அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Dec 24, 2013

இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தன்னை அல்லாஹ் என்று வாதிதார்களா?


ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் 578 ஆம் பக்கத்தில் அவர் குறிப்பிடுகின்றார்.

"நான் ஒரு நாள் இல்லாமல் போய்விட்டேன். அல்லாஹ் எனக்குள் வந்துவிட்டான். அப்போது எனக்கு என்ன தோன்ற ஆரம்பித்ததென்றால். நான் தான் இந்த வானத்தைப் படைத்தேன். பூமியைப் படைத்தேன்."

இதை தொடர்ந்து இவர்  இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி விமர்சனம் செய்தவாறு, பாருங்கள் இவர் தன்னை இறைவனுடைய மகன் என்று மட்டும் சொல்லவில்லை, பிர் அவ்ன் எப்படி தன்னை இறைவன் என்று சொன்னானோ, அது போல இவர் தன்னை அல்லாஹ்வாகிவிட்டதாக சொல்கிறார். என்று இவர் குறிப்பிடுகின்றான்.

இது ஒரு கனவாகும். கனவு என்று அவர்களே கூறுகிறார்கள். ர அய்து பில் மனாமி நான் கனவில் கண்டேன். கஷ்ப் காட்சிகளுக்கு நேரடியாக பொருள் கொள்வது மூடத்தனமாகும். அதன் அடிப்படையில் காலத்தின் மகத்தான ஓரிறைக் கொள்கை உடையவர்கள் மீது ஷிர்க் குற்றச்சாட்டு சுமத்துவது முற்றிலும் கொடுமையாகும். எதிரிகள் எந்த நூலிலிருந்து இந்த வார்த்தையை எடுத்து ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இறைவனுக்கு நிகராக தன்னை கூறியுள்ளார்கள் என நிரூபிக்க முயன்றுள்ளார்களோ அதே நூலில் அந்த இடத்தில், இவ்வாறான இறையறிவிப்புகள் ஓர் இறையடியாருக்கு கிடைத்தால் அவற்றிக்கு நேரடி பொருள் கொடுப்பதில்லை என்பதை இமாம் மஹ்தி(அலை) அவர்களே நிரூபிக்கின்றார்கள். இந்த விஷயத்தை மறைப்பது எந்த அளவுக்கு அநீதி, மேலும் கிறிஸ்தவர்களை நோக்கிக் கூறுகிறார்கள்.: இயேசுவிற்கு கிடைக்கப்பெற்ற எந்த இறையறிவிப்புகளிலிருந்து அவரை நீங்கள் கடவுளாக்குகின்றீர்களோ அவரை விட அதிகமதிகமாக எனக்கும் இறையறிவிப்புகள் கிடைக்கின்றன. இதை விட அதிகமாக எமது தலைவர் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறையறிவிப்புகள் கிடைத்தன. அவற்றின் மூலமாக அன்னாரை பெரும் கடவுளாக நிரூபிக்க முடியும். அவ்வாறு இருந்தும் இந்த இறையறிவிப்புகளுக்கு நேரடி பொருள் கொடுத்து தூய நபி (ஸல்) அவர்கள் நவூதுபில்லாஹ் தமக்கு இறைவன் என்ற அந்தஸ்தை வழங்காதிருக்கும்போது இயேசுவின் இறைமை(கடவுள் தன்மை) எவ்வாறு நிரூபணமாகும்? என்று கிறிஸ்தவர்களைப் பார்த்து இமாம் மஹ்தி(அலை) அவர்கள் கேட்கிறார்கள். அசல் வாக்கியத்தை கீழே தருகிறோம்.

