அஹ்மதிய்யா இயக்கத்தை அதன் நூறாண்டு கால வரலாற்றில் எதிர்த்திட்ட அமைப்புகள் ஏராளம். ஆனால் அவற்றில் எதுவுமே நிலைத்ததில்லை. இப்போது சென்னையில், ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் முளைத்துள்ளது. ஒரு ‘இறுதி நபித்துவ பாதுகாப்பு பேரவை’.
இவர்கள் பாதுகாப்பது இறுதி நபித்துவத்தை அன்று அவதூறுகளையும், ஆகாசப் புளுகளையுமே! இவர்களால் வினியோகிக்கப்பட்ட ‘காதியானிகளைப் பற்றி சிந்திக்க சீரிய வழி’ என்ற வெளியீடு அபத்தங்களின் மொத்த தொகுப்பு!
1953 இல் கான்பூர் ஆலிம்ச ஒருவர் செய்த புரட்டுகளுக்கு இங்கிருப்போர் இப்போது தமிழ் வடிவம் தந்திருக்கிறார்கள்.
இதில் இவர்கள் இஸ்ரவேலர்களுக்கு தூதராக தோன்றிய ஈஸா நபி (அலை) அவர்களை ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இகழ்ந்து பேசி இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதன்று இத்தகைய குற்றச்சாட்டுகள் மன சாட்சி இல்லாதவர்களால் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் காலத்திலேயே கூறப்பட்டிருந்தது. அவற்றை அவர்களே கீழ்வருமாறு மறுத்துக் கூறியுள்ளார்கள்:
மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தில் இப்னு மர்யம் (அலை) அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீகாக இருந்தார்கள். நான் முஹம்மதியா சமுதாயத்தில் வாக்களிக்கப்பட்ட மஸீகாக இருக்கிறேன். எனவே அவருக்கு ஒப்பாக வந்த நான் அவருக்கு மதிப்பு கொடுக்கிறேன். நான் மஸீஹிப்னு மர்யம் (அலை) அவர்களை இழிவுபடுத்தியதாகக் கூறுபவர் குழப்பவாதியும், பொய்யருமாவார்”. (கிஷ்தி நூஹ் பக்கம்: 25)
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதரும் தூய்மையான தீர்க்க தரிசியும் ஆவார் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காகவும் தான் நான் தோன்றியுள்ளேன். எனவே அவருடைய மகத்துவத்தையும், கௌரவத்தினையும் பாதிக்கும் எந்த ஒரு வார்த்தையினையும் எனது எந்த நூலிலும் காணமுடியாது. அவ்வாறு எவராவது நினைக்கிறார் என்றால் அவர் நயவஞ்சகரும் பொய்யனுமாவார்”.(அய்யாமுஸ்ஸுல்ஹ்)
நான் ஈஸா (அலை) அவர்களுக்கு ஒப்பாக வாக்களிக்கப்பட்ட மஸீஹாக வந்திருக்கிறேன் என்று வாதிக்கும்பொழுது நான் (நவூதுபில்லாஹ்) ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை இழிவுபடுத்திப் பேசினால் நான் அவருக்கு ஒப்பாக வந்தவன் என்று எவ்வாறு வாதிக்க முடியும். ஏனெனில் இந்த பாதிப்பு எனக்குத்தானே ஏற்படும்? (தப்லீகே ரிஸாலத் பாகம் 7: பக்கம் 70.)
