்கள் அனைவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள். "நவூதுபில்லாஹ்" அதாவது மௌலானாவின் திருப்பார்வையில் இவர்கள் அனைவரும் பொய்யர்கள் ஆவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு புதிய ஒரு ஷரியத்தோ முகம்மதியாவிலிருந்தும் மாறுபட்ட ஒரு நுபுவத்தோ தோன்றாது. அஹ்மதியா இயக்கத்தின் ஸ்தாபகர் அப்படிப்பட்ட ஒரு வாதம்புரியவுமில்லை.

ஷரியத் பூரணமாக இருந்தும் நபி (ஸல்) மூலமாக நபித்துவம் முழுமைப் பெற்றிருந்தும் இறுதி காலத்தில் இஸ்லாத்தின் அதன் பெயரும், திருமறையில் அதன் எழுத்தும் மட்டும் எஞ்சி இருக்கும் என்றும், மௌலானாவைப் போன்ற ஆலிம்கள் வானத்தின் கீழ் மிகப் பெரும் கேட்ட ஜந்துக்களாக இருப்பார்கள் என்றும் எல்லாவிதமான குழப்பங்களுக்கும் அவர்களே உறைவிடமாக இருப்பார்கள் என்றும், நபி(ஸல்) அவர்களின் உன்னத சமுதாயத்தை சார்ந்தவர்கள் யகூதி, நசராக்கள பின் தொடர்வார்கள் என்றும், முஸ்லீம்கள் 73 பிரிவுகளாக பிரிவார்கள் என்றும், அப்போது 14 ஆம் நூற்றாண்டில் இமாம் மஹ்தி தோன்றுவார்கள் என்றும், அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சீடராக, உம்மத்தி நபியாக இருப்பார் என்றும் மிகவும் விளக்கமான முறையில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பல ஹதீதுகளில் ஏன் கூறியிருந்தார்கள்.

இறைவன் புறமிருந்து தூதர்கள் தோன்றும் போதெல்லாம் நிராகரிப்போர்கள் அவர்களுக்கு எதிர்ப்புகள் தெரிவித்தார்கள் அதைப்போன்றே இக்காலத்தில் தோன்றிய இமாம் மஹ்திக்கு எதிராகவும் குழப்பவாதிகளான கெட்ட ஜந்துக்கள் பயங்கரமான குழப்பங்களும், கிளர்ச்சிகளும் உண்டாக்கி பொய்பிரச்சாரங்கள் மூலமாக தப்பெண்ணங்களை ஏற்படுத்தி உண்மையை ஒப்புக்கொள்வதில் இருந்தும் மக்களை விளக்கிக்கொண்டிருக்கிரார்கள்.

அந்த சூழ்ச்சிகளில் ஒன்றுதான் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) "ஆங்கிலேயர்களால் தோற்று விக்கப்பட்ட நபி" என்ற பொய் குற்றச்சாட்டு இந்தப்பொய் குற்றச்சாட்டுக்கு கடந்த நூறு வருடங்களாக அஹ்மதியா ஜமாஅத் பதில் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இறையச்சமற்ற இவர்களுக்கு இந்த பதில்கள் எருமை மாட்டின் முன்னாள் வீணை வாசிக்கின்றதற்கொப்பாகும்.

ஹசரத் அஹ்மத்(அலை) அவர்கள் தமது வருகையின் நோக்கத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.
நான் சிலுவையை உடைப்பதற்கும், பன்றியை கொள்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.(பத்ஹே இஸ்லாம் பக்கம் 17 )

"கிறிஸ்தவர்களுடைய கடவுளை இனியாவது மரணிக்க செய்யுங்கள். எவ்வளவு காலம்தான் நீங்கள் அவரை கடவுள் ஆக்கிக் கொண்டிருப்பீர்கள், இதற்க்கு ஒரு முடிவில்லைல்யா? (இசாலே ஔஹாம், பக்கம் 469)

இராணி விக்டோரியாவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ஒரு கடிதம் எழுதி அதைப் புத்தகமாக வெளிப்படுத்தினார்கள். அதில் இவ்வாறு வரைகிறார்கள்.