“நான் எனது ஒரு கஷ்பில் (ஆன்மீகக் காட்சியில்) என்னை இறைவனாகப் பார்த்தேன். இறைவன் தான் என உறுதி கொண்டேன். எனக்கென எந்த விருப்பமும், எந்த எண்ணமும் எந்த செயலும் இருக்கவில்லை. நான் துளையுடைய ஒரு பாத்திரத்தைப் போல் ஆகிவிட்டேன். அல்லது ஒரு பொருள் தன்னுள் அடக்கிக் கொண்ட மற்றொரு பொருளைப் போல் ஆகிவிட்டேன். எந்த அளவுக்கென்றால், அந்த பொருளில் எந்த அடையாளமும் எஞ்சியிருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் ரூஹ் என்னை சூல்வதாகப் பார்க்கிறேன். எனது உடலில் அந்த ரூஹ் முற்றிலும் ஆட்கொண்ட பின்பு எனது உடலை பார்க்கிறேன். எனது கைகள் அவனது கைகளாக, எனது கண் அவனது கண்ணாக எனது காது அவனது காதாக, எனது நாவு அவனது நாவாக மாறியிருந்தது. முற்றிலும் அவனுள் மாய்த்துவிடும் அளவுக்கு எனது இறைவன் என்னைப் பிடித்தான். அவனது வல்லமை மற்றும் ஆற்றல் என்மீது ஆர்ப்பரிக்கிறது. அவனது இறை பண்பு என்னுல் அலை மோதவும் கண்டேன். கண்ணியமிக்க இறைவனின் கூடாரம் என் உள்ளத்தில் நாலாப்புறமும் நாட்டப்பட்டது. வல்லமைமிக்க அரசன் எனது உள்ளத்தை தூலாக்கிவிட்டான். இவ்வாறு நான் நானாக இல்லை. எனது எந்தவொரு சொந்த விருப்பமும் எஞ்சியிருக்கவில்லை. எனது கட்டடம் விழுந்துவிட்டது. மேலும் ரப்புல் ஆலமீன் கட்டடம் தென்படத் துவங்கியது. இறை பண்பு மிக அழுத்தமாக என்மீது மேலோங்கியது. நான் உச்சி முதல் உள்ளங்கால்வரை அவன் பக்கம் ஈர்க்கப்பட்டேன்.

