அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Oct 24, 2011

இறைவனின் தீர்ப்பே இறுதியானது

'ஜமாத்துல் உலமா' ஆசிரியரை ஒரு விஷயத்திற்காக நாம் பாராட்ட வேண்டும்! அவர் தனது தந்தை வழியை தப்பாது கடைப்பிடித்து வருவதோடல்லாமல் தந்தையாரின் அந்தக்கால சரக்குகளுக்கு, அவை 'அவுட் ஆப் டேட்' ஆனவையாய் இருந்தும், தகுந்த 'மார்கெட்' பிடிக்க தவறாது முயன்று வருகிறார்.

எங்கேயாவது அஹ்மதியா இயக்கத்திற்கு எதிரான செய்திகள் காணப்படுகிறதா என எதிர்பார்த்து காத்திருந்து அவற்றைக் கண்டவுடன் தனது ஏட்டில் வெளியிட்டு தனது தந்தையாரின் நூல்களுக்கு அதோடு விளம்பரமும் செய்து வருகிறார். இந்தச் சாதுர்யம் யாருக்கு வரும்?

என்றாலும் அஹ்மதியா இயக்கம் பற்றிய தவறான கருத்துக்களை பாமர மக்களிடையே அவர் பரப்பி வருவதையும் 'ஹயாத்தே மஸீஹ்' போன்ற நூல்களை விற்பனை செய்வதன் மூலம் ஈசா நபி இன்னும் உயிருடன் வானத்தில் இருக்கிறார் என்ற மூட நம்பிக்கைக்கு வலுவூட்டி இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படும் கிறிஸ்தவப் பிரச்சாரகர்களுக்கு ஊக்கமளித்து வருவதையும் நாம் அனுமதிக்க இயலாது.

'ஜமாத்துல் உலமா' ஏட்டின் பிப்ரவரி இதழில் பாகிஸ்தான் நீதிமன்றம் அஹ்மதிகளுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பை வெளியிட்டு இதற்க்கு முன்னர் அரசுகளும் அமைப்புகளும் அஹ்மதிகளுக்கு எதிராக வழங்கியிருந்த தீர்ப்புகளையும் நினைவு கூறுகிறார் அதன் ஆசிரியர்.

ஆனால்,

'ராபிதத்துல் ஆலமீன் இஸ்லாம்' என்ற அமைப்பு அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர் என அறிவிக்க காரணமாயிருந்த மன்னர் பைசலுககு நேர்ந்த கதியென்ன? அஹ்மதிகளை முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என சட்டம் இயற்றிய அதிபர் பூட்டோவிற்கு நேர்ந்த கதி என்ன? அஹ்மதிகளின் அடிப்படை உரிமைகளை பறித்த ஜியா உல் ஹக் நேர்ந்த கதி என்ன? இவற்றையெல்லாம் "ஜமாத்துல் உலமா ஆசிரியர் எண்ணிப் பார்க்கவில்லை.

அஹ்மதிகளுக்கு எதிராக செயல்பட்ட இத்தகையோருக்கு இறைவன் வழங்கிய தீர்ப்பு என்ன? மன்னர் பைசல் தனது சொந்த மருமகனாலேயே கொலையுண்டதும் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தும் காப்பாற்றஇயலாமற் போய் அதிபர் பூட்டோ தூக்கிலிடப்பட்டதும் எளிதில் மறக்கக் கூடியவையா? அஹ்மதிகளுக்கு எதிராக இவர்கள் அளித்த தீர்ப்பு சரியானது என்றால் இவர்களுக்கு அவமானகரமான அகால மரணம் என் ஏற்பட்டது?

அஹ்லே சுன்னத்து வல் ஜமாத்தை சார்ந்த முஸ்லிம் அறிஞ்சர்களும், ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம் அறிஞ்சர்களும் "அஹ்மதிகளை முஸ்லிம்கள் அல்ல" என ஏகோபித்த மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஜமாத்துல் உலமா ஆசிரியர் வரைகிறார்.

ஜமாத்துல் உலமா ஆசிரியர் சார்ந்துள்ள அஹ்லே சுன்னத்துவல் ஜமாஅத் கூட முஸ்லிம் அல்லாதவர்கள் என ஷியா அறிஞ்சர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனரே!

