அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Oct 3, 2011

இமாம் மஹ்தியை நிராகரிப்பவர்கள் யார்?

இமாம் மஹ்தி (அலை) அவர்களை எதிப்பவர்கள், ஆலிம்களும் அவர்களைப் பின்பற்றுபவர்க்களுமாக இருப்பார்கள். ஆதம் நபி முதல் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த தூதர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார்கள். இறுதியில் இவ்விறை தூதர்களே வெற்றிபெற்றார்கள்.
ஆதமின் சந்ததிகள் மீது வருத்தப்பட்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். 'அந்தோ பரிதாபம்! மக்களிடம் எப்பொழுதெல்லாம் இறைத்தூதர்கள் தோன்றினார்களோ அப்பொழுதெல்லாம் மக்கள் அவர்களை எதிர்த்தும் ஏளனம் செய்தும் அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும் ஆளாக்கினார்கள்" அல்லாஹ் நமக்கு எடுத்துரைக்கும் சட்டம் இதுதான். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டப்படி மக்களால் எதிர்க்கப்பட்ட எதிர்ப்பு அணி திரட்டப்பட்ட -நபிமார்களை, மக்கள் எதிர்க்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக நீங்கள் ஒப்புக் கொள்ள மறுப்பீர்களா? மூசாவின் சமுதாயத்தில் இது நடைபெறவில்லையா? மூஸா நபிக்குப் பிறகு தோன்றிய நபிமார்களை மக்கள் எதிக்கவில்லையா?
உண்மைவாதிக்கும் பொய்வாதிக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.
இஸ்லாமிய சமுதாயத்தில் புகழ் பெற்ற மார்க்க அறிஞரும், தலை சிறந்த தத்துவ ஞானியும் பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள நூலில் 'இஸ்லாமிய சிந்தனையாளர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்பட்டவருமான ஹஸ்ரத் இமாம் இப்னு கையும் அவர்கள், இறைத்தூதர்கள் ஏன் எதிர்க்கப்படுகின்ற்றனர் என்பதைப் பற்றியும், அந்த எதிர்ப்புகள் ஒருவரைப் பொய்யராக்குவதர்க்குப் போதுமான ஆதாரமாகுமா என்பதைப் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்கள்.
ஏராளமான பொய்யர்களும், பொயவாதிகளும் தோன்றினார்கள் என்பதை நாம் மறுக்க வில்லை. அவர்களுடைய ஆரம்பகால கட்டம் மிகவும் கௌரவமானதாக இருந்தது. ஆனால் அவர்கள் தங்களுடைய நோக்கத்தை அடைய முடியவில்லை. அவர்களுடைய காலம் நீண்டுபோகவுமில்லை' மாறாக இறைவனுடைய தூதர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் அவர்களைப் பெயரும் அடையாளமும் தெரியாதவர்களாக்கினார்கள். ஆரம்ப காலம் முதல் அல்லாஹ்வின் அடியார்களிடம் இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இறுதி காலம் வரை இதுதான் தொடர்ந்து நடைபெற்றுவரும். (ஸாதுல் மாஅத் பாகம் 1 பக்கம் 500)
நான் ஏற்கனவே கூறியது போன்று இந்த வரலாறு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து உள்ளதல்ல இவ்வுலகம் தோன்றியதிலிருந்து இந்த நடை முறை செயல்பட்டுவருகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் உண்மையாளர்களுக்கும், பொய்யர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடியும், பொய்வாதிக்கு ஆரம்பத்தில் மக்களுடைய ஒத்துழைப்பும் ஒத்தாசையும் கிடைத்துவந்ததாக மார்க்க வரலாறு கூறுகின்றன. நமது எதிரிகள் அடிக்கடி எடுத்துக் கூறிவரும் முஸைலமா கத்தாபுக்கு ஆரம்பத்தில் அவனுடைய சமுதாயம் ஒத்துழைத்தது. ஆரம்ப காலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மக்களுடைய ஒத்துழைப்போடு அவன் இயங்கி வந்தான் பின்னர் அவனும் அவனுடைய கூட்டத்தினரும் அழிந்து விட்டனர்.

ஆனால் அல்லாஹ்வின் உண்மையான தூதர்கள் ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளாகின்றனர். இறுதியில் இவ்இறைத்தூதர்கள் வெற்றி பெறுகின்றனர்.