பின்னர் மூடப்படாத ஒரு உட்பொருளைப் போல் நான் ஆகிவிட்டேன். மேலும் தூசியில்லாத எண்ணெய் போல் ஆகிவிட்டேன். எனக்கும் என் நப்சிற்கும் இடையே பிளவு ஏற்படுத்தப்பட்டது. எனவே நான் கண்ணிற்கு தென்படாத பொருளைப் போல் ஆகிவிட்டேன். அல்லது ஆற்றில் கலந்த நீர்த்துளி ஆற்றில் மறைந்து போவதைப் போல் ஆகிவிட்டேன். இந்நிலையில் இதற்குமுன் நான் என்னவாக இருந்தேன். மேலும் என்னுடைய வடிவம் என்னவாக இருந்தது என்பதை நான் அறியவில்லை. இறை பண்பு  என் நாடிகளிலும் நரம்புகளிலும் ஊடுருவிவிட்டது. மேலும் நான் என்னிடமிருந்து முழுமையாக தொலைந்துவிட்டேன். மேலும் அல்லாஹ் எனது அனைத்து உறுப்புகளையும் தன பணிகளில் ஈடுபடுத்தினான். மேலும் எந்த அளவிற்கு வலிமையுடன் என்னை கைப்பற்றினான் என்றால் இதைவிட அதிகம் சாத்தியமில்லை. எனவே அவனுடைய கைப்பிடியில் நான் ஒன்றுமில்லாமல் போனேன். மேலும் நான் அந்த நேரத்தில் என்னுடைய உறுப்புகள் என்னுடையதல்ல: மாறாக அல்லாஹ்வின் உறுப்புகள் என்று உறுதிகொண்டேன். மேலும் எனது ஆற்றல்கள் ஒன்றுமில்லாமல் போனது. எனது வடிவத்திலிருந்து நான் முற்றிலும் வெளியேறிவிட்டேன். இனி எந்தவொரு இணையும், தடுக்கக் கூடியவனும் இல்லை என நான் எண்ணினேன். இறைவன் என்னுள் நுழைந்துவிட்டான். மேலும் என்னுடைய கோபம் மற்றும், மென்மை, தன்னடக்கம், அசைவு மற்றும் அமைதி அனைத்தும் அவனுடையதாகிவிட்டது. அந்நிலையில் நான், நாம் ஒரு புதிய திட்டம், புதிய வானம் மற்றும் புதிய பூமியை விரும்புகிறோம் எனக் கூறினேன். எனவே நான் வானத்தையும் பூமியையும் மொத்தமாகப் படைத்தேன். அந்தப் படைப்பில் எந்தவொரு ஒழுங்குமுறையோ அல்லது வேறுபாடோ இருக்கவில்லை. பிறகு நான் உண்மையின் விருப்பத்திற்கேற்ப அதனை ஒழுங்கு படுத்தினேன். வேறுபடுத்தினேன். மேலும் நான் அதன் படைப்பின் மீது என்னை ஆற்றல் பெற்றவனாகக் கண்டேன். பின்னர் நான் வானத்தையும் உலகத்தையும் படைத்தேன். மேலும் கூறினேன்: நிச்சயமாக நாம் கீழ் வானத்தை விளக்குகளைக் கொண்டு அழகுபடுத்தினோம். பின்னர் நான் கூறினேன். இப்பொழுது நாம் மனிதனை மண்ணின் தொகுப்பிலிருந்து படைப்போம். பின்னர் எனது நிலை கஷ்பிலிருந்து இல்ஹாமின் பக்கம் மாறியது. பின்னர் எனது நாவில் “அரத்து அன் அஸ்தக்லிப ப கலக்த்து ஆதம, இன்ன கலக்னால் இன்ஸான பீ அஹ்சனி தக்வீம் என வெளிப்பட்டது. அதாவது நான் (பூமியில்) கலீபாவை உருவாக்க எண்ணினேன் எனவே ஆதமை படைத்தேன். நிச்சயமாக நாம் மனிதனை சிறந்த முறையில் படைத்துள்ளோம்.”

இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இந்த ருஹ்யாவில் (கனவுகாட்சியில்) காரணத்தால். அன்னார் மீது இணைவைப்பவர் என்ற குற்றம் சாட்டப்படுகிறது என்றால் மேலும் அன்னார் தன்னை இறைவன் என வாதித்தது நிரூபணமாகிறது என்றால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் கூறுவதைப் பற்றி இவர்களின் கருத்தென்ன?

“நான் என் இறைவனை ஒரு இளைஞனின் வடிவத்தில் பார்த்தேன். அவனுக்கு நீண்ட முடியும், அவனது கால்களில் தங்க காலணிகளும் இருந்தன (அல்யவாகீது வல் ஜாவாஹிரு பாகம் 1 பக்கம் 71, திப்ராணி மற்றும் மௌஸுஆதே கபீர் பக்கம் )

இக்காரணத்தைக் கொண்டு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் மீது ஆட்சேபனை செய்பவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இணைவைக்கும் குற்றத்தை சுமத்தி அன்னாரை விட்டு விலகி விடுவார்களா?

கனவுக்கு நேரடி விளக்கம் கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. உதாரணமாக யூசுப் நபியைப் பற்றி திருக்குரானில் வருகிறது 



   إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ

 யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சஜ்தா செய்வதாக  மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.