"தாங்கள் பாவமன்னிப்புக் கோறவேண்டும் மகனோ, பங்காளியோ இல்லாத ஏக இறைவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும். இந்த நாட்டை ஆளுகின்ற ராணியே! தாங்கள் இஸ்லாத்தை தங்களின் மார்க்கமாக ஏற்ற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தாங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். (ஆயினயே கமாலாத்தே இஸ்லாம். பக்கம். 522) ராணி விக்டோரியாவை இஸ்லாத்தை ஏற்குமாறு கூறும் ஒருவர் எவ்வாறு பிரிட்டிஷ் காரர்களால் நியமிக்கப்பட்ட ஒருவராக இருக்க முடியும்.

கிருஸ்தவ மார்க்கத்தை பின்பற்றும் ஆங்கிலேயர்களுக்கு, சிலுவை உயிரோடு ஒன்றிவிட்ட ஒன்றாகும். அதனை தகர்க்க வந்துள்ளதாக கூறும் ஒருவர், ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவராகவோ அவர்களுடைய ஆதரவாளர்களாகவோ எவ்வாறு இருந்திருக்க முடியும்? மேலும் கிருஸ்தவ கடவுள் மரணித்துவிட்டதாக கூறும் ஒருவர் எவ்வாறு ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்திருக்க முடியும்? ஆனால் கிறிஸ்தவர்களின் கடவுளாக கருதும் இயேசு, வானத்தில் இன்றும் உயிருடன் இருக்கிறார் என்று கூறும் இந்த ஆலிம் சாக்களின் வர்க்கம் வேண்டுமானால் ஆங்கிலேயர்களின் வாரிசாக இருந்திருக்கலாம், ஆங்கிலேய ஆட்சியாளர்களை குறித்து ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து இதுதான்.

"தற்போது எங்களுக்கு எதிராக எழுதுகோல் எனும் வாள் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆட்சேபனை எனும் அம்புகள் எங்களை நோக்கி எறியப்படுகின்றன. எனவே இறைவனின் புனித மார்க்கமான இஸ்லாத்தைக் காப்பாற்றுவதற்கும், நபி(ஸல்) அவர்களின் புனிதத் தன்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும் நாம் நமது எழுதுகோலைப் பயன்படுத்துகின்றோம்.

இதற்கான் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் வழிங்கியுள்ள ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இறைவன் நம்மை வாழவைத்திருக்கின்றான். அதற்காக அந்த மேலான இறைவனுக்கு நாம் நமது நன்றியை பிரகடனப்படுத்தும் போது இவர்கள் அதனை ஆட்சேபிக்கிறார்கள். நாம் யாரையும் சலுகைக்காக எதிர்பார்த்து எதையும் கூறவில்லை. ஆனால் நமது பிரச்சாரத்திற்கு எவ்விதத் தடையும் விதிக்காமல் அதற்க்கான முழு உரிமையும் வழங்கியுள்ள ஓர் ஆட்சிக்கு நாம் நன்றி கூறாமல் இருக்க முடியாது. (மல்பூசாத் பக்கம் 232)

இங்கு மத விஷயத்தில் ஆங்கிலேய அரசு பாரபட்சமின்றி நடந்ததையே ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்று ஆகாள மௌலவி மார்களே தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

தாருல் உலூம் நத்வதுல் உலமாவிளிருந்து கீழ் வருமாறு ஒரு மார்க்கத் தீர்ப்பு எனும் பத்வா விடுக்கப்பட்டிருந்தது. "ஆலிம்களுடைய ஒரு மகத்தான பொறுப்பும், கடமையும், அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் அருள்களை நன்குணர்ந்து இந்த ஆட்சிக்கு கீழ்படிந்து நடப்பதே நன்மை பயக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாகும்.(அன் நத்வா, லக்னோ ஜூலை 1908)

அஹ்லுஹதீதின் தலைவர்களில் ஒருவரான மௌலவி முஹம்மத் ஹுசைன் பட்டாலவி இவ்வாறு கூறியிருந்தார்:
" இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடுவது (ஹராம்) விலக்கப்பட்டதாகும்" (இஷா அத்துசுன்னா வா. 6 பக்கம் 10)

