ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவரகள் போதிக்கின்றார்கள்.
அல்லாஹ் சமூது சமுதாயத்தை ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டு, அவர்கள் தமது இயல்பிலேயே காணப்பட்ட வரம்பு மீறும் பண்பின் காரணத்தால் தமது காலத்தின் நபியைப் பொய்ப்படுத்தினர் எனக் கூறுகின்றான். மேலும் அவரைப் பொய்ப்படுத்துவதற்காக அவர்களிலிருந்தே பெரும் பாக்கியங்கெட்ட ஒருவன் முன் வந்தான். அந்தக் காலத்தின் ரஸூல் (இறை தூதர்) அவர்களுக்கு அறிவுரையாக, அல்லாஹ்வின் ஒட்டகமாகும். நீர் அருந்தும் இடத்திலிருந்து இதை நீங்கள் தடுக்காதீர்கள். எனக் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் ஒட்டகத்தின் கால்களை வெட்டினர். எனவே, இந்தக் குற்றத்தின் தண்டனையாக அல்லாஹ் அவர்களின் மீது அழிவை ஏற்படுத்தினான்.
மேலும் அவர்களை மண்னோடு மண்ணாக்கினான். அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அவர்களின் விதவைப் பெண்கள், அநாதை சந்ததிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களின் நிலை என்ன வாகும் என்பதைப் பற்றி இறைவன் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இந்த இடத்தில் இறைவன், மனிதனின் ஆன்மாவை அல்லாஹ்வின் ஒட்டகத்துடன் ஒப்புமைப் படுத்துவதற்காகக் குறிப்பிட்டிருப்பது ஒரு மிகவும் நுட்பமான ஓர் உதாரணமாகும். இதன் கருத்து என்ன வென்றால், மனிதனின் ஆன்மாவும் அல்லாஹ்வின் ஒட்டகமாக பயன்பட வேண்டும். உண்மையில் அது இந்த நோக்கத்திற்காகத்தான் படைக்கப் பட்டுள்ளது. அந்த ஆன்மா அல்லாஹ்விடம் தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலையில் ஒருவர் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வது போன்று இறைவன் தன் தூய தோற்றத்துடன் அதன் மீது சவாரி செய்ய வேண்டும். உண்மையை விட்டும் முகந்திருப்புகின்ற எனவே ஆன்மாவை வணங்கும் மக்களுக்கு அச்சுறுத்தியவாறும், எச்சரித்தவாறும் அல்லாஹ் கூறுவதாவது, நீங்களும் சமூது சமுதாயத்தைப் போன்று அல்லாஹ்வின் பெண் ஒட்டகம் நீர் அருந்தும் இடத்தை - இறைவனைப் பற்றிய நினைவு மற்றும் இறைவனைப் பற்றிய ஞானங்கள் எனும் நீரூற்றை - எதில் இறைவனின் ஒட்டகம் எனும் ஆன்மாவின் வாழ்வு நிலைத்திருக்கிறதோ - அதை நீங்கள் தடுக்கின்றீர்கள். தடுப்பது மட்டுமல்லாமல், இறைவனின் வழிகளில் அது செல்ல முடியாமல் போய்விடும் வகையில் அதன் கால்களை முறிக்கும் சிந்தனையில் இருக்கின்றீர்கள். எனவே நீங்கள் உங்களுக்கு நன்மையை வேண்டுகின்றீர்கள் என்றால், வாழ்விற்கான நீரை விட்டும் அ(ந்)த (ஆன்மாவி)னை தடை செய்யாதீர்கள். மேலும் உங்களின் பொருத்தமற்ற இச்சைகள் தாக்குதலினால் அதன் கால்களை முறிக்காதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் - இறைவன் வரை சென்றடைவதற்காக வாகனமாக உங்களுக்கு வழங்கப்பட்ட அந்த ஒட்டகம் காயமடைந்து மரணித்து விட்டால் நீங்கள் முற்றிலும் ஒன்றுமற்றவர்களாக, காய்ந்த விறகைப் போன்று கருதப்பட்டு வெட்டப்பட்டு விடுவீர்கள்; பிறகு நெருப்பில் போடப்படுவீர்கள். மேலும் உங்களின் மரணத்திற்குப் பிறகு இறைவன் உங்களின் உறவினர்கள் மீது ஒருபோதும் கருணை காட்டமாட்டான். இன்னும் சொல்லப் போனால், உங்களின் பாவம் மற்றும் தீமையின் தீய விளைவு அவர்களுக்கு முன்னாலும் வந்து நிற்கும். உங்களின் செயல்களின் தீய விளைவினால் நீங்கள் மரணிப்பது மட்டுமின்றி, உங்களின் மனைவி மக்களையும் அதே அழிவிற்கு நீங்கள் உள்ளாக்கிவிடுவீர்கள்.
(நூல் குறிக்கோள் பற்றிய விளக்கம்)
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.