இப்னு கையும் கூறுவதைப் பாருங்கள் பொயவாதிகளுக்கு நீண்ட கால அவகாசம் கிடைக்காதென அவர் கூறுகிறார். ஆனால் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் இயக்கத்திற்கு நூறுவருட ஆயுள் கிடைத்துள்ளதாகவும், உங்களுடைய ஒவ்வொரு எதிர்ப்புக்குப் பிறகும் வெற்றிக்குமேல் வெற்றி பெறுவதாகவும் நீங்களே உங்களுடைய வாயாலும், பேனாவாலும் ஒப்புக்கொள்கிறீர்கள்! ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான ஆற்றலோ அந்தஸ்தோ இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்ப காலத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நபித்துவ வாதம் செய்த போது அனைவரும் அவர்களை விட்டு விலகி விட்டதாக நீங்கள் பெருமையோடு கூறிக் கொள்கிறீர்கள் இதைத்தான் உண்மையான இறைத்தூதரின் அடையாளமாக திருக்குர்ஆன் கூறுகிறது. பொய்வாதியின் ஆரம்பம் மிகவும் ஆரவாரத்தோடும், ஆடம்பரத்தொடும் துவங்குகிறது. ஆனால் போகப்போக சிறிது காலத்திற்குள் அவர்கள் தோல்விக்கும் அவமானத்திற்கும், அழிவுக்கும் ஆளாகிறார்கள். ஆனால் உண்மைவாதியின் ஆரம்பம் மிகவும் வேதனைக்குரிய நிலையில் துவங்குகிறது. சொந்த பந்தங்கள் எல்லாம் அவர்களை விட்டு விலகுகிறார்கள். வெளிப்படையான நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை: முழு உலகமும் அவர்களை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும். ஆனால் அல்லாஹ் அவர்களை ஒருபோதும் அழியவிடமாட்டான். அல்லாஹ்வின் விதி வெற்றியடைகிறது. நானும் எனது தூதர்களும் வெற்றி பெறுவோம். என்ற இறைவனின் சட்டம் நிறைவேறுகிறது.

இமாம் மஹ்தியை எதிப்பவர்கள்:-

  • நவாப் நூருல் ஹசன்கான் ஸாஹிப் கூறுவதாவது, 'இதே நிலைதான் மஹ்தி (அலை) அவர்களுக்கும் வரப்போகிறது. அவர் தோன்றினாள் எல்லா முகல்லிதீங்களும் அவரைக் கொலை செய்ய ஆயத்தமாக இருப்பார்கள். இவர் எங்களுடைய மார்க்கத்தை சீர்குலைத்தார் என அவர்கள் கூறுவார்கள். (இக்திராபுஷ்ஷா பக்கம் 224)
  • முஸ்லிம் உலகம் முழுவதும் போற்றும் ஹஸ்ரத் ஷேய்க் முஹியித்தீன்இப்னு அரபி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள், "இமாம் மஹ்தி தோன்றினால் அவருடைய பகிரங்கமான எதிரிகள் ஆலிம்களையும், புக்கஹாக்களையும் தவிர வேறு யாராகவும் இருக்கமாட்டார்கள். (புதுஹாத்தே மக்கிய்யா பாகம் 2: பக்கம் 242)
  • இமாமா மஹ்தி தோன்றும் பொழுது நடப்பவற்றை நவாப் சித்திக் ஹசன்கான் பின்வருமாறு விவரிக்கிறார். "தங்களுடைய முன்னோர்களையும், ஷேய்க்மார்களையும், பின்பற்றும்(தக்லீது செய்யும்) பழக்கமுடைய ஆலிம்கள் இவர் (இமாம் மஹ்தி) நமது மார்க்கத்தையும், சமுதாயத்தையும் சீர் குலைக்கத் தோன்றியவர் என்று கூறி அவரை எதிர்க்க முன்வருவார்கள். மேலும் தங்கள் பழக்கத்திற்க்கேற்றவாறு அவருக்கேதிராக காபிர் பத்வா கொடுப்பார்கள். (ஹஜ்ஜுல் கராமா பக்கம் 363)
  • ஹஸ்ரத் முஜத்தித் அல்பிஸானி(ரஹ்) என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். முஹம்மதிய்ய உம்மத்தில் இவர்கள் மிகப்பெரும் மதிப்பிர்க்குரியவர்களாக திகழ்கிறார்கள். "இமாம் மஹ்தி (அலை) அவர்களின் கருத்துக்களையும், அவற்றின் ஆழிய மறைவான ஞானங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றலற்றவர்களான உலகாதாய வாதிகளான ஆலிம்கள் அவரை மறுத்து, அவற்றை (அக்கருத்துக்களை) திருக்குரானுக்கும், சுன்னத்துக்கும் எதிரானவை எனக்கருதுவார்கள்." (மக்துபாதே இமாம் ரப்பானி பாகம் - பக்கம் 55)

ஹஸ்ரத் முஜத்தித் அல் பிஸானி(ரஹ்) அவர்கள் நுணுக்கமான இறைஞான முள்ள ஒருவராவார். ஹஸ்ரத் மஸீஹ்(அலை) தோன்றும் போது மார்க்க ஞானமில்லாத ஆலிம்கள் அவர்கள் எதிர்ப்பார்கள் என்று கூறி அதற்க்கான காரணத்தையும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.