அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 28, 2014

உலகளாவிய கிலாபத் 72 பிரிவுகளுக்கும் ஏன் இல்லை?


அபூ அப்தில்லாஹ் 4 வது பக்கத்தில்,

காதியானிகளின் தலைமைப் பீடமும் அது வாரி வழங்கும் செல்வங்களையும் பெற்று சுகபோகம் அனுபவிப்பவர்களும், குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் எழும் நம் விளக்கங்களை ஏற்று, உணர்ந்து, வருந்தி, திருந்தி, சத்திய வழிக்கு வர வேண்டும் என்பதே நமது நோக்கமும் பேரவாவும், எனினும் வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

என்று எழுதியுள்ளார்.

நம் பதில்:

திருக்குர்ஆன் 24:56 வது வசனம், அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை அவர்களின் முன்னோர்களை கலீபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீபாவாக ஆக்குவதாகவும், அவர்களின் வாக்குறுதி அளித்துள்ளான்.

முஸ்னத் அஹ்மத் பின் ஹம்பல் தொகுதி 4 பக்கம் 273 இல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் நாடும் வரை (என்) நுபுவ்வத் நிலைத்திருக்கும். பிறகு அல்லாஹ் அதனை எடுத்துக் கொள்வான். பிறகு, நுபுவ்வத் வழியில் கிலாபத் ஏற்படும். அல்லாஹ் நாடும் வரை கிலாபத் நீடிக்கும். பிறகு அல்லாஹ் அதனையும் எடுத்துக் கொள்வான். பிறகு கொண்டுங்கோல் ஆட்சி ஏற்படும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதனையும் எடுத்துக் கொள்வான். பின்னர் சர்வாதிகார ஆட்சி ஏற்படும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பின்னர் அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு நுபுவ்வத் வழியில் கிலாபத் ஏற்படும். பிறகு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அமைதியாகிவிட்டார்கள்.

திருக்குரானில் அல்லாஹ் வழங்கிய வாக்குறுதியின்படியும், நபி (ஸல்) அவர்கள் கூறிய முன்னறிவிப்பின்படியும் இன்றைய முஸ்லிம் உலகில், உலகம் தழுவிய அளவில் நுபுவ்வத் வழியில் அமைந்த கிலாபத் – ஒரு நபி வந்து அவருக்குப் பின்னர் கலீபாக்கள் வருவது அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தில் மட்டுமே உள்ளது.

ஏனைய 72 பிரிவுகளிலும் உலக அளவிலோ, இந்திய அளவிலோ இயலாவிட்டாலும் தமிழகம் அளவில் ஒரு தலைமையின் கீழ் ஏனைய முஸ்லிம் பிரிவுகள் ஒன்றுபட் முடியுமா? முடிந்தால் செய்து காட்டுங்கள். கனவில் கூட அப்படி ஒரு காட்சியைக் காண முடியாது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்களை பொய் நபி எனக் கூறும் பெயர் தாங்கி முஸ்லிம் அறிஞர்களிடம் ஒரு வேண்டுகோள்,

நபி மொழி புகாரி ஹதீஸ் எண்  7084 &3606

நீ முஸ்லிம்களின் ஜமாத்தையும் அவர்களது தலைவரையும் இறுகப் பற்றிக் கொள் என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு நான் (நபித்தோழர்) ஒரு ஜமாஅத்தோ ஒரு தலைவரோ இல்லையென்றால் என்ன செய்வது? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு. ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னை தழுவிக் கொண்டாலும் சரி. (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்து விடாதே) என்று பதிலளித்தார்.

அபூ அப்தில்லாஹ் என்ன செய்யப் போகிறார்?

திருக்குரானிலிருந்து ஒரு பொய் நபியின் இலக்கணத்தை எடுத்துக் காட்டி, அதற்கு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள் பொருந்துவதாகவோ, அல்லது ஒரு உண்மை நபியின் இலக்கணத்தை எடுத்துக் காட்டி, அதற்கு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் பொருந்தவில்லை என்றோ நிரூபித்துக் காட்டுங்கள்.

இவ்வாறு செய்யாதவரை அன்னாரை பொய் நபி எனக் கூறும் உரிமையோ தகுதியோ எவருக்கும் இல்லை எனவே, அபூ அப்தில்லாஹ் திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் தந்துள்ள உண்மையான விளக்கத்தை ஏற்று, உண்மை இஸ்லாமாகிய அஹ்மதிய்யா ஜமாத்திற்கு வருவாரா? வருவார் என நம்புகிறோம். (இன் ஷா அல்லாஹ்) 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.