அண்ணல் மாநபி (ஸல்) அவர்களை கிறித்துவ பாதிரிகள் இழிவு படுத்தி பல வருடங்களாக பெசிக்கொண்டிருந்ததன் காரணத்தினாலும், இதற்கெதிராக பல முறை எச்சரிக்கை விடுத்ததன் பின்னரும், அவர்கள் இந்த ஈனச்செயலிலிருந்து விளகாததன் காரணத்தாலுமே ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் பைபிள் கூறும் கிறித்துவக் கடவுளான இயேசுவைப்பற்றி பைபிளின் அடிப்படையில் எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
இது பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
“எங்களுக்கு, பாதிரிகளுடைய இயேசுவுடனும் அவருடைய நடவடிக்கைகளுடனும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் அவர்கள் தேவையில்லாமல் நமது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக அவர்களுடைய இயேசுவின் நிலையைப் பற்றி சிறிது எடுத்துரைக்க நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். கெட்ட இயல்புடைய கிருஸ்துவப் பாதிரி பதஹ் மஸீஹ் என்பவர் எனக்கு எழுதிய கடிதத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி விபச்சாரன் (நவூதுபில்லாஹ்) என்பன போன்ற சொற்களால் கீழ்த்தரமாக ஏசியுள்ளார். எனவே இவர்களுடைய இயேசுவைப் பற்றியும் சிலவற்றை நினைவுபடுத்த விரும்பினேன். இவர்கள் விசுவாசம் கொண்டிருக்கும் இயேசுவைப் பற்றி அல்லாஹ் திருக்குரானில் எதுவும் கூறவில்லை. பாதிரிகள் நம்பும் இயேசு அவர்களுடைய கொள்கைப் படி அவர் கடவுள். அவர் மூஸா (அலை) அவர்களுக்கு கொள்ளைக்காரன் என்றும் வஞ்சகன் என்றும் பெயர் வைத்துள்ளார். தனக்குப் பிறகு வருபவர்களெல்லாம் (நபி (ஸல்) அவர்கள் உட்பட) பொய்யர்களென்று அவர் கூறியதாக பாதிரிகள் கூறுகின்றனர். (அஞ்சாமே ஆத்தம் பக்கம் 8-9)
“இந்த கடிதத்தை ஒரு எச்சரிக்கையாக உமக்கு அனுப்புகிறோம். இதற்குப் பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி தூய்மையற்ற வார்த்தைகளை பேசுவதை நீங்கள் நிறுத்தவில்லை என்றால், நாங்களும் உங்களுடைய செயற்கைக் கடவுளைப்பற்றி கூறவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பாக்கியம் கெட்டவரே! நீர் உமது கடிதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விபச்சாரன் என்றும், கெட்ட நடத்தை உள்ளவரென்றும், பொய்யரென்றும் (நவூதுபில்லாஹ்) எழுதி எங்களுடைய உள்ளங்களை வேதனையுறச் செய்கிறீர். நாங்கள் இதற்காக எந்த நீதி மன்றத்தையும் அனுகமாட்டோம். இனிமேலாவது இப்படிப்பட்ட தூய்மையற்ற காரியங்களிலிருந்து விலகவில்லையெனில் நீங்கள் நபிபெருமானார் (ஸல்) அவர்களுக்கு எதிராய் கூறும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும். நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய் தெய்வமாகிய இயேசுவிற்கு எதிராகவும் கூறப்படும். (நூருல் குர்ஆன் பாகம் 2, பக்கம் 13)
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீண்டும் கூறுவதாவது:-
நாங்கள் கிறிஸ்தவர்களுடைய பொய்த் தெய்வத்தைப் பற்றிதான் சிலவற்றை பைபிளின் அடிப்படையில் கூறியுள்ளோம். ஆனால் திருக்குரானில் கூறப்பட்ட அல்லாஹ்வின் நல்லடியாரும் தூதருமாகிய ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பாதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தொடர்ந்து இழிவுபடுத்திக் கொண்டிருந்ததன் காரணத்தாலேதான் பதில் கூறவேண்டிய நிலைமைக்குள்ளாகியிருக்கிறோம்............. இனிமேல் பாதிரிகள் ஏசிப்பேசும் நிலையைக் கைவிட்டு, கண்ணியத்தையும், கௌரவத்தையும் கைக்கொள்வாராயின், நாங்களும் அதற்கேற்ப நடப்போம். இத்தகைய பேச்சுக்களையே தொடர்ந்து கேட்டு, கேட்டு, அலுத்துவிட்டோம். ஒருவர் தனது தந்தைக்கெதிரான பேச்சுக்களைக் கேட்டு எவ்வளவு காலம்தான் மௌனமாக இருக்கமுடியும். (தப்லீகே ரிஸாலத் பாகம் 4, பக்கம் 65-66)
மீண்டும் கூறுகிறார்கள்:-
“எங்களுக்கு ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி முழுமையான மதிப்பும் மரியாதையும் இருக்கின்றது. நாங்கள் பாதிரி பதஹ் மஸீஹின் இழிமொழிகளின் காரணத்தால்தான் நிர்பந்ததிற்காளாகி அவர்களுடைய பொய் தெய்வத்தைப்பற்றி (பைபிள் அடிப்படையில்) கூறியுள்ளோம். ஏனென்றால் இந்த அறிவீனரான பாதிரி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை மிகவும் கேவலப்படுத்தி எங்களின் மனங்களை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறார். (பதஹ் மஸீஹ் பக் 1)
ஹஸ்ரத் நபி கரீம் (ஸல்) அவர்களை கிறிஸ்துவப் பாதிரிகள் நீண்டகாலமாக இழிவுப்படுத்திக் கொண்டிருந்ததன் காரணமாகதான் ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்கள் கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் இயேசு என்ற பொய்த்தெய்வத்தைப் பற்றி பைபிளில் கூறப்பட்ட சில விஷயங்களை கூறினார்களேயொழிய திருக்குர்ஆன் கூறும் பொய்த்தெய்வத்தைப் பற்றி இகழ்ந்து கூறவில்லை.
