ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-
“இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை, உண்மையான மார்க்கமாகிய இஸ்லாத்தில் - உம்மத்தே முஹம்மதிய்யாவில்
நிலைத்து நிற்பவர்களுக்கே அவன் வழங்குகிறான்; மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான்.
உண்மையான மனத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என்று உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான - முழுமை பெற்ற நபி என்றும் எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன்னபிய்யீன் என்றும் அவர்களே நேரான வழியைக் காட்டித் தருபவர்கள் என்றும் உறுதி கொள்கின்ற நம்பிக்கையாளருக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை அவன் வழங்குகிறான்.
யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் முதலிய வகுப்பினர்களுக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிடைக்காது. ஆனால் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அது எப்பொழுதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தை (புதியதொரு ஷரீஅத்துச் சட்டத்தை)க் கொண்டுள்ள வஹீ, அவசியமில்லையாதலால், அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு இல்ஹாம் கிடைக்கிறது.
அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் அந்த இல்ஹாம், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையான நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்தச் சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும், இழிவும் கேவலமும் அடைகிறார்கள்”.
(பராஹீனே அஹ்மதிய்யா; பாகம் 3, பக்கம் 216, அடிக்குறிப்பு 11)
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.