"ஷியாக்கள் தவிர எல்லா பிரிவாரும் காபிர்கள் அவர்கள் கொலையுண்டாலோ இயற்கையாக மரணமடைந்தாலோ ஒரு போதும் சுவர்க்கம் புக மாட்டார்கள்." (ஹக்கீகத்து ஷுஹதா பக்கம்.65)

ஷியாக்கள் அளித்துள்ள இந்த மார்க்கத் தீர்ப்பை ஜமாத்துல் உலமா ஆசிரியர் ஏற்பாரா?

இந்த ஷியாப் பிரிவினரைப்பற்றி "சுன்னத் ஜமாஅத்"தினரின் தீர்ப்பை பாருங்கள்.

"ஷியாக்கள் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்களுடைய கிலாபத்தை நிராகரிக்கின்றார்கள். எவர் ஹஸ்ரத் அபூபக்கருடைய கிலாபத்தை நிராகரிக்கின்றாரோ அவர் காபிராகிவிட்டார். அவ்வாறுள்ள காபிர்கள் கொல்லப்பட வேண்டும். (ரத்தே தபாரக் 30)

இவ்வாறு ஒருவர் தாடியை இன்னொருவர் பிடித்துக் கொண்டு நெடுங்காலமாக தங்களுக்குள் "குப்ர் பத்வா" வழங்கிக் கொண்டிருக்கும் இந்த ஷியா, சன்னி ஆலிம்சாக்களுக்கு அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர்கள் எனத் தீர்ப்பு சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது? முதலில் இவர்களுக்குள் யார் முஸ்லிம் என்பதில் ஒரு முடிவு ஏற்படட்டும். அதன் பிறகு மற்றவர்களைப் பற்றி இவர்கள் பேசட்டும்.

1953- இல் பாகிஸ்தானில் அஹ்மதிகளுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியின் போது அன்றைய அந்நாட்டு அரசு ஒரு விசாரணைக் கமிஷனை நியமனம் செய்தது. அந்த விசாரணைக் குழுவின் தலைவர் தமது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்:-

("முஸ்லிம் எனப்படுபவர் யார்?) என்ற மிக எளிதான இந்தக் கேள்விக்கு பல முஸ்லிம் பண்டிதர்களிடம் பதில் கேட்ட போது எந்த இரண்டு பண்டிதர்களும் ஒரே விதமான கருத்தைக் கூறவில்லை. இந்நிலையில் முஸ்லிம் யார்? என்ற கேள்விக்கு நாங்கள் எங்களுடைய கருத்தை sonnaal அதை ஏற்காது ஆலிம்சாக்கள் நிச்சயமாக எங்களையும் காபிர்கள் என்று தீர்ப்பளித்து விடுவார்கள்.(முனீர் விசாரணைக் கமிஷன் அறிக்கை பக்கம் 236)

இந்த விசாரணைக் கமிஷன் பல்வேறு பிரிவுகளை சார்ந்த ஆளிம்சாக்களிடம் 'யார் முஸ்லிம்' என்ற வினாவை விடுத்த போது அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு நமது கைவசமிருக்கிறது. அவற்றின் அடிப்படையில் பார்த்தால் யாருமே முஸ்லிம்களாக இருக்க முடியாது. யாரையும் புதிதாக முஸ்லிமாகக திராணி இல்லாத இந்த ஆலிம்சாக்கள் முஸ்லிம்களை காபிராகக முன்வருகிறார்கள். இது இவர்களின் மூலையிலுள்ள கோளாறை எடுத்துக் காட்டுகிறதல்லவா?

இந்த "மூளைக் கோளாறு" பற்றி நீதிபது முனீர் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:-

"இந்தச் சாதாரண விஷயத்தில் நம்முடைய உலமாக்களின் மூளையில் இவ்வளவு கோளாறு இருக்கும் பொது சிக்கலான பிரச்சனைகளில் அக்கோளாறு எவ்வளவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்." (முனீர் விசாரணைக் குழு அறிக்கை பக்கம்.231)

அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர் என்று இந்த ஆலிம்சாக்கள் கூறிய பொது அன்றைய நீதிபதிகள் அந்தனை ஏற்கவில்லை. ஆலிம்சாக்களின் அந்த அபத்தக் கூற்றை அலட்சியப்படுத்தி உள்ளத்தில் பட்டதை அவர்கள் துணிவோடு வெளியிட்டார்கள். அதற்க்குக் காரணம் அன்றைய பாகிஸ்தானில் ஜனநாயகம் இருந்தது. நீதியும், நியாயமும் இருந்தது. இன்றோ சர்வாதிகார ஆட்சி அங்கு நடக்கிறது இந்நிலையில் நீதிபதிகள் என்ன செய்வார்கள்?

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.