இவைகளைப் போலவே, ஹஸ்ரத் நவாப் சித்திக் ஹசன்கான் - மௌலவி நதீர் ஹுசைன் முஹத்த்தாஸ் தெஹ்லவி, சர் செய்யது அகமதுகான், மௌலவி நதீர் அஹ்மத் ஷம்சுல் உலமா போன்ற ஆலிம்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முஸ்லிம்கள் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்கத் தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். மேற்கண்டவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் துரோகிகள் என்று இவர்கள் கூறுவார்களா? ஹஸ்ரத் அஹ்மத் (அலை) ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட நபி என்று குற்றம் சாற்றுகின்ற மௌலானாவின் கவனத்தை ஒரு திருமறை வசனத்தின் பக்கம் ஈர்க்க நாடுகிறேன்:-

இறைவன் கூறுகின்றான்: எவன் நம் மீது பொய்யாக குற்றம் சாட்டி நம்மால் அனுப்பப்பட்டவன் என்று பொய்வாதம் செய்கிறானோ அவனை நாம் வலது கரத்தைப் பிடித்து அவனது உயிர் நாடியை அறுத்து விடுவோம். (௬௯:௪௬,௪௭) "எவன் இறைவன் மீது பொய்குற்றம் சாட்டி அல்லது அவனது வசனத்தை பொய்யாக்கு கின்றானோ, அவனை விட பெரிய துரோகி யார்? துரோகிகள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்" என்றும் இறைவன் கூறுகின்றான்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் வாதம் செய்ததிலிருந்து இன்றுவரை அவருக்கும் அவருடைய ஜமாத்திற்க்கும் மிகப் பெரிய வெற்றிதான் கிடைத்து கொண்டிருக்கிறது. இன்று உலகெங்கும் இந்த ஜமாஅத் பரவிக்கொண்டிருக்கிறது. அவர் ஆங்கிலேய ஆட்சியால் தோற்றுவிக்கப்பட்ட நபி என்றால் அவருக்கு இந்த வெற்றி எப்படி கிடைத்திருக்கும், இறைவன் என்ன? ஆங்கிலேய ஆட்சியின் முன்னால் சக்தியற்றவனாகிவிட்டானா? அல்லது திருமறையிலுள்ள மேற் குறிப்பிட்டுள்ள வசனம் பொய்யாகி விட்டதா? (நவூது பில்லாஹ்)

ஆங்கிலேயர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றதற்க்காக ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்ததாக மௌலான தனது கட்டுரையில் குற்றம் சாட்டுகிறார். இதுவும் அபாண்டமான ஓர் பொய்யாகும்.

ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் ஜிஹாதை தடை செய்து எந்த அறிக்கையும், போதனையும் தரவில்லை. மாறாக, இக்காலம் வாளால் ஜிஹாது செய்யவேண்டிய காலம் இல்லையென்றே கூறி இருந்தார்கள். இன்று பேனா முனையிலும், மேடை பேச்சுகளாலும் இஸ்லாம் தாக்கப்படுகிறது என்றும், அதே முறையில் நாமும் பதிலடி கொடுத்து இஸ்லாத்தைக் காக்க வேண்டும் என்றும் அதுவே தற்போது செய்ய வேண்டிய ஜிஹாத் என்றும் கூறியுள்ளார்கள்.

அஹ்மதிகள் இதர மதத்தவர்களுடன் அன்பாகவும், நேசத்துடனும், பரிமாருகின்றதையும், அந்ததந்த சமுதாயத்தில் தோன்றியிருக்கும் இறைத்தூதர்களை ஒப்புக்கொல்கின்றதையும், மத வெறி கொண்ட இந்த மௌலானவிற்க்கு பிடிக்கவில்லை. எனவே! காதியானிகள் எந்த சமுதாயத்தோடு வேண்டுமானாலும் இசைந்து செல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார்- நாஸ்திகர்களுக்கு கூட பணிந்து செல்ல தயங்கமாட்டார்கள்" என்றும் குற்றம் சாட்டுகிறார். இது மௌலானாவுடைய உள்ளத்தில் குடிகொண்டிருக்கும, துவேசம், பகைமை, வெறுப்பின் வெளிப்பாடாகும். உலகிலுள்ள எல்லா சமுதாயங்களுக்கும் "ஏன் நாஸ்திகர்களுக்கும் கூட, தனது ரஹ்மானியத் என்ற குணத்தி பிரகனப்படுத்தும் அல்லாஹ்வின் மீதும் இதே குற்றச்சாட்டை சுமத்த மௌலான தயங்க மாட்டார் போலும். பாகிஸ்தான் உருவாவதை மிர்ஸா முஹம்மத் அஹம்மத் இறுதி வரை எதிர்த்தார் என்று மௌலானா கூறுகின்றார் இந்த மிர்ஸா முஹம்மத் அஹம்மத் யார் என்பது மௌலானா தான் கூற வேண்டும். இந்த குர்ற்றசாட்டிற்கு இவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.