சஜ்தா அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. 'லா இலாஹா இல்லல்லாஹ். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இது திருக்குரானுடைய முஹ்கமாத் என்று சொல்லப்படக்கூடிய அடிப்படையான வசனம். இதைத்தான் யூசுப் நபி தன்னுடன் சிறையிலிருந்த இரு தோழர்களுக்கு பிரச்சாரம் செய்தார்கள். இந்த ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த யூசுப் நபி சூரியன், சந்திரன், நட்ச்சத்திரங்கள் தன்னை வணங்கியதாக குறிப்பிடுகின்றார்கள். இந்த வசனத்திலிருந்த யூசுப் நபி தன்னை அல்லாஹ் என்று வாதித்துவிட்டார்கள் பிர்அவ்ன் வாதம் செய்துவிட்டார்கள் என்று கூறுவார்களா?  இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தான் கண்ட கனவைப் பற்றி கூறும்போது அதற்க்கு நேரடி விளக்கம் கொடுக்கும் இவர்கள்  யூசுப் நபி கண்ட கனவுக்கும் நேரடி விளக்கம் கொடுப்பார்களா? 

சூரியன், சந்திரன், நட்ச்சத்திரங்கள் இவையெல்லாம் தன்னை வணங்கியதாக யூசுப் நபி குறிப்பிடுகிறார்கள் ஆனால் இவை யாரை வணங்குகின்றன? 


   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ  ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ ۗ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ ۩

வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.

இந்த கேள்விக்குரிய பதில், இந்த ஹதீஸ் உண்மையில் ஒரு கனவாகும். மேலும் கனவு உலகத்தில் உருவமில்லாத பொருட்களுக்கும் உருவம் கிடைப்பதுண்டு என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் இல்லை. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கஷ்பும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கஷ்பும் ஒன்றுபட்டுள்ளது.

பின்னர் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இந்த கஷ்பிற்கு விளக்கம் அளித்துள்ளார்கள். ஆனால் ஆட்சேபனை செய்பவர்கள் அறிந்தும் அதனைப் புறக்கணித்து விட்டார்கள். இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகிறார்கள்.

நாங்கள் இந்த கஷ்பிற்கு வஹ்ததுல் வுஜூது (அத்வைதக் கொள்கையுடையவர்கள்) மற்றும் ஹலூல் (மனிதர்களுள் இறைவன் தோன்றுவான்) என்ற கொள்கையுடையவர்களைப் போல் பொருள் தருவதில்லை. மாறாக இந்த கஷ்ப் புகாரியில் நபில் தொழுபவர்களின் இறைநெருக்கத்தை குறிக்கும் ஹதீஸிற்கு முற்றிலும் ஒத்ததாக இருக்கிறது.”

புகாரியில் வரும் ஹதீஸ்:

“நபில் தொழும் அடியான் என்னுடைய நெருக்கத்தில் எந்த அளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றான் என்றால் நான் அவனை நேசிக்கத் துவங்குகிறேன். அப்பொழுது நான் அவன் கேட்கின்ற காதாக ஆகிவிடுகின்றேன். அவன் பார்க்கின்ற கண்கலாகிவிடுகிறேன். அவன் பிடிக்கின்ற கைகலாகிவிடுகிறேன். அவன் நடக்கின்ற கால்களாகி விடுகிறேன்.”

இந்த ஹதீஸிற்கு என்ன பொருள் தருவீர்களோ அதே பொருள்தான் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் கஷ்பின் பொருளாகும்.

மேலும் எதிரிகள் இமாம் மஹ்தி அவர்கள் அவர்கள் வானம் மற்றும் பூமியை படைத்ததாக வாதித்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். நினைவில் கொள்ளுங்கள் இந்த இயற்கையான வானமும், பூமியும், ஏற்கனவே படைக்கப்பட்ட ஒன்றாகும். அவற்றைப் படைத்ததாக அவர்கள் வாதம் புரியவில்லை என்பது மட்டுமின்றி இது சாத்தியமற்றதுமாகும். இமாம் மஹ்தி(அலை) அவர்கள் கூறுகிறார்கள்.

