அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 14, 2014

கெண்டைக்கால் திறத்தல் என்பதன் விளக்கம்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 249 இல் கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 68:42) கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்பட்டதில்லை என்பதை இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று கூறவில்லை. மாறாக, மனிதன் திரும்ப உய்ர்ப்பிக்கப்பட்ட பின் மறுமை நாளில் இறைவனைக் காண முடியும் என்றும்...
Read more »

Nov 11, 2014

ஹஸ்ரத் இப்ராஹீம் நபிக்கு பி.ஜே செய்த அவமரியாதை

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 336 இல் நான் நோயாளி எனக் கூறினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: இப்ராஹீம் நபி அவர்கள் ஊர் மக்களெல்லாம் திருவிழாவைக் கொண்டாட வெளியேறிய பின் சிலைகளைத் தகர்ப்பதற்காக தாம் நோயாளி என்று கூறி திருவிழாவுக்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள் (37:89) இது போல் ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற்காக நல்ல விளைவை ஏற்படுத்துவதற்காக கூறப்படும் பொய் குற்றமாகாது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று எழுதியுள்ளார். மேலும்...
Read more »

மலக்குகளைப் பற்றிய தவறான விளக்கம்.

ஈமான் கொள்ள வேண்டியவற்றுள் ஓர் அம்சம் மலக்குகள் மீது ஈமான் கொள்வதாகும். மலக்குகளைப்பற்றி பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: மனிதனின் தகுதியைப்பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள். இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள் இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபனை செய்திருப்பார்கள்? மலக்குகள் ஆரம்பத்தில் ஆட்சேபனை செய்தபோது...
Read more »

Nov 10, 2014

இவ்வுலகில் இறைவனை காணமுடியும்!

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல் பி.ஜே இறைவனைக் காண முடியுமா? என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்: இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார். அவனை பார்வைகள் அடைய முடியாது. அவனோ பார்வைகளை அடைகிறான். என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 6:103) நம் விளக்கம்: இறைவனை இவ்வுலகில் யாரும் புறக்கண்ணால் காண முடியாது அவனோ அகக்கண்ணின் மூலம் பார்வைகளை அடைகிறான். மறுமையில் அல்லாஹ்வை காண முடியும் என்று நபிமொழி மூலம் அறிகிறோம்....
Read more »

வானத்தில் வாசல் திறத்தல் – பி.ஜே யின் தவறான விளக்கம்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 177 இல் வானத்தின் வாசல் திறக்கப்பட மாட்டாது என்னும் தலைப்பில் பி.ஜே திருக்குர்ஆன் 7:40 வது வசனத்திற்கு இவ்வாறு எழுதுகிறார். இறைவசனங்களை மறுத்துப் பெருமையடித்தவர்கள் இவ்வுலகில் வாழும் போது செய்யும் பிராத்தனைகள் வானத்தை அடையாது. இவ்வுலகிலும் நஷ்டமடைவார்கள்: மறுமையில் நரகத்தையும் அடைவார்கள் எனபது தான் இதன் கருத்தாக இருக்க முடியும். நம் விளக்கம்: திருக்குர்ஆன் 7:40 வது வசனத்தின் பொருள் பி.ஜே தன் தமிழாக்கத்தில், நமது...
Read more »

ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்; இவ்வசனத்தில் (22:31) இணை கற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை. மனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான்...
Read more »

ஓரங்களில் குறையும் பூமி என்பது கடல் அரிப்பில்லை

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 243 – இல் ஓரங்களில் குறையும் பூமி என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது. எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு...
Read more »