"பாகிஸ்தான் உருவானவுடன் காதியானிகள், தலைமறைவாகி, ரப்வா, என்ற பகுதியில் தனித்து வாழ்ந்தனர்" இந்த ஒரே வசனத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களை கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் உருவானதும் காதியானிகள் தலைமரைவாகிவிட்டார்கள். ரப்வா என்ற பகுதியில் தனித்து வாழ்ந்தார்கள். பொய் கூருகின்றவனுக்கு மறதி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவதுண்டு.

அஹ்மதிகள் தலைமறைவாகிவிட்டால் பிறகு ரப்வா என்னும் தலை நகரம் உண்டாகி தங்களுடையா பிரச்சார பணிகளை எவ்வாறு அவர்களால் தீவிரப்படுத்த முடியும்? பாகிஸ்தான் உருவானதும் அதன் வெளி நாட்டு அமைச்சராகவும், ஐ. நா. சபைக்கு அந்நாட்டின் பிரதிநிதியாகவும், உலகப் புகழ் பெற்ற அஹ்மதியான சர் முஹம்மது சபருல்லாகான் சாஹிபு எவ்வாறு நியமிக்கப் பட முடியும்.

பாகிஸ்தானில் அஹ்மதியா ஜமாஅத் என்பது லெட்சம் நபர்களைக் கொண்ட பெரும் சக்தியாக விளங்கிக்கொண்டிருக்கின்றது உலகம் அறிந்த உண்மை! ஆனால் மௌலானாவின் அபிப்ராயத்தில், அஹ்மதிகள் அங்கே தலை மறைவாக இருக்கின்றார்களாம். இந்த மௌலானா முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார். தனது கட்டுரையின் இறுதியில் இவ்வாறு வரைகிறார்.

"காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என்று உலகத்தின் அனைத்து தேசங்களும் அறிவித்தும் கூட அவர்கள் போக்கில் கொஞ்சமும் திருத்தம் ஏற்படவில்லை.

"இந்த அனைத்து தேசங்களும்" என்று கூறியிருக்கும் தேசங்களைப்பற்றி மௌலான சற்று விளக்கித் தருவாரா? அஹ்மதிகள் முஸ்லிம்களா? இல்லையா என்பதைப்பற்றி அறிவிக்க இவர்களுக்கு யோக்கியதையும் உரிமையும் என்ன இருக்கின்றது? இறைவன் புறமிருந்து இவர்களுக்கு இதற்க்கான அதிகாரம் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கின்றதா? அஹ்மதிகள் இஸ்லாத்தை இவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கவில்லை. மூளை கெட்ட இந்த முல்லாக்களை இஸ்லாத்தின் காவலர்களாகக் கருதவுமில்லை. அவர்கள் இஸ்லாத்தின் துரோகிகளான பயங்கர விஷமிகள் என்பதை இஸ்லாத்தை நமக்கு அளித்த நபி(ஸல்) அவர்களே சொல்லித்தந்திருக்கிறார்கள். "அஹ்மதிகள் மஸ்ஜிதுக்கு செல்வது நோன்பு வைப்பது, இஸ்லாமிய வாழ்வு முறையை பின்பற்றுவது இவைகள் ஒன்றும் "நம்முடைய இந்த மௌலானா விற்கு பிடிக்கவில்லை. அதாவது அஹ்மதிகள் தங்களுடைய மஸ்ஜித்களுக்கு போகக்கூடாது. நோன்பு வைக்கவோ, தொழவோ கூடாது. எவ்வளவு அருமையான சேவைகள் வானத்தின் கீழுள்ள இந்த கெட்ட ஜந்துக்கள் இஸ்லாத்திற்கு செய்கிறார்கள். இஸ்லாத்துடன் எந்த பற்றும் இல்லாத, தொழாத நோன்பு வைக்காத, மஸ்ஜித்களுக்கு போகாத, வேஷத்திலும், பாவனையிலும் கூட ஒரு முஸ்லிம் என்று தங்களைக் காட்டிக்கொள்ளாத முஸ்லிம்கள், 'பக்கா' முஹ்மீன்கள்! அவர்களுக்கு இந்த ஆலிம்சாக்கள் சொர்கத்திற்க்கான அனுமதி சீட்டு வழங்குவார்கள். ஆனால் இஸ்லாமிய ஐந்து கடமைகளையும் சரிவர கடைப்பிடித்து முஸ்லீமாகவும், முஹ்மீனாகவும் வாழ்கின்ற அஹ்மதிகளை அவ்வாறு செய்ய இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