இந்த உண்மையை மறைத்து மக்களுக்கு இடையில் தப்பெண்ணத்தையும் துவேஷத்தையும் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த ஆலிம்சாக்கள் வேண்டுமென்றே ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஈருலகத் தலைவராகிய ஹஸரத் முஹம்மத் (ஸல்) அவர்களை இந்த பாதிரிகள் இழிவு படுத்திக் கொண்டிருப்பதைப்பற்றி எந்த அக்கறையும் கவலையும் இவர்களுக்கு இல்லை. ஆனால் இந்த பாதிரிகளுக்கு பைபிளின் அடிப்படையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பதிலளிக்கையில் இந்த ஆலிம்சாக்களுக்கு ஆவேசமும் ரோஷமும் பீரிட்டு எழுகிறது.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுவதாவது:-
“இவர்கள் (கிறிஸ்துவப் பாதிரிகள்) நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கெதிராக எண்ணற்றக் குற்றச்சாட்டுகள் கூறி தங்களுடைய தாஜ்ஜாலியத்தின் (பொய்மை) மூலமாக ஏராளமான மக்களை வழி தவறச் செய்தார்கள். நம்முடைய புனித நபியாகிய ரஸுல் (ஸல்) அவர்களுக்கு எதிராக இவர்களுடைய பொய்க் குற்றச்சாட்டுகளும் ஏளனப் பேச்சுக்களும் எனக்கு வேறெல்லாவற்றையும் விட பெரும் வேதனையை கொடுக்கிறது. இவர்கள் மனிதர்களுள் புனிதரான (ஹைருல் பஷறாகிய) திரு நபி (ஸல்) அவர்கள் மீது கூறிய ஆட்சேபனைகள் எனது மனதை மிகவும் புண்படுத்தியிருக்கிறது. அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். எனது எல்லா சந்ததிகளும் சந்ததிகளுடைய சந்ததிகளும் எனது எல்லா நண்பர்களும் எனது எல்லா உதவியாளர்களும் என் கண் முன்னால் கொல்லப்பட்டாலும், எனது கைகளும் கால்களும் வெட்டப்பட்டாலும் எனது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டாலும், எனது எல்லா நோக்கங்களிலும் தோல்வியே ஏற்பட்டாலும் எனது எல்லா சந்தோஷங்களும் போய்விட்டாலும் இந்த துயரங்கள் எல்லாவற்றையும்விட எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மீது இவர்கள் கூறும் பொய்க்குற்றச்சாட்டுகளே எனக்கு மிகப்பெரும் துக்கத்தையும் துயரத்தையும் கொடுக்கின்றன.
இறைவா! நீ எங்கள் மீது கருணைகாட்டி, உதவிபுரிந்து எங்களை இந்த கடுமையான சோதனைகளிலிருந்தும் காப்பாற்றுவாயாக!” (ஆயினே கமாலாத்தே இஸ்லாம் – பக்கம் 16)
எம்பெருமானார் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களை இகழ்கின்ற பாதிரிகளுக்குப் பதிலடி தருகின்ற வகையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறியிருப்பவை இந்த ஆலிம் சாக்களுக்குக் கசக்கிறதென்றால் இவர்கள் இஸ்லாத்தின் துரோகிகளும் அதன் எதிரிகளான பாதிரிகளுக்கு துனைபோகின்றவர்களுமேயாவர்!
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.