“இந்த பிரபஞ்சத்தை (வானம், பூமி) ஒரு தொன்மையான, வல்லமையுடைய மற்றும் மதிப்பிற்குரிய இறைவன் படைத்தான். அவன் அனைத்து வெளிப்படையானவற்றின் மீதும், மறைவானவற்றின் மீதும் ஆற்றல் உடையவன் என்று நான் உறுதியான உள்ளத்துடன் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”

உண்மை இவ்வாறிருந்தும் நபிமார்களின் நடைமுறையைப் போல் ஒரு ஆன்மீக வானமும், பூமியைப் படைத்ததாக இமாம் மஹ்தி(அலை) அவர்களின் வாதம் உள்ளது. எல்லா நபிமார்களும் அப்படிப்பட்ட ஆன்மீக வானத்தையும் பூமியையும் படைத்துள்ளார்கள். சந்தேகத்திற்கிடமின்றி அண்ணரும் அத்தகைய ஒரு வானத்தையும் பூமியையும் படைத்துள்ளார்க. அந்த வானம் பூமி ஆன்மீகமானதாகும். மேலும் கூறுகிறார்கள்.

“ஒவ்வொரு மாபெரும் சீர்திருத்தவாதி தோன்றும் வேளையில் ஆன்மீக ரீதியில் ஒரு புதிய வானம், பூமி படைக்கப்படுகின்றது.” (ஹகீகத்துள் வஹி பக்கம் 99)

இவ்வாறான புதிய வானம், புதிய பூமி ஒவ்வொரு நபியின் காலத்திலும் படைக்கப்பட்டு வருகிறது எனவே தான் பைபிளில் பேதுருவின் வார்த்தைகள் இவ்வாறு உள்ளது

“அந்த வாக்குறுதிக் கேற்ப நல்லவர்கள் வசிக்கக்கூடிய புதிய வானம் மற்றும் பூமியை எதிர்நோக்கியுள்ளோம்.” (பேதுரு 2-3:13)

மேலும் திருக்குர்ஆன் நிலத்திலும் நீரிலும் குழப்பம் பரவியுள்ளது (30:42) என்பதில் இதன் பக்கமே சுட்டிக் காட்டுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பிரமாண்டமான புதிய வானும் புதிய பூமியும் படைக்கப்படும். 


இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தான் கண்ட கனவுக்கு அவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆயினே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் ஐநூற்றி அறுபத்தி ஆறாவது பக்கத்தில் கூறுகிறார்கள் என் உள்ளத்தில் போடப்பட்டது நான் பார்த்த அந்த படைத்தல் என்பது வானங்கள், பூமியினுடைய ஆதரவுகளை சுட்டிக்காட்டுகிறது.


நான் இந்த கனவுக்கு அத்வைதகொள்கைவுடையவர்களைப் போன்று நானே அல்லாஹ்வாகிவிட்டேன் என்று பொருள்கொடுக்கவில்லை. ஹுலூளியுன்களைப் போல அல்லாஹ் எனக்குள் வந்த்துவிடான் என்றும் நான் இதற்க்கு பொருள் கொடுக்கவில்லை. மாறாக நபில்களின் மூலமாக அல்லாஹ்வின் நல்லைடியார்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துகளைப் பற்றி ஹதீஸ்களின் வந்துள்ள அதே அர்த்தத்தைத்தான் நான் கொடுக்கிறேன்,

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூருகிறார்கள்.

“ ஒரு முறை நான் கஷ்ப் காட்சியில், நான் புதிய பூமியையும் வானத்தையும் படைப்பதாக கண்டேன். பின்பு இப்போது மனிதனைப் படைக்கப் போகிறோம் எனக் கூறினேன். இதற்க்கு இந்த அறிவற்ற மௌலவிகள் பாருங்கள் இவர் இறைவாதம் புரிந்து விட்டார் எனக் கூச்சலிடுகின்றனர். இந்த கஷ்ப் (அன்மீக) காட்சிக்கான விளக்கம், இறைவன் எனது கையால் வானமும் பூமியும் புதிதாகி உண்மையான மனிதர்கள் தோன்றும் அளவிலான மாற்றத்தை ஏற்படுத்துவான் என்பதாகும்.” (சஷ்மயே மஸீஹீ, ரூஹானி கஸாயின் பாகம் 20 பக்கம் 275-276) 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.