நான் இறுதியாக மௌலானாக்களிடம் கூறுகின்றேன். நீங்கள் அல்லாஹ்வை சற்று பயப்படுங்கள் அவனுடைய பயங்கரமான தண்டனை வரும் பொது உங்களால் உங்களை காப்பாற்றமுடியாது. இறைத்தூதர்களை எதிர்த்தவர்களுக்கு மோட்சம் கிடைத்ததாக வரலாறு கிடையாது. சற்று திருக்குரானை திருப்பி பாருங்கள். அரபி தெரிந்தால் மட்டும் ஒருவர் மூமினாக இருக்க முடியாது! உங்களுக்கு அப்பூஜஹளை விட அரபி தெரியாது. ஆனால் இறைத்தூதரை எதிர்த்த காரணத்தால் அபுல் ஹக்கமாக இருந்த அவன் அபூஜஹிலாக மாறிவிட்டான்! இறைவா! இவர்களுக்கு உண்மையை அறிந்து அதை கைகொள்ளுகின்றதற்குள்ள தௌபீக்கை தந்தருள்வாயாக! ஆமீன்.
Read more »

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்?


"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒரு உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம்." (திருக்குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் அவர்களது தாயார் மர்யம் (அலை) அவர்களையும் "அல்லாஹ் உயிருள்ளவன். வல்லமையுள்ளவன்" என்பதை நிரூபிப்பதற்கான ஓர் அடையாலமாக்கினான் என்பது தெரிய வருகிறது. மேலும் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு அவர்களது எதிரிகள் அதிகமாக துன்பங்கள் கொடுத்தபோது அல்லாஹ் அவர்களையும் அவரது தாயாரையும் எதிரிகளின் தீமையிலிருந்து காப்பாற்றி தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் வாழச் செய்தான் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான்.

மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு அஹ்மதிய்யா இயக்கத்தின் இரண்டாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்கள் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மேற்குறிப்பிட்ட வசனத்தில் "ஆவைனாஹுமா" "அவ்விருவருக்கும் நாம் தஞ்சமளித்தோம்" என்ற சொல் வந்துள்ளது. ஒருவரை மற்றொருவர் ஏதாவதொரு துன்பத்திளிருந்தோ, கவலையிளிருந்தோ காப்பாற்றி உதவி புரிவதைக் குறிப்பிடுவதற்கே அரபி மொழியில் "ஆவா" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திருககுரானில் ஹஸ்ரத் ரசூல்(ஸல்) அவர்களைப் பார்த்து "அவன் உம்மை அநாதையாகக் கண்டு (தன் நிழலில் உமக்குப்) புகலிடம் அளிக்கவில்லையா?" (93:7) என்று இறைவன் கேட்கின்றான்.

இந்த வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது "நீர் உமது தாயாரின் கருப்பையில் இருக்கும் போதே உமது தகப்பனார் இறந்து விட்டார். பின்னர் நீர் அநாதையாகி விட்டதைக் கண்ட இறைவன் தானாகவே உமது கருணையின் நிழலில் உமக்கு அடைக்கலம் வழங்கினான்" என்பதையே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறியுள்ளான்.

"ஆவா" என்ற சொல் திருககுரானில் இதே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் சில உதாரணங்களைக் கீழே தருகிறோம்.

"நீங்கள் சிறுபான்மையினராக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பூமியில் நீங்கள் பலவீனமாகக் கருதப்பட்டீர்கள். மக்கள் உங்களைப் பிடித்துச் சென்று விடுவார்களோ என்று பயந்தீர்கள். அவ்வாறிருந்தும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்தான். தன் உதவியினால் உங்களை உறுதிப் படுத்தினான். மேலும், தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான். (8:27) அல்லாஹ் இந்த வசனத்தில் "ஆவா" என்ற சொல்லை ஒரு பெரும் துன்பத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு அவன் மதீனாவில் அடைக்கலம் வழங்கி உதவி செய்த சந்தர்ப்பத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளான்.

அவ்வாறே வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்ட சமயத்தில் ஹஸ்ரத் நூஹ் (அலை) தமது மகனிடம் "எனது மகனே! எங்களுடன் நீயும் கப்பலில் ஏறிக்கொள்" எனக் கூறிய போது அவன் "நான் இப்பொழுது இந்த வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ஏதாவதொரு மலையைச் சென்றடைந்து தங்கிக் கொள்வேன்" (11:44) என்று பதில் கூறுவதாக வரும் திருக்குர்ஆன் வசனத்திலும் "ஆவா" என்ற சொல் மேற்குறிப்பிடப்பட்ட பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களுடன் பிறந்த அவர்களது சகோதரர் புன்யாமீன் மீது அவர்களது மற்ற சகோதரர்கள் பெரும் பெரும் கொடுமைகளை இழைத்ததால் அவர்கள் மிகுந்த துயரத்துடன் தமது நாட்களைக் கழித்து வந்தார்கள். ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களிடம் அவர் திரும்பி வந்தபோது தனது சகோதரருக்கு பெரும் துயரத்திலிருந்து அவர்கள் அடைக்கலம் வழங்கியது பற்றி திருககுரானில் இவ்வாறு வந்துள்ளது:

"அவர்கள் யூசுபிடம் சென்றபோது, அவர் தம் சகோதரரை தம் பக்கத்தில் இடமளித்து (அவரிடம்) நிச்சயமாக நானே (காணாமற் போன) உம்முடைய சகோதரன். எனவே, இவர்கள் செய்து கொண்டிருப்பது குறித்து நீர் கவலையடைய வேண்டாம்" என்றார். (12:70)

"ஆவா" என்ற சொல் மேற் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் இந்த வசனத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அரபி அகராதியின்படி "ஆவா இலா மன்சிலிஹா" என்று கூறினால் அது அமைதியற்ற ஓர் இடத்திலிருந்து அமைதியான ஓர் இடத்திற்கு ஒருவர் வந்து சேர்ந்ததைத்தான் குறிப்பிடும். இந்தப் பொருளில்தான் "அல்லாஹும்ம ஆவா இலா ஸில்லி கரமிக வ ஆஃபிக" எங்கள் இறைவா! உனது கருணை, மன்னிப்பு ஆகியவற்றின் நிழலில் எனக்கு அடைக்கலம் வழங்குவாயாக" என்று நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம் . (ஆதாரம் அரபி அகராதி நூல் "அகரப்" )

எனவே திருக்குரானின் (23:51) வசனம் அல்லாஹ் ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கும் அவர்களது தாயாருக்கும் ஒரு பெரும் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி இவ்வுலகிலேயே அவ்விருவருக்கும் தங்குவதற்கேற்றதும்  நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தான். என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், "ஆவா" என்ற சொல்லின் பொருள் "அவன் துன்பத்திலிருந்து இரட்சிப்பை வழங்கி அடைக்கலம் தந்தான்" என்பது மட்டுமேயாகும்.

வரலாற்றைக் கவனமாகப் பார்க்கும் போது ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும், அவரது தாயாருக்கும் அடைக்கலம் தேவைப்படும் அளவில் சிலுவை சம்பவத்திற்கு முன்பு எந்த ஒரு பெருந்துயரமும் எந்தக் காலக் கட்டத்திலும் வரவில்லை என்பது தெளிவாகத் தெரியும். சிலுவை சம்பவம்தான் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கும் அவரது தாயாருக்கும் கடுமையான துன்பத்தைத் தந்தது. இறைவன் தனது அளவற்ற அருளால் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை சிலுவை மரணத்திலிருந்து காப்பற்றி இருப்பதால் அவர்கள் வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டியது அவசியமானதாக இருந்தது. ஏனெனில், ஸாம் நாடு ரோமானிய அரசுக்குக் கீழிருந்ததால் ரோம் நாட்டு மன்னர் கிசருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்தனர்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அதே நாட்டில் தொடர்ந்து வாழ்ந்து வந்தால் நிச்சயமாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு அவர்கள் தமது நாட்டை விட்டு இடம் பெயர்ந்து வேறு நாட்டிற்கு செல்ல கட்டளையிட்டான். வரலாற்று சாட்சிகளின்படி இந்த இடம் காஷ்மீர்தான். என்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதி நீரூற்றுகளும் செழிப்பான தோட்டங்களும் நிறைந்த அழகிய சூழலைக் கொண்ட நகரமாக இருப்பதால் இதனை சொர்க்கத்திற்கு இணையாக மக்கள் புகழ்ந்து கூறுகின்றனர். மேலும் "காஷ்மீர்" என்ற சொல்லே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் காஷ்மீர் பயணத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஏனெனில், காஷ்மீரிய மொழியில் "காஷ்மீர்" என்பதற்கு பகரமாக "கஸீர்" என்றுதான் காஷ்மீர் அழைக்கப்படுகிறது. இது உண்மையிலேயே ஒரு எபிரேய மொழியின் சொல்லாகும். "காஃப்" என்ற சொல்லும் "அஸீர்" என்ற சொல்லும் இணைந்தே இந்தச் சொல் உருவாகியுள்ளது. "காஃப்" என்ற சொல்லின் பொருள் "அதைப் போன்றது" என்பதாகும். எபிரேய மொழியில் "அஸீர்" என்றால் ஸாம் நாடு என்பதுதான் அதற்குப் பொருள். எனவே, கஸீர் என்பதன் பொருள் "ஸாம் நாட்டைப் போன்றது" என்பதாகும். காஷ்மீரிய மொழியில் காஷ்மீருக்கு "கஸீர்" என்றுதான் இன்றும் கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. காஷ்மீரில் வாழ்பவர்களை காஸ்மீரில் உள்ளவர்கள் "காஸீர்" என்றே அழைக்கின்றனர்.

எபிரேய சமுதாயத்தினர் காஷ்மீரில் வாழ்ந்தனர் என்பதற்கு "காஷ்மீர்" என்ற சொல் மட்டும் சான்றாக இல்லை. மாறாக, வரலாற்று நூல்களிலிருந்தும் இன்றிலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபி காஷ்மீர் வந்திருந்தார் என்றும் அவர் இஸ்ரவேல் சந்ததியிலிருந்து தோன்றியவர் என்றும் அந்த நபி இளவரசர் என்று அழைக்கப்பட்டார் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது கல்லறை கான்யார் வீதியில் உள்ளது. அது யூஸ் ஆஸப்பின் கல்லறை என்றே பிரபலமாகியுள்ளது. இந்தச்சொல் "இயே ஆஸப்" என்ற சொல்லிலிருந்து வந்த திரிபு சொல்லாகும். இதனை அஹ்மதியா இயக்கத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) தமது ஒரு நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

எபிரேய மொழியில் "ஆஸிப்" என்ற சொல் தமது சமுதாயத்தைத் தேடிச் செல்பவரைக் குறிக்கும். மேலும் "யூஸ்" என்ற சொல் "இயேசு" என்ற சொல்லின் திரிபு சொல்லாகும். ஈசா (அலை) அவர்களுக்கு இந்தப்பெயர் வைக்கப்பட்டதன் காரணம் அவர்கள் பஹதே நஸர் என்ற மன்னரின் காலத்தில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பத்து இஸ்ரவேல் கோத்திரத்தினரை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு இறைவனின் தூதுச்செய்தியை எட்ட வைக்கப் பயணம் மேற்க்கொண்டதேயாகும். பஹதே நஸர் என்ற மன்னர் அந்த இஸ்ரவேல் கோத்திரத்தைச் சார்ந்தவர்களை அடிமைகளாக்கி அவர்களை அப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் குடியேறச் செய்தார்.

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தனது வருகையின் நோக்கம் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே அன்றி மற்றபடியல்ல' (மத்தேயு 15:24)

'இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே எனக்கு ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோவான் 10:16)

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் தமது சீடர்களுக்கு ஒரு முறை தனது தூதுச் செய்தியை பரப்புவது குறித்து அறிவுரை கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:

'நீங்கள் புற ஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். ' (மத்தேயு 10:4,5)

இந்த மேற்கோள்களிலிருந்து பாலஸ்தீனத்தில் வாழும் யூதர்களுக்கு ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எவ்வாறு இறை தூதுச் செய்தியை எட்ட வைத்தார்களோ அவ்வாறே கிழக்கத்திய நாடுகளிலும் வாழும் யூதர்களுக்கும் இறைவனின் தூதுச் செய்தியை எட்டவைப்பது அவர்களது கடமையாக இருந்தது. அந்த யூதர்களும் அவர்களது குரலை ஏற்று நடக்க வேண்டியிருந்தது. ஏனெனில், ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் கூற்றுப்படி பாலஸ்தீனத்தின் ஆடுகளிலிருந்தும் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களாவார்கள். ஆனால், மற்ற ஆடுகள் அவரது குரலைக் கேட்டதும் மிக விரைவில் ஒன்று கூடிவிடும் நிலையில் இருந்தன.

இந்த முன்னறிவிப்புகளுக்கேற்ப அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்தான். முதலில் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கெதிராக எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில் அரசாங்க தரப்பிலிருந்து நாட்டிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக அவர்கள் மீது தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் அல்லாஹ் எவ்வாறு யோனாதீர்க்கதரிசியை மரணத்தின் வாயிலிருந்து காப்பாற்றினானோ அவ்வாறே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களையும் சிலுவை மரணத்திலிருந்தும் காப்பாற்றினான். ஏனென்றால் இதற்குப் பிறகு அவர்கள் தமது நாட்டில் இருக்க முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதற்க்கான காரணம் எவரைக் குறித்து அரசாங்கம் ஒருமுறை அவரை சிலுவையிலேற்றி கொள்ள வேண்டும் என தீர்மானித்து விடுகிறதோ அப்படிப்பட்டவர் தப்பித்துச் சென்றாலும் அவர் மீண்டும் பிடிபடும்போது அவர் கொல்லப்படுவது உறுதி. எனவே, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் அந்த நாட்டைத் துறந்தார்கள். பாலஸ்தீனத்தை விட காஷ்மீர், ஆப்கனிஸ்தான் ஆகிய பகுதியிலுள்ள வழி மிகவும் அபாயகரமானதாக இருந்தது. என்றாலும், அவர்கள் இடம்பெயர்ந்து இந்த நாடுகளுக்கு வந்தார்கள்.

திருக்குர்ஆன் கூறுவது போன்று தங்குவதர்க்கேற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான காஷ்மீரைத்தான் அல்லாஹ் அவர்கள் இடம்பெயர்ந்து செல்லும் இடமாக்கினான். அவர்கள் அங்கு எவ்வித இடையூறுமின்றி சமாதானத்துடனும் சுகத்துடனும் தங்கி வாழ்ந்து வந்தார்கள். காஷ்மீரில் நீரூற்றுகள் மட்டுமின்றி இந்தப் பகுதி தனது குளிர்ச்சியிலும் செழிப்பிலும் ஸாம் நாடு போன்று இருந்ததால் அங்குச் சென்றதும் அவர்களது எல்லாத் துன்பங்களும் நீங்கி விட்டன. அவர்கள் தமது 120 வது வயது வரை இறைவனின் தூதுச் செய்தியை மக்களுக்கு எட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அங்கேயே மரணித்தார்கள். பின்னர் ஸ்ரீ நகரிலுள்ள கான்யார் பகுதியில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்று வரை அவர்களது கல்லறை அங்கு இருந்து வருகிறது. ( தப்ஸீரே கபீர் பாகம் 6 பக்கம் 175 லிருந்து 179 வரை)
Read more »